• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.
Nithya Mariappan
Reaction score
3,137

Profile posts Latest activity Postings About

  • ஹாய் ஃப்ரெண்ட்ஸ்
    மரம் தேடும் மழைத்துளி அத்தியாயம் 32

    அபிமன்யூ ஒரு சிறுவனிடம் விளையாடிக் கொண்டிருந்தவன் "இங்கே என்ன பண்ணிட்டு இருக்கிங்கடா?" என்ற ஸ்ராவணியின் குரலில் திரும்பினான்.

    எப்போதும் போல எளிமையான அலங்காரத்தில் மிளிர்ந்தவளின் காதில் ஆடிய ஜிமிக்கியில் பதிந்தது அவனது கவனம்.

    ஸ்ராவணியோ தான் பேசிக் கொண்டிருக்கும் போது தன்னைக் கவனிக்காமல் வேறு எங்கேயோ பார்த்தவனின் கண் முன் சொடக்கிட்டவள் "நான் இங்கே நிக்கிறேன்டா. உனக்கு அங்கே என்ன பார்வை?" என்று கேட்க

    அவன் அந்த ஜிமிக்கியில் பார்வையைப் பதித்தவாறே "வாவ்! பியூட்டிஃபுல்" என்று சொல்ல ஸ்ராவணி குழப்பத்துடன் பின்னால் திரும்பி பார்க்கவும் அங்கே விஷ்ணுவின் தங்கை ஸ்ரீநிதி வரவும் சரியாக இருந்தது.

    அஸ்வின் இந்த விபரீதத்தை உணர்ந்து எச்சரிக்கும் முன்னரே ஸ்ராவணி கடுப்புடன் "சை! நீயெல்லாம் திருந்தவே மாட்ட. உன் கண்ணுக்கு ஆம்பிளைங்கல்லாம் தெரியவே மாட்டாங்களா? எப்பிடியோ போ" என்றவாறு வாயிலை நோக்கிச் செல்ல அபிமன்யூ குழப்பமடைந்தான்.

    "அச்சு! இப்போ நான் என்ன சொல்லிட்டேனு இவ கோவப்பட்டுட்டு போறா?" என்க அஸ்வின் அவன் தாடையைப் பற்றி அவனது பார்வை இவ்வளவு நேரம் இருந்த இடத்தை சுட்டிக்காட்ட அங்கே நின்று கொண்டிருந்த ஸ்ரீநிதியைக் கண்டதும் அவனுக்கு விஷயம் புரிந்துப் போனது.

    "டேய் அம்மா சத்தியமா நான் அந்தப் பொண்ணைப் பாக்கலடா. நான் வனியோட ஜிமிக்கியை தான் பார்த்தேன். எனக்கு மட்டும் ஏன்டா இப்பிடி நடக்குது?" என்று ஆதங்கத்துடன் பேச

    அஸ்வின் "இதுக்கே பொங்குனா எப்பிடி? இன்னும் நீ வாங்க வேண்டியது எவ்ளோ இருக்கு!" என்று கேலி செய்தான்.

    தொடர்ந்து படிக்க

    https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?threads/🖊️துளி-32👑.3848/
    ஹாய் ஃப்ரெண்ட்ஸ்
    பரிதி தீண்டிய பனிமலரே அத்தியாயம் 5

    கதவைத் தட்டியவன் சில நொடி தாமதத்திற்கு பிறகு கதவைத் திறந்த தக்ஷிண்யாவைக் கண்டதும் கோல்கேட் புன்னகையுடன் “ஹாய்” என்றான்.

    அவனை அந்நேரத்தில் அங்கே எதிர்பார்க்காத தக்ஷிண்யா தனது திகைப்பை முகத்தில் காட்டிவிட வந்த வேலையை ஆரம்பித்தான் ருத்ரதேவ்.

    “இங்க ஜூலா புல்னு ஒரு பிரிட்டிஷ் பீரீயட் தொங்குபாலம் இருக்குதாமே”

    அவனது இக்கேள்வியில் தக்ஷிண்யாவுக்குப் பற்றிக்கொண்டு வந்தது. இதை கேட்க தான் இந்நேரத்தில் தூங்கவிடாமல் கதவைத் தட்டினானா?

    கண்களை இறுக மூடித் திறந்தவள் “இதை கேக்குறதுக்குத் தான் வந்தீங்களா சார்?” என்று வினவ

    “அனுதீப் தான் எனக்கு என்ன வேணும்னாலும் எந்த நேரத்துலையும் உங்களை காண்டாக்ட் பண்ணலாம்னு சொன்னான்” என சாதுவைப் போல காட்டிக்கொண்டு கூறினான் அவன்.

    அனுதீப்பின் பெயரைக் கேட்டதும் தக்ஷிண்யாவிடம் பணிவு வந்து ஒட்டிக்கொண்டது. தன்னெதிரே பணிவாய் நின்ற தக்ஷிண்யாவைக் கண்களால் பருகிக்கொண்டிருந்தான் ருத்ரதேவ்.

    “ஆமா சார்” வெண்ணெய்யாய் வழுக்கியபடி அடுத்த நொடியே பதில் வந்தது.

    “ஐ வாண்ட் டு கோ தேர் டுமாரோ... ஷால் யூ கம் வித் மீ?”

    “இட்ஸ் இம்பாசிபிள் சார்... ரிசார்ட்டுக்கு வர்றவங்களுக்கு ஊர் சுத்திக் காட்டுறது என்னோட வேலை இல்ல” வெண்ணெய் குரல் இப்போது மிளகாய்பொடி காரத்துக்குத் தாவியது.

    “பட் நான் ஒன்னும் உங்க ரிசார்ட்டுக்கு வந்தவன் இல்ல... இந்த ரிசார்ட் ஓனரோட மேரேஜுக்கு வந்திருக்குற அவனோட குளோஸ் ஃப்ரெண்ட்... இப்ப உங்களுக்குப் புரிஞ்சிருக்கும்னு நினைக்குறேன்” என்றான் ருத்ரா சீண்டும் விதமாக.

    அவனது சீண்டலில் பொறுமைச்சாலி என்று பெயரெடுத்த தக்ஷிண்யாவுக்கே கோபம் வந்துவிட்டது. அன்றைய நாளில் மட்டும் நான்காவது முறையாக அவனுக்கென பிரத்தியேக கவனிப்பு வேண்டுமென்பதை வெவ்வேறு விதமாகக் கூறிவிட்டான் ருத்ரதேவ்.

    தொடர்ந்து படிக்க

    https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?threads/🌞மலர்-5🌸.3835/
    ஹாய் ஃப்ரெண்ட்ஸ்
    மரம் தேடும் மழைத்துளி அத்தியாயம் 31

    அபிமன்யூ சலிப்புடன் "விடுங்க ப்ரோ. இந்த பொண்ணுனு இல்லை, எந்தப் பொண்ணா இருந்தாலும் அவங்க பின்னாடி ஒரு பையன் வர ஆரம்பிச்சதும் அவனைச் சுத்த விடுறதுல அவங்களுக்கு ஒரு ஆனந்தம். ஆனா இந்த ஸ்ராவணி இருக்காளே , இவ குயின் ஆஃப் ஆட்டிட்டியூட். ரொம்ப ஓவரா பண்ணுறா. போனா போறா ப்ரோ. எனக்கு இவளை விட்டா வேற ஆளா இல்ல?" என்று விரக்தியுடன் சொல்லிவிட்டுத் திரும்ப அந்த வீட்டுக்குள் இருந்து மஞ்சள் நிற சுடிதாரில் வெளியே வந்தாள் ஒரு இளம்பெண்.

    அவளைக் கண்ட அபிமன்யூவின் விழிகள் விரிய அவன் வாய் தானாக "வாவ்! வாட் அ கேர்ள்!" என்று சிலாகிக்க சிபு யாரைச் சொல்கிறான் இவன் என்ற எண்ணத்துடன் திரும்பிப் பார்க்க அந்த மஞ்சள் சுடிதார் அதற்குள் அவன் அருகில் வந்துவிட்டாள்.

    சிபு அபிமன்யூவின் கண் முன்னே கையை ஆட்ட அவன் சுயநினைவுக்கு வந்தான். அபிம்னயூ சிபுவின் அருகில் நின்ற மஞ்சள் சுடிதாரிடம் கையை நீட்ட அவளுக்குப் பதிலாக ஒரு முறைப்புடன் சிபுவே அவனது கையை இறுக்கமாகப் பற்றிக் கொண்டான்.

    அபிமன்யூ அவனது செய்கைக்கான அர்த்தம் புரியாமல் கேள்வியாக அவனைப் பார்க்க சிபு கண்ணைச் சுருக்கியபடி அவனைப் பார்த்து "மீட் மை வைஃப் மனு" என்று சொல்ல அந்த மஞ்சள் சுடிதார் அணிந்த பெண் "ஹலோ ப்ரோ" என்றதும் அபிமன்யூ ஒரு அசட்டுச்சிரிப்புடன் சிபுவை பார்த்தான்.

    அவள் சிபுவின் புறம் திரும்பி "எல்லாரும் உள்ளே வந்தாச்சு. நீ மட்டும் இங்க என்னடா பண்ணுற ஏலியன்? சார் யாரு உன்னோட ஃப்ரெண்டா?" என்று கேட்க சிபு அவளின் தலையில் தட்டிவிட்டு

    "கொஞ்சம் மூச்சு விட்டுக்கோ சோடாபுட்டி. மூச்சு விடாம பேசி இந்த
    சின்ன வயசுல என்னை விதவனா மாத்திட்டு போய் சேர்ந்துடாதே" என்றுச் சொல்லி விட்டு கண்சிமிட்ட அவள் கோபத்துடன் அவன் காதில் மிதித்துவிட்டு உள்ளே சென்றாள்.

    "ஆவ்! ஏய் சோடாபுட்டி! நீ செத்தடி" என்று ஒற்றைக்காலை பாதி தூக்கித் தடவிக் கொடுத்தவன் தன் அருகில் நின்ற அபிமன்யூவை ஒரு பார்வை பார்த்தவாறு "என்ன எம்.எல்.ஏ யோசனை பலமா இருக்கு? இப்போ அந்த பொண்ணு கிட்ட பேசணும், அவ்ளோ தானே" என்று கேட்க அபிமன்யூ உற்சாகத்துடன் தலையாட்டினான்.

    தொடர்ந்து படிக்க

    https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?threads/🖊️துளி-31👑.3826/
  • Loading…
  • Loading…
  • Loading…
Top Bottom