• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.
Nithya Mariappan
Reaction score
2,889

Profile posts Latest activity Postings About

  • ஹாய் ஃப்ரெண்ட்ஸ்
    பரிதி தீண்டிய பனிமலரே அத்தியாயம் 12

    “யாரை அண்ணினு சொன்ன மகா?” என்ற லலிதாவின் குரல் கணீரென வாயிலில் ஒலித்தது.

    மகாதேவ் அமர்ந்த வேகத்தில் துள்ளிக் குதித்து எழுந்தவன் “நானா? நான் யாரை அண்ணினு சொல்லப் போறேன் அத்தை?” என்று படபடக்க

    “நீ தான் சொன்ன... இதோ இப்ப தான்... யார் கிட்ட பேசிட்டிருந்த நீ?” என்று அவர் கேட்கவும் அவனது படபடப்பு சற்று அடங்கியது.
    அப்படி என்றால் தான் பேசியது ருத்ரதேவிடம் என்று லலிதாவுக்குத் தெரியவில்லை. இதை இப்படியே சமாளிப்போமென்று எண்ணியபடியே

    “என்னோட படிச்ச ஃப்ரெண்டோட அண்ணா கிட்ட தான் பேசிட்டிருந்தேன் அத்தை... அவருக்கு மேரேஜ் ஆகிடுச்சு... அதான் ஊட்டிக்கு வர்றப்ப நம்ம ரிசார்ட்ல தங்கணும்னு சொன்னேன்” என்று திக்கித் திணறி சொல்லி முடித்தான்.

    ஆனால் லலிதா அவன் கூறியதை நம்பியது போல தெரியவில்லை.
    “அப்ப யாரை சமாதானப்படுத்துறோம்னு சொன்ன?” என்று சந்தேகமாக கேட்டார் அவர்.

    மகாதேவ் திருதிருவென விழிக்கவும் அவரது சந்தேகம் ஊர்ஜிதமாகிவிட “என்னடா என் கிட்ட எதையாச்சும் மறைக்கிறியா?” என்று அதட்டலாய் கேட்டார்.

    அவனோ “அவரோடதுலவ் மேரேஜ் அத்தை... அதான் அவங்க ஃபேமிலிய சமாதானம் பண்ணி வைக்குறோம்னு சொன்னேன்” என்றான்.

    தொடர்ந்து படிக்க

    https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?threads/🌞மலர்-12🌸.4051/
    ஹாய் ஃப்ரெண்ட்ஸ்
    பரிதி தீண்டும் பனிமலரே அத்தியாயம் 10

    தக்ஷிண்யா கேலரியைத் திறந்து புகைப்படங்களைப் பார்வையிட ஆரம்பித்த போது ‘மகா காலிங்’ என்று வரவும் அவள் ஒரு கணம் திகைத்தாள்.

    யார் இந்த மகா? இவனுக்கும் மகாவுக்கும் என்ன தொடர்பு? பைத்தியக்காரத்தனமான கேள்விகள் மடமடவென எழ “யார் கால் பண்ணுறாங்க?” என்று கேட்ட ருத்ரதேவிடம் முகம் இறுக மொபைலின் தொடுதிரையைக் காட்டினாள் அவள்.

    “யாரோ மகானு ஒரு பொண்ணு”
    சொல்லும் போதே அவள் குரலில் இருந்த கடுப்பை ருத்ரதேவ் கண்டுகொண்டான்.

    உதட்டை மடித்துப் பீறிட்ட சிரிப்பை அடக்கிக் கொண்டவன் காதில் மாட்டியிருந்த ப்ளூடூத்தின் வழியே பேச ஆரம்பித்தான்.
    “சொல்லு டியர்! திடீர்னு என்ன என்னோட ஞாபகம்?”

    அவன் இவ்வாறு கேட்கவும் அருகே இருந்த தக்ஷிண்யா அதிர போனின் மறுமுனையில் பேசிக்கொண்டிருந்த அவனது இளைய சகோதரன் மகாதேவோ தமையன் ஏன் இவ்வாறு பாசத்தைப் பொழிகிறான் என்று புரியாமல் “அண்ணா நீங்க என்னையா டியர்னு சொன்னிங்க?” என்று கேட்டு உறுதிபடுத்திக் கொண்டான்.
    ருத்ரதேவ் மீண்டும் பீறிட்ட சிரிப்பை உதட்டுக்குள் புதைத்துக் கொண்டான்.

    “ஆமா டியர்... ஏன் நான் உன்னை டியர்னு கூப்புட்டதே இல்லையா?”
    தக்ஷிண்யா அதிர்ச்சியில் கண்களை விரித்துப் பார்த்துவிட்டு பின்னர் கடுப்புடன் சாலையைப் பார்க்க ஆரம்பித்தாள்.

    “பக்கத்துல நான் இருக்குறப்பவே யாரோ ஒருத்திய டியர்னு கூப்புடுறான்... இந்த லெட்சணத்துல பிலீவ் மீ தக்ஷினு கொஞ்சல் வேற... இனிமே நீ கொஞ்சுடா, ஏன்டா கொஞ்சுனோம்னு உன்னை ஃபீல் பண்ண வைக்குறேன்”

    மனதிற்குள் பொருமித் தீர்த்தவள் ருத்ரதேவின் கொஞ்சல்மொழிகள் எல்லையைக் கடக்கவும் காதுகளைப் பொத்திக் கொண்டாள்.
    அவனோ வெகு கவனமாக “என்னாச்சு தக்ஷி?” என்று கேட்க

    “குளிர் ஓவரா இருக்கு... அதான் காதைப் பொத்திக்குறேன்” என்றாள் அவள் கடுப்பை மறைக்காமல்.
    ருத்ரதேவ் பொய்யான ஆச்சரியத்தைக் காட்டினான்.

    “அச்சச்சோ! எப்பிடி குளிரும்? டோர் எல்லாமே குளோஸ் பண்ணிருக்கு... ஏ.சி கூட போடலையே தக்ஷிம்மா”

    “மண்ணாங்கட்டி தக்ஷிம்மா” என்று மனதிற்குள் சொல்லிக்கொண்டு பற்களைக் கடித்தாள்.

    அதே நேரம் மறுமுனையில் தமையன் பேசுவதைக் கேட்டுக்கொண்டிருந்த மகாதேவோ அவனது இயல்புக்கு மாறாக யாரோ ஒரு பெண்ணிடம் தழைந்து பேசுவதைக் கேட்டுவிட்டு ஆச்சரியத்தின் உச்சத்திற்கு சென்றுவிட்டான்.

    “அண்ணா நீங்களா யாரோ ஒரு கேர்ள் கிட்ட இவ்ளோ அன்பா பேசுறீங்க?”

    “ஏன்டா நான் பேசக்கூடாதா?”

    “சேச்சே! நீங்க தாராளமா பேசலாம்” என்று மகாதேவ் கூற

    “ஓ! நான் பேசுறதுக்குக் கூட உன் பெர்மிசனைக் கேக்கணுமா பெரிய மனுசா?” என்று கிடுக்குப்பிடி போட்டான் ருத்ரதேவ்.

    தொடர்ந்து படிக்க

    https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?threads/🌞மலர்-10🌸.3996/
    ஹாய் ஃப்ரெண்ட்ஸ்
    பரிதி தீண்டிய பனிமலரே அத்தியாயம் 9

    தக்ஷிண்யா தன்னை மேலும் கீழுமாகப் பார்த்துக் கொண்டவள் “ஏன் இந்த ஷேரிக்கு என்ன?” என்று கேட்க

    “இந்த ஷேரிக்கு எந்தக் குறையும் இல்ல... பட் ஃபங்சன் மோடுக்கு ஏத்த ட்ரஸ் இது இல்ல” என்றான் ருத்ரதேவ் உதட்டைப் பிதுக்கி.

    “இது என்ன எனக்கு நடக்குற மெஹந்தி ஃபங்சனா? ஜோக் பண்ணாம போங்க” என்று சொல்லிவிட்டு தனது வேலையைக் கவனிக்கத் திரும்பியவளை வேகமாக கரம் பற்றி தன்னோடு இழுத்துக் கொண்டவன் அவள் திகைப்பதையும் சுற்றி முற்றி பார்ப்பதையும் கண்டுகொள்ளவில்லை.

    “இந்த ஐடியா நல்லா இருக்குதே... பைசா செலவு இல்லாம நம்மளும் மெஹந்தி நைட் செலிப்ரேட் பண்ணலாமே” என்று கண்ணைச் சிமிட்ட

    “விளையாடாதிங்க ருத்ரா... எனக்கு வேலை இருக்கு” என்று அவனிடமிருந்து விடுபடுவதிலேயே குறியாக நெளிந்தாள் தக்ஷிண்யா.

    ருத்ரதேவ் நாணம் மேலிட கூறியவளைப் பார்த்தபடி “வாய் தான் போகணும்னு சொல்லுது... பட் கண்ணு இருக்குதே அது என்ன சொல்லுது தெரியுமா?” என்று நிறுத்த

    “என்ன சொல்லுது?” என்றாள் அவள்.

    “டேய் மடையா, இவ்ளோ டிஸ்டன்ஸ் விட்டு ஏன்டா நிக்குற? உன்னை மாதிரி ஒரு சாம்பாரை போய் லவ் பண்ணுறேன் பாருனு என்னைத் திட்டுது தக்ஷி”

    “அஹான்! கண்ணு திட்டுதா? இப்ப பாருங்க, என் கை கொட்டும்”

    சொன்னதோடு அவன் தலையில் குட்ட பெருவிரலை ஊன்றி அவள் எக்கி கரத்தை உயர்த்தவும் சேலையின் மஞ்சள் வண்ண பார்டர் விலகி வெண்ணிற இடை ருத்ரதேவின் பார்வைக்குச் சிக்கியது.

    கண்கள் ரசனையுடன் அவளை நோட்டமிடுகையிலேயே கரங்கள் இடையை வளைத்து அவளை இன்னும் தன்னோடு நெருக்கி அணைத்துக் கொண்டது.

    தொடர்ந்து படிக்க
    https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?threads/🌞மலர்-9🌸.3978/
    ஹாய் ஃப்ரெண்ட்ஸ்
    பரிதி தீண்டிய பனிமலரே அத்தியாயம் 8

    “தனியா வாழுறதுக்குப் பேர் வாழ்க்கை இல்ல மேடம்... உங்களுக்குனு லைஃப் பார்ட்னர் எங்கயாச்சும் பிறந்திருக்கலாம்... இந்நேரம் சிக்ஸ் ஃபீட்டுக்கு வளர்ந்திருக்கலாம்... இவ்ளோ ஏன், அவன் உங்க பக்கத்துல நின்னு உங்க கூட பேசிக்கிட்டு கூட இருக்கலாம்... அவனைப் பத்தியும் கொஞ்சம் யோசிக்கலாமே... இல்லனா வயசுப்பையனை சந்நியாசியாக்குன பாவம் உங்களுக்குத் தான் வந்து சேரும்”

    அவன் கூறி முடிக்கவும் புன்னகைத்தாள் தக்ஷிண்யா.

    சரியாக அந்நேரத்தில் மின்சாரம் துண்டிக்கப்பட வெளியே மழைக்கு அலங்காரமாக அவ்வபோது ஜொலித்த மின்னலின் ஒளி சாளரம் வழியே வீட்டுக்குள் நுழைந்து மழைநேரத்து காரிருளையும், மின்சாரத்துண்டிப்பு பிரசவித்த இருட்டையும் விரட்ட முயன்றது.
    கூடவே இடியோசை வேறு!

    தக்ஷிண்யா சாளரத்தின் அருகே நின்று கொண்டாள். சோவென பெய்யும் மழையை ரசித்தபடியே தன்னிடம் இவ்வளவு நேரம் அரட்டையடித்த ருத்ரதேவிற்கு பதிலடி கொடுக்க ஆரம்பித்தாள்.

    “நிழல்ல இருக்குறவங்களுக்கு வெயிலோட கொடுமை தெரியாது... உங்களை மாதிரி பெரிய ஃபேமிலியில இருக்குறவங்களுக்கு என்னை மாதிரி உறவுகளால புறக்கணிக்கப்பட்டவளோட உணர்வுகள் புரியுறது ரொம்ப கஷ்டம் சார்... யாரால நான் இந்த பூமிக்கு வந்தேனோ அவங்களே என்னை நிராகரிச்சப்ப என்னால எந்த உறவுகளையும் நம்ப முடியல... இப்ப உறவுகள் எல்லாமே ரீப்ளேஸ்மெண்ட் பாலிசியோட தான் உருவாகுது... இன்னைக்கு நான் ஒருத்தரை லைஃப் பார்ட்னரா செலக்ட் பண்ணுனா கூட நாளைக்கு என்னை ரீப்ளேஸ் பண்ணுறதுக்கு ஒரு ஆள் வந்ததும் ஹீ வில் அபேண்டன் மீ... அப்ப தனியா நின்னு கஷ்டப்படுறதுக்குப் பதிலா எந்த உறவுகள்லயும் சிக்காம இப்பிடியே இருந்துட்டுப் போறேன்”

    கிட்டத்தட்ட கருங்கல் போல உணர்ச்சிகளற்று இறுகிக் கிடந்தது அவள் முகம்.

    ருத்ரதேவ் பெருமூச்சொன்றை விட்டுக் கொண்டான்.

    தொடர்ந்து படிக்க

    https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?threads/🌞மலர்-8🌸.3938/#post-26764
    ஹாய் ஃப்ரெண்ட்ஸ்
    மரம் தேடும் மழைத்துளி அத்தியாயம் 34

    அபிமன்யூ "சரி விட்டுத் தள்ளுங்க. மேனகா....அதானே உன்னோட பேரு" என்று கேட்க மேனகா ஆமென்று தலையசைத்தாள்.

    அவன் வாயெல்லாம் பல்லாக "எனக்கு மட்டும் பொண்ணு பிறந்துச்சுனா அதுக்கு மேனகானு தான் பேர் வைப்பேன். நீ என்னோட குலதெய்வம் மாதிரிமா. உன்னால தான் இவ்ளோவும் நடந்திருக்கு" என்று சொல்ல

    அவள் குழம்பியவளாய் "நான் என்ன பண்ணுனேன்?" என்க அபிமன்யூ அவளைப் பார்த்து சிரித்தவன் நடந்ததை விளக்க ஆரம்பித்தான் மகிழ்ச்சியுடன்.

    "நீ தானே தெய்வமே எனக்கும் வனிக்கும் மேரேஜை ரிஜிஸ்டர் பண்ணுனது. இப்போ பாரு நானும் காதல்ல விழுந்து அவ கிட்ட பிரபோஸும் பண்ணிட்டு வந்துட்டேன். இந்த பெருமை எல்லாமே உன்னைத் தான் சேரும் மேனகா. இதுக்கு கைமாறா எனக்கும் வனிக்கும் பொண்ணு பொறந்தா உன் பேரை தான் வைப்பேன்" என்று சொல்ல

    மேனகா கிண்டலாக "நீங்க தானே சொல்லிருக்கிங்க! வனி இன்னும் ஓகே சொல்லிருக்க மாட்டாளே" என்று சொல்லிவிட்டு அவனை நக்கலாகப் பார்த்தாள்.

    அபிமன்யூ "அவளுக்கு சம்மதம் இல்லாம தான் கிஸ் பண்ண அலோ பண்ணுனாளாக்கும்? அட போம்மா!" என்று சாதாரணமாகச் சொல்ல

    மேனகா அதிர்ந்து போய் "என்னது கிஸ்ஸா? ஏய் என்னோட வனியை என்னடா பண்ணுன?" என்று கண்ணை உருட்டி மிரட்டியபடி கேட்டாள்.

    அபிமன்யூ தோளைக் குலுக்கியபடி "நான் ஒன்னுமே பண்ணலயே! ஜஸ்ட் ஒரு லி..." என்று ஆரம்பிக்க அஸ்வின் அவன் சொல்ல வருவதுப் புரிந்தவனாய் அவன் வாயை பொத்தினான்.

    "போதும்டா. இதுக்கே இவளுக்கு ஹார்ட் அட்டாக் வந்திருக்கும். இன்னும் ஏதாச்சும் சொல்லி வச்சேனு வையேன், வீணா கொலை கேஸ்ல உள்ளே போயிடுவ" என்று அவனைப் பேச விடாமல் செய்தவன் மேனகாவின் புறம் திரும்பினான்.

    "நீ இன்னும் இங்கே என்ன பண்ணுற? போய் உன் ஃப்ரெண்டைப் பாரு" என்க அவள் வேகமாக ஸ்ராவணியைத் தேடி ஓடினாள்.

    அஸ்வின் அபிமன்யூவின் தோளில் அடித்தவன் "ஏன்டா அவ கிட்ட போய் கிஸ் அது இதுனு சொல்லுற. பாரு அவ என்னவோ ஏதோனு பயந்து ஓடுறா" என்று சொல்ல அபிமன்யூ அவனை ஆச்சரியத்துடன் பார்த்துவிட்டு காரை எடுக்கச் செல்ல காரைத் திறந்து உள்ளே அமர்ந்தான் அஸ்வின்.

    தொடர்ந்து படிக்க
    https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?threads/👑துளி-34🖊️.3926/
    ஹாய் ஃப்ரெண்ட்ஸ்
    பரிதி தீண்டிய பனிமலரே அத்தியாயம் 7

    “ஹாய் அங்கிள்” என்று பூவாய் சிரித்தவளின் சிகையைக் களைத்து விட்டவன் முட்டிக்காலிட்டு நின்றான்.

    “அங்கிள் உனக்காக ஒரு கிப்ட் வாங்கிட்டு வந்திருக்குறேன்... என்னனு சொல்லு பாப்போம்”

    ஆரோஹி மோவாயில் ஆட்காட்டி விரலால் தட்டியபடி மேலே பார்த்து யோசித்தவள் “சாக்லேட்டா?” என்று கண்கள் பளபளக்க கேட்க

    “சாக்லேட்லாம் ஒரு கிப்டா?” என்று பதிலுக்கு அவளிடம் கேட்டான் அவன்.

    “ஐஸ் க்ரீம்?”

    “ம்ஹூம்”

    “டாய்ஸா?”

    “வாவ்! கரெக்டா கண்டுபிடிச்சிட்டியே” என்று பாராட்டியபடியே அவளிடம் அந்தப் பரிசை நீட்டினான்.

    அதை பார்த்ததும் ஆரோஹியின் கண்கள் மகிழ்ச்சியில் விரிந்தது.
    காவி வண்ண தொட்டியில் நிற்கும் பச்சை நிற கள்ளி செடி பொம்மை தான் அது. அதில் இருக்கும் பொத்தானை அழுத்தினால் பதிவு செய்யப்பட்ட பாடலுடன் அந்தக் கள்ளிச்செடி நடனம் ஆடும். அதை ‘டேன்சிங் கேக்டஸ் (Dancing Cactus)’ என்பார்கள்.

    ஆரோஹி சந்தோசமாக அதை வாங்கிக்கொண்டவள் “தேங்க்யூ அங்கிள்” என்க

    “டோண்ட் கால் மீ அங்கிள்... அது நல்லா இல்ல... அதுக்குப் பதிலா அழகு தமிழ்ல மாமானு கூப்பிடணும்... சரியா?” என்று கொஞ்சலாக கட்டளையிட சிறுமியும் அவனை மாமா என்று அழைத்து நன்றி சொல்லிவிட்டு டேன்சிங் கேக்டஸுடன் அறைக்குள் ஓடி மறைந்தாள்.

    அங்கே நடந்த அனைத்தையும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த தக்ஷிண்யா அவனை விசாரணைப்பார்வை பார்த்தாள்.

    “ஏன் இப்பிடி போலீஸ் ஆபிசர் அக்யூஸ்டை பாக்குற மாதிரி லுக் விடுறிங்க?”

    “இதெல்லாம் நீங்க செய்யணும்னு என்ன அவசியம்?”

    “அவசியமில்லை தான்... ஆனா அப்பாவை தொலைச்சிட்டு அந்தக் குழந்தை அழுதது என் கண்ணுக்குள்ளவே நின்னுச்சு... நீங்க வேற வேண்டாவெறுப்பா அவளை உங்க ஃப்ரெண்ட் கூட அனுப்பி வச்சீங்க”

    “எக்ஸ்யூஸ் மீ! மைண்ட் யுவர் வேர்ட்ஸ்... நான் வேண்டாவெறுப்பா நடந்துக்கிட்டேனு நீங்க பாத்திங்களா?”

    தொடர்ந்து படிக்க

    https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?threads/🌞மலர்-7🌸.3908/
    ஹாய் ஃப்ரெண்ட்ஸ்
    மரம் தேடும் மழைத்துளி அத்தியாயம் 33

    ஸ்ராவணிக்கு குளிர் தன் வேலையைக் காட்ட ஆரம்பிக்க நாடி நடுங்கிப் பற்கள் தந்தியடிக்க ஆரம்பித்தன. கையைக் கட்டிக் கொண்டுத் தேய்த்தபடியே மவுனமாக தன் முகத்தைப் பார்த்தபடி சிலையாய் நின்றவனிடம் "நீ சொல்ல வேண்டியதை சீக்கிரமா சொல்லு. எனக்கு குளிர் ஒத்துக்காது" என்றாள் சிரமத்துடன்.
    அபிமன்யூ அதைக் கேட்டதும் வேகமாக தன்னுடைய கோட்டைக் கழற்றியபடி அவள் அருகில் வர அவள் பதறியவளாய் "ஏய் மிஸ்டர் என்னயா பண்ணுற? அங்கேயே நில்லு" என்றாள் மிரட்டும் தொனியில்.

    அவள் சொன்ன விதத்தில் சிரித்தவன் மனதிற்குள் "இந்தப் பொண்ணுங்க சிந்தனை ஏன் இப்பிடி வினோதமா இருக்கு கடவுளே" என்று எண்ணிக் கொண்டான்.

    பின்னர் கேலியாக "ஹலோ மேடம் நான் வேற எந்த இண்டென்சனோடவும் உன் பக்கத்துல வரல. குளிருதுனு சொன்னல்ல, அதான் கோட்டை உனக்குக் குடுக்கலானு வந்தேன்" என்று விளக்கம் சொல்ல

    ஸ்ராவணி நாக்கைக் கடித்தபடி "ஏன் வனி உன் மூளை இப்பிடிலாம் யோசிக்குது?" என்று அவளையே நொந்து கொண்டபடி "அது எனக்கும் தெரியும். உன் கோட் ஒன்னும் எனக்கு தேவை இல்ல மேன். நீ விஷயத்தைச் சொல்லிட்டு கிளம்பு" என்று எப்படியோ சமாளித்து வைத்தாள்.

    அபிமன்யூ நம்பாத பாவனையுடன் தலையாட்டிவிட்டு "இந்தக் கோட்டைப் போட்டுக்கோ வனி. உனக்கு குளிராது" என்று மீண்டும் சொல்ல அவள் விட்டேற்றியாக "நான் போட்டுக்க மாட்டேன்டா" என்று சொல்லிவிட்டு கையைக் கட்டிக்கொண்டாள்.

    அவளது நாடி நடுங்குவதைக் கண்டவன் பெரூமுச்சு விட்டபடி "சரி! நானும் எவ்ளோ நேரம் தான் நல்லப் பையனா நடிக்குறது? இப்போ நீ கோட்டை வாங்கிப் போட்டுகலனு வையேன், நானே என் கையாலே போட்டுவிட வேண்டியதா இருக்கும். எப்பிடி வசதி?" என்று புருவம் தூக்கிப் பார்த்தபடி அவள் அருகில் வர
    அவள் திகைத்தவளாய் சில அடிகள் பின்னோக்கி நகர்ந்துவிட்டு அவன் கையிலிருந்த கோட்டை வெடுக்கெனப் பிடுங்கிப் போட்டுக் கொண்டாள்.

    அதைப் போட்டதும் அவனுக்கே உரித்தான புளூடே பெர்ஃபியூமின் மணம் நாசியைத் தாக்குவதை உணர்ந்தவள் அவனை முறைத்தவாறு "இப்போ சந்தோசமா?" என்று கேட்க

    அபிமன்யூ இரண்டு கைகளையும் விரித்தவனாய் "ரொம்ப சந்தோசம் ரிப்போர்ட்டர் மேடம். உங்க பிடிவாதத்தைச் சமாளிக்க இந்த டெக்னிக் எனக்கு ஃபியூச்சர்ல உதவியா இருக்கும் போல" என்றான் குறும்பாக.

    அதைக் கேட்ட ஸ்ராவணி பதில் சொல்ல முடியாமல் மலங்க மலங்க விழிக்க முதல் முறையாக அவளை வாய்ப்பேச்சில் வென்ற மகிழ்ச்சியுடன் நின்றான் அபிமன்யூ.

    தொடர்ந்து படிக்க

    https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?threads/🖊️துளி-33👑.3892/
    ஹாய் ஃப்ரெண்ட்ஸ்
    பரிதி தீண்டிய பனிமலரே அத்தியாயம் 6

    தக்ஷிண்யாவுக்கு ஏழு வயது ஆரோஹியிடம் எந்த விரோதமும் இல்லை. அதே நேரம் அவளைத் தன்னுடன் தங்க வைத்து வளர்க்குமளவுக்குப் பெரிய மனதும் இல்லை.

    மனதைக் கல்லாக்கிக் கொண்டவள், தான் பேசப் போவது அநியாயமான வார்த்தைகள் என்பதை அறிந்திருந்தாலும் வேறு வழியின்றி பேச ஆரம்பித்தாள்.

    “இங்க பாருங்க, நீங்களோ உங்க ஒய்போ என்னை கேட்டா ஆரோஹிய பெத்துக்கிட்டீங்க? காலம் போன காலத்துல உங்களோட பிசிக்கல் அர்ஜ்காக ஒரு குழந்தைய பெத்து அதை என் தலையில கட்டப் பாக்குறீங்களா?”

    அவளது வார்த்தைளில் கமல்நாத்திற்கு சுரீரென கோபம் வர “தக்ஷி...” என்று ஆவேசத்துடன் கை ஓங்கி விட்டார். தக்ஷிண்யா அவரை முறைத்தவள்

    “என்ன கோவம் வருதா? உள்ளதை சொன்னா உங்களுக்கு ஏன் வலிக்குது? நல்லா கேட்டுக்கோங்க, உங்களோட சுமைய என்னால சுமக்க முடியாது... இப்பவே ஆரோஹிய அழைச்சிட்டு இங்க இருந்து கிளம்புங்க... இல்லைனா செக்யூரிட்டிய கூப்பிட்டு கழுத்தைப் பிடிச்சு வெளிய தள்ள வேண்டியதா இருக்கும்” என்றாள்.

    தொடர்ந்து படிக்க

    https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?threads/🌞மலர்-6🌸.3870/
    ஹாய் ஃப்ரெண்ட்ஸ்
    மரம் தேடும் மழைத்துளி அத்தியாயம் 32

    அபிமன்யூ ஒரு சிறுவனிடம் விளையாடிக் கொண்டிருந்தவன் "இங்கே என்ன பண்ணிட்டு இருக்கிங்கடா?" என்ற ஸ்ராவணியின் குரலில் திரும்பினான்.

    எப்போதும் போல எளிமையான அலங்காரத்தில் மிளிர்ந்தவளின் காதில் ஆடிய ஜிமிக்கியில் பதிந்தது அவனது கவனம்.

    ஸ்ராவணியோ தான் பேசிக் கொண்டிருக்கும் போது தன்னைக் கவனிக்காமல் வேறு எங்கேயோ பார்த்தவனின் கண் முன் சொடக்கிட்டவள் "நான் இங்கே நிக்கிறேன்டா. உனக்கு அங்கே என்ன பார்வை?" என்று கேட்க

    அவன் அந்த ஜிமிக்கியில் பார்வையைப் பதித்தவாறே "வாவ்! பியூட்டிஃபுல்" என்று சொல்ல ஸ்ராவணி குழப்பத்துடன் பின்னால் திரும்பி பார்க்கவும் அங்கே விஷ்ணுவின் தங்கை ஸ்ரீநிதி வரவும் சரியாக இருந்தது.

    அஸ்வின் இந்த விபரீதத்தை உணர்ந்து எச்சரிக்கும் முன்னரே ஸ்ராவணி கடுப்புடன் "சை! நீயெல்லாம் திருந்தவே மாட்ட. உன் கண்ணுக்கு ஆம்பிளைங்கல்லாம் தெரியவே மாட்டாங்களா? எப்பிடியோ போ" என்றவாறு வாயிலை நோக்கிச் செல்ல அபிமன்யூ குழப்பமடைந்தான்.

    "அச்சு! இப்போ நான் என்ன சொல்லிட்டேனு இவ கோவப்பட்டுட்டு போறா?" என்க அஸ்வின் அவன் தாடையைப் பற்றி அவனது பார்வை இவ்வளவு நேரம் இருந்த இடத்தை சுட்டிக்காட்ட அங்கே நின்று கொண்டிருந்த ஸ்ரீநிதியைக் கண்டதும் அவனுக்கு விஷயம் புரிந்துப் போனது.

    "டேய் அம்மா சத்தியமா நான் அந்தப் பொண்ணைப் பாக்கலடா. நான் வனியோட ஜிமிக்கியை தான் பார்த்தேன். எனக்கு மட்டும் ஏன்டா இப்பிடி நடக்குது?" என்று ஆதங்கத்துடன் பேச

    அஸ்வின் "இதுக்கே பொங்குனா எப்பிடி? இன்னும் நீ வாங்க வேண்டியது எவ்ளோ இருக்கு!" என்று கேலி செய்தான்.

    தொடர்ந்து படிக்க

    https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?threads/🖊️துளி-32👑.3848/
    ஹாய் ஃப்ரெண்ட்ஸ்
    பரிதி தீண்டிய பனிமலரே அத்தியாயம் 5

    கதவைத் தட்டியவன் சில நொடி தாமதத்திற்கு பிறகு கதவைத் திறந்த தக்ஷிண்யாவைக் கண்டதும் கோல்கேட் புன்னகையுடன் “ஹாய்” என்றான்.

    அவனை அந்நேரத்தில் அங்கே எதிர்பார்க்காத தக்ஷிண்யா தனது திகைப்பை முகத்தில் காட்டிவிட வந்த வேலையை ஆரம்பித்தான் ருத்ரதேவ்.

    “இங்க ஜூலா புல்னு ஒரு பிரிட்டிஷ் பீரீயட் தொங்குபாலம் இருக்குதாமே”

    அவனது இக்கேள்வியில் தக்ஷிண்யாவுக்குப் பற்றிக்கொண்டு வந்தது. இதை கேட்க தான் இந்நேரத்தில் தூங்கவிடாமல் கதவைத் தட்டினானா?

    கண்களை இறுக மூடித் திறந்தவள் “இதை கேக்குறதுக்குத் தான் வந்தீங்களா சார்?” என்று வினவ

    “அனுதீப் தான் எனக்கு என்ன வேணும்னாலும் எந்த நேரத்துலையும் உங்களை காண்டாக்ட் பண்ணலாம்னு சொன்னான்” என சாதுவைப் போல காட்டிக்கொண்டு கூறினான் அவன்.

    அனுதீப்பின் பெயரைக் கேட்டதும் தக்ஷிண்யாவிடம் பணிவு வந்து ஒட்டிக்கொண்டது. தன்னெதிரே பணிவாய் நின்ற தக்ஷிண்யாவைக் கண்களால் பருகிக்கொண்டிருந்தான் ருத்ரதேவ்.

    “ஆமா சார்” வெண்ணெய்யாய் வழுக்கியபடி அடுத்த நொடியே பதில் வந்தது.

    “ஐ வாண்ட் டு கோ தேர் டுமாரோ... ஷால் யூ கம் வித் மீ?”

    “இட்ஸ் இம்பாசிபிள் சார்... ரிசார்ட்டுக்கு வர்றவங்களுக்கு ஊர் சுத்திக் காட்டுறது என்னோட வேலை இல்ல” வெண்ணெய் குரல் இப்போது மிளகாய்பொடி காரத்துக்குத் தாவியது.

    “பட் நான் ஒன்னும் உங்க ரிசார்ட்டுக்கு வந்தவன் இல்ல... இந்த ரிசார்ட் ஓனரோட மேரேஜுக்கு வந்திருக்குற அவனோட குளோஸ் ஃப்ரெண்ட்... இப்ப உங்களுக்குப் புரிஞ்சிருக்கும்னு நினைக்குறேன்” என்றான் ருத்ரா சீண்டும் விதமாக.

    அவனது சீண்டலில் பொறுமைச்சாலி என்று பெயரெடுத்த தக்ஷிண்யாவுக்கே கோபம் வந்துவிட்டது. அன்றைய நாளில் மட்டும் நான்காவது முறையாக அவனுக்கென பிரத்தியேக கவனிப்பு வேண்டுமென்பதை வெவ்வேறு விதமாகக் கூறிவிட்டான் ருத்ரதேவ்.

    தொடர்ந்து படிக்க

    https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?threads/🌞மலர்-5🌸.3835/
  • Loading…
  • Loading…
  • Loading…
Top Bottom