• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

அத்தியாயம் நான்கு - அன்பே உந்தன் சஞ்சாரமே

Devi Srinivasan

✍️
Writer
அத்தியாயம் – 4​

வித்யாவின் மாமியாருக்கு , மாமியார் என்ற பதவி மகுடம் சூடினது போல் நினைப்பு. வித்யா திருமணத்தின் போதும் ஏதாவது குற்றம் குறை கண்டுபிடித்து படுத்தி எடுத்தார்.

சரவணனும் அவன் அப்பாவும் தான் அவ்வப்போது வந்து அவரை டைவேர்ட் பண்ணி விடுவார்கள்.

சமயத்தில் வித்யா மேலும் பாய்வார். ஆனால் அந்த சமயம் சரவணன் வந்து விட்டால் அவரை அடக்கி விடுவான்.

ஆனால் தன் சம்பந்தியை பார்த்தல் கொஞ்சம் கெத்து காமிப்பார். அன்றும் அதே போல் ஏதோ என்று எண்ணியிருந்தவர்கள் , வீட்டில் எல்லோர் முகத்திலும் சஞ்சலத்தை கண்ட பிரத்யுஷாவும், அவள் மாமியாரும் எப்படி கேட்பது என்று யோசித்து கொண்டே இருக்க, வித்யாவின் மாமியார் ஜெயா, வித்யா கணவர் சரவணனிடம்

“ஏம்பா சரவணா ? நீ என்ன முடிவெடுத்துருக்க ? “ என்று வினவினார்...

அவள் மாமனாரோ “விடேன். ஜெயா. அவங்களே முடிவு செய்யட்டும். நமக்கு என்ன பிரச்சினை ?” என்றார்.

வித்யாவின் அம்மா கமலா “என்ன விஷயம் சம்பந்தி ?”

“ஒன்னும் இல்ல. சம்பந்தி. எங்க பேரனோ . பேத்தியோ வரும் நேரம் உங்க மாப்பிள்ளைக்கு பதவி உயர்வோடு வெளிநாட்டுக்கு போற வாய்ப்பு கிடைச்சிருக்கு. ஆனால் உங்க பொண்ணும், மாப்பிள்ளையும் வேண்டாம்னு சொல்றாங்க...”

“ஏன் மாப்பிள்ளை ?”

“இல்ல அத்தை. வித்யா எப்படியும் இன்னும் மூன்று மாசத்துக்கு அதிகமா ட்ராவல் பண்ணக் கூடாது. நான் போகணும்னா அடுத்த மாசம் போய் சேரனும். போனால் எப்படியும் ஒரு வருஷத்துக்கு முன்னாடி வர முடியாது. அதனால் நானும், வித்யாவும் வேண்டாம்னு நினைக்கிறோம். அம்மாவிற்கு அதுக்கு கோபம்..”

“ஒரு வருஷம் தானடா. திரும்பி பார்க்கறதுக்குள்ள ஓடி போய்டும் . எனக்கு மட்டும் என் பையன் வெளி நாட்டுலே இருக்கானு சொல்ல பெருமையா இருக்காதா?”

“ஏன் அம்மா , கொஞ்சமாவது யோசிச்சு பேசறியா? இந்த நேரம் நான் வித்யாவ கூட்டிட்டு போக முடியாது..”

“ஏன் உன் மச்சான் கல்யாணம் ஆகி பத்து நாள்லே விட்டுட்டு போகலியா?”

“அவர் போனார்னா அதுக்கு நானும் போகணுமா, எனக்கு என் குழந்தையோட வளர்ச்சி முக்கியம். வித்யா ஏங்கினால், அது குழந்தைய பாதிக்கும். அதுக்கு நான் விட மாட்டேன். வித்யாவும் என்னோட வர்றதா இருந்தாதான் நான் வெளிநாடு போவேன். குடும்பத்தை விட்டு போய் சம்பாதிச்சு சாப்பிடனும்நு அவசியம் எனக்கு இல்லை. இப்போ இல்லைனா. என்ன இன்னும் ரெண்டு வருஷம் கழிச்சு இந்த ஆபர் வரும். அப்படியே வரலைனாலும் பரவாயில்லை. நான் போக மாட்டேன்..” என்று முடித்தான்

வித்யாவின் மாமியார் முனகி கொண்டே நகர, கமலாவும் பிரத்யுஷவும் செய்வதறியாது முழித்தனர்.

சரவணன் பேசும்போது இவர்கள் இருவர் இருப்பதையும் மறந்து விட்டான். அவன் அம்மா போகவும், இவனும் எழுந்து விட்டான்.

வித்யா தன் அம்மாவிடம் “இதுதான் அம்மா ஒரு வாரமா, என் மாமியார் போட்டு பேசியே கொல்றாங்க. என்னாலே சந்தோஷமாவே இருக்க முடியல..“ என்றாள்.

“சரி விடு. அவங்க ஆதங்கம் . ஏதோ சொல்லிட்டு போகட்டும். இப்போ உடனே வேண்டாம். ஒரு பத்து நாள் கழிச்சு நீ நம்ம வீட்டுக்கு வந்து ஒரு மாசம் இரு. உங்க மாமியார் சமாதானம் ஆயிடுவாங்க. “ என்றார்

பிரத்யாவும். “ஆமாம். வித்யா. அத்தை சொல்ற மாதிரி செய். அவங்களும் சீக்கிரம் சரி ஆகிடுவாங்க. “ என்றாள்.

“ஹ்ம்ம்..” என்றாள் வித்யா..

அவர்கள் இருவரும் கிளம்பி வீடு வந்தனர். பிரத்யாவிற்கு ஏனோ மனம் சரியில்லை. சரவணன் கூறியது போல் பணத்திற்கோ , ஆடம்பரதிற்கோ, இல்லை. பெருமைக்கோ ஆதர்ஷ் குடும்பத்தை விட்டு செல்லவில்லை. ஆனால் ஊரில் இப்படி எத்தனை பேர் எண்ணிக் கொண்டிருக்கிறார்களோ என்று கவலையாக இருந்தது..

மற்றவர்களை பற்றி இவளுக்கு அக்கறையில்லை. ஆனால் நெருங்கிய உறவினர்களே இப்படி எண்ணினால் என்று கோபமாக வந்தது..

அன்று இரவு அவன் வழக்கம் போல் சாட் செய்ய வரவும்,

“என்ன . பிரயும்மா. வித்யாவை பார்த்து விட்டு வந்தீர்களா? எப்படி இருக்கிறாள்? சந்தோஷமாக இருக்கிறாளா? ஹெல்த் எப்படி இருக்கிறது? “

“அவள் நன்றாக இருக்கிறாள். என்று தொடங்கி அங்கே நடந்ததை சொன்னாள். அவனுக்கும் கொஞ்சம் வருத்தமாக இருந்தது. ஆனால் காட்டிக் கொள்ளாமல்,

“விடுடா. அந்த அத்தை சீக்கிரம் சரி ஆகி விடுவார். முடிந்தால் நான் நாளைக்கு மாப்பிள்ளையிடம் பேசுகிறேன்.”

“அது இல்லை ஆதிப்பா. எனக்கு என்னவோ அத்தையும், வித்யாவும் இதில் பயங்கர மூட் அவுட்டில் இருப்பதாக தெரிகிறது. எனக்கும் என்ன சொல்ல என்று தெரியவில்லை..”

பேச்சு வாக்கில் . அவள் ஆதிப்பா என்று அழைத்ததை இருவருமே உணரவில்லை.

“நீ ஒன்றும் செய்ய முடியாது. ப்ரத்யு, பார்க்கலாம் “ என்றவன். மேலும் சில நிமிடங்கள் சாதாரணமாக பேசி விட்டு . வைத்தான்.

இருவரும் சாதாரணமாக இருந்தாலும், இருவர் மனத்திலும் வித்யா மாமியாரை விட, சரவணன் வார்த்தைகளே வருத்தம் கொள்ள செய்தன..

மறுநாள் காலையில் எழுந்தவள் , வழக்கம் போல் வேலையை பார்த்தாள். ஆனால் எப்போதும் உதவி செய்யும் அவள் மாமியாரோ அன்று ஒன்றும் செய்யாமல், ஏதோ யோசித்தபடி இருந்தார். ப்ரத்யா கவனித்து விட்டு , அவர் போக்கில் விட்டுவிட்டாள்.

அன்று மதியம் லஞ்ச் அவரில் . ஆதர்ஷ் சரவணனிடம் பேச,

“மச்சான். எப்படி இருக்கீங்க. “ என்று குசலம் விசாரித்து விட்டு , “மச்சான். நேத்து வீட்லே நடந்தத சொன்னாங்க. நீங்க உங்க அம்மா ஆசையையும் கன்சிடர் பண்ணலாமே ? “ என்று சொல்ல.

“ஏன் மச்சான் , நீங்க யோசனையே செய்ய மாட்டீங்களா? உங்க வீட்லேயும் ஆண் துணை இல்ல. நானும் கிளம்பி வந்துட்டா என்ன செய்வாங்க. உங்கள மாதிரி என்னாலே பொண்டாட்டிய விட்டுட்டு இருக்க முடியாது. டெலிவரி சமயத்துலே நான் வித்யாவோடதான் இருப்பேன் ..” என்று வைத்து விட்டான்..

ஆதர்ஷ்க்கு ரொம்பவும் கஷ்டமாக இருந்தது. மணியை பார்த்தவன், பிரத்யவிற்கு அழைத்தான்.

“என்னப்பா. இந்த நேரத்துலே?” என்று வினவினாள்

“மச்சான் கிட்ட பேசினேன். அவங்க வீட்லே பிரச்சினை இல்லாமல் இருக்கட்டுமேன்னு. அவர் என்னவோ அவர் பொண்டாட்டிய அவர்கிட்டேர்ந்து பிரிக்கிற மாதிரி பேசறாரு. சரவணன் அம்மா ஏதாவது சொல்லிட்டு இருந்தா அதுவும் வித்யா மனசுக்கு சங்கடம் தானே. அட்லீட் அவங்கள கூல் பண்ற மாதிரி ஒரு ஷார்ட் டெர்ம் ட்ரிப் மாதிரி போட்டு போயிட்டு வந்துடலாமேன்னு சொல்ல நினச்சேன். ஆனால் பேசவே விடாமல் கட் பண்ணிட்ட்டார். எனக்கு ரொம்ப வருத்தமா இருக்குடி..”

“சரி விடுங்க. அத்தை கொஞ்ச நாள் வித்யாவ நம்ம வீட்டுலே வச்சு பார்த்துக்கலாம்ன்னு சொன்னங்க. அதுக்குள்ள அந்த பெரியம்மாவும் சரி ஆயிடுவாங்க. நீங்க கவலைபடாதீங்க ”

“சாரி மா. உன்னை சாப்பிடற நேரத்தில் டிஸ்டர்ப் பண்ணிடனா? “

“அதெல்லாம் இல்ல பா. எங்கிட்ட சொல்லாம யார் கிட்ட சொல்லுவீங்க?”

“சரி . நீ சாப்பிடு. நைட் பேசலாம். பாய் மா.” என்று வைத்தான்.

அவன் வைக்கவும், ப்ரயு தன் சாப்பாட்டை மூடி விட்டு எழுந்தாள். அதை பார்த்தா பிரியா,

“என்னடி சாப்பிடாமலே எழுந்துட்ட? அண்ணா போன் வந்ததேன்னு நீ ப்ரீயா பேசட்டும்னு வேகமா சாப்பிட்டேன். நீ என்னடான்னா அப்படியே எழுந்துட்ட?”

அவளுக்கும் ஏனோ மனம் உருத்திக் கொண்டிருந்தது. தன்னிடம் வித்யா கன்சீவ் என்ற விஷயத்தை சொல்லலை. நேற்றய விஷயங்களை பார்த்தால், வேண்டுமென்றே தவிர்க்கிறார்களோ என்று தோன்றியது.

அதை ப்ரியாவிடம் பகிர்ந்து கொண்டாள். ப்ரியாவும்

“நான் அன்னிக்கே சொன்னேன். எனக்கு ஏதோ சரியாய் படல. அண்ணாகிட்ட நீ பேசி . நார்வே போய் அண்ணாவோட இருடி..”

“ஏய். எப்படி முடியும். அத்தை தனியா எப்படி இருப்பாங்க?”

“ஏன். அவங்களையும் கூட கூட்டிக்கிட்டு போ..”

“இனிமேல் தான் வித்யா மசக்கை, வளைகாப்பு, பிரசவம் எல்லாம் இருக்கு. அவங்க எப்படி வருவாங்க?”

“வித்யாவ தான் அவ புருஷன் பார்த்துக்கிறேன்னு சொல்றார்லே. பேசாமல் இப்போ போயிட்டு , அவ டெலிவரி சமயத்துலே இங்க வாங்க. “

“ஹ்ம்ம். நீ சொல்றதும் சரிதான். ஆனால் நடக்குதானு பார்ப்போம்..”

“நீ இன்னிக்கே இத பத்தி அண்ணா கிட்ட பேசு”

யோசனையோடு தலை ஆட்டினாள் பிரத்யுஷா...

அன்று மாலை வீட்டிற்குள் நுழையும் போதே அவள் மாமியார்,

“உடனே ஆதி கிட்ட சொல்ற அளவுக்கு நேற்று வித்யா வீட்டில் என்ன நடந்தது? இப்போவே சொல்லியாகனும்னு என்ன அவசியம்? அத உடனே மாப்பிள்ளை கிட்ட வேற கேட்டுருக்கான். ரெண்டு பேரும் மனசுலே என்ன நினச்சுட்டு இருக்கீங்க?” என்று பட படவென பொரிந்தார்.

ப்ரத்யா இதை எதிர்பார்க்கவில்லை. சற்று நேரம் ஒன்றும் புரியாமல் முழித்தவள்,

“இல்லை அத்தை. நேற்றைக்கு வித்யா எப்படி இருக்கிறாள் என்று கேட்டார்.. அப்போ தான் சொன்னேன். அதோட இன்னிக்கு மாப்பிள்ளை கிட்ட சொல்லி அவங்க அம்மாவை சமாதான படுத்தலாம்ன்னு பேசினதாகவும், அத அவர் தப்பா புரிஞ்சிக்கிட்டதவும் சொன்னார்.”

“ஒஹ். அங்க மாப்பிள்ள கிட்ட பேசின உடனே உன்கிட்ட பேசிட்டனா? அவ்வளவுக்கு அவன கையில் வைச்ருக்கியா?”

இதை கேட்ட ப்ரத்யா ஷாக் ஆகிட்டாள்...

மெல்லிய குரலில் “அப்படி எல்லாம் ஒன்னும் இல்ல அத்தை. அவர் ப்ரீயா இருந்தா மதியம் பேசுவார். இன்னிக்கு வித்யா வீட்டுக்காரர் கிட்ட பேசிட்டு . என்னோடு பேசினார்.” என்றாள் .

“அவரையும் கிளம்பி வெளிநாடு போக சொன்னனாமே . ஏன் என் பொண்ணு புருஷனோடு சந்தோஷமா இருக்கிறது உனக்கு பிடிக்கலையா? நீதான் அவன இப்படி பேச சொன்னியா?” எனவும்

ப்ரத்யா கண்ணில் நீர் வழிந்தது .

“இனிமேல் வித்யா விஷயத்துலே நீங்க ரெண்டு பேரும் தலையிட வேண்டாம். சொல்லிட்டேன்” என்று உள்ளே சென்று விட்டார்

வழக்கமாக மாலை வந்தவுடன் சூடா எதாவது கலந்து கொடுப்பவர், அப்படியே சென்று விட்டார் அவள் மாமியார்.

வெகு நேரம் தனிமையில் அழுதவள், பிறகு மாமியாரின் வயதை மனதில் கொண்டு எதுவும் பேசாது, இரவு உணவு வேலையை பார்த்தாள்.

வழக்கம் போல் அன்றும் இரவு நைட் சாட் செய்தவர்கள்,

“ஏன் பா. உங்க கிட்ட ஒன்னு சொன்னால் தப்பா எடுத்துக்க மாட்டீங்களே? “

“என்ன டா. “ என்றான் கரிசனமாக. அவன் இன்று அவள் முகத்தை பார்த்தவுடனே கண்டு கொண்டான் , ஏதோ வீட்டில் நடந்திருக்கிறது என்று. அவளாக சொல்வாள் என்று எதிர் பார்த்தவன் , இப்போ கேட்கவும்.

“இல்ல. அத்தையும், நானும் உங்க கூடவே வந்துடட்டுமா? நாம எல்லோரும் சேர்ந்து இருக்கலாம்’? என்றாள்.

தன் அறையில் தான் பேசியது அதிகபடியோ என்று சங்கடபட்டபடி இருந்த அவள் மாமியார், அப்போதுதான் ப்ரத்யாவிடம் பேசலாம் என்று வந்தவர்,

அவள் பேசியதை கேட்டவுடன், மீண்டும் கோபம் தலைக்கேற,

“என்ன நடக்குது இங்க?” என்ற படி கேமரா முன் வந்தவர், “ஆதி, இவள் பேச்சை கேட்டு உன் இஷ்டப்படி ஆடாத . ஏதோ சாயந்திரம் கொஞ்சம் கோபமா பேசிட்டேன் தான் . அதுக்காக இவ சொல்ற மாதிரி நான் என் பொண்ண விட்டுட்டு அங்கெல்லாம் வர மாட்டேன். அப்படி உனக்கு உன் பொண்டாட்டி முக்கியம்னா . அவள் மட்டும் கூட்டிகிட்டு போ. நான் இங்க தனியா இருந்துக்கிறேன். “ என்று சொல்லி விட்டு, பிரத்யாவை முறைத்த படி சென்று விட்டார்.

அவள் கண்ணீர் தளும்ப அமர்ந்திருப்பதை பார்த்த ஆதிக்கு , மனதை பிசைந்தது..

சற்று நேரம் கழித்து “மாலை என்ன நடந்துச்சு ப்ரயு?” என்று வினவினான்.

அவள் ஒண்ணுமில்லை என்று சமாளிக்க,

“இப்போ அம்மா சொல்றத கேட்டில்ல . எனக்கு என்ன நடந்துச்சுன்னு தெரியனும்,” என,

மாலை நடந்ததை அவர்கள் பேசிய சில வார்த்தைகளை விட்டு விட்டு சுருக்கமாக விவரித்தாள்.

கேட்ட ஆதிக்கு கோபமும், வருத்தமும் ஒன்றை ஒன்று மிஞ்சியது. அப்படியே அம்மாவிற்கு அழைக்க நினைத்தவன், பிறகு இந்த எரிச்சலும் பிரயுவிடம் தான் பாயும் என்று பேசாதிருந்தான்..

“ப்ரயு, நீ சொல்லு . உனக்கு அங்க இருக்க கஷ்டமா இருக்கா? பரவால்லன்னு உனக்கு விசா எடுத்து கூப்பிட்டுகறேன். அம்மாவை வித்யாவிடம் விடலாம். வித்யா டெலிவரி வரை விட்டுட்டு பிறகு அவங்களையும் கூபிட்டுக்கலாம்”

“ஐயோ. வேணாம் பா. அவங்கள தனியா விடறதோ, வித்யா வீட்டில் விடறதோ தப்பு. நேத்து வித்யா மாமியார் பேசினத நாம பெரிசு படுத்தாம விட்ருக்கலாம். சரி விடுங்க. இனிமேல் ஜாக்கிரதையா இருப்போம்” என்று தன் கண்ணீரை துடைக்கவும்,

கேமரா வழியே பார்த்துக் கொண்டிருந்த ஆதிக்கு மனம் வலித்தது. அவளே சமாதனம் சொல்லும் போது ஒன்றும் செய்ய வழியில்லாமல் பார்த்துக் கொண்டிருந்தான்..

பிறகு சற்று நேரம் அன்றைய தினம் தங்கள் வேலையை பற்றி இருவரும் பேசினார்கள். கொஞ்ச நேரம் பேசிக் கொண்டிருந்தவன், பிறகு அவள் மொபைல்க்கு வாட்ஸ்அப் வழியாக வழக்கம் போல் பாடல் அனுப்பி விட்டு படுத்துக் கொண்டிருந்தான்.

அவன் சிந்தனை எல்லாம் இந்த வாய்ப்பு எப்பொழுது வேண்டும் என்றாலும் வரும் என்பது தெரிந்தது தானே. அம்மாவிற்கு மாற்று ஏற்பாடு செய்யாமல் ஏன் கல்யாணத்திற்கு ஒத்துக் கொண்டோம் என்று இருந்தது. இன்றைக்கு தன் மனைவியை தவிக்க விட்டு விட்டோமே. என்று மருகினான்.

அங்கே ப்ரத்யாவின் சிந்தனையும் அதே போலே. அவர் மூன்று வருடம் நம்மோடு இருக்க மாட்டார் என்று தெரிந்தும் ஏன் ஒத்துக் கொண்டோம் என்று யோசித்தாள். தன் மனதை அடக்கி தூங்க ஆரம்பித்தாள்.

அவள் மனதிற்கு தோன்றியது இன்றைய பிரச்சினை இதோடு முடியாது, தொடரும் என்று. அதை தாங்க தன் மனதிற்கு திடம் வேண்டி கடவுளிடம் முறையிட்டாள்.

மறுநாள் காலை அவள் எழுந்து வந்த போது, அவள் மாமியார் இன்னும் முகத்தை தூக்கி வைத்திருப்பதைக் கண்டு எதுவும் பேசாமல் தன் வேலையை பார்த்தாள்.

அவள் வேலைக்கு கிளம்பிய பிறகு, ஆதிக்கு போன் பண்ணி கூப்பிட்டார். அவன் எடுக்கவில்லை.

ஆதி முந்தைய நாள் இரவு ஏதோ ஏதோ யோசித்துக் கொண்டிருந்ததில் தூங்க லேட் ஆகி விட , அன்று தாமதமாக எழுந்து அலுவலகத்திற்கு அரக்க பறக்க கிளம்பி கொண்டிருந்தான். அப்போது வீட்டிலிருந்து போன் வரவே பிறகு பேசலாமென்று கட் செய்து விட்டான்.

கிட்ட தட்ட அன்று மாலை தான் அவனால் ப்ரீ ஆக முடிந்தது. அப்போது தன் வீட்டு லைன் க்கு அழைத்தான்.

போனை எடுத்த ஆதியின் அம்மா, ஆதி என்று அறிந்து,

“ஏன்பா ? உன்னால் என் போன் கூட அட்டென்ட் பண்ண முடியாதா? உன் பொண்டாட்டி கிட்ட மட்டும் ஒரு நாளைக்கு நாலு தரம் பேசற?” என்று ஆரம்பிக்க,

ஆதிக்கு அதிர்ச்சியாக இருந்தது. அவன் அம்மாவா இப்படியெல்லாம் பேசுகிறார்கள் என்று.

“அம்மா, நான் தினமும் ஒரு தடவை தான் அவகிட்ட பேசுறேன்” என்றான்

“சும்மா. பொய் சொல்லாத. நேற்று கூட மாப்பிள்ளை கிட்ட பேசிட்டு உடனே அவகிட்ட பேசியிருக்க”

“ஏன்மா. அவர் பேசினது கொஞ்சம் கஷ்டமா இருந்தது. அத அவகிட்ட ஷேர் பண்ணிகிட்டேன்”

“ஏன். நேத்து வந்தவ கிட்ட நம்ம வீட்டு மாபிள்ளைய விட்டு கொடுத்திருக்க?”

இது இன்னும் அவனுக்கு அதிர்ச்சியையும் கோபத்தையும் ஏற்படுத்தியது.

“என்னம்மா பேசறீங்க. ? அவ என்ன மூணாம் மனுஷியா? என் பொண்டாட்டி . இந்த வீட்டு மருமக. அவகிட்ட சொல்றதுலே என்ன தப்பு?”

“ஆமாடா. மருமகதான். அதுக்காக தலையிலே தூக்கி வச்சுட்டு ஆட சொல்றியா?”

“நீங்க ஆடவும் வேண்டாம். பாடவும் வேண்டாம். என்ன விஷயமா எனக்கு போன் பண்ணீங்க ? அத சொல்லுங்க”

“இங்கே பாரு. நேத்து பேசின மாதிரி என்னை உன்கூட வெளிநாட்டுக்கு கூப்பிடற வேலை எல்லாம் வச்சுக்காத. எல்லாம் ஏற்பாடு பண்ணிட்டு சொன்னா நான் வருவேன்னு எல்லாம் நினைக்காத. அதோட வித்யா டெலிவரி முடிஞ்சாலும் நான் வர மாட்டேன். எப்போ நான் பேசின ஒரு வார்த்தைக்காக, என்னை என் பொண்ணுகிட்ட பிரிக்கணும்னு நினைத்தீர்களோ, இனிமேல் நான் அவள விட்டு வர மாட்டேன். அதுக்காக அவ வீட்டுக்கும் போக மாட்டேன். நான் இங்கியே தனியா இருந்து, என் பொண்ணையும் பார்த்துப்பேன். இத சொல்லதான் கூப்பிட்டேன்.” என்று வைத்து விட்டார்.

ஆதிக்கு சற்று நேரம் திகைப்பாக இருந்தது. இந்த அம்மா ஏன் இப்படி பேசுகிறார்கள் ? இத்தனைக்கும் நேற்று ப்ரயு மேலோட்டமாகதானே விஷயத்தை சொன்னாள். இதற்கே இப்படி என்றால், ப்ரயு அம்மாவிடம் எப்படி சமாளிக்க போகிறாள்? அவளுக்கு போன் பண்ணலாம் என்று பார்த்தால், அவள் டியூட்டி டைம் . இப்போ அவளை டென்ஷன் ஆக்க வேண்டாம். இரவு பேசிக் கொள்ளலாம் என்று விட்டான்.

அங்கே பிரயுவோ இதை விட டென்ஷன் ஆக இருந்தாள். அன்று மதியம் இவள் சாப்பிட அமரும் போது போன் அடிக்கவே , எடுத்து பார்த்தால் வித்யா.

யோசனையோடு எடுத்தவள் “ஹலோ” என்றாள்

எடுத்த எடுப்பிலேயே வித்யா “அண்ணி, மனசுலே என்ன நினச்சுட்டு இருக்கீங்க. எங்க மாமியார் ஏதோ சொன்னதற்கு அண்ணனிடம் சொல்லி, அண்ணன் இவர் கிட்ட பேசியிருக்கிறார். எங்க வாழ்க்கை நாங்க பார்த்துக் கொள்வோம். நேற்றே இவருக்கு நல்ல கோபம். நான் தான் சரி போனா போகுது அண்ணா ஏதோ கோபத்துலே பேசிட்டான்னு சமாளிச்சு வைச்சேன். ஆனால் நீங்க என்னடா என்றால், எங்க அம்மாவை கூப்பிட்டுகிட்டு அண்ணனோட போக போறேன்னு பேசி இருக்கீங்க.

எனக்கு யாரோட தயவும் தேவை இல்லை. என் புருஷன் என்னை நல்லா பார்த்துக்குவார். ஆனால் எங்க அம்மாவை உங்க கிட்ட விட்டு கொடுக்க முடியாது. அது என்னோட பொறந்த வீடு. அங்க எனக்கு எல்லா உரிமையும் இருக்கு. அதோட டெலிவரி பார்த்து விடறது எங்க அம்மாவோட கடமை. அதுனால அதுலே எல்லாம் நீங்க தலையிடாதீங்க .

உங்களுக்கு எங்க அண்ணன் வேணும்னா நீங்க போய் கும்மாளம் போடுங்க..”

இந்த வார்த்தை வரும்போது கடுமையாக “வித்யா. ஒழுங்கா பேசு. “ என்று திட்டி விட்டாள் ப்ரத்யா..

வித்யாவிற்கு தான் பேசியது தவறோ என்று தோன்றியது. ஆனாலும் காட்டி கொள்ளாமல் “சும்மா கத்தாதீங்க. இனிமேல் எங்க விஷயத்துலே தலையிடாதீங்க“ என்று வைத்து விட்டாள்.

அவள் பேசி வைத்த பின் பிரமை பிடித்தது போல் இருந்தவள், ப்ரியாவின் உலுக்கலில் தன் நினைவு கொண்டாள்

“என்னடி ஆச்சு. யாரு போனில் ?”

“வித்யா “ என்றவள், அவள் பேசியதை கண்ணீரோடு கூறவும்

“ஏண்டி நீ சும்மாவா விட்ட. அவள . நல்லா கேட்டுருக்க வேண்டியதுதானே?”

“இல்லடி . எனக்கு ஒண்ணுமே புரியலடி. நேற்றைக்கு இத்தனைக்கும் அவர் கிட்ட கடைசியில் இங்கேயே இருக்கிறேன் என்று சொல்லிட்டேன். அப்புறமும் ஏண்டி இப்படி பேசுறாங்க?”

“நீ இப்பவே அண்ணாக்கு போன் போட்டு பேசு..”

“இல்லடி. வேண்டாம் . நேத்திக்கு அவர் என் முகத்தை பார்த்து ரொம்ப தவிச்சு போய்ட்டார். எனக்காவது சுத்தி ஆறுதல் சொல்ல நீ, அம்மா வீட்டுலேன்னு இருக்கீங்க. அவர் யாருமே இல்லாம தனியா இருக்கார். பாவம். அவர் கஷ்டபட்டா அவர சமாதானபடுத்த கூட ஆளில்லாம இருக்கார் . விடு . நான் எப்படியாவது சமாளிச்சுக்கிறேன் “

“வேண்டாம் டி. நீ சும்மா தியாகம் எல்லாம் பண்ணாத. உன் வாழ்க்கை நீதாண்டி பார்த்துக்கணும்”

“தியாகம் இல்லடி. ஒரு வகையில் அவர கஷ்டப்டுதாம பார்த்துகறதும் என்னோட கடமை தாண்டி..”

“என்னவோ போ. ஆனால் மனசுக்குள்ளே வச்சுக்கிட்டு மறுகாம வெளிலீயாவது கொட்டிடு” என்று கூறவும்,

லஞ்ச் அவர் முடியவே இருவரும் வேலையை பார்க்க சென்றார்கள்..

அவள் எந்த வேளையில் தனக்கு ஆறுதல் சொல்ல தோழியும், பிறந்த வீடும் இருப்பதாக கூறினாளோ, இன்னும் கொஞ்ச நாளில் அதுவும் இல்லாமல் போக போவதை நினைத்து விதி அவளை பார்த்து சிரித்தது.

-தொடரும் -
 

Rajam

Well-known member
Member
இருக்கிற வேதனை பத்தாதுனு
இறுதியில் பெரிய குண்டு வெடிக்கப்
போகுதுங்கிறீங்க.
பாவம் உஷா..
 

Gandhimathi Pandian

New member
Member
வித்யாவுக்கு டெலிவரி ஆகுறதுகுள்ள. எவ்வளவு பிரச்சனை வருமோ அதை பிரத்யு எப்படி சமாளிப்பாளோ
 

kothaisuresh

Well-known member
Member
ஏம்மா இருக்கும் உளைச்சல் பத்தாதுன்னு கடைசில இன்னொரு வெடிய பத்த வைச்சிட்டீங்க
 

பிரிய நிலா

Well-known member
Member
ஏன் சிஸ் ப்ரத்யூ மாதிரி பொண்ணுகளுக்கு இப்படித்தான் புகுந்த வீடு அமையுமா..
பாவம் அவளின் நிலைமை என்றால் ஆதர்ஷ் அதைவிட பாவம்..
அனைவரும் நன்றாக இருக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு தான் இதுபோன்ற துன்பங்கள் வருகிறது.
 

Latest profile posts

மக்களே சைட் ஒர்க் போகுது. விரைவில் சரி செய்யப்படும்
#முள்ளில்லா_முல்லைப்பூ-முழுநாவல்(ஏப்ரல் 22 இரவு 10 மணிவரை மட்டுமே)

மக்களே... நிறைய பேர் இன்னும் பாதி கதையில் இருப்பதாக சொன்னதால் முள்ளில்லா முல்லைப்பூ கதை நாளை (ஏப்ரல் 22) இரவு 10 மணிக்கு ரிமூவ் செய்யப்படும். அதற்கு மேல் டைம் கேட்காதீர்கள் மக்களே... கதையை பப்ளிஷ்க்கு அனுப்பிட்டேன். அதனால் அதற்கு மேல் லிங்க் வைத்திருப்பது கஷ்டம். புரிந்து கொள்வீர்கள் என்று நினைக்கிறேன்🙂


https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/எழிலன்புவின்-முள்ளில்லா-முல்லைப்பூ.382/
மக்களே சைட்டில் எரர் வந்தால் ஒரு இரண்டு நிமிடத்திற்கு பிறகு மீண்டும் பாருங்கள் ஒர்க் ஆகும்.
முள்ளில்லா முல்லைப்பூ கதை லிங்க் ஏப்ரல் 21 இரவு 10 மணி வரை மட்டுமே இருக்கும் மக்களே...
ஹலோ மக்களே
இனியாவின் இறுதி நிமிடங்கள் எபி 70 வரை போட்டாச்சு

New Episodes Thread

Top Bottom