• Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
    - legal team, Ezhilanbu Novels
  • கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.
Nithya Mariappan
Reaction score
3,237

Profile posts Latest activity Postings About

  • மெய் நிகரா பூங்கொடியே - 35
    அவரையும் ஓய்வெடுக்கச் சொல்லிவிட்டு நகர்ந்தவனை ஸ்ரீநயனி பிடித்துக்கொண்டாள். கூடவே விக்ரமும் நின்று கொண்டிருந்தான்.
    “உன் பொண்டாட்டி தான் அந்த கில்லரை வீட்டுக்குள்ள அழைச்சிட்டு வந்திருக்கா... அதுக்கு என்ட்ரன்ஸ்ல இருந்த கார்ட் ஒருத்தர் சாட்சி... இது அவ மட்டும் போட்ட ப்ளானா? இல்ல புருசனும் பொண்டாட்டியும் சேர்ந்து என் அண்ணனைக் கொலை பண்ண திட்டம் போட்டிங்களா?”
    நெருப்பை அள்ளி கொட்டியது போல துடித்துப்போனான் சந்தீப்.
    “நயனி” அவளை அடிக்க கை ஓங்கிவிட்டான்.
    அதற்குள் விக்ரம் அவனது கையைப் பற்றி தடுத்தான்.
    “இவங்களை ஏன் சார் அடிக்க வர்றிங்க? அவங்க ஒன்னும் பொய் சொல்லலை... உங்க ஃபேமிலி மேட்டர்ல இன்வால்வ் ஆக எனக்கு விருப்பமில்ல... ஆனா நித்தி என் கிட்ட உங்க ஒய்ப் பத்தி முன்னாடி சொன்னதை வச்சு பாத்தா அவங்க ஏதோ ஒருவிதத்துல இந்த மர்டர் அட்டெம்ப்ட்ல கனெக்ட் ஆகுறாங்கனு தோணுது... ரொம்ப ஸ்மார்ட்டா என்ட்ரன்ஸ்ல இருந்த சி.சி.டி.விய டீ-ஆக்டிவேட் பண்ணிட்டு காய் நகர்த்திருக்காங்க உங்க ஒய்ப்... கார்ட்ஸ், சி.சி.டி.வி கன்ட்ரோலர் எல்லாரையும் விசாரிச்சிட்டு தான் நயனி இப்பிடிலாம் பேசுறாங்க மிஸ்டர் சந்தீப்... நீங்க நியாயமானவரா இருந்தா உங்க ஒய்ப் கிட்ட போய் விசாரணை பண்ணுங்க... இவங்க கிட்ட கை நீட்டாதிங்க”
    சந்தீப்பின் கையை உதறினான் விக்ரம். மனைவியைக் காப்பாற்ற துடிக்கிறான் என்று அவனும் சந்தீப்பை தவறாக எண்ணிக்கொண்டான்.
    “இவன் ஏன் விசாரிக்கப்போறான் விக்ரம்? இவனும் கூட்டுக்களவாணியா தான் இருப்பான்... நாளைக்கு போலீஸ் என்கொயரில புருசனும் பொண்டாட்டியும் என்ன பொய் சொன்னாலும் தப்பிக்க முடியாது... பாவிங்க, என் அண்ணன், அண்ணி, அம்ருவை இல்லாம அழிக்கிறதுக்கு எவ்ளோ கீழ்த்தரமா வேலை பாத்திருக்காங்க... போலீஸ் என்கொயரினு சொன்னதும் இவனும் இவன் பொண்டாட்டியும் எப்பிடி தப்பிக்கலாம்னு ப்ளான் பண்ணுவாங்க பாருங்க”
    ஸ்ரீநயனியின் வெறுப்பில் சந்தீப் கண் கலங்கினான். ஏன் தன் மேல் இவ்வளவு வெறுப்பு என இத்தனை நாட்கள் யோசித்தவனுக்கு நிஹாரிகாவின் செயல்பாடுகள் தான் அதற்கு விதை போட்டது என்பது வெகு தாமதமாகப் புரிந்தது.
    எதுவும் பேசாமல் தனது அறைக்குப் போனவன் அங்கே நிஹாரிகா உடமைகளை அடுக்கி வைப்பதைக் கண்டதும் சந்தேகத்துடன் அவளை நெருங்கினான்.

    https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?threads/அத்தியாயம்-35.5242/
    #நித்யாமாரியப்பன் #மெய்நிகராபூங்கொடியே
    மெய் நிகரா பூங்கொடியே 34
    மெய் நிகரா பூங்கொடியே - 32
    நித்திலா அவனை ஓரக்கண்ணில் பார்த்தபடியே விக்ரமிடம் பேச்சைத் தொடர்ந்தாள்.
    “ஆமா! பர்த்டே முடிஞ்சதும் நானும் அம்ருவும் அங்க இருப்போம்... அம்ருக்கு அவனோட க்ளைடர் ஸ்கூட்டர்ல விளையாடணும்னு ஆசையா இருக்குதாம்... ஞாபகம் இருக்குதா விக்கி? நீயும் நானும் சேர்ந்து வாங்குனோமே”
    பேச்சினிடையே அவள் கலகலவென சிரிப்பது கிருஷ்ணராஜசாகரின் செவிகளில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றியது போல இருந்தது.
    அவன் முகத்தைச் சுளிப்பதை ரசித்தபடி மனதுக்குள் குதூகலித்தாள் நித்திலா.
    “நீ ஏர்ப்போர்ட்டுக்கு வந்துடு விக்கி... போற வழில ஒரு தாபா இருக்கு, அங்க சாப்பிட்டு ரொம்ப நாளாச்சு... நம்ம மூனு பேரும் அங்க சாப்பிட்டுட்டுப் போலாம்”
    மறுமுனையில் விக்ரம் ஏதோ சொல்லவும் “ஏய்! நான் உன் கிட்ட காசு கேட்டேனாடா? என் பிள்ளை என் கிட்ட திரும்பி வந்ததுக்கு நான் வைக்குற ட்ரீட்னு நினைச்சுக்க விக்கி” என்றாள் நித்திலா.
    அம்ரித் அவளோடு சிம்லாவுக்கு வருவான் என்பது உறுதியானதைப் போல பேசிக்கொண்டிருந்ததாலா அல்லது விக்ரமிடம் சிரித்து சிரித்து பேசியதாலா என்று தெரியவில்லை, நித்திலாவின் பேச்சைக் கேட்க கேட்க கிருஷ்ணராஜசாகருக்கு ஒரு மூட்டை மிளகாயைத் தனியாளாக சாப்பிட்டது போன்ற எரிச்சல்.
    “ஓ.கே விக்கி... பை”
    அழைப்பை பேசி முடித்துவிட்டு அமர்ந்திருந்தவளிடம் “அம்ரு உன் கூட வருவான்னு அவ்ளோ நம்பிக்கையா?” என சீண்டலாக கேட்டான் கிருஷ்ணராஜசாகர்.
    “என் நம்பிக்கை இருக்கட்டும்... உங்க பயம் நாளாக நாளாக அதிகமாகுது போலயே”
    கேட்டபடி கால் மேல் கால் போட்டு அமர்ந்தாள் நித்திலா.
    “முடிஞ்சா அம்ருவ இங்கயே இருனு சொல்லிப் பாருங்க... அவன் கட்டாயம் கேக்கமாட்டான்... எனி ஹவ், என் பையன் கூட நீங்க கொண்டாடப் போற ஃபர்ஸ்ட் அண்ட் லாஸ்ட் பர்த்டே இது தான்... சந்தோசமா கொண்டாடிக்கோங்க சாகர்... இந்த சான்ஸ் இனிமே உங்களுக்குக் கிடைக்கவே கிடைக்காது”
    மெய் தான்! கடந்த சில நாட்களாக அம்ரித்தின் சிம்லா புராணம் அதிகரித்துக்கொண்டே வருகிறது. பிறந்தநாள் கழித்து அனுப்பி வைப்பதாக கிருஷ்ணராஜசாகர் அவனைச் சமாளித்துக்கொண்டிருக்கிறான்.
    பிறந்தநாள் கொண்டாட்டம், அதன் பிரம்மாண்டத்தில் மைந்தன் மீண்டும் தன்னுடன் இருந்துவிடுவான் என்ற அற்ப நம்பிக்கை.

    https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?threads/அத்தியாயம்-32.5232/
    #மெய்நிகராபூங்கொடியே #நித்யாமாரியப்பன்
    மெய் நிகரா பூங்கொடியே - 31
    “அம்ரு இப்பலாம் அடிக்கடி சிம்லாவுக்குப் போயிடலாம் நித்திம்மானு சொல்லுறான்... நானும்...”
    கேலியாக இழுத்தாள் அவள்.
    மகனைப் பிரித்துவிடுவாளோ என கிருஷ்ணராஜசாகர் பதறுவதை அவனது உடல்மொழி காட்டியது.
    “உங்களை இப்பிடி பாக்குறப்ப சந்தோசமா இருக்கு சாகர்... நான் சொன்னேன்ல, என்னை மாதிரியே நீங்களும் துடிச்சுப் போவிங்கனு... பை த வே, இவ்ளோ பயம் எனக்குப் போதல... ஐ வாண்ட் மோர் எமோசன்ஸ்”
    கிருஷ்ணராஜசாகர் “ஏய்” என கோபத்தோடு அவளை நெருங்கும் போதே “நித்திம்மா” என்று அழைத்தவாறு ஓடி வந்தான் அம்ரித்.
    மைந்தன் முன்னிலையில் அவளிடம் சண்டை போட்டால் சிம்லாவுக்குச் செல்லவேண்டுமென்ற அவனது எண்ணம் இன்னும் அழுத்தமாகிவிடும்.
    எனவே புன்னகையை வருவித்துக்கொண்டான்.
    “நித்திம்மா தாத்தாவ பாக்கணும்”
    ஜனார்தனனைப் பார்க்க வேண்டுமென்றான் அம்ரித்.
    “நம்ம தாத்தா வீட்டுக்குப் போகலாமா அம்ரு குட்டி?”
    “வேண்டாம்”
    இடையில் வந்தது கிருஷ்ணராஜசாகரின் குரல்.
    ஏன் என்பது போல மனைவியும் மைந்தனும் பார்க்க “அங்க உன் தாத்தா மட்டுமா இருக்கார்? இன்னொரு லேடியும் இருக்காங்கல்ல, அவங்களுக்கு உன் நித்திம்மாவ சுத்தமா பிடிக்காது அம்ரு... இப்ப அங்க போனிங்கனா அவங்க நித்திம்மாவ திட்டி அழவைப்பாங்கடா” என்றான் அவன்.
    “அப்ப போகல டாடி”
    வேகமாக மறுத்தான் அம்ரித். இருப்பினும் தாத்தாவைப் பார்க்கவேண்டுமென்ற ஆசை நிராசையான சோகம் அவன் முகத்தில்.
    அதை பொறுக்க முடியவில்லை கிருஷ்ணராஜசாகரால்.
    “இப்ப அம்ரு குட்டி தாத்தாவ பாக்கணும், அவ்ளோ தானே? நான் டிரைவர் அனுப்பி தாத்தாவ இங்க அழைச்சிட்டு வரச் சொல்லுறேன்... நீ ஜாலியா தாத்தா கூட இங்கயே விளையாடலாம்... இப்ப போய் ரஜீஷா ஆன்ட்டி கூட விளையாடு போ”
    அம்ரித்தை ரஜீஷாவிடம் அனுப்பி வைத்தான் அவன்.
    “சித்தி என்னை திட்டி என் மனசு கஷ்டப்படக்கூடாதுனு எவ்ளோ மெனக்கிடுறிங்க சாகர்!”
    நித்திலாவின் போலி மெச்சுதலை அவனால் காது கொடுத்து கேட்க முடியவில்லை.
    “உன்னை யாரும் எதுவும் சொல்லிட்டாங்கனா அம்ரு ஹர்ட் ஆகுறான்... எனக்கு என் மகன் வருத்தப்படுறதுல உடன்பாடு இல்ல”
    முடிந்தவரை கம்பீரமாகச் சொல்லி முடித்தான். என்ன தான் அவன் கம்பீரமாக காட்டிக்கொண்டாலும் அதன் அடிப்படை என்னவோ மைந்தன் தன்னை விட்டுப் போய்விடக்கூடாதென்ற பயம் மட்டுமே!
    “ரொம்ப பயமா இருக்கா சாகர்? த்சூ! என் பிள்ளைய என் கிட்ட இருந்து பிரிக்க நீங்க எத்தனை ட்ராமா போட்டிங்க... அப்பலாம் என் மனசும் இப்பிடி தான் பயந்துச்சு... கடைசில எனக்குக் கேன்சர்னு பயாப்சி ரிப்போர்ட்ல வச்சிங்களே ஒரு ஆப்பு... ப்பா, மரணபயத்தை எனக்குக் காட்டிங்க... அந்தப் பயத்தை மட்டும் உங்க கண்ணுல நான் பாத்துட்டேன்னா ஐ ஃபீல் வெரி ஹேப்பி”

    https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?threads/அத்தியாயம்-31.5229/
    #மெய்நிகராபூங்கொடியே #நித்யாமாரியப்பன்
    ஹலோ மக்களே

    மெய் நிகரா பூங்கொடியே அத்தியாயம் 30

    ஹலோ மக்களே
    மெய் நிகரா பூங்கொடியே எபி 28
  • Loading…
  • Loading…
  • Loading…
Top Bottom