• Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
    - legal team, Ezhilanbu Novels
  • கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.
Nithya Mariappan
Reaction score
3,263

Profile posts Latest activity Postings About

  • #இனியாவின்இறுதிநிமிடங்கள் EPI 6

    “இனியாவோட பி.எம் ரிப்போர்ட்ல நிறைய குளறுபடி நடந்திருக்கு இன்ஸ்பெக்டர்… எனக்கு சீஃப் டாக்டர் மேல சந்தேகம்… அதை பத்தி பேச தான் உங்களை இங்க வரச் சொன்னேன்”

    “சொல்லுங்க சார்… என்ன சந்தேகம் உங்களுக்கு?”

    “அந்தப் பொண்ணு இனியாவோட உடம்புல இருந்து ஃபாரன்சிக் டீம் எடுத்த ஃபிங்கர் ப்ரிண்ட்ஸ்ல மேக்சிமம் கண்டாமினேட் ஆகிடுச்சு…. பயாலஜிக்கல் எவிடென்ஸ், டி.என்.ஏ வச்சு டெஸ்ட் பண்ணுனப்ப உங்களோட சஸ்பெக்ட்ஸ் கூட அது மேட்ச் ஆகல... இனியா கேஸ்ல இனிமே டேரக்ட் எவிடென்ஸ் கிடைக்குறது கஷ்டம் சார்… முக்கியமான விசயம் என்னனா அந்தப் பொண்ணோட ஜெனிட்டல்ல கிடைச்ச செமன், ஸ்பெர்ம் எவிடென்ஸ் ஒருத்தரோடது இல்ல… அன்பார்சுனேட்லி இனிமே அந்த செமன் எவிடென்ஸை வச்சும் அக்யூஸ்ட் யாருனு கண்டுபிடிக்க வாய்ப்பில்ல… காலம் கடந்து போயிடுச்சு சார்”

    மார்த்தாண்டன் அதிர்ந்து போனார்.

    “வாட் டூ யூ மீன்?”

    “இனியா வாஸ் ப்ரூட்டலி ரேப்ட் அண்ட் கில்ட் பை மோர் தன் ஒன் பெர்சன்”

    மருத்துவர் சொன்னதும் அடுத்ததாக வழக்கில் முளைத்த திருப்புமுனையைப் பார்த்து மலைத்துப் போனார் மார்த்தாண்டன். இனியாவின் தந்தையும் கிளாராவும் இந்தக் குற்றத்தில் ஏதோ ஒருவகையில் சம்பந்தப்பட்ட நபர்களாக இருக்க வேண்டுமானால் வாய்ப்புள்ளது. ஆனால் குற்றத்தில் ஈடுபட்டவர்களாக அவர்கள் இருக்க வாய்ப்பேயில்லை.

    https://ezhilanbunovels.com/nandhav...-மாரியப்பனின்-இனியாவின்-இறுதி-நிமிடங்கள்.381/

    #நித்யாமாரியப்பன்
    #இனியாவின்இறுதிநிமிடங்கள் எபி 5

    “இங்க எதுக்கு வந்திங்க ஃபாதர்?”

    “ராக்கியை பலவந்தமா நீங்க போலீஸ் ஸ்டேசனுக்கு இழுத்துட்டு வந்ததா எனக்குச் செய்தி கிடைச்சுது இன்ஸ்பெக்டர்”

    ஆமா… ரோஷண் மாட்டிக்கக்கூடாதுனு ராக்கி சி.சி.டி.வி ஃபூட்டேஜை டெலீட் பண்ணிருக்கான்… இனியாவோட மர்டர்ல ராக்கிக்கும் சம்பந்தம் இருக்கும்னு எனக்கு டவுட்”

    “இதுக்குலாம் உங்க கிட்ட ஆதாரம் இருக்குதா இன்ஸ்பெக்டர்?”

    “இருந்த ஆதாரத்தை ராக்கி அழிச்சிட்டானே”

    “நீங்க மர்டரரைக் கண்டுபிடிக்க முடியாத ஏமாற்றத்தை ராக்கி கிட்ட காட்டுறிங்களோனு எனக்குச் சந்தேகமா இருக்கு… நான் இதை இப்பிடியே விடப்போறதில்ல… எம்.எல்.ஏ மூலமா மூவ் பண்ணுறேன்”

    பாதிரியார் பவுலின் வளர்த்த பாசம் அவரை அப்படி பேச வைத்துவிட்டது. அவர் தன் மீது போட்ட பழியில் மார்த்தண்டன் வெகுண்டெழுந்தார்.

    “ஷட்டப்… என் ஸ்டேசனுக்கு வந்து உங்க இன்ஃப்ளூயன்சை காட்டி அக்யூஸ்டை தப்பிக்க வைக்கப்பாக்குறிங்கனு என்னாலயும் சொல்ல முடியும் ஃபாதர்… இந்தப் பசங்க மேல அப்பிடி என்ன ஸ்பெஷல் கேர் உங்களுக்கு? சர்ச் ஃபாதர் கிட்ட வளர்ந்தவன்ல ஒருத்தன் சாத்தானைக் கும்பிட்டு நரபலி குடுக்குறான், இன்னொருத்தன் போதைக்கு அடிமையானவன்… இந்த மாதிரி ரெண்டு தறுதலைங்களுக்குச் சப்போர்ட் பண்ணி உங்க மரியாதைய கெடுத்துக்காதிங்க ஃபாதர்… உங்களை மாதிரி ஆளுங்களால தான் இனியா போல அப்பாவி பொண்ணுங்க மரணத்துக்கு நியாயம் கிடைக்குறதுல சிக்கல் வருது”

    பாதிரியார் பவுல் மார்த்தாண்டனின் கோபத்தைக் கண்டு வாயடைத்துப் போனார்.

    பின்னர் நிதானமாக “ரோஷண் மேல உங்க சந்தேகம் நியாயமானது… ஆனா ராக்கி பாவம்… போதைக்கு அடிமையாகி வழிமாறிப்போனவனை ரொம்ப கஷ்டப்பட்டு நான் நல்வழிப்படுத்தி காலேஜுக்கு அனுப்பிட்டிருக்கேன் இன்ஸ்பெக்டர்… அவன் மனம் திருந்தி வாழுற பையன்… ரோஷணையும் திருத்திடணும்னு அடிக்கடி என் கிட்ட சொல்லுவான்… ப்ளீஸ் இன்ஸ்பெக்டர், ஒரு அப்பாவியைக் குற்றவாளி பட்டியல்ல சேர்த்துடாதிங்க”

    மார்த்தாண்டனும் நிதானத்துக்கு வந்தார்.

    “ஓ.கே… அப்ப அந்த சி.சி.டி.வி ஃபூட்டேஜ் டெலீட் ஆனதுக்கு யார் காரணம்? ரோஷண் செவ்வாய்கிழமைல இருந்து பொன்மலைல இல்லனு சொல்லுறாங்க... அவன் உங்க யார் பார்வைக்கும் படாம இருந்திருக்கான்ங்கிறது தான் உண்மை… அதை நான் நிரூபிப்பேன்… பட் அவன் வேலைய ராக்கி தான் பாத்திருக்கான்… சோ செவ்வாய்கிழமைல ஆரம்பிச்சு புதன்கிழமை இனியாவோட பாடி அங்க யாராலயோ கொண்டு வரப்பட்ட வரைக்கும் ரெக்கார்ட் ஆனதை சி.சி.டி.வில இவனும் பாத்திருப்பான்னு தானே அர்த்தம்”

    https://ezhilanbunovels.com/nandhav...-மாரியப்பனின்-இனியாவின்-இறுதி-நிமிடங்கள்.381/

    #நித்யாமாரியப்பன்
    #இனியாவின்இறுதிநிமிடங்கள் எபி 4

    “நீ குடுக்குற செல்லத்தால தான் இவன் கெட்டுப்போயிட்டான்கா… கலிங்கராஜனோட பொண்ணை இவன் காதலிச்சிருக்கான்… அது தெரியுமா உனக்கு?”

    சாவித்திரியின் தலையில் யாரோ இடியை இறக்கினார்கள். பயத்தில் மேனி நடுங்க மகனைப் பிடித்து உலுக்க ஆரம்பித்தார்.

    “தம்பி என்னடா சொல்லுறான்? உண்மையா இதெல்லாம்? நீ இனியாவைக் காதலிச்சியா?”

    “ஆமாம்மா”

    ஏகலைவன் சிகையைக் கோதியபடி சோபாவில் தொப்பென அமர்ந்தான்.

    “அது மட்டுமில்ல… கடைசியா இவன் தான் இனியாவ காட்டுப்பாதைல பாத்திருக்கான்”

    அடுத்த இடி! இம்முறை சாவித்திரியோடு நிஷாந்தும் அதிர்ந்து போனான். யாருக்கும் தெரியாதென அவன் நினைத்த உண்மை மாமனுக்குத் தெரிந்த அதிர்ச்சி!

    நிலைகுலைந்து போனார் சாவித்திரி. கணவரின் மரணத்துக்குப் பிறகு புகுந்தவீட்டுச் சொந்தங்கள் கை கழுவியதால் விருதுநகரிலிருந்து பிறந்த ஊரான பொன்மலைக்கு வந்தவர் அவர்.

    இங்கே தனக்கும் தனது மகனுக்கும் பாதுகாப்பான வாழ்க்கை கிடைக்கும் என்ற நம்பிக்கை இருந்தது. கூடவே ஏகலைவன் இருக்கிறான் என்ற நிம்மதி.

    ஏகலைவன் உதவியால் மகனை நன்றாகப் படிக்கவைத்து நல்ல நிலைக்கு வரவைக்க வேண்டுமென போராடிக்கொண்டிருந்தவருக்கு மகனின் இந்தக் காதல் விவகாரம் பெரும் வேதனையைக் கொடுத்தது.

    “உனக்கு எப்பிடி இவங்க சந்திச்சது தெரியும் தம்பி?”

    https://ezhilanbunovels.com/nandhav...-மாரியப்பனின்-இனியாவின்-இறுதி-நிமிடங்கள்.381/

    #நித்யாமாரியப்பன்
    #சூப்பர்_ரைட்டர்_7
    #இனியாவின்இறுதிநிமிடங்கள் epi 3
    “உங்க பொண்ணுக்கு நீங்க ரோஷண்னு யாரையோ வீட்டுக்குக் கூப்பிடுறது பிடிக்கலனு பெரியவர் சொன்னாரே… யார் அந்த ரோஷண்?” தெரியாதவரைப் போல விசாரித்தார்.

    இனியாவின் சடலத்தைக் கைப்பற்றிய போதும், கான்ஸ்டபிள் விசாரித்தவரையிலும் ரோஷண் என்பவனின் நடத்தை சந்தேகத்துக்கு இடமானதாக இருந்ததால் அவனது பெயரும் சந்தேகப்படுவோர் பட்டியலில் இடம்பிடித்திருந்தது.

    அவனைப் பற்றி மார்த்தாண்டன் கேட்டது தான் தாமதம், கிளாரா கலிங்கராஜன் இருவரும் வாயை மூடிக்கொண்டார்கள்.

    “பதில் சொல்லுங்க… இல்லனா என் சந்தேகம் சரி தான்னு நீங்க ஒத்துக்கிறதா அர்த்தம்”

    கலிங்கராஜன் தட்டுத்தடுமாறி “ரோஷண் இந்த ஊர் பையன் சார்… அவன்… ஒரு கல்ட் குரூப் நடத்துறான்… அதுல சேரச் சொல்லி கேன்வாஷ் பண்ண வீட்டுக்கு வருவான்” என்றார்.

    “கல்ட் குரூப்னா? இந்தப் பில்லி சூனியம் அந்த மாதிரியா|?”

    கலிங்கராஜன் இல்லையென மறுத்தவர் கிளாராவைத் தவிப்புடன் பார்த்தார்.

    “அது… அவனும் அவனோட குரூப் ஆளுங்களும் சாத்தானை வழிபடுறவங்க... கடவுள் குடுக்காத எல்லாத்தையும் சாத்தான் குடுப்பான்னு நம்புறவங்க” என்றார்.

    “கோவில், சர்ச், மசூதி இந்த மூனு இடத்துலயும் இருக்குற கடவுள் குடுக்காததையா சாத்தான் குடுக்கப்போவுது? எம்மதமும் சம்மதம்னு ஒற்றுமையா வாழுற உங்க ஊர்ல சாத்தான் வழிபாடு நடக்குறதே எனக்கு ஆச்சரியமா இருக்கு… இதுலஅந்தக் குரூப்போட தலைவன் வேற உங்க வீட்டுக்கு அடிக்கடி வந்து போயிருக்கான்… எதுவோ நெருடுதுல்ல?”

    கணவனும் மனைவியும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டார்கள். மார்த்தாண்டன் எழுந்து கொண்டார்.

    “இன்னைக்கு ஈவ்னிங் ஸ்டேசன்ல இருந்து கால் வரும்… என்கொயரிக்கு நீங்க ஒத்துழைக்கணும்” என்று சொல்லிவிட்டுக் கிளம்பினார் அவர்.

    வாசல் வரை போனவர் “உங்க மகளோட பிரேத பரிசோதனையில எனக்கு நிறைய சந்தேகம் இருக்கு மிஸ்டர் கலிங்கராஜன்… எங்க விசாரணைக்கு அடிப்படையே இனியாவோட சடலம் தான்… கொலைகாரன் யாருனு ஊர்ஜிதம் ஆகுற வரை உங்க கிட்ட இனியாவோட சடலத்தை ஒப்படைக்கப்போறதில்ல” என்று சொல்லிவிட்டு வெளியேறினார்.

    https://ezhilanbunovels.com/nandhav...-மாரியப்பனின்-இனியாவின்-இறுதி-நிமிடங்கள்.381/

    #நித்யாமாரியப்பன்
    #சூப்பர்_ரைட்டர்_7
    #இனியாவின்இறுதிநிமிடங்கள் எபி 2

    “போலீஸ் என் மேல சந்தேகப்படுறதை பத்தி எனக்குக் கவலை இல்ல… கொடூரமா இறந்து போனவ என் மக… உங்களுக்கு அவளைப் பத்தி எப்பவும் கவலை கிடையாது.. ஆனா நான் அவ அம்மா… எனக்குக் கவலை இருக்கு… நான் போலீஸ் ஸ்டேசனுக்குப் போவேன்… பி.எம் ரிப்போர்ட் பத்தி கேப்பேன்… போலீஸ் விசாரணைல என் மகளைக் கொன்னவன் யாருனு தெரிய வந்துச்சுனா அவனை என் கையால சித்திரவதை பண்ணி கொல்லுவேன்”

    கண்களில் கொலைவெறி மின்ன கிளாரா சொல்ல கலிங்கராஜனுக்கே ஒரு நொடியில் பீதி கிளம்பியது.

    வெறிகொண்டு கத்திய கிளாராவைப் பார்த்து மிரண்டான் நித்திலராஜன். அதை கவனித்தவர் “குமாரி” என்று உரத்தக்குரலில் அழைக்க குமாரியும் வந்தார்.

    “நித்திய உங்க கூட வச்சுக்கோங்க” என மகனை அவரோடு அனுப்பி வைத்தவர் ஒரு முடிவோடு மனைவியிடம் வந்தார்.

    “இங்க பாரு கிளாரா, இப்ப வரைக்கும் இனியாவோட கொலைக்குக் காரணம் என்னனு தெரியல… அவ மரணம் குடுத்த வேதனைய நான் சுமக்க முடியாம தவிச்சிட்டிருக்கேன்… நீ வேற உன் பங்குக்கு எதுவும் பிரச்சனைல சிக்கிக்காத”

    கிளாரா அவர் என்ன சொன்னாலும் கேட்பதாக இல்லை.

    “பெத்த பிள்ளைய பதினேழு வருசம் ஒதுக்கி வச்சவன் பேச்செல்லாம் என்னால கேக்க முடியாது” என அவள் சொன்னதுதான் தாமதம் கலிங்கராஜனுக்கும் கோபம் வந்துவிட்டது.

    “வாயை மூடுடி… என்னமோ நீ அவளைப் பெத்தவ மாதிரி துடிக்குற? நீ அவளோட வளர்ப்புத்தாய் மட்டும் தான்… அவளைப் பெத்தவ என்னோட குமுதா… நான் ஏன் இனியாவ ஒதுக்கிவச்சேன்னு அரூபமா இருக்குற அவளுக்கும், என்னைப் படைச்ச ஆண்டவனுக்கும் தெரியும்… ரெண்டாவதா வந்து ஒட்டிக்கிட்ட உனக்கு அதைப் புரியவைக்கணும்னு எனக்கு அவசியமில்லடி”

    கலிங்கராஜன் சொல்லி முடித்ததும் கிளாராவின் கண்கள் உடைப்பெடுத்தன. மனதில் சொல்லவொண்ணா பாரமொன்று ஏறியமர்ந்து கொண்டது.

    ஆனால் குரலும் தடுமாறியது.

    “நான்… இனியாவ…”

    வார்த்தையை முடிக்க முடியாமல் போராடினாள் அப்பெண்மணி.

    https://ezhilanbunovels.com/nandhav...-மாரியப்பனின்-இனியாவின்-இறுதி-நிமிடங்கள்.381/

    #நித்யாமாரியப்பன்
    #சூப்பர்_ரைட்டர்_7
    #இனியாவின்இறுதிநிமிடங்கள் முதல் எபி சைட்ல போட்டாச்சு மக்களே!
    “ஊருக்குக் கெட்டநேரம் போல… ரெண்டு நாளுக்கு முன்னாடி நம்ம கலிங்கராஜன் ஐயாவோட மூத்தமக காணாம போனா… இப்ப இந்தப் பய பேய் பிசாசுனு அலறியடிச்சிட்டு ஓடி வர்றான்… முருகன் கோயிலுக்கு தைப்பூசம் நடத்துறது தடைபட்டா இப்பிடிதான் ஆகும்”

    ஒருவன் பேய் என்க, மற்றொருவரோ சாத்தான் வழிபாட்டின் விளைவு என்று கூற, இன்னும் சிலரோ கடவுளுக்குத் திருவிழா நடத்தவில்லை எனபதால் நேர்ந்த தீமை என்றார்கள்.

    ஊகம் பல நேரங்களில் உண்மையைக் கண்ணுக்குப் புலப்படவிடுவதில்லை. இப்படி அப்படி என ஊகத்தில் நேரம் கழிப்பதை விட தர்க்கரீதியாக ஆராய்ந்து ஆதாரம் திரட்டினால் ஒளிந்திருக்கும் உண்மை வெட்டவெளிச்சமாகும்.

    இத்தனை முதிர்ச்சி அங்குள்ளவர்களிடம் இல்லையே என அங்கலாய்த்த பவுல் “இன்னும் இருட்டு விலகல… விடிஞ்சதும் போய் பாத்துக்கலாம்.. அதுவரைக்கும் யாரும் காட்டுப்பாதை பக்கம் போகாதிங்க” என்றார்.,

    பாதிரியாரின் கட்டளையைச் செவிமடுத்து விடியும் முன்னர் காட்டுப்பக்கம் போகவேண்டாமென அவரவர் வீட்டுக்குப் போய்விட்டார்கள் ஊர் மக்கள்.

    பவுலுடன் இருந்த ராக்கியோ இன்னும் பயம் குறையாமல் அரற்றிக்கொண்டிருந்தான்.

    சிறிது நேரத்தில் “கூப்பிட்டிங்களா ஃபாதர்? இவன் ஏதோ பேயைப் பாத்தான்னு அஸ்மத் சொல்லிட்டிருக்கா” என்றபடி வந்தார் ரசூல் பாய்.

    “சமீபகாலமா ஊர்ல நடக்குற எதுவும் சரியில்ல ரசூல் பாய்… இப்போதைக்கு ஊர்க்காரங்க யாரையும் காட்டுக்குப் போற பாதைக்குப் போகாதிங்கனு சொல்லி வச்சிருக்கேன்… விடிஞ்சு வெளிச்சம் வரட்டும்… நம்ம கூட சிலரை அழைச்சிட்டுப் போய் அப்பிடி என்ன தான் இருக்குனு பாத்துட்டு வந்துடுவோம்” என்றார் பாதிரியார் பவுல்.

    அவர் சொன்னதற்கு தலையாட்டிய ரசூல் பாய் ராக்கியை அவநம்பிக்கையாய் ஏறிட்டார்.

    “உன் அண்ணன் ரோசண் எங்க போனான்? அவனை செவ்வாய்கிழமைல இருந்து நான் பாக்கலையே?”

    “அண்ணா… அவர்…”

    தடுமாறினான் ராக்கி. பேய் என எதையோ பார்த்து பயந்ததால் இப்படி தடுமாறுகிறான் என பாதிரியார் நினைத்துக்கொண்டார்.
    https://ezhilanbunovels.com/nandhav...-மாரியப்பனின்-இனியாவின்-இறுதி-நிமிடங்கள்.381/

    #நித்யாமாரியப்பன்
    #சுருதியோடுலயம்சேரவே PRE-FINAL
    “அந்தப் பையனுக்கு எவ்ளோ பணம் வேணும்னாலும் குடுத்துடலாம் சார்… இந்த ஆக்சிடெண்ட் விவகாரம் வெளிய வந்துச்சுனா என் மகனோட புரொபசன்ல ப்ளாக்மார்க் விழுந்துடும்”

    விஸ்மயாவின் காதில் அவரது சொற்கள் விழுந்தபோது அவர்களை நன்றாகவே நெருங்கியிருந்தாள் அவள்.

    மனோகரி சொன்னதற்கு காவல்துறை ஆய்வாளர் சம்மதம் கூறிவிட்டு விபத்துக்குள்ளான பையனிடம் விசாரிக்கச் சென்றுவிட்டார்.

    மனோகரி நிம்மதியாய் திரும்பியவர் பின்னே நின்று கொண்டிருந்த விஸ்மயாவைக் கண்டதும் திகைத்துப்போனார். அவரது முகத்தில் அடி வாங்கிய உணர்ச்சி.

    விஸ்மயா அவரையும் வித்யூத்தையும் மாறி மாறிப் பார்த்தவள் “உங்களுக்கு ஒரு பிரச்சனை வந்துச்சுனா நேர்மைய எல்லாம் தூக்கி வீசிடுவிங்கல்ல” என்றாள் எள்ளலாக.

    அவளது எள்ளல் தொனியில் மனோகரியின் முகம் கறுத்துப்போக கூனிக் குறுகிப்போனார் அவர். அவள் சொல்வது நியாயம் தானே! எப்போதும் நீதி நேர்மையென பாடம் எடுப்பவர் தன் மகன்மீது விபத்தை ஏற்படுத்திய புகார் வந்ததும் பணத்தை வைத்துக் குறுக்குவழியில் சரிகட்டியிருக்கிறார் அல்லவா!

    மனோகரி தலை குனிவதைக் கண்டு வித்யூத்தின் மனம் வருந்தியது. அதே நேரம் விஸ்மயாவிடம் அவனால் பேசவும் முடியாது. ஏனெனில் இப்போது அவளது பார்வையில் தானும் அன்னையும் இத்தனை நாட்கள் கடைபிடித்த கொள்கையைச் சமய சந்தர்ப்பத்திற்காகத் துறந்த சந்தர்ப்பவாதிகள்.

    வித்யூத்தும் மனோகரியும் மனம் நொந்து போயிருப்பதை விபின் அங்கே வந்ததும் வினயனிடம் கூறிவிட்டான். அவர்களிடம் உண்மையை ஆதாரத்துடன் தான் கூறியதை தெரிவித்தவன் மனோகரியும் வித்யூத்தும் வித்யாவிடம் மன்னிப்பு கேட்க நினைத்ததையும் சொல்லிவிட்டான்.

    மகளின் இப்போதைய பேச்சு ஏற்கெனவே நொந்து போனவர்களை இன்னும் வருத்துமே என்ற ஆதங்கம் பிறந்தது வினயனுக்கு

    “மயூ” அதட்டியபடியே எழுந்த வினயனைப் பார்வையால் அடக்கியவள் “எங்க ஃபேமிலியும் எங்கம்மாவும் அன்னைக்கு அனுபவிச்ச வேதனை எப்பிடிப்பட்டதுனு இன்னைக்கு உங்களுக்குப் புரிஞ்சிருக்கும்னு நம்புறேன்… கர்மா இஸ் பூமராங் ஆன்ட்டி… நம்ம ஒருத்தரைச் சரியா புரிஞ்சிக்காம நோகடிச்சோம்னா கர்மா பிற்காலத்துல நமக்கு ரெண்டு மடங்கு வேதனைய குடுக்கும்” என்றாள்.

    “மயூம்மா ஏற்கெனவே வேதனைல இருக்கிறவங்களை உன் பங்குக்கு வார்த்தையால காயப்படுத்தாதடா” தடுத்த தந்தையைக் கனிவுடன் பார்த்தாள்.

    தலை குனிந்து நின்றிருந்த வித்யூத்திடம் வந்தவள் அவனது மோவாயைத் தொட்டு நிமிர்த்து தன் தந்தையைக் காட்டினாள்.

    “இது தான் எங்கப்பாவோட குணம்… ஏற்கெனவே நொந்து போனவங்களை வார்த்தையால சாகடிச்சு சமாதி கட்டி அந்தச் சமாதி மேல நின்னு நாங்க நேர்மை தவறாதவங்கனு மார்த்தட்டுன நீயும் உங்கம்மாவும் இதுக்கு மேலயாச்சும் அவசரப்பட்டு யாரோட நடத்தையையும் நேர்மையையும் கேலிப்பொருள் ஆக்காதிங்க”

    வித்யூத் தனது மோவாயிலில் இருந்த அவளது கரத்தைப் பற்ற முயன்றதும் சட்டெனத் தட்டிவிட்டவள் “வாங்கப்பா போகலாம்” என்று தந்தையை அழைத்துக்கொண்டு கிளம்பிவிட்டாள்.
    https://ezhilanbunovels.com/nandhav...ித்யா-மாரியப்பனின்-சுருதியோடு-லயம்-சேரவே.375/
    #நித்யாமாரியப்பன்
    #சுருதியோடுலயம்சேரவே எபி 19
    “இப்பவே போய் என்ன பண்ண போறிங்க? அதுக்குப் பதிலா என் கூடக் கொஞ்சநேரம் டைம் ஸ்பெண்ட் பண்ணுங்க” என்றான் நிதானமாக.

    விஷாகா ஒற்றைப்புருவத்தை மட்டும் உயர்த்தி ‘அப்படியா’ என்று கேட்க இரு கண்களையும் மூடி இமைகளைக் கொட்டி ‘ஆம்’ என்று அவளது பாணியில் சைகை மொழியில் பதிலளித்தான் அவன்.

    “என்ன காரணம்னு தெரிஞ்சுக்கலாமா?” அமர்த்தலாகக் கேட்டாள் அவள்.

    “ஹேண்ட்சம்மான பையன் கூட டைம் ஸ்பெண்ட் பண்ணுறதுக்கு காரணம் வேணுங்களா மேடம்?”

    “இதுக்குப் பேர் ஓவர் கான்பிடன்ஸ்”

    கன்னத்தை உள்ளங்கையில் தாங்கி பதிலளித்தபடி தன் முன்னே இருந்த வேஃபர்ஸை கடித்தாள் விஷாகா.

    “அப்பிடி கூடச் சொல்லலாம்… எனக்கு ஓவர் கான்பிடன்சோட சேர்த்து ஃபிஷப் கார்டன் ஏரியால 3BHK ஃப்ளாட் ஒன்னு இருக்கு… தி ஃபேமஸ் மியூசிக் டைரக்டர் வித்யூத்துக்கு பி.ஏ, அசிஸ்டண்ட், செகரட்டரினு மூனு போஸ்டிங்கையும் முழுசா கவனிச்சு மாசம் எய்ட்டி ஃபைவ் தவுசண்ட் சேலரி வாங்குறேன்… வாங்குற சம்பளத்தை வேஸ்ட் பண்ணாம மியூச்சுவல் ஃபண்ட்ஸ், ஷேர் மார்க்கெட்ல இன்வெஸ்ட் பண்ணி வச்சிருக்கேன்… இப்போதைக்கு என் பேர்ல எந்தக் கடனும் இல்ல… ஹான், என் ஃபேமிலிக்கு நான் ஒரே ஒரு பையன்”

    விபின் மூச்சே விடாமல் அடுக்கி முடிக்கவும் விஷாகா இமை தட்டாமல் விழித்தாள்.

    அவளது கண் முன்னே “ஹலோ” என்று விரல்களை அவன் சொடுக்கவும் தலையை இடவலமாக உலுக்கிக்கொண்டவள் “இதெல்லாம் எதுக்கு என் கிட்ட சொல்லுறிங்க விபின்?” என்று கேட்க

    “விபின்னு நீட்டி முழக்கி கூப்பிடாம விபூனு ஷார்ட் அண்ட் ஸ்வீட்டா கொஞ்சம் லவ் கலந்து நீங்க வாழ்நாள் முழுக்க என்னைக் கூப்பிடணும்னு ஆசைப்படுறேன் விஷூ” என்றான் விபின்.

    விஷாகாவுக்கு அவனது பேச்சின் மறைபொருள் புரிந்துவிட்டது. அவன் இடத்தில் வேறு யாரேனும் இருந்திருந்தால் வேஃபர்ஸ் பறந்திருக்கும். ஆனால் கேட்பவன் விபினாயிற்றே! எனவே விஷாகாவால் உதட்டை மடித்துப் புன்னகைக்க மட்டுமே முடிந்தது.

    “நான் உங்க கிட்ட ப்ரபோஸ் பண்ணுனேன்ங்க… உங்க சிரிப்பை நான் பதிலா எடுத்துக்கலாமா?”

    “மணிரத்னம் மூவில கூட இவ்ளோ ஸ்பீடா ஹீரோ ஹீரோயின் கிட்ட ப்ரபோஸ் பண்ண மாட்டாப்ல”
    https://ezhilanbunovels.com/nandhav...ித்யா-மாரியப்பனின்-சுருதியோடு-லயம்-சேரவே.375/

    #நித்யாமாரியப்பன்
    #சுருதியோடுலயம்சேரவே epi18
    “இந்தக் காட்ஜில்லா கிட்ட இருந்து என்னை யாராச்சும் காப்பாத்துங்களேன்”

    ஜெகனின் கூக்குரல் தவறான இடத்தில் போய்க் கேட்டுத் தொலைக்க இக்காட்சியை எரிச்சலுடன் பார்த்துக் கொண்டிருந்த வித்யூத்தின் முகம் ஜிவுஜிவெனச் சிவந்தது. அவ்வளவு கோபம் போல என்று பக்கத்தில் அமர்ந்திருந்த விபின் யூகித்தான்.

    இருக்காதா பின்னே? என்ன தான் விஸ்மயாவை மறந்துவிட்டேன் என்று சாதாரணமாக இருப்பதைப் போலக் காட்டிக்கொண்டாலும் தினமும் ஒரு முறையாவது அவளது நகப்பூச்சுக்கறை படிந்த ப்ளேசரை தவறாமல் எடுத்துத் தனது மார்புக்குள் பதுக்கிவைத்துக்கொண்டு உறங்குகிறான் அல்லவா! வெளிப்பார்வைக்கு நண்பன் போட்ட நாடகத்தை எப்போதோ கண்டுகொண்டான் விபின்.

    அவன் முழு வீச்சில் விஸ்மயாவின் குடும்பத்தைப் பற்றி விசாரிக்கக் காரணமாக அமைந்ததும் அச்சம்பவம் தான்! அப்படிப்பட்டவன் நண்பனே என்றாலும் இன்னொரு ஆணுடன் விஸ்மயா தொட்டுப் பேசி விளையாடுவதைக் கண்டால் பொங்கி பொருமுவது சகஜம் தானே!

    இருவரும் இயக்குனர் ஒருவரைச் சந்திக்க அங்கே வந்திருந்தார்கள். வந்ததுமே விஸ்மயாவும் விஷாகாவும் அமர்ந்திருப்பதை நண்பர்கள் பார்த்துவிட்டார்கள். விபின் ஏதோ சொல்லவர கவனமாக அதைத் தவிர்த்தவன், விஸ்மயா ஜெகனோடு உரிமையோடு சண்டையிடவும் மனதுக்குள் புகைய ஆரம்பித்தான்.

    இருவருக்கு முன்னே காபி கோப்பைகள் வைக்கப்பட்டதும் எடுத்து உறிஞ்சிய விபின் நண்பனைப் பார்த்தவாறே, “ஷப்பா! என்ன சூடு” என்றான்.

    வித்யூத் அவனை முறைக்கவும் ஆவி பறக்கக் குடித்துக் கொண்டிருந்த காபியைச் சுட்டிக் காட்டினான் அவன்.

    “காபிய சொன்னேன்டா… நீ எதை நினைச்சு முறைச்ச?” என்று தெரியாதவனைப் போல வினவியனுக்கு பற்களைக் கடித்தபடி அலட்சியத்தோடு விஸ்மயா அமர்ந்திருந்த மேஜையைக் காட்டினான் வித்யூத்.

    ஓ! விஸ்மியா? அட விஷூ மேடமும் வந்திருக்காங்க போல… நான் போய் அவங்களுக்கு ஒரு ஹாய் சொல்லிட்டு வந்துடுறேன் நண்பா” என எழுந்தவனை வால்கனோ பார்வையால் சுட்டெரித்தவன்

    “என் முன்னாடி நீ அதுங்க கூடப் பேசக்கூடாது” என்று தடையுத்தரவு பிறப்பித்தான்.

    விபினின் முகம் அதிருப்தியில் சுளித்தது.

    “அதுங்க இதுங்கனு என்னடா அஃறிணை பேச்சு? பிடிச்சா லக்கி சார்ம்னு கொஞ்சுறதும், வேண்டானதும் அதுங்க இதுங்கனு பேசுறதும் நல்லாவா இருக்கு?” வெளிப்படையாகவே வித்யூத்தை அவன் கடிந்துகொண்டபோது மூவரும் கட்டணம் செலுத்திவிட்டு எழுந்தார்கள்.
    https://ezhilanbunovels.com/nandhav...ித்யா-மாரியப்பனின்-சுருதியோடு-லயம்-சேரவே.375/

    #நித்யாமாரியப்பன்
  • Loading…
  • Loading…
  • Loading…
Top Bottom