• Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
    - legal team, Ezhilanbu Novels
  • கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

அத்தியாயம் - 13 - அன்பே உந்தன் சஞ்சாரமே

Devi Srinivasan

✍️
Writer

அத்தியாயம் - 13​


ப்ரயு தங்கைகளுக்கு பரிசு கொடுப்பது சம்பந்தமாக தன் அம்மாவோடு ஏற்பட்ட கருத்து மோதலால், அன்று இரவு பிரயுவிடம் பேசிய ஆதி,

“ரதிம்மா. பவித்ரா, தாரிணிக்கு நம் சார்பாக என்ன செய்யலாம் “ என்று வினவினான்.

ப்ரயு, “அதுதான் நான் பணமாக அப்பாவிடம் கொடுத்து விட்டேனே . வேறு என்ன செய்ய வேண்டும்?”

“இல்லடா. அது நீ சேர்த்து வைத்ததில் கொடுத்தது . இது நான் அவர்களுக்கு மாமாவாக செய்ய வேண்டிய முறை இருக்கிறதல்லவா?”

“நீங்கள் செய்தால் என்ன? நான் கொடுத்தால் என்ன ? அதை பற்றி நீங்கள் ஏன் யோசிக்கிறீர்கள் ? இங்கே நமக்கே வித்யா பிரசவம், நீங்க வந்து போகும் செலவு எல்லாம் நிறைய இருக்கிறது. பின்னாடி பார்க்கலாம். “ என்றாள்.

“அப்படி சொல்லாதடா. வித்யா மாதிரிதானே இவர்களும். நான் பணம் அனுப்புகிறேன். நீ என்ன வேண்டுமோ வாங்கி கொடு.”

“இருக்கட்டும் ஆதிப்பா. அது நாம் மெதுவாக பார்த்துக் கொள்ளலாம். “

“சரி. நான் உன்னிடம் ஒன்று சொல்கிறேன். வித்யாவிற்கு தேவையானதை என் இடத்தில இருந்து நீதான் செய்ய வேண்டும் ரதிம்மா.” ப்ரயு ஏதோ சொல்ல வரவும் “இரு . நான் சொல்லி முடித்து விடுகிறேன். நான் சொல்லாமலே நீ செய்வாய் என்று எனக்கு நம்பிக்கை இருக்கிறது. இருந்தாலும் என் திருப்திக்காக இதை சொல்கிறேன். அண்ணன் இருந்திருந்தால் நாம் கேட்காமலே இதை செய்திருப்பார் என்று வித்யா எண்ணி விடக் கூடாது. அதனால் தான் சொல்கிறேன்.”

“கட்டாயம் செய்கிறேன். இதை நீங்கள் சொல்லாமலே செய்திருப்பேன் . நீங்கள் சொல்லி விட்டதால் இன்னும் என்னால் முடிந்த வரை நான் வித்யாவிற்கு மட்டுமல்ல, அத்தைக்கும் அந்த எண்ணம் தோன்றாதவாறு பார்த்துக் கொள்கிறேன்.” என்றாள்.

“தேங்க்ஸ்டா கண்ணம்மா “ என்றான்.

ப்ரயு தன் தங்கைகளின் திருமண வேலைகளில் கலந்து கொண்டு, அதே சமயம் தன் நாத்தனார் வித்யாவின் உடல் நிலையை கவனத்தில் கொண்டு, அவளை செக்கப் அழைத்து செல்வது, குழந்தை பிறந்த பின் வித்யாவிற்கு, குழந்தைக்கு தேவையானதை வாங்கி சேர்ப்பது என்று பார்த்து பார்த்து செய்தாள்.

ஆதி மறுநாள் பிரயுவின் அப்பாவிற்கு போன் செய்து என்ன வேண்டும் என்று கேட்க, அவரும் ப்ரயு சொன்னதையே சொல்லவும், இருவருக்கும் வெளிநாட்டில் கிடைக்கக்கூடிய சில அழகு சாதன பொருட்கள், வேறு சில சின்ன சின்ன பொருட்களோடு இருவர் பெயரிலும் ஆளுக்கு 25000 ரூபாய் கிப்டு செக் எடுத்துக் கொண்டு ஊருக்கு கிளம்பத் தயாரானான்.

அவன் அலுவலகத்தில் விடுமுறை கேட்ட போது எளிதாக கிடைக்கவில்லை. வந்து ஒரு வருடம் கூட முழுதாக முடியவில்லை என்று ஆட்சேபம் தெரிவித்தனர். ஆதி தன் தங்கையின் நிலை, இந்த கல்யாணங்கள் எல்லாம் எடுத்து சொல்லிக் கேட்டதால் அரை மனதாக கொடுத்தனர். அதிலும் பத்து நாட்கள் மட்டுமே.

லீவ் மிகவும் குறைவாக இருப்பதால், சரியாக கல்யாணத்திற்கு முதல் நாள் ஊர் வந்து சேருமாறு டிக்கெட் புக் செய்திருந்தான்.

பிரயுவிடம் சொன்ன போது,

“ஏன் ஆதிப்பா , கொஞ்சம் முன்னாடி வர முடியாதா.? நீங்கள் சீக்கிரம் வந்தால் நன்றாக இருக்குமே “ என்றாள்.

“ஏன். ரதிகுட்டிக்கு இந்த ஆதிப்பாவை தேடுகிறதோ ?” என்று கேலியும், தாபமும் நிறைந்த குரலில் கேட்டான்.

பிரயுவோ மெல்லிய குரலில் “ ஹ்ம்ம். “ என்றவள், “திருமணம் முடிந்த பின் அவர்கள் இருவரையும் மறுவீடு அழைக்கக், கொண்டு விட என்று சரியாக இருக்கும். நாம் இருவரும் அதிகமாக பேசிக் கொள்ள கூட முடியாது.” என்றாள்.

தன் குரலை சரி செய்தவன் “ஹ்ம்ம். நீ சொல்வது சரிதான், ஆனால் இவ்வளவு தூரம் வந்து விட்டு வித்யா பிரசவ சமயத்தில் இல்லாமல் இருந்தால் நன்றாக இருக்காது. ஏற்கனவே மாப்பிள்ளை. நான் பொறுப்பில்லாமல் இருப்பது போல் பேசினார். இப்பொழுது கல்யாணத்திற்கு வந்து விட்டு, இதற்கு லீவ் இல்லை என்று சொன்னால் நம்மை இன்னும் மட்டமாக நினைப்பார். அதனால் தான் அட்லீஸ்ட் குழந்தை பிறந்து அதை பார்த்து விட்டு செல்லும் அந்த சமயம் வரை லீவ் எடுத்திருக்கிறேன். முன்னால் வந்தால் நான் இன்னும் முன்னால் கிளம்ப வேண்டும்.”

“சரிதான். ஆதிப்பா. “ என்று பேசிக் கொண்டனர்.

இருவருக்கும் தெரியும் . இப்பொழுதும் கல்யாணத்தில் மூன்று, நான்கு நாட்கள், டெலிவரியில் சில நாட்கள் போய் விடும் என்று . என்றாலும் கடைசி இரண்டு நாட்களாவது தங்களுக்கு என செலவளிக்கலாம் என்று எண்ணினார்கள்.

ஆதர்ஷ் நார்வேயிலிருந்து கிளம்புவதற்கு சரியாக முதல் நாள் , ஒஸ்லோ நகரில் மிகப் பெரிய பனி புயல் ஏற்பட்டது. யாரும் வீட்டை விட்டுக் கூட வெளியே வர முடியாத நிலை. பனிப் புயல் கடக்க குறைந்த பட்சம் மூன்று நாட்களிலிருந்து அதிக பட்சம் ஒரு வாரம் வரை ஆகும் என அவர்கள் நாட்டு வானிலை ஆய்வாளர்கள் அறிவித்தனர்.

அது வரை தரைவழி போக்குவரத்து முதல் விமான போக்குவரத்து வரை அனைத்தும் இயங்காது என அரசு அறிவித்தது.

ஆதர்ஷ் நிலை கொள்ளாமல் தவித்தான். அவனின் மனம் முழுதும் பிரயுவின் நினைவுகளே. கடவுளே. .நிச்சயத்தின் போதே அந்த அம்மா அப்படி பிரயுவை பேசினார்களே. இதற்கு என்ன சொல்வார்களோ என்று . வருத்தப்பட்டான். அதோடு அவனால் யாரையும் தொடர்பு கொள்ளக் கூட முடியவில்லை.

அவன் நிலவரம் இவ்வாறிருக்க, பிரயுவின் நிலைமையோ அதற்கும் மேல்.

வித்யா டெலிவரிக்கு இன்னும் குறைந்த பட்சம் ஒருவாரம் இருக்கிறது என்று டாக்டர் கூறியிருந்ததை நம்பி , வித்யாவின் மாமியார் வழியில் ஏதோ ஒரு துக்கத்திற்காக வித்யா கணவர், மாமியார் எல்லோரும் சென்றிருந்தனர். கல்யாணத்திற்கு முதல் நாள் அவர்கள் வருவதாக இருந்தது.

மறுநாள் காலையில் ப்ரயு வீட்டில் எல்லோரும் மண்டபத்திற்கு செல்ல வேண்டும் என்ற நிலையில், ப்ரயு மட்டும் நேராக மண்டபத்திற்கு வந்து விடுவதாக பேசி வைத்திருந்தார்கள். அன்று பாத்ரூம் சென்று வந்த வித்யா , தெரியாமல் ஈரத்தில் கால் வைத்து வழுக்கி விட, நல்ல வேளை அடி எதுவும் பலமாக இல்லாத நிலையில், பிரசவ வலி ஆரம்பித்து விட்டது.

இரவோடு இரவாக டாக்டரிடம் பேசி விட்டு டாக்ஸி வைத்து பிரயுவும், அவள் மாமியாரும் ஹாஸ்பிடல் அழைத்துச் சென்றனர். வித்யா கணவருக்கு தகவல் சொல்லி விட, அங்கேயோ காலையில் தான் கிளம்ப முடியும் என்ற நிலை.

இடையில் பிரயுவிற்கோ ஆதி ஃப்ளைட் ஏறி விட்டானா என்று தெரியாத நிலை. அவனின் எண்ணிற்கு தொடர்பு கொண்டால் நாட் ரீச் என்று வந்தது. தன் வீட்டிற்கு தெரியப்படுத்தவும் முடியாத நிலை. மறுநாள் அவர்கள் கல்யாணத்திற்கு கிளம்பிக் கொண்டிருக்கும் இந்த வேளையில் அவர்களை அலைக்கழிக்க விரும்ப வில்லை.

அவள் மாமியாரோ மற்ற எதை பற்றியும் கவலை இல்லாமல், தன் மகளின் வலியை பற்றி மட்டுமே யோசித்துக் கொண்டிருந்தார்.

டாக்டரோ வலி எடுத்தாலும் இன்னும் நேரம் ஆகும் என்று கூறியிருந்தார். அவள் வேலை பார்க்கும் ஹாஸ்பிடல் தான் என்பதால் முடிந்த வரை நார்மல் ஆக்க முயற்சித்து கொண்டிருந்தனர்.

பிரயுவிற்கு அவள் மாமியாரை சமாதானப்படுத்தவும், தேவையானவற்றை வாங்கி கொடுக்கவும் சரியாக இருந்தது. ஏற்கனவே பல நாட்களாக அலைச்சல், மன உளைச்சல் . இந்த நேரத்தில் வித்யா நல்லபடியாக பெற்று பிழைக்க வேண்டுமே என்ற டென்ஷன். வித்யாவின் கணவர் வந்து, அவரிடம் நல்லபடியாக தாயும், சேயும் ஒப்படைக்கும் வரை அவளுக்கு இந்த டென்ஷன் ஓயாது.

காலையில்தான் வித்யா வீட்டினர் புறப்பட்டு விட்டதாக தகவல் கொடுத்தனர். அவர்கள் வந்து சேர எப்படியும் மதியத்திற்கு மேல் ஆகிவிடும் என்றனர்.

இதற்கு இடையில் ப்ரயு மண்டபத்திற்கு எப்போது வருகிறாள் என்று கேட்ட தன் பெற்றோருக்கு அவள் தகவல் தெரிவிக்க, அவள் அப்பா ஹாஸ்பிடல் வருவதாகக் கூறினார்.

அவரை தடுத்த ப்ரயு,

“அப்பா, நீங்கள் இப்போ அங்கே இருப்பதுதான் முக்கியம். இங்கே ஒன்னும் பயமில்லை. நான் வேலை செய்யும் இடம்தானே. நாங்களே பார்த்துகொள்கிறோம். நீங்கள் இப்போதைக்கு யாரிடமும் எதுவும் சொல்ல வேண்டாம். எல்லோரும் மண்டபத்திற்கு செல்லுங்கள். நான் ப்ரியாவை அனுப்பி விடுகிறேன். அவள் பவி, தாரிணியை பார்த்துக் கொள்வாள்” என்று சமாதானாப் \படுத்தி அனுப்பி வைத்தாள்.

உடனே ப்ரியாவிற்கு பேசியவள், அவள் நிலையை சொன்னவுடன், ஏற்கனவே அவள் லீவ் எடுத்திருந்ததால் உடனே அவள் மண்டபத்திற்கு கிளம்பி விட்டாள்.

பிறகு மீண்டும் ஆதியின் எண்ணிற்கு முயற்சி செய்ய லைன் கிடைக்கவில்லை. சற்று நேரம் யோசித்தவள், அதைப் பற்றி பிறகு பார்க்கலாம் என்று எண்ணி, மீண்டும் வித்யாவின் அருகில் வந்தாள்.

நல்ல வலி எடுத்த பின், பின் காலை 11 மணி அளவில், ஆண் குழந்தை பிறந்தது. சுகப் பிரசவமே. அதன் பிறகு தான் ப்ரயு நன்றாக மூச்சு விட்டாள்.

பிரயுவின் வீட்டில் மண்டபத்திற்கு சென்ற கொஞ்ச நேரத்தில் , மாப்பிள்ளை வீட்டாரும் வந்து சேர்ந்தனர். அது வரை தங்கள் அக்கா வந்து விடுவாள் . என்று எண்ணியிருந்த பவியும், தாரிணியும் அதன் பின் அவளுக்கு போன் அடித்தனர்.

ப்ரயு போன் எடுக்க, இருவரும் ஒரே நேரத்தில் “அக்கா, ஏன் இன்னும் வரவில்லை?” என்று கேட்டனர்.

அவள் நிலைமையைச் சொன்னதும், இருவரும் அழவே ஆரம்பித்து விட்டனர். அவர்களை ப்ரயு சமாதனபடுத்த முயற்சி தோல்வியே. சற்று அதட்டலான குரலில்,

“பவி, தாரிணி . இப்போ அழுகையை நிறுத்துங்கள். மழை பெய்வதும், மக்கள் பிறப்பதும் மகேசன் கையில் என்று தெரியாதா.? நல்ல விஷயம் நடக்கும் போது இப்படி அழுவீர்களா?”

“ஆனால் நீங்கள் வரவில்லையே. நிச்சயத்தின் போதுத்தான் ஏதோ நடந்து விட்டது. இப்போ கல்யாணத்திலும் என்றால் எங்களால் தாங்க முடியவில்லை. நீங்கள் முதலில் சொன்னது போல் நாங்கள் இருவரும் கொஞ்சம் பொறுமையாக இருந்திருந்தால், இந்த கல்யாணம் நடந்திருக்காது. நாங்கள் பேசப் போய்தான் நீங்கள் எங்களுக்காக அப்பாவிடம் பேசி இந்த திருமணம் ஏற்பாடு செய்தீர்கள். நாங்க அன்றைக்கு பேசாமல் இருந்திருந்தால் இவ்ளோ பிரச்சினை ஏற்பட்டிருக்காது இல்லயா ?”

“ஹேய். லூஸ் மாதிரி பேசாதீங்க. மண்டபத்திற்கு எல்லாரும் வந்திருப்பாங்க. யாரு காதிலேயவது விழுந்தா என்ன நினைபாங்க.? தேவையில்லாத பிரச்சினை உண்டாக்கதீங்க? நான் இன்னிக்கு இல்லாட்டாலும் நாளைக்கு எப்படியாவது வரேன். அமைதியா இருங்க.”

“சரி. மாமா கிளம்பிட்டாங்களா? “

“அது. “ என்று இழுத்தவள். இப்போ அவர் லைன் கிடைக்கலைன்னு இன்னும் அழ ஆரம்பிப்பார்கள் என்று எண்ணியவளாக, “மாமாவிற்கு இந்த டென்ஷன்லே பேசலமா. அதோட அவர் டிராவல்லே இருக்கும் போது அவரை டென்ஷன் குடுக்க வேண்டாம்ன்னு நானும் அவாய்ட் பண்ணிட்டேன்.”

“என்னக்கா . இப்போ நீயும் இங்கே இல்ல. மாமாவும் இல்ல. எங்களுக்கு எவ்ளோ கஷ்டமா இருக்கு தெரியுமா.?”

“ஒரு கஷ்டமும் கிடையாது. என் சார்பில் உங்கள கவனிச்சிக்கதான் ப்ரியாவ அனுப்பியிருக்கேன் . இப்போ வருவா.” என்று அவள் சொல்லிக் கொண்டிருக்கும் போது கதவை திறந்து கொண்டு பிரியா வர, இவர்கள் இருவரும் சிரித்துக் கொண்டே “அக்கா. உன்னோட சப்ஸ்டியுட் வந்தாச்சு. “ என்றார்கள்.

அவர்கள் இருவரையும் காதோடு சேர்த்து பிடித்தவள், “ஏய். வாலுங்களா. உங்க அக்காவா நின்னு ரெண்டு பேரயையும் கரையேத்தாலம்ன்னு .என் லீவ் தியாகம் செஞ்சு வந்தா. ரெண்டு பேரும் என்னை கிண்டலா பண்றீங்க. ? இதுக்கு உங்க அக்கா அந்த நல்லவளும் கூட்டா.?” என்று அடிக்க வர .

அவர்கள் இருவரும் “எஸ்கேப்” என்று விட்டு உள்ளே சென்றார்கள்.

போன் பிரியா கைக்கு வந்திருக்க ப்ரயு “தேங்க்ஸ் டி. ரொம்ப டிஸ்டர்ப்டா இருந்தது. நீ வந்ததுக்கு அப்புறம் ப்ரீயா இருக்கு. “ எனவும்,

“அதை விடு. நீ அங்கே பார்த்துக்கோ . நான் இங்கே ரெண்டு பேரயும் பார்த்துக்கறேன்.” என்று முடித்தாள்.

அதன் பிறகு சற்று நிம்மதியாக மூச்சு விட்டவள், தன் கணவன் பற்றிய கவலை சேர, மீண்டும் அவன் நம்பர் கிடைக்கவில்லை.

நல்ல வேளை. அவளிடம் அவன் ஃப்ளைட் பற்றிய விவரங்கள் மெயிலில் இருந்தது நினைவிற்கு வர, அவள் வேகமாக அலுவலக பகுதிக்கு சென்று செக் செய்த போதுத்தான் . அங்கே ஃப்ளைட் கான்செல் ஆன விவரம் தெரிந்தது. அங்கே உள்ள நிலவரமும் தெரிய, அவள் கண்களில் கண்ணீர் வந்தது,

இந்த முறை அவனின் பத்திரம் பற்றிய விவரங்கள் , அவர்கள் லோக்கல் ஆபீஸ் மூலம் இவளுக்கு தெரியப்படுத்தியிருந்தனர். சற்று நேரம் அங்கேயே அமர்ந்து தன்னை ஆசுவாசபடுத்தியவள் , பின்னர் வித்யா இருக்குமிடம் சென்று சேர்ந்தாள்.

வித்யாவை வாடிற்கு மாற்றியிருக்க, குழந்தையையும், அவள் அம்மாவையும் பார்த்துக் கொண்டு அவள் மாமியார் இருந்தார்.

அவரிடம் வித்யா கணவன், ஆதி பற்றிய விவரம் சொல்லிவிட்டு, அவருக்கு சாப்பிடவும், வித்யாவிற்கு குடிக்கவும் எல்லாம் வாங்கி வர சென்றாள்.

அவள் திரும்பி வரும்போது வித்யா வீட்டினர் வந்திருக்க, அவர்கள் வரும் வழியில் ஒரு ஸ்வீட் , ஏன் சாக்லேட் கூட வாங்கி வரவில்லை. இத்தனைக்கும் அவள் குழந்தை பிறந்த உடன் தகவல் செய்திருந்தாள். இவள் இப்போது வாங்கி வந்ததை எல்லோர்க்கும் கொடுத்தனர்.

ப்ரயு இவ்வளவுதான் இவர்கள் என்று எண்ணியவளாய், மெதுவாக தன் மாமியாரிடம் தங்கைகள் திருமணத்திற்கு செல்வதை பற்றி கேட்க,

“நீ சாயங்காலம் ரிசப்ஷன் அட்டென்ட் பண்ணி விட்டு வா ப்ரயு. நானும் சம்பந்தி அம்மாவும் வித்யாவை பார்த்துக் கொள்கிறோம்” என்றார்.

இதைக் கேட்ட வித்யா மாமியார் “இல்ல சம்பந்தி . நான் ரெண்டு நாள் அலைச்சலில் மிகவும் களைத்து விட்டேன். பிரஷர் வேற இருக்கும் போலே இருக்கு. நான் வீட்டிற்கு போய் ரெஸ்ட் எடுத்து விட்டு, நாளை காலை கல்யாணத்திலும் தலையைக் காட்டி விட்டு வருகிறேன்” என்று கிளம்பியே விட்டார்.

பிரயுவும், அவள் மாமியாரும் செய்வது அறியாது முழித்தனர். வித்யாவோ தூங்கிக் கொண்டிருக்க , அவள் கணவனோ நான் அம்மாவை கொண்டு விட்டு வருகிறேன் என்று கிளம்பி விட்டார்.

பிரயுவிற்கு மிகவும் கஷ்டமாக இருந்தது. இப்போ வேலை இல்லை என்றாலும், தன் மாமியாரை மட்டும் தனியே விட மனமின்றி அவளும் அங்கேயே இருந்து விட்டாள்.

அங்கே பவி, தாரிணி மாமியாரோ விஷயத்தை கேள்வி பட்டவர், நல்ல விஷயம் தானே என்று சாதாரணமாகக் கூறி விட்டு சென்று விட்டார். அவர்கள் முகம் வாடுவதை பார்த்த பிரியா, இருவரிடமும் சீண்டி, கேலி செய்து சாதாரணமாக சிரிக்க வைத்தாள்.

அவள் முயற்சியை புரிந்து கொண்ட அருண், அரவிந்த் இருவரும் தங்கள் கண்களால் ஆறுதல் அளித்தனர்.

ப்ரயு மீண்டும் ப்ரியாவிற்கு பேசி அங்குள்ள நிலைமையைப் பார்த்துக் கொள்ளுமாறு சொன்னாள்.

மறுநாள் காலை ப்ரயு மாமியாரே ,

“ப்ரத்யா . நீ வீட்டிற்கு போய் குளித்து எனக்கும் டிரஸ் எடுத்துக் கொடுத்து விட்டு மண்டபத்திற்கு போ. இங்கே வித்யாவிற்குதான் ஹாஸ்பிடலில் தான் எல்லாம் கொடுத்து விடுவார்களே. எனக்கு மட்டும் தானே. நானே பார்த்துக் கொள்கிறேன். “ என்றார்.

அவர் சொன்னதும் பிரயுவும் கிளம்பி விட்டாள். அவள் மனதில் தன் தங்கைகளின் திருமணம் ஒன்றே நினைவாக இருந்தது.

அவர் சொன்னது போலேவே அவருக்கு தேவையானது செய்து விட்டு, மனம் கேட்காமல் அங்குள்ள தன் சக அலுவலர்களிடம் பேசி அவரை பார்த்துக் கொள்ளச் சொல்லி விட்டுக் கிளம்பி விட்டாள்.

இவள் சரியாக மண்டபம் சென்று சேரும் போது, மணமக்கள் முகூர்த்த புடவை மாற்ற கொடுத்து அனுப்பியிருந்தனர்.

பவி, தாரிணி, அவள் பெற்றோர் விழிகள் இவள் வரவையே எதிர் பார்த்துக் கொண்டிருக்க, இவள் நுழையவும் வேகமாக வந்து அவளை அழைத்து சென்றனர்.

இவளை பார்த்ததும் , ஆதியை பற்றி கேட்க, அவனின் நிலையை சொல்லவும், எல்லோரும் வருத்தப் பட்டனர்.

தன் வருத்தத்தை காண்பிக்காமல் எல்லோரயும் அதட்டி, ரெடி ஆக்கி மேடைக்கு அழைத்து வந்தாள்.

பிறகு நல்ல நேரத்தில் வந்திருந்தவர்கள் வாழ்த்த, மணமக்களுக்கு மாங்கல்யம் பூட்டினர் மணமகன்கள்.

எந்த பிரச்சினையும் இல்லாமல் திருமணம் நல்லபடியாக முடிந்ததில் பிரயூவிற்கு மிகுந்த நிம்மதி ஏற்பட்டது.

-தொடரும்-
 

kothaisuresh

Well-known member
Member
பிரத்யூ, ஆதி பாவம்.நல்லவேளை முகூர்த்ததிற்க்கு கரெக்டா வந்துட்டா
 

New Episodes Thread

Top Bottom