• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.
Nithya Mariappan
Reaction score
3,089

Profile posts Latest activity Postings About

  • மெய் நிகரா பூங்கொடியே - 54
    தூரத்தில் இருக்கும் ‘எலிபெண்ட் வாட்ச் டவரில்’ நித்திலா நின்று கொண்டிருப்பது தெரிந்ததும் வேகமாக அங்கே ஓடினான
    நித்திலா ஏதோ பாடலைப் பாடியபடி நின்று கொண்டிருந்தவள் டவரின் மீது ஏறிய கிருஷ்ணராஜசாகரைப் பார்த்ததும் சிரித்தாள்.
    “இங்கயும் வந்துட்டிங்களா? நான்... நான் சந்தோசமா இருந்தாலே உங்களுக்குப் பிடிக்காதே”
    குளறியபடி சொன்னவளை வேகமாக நெருங்கியவன் அவளது நடவடிக்கையில் தெரிந்த வித்தியாசத்தை நொடியில் புரிந்துகொண்டான்.
    சுற்றும் முற்றும் பார்த்தவனின் கண்களில் ஒயின் பாட்டில் சிக்கிவிட தலையிலடித்துக்கொண்டான்.
    “ஏன் உங்களை நீங்களே அடிச்சிக்கிறிங்க?”
    அப்பாவியாய் கேட்டபடியே டவரின் கம்பி மீது ஏற முயன்றாள் அவள்.
    “ஏய்! அதுல ஏறாத... தடுமாறுனா அங்க இருந்து விழுந்துடுவ”
    பதறியபடி அவளை இழுத்தான் கிருஷ்ணராஜசாகர்.
    நித்திலா அதை புரிந்துகொள்ளும் நிலையில் இல்லை. போதை கொடுத்த தள்ளாட்டத்தில் அவனை உதறித் தள்ளினாள்.
    “ஹூ ஆர் யூ டு ஸ்டாப் மீ? நான் கம்பி மேல ஏறுவேன், இங்க இருந்து குதிக்க கூட செய்வேன்... மை லைஃப் மை ரூல்ஸ்”
    சம்பந்தமின்றி உளறியவள் மட்டும் நிதானத்தில் இருந்திருந்தால் கிருஷ்ணராஜசாகர் தக்க பதிலடி கொடுத்திருப்பான்.
    அவள் தான் ஒயின் கொடுத்த போதையில் இருக்கிறாளே!
    “இன்னொரு வார்த்தை பேசுன, ஐ வில் கில் யூ நித்திலா... ஏன்டி இதை குடிச்ச?”
    பாட்டிலைக் காட்டி கேட்டான் அவன். நித்திலாவோ அவனது கோபத்தில் மருண்டு போனாள். மலங்க மலங்க விழித்தவளைப் பார்த்ததும் கிருஷ்ணராஜசாகருக்கே பச்சாதாபம் வந்துவிட்டது.
    “சாரி நித்தி...” என தணிந்த குரலில் பேச வந்தவன் நித்திலா ‘ப்ர்ர்ர்ர்” என்று உதட்டை மூடிக்கொண்டு கேலியாய் சிரித்த விதத்தில் மீண்டும் கொதிநிலைக்குப் போனான்.

    https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?threads/அத்தியாயம்-54.5315/
    #மெய்நிகராபூங்கொடியே #நித்யாமாரியப்பன்
    மெய் நிகரா பூங்கொடியே - 52
    நான்... எப்பிடி... நம்ம மேரேஜ்... நயனிக்காக..”
    ஒவ்வொரு வார்த்தையாக அவள் இடைவெளி விட்டு கூறியதற்கு காரணம் அவனது இதழ்கள் இன்னும் நித்திலாவின் இமைகளின் மீது சரணடைந்தது தான்.
    “நயனிக்காக கல்யாணம் பண்ணுனாலும் நார்மல் ஃபேமிலி லைஃபுக்கு நான் ரெடினு உன் கிட்ட சொன்னேனே நித்தி... நீ கூட அப்ப வெக்கப்பட்டல்ல”
    “நான் ஒன்னும் வெக்கப்படல”
    மறுக்கவேண்டுமென அவசரமாக மொழிந்தவள் தனது தொனி மறுப்பாக இல்லாமல் சிறுபிள்ளையின் சமாளிப்பாக ஒலிக்கவும் நாணிப்போனாள்.
    “நீங்க தள்ளிப் போங்க” என அவனை வெட்கத்தோடு தள்ளிவிட்டவள் கண்ணாடி கதவுகள் மூடப்படாத சாளரத்தின் வழியே வந்த காற்றின் தயவால் வார்ட்ரோபிலிருந்து பறந்து வந்து அவள் முன்னே விழுந்த காகிதங்களைக் கண்டதும் குனிந்து எடுத்தாள்.
    ‘மியூச்சுவல் டிவோர்ஸ் பெட்டிசன்’
    நித்திலாவின் கண்கள் கலவர வண்ணம் பூசிக்கொண்டன. பதபதைத்த மனதோடு அதை கிருஷ்ணராஜசாகரிடம் காட்டினாள்.
    “என்ன இது சாகர்?”
    கிருஷ்ணராஜசாகருக்கும் அது அதிர்ச்சியே. அந்த விண்ணப்பத்தை வாங்கி வைத்தவன் என்னவோ அவன் தான். இந்த திருமணம் ஸ்ரீநயனிக்காக என நித்திலாவை நம்ப வைப்பதற்காக வாங்கி வைத்திருந்தான்.
    எல்லாம் சரியாகப் போய்க்கொண்டிருந்த இந்நேரத்தில் தான் இந்தக் காகிதம் நித்திலாவின் கண்ணில் படவேண்டுமா?
    நொந்து போனவனாக நின்றான்.
    அவனது அமைதி நித்திலாவிற்குள் கோபத்தைக் கிளறியது.
    சற்றும் யோசிக்காமல் அந்தக் காகிதங்களை கிருஷ்ணராஜசாகரின் முகத்தில் வீசியெறிந்தாள்.
    அவன் அதிரும் போதே சட்டை காலரைப் பற்றினாள்.
    “இந்தப் பக்கம் மியூச்சுவல் டிவோர்ஸ் பெட்டிசனை வாங்கி வச்சிட்டு அந்தப் பக்கம் என் கூட ஹனிமூன் வர்றதுக்குச் சம்மதிச்சிருக்கிங்க... என்ன மனுசன் நீங்க? ஒவ்வொரு தடவையும் இந்தக் கல்யாணம் நயனிக்காகங்கிறதை மறந்து நான் உங்க கிட்ட நெருங்குறப்பவும் ஏதோ ஒரு சம்பவம் நடந்து என்னை விலக வச்சிடும்... இதுக்கு என்ன பதில் சொல்லப்போறிங்க?”
    “உன்னை மேரேஜுக்குச் சம்மதிக்க வைக்குறதுக்காக நான் வாங்கி வச்ச பெட்டிசன் இது... மத்தபடி வேற எந்த மோட்டிவும் இல்ல”
    “நான் இதை நம்புவேன்னு நினைக்கிறிங்களா சாகர்?
    https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?threads/அத்தியாயம்-52.5311/
    #மெய்நிகராபூங்கொடியே #நித்யாமாரியப்பன்
    மெய் நிகரா பூங்கொடியே - 49
    “எனக்கு உங்களை மேரேஜ் பண்ணிக்க விருப்பமில்ல மிஸ்டர் சாகர்... உங்களுக்கும் இதுல சம்மதம் இருக்காதுனு நினைக்குறேன்”
    “எனக்குச் சம்மதமில்லனு யார் சொன்னாங்க?”
    கடலில் இருந்து பார்வையைத் திருப்பாமல் கேட்டான் அவன். அக்கேள்வியில் நித்திலாவுக்குள் அதிர்ச்சி ஆச்சரியம் குழப்பம் என எண்ணற்ற உணர்வுகள் ஒன்றாய் எழுந்தன.
    ஒருவேளை நர்மதாவின் வற்புறுத்தலுக்காகச் சம்மதித்திருப்பானோ? அதற்கும் இல்லையென்ற பதிலே வரவும் குழப்பம் அதிகரித்தது.
    ஏன் தன்னைப் போன்ற ஒருத்தியை மணக்க நினைக்கிறான்? ஒருவேளை தனது நிலையை எண்ணி இரக்கம் கொண்டு வாழ்க்கை பிச்சை போடுவதாக எண்ணிக்கொண்டானோ?
    அவ்வளவு தான்! கோபம் கிளர்ந்தது அவளுக்குள்.
    “நீங்க வாழ்க்கை பிச்சை போடுவிங்கனு நான் ஒன்னும் காத்திருக்கல சாகர்” என்றாள் சூடாக.
    கடலில் இருந்து பார்வையைத் திருப்பியவன் எதுவும் பேசாமல் அவளை நெருங்கவும் நித்திலா வேகமாக தனது ஹேண்ட்பேக்கை இருவருக்கும் இடையே நீட்டினாள்.
    “எதுவா இருந்தாலும் தொடாம தள்ளி நின்னு பேசுங்க”
    கிருஷ்ணராஜசாகர் அவளது முன்ஜாக்கிரதை நடவடிக்கையைப் பார்த்ததும் கோபம் மறைந்து சத்தமாகச் சிரிக்க ஆரம்பித்தான்.
    சிரித்து முடித்தவன் “டோண்ட் வொரி... உன்னை ஹக் பண்ணுறளவுக்கு இங்க ரொமான்டிக்கான சிச்சுவேசன் ஒன்னும் இல்ல” என்றான்.
    இங்கே இல்லை என்றால் என்ன அர்த்தம்? அன்று அவனது வீட்டில் அணைத்த போது இருந்தது என்கிறானோ? அவளது பார்வையிலிருந்தே இக்கேள்வியைப் புரிந்துகொண்டவனைப் போல பதிலளித்தான்.
    “கார்டன்ல அந்த குளம், மரமல்லியோட வாசம் எல்லாம் சேர்ந்து உன்னை ஷேரில பாத்ததும் கொஞ்சம் புத்தி பிசகிடுச்சு... ஆப்டர் ஆல், நானும் ஆம்பளை தானே... ப்ளஸ் நான் அன்பா செய்யுற எந்த ஒரு செயலையும் நீ இரக்கம்னு சொல்லுறப்ப கண்ணு மண்ணு தெரியாம வர்ற கோபம் அன்னைக்குக் கொஞ்சம் எக்ஸ்ட்ரா டோஸ் ஆகிடுச்சு... அதனால ஹக் பண்ணிட்டேன்... இப்ப நீ என்னை எவ்ளோ கோவப்படுத்துனாலும் அது நடக்காது”
    நித்திலா நிம்மதி பெருமூச்சு விட்டாள்.
    பின்னர் “எதுக்கு நீங்க என்னைக் கல்யாணம் பண்ணிக்க சம்மதிச்சிங்க?” என்று கேட்டாள்.
    “பேச்சிலரா இருந்து போரடிச்சுடுச்சு... அதான் கல்யாணம் பண்ணிக்கலாம்னு நினைக்குறேன்”
    “பி சீரியஸ் சாகர்”
    “சீரியஸா சொல்லணும்னா ஐ ஃபால் இன் லவ் வித் யூ”
    அவன் சொல்லி முடித்ததும் நித்திலாவின் கண்கள் அதிர்ச்சியில் விரிந்தன. வாயடைத்துப் போன நிலை!
    “ரொம்ப ஷாக் ஆகாத... சும்மா ஃபன் பண்ணுனேன்”
    அவன் சொன்ன அடுத்த நொடியில் கிருஷ்ணராஜசாகரின் மனசாட்சி அவனை உலகிலுள்ள அனைத்து மோசமான கெட்டவார்த்தைகளையும் சொல்லி திட்டியது.
    விளையாட்டுக்குச் சொல்லியிருக்கிறான் என்று தெரிந்ததும் தான் நித்திலாவுக்கு ஸ்ரமணையே வந்தது.
    “ரொம்ப யோசிக்காத நித்திலா... கல்யாணம் ஒன்னும் செய்யக்கூடாத தப்பு இல்ல”
    “இருக்கட்டுமே... அப்பிடியே பண்ணுனாலும் உங்களை ஏன் நான் கல்யாணம் பண்ணிக்கணும்? லாஜிக்கா ஒரு காரணம் சொல்லுங்க பாப்போம்”

    https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?threads/அத்தியாயம்-49.5300/
    #மெய்நிகராபூங்கொடியே #நித்யாமாரியப்பன்
  • Loading…
  • Loading…
  • Loading…
Top Bottom