• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

அத்தியாயம் - 1

Viswadevi

✍️
Writer
இசைக்காதலியே என்னை காதலி

அத்தியாயம் - 1

சென்னையில் உள்ள பிரபல திருமண மண்டபம் மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது.

அங்கு இருந்த பாதுகாவலர், பரபரப்பாக ஒவ்வொருவருக்கும் கட்டளையிட்டுக் கொண்டிருந்தார். மண்டபம் முழுவதும் அவரது கண்ட்ரோலில் இருந்தது. இருந்தாலும் அவர் டென்ஷனாகவே இருந்தார்.

இருக்காதாப் பின்னே, தி கிரேட் மியூசிக் டைரக்டர் அபிநயனோட திருமணம் என்றால் சும்மாவா...

அதிலும் அபிநயனோட ப்ரெண்ட் அன்ட் மேனேஜர் அன்ட் பி.ஏ, என எல்லாவுமான ஆல் இன் ஆல் கௌதம், எல்லோரையும் வேலை வாங்கிக் கொண்டு, அவனும் பரபரப்பாக சுற்றிக் கொண்டும், அடுத்தவர்களையும் டென்ஷனாக்கி விட்டு கொண்டும் இருந்தான்.

இன்னமும் சற்று நேரத்தில்,நமது கதாநாயகனும், இன்றைய விழாவின் கதாநாயகனுமான அபிநயன் வரப் போவதாக தகவல் வர, வெளியே கூட்டம் சேராமல் பார்த்துக் கொண்டான்.

கௌதம் தன் ஃபோனை பார்ப்பதும், வாயிலைப் பார்ப்பதும், செக்யூரிட்டிகளுக்கு கட்டளையிடுவதுமாக இருந்தான்.

அவனை ரொம்ப சோதிக்காமல், அபிநயன் வழக்கம் போலவே சரியான நேரத்திற்கு தன்னுடைய ரோல்ஸ் ராய்ஸில் வந்திறங்கினான்.

பட்டு வேஷ்டி சட்டையில் கம்பீரமாக இறங்கியவன், தன் கூரிய விழிகளால் சுற்றி ஒரு பார்வை பார்த்தவன், ஆங்காங்கே நின்றுக்கொண்டிருந்த ஊழியர்களை கண்டும் காணாமல் உள்ளே நுழைந்தான்.

மண்டபத்தில் உள்ள ஊழியர்களோ, புரியாத பார்வையை பரிமாறிக் கொண்டனர்

ஆம் அவன் எல்லோருக்கும் புரியாத புதிர் தான்… ஆனால் நெருங்கியவர்களுக்கு மட்டுமே அவனைப் பற்றி நன்கு தெரியும்.

பொது இடத்திலோ, இல்லை அவனது வீட்டிற்கோ வந்து அவனைப் பார்க்க வந்திருந்தால், எந்த வித பந்தாவும் பண்ணாமல் இலகுவாகப் பழகுவான்.

அதுவே, அவன் பர்சனாலாக கலந்து கொள்ளும் விழாவில் யாராவது, சந்திப்பதற்காக, கால் கடுக்க காத்திருந்தாலும், அவன் கண்டுக் கொள்ளாமல் சென்று விடுவான்.

இது தெரியாமல் அவன் இலகுவாகப் பழகும் போது, அவனைப் புகழ்ந்து தள்ளியும், அவன் கண்டுக் கொள்ளாமல் செல்லும் போது, தூற்றியும் பத்திரிகை, ஃபேஸ்புக், வாட்ஸ்அப்பில் நியூஸ் வருவது வழக்கம்.

அதையெல்லாம் கண்டு கொள்ளாமல் சென்று விடுவான். அதேப்போல், இன்றைக்கும் நின்றிருக்கும் அவர்களை எல்லாம் கடந்து விடுவிடுவென உள்ளே நுழைய முயல, கௌதம் அவனை தடுத்து நிறுத்தினான்.

என்னவென்று புருவத்தை உயர்த்த…

" டூ மினிட்ஸ் வெயிட் பண்ணு அபி… ஆரத்தி எடுக்கணும், அம்மா வந்திட்டுருக்காங்க…

வெயிட் பண்ணு என்று கூறும்போது கோபப்பட்ட அபி, அம்மா என்ற வார்த்தைக்கு பின் அமைதியாகி விட்டான்.

அவனது வீக்னெஸ் தெரிந்த கௌதம் அம்மா என்ற வார்த்தையை பயன்படுத்தினான்.சிறு வயதில் இருந்தே அவனுடன் இருக்கும் அவனுக்கா தெரியாது.

அவனை கூர்ந்துப் பார்த்த அபி,பின் வழக்கம் போல தோளைக் குலுக்கி விட்டு பார்வையை திருப்பினான்.

அங்கோ அழகிய பேனரில்,பெரிய இதயம் பூக்களால் வரையப்பட்டு அதற்குள் அபிநயன் வெட்ஸ் அம்ருதவர்ஷினி என பூக்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

அதைப் பார்த்தவுடன் இவ்வளவு நேரம் இருந்த இறுக்கம் மறைந்து மெல்லிய ராகம் அவனுள் இசைத்தது.

அவனை ரொம்ப நேரம் காத்திருக்க வைக்காமல் நிர்மலா, வேகமாக தன் மகள் ஆராதனாவையும்,அம்ருதாவின் அண்ணி யாழினியையும் அழைத்துக் கொண்டு வந்தார்.

மூவரின் முகமும் சரியில்லை. முயன்று புன்னகையை சிந்திய நிர்மலா,"அம்மாடி யாழி நீயும், ஆராதனாவும் சேர்ந்து ஆரத்தி எடுங்க… முகூர்த்தத்துக்கு நேரமாகுது பாருங்க…"

யாழினி பயத்துடன் இருக்க, ஆராதனாவோ, அலட்சியத்துடன் இருந்தாள்.இருவரும் சேர்ந்து ஆரத்தி எடுத்தனர்.

அபிநயனோ, புருவத்தை நெறித்துக் கொண்டே இருவரையும் பார்த்தவன் பிறகு ஒன்றும் கூறாமல் தனது வேலட்டிலிருந்து பணத்தை எடுத்துக் கொடுத்தான்.

யாழினி தான், அண்ணா இதெல்லாம் என்ன… வேண்டாம் என்று பதற…

மெல்லிய புன்னகையை சிந்தி, அண்ணணா நினைத்திருந்தால் வேண்டாம் என்று சொல்லியிருக்க மாட்ட எனக் கேலியாகக் கூறி புருவத்தை ஏற்றி இறக்க…

அவனது பதிலை விட, அவனது பார்வையில் அயர்ந்து நின்ற யாழினி, அடுத்த செகண்ட் எதுவும் சொல்லாமல் வாங்கிக் கொண்டாள்.

அவளது அதிர்ந்த முகத்தை பார்த்த அம்மு, “அக்கா” என உலுக்க…

ஹாங் என விழித்தவள்… என்ன ஆரு என வினவ…

"வழியை விடுங்க கா‌…" என யாமினியின் காதில் முணுமுணுக்க…

தான் வழி மறைத்து நின்றுக் கொண்டிருப்பதை உணர்ந்த யாழினி, சாரி அண்ணா என்று பதறி விலக…

மெல்ல தலையசைத்துக் கொண்டே உள்ளே சென்றான்.

இந்தா… ஆரு நீயே வச்சுக்க என அந்த ரோஸ் நிற நோட்டை நீட்ட…

அக்கா எனக்கு அண்ணா தனியா தந்து இருக்காங்க…
இது உங்களுக்கு உள்ளது சோ நீங்க தான் வச்சுக்கணும்‌

உங்களுக்கு சங்கடமா இருந்தா, உங்க நாத்தனாருக்கு எதையாவது வாங்கி கொடுங்க…

"ஏய் வாண்டு… எங்க வீட்டு பொண்ணுக்கு வாங்கிக் கொடுக்க எங்களுக்குத் தெரியும்… அது என்ன? நாத்தனாரு… அவ உனக்கு அண்ணியில்லையா …"

" அச்சோ கா… அது என்னவோ தெரியவில்லை… காலேஜ்ல இருந்தே எங்க இரண்டு பேருக்கும் எப்பவும் ஆகாது‌. உங்களோட பழகுற மாதிரி, ஈஸியா இல்லை‌. நானும் மாத்திக்க முயற்சி பண்ணுகிறேன், பட் முடியலை… சாரிக்கா… ஐ வில் ட்ரை கா... " என தலை சாய்த்துக் கூறினாள்.

அவளின் செயலில் புன்னகை மலர, " நீயாச்சு, உங்க அண்ணியாச்சு என்னை ஆளை விடுங்க...

ஆனால் ஒன்னு ஆரு… உன் பேச்சைக் கேட்டால் யாருமே நம்ப மாட்டாங்க… நீ பெரிய பிசினஸ் மேனோட பொண்ணு… தி கிரேட் மியுசிக் டைரக்டர் அபிநயனோட சிஸ்டர்… அதுவுமில்லாமல் வளர்ந்து வரும் பாடகி என்று சத்தியம் செய்தால் கூட நம்ப மாட்டார்கள்.

பந்தாவே இல்லாமல் ரொம்ப இன்னசன்டா இருக்கடா எனக் கூறி அவள் கையைப் பிடிக்க…"

“முன்னெல்லாம் அப்படி இல்லை கா… பிடிவாதம், கர்வம் எல்லாம் எனக்கு இருந்தது கா… இப்போ மெச்சூர்டு ஆயிட்டேன் கா" எனக் கூறி கண்ணடித்தாள்.

அவளது கேலியை உணர்ந்த யாழினியோ, " ஆளை விடு மா… எனக்கு ஏகப்பட்ட வேலை இருக்கு. அம்ருதா கிளம்பிட்டாளா என்று வேற தெரியவில்லை… உங்க மாமாவைப் பார்த்துக்க சொன்னேன். அதை மறந்துட்டு உன் கிட்ட பேசிட்டே இருக்கேன். நான் உள்ளப் போறேன். நீ இதை வாசலில் ஊத்திட்டு வாடா" என்றவள் வேகமாக உள்ளே சென்றாள்.

'நான் பழசெல்லாம் மறக்கணும... அண்ணியா அவளை ஏத்துக்கணும்… அண்ணன் ரொம்ப நல்லவங்க … அவங்களுக்காக செய்யணும். ' ம் என்றுப் பெருமூச்சு விட்டபடியே மனதிற்குள் நினைத்தவள்.

ஆனால் ஏதோ ஒன்று சரியில்லையே ' அவங்க மனசுல யாரோ இருக்காங்க தானே… அதை ஏன் வீட்டில் சொல்லவில்லை… அண்ணன் ஏன் பிடிவாதமாக இவங்களை தான் கல்யாணம் பண்ணுவேன் என்று இருக்கிறாங்க' என்று குழப்பத்துடனே ஆராதனா இருக்க…

"மேடம் இன்னமும் எவ்வளவு நேரம் ஆரத்தி தட்டை கையில் வைத்துக் கொண்டு இருக்க போறீங்க… இங்க ரிசப்ஷன்ல நிக்கிறதுக்கு ஆளுங்களை ஆல்ரெடி ஏற்பாடு பண்ணியிருக்கு... நீங்களும் ஏன் நிக்கிறீங்க?"என கௌதம் கலாய்க்க…

அவனை முறைத்த ஆராதனா, " நான் இங்க இருக்கிறது இருக்கட்டும். நீங்க என்ன பண்ணிட்டு இருக்கீங்க?… உங்க ஃப்ரெண்ட்டுக்கு கல்யாணம். இன்னொரு ஃப்ரெண்டோட தங்கச்சிக்கு கல்யாணம். நீங்க என்னவென்றால் வேலை செய்யாமல் ஜாலியா சுத்திட்டு இருக்கீங்க…" என.

'அடிப்பாவி காலையிலிருந்து பச்ச தண்ணிக் கூட குடிக்காமல் வேலை பார்த்துட்டு இருக்கிறேன் என்ன பார்த்து இப்படி சொல்லுற 'என மனதிற்குள் நினைத்தவன் அவளைப் பார்த்து முறைக்க…

" என்ன பார்வை என் அண்ணன் போய் அரை மணி நேரமாக போகுது… இன்னும் உள்ள போகாமல் இருக்கிறீங்க…"

ஐயோ! என தலையில் தட்டிக் கொண்டே வேகமாக உள்ளே சென்றான்.

சிரிப்புடன் ஆராதனா வெளியே சென்று ஆரத்தி ஊற்றினாள்.

உள்ளே நுழைந்த, அபிநயனோ. இன்னும் முகூர்த்தத்திற்கு நேரம் இருப்பதால் மணமகன் அறையை நோக்கி சென்றான்.

மணமகள் அறையிலிருந்து, தனது தாய் தவிப்புடன் வருவதைப் பார்த்து,

"என்னம்மா எதுவும் பிரச்சினையா"

" அது …" என்று நிர்மலா தயங்க, தன் கூரிய விழியால் தன் தாயை நோக்கியவன், அடுத்த நொடி மணமகளின் அறைக்குள் நுழைந்தான்.

" கண்ணா…" என்று அழைத்தப்படி பின்னாடியே வந்த நிர்மலா, தன் பின்னால் வந்த யாழினியையும் கூட வருமாறு கண்ணால் அழைத்தாள்.

இருவரும் தயக்கத்துடன் அபியின் பின்னால் நுழைந்தனர்.

அங்கு மணமகளோ, இன்னும் தயாராகாமல் இருக்க…

இன்னொரு பக்கம் அபிநயன் ஏற்பாடு செய்த ப்யூட்டிஷன், கைகளை பிசைந்து கொண்டு நிற்க…

அவளது அண்ணன் அருணோ, "புரிஞ்சுக்கோ அம்மு… அண்ணன் உன் நல்லதுக்கு தான் செய்வேன் "என்று கெஞ்சிக் கொண்டிருந்தான்.

உள்ளே வந்த அபி ஒருநிமிடம், முகம் இறுக நின்றவன், பின்பு கண் மூடி தன்னை சரிப்படுத்திக் கொண்டு, எல்லோரையும் பார்த்தவன் நான் அம்ருதவர்ஷினியிடம் தனியாக பேச வேண்டும் என்றான்.

அது மாப்பிள்ளை… என்று அருண் ஏதோ கூற வர…

அபியோ, ஒன்றும் கூறாமல் அமைதியாக அவனைப் பார்க்க…

அந்த பார்வைக்குப் பிறகு ஒன்றும் கூறாமல் எல்லாரையும் அழைத்துக் கொண்டு வெளியே சென்றான் அருண்.

அம்ருதவர்ஷினியின் அருகே சென்றவன், கைகளைக் கட்டிக் கொண்டு அவளைப் பார்த்தான்.

அவளோ, உள்ளுக்குள் பய ஊற்றெடுத்தாலும், வெளியே நிமிர்வுடன் நிற்க…

"ஆஹான் உனக்கு தைரியம் தான்... முகூர்த்ததிற்க்கு இன்னும் பதினைந்து நிமிடம் தான் இருக்கிறது. உனக்கு இன்னும் பத்து நிமிடம் தான் டைம்... அதுக்குள்ள தயாராகவில்லை என்றால், அதற்குப் பிறகு நடக்கும் விளைவுகளுக்கு நான் பொறுப்பு கிடையாது" என அபி கூற…

"ஹலோ… நீங்க மிரட்டினா நான் பயப்பட மாட்டேன். எனக்கு இந்த கல்யாணத்தில் விருப்பம் இல்லை. என் அம்மாவை கொலை செய்த உன்னை என்னைக்கும் நான் மன்னிக்கவே மாட்டேன்.என் அண்ணனை கைக்குள்ள போட்டுக் கிட்டு, இங்கு கல்யாணம் வரைக்கும் கொண்டு வந்தால், நான் வந்து உங்களுக்கு கழுத்தை நீட்டுவேன் என்று நினைத்தீர்களா? நெவர்." என தலையை திருப்பினாள்.

"ஓஹோ, உன்கிட்ட ஏற்கனவே எதற்காக இந்த கல்யாணம் என்று நான் சொல்லியிருக்கிறேன். இந்த கல்யாணம் நடக்கவில்லை என்றால் என்ன நடக்கும் என்றும் கூறியிருக்கிறேன்.எனக்கு எந்த ஒரு விஷயத்தையும், மறுமுறையும் விளக்கம் சொல்வதற்கு பிடிக்காது. காட் இட்… இப்போ, நீ அழகா தான் இருக்கிற… சோ‌, உனக்கு எந்த மேக்கப்பும் தேவை இல்லை. இந்த சாரி, மற்றும் இந்த ஜுவல்ஸ் போட்டுட்டு தயாரா இருக்கிற? ஃபைவ் மினிட்ஸ்ல நீ வரல, அப்புறம் நானே வந்து உனக்கு கட்டி விடுவேன்" என்று ஆழ்ந்த குரலில் கூற …

அவனது குரலில் திடுக்கிட்டு நிமிர்ந்தாள் அம்ருதவர்ஷினி.

"என்ன செய்ய மாட்டேன் என்று நினைக்கிறீயா? "என்று புருவத்தை ஏற்றி இறக்கினான்.

"நான் சொன்னால் செய்வேன் அது உனக்கு நல்லாவே தெரியும் தானே... இல்லை உனக்கு அதுதான் ஆசையா? மை டியர்…" என்றுக் கேட்டுக் கொண்டே
அவன் கொஞ்சம் கொஞ்சமாக நெருங்க, இவளோ நெஞ்சு தடத்தடக்க பின்னோக்கி நகர்ந்தவள், தடுமாறி கீழே விழ முயல…

அபிநயனோ, முகத்தில் புன்முறுவலுடன் தாங்கிப் பிடித்து அவளை நிறுத்தியவன்,
"என்ன அவசரம், இரவு வரை காத்திரு டியர் என காதில் கிசுகிசுத்தான்."பிறகு அவளை விலக்கி நிறுத்தி விட்டு, வெளியே வந்தவன் அங்கு நின்றிருந்த பியுட்டிஷனை அழைத்து, "மேடமிற்கு ஹெல்ப் பண்ணுங்க…" என்றவன் உற்சாகத்துடன் மணமகனின் அறைக்குள் நுழைந்தான்.

உள்ளேயோ, அம்ருதா சிலையென அதிர்ந்து நிற்க… பியுட்டிஷன் தனது கடமையை செய்தாள். சற்று முன்பு நிர்மலா வைத்து சென்ற புடவையையும், நகைகளையும் அணிவித்து லேசாக அலங்காரம் செய்து நிமிர்ந்து பார்த்தவள், அவளின் அழகில் அயர்ந்து நின்றாள். நம்ம அபி சாருக்கு ஏத்த ஜோடி தான்…

அவர்கள் இருவரின் ஜோடிப் பொருத்தத்தை பார்த்த எல்லோரும் வியந்து பாராட்ட… அதை கவனிக்கும் மனநிலையில் இருவருமே இல்லை. கல்யாணம் நல்லபடியாக நடக்க வேண்டும் என்று டென்ஷனோடு அபி இருக்க... எப்படியாவது இந்த கல்யாணம் நின்று விடாதா என்று அம்ருதா நினைத்துக் கொண்டு இருக்க… இருவரின் முன்பு ஐயர் காரியமே கண்ணாக மந்திரம் சொல்லிக் கொண்டிருந்தார்.

தொடரும்….
 

Ezhilanbu

Administrator
Staff member
Writer
ஆஹா! அதிரடி கல்யாணமா இருக்கே!
ஆரம்பம் அதிரடி சிஸ்.
வாழ்த்துகள்💐
 

Baby

Active member
Member
சூப்பர்... அவளுக்கு இது கட்டாயக் கல்யாணமா.. அம்ருக்கும் ஆருக்கும் எதோ பஞ்சாயத்து இருக்கு போலயே...
 

Viswadevi

✍️
Writer
சூப்பர்... அவளுக்கு இது கட்டாயக் கல்யாணமா.. அம்ருக்கும் ஆருக்கும் எதோ பஞ்சாயத்து இருக்கு போலயே...
Thanks sis. Yeess
 

பிரிய நிலா

Well-known member
Member
இசைக்காதலியே என்னைக் காதலி... தலைப்பே அருமை சிஸ்..
அபிநயன் அம்ருதவர்ஷினி பேரு செமையா இருக்கு சிஸ்..
நாயகிக்கு பிடிக்காத திருமணமா.
இரு மனங்கள் இணையுமா திருமணம் நடக்குமா..
 

Viswadevi

✍️
Writer
இசைக்காதலியே என்னைக் காதலி... தலைப்பே அருமை சிஸ்..
அபிநயன் அம்ருதவர்ஷினி பேரு செமையா இருக்கு சிஸ்..
நாயகிக்கு பிடிக்காத திருமணமா.
இரு மனங்கள் இணையுமா திருமணம் நடக்குமா..
Thanks sis ♥️
 

Latest profile posts

நீ பார்த்த விழிகள் நாவலின் லிங்க் ஏப்ரல் 30 செவ்வாய் வரை தான் ஆக்டிவா இருக்கும், இன்னும் படிக்கலன்னா சீக்கிரம் படிச்சிடுங்க

https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/சித்ரா-வெங்கடேசனின்-நீ-பார்த்த-விழிகள்.372/
மக்களே சைட் ஒர்க் போகுது. விரைவில் சரி செய்யப்படும்
#முள்ளில்லா_முல்லைப்பூ-முழுநாவல்(ஏப்ரல் 22 இரவு 10 மணிவரை மட்டுமே)

மக்களே... நிறைய பேர் இன்னும் பாதி கதையில் இருப்பதாக சொன்னதால் முள்ளில்லா முல்லைப்பூ கதை நாளை (ஏப்ரல் 22) இரவு 10 மணிக்கு ரிமூவ் செய்யப்படும். அதற்கு மேல் டைம் கேட்காதீர்கள் மக்களே... கதையை பப்ளிஷ்க்கு அனுப்பிட்டேன். அதனால் அதற்கு மேல் லிங்க் வைத்திருப்பது கஷ்டம். புரிந்து கொள்வீர்கள் என்று நினைக்கிறேன்🙂


https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/எழிலன்புவின்-முள்ளில்லா-முல்லைப்பூ.382/
மக்களே சைட்டில் எரர் வந்தால் ஒரு இரண்டு நிமிடத்திற்கு பிறகு மீண்டும் பாருங்கள் ஒர்க் ஆகும்.
முள்ளில்லா முல்லைப்பூ கதை லிங்க் ஏப்ரல் 21 இரவு 10 மணி வரை மட்டுமே இருக்கும் மக்களே...

New Episodes Thread

Top Bottom