• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.
Nithya Mariappan
Reaction score
2,881

Profile posts Latest activity Postings About

  • மெய் நிகரா பூங்கொடியே - 22
    சந்தீப்பின் வணிக ஒப்பந்தம் கிருஷ்ணராஜசாகரின் செவியையும் அடைந்திருந்தது. இப்ராஹிம் சொன்னதுமே இகழ்ச்சி முறுவல் பூத்தவன்
    “யானை தன் தலையில மண்ணை வாரிப்போட்டுக்குற மாதிரி அப்பா கிட்ட கெட்டப்பேர் வாங்குறதுக்கு என்னென்ன செய்யணுமோ எல்லாத்தையும் செய்யுறான் சந்தீப்... அவன் செய்யுற ஒவ்வொன்னும் எனக்குச் சாதகம் தான்” என்றான்.
    இப்படியே போனால் தந்தை சந்தீப்பை நம்புவதை விடுத்து தன் மீது நம்பிக்கை வைப்பார். சாகர் குழுமத்தின் அதிகாரத்தைத் தன்வசப்படுத்தும் நாள் வெகுதூரமில்லை.
    தன்வசப்படுத்திய பிறகு என்ன செய்யவேண்டுமென முன்பே யோசித்து வைத்திருந்தான் கிருஷ்ணராஜசாகர். அதை யாரிடமும் கூற மனமில்லை. சொல்லுமளவுக்கு யாரையும் நம்பவில்லை அவன்.
    அப்போது தான் ஆனந்த் சாகரின் பி.ஏ ரகுராமனிடமிருந்து அழைப்பு வந்தது. ஆனந்த் சாகர் அவனுடன் அலுவல்ரீதியாகப் பேச விரும்புவதால் அவரது அலுவலகத்திற்கு அழைத்திருப்பதாகத் தகவல் தெரிவித்தார்.
    ஆனந்த் சாகர் ஆலோசிக்க விரும்பும் அலுவல் என்னவென கிருஷ்ணராஜசாகருக்குப் புரிந்துவிட்டது.
    “நான் ரொம்ப பிசி ரகு சார்... ரெண்டு ஆபிசுக்கும் இடையில ஜஸ்ட் த்ரீ ஹண்ட்ரட் மீட்டர்ஸ் டிஸ்டன்ஸ் தானே... க்ரீன்வேஸ் ரோட் தாண்டுனா ஆபிஸ் வரப்போகுது... சேர்மன் இப்ப ஃப்ரீயா இருந்தார்னா என்னோட ஆபிசுக்கு அவர் வரலாம்”
    காலையில் ஆனந்த் சாகரின் முகத்தில் விழிக்க அவன் தயங்கியதற்கு காரணம் தந்தை – மகன் உறவு. நித்திலாவைப் பற்றிய பேச்சு தங்களுக்குள் எழுவதை அவன் தவிர்க்க விரும்பினான்.
    இப்போது அவன் திமிராக அவரை வரச் சொல்லக் காரணம் மாபெரும் குழுமத்தின் சேர்மன் இத்தனை நாட்கள் அலட்சியப்படுத்தி ஒதுக்கி வைத்த நிறுவனத்தின் இயக்குனர் ஒருவனை சந்திக்க அவசரப்படுவதால்.
    இப்போது அவனுக்கும் ஆனந்த் சாகருக்குமிடையே இருப்பது சேர்மன் – இயக்குனர் உறவு தானே! அவருக்குக் காரியம் ஆகவேண்டுமென்றால் அவரே நேரில் வரட்டும் என்ற அலட்சியம்.
    தொழிலையும் சொந்த வாழ்க்கையையும் திறமையாகப் பிரித்து கையாளும் கலையில் கிருஷ்ணராஜசாகர் மன்னன்.
    தன் மகனாக அல்லாமல் சாகர் குழுமத்தின் இயக்குனராக கிருஷ்ணராஜசாகர் அளித்த தகவலை ஆனந்த் சாகர் ஏற்றுக்கொண்டார்.

    https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?threads/அத்தியாயம்-22.5196/
    #நித்யாமாரியப்பன் #மெய்நிகராபூங்கொடியே
    மெய் நிகரா பூங்கொடியே-21

    அப்படி என்ன சொல்லிவிட்டாள்? எக்ஸ் ஒய்ப் தானே? சொன்னால் சொல்லட்டும். அவள் சொல்லிவிட்டால் எல்லாம் முடிந்ததாக அர்த்தமா என்ன?
    மனசாட்சி அவனுக்கு ஆறுதல் கூறுவதாக பெயர் பண்ணிக்கொண்டு வேறு ஏதோ எண்ணத்தோடு பேசியது.
    மனம் என்னடா மனம்? நான் இருக்கையில் நீ அதன் பேச்சை கேட்டுவிடுவாயா என கறுவிக்கொண்டு வந்தது மூளை.
    எப்படியும் நித்திலா இங்கே வரமாட்டாள். நேற்றைய சீண்டலுக்குப் பிறகு அவள் பேசுவதே சந்தேகம் தான். அப்படி வந்தாலும் ஹனுமன் கோவிலில் அவளைப் பார்த்தபோது எப்படி சாதாரணமாக இருந்தாயோ அப்படியே இருக்க கற்றுக்கொள் என மூளை பேராசிரியனாக மாறி பாடம் எடுக்க கிருஷ்ணராஜசாகரும் அதை அப்படியே ஏற்றுக்கொண்டான்.
    தெளிந்த மனதோடு எழுந்தவன் குளித்துவிட்டு உடை மாற்றியபோது அம்ரித் நித்திலாவிடம் வீடியோ காலில் கொஞ்சிக்கொண்டிருந்தான்.
    அவளது குரலைக் கேட்ட கிருஷ்ணராஜசாகரிடம் எவ்வித சலனமுமில்லை. ஏதோ பதிவு செய்யப்பட்ட ரோபோவின் குரல் போல கேட்டபடியே உடைமாற்றி முடித்தவன் அம்ரித் பேசி முடிக்கவில்லை என்றதும்
    “நீ இன்னும் ப்ரஷ் பண்ணல அம்ரு... சீக்கிரம் பேசிட்டு ப்ரஷ் பண்ணு” என கட்டளையிட்டான்.
    அம்ரித்தும் அவளிடம் பல் துலக்கப்போவதாக சொல்லி அழைப்பைத் துண்டித்தான்.
    அப்போது அறைக்கு வந்த நர்மதாவிடம் அம்ரித்தைக் கவனித்துக்கொள்ள ‘நானி’ ஒருவரை ஏற்பாடு செய்வது குறித்து பேசினான்.
    “நான் ஒன்னு சொன்னா கோச்சுக்கமாட்டியே?”
    “சொல்லுங்கம்மா”
    “பெத்த அம்மாவ விட்டு இவனைப் பிரிச்சு கூட்டிட்டு வந்தது நானி வச்சு வளக்குறதுக்குத் தானா கிரிஷ்?”
    “அப்ப நான் ட்வென்டி ஃபோர் ஹவர்சும் அம்ரு கூடவே இருக்கட்டுமா? ட்ரை டு அண்டர்ஸ்டாண்ட் நர்மும்மா... ஆர்.ஜே பியூட்டி லான்ச் ஒர்க் நிறைய இருக்கு... அது போக அம்ருவோட ஸ்கூல் அட்மிசன் ஒர்க் வேற இருக்கு... அட்மிசன் ஒர்க்கை இப்ராஹிம் கவனிப்பான்... அம்ருவ கவனிக்க ஆள் வேணுமே? உங்களுக்கு அவன் பின்னாடி ஓடமுடியாதுனு தான் நானி வச்சுக்கலாம்னு சொல்லுறேன்”
    எந்தக் கேள்வி கேட்டாலும் அதற்கென கச்சிதமான பதில் வைத்திருப்பனிடம் என்ன சொல்லி புரியவைப்பது? சம்பளத்திற்கு வேலை செய்பவர்கள் பிள்ளையை பணம் வருவதற்கான வழியாக மட்டுமே பார்ப்பார்கள். அவர்கள் ஆத்மார்த்த அன்புடன் பிள்ளையைக் கவனித்துக்கொள்ள மாட்டார்கள்.
    “இதுக்கு நீ நித்திலாவையே வரவைக்கலாம்”
    மனதிலிருப்பதை பட்டென போட்டு உடைத்தார் நர்மதா.
    “அவ இங்க வந்து என்ன செய்யப்போறா?” என அலட்சியமாக கிருஷ்ணராஜசாகர் கேட்கவும் வேதாளம் மீண்டும் முருங்கைமரத்தில் தலைகீழாக தொங்க ஆரம்பித்துவிட்டதென சலிப்புடன் தனக்குத் தானே சொல்லிக்கொண்டார் நர்மதா.

    https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?threads/அத்தியாயம்-21.5192/

    #மெய்நிகராபூங்கொடியே #நித்யாமாரியப்பன்
    மெய் நிகரா பூங்கொடியே - 20
    “இன்னொரு தடவை அம்ருவை இப்பிடி வெயிட் பண்ண வைக்காத... உன்னால அவன் இன்னைக்குச் சரியா சாப்பிடாம அழுதுட்டே இருந்தான்... என் பிள்ளை இப்பிடி அழுது கரையுறது எனக்குப் பிடிக்கல”
    நித்திலாவுக்குச் சுருசுருவென கோபம் மூண்டது. அவனைத் திட்ட துடித்த நாவினைக் கட்டுப்படுத்திக்கொண்டாள். அதேநேரம் அவனை அப்படியே விடவும் மனமில்லை.
    “கொஞ்சநாளுக்கு முன்னாடி நீங்க செஞ்சதை இன்னைக்கு நான் செஞ்சேன்... இதுல என்ன தப்பு இருக்கு?”
    “வாட் ரப்பிஷ்? உளறாத நித்திலா”
    “சமாளிக்க நினைக்காதிங்க சாகர்... உங்களைத் தேடி என் பிள்ளை அழணும்னு நீங்க திட்டம் போட்டு காய் நகர்த்துனது எனக்குத் தெரியாதுனு நினைக்கிறிங்களா? எல்லாம் தெரிஞ்சும் என் பிள்ளைய உங்க கூட அனுப்புனதுக்கு என்னோட ஹெல்த் கண்டிசன் மட்டும் தான் காரணம்... நீங்க உங்க லிமிட்டை க்ராஸ் பண்ணுனிங்கனா அம்ருவ திரும்ப அழைச்சிப்பேன்”
    நித்திலா சொன்னதும் ஏதோ ஜோக் சொன்னதைப் போல சத்தமாக சிரித்தான் கிருஷ்ணராஜசாகர்.
    “நல்ல ஜோக்... நீ அவனைக் கூப்பிட்டுப் பாரேன்... அவன் வந்தான்னா நோ அப்ஜெக்சன்”
    நித்திலாவுக்கு மனம் கொதித்தது. எவ்வளவு மமதை இவனுக்கு? அம்ரித் இவனது வீட்டிலிருக்கும் வசதி வாய்ப்பில் மயங்கிப் போயிருக்கும் திமிர். எத்தனை நாளைக்கு இந்த திமிர் இருக்கப்போகிறது என கறுவிக்கொண்டாள் அவள்.
    “ஏன் சைலண்ட் ஆகிட்ட நித்திலா? மகனைப் பிரிஞ்சு இருக்க முடியலையா? நான் வேணும்னா ஒரு ஐடியா சொல்லட்டுமா? பேசாம நீயும் இங்க வந்துடேன்... நீ நான் அம்ரு மூனு பேரும் நாம் இருவர் நமக்கு ஒருவர்ங்கிற பிலாசபிக்கு உதாரணமா வாழலாம்”
    “இப்பிடி பேசாதிங்க சாகர்... எனக்குப் பிடிக்கல”
    “எது பிடிக்கல நித்திம்மா? இங்க வரச் சொன்னது பிடிக்கலையா? இல்ல நாம் இருவர் நமக்கு ஒருவர்னு சொன்னது பிடிக்கலையா? சரி உனக்காக, நாம் இருவர் நமக்கு இருவர்னு கொள்கைய மாத்திக்கலாமா? பட் அதுலயும் ஒரு சிக்கல் இருக்கு... நீ இங்க வந்தா தான் அந்த இருவர் பாசிபிள்”
    “ஷட்டப்! தேவையில்லாம பேசாதிங்க... ஒரு மனுசன் தெரியாம சாக்கடையில விழலாம்... ஆனா சாக்கடைனு தெரிஞ்சே அதுல விழுந்தா அவன் மனுசஜென்மமே இல்ல... நான் சுயபுத்தி உள்ள மனுசி... உங்களை மாதிரி உணர்வுகளை கேலிக்கூத்தாக்குற மனுசன் கூட வாழுற அளவுக்குப் புத்தி இன்னும் பேதலிக்கல”
    கோபக்கனல் கண்களில் வீச முகம் சிவக்க அவள் பேசியதைப் பார்க்க நன்றாக இருந்தாலும் வார்த்தைகளின் கூர்மை அதிகம் என்பதால் கிருஷ்ணராஜசாகரால் அதை ரசிக்க முடியவில்லை. அவனுக்கும் கோபம் வந்துவிட்டது.
    “உன்னை மாதிரி ஈகோ பிடிச்சவளோட உணர்வுகளுக்கு மரியாதை குடுத்தே தீரணும்னு எனக்கு எந்தக் கட்டாயமும் இல்ல... இப்ப நான் மரியாதை குடுத்து பேசுறது நீ என்னோட ஒய்ப்ங்கிற காரணத்துக்காக இல்ல... என் பிள்ளைய கஷ்டப்பட்டு பெத்து நல்லபடியா வளத்திருக்க... அதுக்காக”
    “ஒய்ப் இல்ல... எக்ஸ் ஒய்ப்”
    அழுத்தமாக உரைத்தவளை மொபைல் தொடுதிரை வழியே கண்கள் பளபளக்க பார்த்தான் கிருஷ்ணராஜசாகர்.
    “எக்ஸ் ஒய்ப்... ம்ம்ம்... இதுக்குத் தான் உன்னை ஈகோயிஸ்ட்னு சொல்லுறேன் நித்திலா... எக்ஸ் ஒய்ப்னா என்னனு தெரியுமாடி? வாய்க்கு வந்தபடி உளறாத... இன்னும் நீ மிசஸ் கிருஷ்ணராஜசாகர் தான்... பை த வே உன்னை என்னோட ஒய்ப்னு சொல்லுறதுக்கு நான் தான் யோசிக்கணும்... நானே பெருந்தன்மையா ஒய்ப்னு சொல்லுறேன்... பட் யுவர் டாம் ஈகோ நெவர் அட்மிட் தட் ட்ரூத்”
    அவன் எரிந்து விழுந்து கடைசியில் மட்டம் தட்டவும் நித்திலா அதற்கு மேல் பேச்சை வளர்க்க விரும்பாமல் அழைப்பைத் துண்டித்தாள்.
    https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?threads/அத்தியாயம்-20.5190/
    #நித்யாமாரியப்பன் #மெய்நிகராபூங்கொடியே
    மெய் நிகரா பூங்கொடியே - 19
    விக்ரமுக்குக் கிருஷ்ணராஜசாகரின் தந்திரமான செயல்பாடுகள் பேரதிர்ச்சியைக் கொடுத்திருந்தது. அதிலிருந்து மீள்வதற்கு அவனுக்குச் சிறிது நேரம் தேவை.
    கைகளில் தலை கவிழ்ந்து அமர்ந்திருந்தவன் மொபைல் இசைக்கவும் எடுத்துப் பார்த்தான். சாவித்திரி அழைக்கிறார் போல என தொடுதிரையைப் பார்த்தவன் அதில் வெளிநாட்டு எண் வரவும் குழம்பினான்.
    நிறைய மோசடி வேலைகள் வெளிநாட்டு எண்களிலிருந்து வரும் அழைப்புகளிலிருந்து தானே ஆரம்பிக்கின்றன. எனவே மறுயோசனையின்றி அழைப்பைத் துண்டித்தான் விக்ரம்.
    ஆனால் அடுத்த நொடியே மீண்டும் அழைப்பு வந்தது. விக்ரமும் சளைக்காமல் துண்டித்தான். இப்படியே எத்தனை முறை தொடரும்?
    சலித்துப் போய் அழைப்பை ஏற்றவன் “யாருயா நீ ஸ்காமுக்குப் பிறந்த செவன் பாயிண்ட் ஃபைவ்? கட் பண்ண பண்ண விடாம கால் பண்ணுற... கார்ட் மேல இருக்குற நம்பரை கேக்க போறியா? சாரி என் கிட்ட கார்டே கிடையாது... இல்ல பேங்கோட பேக்-ஆபிஸ்ல இருந்து பேசுறேன்னு புருடா விடப்போறியா? ஏன்டா சைலண்டா இருக்க? பேசுடா டேய்” என கொதிக்க மறுமுனையில் இருப்பவர் தான் யாரென அவனிடம் அறிமுகப்படுத்திக்கொண்டார்.
    “லேடி வாய்ஸ்ல பேசி ஏமாத்த பாக்குறியாடா பாடிசோடா?” என அதற்கும் பொங்கினான்.
    நித்திலாவின் கவனம் அவன் பக்கம் திரும்பியது.
    “யார் விக்கி? ஏன் இவ்ளோ ஹார்ஷா பேசுற?”
    “வெளிநாட்டு நம்பர்ல இருந்து கால் பண்ணிருக்கான் நித்தி... ஸ்காம் நம்பர்னு நான் கண்டுபிடிச்சதும் ஸ்ரீநயனினு லேடி நேம் சொல்லி லேடி வாய்ஸ்ல பேசி என்னை ஏமாத்த பாக்குறான்”
    ஸ்ரீநயனி என்ற பெயரில் நித்திலா நிதானித்தாள். மேற்கொண்டு வசவுகளை அள்ளிவிடப்போன விக்ரமைத் தடுத்தவள் அவனிடமிருந்து மொபைலை வாங்கிக்கொண்டாள்.
    “நயனி?”
    சந்தேகமாக வினவினாள் நித்திலா.
    மறுமுனையில் ஸ்ரீநயனி விக்ரமின் பேச்சால் வந்த கடுப்பை உதறிவிட்டு உற்சாகத்தோடு “அண்ணி” என்றாள்.
    நித்திலாவுக்கு அவளைப் போல உற்சாகமாக பேச முடியவில்லை. ஒட்டுமொத்த உணர்வுகளும் அடங்கி அமைதியாய் ஓய்ந்து போய் இருந்தவளுக்கு அதற்கு மேல் பேசுவதற்கு குரல் எழவில்லை.
    “அண்ணி பேசுங்க ப்ளீஸ்”
    ஸ்ரீநயனி இறைஞ்சினாள்.
    அடைத்துக்கொண்ட தொண்டையைச் சிரமப்பட்டுச் செருமி சரி செய்துகொண்டாள் நித்திலா.
    “சொல்லு நயனி”
    “எப்பிடி இருக்கிங்க அண்ணி?”
    “உங்க அண்ணன் சிம்லாக்கு வர்ற வரைக்கும் நல்லா இருந்தேன்”
    சுருக்கமான பதில் தான். ஆனால் கேள்விக்குச் சொந்தகாரியின் மனதில் சுருக்கென தைத்தது. இப்படியெல்லாம் பேசுபவள் இல்லை நித்திலா என்பது ஸ்ரீநயனிக்கு நன்றாகத் தெரியும். எல்லாம் தமையனின் கைங்கரியத்தால் வந்த வினை.
    “இப்ராஹிம் எல்லாத்தையும் சொன்னார் அண்ணி... அண்ணா... ப்ச்”
    “எனக்கும் எல்லாம் தெரியும் நயனி”
    ஸ்ரீநயனிக்கு ஆச்சரியமும் அதிர்ச்சியும் ஒருசேர எழுந்தது. அண்ணிக்கு எப்படி உண்மை தெரிந்திருக்கும்? அண்ணன் அவ்வளவு எளிதில் தெரியவிட்டிருக்க மாட்டானே? அவனது திட்டத்தில் எப்போதுமே ஓட்டை விழுந்ததில்லை.
    https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?threads/அத்தியாயம்-19.5183/

    #மெய்நிகராபூங்கொடியே #நித்யாமாரியப்பன்
    மெய் நிகரா பூங்கொடியே-18
    கிருஷ்ணராஜசாகர் விக்ரமிடம் விசாரித்ததற்கு நித்திலாவிற்கு அறுவைசிகிச்சை நடப்பதாக பதில் வந்தது. பின்னர் அவளுக்கு அனஸ்தீசியா மயக்கம் தெளியவில்லை என்ற செய்தி கிடைத்தது.
    அதற்கு மேல் கிருஷ்ணராஜசாகரும் விசாரிக்கவில்லை. சிகிச்சை முடிந்து நினைவு திரும்பியதும் அவளே பேசுவாள் என நித்திலாவைப் பற்றி மறந்தே போனான்.
    ஆனால் அம்ரித் அடிக்கடி நித்திலாவைப் பற்றி தொணதொணப்பான். நர்மதா அவனது கேள்விக்கணைகளைச் சமாளிப்பார்.
    அன்று அலுவலகம் கிளம்பிக்கொண்டிருந்த கிருஷ்ணராஜசாகரை அம்ரித்தின் சோகமுகம் யோசனைக்குள்ளாக்கியது.
    “அம்ரு குட்டிக்கு என்னாச்சு?” என மகனிடம் ஆதரவாக விசாரித்தான்.
    “நித்திம்மா என் கிட்ட பேசல டாடி... நான் ஃபோர் தைம்ஸ் கால் பண்ணிட்டேன்” என்றான் அவன்.
    “அம்ரு குட்டி கிட்ட நித்திம்மா எப்பிடி பேசாம இருப்பா? குடு நான் கால் பண்ணி பாக்குறேன்” என்றவன் அம்ரித்தின் டேபில் இருந்து நித்திலாவின் எண்ணுக்கு அழைத்தான்.
    அழைப்பை ஏற்க ஆளில்லை. முழு ரிங்கும் போய் கட்டானது. கிருஷ்ணராஜசாகரும் முயன்று பார்த்துவிட்டு அழைப்பு ஏற்கப்படவில்லை என்றதும் இனி அழைக்கும் முயற்சியைக் கைவிட்டான்.
    அம்ரித்தின் சோர்ந்த முகத்தை மாற்றவல்லவர் தனது அன்னை மட்டுமே என்பதை அறிந்தவனாக நர்மதாவிடம் அவனை ஒப்படைத்தான்.
    “இன்னைக்கு எனக்கு முக்கியமான மீட்டிங் இருக்குமா... அம்ருவ பாத்துக்கங்க... அவன் உங்க பொறுப்பு” என்றவன் ஏதோ யோசித்தவனாக “நித்திலா கிட்ட இருந்து கால் வந்துச்சுனா இனிமே அம்ரு கால் பண்ணுனா உடனே அட்டெண்ட் பண்ண சொல்லுங்க... என் பிள்ளை அவளால கஷ்டப்படுறப்ப எனக்கு இரிட்டேட் ஆகுது” என்று ஜம்பமாக உரைக்க நர்மதாவுக்கு எரிச்சல்.
    “ஏன்டா அவ என்ன டூரா போயிருக்கா? சர்ஜரி முடிஞ்சு மயக்கம் தெளிஞ்சுதோ இல்லையோ? நீ அதை விசாரிச்சியா?”
    “இல்ல... அவளைப் பத்தி நான் ஏன் விசாரிக்கணும்?”
    கிருஷ்ணராஜசாகரின் அலட்சியத்தைப் பார்க்கையில் நர்மதாவின் எரிச்சல் கோபமாக மாறியது.
    “அவ மேல அக்கறையில்ல, அப்ப அவளுக்கு ஆர்டர் போடவும் உனக்கு உரிமையில்ல கிரிஷ்... அவ உடம்பு சரியானதும் பேசுவா”
    “நர்மும்மா”
    “போதும்டா... இந்த வயசுலயும் நர்மும்மா நர்மும்மானு கொஞ்சுறதுக்கு உன் அம்மா உன் கூடவே இருக்கணும்... ஆனா உன் மகன் மட்டும் அவன் அம்மாவ விட்டுத் தூரமா இருக்கணும்... ஒரு வீடியோ காலுக்காக அழுது கரையணும்... நல்ல தகப்பன்டா நீ”
    அவரது கோபத்தில் கிருஷ்ணராஜசாகர் திகைத்தான். எனது அன்னையை என்ன மந்திரம் போட்டு மயக்கியிருப்பாள்? அவளா நானா என்று வரும் போதெல்லாம் அவர் பெரும்பாலும் நித்திலா பக்கமே நிற்கிறாரே!
    “நான் நல்ல தகப்பன் இல்லனு வச்சுக்கோங்க... உங்க சோ கால்ட் மருமகள் நல்ல அம்மா தானே... பெத்த பிள்ளை கால் பண்ணியும் எடுக்க முடியாத அளவுக்கு அவளுக்கு அப்பிடி என்ன முக்கியமான வேலை?”
    நர்மதா எதுவும் பேசாமல் அவனை தலையிலிருந்து கால் வரை பார்த்தார்.
    “ஏன் இப்பிடி பாக்குறிங்க?”
    “என்னை விட ரொம்ப உயரமா வளந்துட்ட... இல்லனா நீ பேசுற பேச்சுக்கு உன் கன்னத்துல பளார்னு ரெண்டு அறை வச்சிருக்கலாமேனு யோசிச்சேன்”
    கிருஷ்ணராஜசாகர் மறுமொழி பகரும் முன்னர் கையுயர்த்தினார்.
    “போதும்பா... உன்னை எவ்ளோ குணவானா வளத்திருக்கேன்னு ஆல்ரெடி பூரிச்சு போய் நிக்குறேன்... இதுக்கு மேல எதையும் சொல்லி மனங்குளிர வச்சிடாத”
    வெளிப்படையாக கடிந்துகொள்ளாமல் வஞ்சப்புகழ்ச்சியில் வாழ்த்திவிட்டுப் போன அன்னையை என்ன சொல்வதென புரியாமல் அலுலவகத்திற்குக் கிளம்பினான் கிருஷ்ணராஜசாகர்.
    https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?threads/அத்தியாயம்-18.5175/
    #நித்யாமாரியப்பன் #மெய்நிகராபூங்கொடியே
    மெய் நிகரா பூங்கொடியே - 17
    “இது சரியில்ல நிஹி”
    கண்டிப்புடன் கூறியபடி வெளியே வேடிக்கை பார்த்தான் சந்தீப்.
    அவ்வளவு தான், நிஹாரிகாவின் முகம் மாறிவிட்டது.
    ஓட்டுனரைப் பார்த்துவிட்டு அவனிடம் திரும்பினாள்.
    “எது சரியில்லனு சொல்லுறிங்க?”
    “இப்பிடி கண் மண் தெரியாம ட்ரிங் பண்ணுறது”
    குற்றம் சாட்டும் குரலில் கூறினான் சந்தீப்.
    “வாட்? கம் அகெய்ன்”
    தோள்களைக் குலுக்கி அவள் கேட்ட விதம் சந்தீப்பை எரிச்சலுக்குள்ளாக்கியது.
    “நம்ம டாக்டர் கிட்ட போனப்ப அவங்க என்ன சொன்னாங்க? ஸ்டே அவே ஃப்ரம் ஆல்கஹால்... மறந்துட்டியா?” என்றான் காற்றில் பறந்த சிகையைக் கோதியபடி.
    நிஹாரிகா மதுவின் வசம் இருந்ததால் சினத்தோடு சிரித்தாள்.
    “ஒரு நாள் ட்ரிங் பண்ணுறதால என் ஃபெர்ட்டிலிட்டிக்கு எந்த பாதிப்பும் வராது சந்தீப்... எதையுமே அனுபவிக்காம வாழ்ந்து என்ன பண்ணப்போறோம்?”
    அலட்சியம் வழிய சொன்னவளை வெளிப்படையாக கடிந்துகொள்ள முடியவில்லை அவனால். காரணம் அவளை அந்தளவுக்குக் காதலிக்கிறான் சந்தீப்.
    “ஒரு பாத்திரத்துல இருக்குற பால்ல துளி விசம் கலந்தாலும் அந்தப் பாலை குடிக்கமுடியாது நிஹி”
    “ஷப்பா! ஸ்டாப் திஸ் நான்சென்ஸ் சந்தீப்... அட்வைஸ் பண்ணி கொல்லாதிங்க”
    அதற்கு மேல் அவளிடம் வாதிட விரும்பாமல் அமைதியாய் ஹோட்டல் வரும் வரை வெளியே வேடிக்கை பார்க்கத்தொடங்கினான் சந்தீப்.
    பல நேரங்களில் நிஹாரிகா இப்படி எடுத்தேன் கவிழ்த்தேன் என்று பேசுவதால் அவமானப்படுபவன் சந்தீப்பே.
    அமெரிக்கா வருவதற்கு முன்னால் சாகர் குழுமத்தின் பங்குமாற்றம் பற்றிய பேச்சு ஆரம்பித்த போதும் இப்படிதான் பேசி கிருஷ்ணராஜசாகரின் கோபத்தைத் தூண்டி அண்ணனுக்கும் தம்பிக்கும் இடையே விரிசலுக்கான பிள்ளையார்சுழியைத் திவ்வியமாக போட்டாள் நிஹாரிகா.
    ஆனந்த்சாகருக்கு இரு மகன்களும் இரு கண்கள் போல. ஸ்ரீநயனியோ அவரது உயிருக்கு ஒப்பானவள்.
    மூவருக்கும் சாகர் குழுமத்தின் மேலாண்மையில் முக்கியப்பொறுப்பைக் கொடுக்க விரும்பியவர் தலைமைப்பொறுப்பை யாரிடம் ஒப்படைப்பது என்பதில் தான் தடுமாறினார்.
    கிருஷ்ணராஜசாகரும் ஸ்ரீநயனியும் குணத்தில் ஒரே மாதிரி. இருவருக்கும் தற்சமயம் சொல்லிக்கொள்ளும் அளவுக்குக் குடும்பம் பந்தபாசத்தில் பிடிப்பில்லை.
    அவரவர் வேலை, தொழிலில் மூழ்கி தங்களைச் சுற்றி சுவரெழுப்பி வாழ்ந்து வருபவர்களிடம் தலைமைப்பொறுப்பை ஒப்படைத்தால் அவர்களுக்குப் பின்னர் யார் இந்த தொழில்களை வழிநடத்துவது?
    இந்தக் கேள்விக்கு விடையாய் அவர் தேர்வு செய்தது சந்தீப்பை.

    https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?threads/அத்தியாயம்-17.5168/

    #நித்யாமாரியப்பன் #மெய்நிகராபூங்கொடியே
    மெய் நிகரா பூங்கொடியே - 16
    “அவளுக்கும் எனக்கும் ஒத்துவராதுப்பா... அதுக்காக என் பிள்ளை கஷ்டப்படணுமானு கேட்டேன்... அவனோட ஃபியூச்சர் நல்லா இருக்கணும்னு என் கூட அனுப்பி வச்சிட்டா... மனசு மாறுச்சுனா அவளே இங்க வருவா... நம்ம யாரும் அவளைக் கட்டாயப்படுத்தவேண்டாம்” என்று சொல்லி அவரது வாயை அடைத்துவிட்டான்.
    நர்மதாவுக்கு அவன் சொன்னதில் பாதி உண்மை என்பது தெரியும். ஆனால் அம்ரித்தின் வருங்காலத்திற்காக நித்திலா அவனை இங்கே அனுப்பி வைத்திருக்கிறாள் என்று சொன்னதை அவரால் நம்ப முடியவில்லை.
    சொன்னபடி அவளே பிள்ளையை ஒப்படைக்கும்படி செய்துவிட்டான். தனியாய் அழைத்து கேட்டபோது கூட குயுக்தியாய் புன்னகைத்தானே தவிர என்ன செய்து காரியம் சாதித்தான் என்பதை கூறவில்லை.
    நர்மதாவின் துப்பறியும் மூளை அம்ரித்தின் அன்புக்கு முன்னே அடங்கிப்போனது. இன்றில்லை என்றாலும் என்றாவது ஓர்நாள் நித்திலாவும் சாகர் நிவாசுக்கு வந்துவிடுவாள் என்ற நம்பிக்கை!
    அம்ரித்துக்குச் சாகர் நிவாசின் பெரிய தோட்டமும் குளமும் பிடித்திருந்தது. அதை விட கேட்டதை எல்லாம் வாங்கி கொடுத்து தரையில் விடாமல் தூக்கி வைத்துக் கொஞ்சிய தந்தையை மிகவும் பிடித்திருந்தது.
    சமையலறை பக்கம் செல்லாத நர்மதா பேரனுக்காக ஹார்ஷ்ப்ரவுன் சமைத்துத் தருவதும், வீட்டில் கூட தனது ஆளுமையை விட்டுக் கொடுக்காத ஆனந்த்சாகர் அவனுடன் யானை அம்பாரி விளையாடுவதும் என அந்த வீட்டின் சூழலே வேறுவிதமாக மாறியிருந்தது.
    அன்னையோடு கபேக்குச் சென்று அங்குள்ளவர்களிடம் பழகியவனுக்குச் சாகர் நிவாசின் பணியாட்களும் நண்பர்களாகத் தெரிய, பணக்காரவீட்டு வாரிசு என்ற திமிரின்றி அவர்களையும் ‘அங்கிள்’, ‘ஆன்ட்டி’ என்று அழைத்து அவர்களின் நன்மதிப்பை வாங்கிவிட்டான் அம்ரித்.
    அவனைத் தன்னுடைய அறையில் தங்கவைத்துக்கொண்டான் கிருஷ்ணராஜசாகர்.
    வந்த முதல் நாளிரவு மகனுக்குத் தன் கையால் உணவூட்டி தன்னருகே படுக்க வைத்த போது விசித்திரமான வகையில் ஆர்ப்பரிப்பற்ற அமைதியொன்று அவனது ஜூவனுக்குள் ஊடுருவுவதாய் உணர்ந்தான்.
    காலையில் எழுந்த போது அவனது நெஞ்சாக்கூட்டுக்குள் புகுபவனைப் போல ஒண்டி உறங்கிய அம்ரித்தை விலக்கி அலுவலகம் போகவே விருப்பமில்லை.
    பைத்தியக்காரத்தனமாய் மனம் மகன் என்ற செண்டிமெண்டில் விழுந்துவிட்டதென எண்ணிக்கொண்டான். ஆனால் அதிலும் அவனுக்கு ஒரு நன்மை வாய்த்தது, ஆனந்த்சாகரின் உருவில்.
    ஆம்! இத்தனை நாட்கள் தாமரை இலை தண்ணீராய் இருந்த மைந்தன் பேரனிடம் அன்பை அள்ளிக்கொட்டுவதைப் பார்த்த பின்னர் சாகர் குழுமத்தின் தலைமை பற்றி அவர் எடுத்திருந்த முடிவுகளை மீண்டும் ஒருமுறை சீர்தூக்கிப் பார்க்கும் யோசனை பிறந்தது.
    அது குறித்து நர்மதாவிடம் வெளிப்படையாகவே கலந்தாலோசனை செய்தார் அவர். கிருஷ்ணராஜசாகருக்கு மைந்தன் தன்னோடு இருப்பதில் ஆத்மதிருப்தி இருந்தாலும் அவனது முக்கிய நோக்கமே சாகர் குழுமம் சந்தீப்பின் கைவசம் போய்விடக்கூடாதென்பது தானே.
    அதற்கான துருப்புச்சீட்டாக அம்ரித்தைப் பார்த்தவன் இனி எக்காரணம் கொண்டும் நித்திலாவிடம் அவனை ஒப்படைக்கக்கூடாதென்ற தீர்மானத்துக்கு வந்துவிட்டான்.
    கூடவே சந்தீப் – நிஹாரிகாவிடம் அம்ரித்தின் வருகை பற்றி தெரிவிக்கவேண்டாமென அன்னைக்கு அன்புக்கட்டளை இட்டிருந்தான்.
    அவர் காரணம் கேட்டதற்கு “அவங்களுக்கு அம்ரித் இங்க வந்த நியூஸ் சர்ப்ரைஸா இருக்கட்டும்மா” என்று சொல்லிவிட்டான்.

    https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?threads/அத்தியாயம்-16.5163/
    #மெய்நிகராபூங்கொடியே #நித்யாமாரியப்பன்
    மெய் நிகரா பூங்கொடியே - 15
    “நிஜமாவே அவன் மேல உங்களுக்கு அவ்ளோ அன்பா? இல்ல என் மேல இருக்குற கோவத்தால அவனைப் பிரிக்கணும்னு நினைச்சிங்களா?”
    இரண்டு காரணங்களோடு மூன்றாவதாக ஒரு காரணம் இருப்பதை அறியாமல் கேட்டாள் அப்பாவி நித்திலா.
    கிருஷ்ணராஜசாகர் உதட்டை ஒரு பக்கமாக இழுத்துப் புன்னகைத்தான்.
    “இந்தக் கேள்விய நான் மிஸ்டர் ஜனார்தனன் கிட்ட கேட்டேன்... இப்ப நீ என் கிட்ட கேக்குற”
    ஜனார்தனன் என்ற பெயரில் நித்திலாவின் முகம் கலவரம் கொண்டது.
    “சாகர்”
    “டோண்ட் வொரி... அவர் கிட்ட உன்னைப் பத்தி எதுவும் சொல்லமாட்டேன்”
    “தேங்க்யூ”
    “இந்த தடவை நீ செஞ்ச ப்ராமிஸை மறக்கமாட்டனு நம்புறேன்”
    அழுத்தமாக அவன் சொன்ன விதத்தில் நித்திலாவின் முகம் வாடியது. அவன் சொன்ன சத்தியம் எதுவென அவளுக்கும் நினைவிருக்கிறது. ஆனால் அந்தச் சத்தியத்தை மீறக் காரணமானவன் இவன் தானே!
    “எப்பவுமே குடுத்த வாக்கை மீறணும்னு நான் நினைச்சதில்ல சாகர்”
    அவன் கன்னத்தின் உட்பக்க சதையை உந்தி சிரித்த விதத்தில் தன்னை நம்பவில்லை என்பதை புரிந்துகொண்டாள் நித்திலா.
    இவன் என்றைக்கு என்னையும் என் மனதையும் புரிந்துகொண்டான், இன்று புரிந்துகொள்வதற்கு! சலிப்பு தட்டியது. காலின் வேதனை வேறு இம்சிக்க அவன் கையைப் பிடித்து சத்தியம் செய்தாள்.
    “நான் ட்ரீட்மெண்ட் முடிஞ்சு வந்தாலும் உங்க கிட்ட இருந்து அம்ருவ பிரிக்கமாட்டேன் சாகர்”
    கிருஷ்ணராஜசாகர் வெற்றிப்புன்னகை பூத்தான். நினைத்ததை செய்துமுடித்துவிட்டான் இல்லையா!
    “சப்போஸ் அம்ரு கூட இருக்கணும்னு நினைச்சனா நீயும் சென்னைக்கு...”
    “நான் வரமாட்டேன் சாகர்... தட்ஸ் ஃபைனல்”
    தீர்மானமாக உரைத்தாள் நித்திலா. கீமோதெரபி முடிந்தால் எத்தனை ஆண்டுகள் ஆயுள் என்பது இப்போது வரை அறுதியிட்டுச் சொல்லப்படாத நிலையில் இனியும் மகனுக்குக் கிடைக்கவிருக்கிற செழிப்பான வாழ்வுக்கு இடையூறாக இருக்கவிரும்பாமல் கிருஷ்ணராஜசாகர் சொன்ன நிபந்தனைக்கு ஒப்புக்கொண்டாள்.
    “உனக்கு ட்ரீட்மெண்டுக்கு ஆகுற செலவை நான் பாத்துக்குறேன்”
    “என் பிள்ளைய நான் உங்க கிட்ட காசுக்கு விக்கல சாகர்... அம்ருவ நல்லா பாத்துக்கங்க... எனக்கு வேணுங்கிறதை செய்யுறதுக்கு என் மேல உண்மையான பாசம் வச்சிருக்கிறவங்க இருக்காங்க”
    நிமிர்வாய் அவள் கூறிக்கொண்டிருக்கையில் “நித்தி” என்றபடி வந்தான் விக்ரம். அவனைக் கண்டதும் நித்திலாவின் முகத்தில் நம்பிக்கை ஒளிர கிருஷ்ணராஜசாகரோ “வாட்டெவர்” என்றவாறு அம்ரித்தைக் காண வீட்டை நோக்கி நடந்தான்.
    ஆனால் ‘வாட்டெவர்’ என்றவன் மனதிற்குள் விக்ரமைக் காய்ச்சியெடுத்ததை நித்திலா அறியமாட்டாள்!

    https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?threads/அத்தியாயம்-15.5157/
    #நித்யாமாரியப்பன் #நித்யாமாரியப்பன்
    மெய் நிகரா பூங்கொடியே - 14

    மருத்துவருக்கு அவன் இட்ட கட்டளையில் பாதியை அவர் செய்து முடித்துவிட்டார். இனி மீதியை தென்கொரிய பயணத்தை முடித்துவிட்டு கிருஷ்ணராஜசாகர் தான் கவனித்துவேண்டும்.
    “கவலைப்படாதிங்க... மினிஸ்டர் கிட்ட ரெகமண்ட் பண்ணுறேன்” என அவருக்குக் கொடுத்த வாக்கை நிறைவேற்றுவதாக உறுதியளித்தான். கிருஷ்ணராஜசாகர்.
    நேர்மை என்ற கடிவாளத்தைப் பூட்டிக்கொண்டு திரிந்த அந்த மருத்துவ குதிரைக்கு எய்ம்ஸ் மருத்துவமனை பதவி எனும் கேரட்டைக் காட்டி காரியத்தை முடித்திருந்தான்.
    “தேங்க்யூ சார்”
    அழைப்பைத் துண்டிக்கப்போனவரிடம் “பை த வே, இன்னொரு தடவை நித்திலாவை மிஸ் நித்திலானு சொல்லாதிங்க... ஷீ இஸ் மிசஸ் கிருஷ்ணராஜசாகர்” என அமர்த்தலாக உரைத்துவிட்டு அவனே அழைப்பைத் துண்டித்தான்.
    அவனது மிசஸ் கிருஷ்ணராஜசாகரில் இப்ராஹிமுக்கு மயக்கம் மட்டும் தான் வரவில்லை.
    கிருஷ்ணராஜசாகருக்கு அவள் இன்னும் திருமதி என்ற எண்ணமே மனதில் இருக்க நித்திலாவோ அவளை முன்னாள் கணவன் என அழுத்தமாக பதிவு செய்துவிட்டாள்.

    https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?threads/அத்தியாயம்-14.5154/

    #நித்யாமாரியப்பன் #மெய்நிகராபூங்கொடியே
    மெய் நிகரா பூங்கொடியே - 13
    “இன்னுமா டாடிக்குக் கால் பண்ணி பேசல அம்ரு?”
    அவனோ பரிதாபமாக விக்ரமை நோக்கினான்.
    “டாடி ஃபேஸ் இதுல தெரியல அங்கிள்”
    விக்ரம் டேபை வாங்கி கிருஷ்ணராஜசாகரின் எண்ணுக்கு அழைத்தான். முழு ரிங்கும் போய் அழைப்பு துண்டிக்கப்பட்டது. நேற்று அழைத்தபோது வாரயிறுதியில் அம்ரித்தைக் காண வருவேன் என்றானே!
    அம்ரித்தின் முகம் வாடுவதை விக்ரமால் சகிக்க முடியவில்லை.
    “டாடிக்கு வேலை எதுவும் வந்திருக்கும் அம்ரு... முடிஞ்சதும் கால் பண்ணுவார்... நீ சாப்பிடு” என்று பான்கேக்கை நீட்ட அவனோ தட்டிவிட்டான்.
    “டாடிய பாக்காம நான் சாப்பிடமாட்டேன்”
    அவனது குரல் கீச்சிடவும் நித்திலாவின் கவனம் கலைந்தது. ஏன் அம்ரித் கத்துகிறான் என கிச்சனிலிருந்து வந்தவள் அவன் சாப்பிட அடம்பிடிப்பதைக் கண்டதும் திகைத்தாள்.
    “அம்ரு என்னடா இது?”
    அதட்டியபடியே வந்து சேர்ந்தவள் அவனது டாடி புராணத்தில் கொதிநிலைக்குப் போய்விட்டாள்.
    கிருஷ்ணராஜசாகரின் மீது அளவில்லா வெறுப்பு பெருகியது. என் பிள்ளையின் மனதில் எப்படி இவ்வளவு எளிதில் இடம்பிடித்தான் என கறுவிக்கொண்டவள் எரிச்சலை மறைத்தபடி அம்ரித்தின் அருகே அமர்ந்தாள்.
    “டாடி கிட்ட அப்புறமா பேசலாம்... நீ இப்ப குட்பாயா சாப்பிடு” என்று கொஞ்சல் மொழியில் பேசியவாறு இன்னொரு துண்டு பான்கேக்கை நீட்ட அதையும் தட்டிவிட்டான் அவன்.
    “அம்ரு”
    கோபத்தோடு கை ஓங்கிவிட்டாள் நித்திலா. அம்ரித் அன்னையின் கோபத்தைக் கண்டதும் அரண்டு நடுங்க சாவித்திரி அவளது ஓங்கிய கரத்தை இறக்கினார்.
    “என்ன காரியம் பண்ண பாத்த? அவன் குழந்தை... அப்பிடி தான் பிடிவாதம் பிடிப்பான்.. அதுக்குக் கை ஓங்குவியா? எப்ப இருந்து இந்தப் புதுப்பழக்கத்தைக் கத்துக்கிட்ட நித்தி?” என்றார் கண்டிக்கும் தொனியில்.
    https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?threads/அத்தியாயம்-13.5150/
    #மெய்நிகராபூங்கொடியே #நித்யாமாரியப்பன்
  • Loading…
  • Loading…
  • Loading…
Top Bottom