• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

அத்தியாயம் -12

Viswadevi

✍️
Writer
ஹாய் ஃப்ரெண்ட்ஸ். அடுத்த அத்தியாயம் பதிந்து விட்டேன். படித்து விட்டு உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள் பரிசை வெல்லுங்கள்.

IMG-20210430-WA0029.jpg

அத்தியாயம் - 12

ஹனிமூன் ட்ரிப் முடிந்து இந்தியாவிற்கு செலவதற்காக, சர் சீவூசாகூர் ராம்கூலம் சர்வதேச விமான நிலையத்தில் காத்திருக்கும் போதாகட்டும், பின்னர் விமானத்தில் ஏறிய பிறகாகட்டும் இருவருமே எதுவும் பேசவே இல்லை‌. விமானம் பறக்க ஆரம்பிக்கவும், காதில் ஹெட் செட்டை மாட்டிக் கொண்டு பழைய நினைவுகளில் ஆழ்ந்தான் அபிநயன்.

ஐந்து வருடங்களுக்கு முன்பு

'அபிநயன் வளர்ந்து வரும் இளம் இசையமைப்பாளர். யங்ஸ்டர் அனைவரும், " அபிநயன்… அபிநயன்…" என மந்திரம் போல ஜபித்தனர்.
அபிநயனோ கிடைத்த மேடைகளில் எல்லாம் அவனது இசையை மலரச் செய்தான்.

அன்றும் அப்படித்தான் அந்த பிரபல டிவியில் சூப்பர் சிங்கர் கிராண்ட் பினாலே லைவ் ப்ரோக்ராமாக நடந்தது.

அதற்கு சிறப்பு விருந்தினராக அபிநயனை அழைத்திருந்தனர்.

அந்த நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கும் மிஸ்டர் அண்ட் மிஸஸ் சூர்யா, ஆர்ப்பாட்டமாக வரவேற்றுக் கொண்டிருந்தனர்.

"ஹாய்… வெல்கம்… வெல்கம் டியர் ஆடியன்ஸ். இன்னும் சற்று நேரத்தில் மாபெரும் கிராண்ட் பினாலே சூப்பர் சிங்கர் சீனியர் சீசன் ஆரம்பம் ஆகப் போகிறது. லைவ் காம்பெடிஷன். சோ… உங்களுக்காக நிறைய போட்டிகள்… நிறைய பிரபலங்களின் பங்களிப்பு… அதுவுமில்லாமல் ஒரு ஸ்வீட் சர்ப்ரைஸ்ஸும் இருக்கிறது. ‌தொடர்ந்து நிகழ்ச்சியை பாருங்க. ஆஃப்டர் த ப்ரேக் ஃபைனலுக்கு வந்த அந்த ஐந்து கன்டெஸ்டென்டையும் பார்க்கப் போகிறோம். வெயிட் அண்ட் வாட்ச். அதற்குள் நாங்களும் காஃபி குடிச்சிட்டு வந்துடுறோம். ஏற்கனவே சூர்யா வேற பேசவே விடவில்லை என்று கோபமாக இருக்கிறார். சோ இடைவேளைக்கு பிறகு அவரது பார்வையில் பாருங்க செல்லோஸ். "என பேசி விட்டு சென்றாள் மிஸஸ் சூர்யா.

ஐந்து நிமிட இடைவேளைக்குப் பிறகு வந்த சூர்யா. "ஹாய்… ஹாய் ஆடியன்ஸ். உங்க எல்லாருக்கும் வீட்டில் தான் பேச வாய்ப்புக் கிடைக்காது, எனக்கோ இங்கேயும் கிடைக்க மாட்டேங்குது. " என வழக்கம் போல தனது மிஸஸை கலாய்க்க…

அவளோ, வழக்கம் போல அவனை முறைக்க… ஸ்டேடியம் முழுவதும் கலகலவென சிரிப்பு எதிரொலித்தது.

"அப்பாடா… இப்ப தான் நிம்மதியாக இருக்கிறது. நம்ம மட்டும் தான் பாதிச்சிருக்கோம் போல என்று நினைச்சேன். இப்ப தான் தெரியுது, என்னைப் போல் பல்லாயிரக்கணக்கானோர் இந்த கொடுமையை அனுபவித்து இருக்கிறார்கள் என்று நினைக்கும் போது கொஞ்சம் ஆறுதலாக இருக்கிறது. சரி நம்ம சோகக் கதையை அப்புறம் பார்ப்போம். இப்போ வாங்க நிகழ்ச்சிக்கு போகலாம்." என ஆர்ப்பாட்டமாக சூர்யா காம்பியர் பண்ணிக் கொண்டிருக்க...

அபிநயன் அங்கு நடக்கும் ஆரவாரத்தை புன்முறுவலுடன் ரசித்துக் கொண்டிருந்தான்.

"இங்கு உள்ள ஐந்து கன்டெடஸ்டென்டும் உங்களுக்கு ஏற்கனவே அறிமுகம் ஆனவர்கள் தான். அவர்கள், அவர்களுடைய தேன் குரலின் மூலம் அறிமுகமானவர்கள். இன்று அவர்களுடைய குடும்ப அமைப்பு. சங்கீதத்துல எப்படி ஆர்வம் வந்தது. அதுக்காக அவர்கள் எடுத்துக்கொண்ட முயற்சிகள், பயிற்சிகள் என்ன? யார் அவங்களுக்கு இன்ஸ்பிரஷன் என்று எல்லாத்தையும் இப்ப பார்க்கலாம்.

"என்னுடைய மிஸஸ் அஸ்விதா, இப்போ அவங்களை கேள்வி கேட்பார்கள். அப்புறம் அவங்களுக்கு சான்ஸ் கொடுக்கவில்லை என்றால் வீட்டில் என்னை நிற்க வைத்து கேள்வி கேட்பார்கள்…" என்று கலாய்த்து விட்டு சற்று நகர்ந்து கொள்ள…

அஸ்விதா வந்து சலிக்காமல் எல்லோரையும் பேட்டி எடுத்தாள்… ஒவ்வொருவரும் அவர்களுடைய குடும்ப பிண்ணணி… அவர்களுடைய எதிர்கால லட்சியம் என்று எல்லாவற்றையும் பகிர்ந்து கொண்டனர். சற்று நெர்வஸ்ஸாக இருந்தவர்களை, பேசி சிரிக்க வைத்து அந்த பேட்டியை சுவாரஸ்யமாக நகர்த்திக் கொண்டிருந்தாள் அஸ்விதா‌‌….

"அட்லாஸ்ட் நீங்க ஆவலாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த அம்ருதவர்ஷினி."என…

அந்த அரங்கமே கைதட்டி ஒரே ஆரவாரம் செய்ய…
" யாரடா அது ."என்று அபிநயன் சற்று ஆவலாக கவனித்தான்.

முகமெல்லாம் புன்னகையுடன் கண்கள் மினுமினுக்க எந்த வித டென்ஷனும் இல்லாமல் கேஷுவலாக வந்து ஹாய் என்றாள் அம்ருதவர்ஷினி.

" சொல்லுங்க அம்ருதா… எப்படி ஃபீல் பண்றீங்க? நீங்கள் பாடுவதை கேட்பதற்காக ஆயிரக்கணக்கான மக்கள் ஆர்வத்தோடு காத்திருக்கிறார்கள். அதற்கு சாட்சியே நீங்கள் வந்ததும் எழுந்த கரகோஷம். நீங்க டைரக்டா ஃபைனலுக்கு வந்திட்டீங்க. மத்த கன்டென்ஸ்டுக்கும், உங்களுக்கும் உள்ள வித்தியாசம் அவர்களுக்கு எந்த எதிர்பார்ப்பும் இல்லை. ஆனால் உங்களை எல்லோரும் ரொம்ப எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். ஃபேஸ்புக், ட்வீட்டர் எல்லாவற்றிலும் நீங்கள் தான் முதலாவதாக வருவீர்கள் என்று எல்லோரும் உறுதியாகக் கூறிக் கொண்டிருக்கின்றனர்.இது உங்களுக்கு ஸ்ட்ரெஸ்ஸா இருப்பதாக ஃபீல் பண்றீங்களா?"

வழக்கமான ஒரு புன்னகையை சிந்தியவள். " தேங்க்ஸ் பார் யுவர் சப்போர்ட் டியர்ஸ். " என்று ஆடியன்ஸை பார்த்து கையசைத்தவள், பிறகு அஸ்விதாவிடம் திரும்பி‍, "எனக்கு இது என்கரேஜ் பண்ணுற மாதிரி தான் தெரியுது. என்ன மோட்டிவேட் பண்ற மாதிரிதான் எனக்கு இருக்கு… அப்புறம் எந்த டென்ஷனும் இல்லை… அதுவுமில்லாமல் என்னோட டார்கெட் ஃபைனல் ஸ்டேஜுக்கு வரணும் என்பது தான்… இதன் மூலம் என்னுடைய கேரியரை உருவாக்கிக்கணும் என்று நினைச்சேன். இசைத்துறையில் நுழைவதற்கு திறவுகோலா இருக்கும் என்று நினைக்கிறேன். அண்ட் வெற்றி, தோல்வி எது வந்தாலும் ஏற்றுக் கொள்ளும் பக்குவம் எனக்கு இருக்கிறது." என…

"வாவ்...அம்ருதவர்ஷினி… சின்ன பெண்ணாக இருந்தாலும் ரொம்ப மெச்சூர்டா பிகேவ் பண்றீங்க. ஆல் தி பெஸ்ட்... அப்புறம் உங்க குடும்பத்தை பத்தி சொல்லுங்க…"

" நான், அம்மா, அண்ணா அவ்வளவு தான் எங்க குடும்பம். சின்ன வயசுல இருந்தே எனக்கு சங்கீதத்துல இன்ட்ரஸ்ட். எங்க அம்மா எனக்கு சப்போர்டாக இருந்தாங்க. அவ்வளவு தான்" என்றுக் கூறி புன்னகைத்தாள்.

" இசை தான் உங்களுடைய லட்சியம் என்று ஏற்கனவே சொல்லிட்டீங்க. சோ… உங்களுக்கு டிஃபிரண்டா கேள்வி கேட்குறேன், சொல்லுங்க…யாரோடாவது சேர்ந்து பாடணும் என்று ஆசை ஏதாவது இருக்கா... பாடகர் என்று இல்லை... மியூசிக் டைரக்டர் இல்லை.உங்களுக்கு பிடித்த நடிகருடைய படத்தில் பாடணும் என்று…. இப்படி ஏதாவது ஆசை இருந்தால்,எங்களோட ஷேர் பண்ணிக்கோங்க…"

"அல்மோஸ்ட் எனக்கு பிடித்த பாடகர்களோடு நான் பாடிட்டேன். அதற்கு வாய்ப்பு தந்த நம்ம சேனலுக்கு தான் நன்றி சொல்ல கடமைப் பட்டுருக்கேன். அப்புறம் யங்ஸ்டரின் கனவு நாயகன் அபிநயன் இசையில் ஒரு பாடலாவது பாடி விட வேண்டும் என்பதுதான் என்னுடைய நீண்டநாள் லட்சியம்." என வெட்கப் புன்னகையுடன் கூற…

அதுவரை உள்ளே உட்கார்ந்து பார்த்துக் கொண்டிருந்த அபிநயன் ஆச்சரியப்பட்டான்.

அஸ்விதாவோ, " ஓகே அம்ருதவர்ஷினி கூடிய விரைவில் உங்களுடைய லட்சியம் நிறைவேற எங்களது வாழ்த்துக்கள். சரி நீங்க போய் தயாராகுங்கள்." இன்னும் சற்று நேரத்தில் போட்டி ஆரம்பமாகிவிடும்.

"அதுவரைக்கும் உங்களுக்காக பாடல் பாட வருகிறார் பிரபல பின்னணி பாடகர்& பாடகி ." என அஸ்விதாவின் ஆரவாரமான குரல் ஒலித்தது.

அதற்கு பிறகு ஒவ்வொரு கன்டென்ஸ்டென்டும் பாடல்களைப் பாடி விட்டு சென்றனர்... அம்ருதாவின் முறை வரும் போது,
"தென்றல் வந்து என்னைத் தீண்டும் போது என்ன வண்ணமோ," என்ற பாடலை தன் தேன் குரலால் பாடி, அந்த மாலை நேரத்தையை இனிமையாக்கிக் கொண்டிருந்தாள்.

முதல் ரவுண்டு முடிவில் அம்ருதாவே முன்னிலையில் இருந்தாள்.

அடுத்த சுற்று ஆரம்பமாகும் நேரத்தில், அந்த சர்ப்ரைஸ் என்ன என்பதை சூர்யா வந்து எல்லோருக்கும் தெரிவித்தார்.

"வளர்ந்து வரும் இசை அமைப்பாளர்… யங்ஸ்டர்களின் கனவு நாயகன் அபிநயன்,போட்டியாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப இசைக்க வருகிறார்." என…

அந்த அரங்கமே அதிர்ந்தது. அது வரை ஒரு அறையில் இருந்த அபிநயன், ஸ்டைலாக மேடை ஏறினான்.

அவ்வளவு நேரம் இலகுவாக இருந்த அம்ருதா,அபிநயன் வந்ததை அறிந்து நெர்வஸ்ஸாக இருந்தாள். ஏற்கனவே தயார் செய்து இருந்த பாட்டை மாற்றி விற்று, வேறு ஒரு பாட்டு விரைவாக போனில் டவுன்லோட் செய்து ஒத்திகை செய்து கொண்டிருந்தாள். அபிநயனின் வருகையால் முதலிடம் வருவாள் என்று எதிர்பார்த்து அம்ருதா, அந்த இடத்திற்கு வருவாளா என்பது கேள்விக்குறியானது. ஆனால் அதையெல்லாம் நினைத்து அவள் கவலையே படவில்லை.

அவளுக்கு மிகவும் பிடித்த பாடலுக்கு,
அபிநயன் இசையமைக்க அவள் மிக உற்சாகமாக பாடினாள்.

"குழலூதும் கண்ணனுக்கு குயில் பாடும் பாட்டுக் கேட்குதா
குக்கூ… குக்கூ… குக்கூ…
குழலூதும் கண்ணனுக்கு குயில் பாடும் பாட்டுக் கேட்குதா
குக்கூ… குக்கூ… குக்கூ…
என் குரலோடு மச்சான் உங்க குழலோசைப் போட்டி போடுதா
குக்கூ… குக்கூ… குக்கூ…
இலையோடு பூவும் தலையாட்டும் பாரு
இலையோடு பூவும் காயும் தலையாட்டும் பாரு பாரு…" என அவள் பாட…

அது வரை அவளுடைய குரலுக்கு மயங்கிக் கொண்டிருந்த அபிநயன் அவள் பாடிய வரிகளைக் கேட்டவன் ஜெர்க்கானான். பிறகு தன்னை சமாளித்துக் கொண்டு புல்லாங்குழலை இசைத்தான் அந்த இசைக்கலைஞன்.

அம்ருதா பாடப் பாட… அங்கிருந்தவர்கள் அனைவரும் அதிர்ந்து தான் போயிருந்தனர். ஏனென்றால் அவள் பாடுவதாக இருந்த பாடல் மிகவும் கடினமானதாக இருந்தது. அதை அவள் அருமையாக தயார் செய்து வைத்திருந்தாள்‌. அதை பாடியிருந்தால்‍, அவளுக்குத்தான் முதல் பரிசு நிச்சயம், அப்படியிருக்க அவளோ திடீரென்று பாடலை மாற்றியிருந்தாள்.

கீழே இறங்கியவுடன் அவளது தாய் முதல் அவளுடைய தோழிகள் வரை, அவளை எல்லோரும் கண்டிக்க‌… அவளோ அதை நினைத்து கிஞ்சித்தும் கவலைப்படவில்லை. ஏனென்றால் அவள் இந்த உலகத்திலே இல்லை‌.

அதே மாதிரி மூன்றாவதாகத் தான் வந்தாள் அம்ருதா… ஆடியன்ஸ் கூட அதிர்ச்சியாக இருக்க… அம்ருதா மலர்ந்த முகத்துடன் இருந்தாள். முதலாவதாக வந்த பெண் மற்றும் ஆண் அவர்களுடன், இவளும் ஸ்டேஜில் ஏறி பரிசு வாங்கினாள்.

அங்கிருந்தவர்களுக்கு அப்பொழுதுதான் ஒன்று புரிந்தது. நாம் எத்தனையாவது இடத்தில் இருப்போம் என்பது முக்கியமில்லை, அதை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்வதில் தான் இருக்கிறது. முதலிரண்டு இடத்தை பிடித்தவர்களை விட அம்ருதா தான் அதீத மகிழ்ச்சியில் இருந்தாள்.

ஒரு வழியாக பரிசு வாங்கி, அதற்கு நன்றி தெரிவித்து பேசி விட்டு, ஒரு வழியாக எல்லாம் முடிந்து கீழே இறங்கினாள். அவளுடைய கனவு நனவாகியதால், ஆகாயத்தில் மிதந்து கொண்டிருந்தாள். அவளை இன்னும் மகிழ்ச்சியின் உச்சத்திற்கு அழைத்துச் செல்வது போல் அபிநயன் அவளிடம் தனியாக பேசினான்.

" ரொம்ப அருமையாக பாடினீங்க… உங்களுக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது. வாழ்த்துக்கள்… உங்களுடைய வாய்ஸ் ரொம்ப சூப்பர்‌‌…கேட்கும் போது எல்லோரையும் மயங்க வைக்கிறது. உங்களுக்கு இசைக்குயில் என்று பெயர் வைத்து விடலாம் போல இருக்கு‌." என்று பாராட்ட…

" ஐயோ! அபி சார்… நீங்க என் கிட்ட பேசுவீங்க என்றே எதிர்பார்க்கவே இல்லை. ஐயம் வெரி ஹாப்பி… நான் இசைக்குயிலா? அந்த அளவுக்கு நான் இன்னும் வளரவில்லை‌. வேணும்னா இசைக்காதலி என்று சொல்லுங்க." என்று தலை சாய்த்து ஆசையோடு சொல்ல…

அவளுடைய பார்வையை பார்த்தவன், 'யோசனையோடு கண்கள் சுருங்கி இந்தச் சின்னப் பெண்ணின் மனதை அலைபாய விடக்கூடாது.'என்று மனதிற்குள் நினைத்தவன், முகத்தை கடினமாக வைத்துக் கொண்டு, அவளை ஒரு பார்வை பார்த்து விட்டு சென்றான்.

பாவையவளோ, அவனது பார்வையில் மிரண்டு போனாள்.'

************
ஒருவழியாக இருவரும் பழைய நினைவுகளும், எதிர்காலத்தைப் பற்றிய குழப்பத்துடனும் அந்த விமான பயணத்தை அமைதியாக பயணித்தனர்.

விடியற்காலை பொழுதில் ஏர்போர்ட்டில் இருந்து இருவரும் வெளியே வர‌.

அங்கு டிரைவர் தயாராக இருந்தார். காரிலும் இருவரும் மௌனத்தையே மொழியாகக் கொண்டிருந்தனர். அவர்களை இறக்கி விட்டு காரை ஷெட்டில் நிறுத்தினார் ட்ரைவர்.

இருவரும் வீட்டிற்கு நுழைய… எல்லோரும் இவர்களுக்காக காத்திருந்தனர். "ஜர்னி எப்படி இருந்தது?" என ராஜன் வினவ…

" பைன் பா." என்றவன் தன் தந்தையைப் பார்த்து புன்னகைத்தான்.

இவர்கள் இருவரின் முகத்தையும் பார்த்து எதுவும் சரியில்லை என்பதை அனைவரும் உணர்ந்து இருந்தனர். பெரியவர்கள் கண்டும், காணாமலும் இருக்க… அந்த வீட்டின் இளவரசியோ, தன் தாயிடம்," மா… இந்த அண்ணன், ஏன் மா போயும், போயும் இவளைப் போய் தேடித்தேடி கல்யாணம் பண்ணிக்கிட்டார். அவருக்கு இருக்கிற அழகு, திறமை, வசதி எல்லாத்துக்கும், அவரைக் கட்டிக்க தவமா தவமிருக்கிறாங்க. இந்த மேடம் என்னவென்றால், எங்க அண்ணனோட ஹனிமூன் போயிட்டு வந்ததற்கு இப்படி முகத்தை தூக்கி வச்சிருக்காங்க." என்று கடுமையாகக் கூற…

அவளது பேச்சைக் கேட்ட அம்ருதா பயந்து அபிநயனைப் பார்த்தவள், மனதிற்குள் விவாகரத்து கேட்ட அன்று நடந்ததை நினைத்துப் பார்த்தாள்.

'விவாகரத்து தரவில்லை எனில் தற்கொலை செய்துக் கொள்வேன் என்றுக் கூறியதைக் கேட்டு முதலில் அதிர்ந்த அபிநயன், பிறகு அவள் அருகில் நெருங்கி வந்து," அவள் முன் சொடக்கிட்டு, நீ சாகணும் நினைத்தால் கூட நான் நினைத்தால் தான் நடக்கும். நீ டைவர்ஸ் கேட்டா உனக்கு இந்தா என்று கையெழுத்து போட்டுக் குடுத்துடுவேனா. நெவர்… பிடிக்குதோ,இல்லையோ, நாம் இரண்டு பேரும் தான் கணவன், மனைவி. இந்த ஜென்மம் முழுமைக்கும்… அன்ட் வீட்டிலோ,வெளியேவோ யாருக்கும் நம்மோட சண்டை தெரிய வரக்கூடாது. தெரிந்தது அப்புறம் நடக்கும் விளைவுகளுக்கு நான் பொறுப்பு கிடையாது. உனக்கு உங்க அண்ணன், அண்ணி உயிர் தானே?" என்று கேட்டுவிட்டு போயிருந்தான்.' அதை நினைத்து பார்த்தவள் பயத்தில் வெடவெடக்க…

அவளைப் பார்த்த அபிநயன், அவளது எண்ணவோட்டத்தை புரிந்துக் கொண்டான்.இதோ இந்த பார்வை... இந்த பார்வை தான் அவனை கடந்த இரண்டு நாட்களாக மனதை வலிக்கச் செய்கிறது. 'விவாகரத்து செய்வதை எவ்வாறு தடுப்பது என்று தெரியாமல் அன்று மிரட்டி இருக்க... அங்கிருந்த இரண்டு நாட்களும் அவளுடைய கண்களில் அவன் இந்த பயத்தை தான் பார்த்தான்.
இதோ இன்றும் அவனை பயத்தோடு பார்ப்பதைப் பார்த்து கொஞ்சம் பரிதாபமாக இருந்தது. மனதிற்குள்ளே பெருமூச்சுவிட்டு கொண்டவன்,' அவளைப் பார்த்து கண்ணடித்து, என் டார்லிங்குக்கு கோபம். இன்னும் ஒரு வாரம் டூரை எக்ஸ்டென் பண்ண சொன்னா… பட் என்னுடைய பிசி ஷெட்யூல் தான் உங்க எல்லோருக்கும் தெரியுமே. அதான் இன்னொரு முறை போகலாம் என்று நான் அழைத்து வந்து விட்டேன். அது தான் மேடம் என் மேல் செம கோபத்தில் இருக்கிறாள்."என…

நிர்மலா,ராஜன் இருவரின் முகமும் மலர்ந்தது. அவளோ அடப்பாவி என அவனை பார்த்தாள், 'ஒரு நிமிடத்தில் கதையை மாற்றி விட்டானே… கொலைக்காரா… எப்படி நடிக்குற, இரு என்றாவது ஒரு நாள் எல்லோருக்கும் முன்பு உன் முகத்திரையை கிழிக்கின்றேன்.' என மனதிற்குள் நினைத்தாள்‌.

தொடரும்…..
 
Last edited:

Baby

Active member
Member
அவ அவன்மேல எதுக்காக கோவமா இருக்கானு தெரியும்தான... அதை சரிபன்னலாம்ல.. ஆபி அவளைக் காதலிச்சுக் கல்யாணம் பன்னிருக்கான் அவளுக்கு அவன் மேல கோவம் இருக்கு ரைட்டூ.. அதுக்காக அவன் தங்கச்சி அவளை பேசுனா அவளை அப்டி பேசக்கூடாதுனு சொல்லமாட்டானா...சரியான லூசா இருக்கான்...இந்த விஷயம் இவன்கிட்ட எனக்கு பிடிக்கல...

தென் அவங்க வீட்டுக்கு வந்ததும் வர்ற சீன்ல அபிநயன்கு பதிலா அம்ருதன் னு இருக்கு.மாத்திக்கோங்க
 

Rajam

Well-known member
Member
அவன் என்ன தவறு செய்தானு
அவன்முகத்திரைய கிழிக்க நினைக்கறா.
அவ தான் எதையோ தவறாக புரிந்து இருக்கனும்.
 

Viswadevi

✍️
Writer
அவ அவன்மேல எதுக்காக கோவமா இருக்கானு தெரியும்தான... அதை சரிபன்னலாம்ல.. ஆபி அவளைக் காதலிச்சுக் கல்யாணம் பன்னிருக்கான் அவளுக்கு அவன் மேல கோவம் இருக்கு ரைட்டூ.. அதுக்காக அவன் தங்கச்சி அவளை பேசுனா அவளை அப்டி பேசக்கூடாதுனு சொல்லமாட்டானா...சரியான லூசா இருக்கான்...இந்த விஷயம் இவன்கிட்ட எனக்கு பிடிக்கல...

தென் அவங்க வீட்டுக்கு வந்ததும் வர்ற சீன்ல அபிநயன்கு பதிலா அம்ருதன் னு இருக்கு.மாத்திக்கோங்க
Thank you so much sis ❤️. Mistakea correct pannitten. பழக, பழக , அபியை பிடிச்சிடும்.🤣🤣🤣
 

Viswadevi

✍️
Writer
அவன் என்ன தவறு செய்தானு
அவன்முகத்திரைய கிழிக்க நினைக்கறா.
அவ தான் எதையோ தவறாக புரிந்து இருக்கனும்.
Thank you so much sis ❤️. Correct sis
 

Baby

Active member
Member
பாப்போம் பிடிக்குதா இல்லையானு
Thank you so much sis ❤️. Mistakea correct pannitten. பழக, பழக , அபியை பிடிச்சிடும்.🤣🤣🤣
 

Lakshmi

Well-known member
Member
அபி பிழைச்சிப்பான் என்னம்மா ப்ளேட்டை மாத்தி போட்டு பேசுகிறான்.
 

பிரிய நிலா

Well-known member
Member
அபி ஏன் இன்னும் இன்னும் ஒரு கெட்ட பிம்பத்தை ஏற்படுத்தறான் அம்ருகிட்ட..
பயத்தை காட்டி ஒருத்தரை ரொம்ப நாளைக்கு கட்டுப்படுத்த முடியாதுனு தெரியலயா...
 

Viswadevi

✍️
Writer
அபி ஏன் இன்னும் இன்னும் ஒரு கெட்ட பிம்பத்தை ஏற்படுத்தறான் அம்ருகிட்ட..
பயத்தை காட்டி ஒருத்தரை ரொம்ப நாளைக்கு கட்டுப்படுத்த முடியாதுனு தெரியலயா...
Thanks sis
 

Latest profile posts

ஹலோ மக்களே
இனியா கதை எபி 80 வரை சைட்ல போட்டாச்சு.
நீ பார்த்த விழிகள் நாவலின் லிங்க் ஏப்ரல் 30 செவ்வாய் வரை தான் ஆக்டிவா இருக்கும், இன்னும் படிக்கலன்னா சீக்கிரம் படிச்சிடுங்க

https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/சித்ரா-வெங்கடேசனின்-நீ-பார்த்த-விழிகள்.372/
மக்களே சைட் ஒர்க் போகுது. விரைவில் சரி செய்யப்படும்
#முள்ளில்லா_முல்லைப்பூ-முழுநாவல்(ஏப்ரல் 22 இரவு 10 மணிவரை மட்டுமே)

மக்களே... நிறைய பேர் இன்னும் பாதி கதையில் இருப்பதாக சொன்னதால் முள்ளில்லா முல்லைப்பூ கதை நாளை (ஏப்ரல் 22) இரவு 10 மணிக்கு ரிமூவ் செய்யப்படும். அதற்கு மேல் டைம் கேட்காதீர்கள் மக்களே... கதையை பப்ளிஷ்க்கு அனுப்பிட்டேன். அதனால் அதற்கு மேல் லிங்க் வைத்திருப்பது கஷ்டம். புரிந்து கொள்வீர்கள் என்று நினைக்கிறேன்🙂


https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/எழிலன்புவின்-முள்ளில்லா-முல்லைப்பூ.382/
மக்களே சைட்டில் எரர் வந்தால் ஒரு இரண்டு நிமிடத்திற்கு பிறகு மீண்டும் பாருங்கள் ஒர்க் ஆகும்.

New Episodes Thread

Top Bottom