• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

அத்தியாயம் - 10

Viswadevi

✍️
Writer
ஹாய் ஃப்ரெண்ட்ஸ். அடுத்த அத்தியாயம் பதிந்து விட்டேன்.படித்து விட்டு உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள். பரிசு வெல்லுங்கள்.


அத்தியாயம் - 10

எல்லா பார்மாலிடீஸ் முடிந்து ஃப்ளைட்டில் ஏறியவுடன் அபிநயன், அப்பாடா என்று தனது இருக்கையில் அமர்ந்துக் கொண்டான். தனது அருகில் இருந்த அம்ருதாவை கண்டு கொள்ளவில்லை.

பின்ன என்ன செய்வது ஹனிமூன் போகப் போறோம் என்று வீட்டில் சொன்னவுடன், அன்று இரவு வர முடியாது என்று அவ்வளவு கலாட்டா செய்து விட்டாள் அம்ருதா. ஆம் தனியாக இருக்கும் போது சொன்னால் ஒத்துக்கொள்ள மாட்டாள், என்று எல்லோரும் இருக்கும் போது தான் அவளுக்கும் தெரிவித்தான் அபிநயன்.

அவளோ, இவன் இரவு வரும் வரை விழித்திருந்து, " என்னால எங்கேயும் வர முடியாது." என்று திட்டவட்டமாகக் கூற…

"ஓஹோ, அதை அப்போதே வர முடியாது என்று சொல்லியிருக்க வேண்டியது தானே… உங்க அத்தையோட ஜாலியா ஷாப்பிங்லாம் போயிட்டு வந்து இப்ப சொல்லுறீயே…" என கேலியாகப் பார்க்க...

அம்ருவோ, "அது…என்று தடுமாறியவள்… அத்தையிடம் மறுக்க முடியவில்லை." என…

" அதே தான்… என்னாலும் அம்மாவிடம் மறுக்க முடியாது. அதுவும் இல்லாமல் ஹனிமூன் போவது ஸ்டேட்டஸ் சம்பந்தப்பட்ட விஷயம். சோ… நீ வந்து தான் ஆக வேண்டும்." என்று ஒரு வழியாக அவளை சமாளித்து, மிரட்டி ஹனிமூனுக்கு அழைத்து வருவதற்குள் அபிநயனுக்கு போதும், போதும் என்றாகி விட்டது. ' என்னை வில்லன் வேலைப் பார்க்க வைப்பதே, இவளுக்கு வேலையாகப் போயிற்று.' என்று மனதிற்குள்ளே நினைத்துக் கொண்டே கண்களை மூடி இருந்தான்.

அம்ருதாவின் மனதிலோ பல கேள்விகள்… ' எப்படி என் மனசுக்குள் புகுந்து பார்த்த மாதிரி எல்லாமே செய்கிறான். திருமணமானதிலிருந்தே ஒவ்வொரு விஷயமும் அவளது விருப்படி தான் நடக்கிறது. ஏன் முகூர்த்த புடவை கூட இவளது ஆசைப்படி தான் இருந்தது. ஆனால் இவளோ புடவை எடுப்பதற்கு எல்லாம் செல்லவில்லை. சின்ன, சின்ன விஷயங்களில் இருந்து, இதோ இந்த ஹனிமூன் ட்ரிப் வரை அவளது விருப்பப்படியே நடக்கிறது. அவளுக்காக அவளது அத்தைக் கூட, அபிநயனிடம் சண்டை போட்டிருந்தாள். "அம்ருதா கிட்ட கலந்துக்காமல் நீயாக எப்படி முடிவு எடுக்கலாம்." என்று சண்டை போட்டிருக்க‌‌… அம்ருவிற்கு மட்டும் தானே தெரியும், அவளது ஆசைகளில் ஒன்று தான் மொரிஷியஸ் தீவிற்கு செல்வது என்பது… 'ஒரு வேளை இவருக்கு மாய மந்திரம் ஏதும் தெரியுமோ? ' என்று குழப்பத்துடன் எண்ணியவள், அவனைப் பார்க்க அவனோ கண்களை மூடிக் கொண்டு வேறு உலகத்தில் இருந்தான். அவன் இவளை கண்டு கொள்ளவில்லை எனவும், ' இன்னமும் ஏதாவது யோசித்தால் பைத்தியமாக வேண்டியது தான், ' என்று நினைத்தவள் தனது எதிரே இருந்த டீவியை ஆன் செய்து ஹெட் செட் மாட்டி கொண்டு படத்தை பார்க்க ஆரம்பித்தாள். அவளும் அதற்குப் பிறகு அவனை சட்டை செய்யவில்லை.


அபிநயன், அதற்காக அவளை முழுவதும் கவனிக்காமல் இல்லை, சாப்பிடும் நேரம் எல்லாம் அவளுக்கு வேண்டியவற்றை வரவைத்து கொடுத்து அவளை சாப்பிட சொல்ல‌…

அவளோ, வேண்டாம் என்று தலையசைத்தாள்.

அவளை உருட்டி, மிரட்டி சாப்பிட வைத்தவன், ' ஐயோ! நம்ம ஹனிமூனுக்கு போயிட்டு வருவதற்குள் முழு நேர வில்லனாக மாற்றி விடுவாள் போல இருக்கே‌…' என எண்ணினான்.

ஒரு வழியாக அந்த நீண்ட நேர பயணம், இனிதாக முடிந்தது.

கீழே இறங்கி எல்லா பார்மாலிட்டிஸ் முடித்து வெளியே வர...

இவர்களை அழைத்துச் செல்வதற்கு, இவர்கள் புக் செய்திருந்த ரிசார்டிலிருந்து ஆள் தயாராக, இவர்கள் பெயர் எழுதிய போர்டை வைத்திருக்க…

அபிநயன் ஒரு கையால் லக்கேஜ் இருந்த ட்ராலியை தள்ளியவாறே கை அசைத்தான். அதற்குப் பிறகு அவர்கள் இருவரையும் காரில் அழைத்துச் சென்று அந்த ரிசார்டில் விட… இதுவரை இருந்த குழப்பம் மறைந்து விட, அங்கிருந்த இயற்கை அழகில் மெய்மறந்து நின்றாள் அம்ருதா.

அந்த இடத்தை, பூலோக சொர்க்கம் என்றே அழைக்கலாம். அந்த அளவிற்கு இயற்கை கொஞ்சியது. சுற்றிலும் மரங்கள்… அந்த இருளில் மெல்லிய லைட் வெளிச்சத்தில் தேவலோகமாக காட்சி அளித்தது. அம்ருதாவோ, அசையாமல் ரசித்துக் கொண்டிருக்க…

" லெட்ஸ் மூவ் அம்ருதா.‌.. மூன்று நாட்கள் இங்கே தான் ஸ்டே… சோ,நாளைக்கு சுத்திப் பார்க்கலாம். ஐயம் வெரி டயர்ட். ஐ நீட் டூ டேக் சம் ரெஸ்ட் நவ்."

" வாட்? த்ரி டேய்ஸ் தானா?" என ஏமாற்றத்துடன் வினவ…

" அம்ரு… இங்க சுத்திப் பார்க்க, மூன்று நாட்கள் போதும். நெக்ஸ்ட் த்ரீ டேஸ்‍, மவுன்டைன்ல ப்ளான் பண்ணியிருக்கேன். அது இன்னும் செமையா இருக்கும். ஒரு பக்கம் அருவி… அதோட சத்தத்தை கேட்டுக் கிட்ட நமக்கான ரிசார்ட்ல‍, திறந்த வெளியில டின்னர் கூட சாப்பிட்டுக் கிட்டே ரசிக்கலாம் டியர்."

" ஓ… ரியலி..." என ஆச்சரியமாக கேட்டவள், அதற்கு பிறகு அவனுடன் உற்சாகமாக சென்றாள்.

அவனுடன் சேர்ந்து அறைக்குள் நுழைந்த அம்ருதா, அப்படியே அதிர்ச்சியில் கண்கள் தெறிக்க நின்றிருந்தாள். அவளைப் பார்த்த அபிநயன் அடக்கமாட்டாமல் நகைக்க... அவனது சிரிப்பைப் பார்த்து இன்னமும் பயந்து விழிகள் தெறிக்க நின்றிருந்தாள்.

அப்போது தான் அவளுடைய பயத்தைப் புரிந்த அபிநயன், " ஹே.. அம்ரு… இங்கேப் பாரு… ஹனிமூன் கப்புள் என்று தானே புக் பண்ணியிருக்கோம். அதான் இந்த ஏற்பாடு செய்து இருக்காங்க… ஜஸ்ட் லீவ் இட்… " என்றவன் தனது டவலை எடுத்துக் கொண்டு ஃப்ரெஷ் அப்பாக சென்றான்.

அம்ருதாவோ, இன்னமும் பயந்துக் கொண்டு அந்த அறையைச் சுற்றி பார்த்தாள். பெரிய மெத்தை, அதைச் சுற்றிலும் ஆங்காங்கே பூங்கொத்துகளை வைத்திருக்க… வாசனை மிக்க மெழுகுவர்த்தி எரிந்து கொண்டு இருந்தது. அந்த அறையே அவ்வளவு ரொமாண்டிக்காக இருக்க, அவளுக்கோ மூச்சு முட்டியது. அங்கு இருந்த விண்டோ கதவை திறந்து பார்த்தாள். அருகிலேயே பீச் இருப்பதும் தெரிந்தது அதைப் பார்த்துக் கொண்டே நின்று கொண்டிருந்தாள்.

குளித்து விட்டு வந்த அபிநயன் ஆயாசமாக, " அம்ருதா ஃபிரஷ்ஷப் ஆகி விட்டு வா… டின்னர் ஆர்டர் பண்றேன்." என…

"ம் " என தலையாட்டியவள் பாத்ரூமிற்கு சென்றாள்.

அதற்குப் பிறகு அவனும் ஒன்றும் பேசவில்லை‌. எதுவாக இருந்தாலும் நாளை பேசிக் கொள்ளலாம் என்று அமைதியாக இருந்தான்.

இருவரும் உணவருந்தி விட்டு உறங்கினர். பெட்ஷீட்டை இழுத்துப் போர்த்திக் கொண்டு நன்கு தூங்கும் அம்ருவைப் பார்த்துக் கொண்டிருந்த அபிநயனோ, சோ ஸ்வீட் டார்லிங் என்று மனதிற்குள் கொஞ்சிக் கொண்டிருந்தான். எங்கே வெளியே சொன்னால் அவ்வளவு தான், அதை அம்ருக் கேட்டாள் கத்த ஆரம்பித்து விடுவாள் என்று எண்ணியவன் புன்னகையுடனே உறங்கினான்‌.


காலையில் விழித்த அம்ருதா அவனுடைய புன்னகை முகத்தை தான் கண்டாள். தன் தலையில் தட்டிக் கொண்டு ரொம்ப தப்பா நினைச்சிட்டேன். ஐயோ! இப்ப மூஞ்சிய எங்கே கொண்டுப் போய் வைத்துக் கொள்வது என்று எண்ணியவள், அவன் உறங்குவதாக நினைத்து "சாரி அபி சார் என்று மெதுவாக கூறி விட்டு குளிக்கச் சென்றாள். " அவள் தனக்குள் ஏதோதோ கூறிக் கொண்டிருக்கும் போதே அபிநயன் விழித்து விட்டான். அவனும் உற்சாகமாகவே தயாரானான்.

ரிசார்டிலே காலை உணவை முடித்தவர்கள், வெளியே சுற்றிப் பார்க்க வாடகைக்கு கார் புக் செய்துக் கொண்டான். இங்கு ட்ரைவ் செய்ய இந்தியன் லைசென்ஸ் இருந்தாலே போதும். அதனால் தான் ரிசார்டில் ஏற்பாடு செய்கிறேன் என்றுக் கூறிய ட்ரைவரை,செல்ஃப் ட்ரைவ் தான் பெஸ்ட் என்றுக் கூறி மறுத்து விட்டான்.

அம்ருதாவோ காரில் ஏறியவுடன் தனது தயக்கத்தையெல்லாம் மீறி, " ஃபர்ஸ்ட் எங்கே போகப் போறோம்?."என்று வினவ…

" சஸ்பென்ஸ்" என்றுக் கூறி புன்னகைத்துக் கொண்டான்.

அவனைப் பார்த்து முறைத்தவள் பிறகு வேடிக்கைப் பார்க்க தொடங்கினாள்.

அபிநயன் காரை நிறுத்திய இடத்தைப் பார்த்து திகைத்தாள்.
" என்ன ஃப்ரீஸ் ஆகிட்ட‌… இந்தியாவுல தான் உன்னை கோவிலுக்கு அழைச்சிட்டு போக முடியலை… அங்க சம் ப்ராப்ளம்… சோ‍, இங்க வரவும் கோவிலுக்கு தான் முதலில் வரணும் என்று நினைத்தேன். பிடிச்சிருக்கா?" என வினவ…

"ம்" என்று தலையசைத்தவள், சிரத்தையாக அங்கிருந்த எல்லை அம்மனை கூம்பிட்டாள். அபிநயனும்
எங்கள் வாழ்க்கை நன்றாக இருக்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டான். அதற்கு பிறகு அம்ருதாவின் தயக்கங்கள் எல்லாம் விலக… திரும்பி காரில் வரும்போதெல்லாம் பேசிக் கொண்டே வந்தாள். "ஆனால் அபி சார், இங்கெல்லாம் கோவில் இருக்கும் என்று எக்ஸ்பெக்டட் பண்ணவே இல்லை." என.

"முதலில் அபி சார் என்று கூப்பிடுவதை நிறுத்து… உன்னிடம் பலமுறை சொல்லியிருக்கேன்." என.

இவளோ, குழப்பத்துடனே சரியென தலையசைத்தாள். 'நம்மக் கிட்ட எப்போ சொன்னாங்க 'என்று யோசித்தவள் பிறகு தோளை குலுக்கி விட்டு, யோசிப்பதை நிறுத்தி அவனைப் பார்த்தாள்.

"அம்ரு … இங்கு முக்கால்வாசி பேரு இந்திய வம்சாவளியில் வந்தவர்கள் தான்... அதனால் இங்கு தெருவுக்குத் தெரு நிறைய கோவில் இருக்கும்."

"ஓ… "என்று ஆச்சரியமாக கேட்டு கொண்டாள் அம்ரு...

அங்கு இருந்த நாட்களில், எல்லா இடத்தையும் சுற்றிப் பார்த்து விட்டு, ஷாப்பிங் செய்து என்ஜாய் செய்தனர். அங்கிருந்து கிளம்பும் போது மனமே இல்லாமல் தான் கிளம்பினாள் அம்ருதா. பின்னே தினமும் இரவு உணவருந்தி விட்டு அங்கு இருந்த ரிசாட்டுக்கு சொந்தமான பீச்சில்,இரவு வெகுநேரம் வரை அமர்ந்து இருந்து, உலகத்தில் உள்ள எல்லா விஷயத்தைப் பற்றியும் இருவரும் பேசிக் கொண்டிருந்தனர். அம்ருவிற்கும், அபிநயனுக்கும் மிகவும் பிடித்த தருணங்கள்.

அம்ருவின் முக வாட்டத்தைப் பார்த்து மெல்ல அவளை அணைத்து, "அடுத்து நம் தங்கப் போற காட்டேஜ் இதைவிட அருமையான இடம். அங்கிருந்து உன்னை கிளம்பவே முடியாது பாரேன்." என்றான்.

அவன் சொன்னபடியே தான் நடந்தது‌. அவர்கள் காட்டேஜ் வெளியே டேபிளில் உட்கார்ந்து கொண்டு காஃபி அருந்திய படியே கொட்டும் அருவியை ரசித்தனர். அடுத்த நாள் வர்ணஜாலம் காட்டும் மணல்குன்றுகளுக்கு அழைத்துச் சென்று காட்டினான். இரண்டு நாட்களும், நிமிஷமாக மறைய அங்கிருந்து கிளம்பவே மனதே இல்லாமல் இருந்தவளை," அம்ரு... இதை விட ஒரு அருமையான இடம்… கடலில் உள்ள அருவியைக் காண்பிக்கிறேன். சூப்பராக இருக்கும்…" என...

" என்னது கடல்ல அருவியா? நம்ம குளிக்கலாமா?அபி…"

" யா… ஸ்யூர்… " என்று அழைத்துச் சென்றான்.இந்த முறை புக் செய்திருந்த காட்டேஜிற்கு போட்டில் அழைத்துச் சென்றான். அங்கே இருந்த மரப்பலகையில் நடந்து வந்தால் அவர்கள் புக் செய்திருந்த மூங்கில் குடில் வரும்.

அங்கு செல்லவும்‍ அபியை தொந்தரவு செய்ய ஆரம்பித்து விட்டாள்." எப்ப போகலாம் சொல்லுங்க அபி?"என…

பொறுமை… பொறுமை… நாளைக்கு செல்லலாம் என்றவன்‌, "சரி வா ஃபோட்டோ எடுத்துக் கொள்ளலாம்." என்று வழக்கம் போல் அவளை வித விதமாக எடுத்தான், பிறகு இருவரும் சேர்ந்து எடுத்துக் கொண்டார்கள். அந்தக் குடிலைச் சுற்றி எந்தப் பக்கம் பார்த்தாலும் தண்ணீர்‍, இருவரும் நன்றாக என்ஜாய் செய்தனர்.


மறுநாள் கடலில் உள்ள அருவியைக் காட்டுவதற்கு அழைத்துச் சென்றவன் மனதிற்குள், ' அபி உனக்கு இன்னைக்கு அடி கன்பார்ம். நீ எவ்வளவு பெரிய ஸ்டார்… ஆனால் அம்ருவிடம் இருந்து உன்னை காப்பாத்த யாருமே இல்லையே.' என நினைத்துக் கொண்டு அவளை அழைத்துச் சென்றான். அழைத்துச் சென்றவன் தூரத்திலிருந்து அதை காட்ட… அவனை பார்த்து ஒரு லுக் விட்டவள், " ஐயோ! அபி உங்களை என்ன தான் பண்ணுறது." என்று சினுங்க…

அபியின் இதயம் தாறுமாறாக துடிக்க ஆரம்பித்தது.

அம்ருவோ, " நீங்க சொன்னதை நம்பி அருவியில் குளிக்கலாம்‍, என்று ஆசையாக இருந்தேன் தெரியுமா?" என…

"சாரி டா… சும்மா உன்னை வம்பு இழுக்கலாம் என்று பார்த்தேன்." என்று சமாதானம் செய்தான்‌‌.

"இந்த இடம் அழகாக இருப்பதால் உங்களை மன்னிக்கிறேன் அபி." என்றவள் தங்களது கேமராவில், தூரத்தில் இருந்து பார்த்தால் கடலில் அருவி இருப்பது போல் தெரியும் அந்த மாயத் தோற்றத்தை ஃபோட்டோ எடுத்துக் கொண்டாள்.

அம்ரு உனக்கு இன்னொரு சர்ப்ரைஸ் என்று அடுத்து அவளுக்கு மிகவும் பிடித்த ஸ்கூபா டைவிங்கு அழைத்துச் சென்றான். கடலில் வாக்கிங் சென்றனர். அப்புறம் டால்பின், ஓட டால்பின் ஆக அவளும் துள்ளி குதித்து ஆடினாள். எல்லா அழகிய தருணத்தையும் கேமராவில் படம் பிடித்ததுக் கொண்டான்.

இருவரும் போட்டிப் போட்டுக் கொண்டு நீச்சல் அடித்தனர். அங்கு இருந்த ஸ்டார் ஜெல்லியை எடுத்து கையில் வைத்துக் கொண்டு விளையாடுவது, கொஞ்சம் கூட பயப்படாமல் பாராசூட்டில் பறப்பது, ஒரு நாள் கரும்புத் தோட்டத்திற்கு கூட அழைத்துச் சென்றான். அம்ரு, அவன் மேல் இருந்த குழப்பத்தைத் கூட மறந்து இருந்தாள்.அவன் என்ன சொன்னாலும் கேட்டுக் கொண்டாள். உணவு உண்ணும் போது கூட இந்திய உணவு வேண்டாம், இங்கு உள்ளவற்றை ட்ரை செய்து பார்க்கலாம் என்று சொன்னதற்காகவே சாப்பிட்டாள். ஆனால் அங்கு உள்ள உணவு… செம்ம டேஸ்ட்… ரசித்து சாப்பிட்டாள். இப்படியே தங்களை மறந்து அங்கிருந்த நாட்களையும் கழித்தனர்.

'இதோ நாளைக்கு இங்கிருந்து புறப்பட வேண்டும். அம்ருவிடம் சொன்னால் மீண்டும் இங்கிருந்து கிளம்ப மாட்டேன் என்று தான் கூறுப் போகிறாள்' என்று எண்ணிக் கொண்டு அம்ருவிடம் கூற…

அவளோ உற்சாகமாக, " அடுத்து எங்கே போறோம் அபி?'என கேட்க…

அவன் நெஞ்சில் கை வைத்துக் கொண்டு," என்னமா அம்ரு... இப்படி ஷாக் கொடுக்கிற?"

"எப்படியும் இதை விட பெட்டரான ப்ளேஸ்க்கு தான் அழைச்சிட்டு போவீங்க… அது இதை விட இன்னும் சூப்பராக தான் இருக்கும். நாமும் நல்லா என்ஜாய் பண்ணப் போகிறோம். அதான் நான் அமைதியாக வர ஒத்துக் கொண்டேன்." என்றுக் கூறி புன்னகைக்க…

அபியின் முகத்திலும் புன்னகை தொற்றிக் கொண்டது. அப்போது அவர்கள் அறியவில்லை, வரப் போகும் பூகம்பத்தை…
ஏன் தான் இங்கு அழைத்து வந்தோமோ என்று அவனும், இங்கு வந்தே இருந்திருக்க கூடாது என்று அவளும் நொந்துக் கொள்வதை அப்போது அறியவில்லை.

தொடரும்…..




IMG-20210430-WA0029.jpg
 

Rajam

Well-known member
Member
என்ன அதிர்ச்சி சம்பவம் நடக்கப் போகுது.பூகம்பம் ரிக்டர்அளவில் கம்மியா இருக்கட்டும்😘😘
 

Viswadevi

✍️
Writer
என்ன அதிர்ச்சி சம்பவம் நடக்கப் போகுது.பூகம்பம் ரிக்டர்அளவில் கம்மியா இருக்கட்டும்😘😘
Thanks sis ♥️
 

Baby

Active member
Member
ஹா ஹா... நான் இப்பவே எங்கடா வெடிக்கும்னு தான் பாத்தேன்...🤣🤣🤣🤣🤣🤣

சண்டையை பாக்க வெயிட்டிங்
 

Viswadevi

✍️
Writer
ஹா ஹா... நான் இப்பவே எங்கடா வெடிக்கும்னு தான் பாத்தேன்...🤣🤣🤣🤣🤣🤣

சண்டையை பாக்க வெயிட்டிங்
Thanks sis ♥️
 

பிரிய நிலா

Well-known member
Member
நல்லா தானே போயிட்டு இருக்கு. என்னடா குண்டு வரப்போகுது..
அம்ரு கோபத்தை கூட மறக்கற அளவுக்கு மொரீசியஸ் அவ்வளவு அழகா. போக முடியுமா தெரியல. அட்லீஸ்ட் உங்க கதையில் ஆச்சும் படிக்கறோம்.
 

Viswadevi

✍️
Writer
நல்லா தானே போயிட்டு இருக்கு. என்னடா குண்டு வரப்போகுது..
அம்ரு கோபத்தை கூட மறக்கற அளவுக்கு மொரீசியஸ் அவ்வளவு அழகா. போக முடியுமா தெரியல. அட்லீஸ்ட் உங்க கதையில் ஆச்சும் படிக்கறோம்.
Thanks sis
 

Latest profile posts

நீ பார்த்த விழிகள் நாவலின் லிங்க் ஏப்ரல் 30 செவ்வாய் வரை தான் ஆக்டிவா இருக்கும், இன்னும் படிக்கலன்னா சீக்கிரம் படிச்சிடுங்க

https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/சித்ரா-வெங்கடேசனின்-நீ-பார்த்த-விழிகள்.372/
மக்களே சைட் ஒர்க் போகுது. விரைவில் சரி செய்யப்படும்
#முள்ளில்லா_முல்லைப்பூ-முழுநாவல்(ஏப்ரல் 22 இரவு 10 மணிவரை மட்டுமே)

மக்களே... நிறைய பேர் இன்னும் பாதி கதையில் இருப்பதாக சொன்னதால் முள்ளில்லா முல்லைப்பூ கதை நாளை (ஏப்ரல் 22) இரவு 10 மணிக்கு ரிமூவ் செய்யப்படும். அதற்கு மேல் டைம் கேட்காதீர்கள் மக்களே... கதையை பப்ளிஷ்க்கு அனுப்பிட்டேன். அதனால் அதற்கு மேல் லிங்க் வைத்திருப்பது கஷ்டம். புரிந்து கொள்வீர்கள் என்று நினைக்கிறேன்🙂


https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/எழிலன்புவின்-முள்ளில்லா-முல்லைப்பூ.382/
மக்களே சைட்டில் எரர் வந்தால் ஒரு இரண்டு நிமிடத்திற்கு பிறகு மீண்டும் பாருங்கள் ஒர்க் ஆகும்.
முள்ளில்லா முல்லைப்பூ கதை லிங்க் ஏப்ரல் 21 இரவு 10 மணி வரை மட்டுமே இருக்கும் மக்களே...

New Episodes Thread

Top Bottom