• Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
    - legal team, Ezhilanbu Novels
  • கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.
Nithya Mariappan
Reaction score
3,278

Profile posts Latest activity Postings About

  • ஹாய் ஃப்ரெண்ட்ஸ்
    யாரோ இவள் அத்தியாயம் 2

    “என் சுகர் குக்கிய சாப்பிட்டதுக்கு அப்புறம் உன்னால வாயை திறக்கவே முடியாதும்மா... பாரு, அத்தை கூட ஆர்வம் தாங்காம கிச்சனுக்கே வந்துட்டாங்க”

    “ஆமாடி... நீ குக்கிங்கிற பேர்ல செய்யுற வஸ்துவை சாப்பிட்டா யாராலையும் வாயைத் திறக்க முடியாது”

    “போன வாரம் கூட நான் செஞ்ச ஜிஞ்சர் பிரெட்டை ஒன்னு விடாம சாப்பிட்டியேம்மா... அந்த வாயா இப்ப நன்றி மறந்து பேசுது?”

    இனிமையாய் ஒலித்த குரலுக்குச் சொந்தக்காரி யார் என அவனுக்குத் தெரியும். அவளது பூங்கரம் ஸ்டாண்ட் மிக்சரை ஓடவிடுவதையும் அதில் இரு சொட்டுகள் பிங்க் வண்ண ஃபுட் கலரைக் கலப்பதையும் ஆர்வமாய் நோக்கின அவனது விழிகள்.

    “டண்டடன்! ஃப்ராஸ்டிங் ரெடி” என்றபடி ட்ரம்மை தூக்கியவளின் முகம் வீடியோவில் தெரிய ஆதித்யாவின் விழிகள் அந்த வதனத்தை விட்டு நகர்வேனா என சத்தியாகிரகம் செய்ய ஆரம்பித்தன.
    கேட்ச் கிளிப்பில் அடக்கிய கூந்தலில் ஒரு இழை மட்டும் அடக்கமின்றி அவள் கன்னத்தை வருடிக்கொண்டிருக்க ஃப்ராஸ்டிங்கில் ஒரு ஸ்பூன் மட்டும் எடுத்துச் சுவைத்துப் பார்த்தாள் அவள்.

    தொடர்ந்து படிக்க
    ஹாய் ஃப்ரெண்ட்ஸ்

    மரம் தேடும் மழைத்துளி அத்தியாயம் 10

    சிறிது நேரத்தில் ஐயர் வர மாப்பிள்ளை வீட்டாரும் பெண்வீட்டாரும் அமர நிச்சயதார்த்த பத்திரிக்கை வாசிக்கும் நேரத்தில் தான் அந்தக் குரல் கேட்டது.

    "நான் வர்றதுக்குள்ள யாருப்பா நிச்சயத்தை ஆரம்பிச்சது?" என்றபடி அங்கே நின்றவனை கண்டதும் ஸ்ராவணியின் முகம் குழப்பத்தை பூசிக்கொள்ள மேனகாவோ அதிர்ச்சியுடன் அவன் வருகையைப் பார்த்து சிலையானாள்.

    வழக்கம் போல அவனது யூனிஃபார்மான வெண்ணிற ப்ளெய்ட் ஷேர்ட் மற்றும் கருப்பு ஜீன்சில் நின்றவன் அபிமன்யூ தான். அவனது வருகை இருகுடும்பத்து பெரியவர்கள் மற்றும் உறவினர் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்த ரகு மற்றும் வர்தன் கையை பிசைந்தபடி நிற்க அஸ்வினுடன் மண்டபத்தினுள் நுழைந்தான் அவன்.

    தொடர்ந்து படிக்க
    ஹாய் ஃப்ரெண்ட்ஸ்
    யாரோ இவள் அத்தியாயம் 1

    “என் தங்கம்! நீ நினைச்ச மாதிரியே எல்லாம் நடக்கும்... இங்க எல்லாரையும் நானும் உன் சித்தப்பாவும் சமாளிச்சிக்கிறோம்... நீ எதை பத்தியும் யோசிச்சு பயப்படாத... உன் கூட ஆதி இருக்கான்... அவன் உன்னை பத்திரமா பார்த்துப்பான்” என்க வர்ஷாவின் கண்களில் கண்ணீர் நிரம்பியது.

    “சித்தி அப்பாவ நினைச்சா...” என்றவளுக்கு அழுகையில் குரல் கட்டிக்கொண்டது.

    அனுராதா அவளது கண்ணீரைத் துடைக்க ஆதித்யாவோ வெடிக்க ஆரம்பித்தான்.

    “அழுறதுக்கு இது டைம் இல்ல... அப்பா அம்மா ஆட்டுக்குட்டி நாய்க்குட்டினு கதை சொல்லுறதா இருந்தா நானே உன்னை பிடிச்சிட்டுப் போய் மணமேடையில ஜம்முனு மந்திரம் சொல்லிட்டிருக்கானே வில்லன், அவன் பக்கத்துல் உக்கார வச்சிடுவேன்... என் கூட வர்றதா இருந்தா தைரியமா வரணும்... சும்மா நைய்நைய்னு அழுது கடுப்பேத்த கூடாது” என்றான் அவன் சூடாக.

    வர்ஷா கண்ணீரை அவசரமாகத் துடைத்துக் கொண்டவள் மடமடவென ஆபரணங்களை கழற்றப் போக வேகமாக அவனது கரம் அவள் கரத்தில் படிந்தது.

    அதில் அவள் திடுக்கிடவும் “எதுக்கு கழட்டுற? இதை கழட்டி நீ நார்மல் அட்டயருக்கு மாறுறதுக்குள்ள முகூர்த்தத்துக்கு நாழி ஆயிடுத்துனு ஐயர் அனவுன்ஸ் பண்ணிடுவார்... இதுல்லாம் உங்கப்பா உன் கல்யாணத்துக்காக சேர்த்து வச்சது தானே... சோ தாராளமா இதை போட்டுட்டே என் கூட வா... இன் ஃபேக்ட் என் ப்ளானுக்கு நீ இந்த காஸ்ட்யூம்ல இருக்குறது தான் வசதி” என்றான் ஆதித்யா.

    தொடர்ந்து படிக்க
    ஹாய் ஃப்ரெண்ட்ஸ்

    மரம் தேடும் மழைத்துளி அத்தியாயம் 9

    "எனக்குச் சில விஷயங்களுக்கு பணம் வேணும். அதுக்காக தான் நான் இவங்களுக்கு ஸ்ராவணியை பத்திய விஷயங்களை சொல்லுறேன். இதனால பெருசா என்ன ஆக போகுது? நான் ஒன்னும் திருடவோ, கொலை பண்ணவோ செய்யலயே" என்று தன்னைத் தானே சமாதானப்படுத்தி கொண்டாள் கையிலிருந்த வைர ப்ரேஸ்லெட்டை ஆசையுடன் தடவியபடி.

    அபிமன்யூ வழக்கம் போல அவளுக்கு பணம் கொடுத்து அனுப்பி வைத்தவன் "நான் என்ன பண்ணனும்னு யோசிச்சிட்டேன் அச்சு. இனிமே அந்தக் கடவுளே நெனைச்சாலும் ஸ்ராவணி அவமானப்படுறதையோ அவ குடும்பம் தலை குனியறதையோ தடுக்க முடியாது" என்று சொல்ல அஸ்வின் அவன் தோளில் கை வைத்து தன் புறம் திருப்பினான்.

    "அபி! நீ என்ன காரியம் பண்ணுனாலும் நான் உனக்கு துணையா தான் இருந்திருக்கேன். ஆனா இந்த விஷயத்துல நீ கொஞ்சம் பொறுமையா யோசி. ஏன்னா இது ஒரு பொண்ணோட வாழ்க்கை" என்று சொல்ல

    அபிமன்யூ சீற்றத்துடன் "தென் வாட் அபவுட் அவர் டாட்? அவளால இன்னைக்கு அவர் ஜெயில்ல போய் உக்காந்திருக்காரே! அது மட்டுமா, அம்மா என் கிட்ட முகம் குடுத்து பேசி நாலு நாள் ஆகுது அச்சு. எப்பிடி இருந்த வீடு இன்னைக்கு இப்பிடி சோகத்துல மூழ்க காரணம் அந்த ஸ்ராவணி தான். நான் உன் அளவுக்கு நல்லவன் கிடையாது அச்சு. நான் நல்லவனா இருக்கவும் விரும்பல. ஏன்னா இந்த உலகத்தோட பார்வையில நல்லவன்னா முட்டாள்னு அர்த்தம். நான் முட்டாள் இல்ல. அந்த ஸ்ராவணி சந்தோசமா இருக்க போறது இன்னும் ஒரே ஒரு நாள் தான். அதுக்கு அப்புறமா அவ வாழ்க்கையில சந்தோசம்கிற வார்த்தை என்னைக்குமே நுழையாது" என்று சொல்லிவிட்டு அங்கிருந்து அகன்று கடற்கரையை நோக்கி சென்றான்.

    தொடர்ந்து படிக்க
    https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?threads/🖊%EF%B8%8Fதுளி-9👑.3006/
    ஹாய் ஃப்ரெண்ட்ஸ்

    மரம் தேடும் மழைத்துளி அத்தியாயம் 8

    அவள் அவன் இடத்தை அடைந்ததும் தலையில் வைத்திருந்த கையை எடுத்தவன் ஏளனமான உதட்டுவளைவுடன்

    "வந்துட்டிங்களா ரிப்போர்ட்டர் மேடம்" என்றபடி தரையில் இறங்கியவனின் பார்வை அவளைக் கூறுபோட ஸ்ராவணி அந்த பார்வையிலிருந்தக் கோபத்தை கறிவேப்பிலை போல ஒதுக்கி தள்ளிவிட்டாள்.

    கையை கட்டிக்கொண்டு அவனை அமர்த்தலாகப் பார்க்க அபிமன்யூ "பார்ட்டில நீ ஒருத்தனை அறைஞ்சல்ல, அப்போ நீ ரொம்ப தைரியமான பொண்ணுனு நெனைச்சேன். ஆனா இப்பிடி கேவலமா என்னோட பெர்சனல் வீடியோவை லீக் பண்ணிட்டு அந்த டென்சன்ல சுத்துற டைம் பாத்து எங்க அப்பாவையும் அரெஸ்ட் பண்ண வச்சல்ல! ஹாட்ஸ் ஆஃப் ஸ்ராவணி சுப்பிரமணியம்" என்று கை தட்ட அவளுக்குமே உள்ளே கொஞ்சம் குற்றவுணர்ச்சியாக தான் இருந்தது.

    மற்றவர்களின் சொந்த வாழ்க்கையை பட்டவர்த்தனமாக பறைசாற்றுவது அவளுக்குமே பிடிக்காத விஷயம் தான். ஆனால் அபிமன்யூவின் தந்தையைக் கட்டுப்படுத்தி அவரை சிறைக்கு அனுப்பப் போட்டத் தூண்டிலில் இரையாக வைக்க அந்த வீடியோ மட்டுமே அவள் வசம் இருந்தது.

    "நான் டெபுடி சீஃப் மினிஸ்டரா ஆக கூடாதுனு இவ்ளோ லோ லெவல்ல இறங்கி என் அப்பாவை ஜெயிலுக்கு அனுப்பிருக்கியே! இது தான் உங்க பத்திரிக்கை தர்மமா?" என்று பல்லை கடித்தபடி கேட்க

    ஸ்ராவணி சலிப்புடன் தலையை தடவிக்கொண்டவள் கேலி நிரம்பிய குரலில் “என்ன பார்த்திபன் கனவு பகல் கனவா போயிடுச்சு போலயே? எம்.எல்.ஏ சார் அதான் ரொம்ப சூடா இருக்கீங்கனு நினைக்கேன்” என்கவும் அபிமன்யூ அவளை நெருங்கி வர இருவரும் எதிரும் புதிருமாக நின்றனர்.

    ஸ்ராவணி தொடர்ந்து "நீயும், உங்க அப்பனும் சுத்தமா புத்தி இல்லாதவங்கனு நீ இப்போ பேசுறதுல இருந்தே தெரியுது. லிசன்! நான் ஒன்னும் அவரை ஜெயிலுக்கு அனுப்பல. டிபார்ட்மெண்டுக்கு அவரை பத்தி கம்ப்ளெயிண்ட் பண்ணுனேன். எனக்குக் கிடச்ச ஆதாரங்களை அவங்க கிட்ட குடுத்தேன். அவ்ளோ தான்" என்று சொல்ல அபிமன்யூ இறுகிய கைமுஷ்டியை காரில் குத்தி ஆத்திரத்தைக் காண்பித்தான்.

    தொடர்ந்து படிக்க
    ஹாய் ஃப்ரெண்ட்ஸ்

    மாயமித்ரா கதை முடிஞ்சாச்சு... நார்மல் ஃபீலிங் குட் ஸ்டோரி தான்... வெள்ளிக்கிழமை மானிங் லிங் ரிமூவ் பண்ணப்படும்... படிக்காதவங்க படிச்சிடுங்க மக்களே! தேங்க்யூ

    ஹாய் ஃப்ரெண்ட்ஸ்

    மரம் தேடும் மழைத்துளி அத்தியாயம் 7

    "ஏன் தம்பி உனக்கு இந்த வேண்டாத வேலை? அழகான குடும்பம், அன்பான மனைவினு ரொம்ப அருமையா போய்கிட்டிருக்கிற வாழ்க்கைய நீயா ஏன் சீரியஸா மாத்திக்கிற? உனக்கு ஒரு அழகான பெண்குழந்தை இருக்கிறதா பேசிக்கிறாங்க. பத்திரமா பாத்துக்கோங்க தம்பி. நாட்டுல என்னென்னவோ நடக்குது, திடீர்னு யாராவது குழந்தையை கடத்திட்டு போகவோ இல்ல அதை உலகத்தை விட்டு அனுப்பவோ கூட வாய்ப்பு இருக்கு. ஏன்னா நீங்க இருக்கிற ஃபீல்ட் அப்பிடி. பாத்து கவனமா இருந்துக்கோங்க" என்றவரின் குரலில் இருந்த ஏளனம், அகங்காரம் ஸ்ராவணிக்கு எரிச்சலை மூட்டியது.

    தொடர்ந்து அவர்கள் பேசுவதை கேட்க விஷ்ணு "சார் என் பொண்ணு, பொண்டாட்டி, குடும்பத்தை எப்பிடி பாத்துக்கணும்னு எனக்கு நல்லாவே தெரியும். இதுல நான் உங்களை மாதிரி தான். புரியலயா? நீங்க எப்பிடி அரசியல்ல எல்லா கேடித்தனமும் பண்ணிட்டு வீட்டுல இருக்கிற பொண்டாட்டி, புள்ளைங்க, கூடப்பொறந்தவருக்கு கடவுள் மாதிரி தெரியுறிங்களோ அதே மாதிரி தான் நானும். குடும்பம்னு வந்துட்டா நான் உங்களை மாதிரி கடவுளா மாறாட்டாலும் ஒரு சாதாரண மனுஷன் குடும்பத்தை காப்பாத்த என்னென்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுப்பானோ எல்லாத்தையும் எடுப்பேன். சோ அதை பத்தி நீங்க கவலைப்படவேண்டாம்" என்று பதிலடி கொடுத்தான் அவருக்கு.

    தொடர்ந்து படிக்க
    ஹாய் ஃப்ரெண்ட்ஸ்

    மாயமித்ரா அத்தியாயம் 29

    காலையில் அவன் கட்டிய புதிய மஞ்சள் கயிறும் வகிட்டில் வைத்த குங்குமமும் மின்ன அவனது தோளை உரசியபடி அமர்ந்திருந்தவளை பார்த்ததும் அள்ளிக் கொள்ள ஆவல் தான்.

    ஆனால் இன்னும் முடிக்க வேண்டிய வேலையொன்று பாக்கி இருக்கிறதே! எனவே மடிக்கணினியை அவள் புறம் திருப்பிக் காட்டியவன்

    “இந்த ப்ளாக்குக்கு பூர்ணிமா அத்தையோட நேம் வைக்கப் போறோம்... இதுக்கு ஜெயசந்திரன் மாமாவோட நேம்... அண்ட் இந்த ப்ளாக்குக்குப் பாரதிம்மாவோட நேம் வைக்கணும்னு தாத்தா சொல்லிட்டார்” என்றதும் மாயாவின் கண்கள் பனித்தது.

    “ஹேய் இப்ப என்ன நடந்துச்சுனு கண்ணு கலங்குது என் ஜூஹிக்கு?” என்று அவளின் கன்னத்தைப் பிடித்துக் கொஞ்சவும் சிரித்தவள்

    “அவங்களுக்குக் கிடைச்ச அதிகபட்ச கௌரவம் இது தான் மித்ரன்” என்றாள்.

    “ராவத் அங்கிள் அவங்க பூர்ணிமா அத்தைக்குச் செஞ்ச ஹெல்பை பத்தி சொன்னார்... ரூஹிய கன்சீவ் ஆகியிருந்தப்ப பூர்ணிமா அத்தைக்கு நடந்த ஆக்சிடெண்ட்ல அவங்க கான்சியஸ் இல்லாம போனப்ப பாரதிம்மா தான் அவங்களை ஹாஸ்பிட்டல்ல அட்மிட் பண்ணுனாங்களாம்... அவங்க மட்டும் எனக்கென்னனு போயிருந்தா பூர்ணிமா அத்தையோட சேர்ந்து ரூஹியும் உலகத்துக்கு வராமலே போயிருப்பானு அங்கிள் சொன்னதும் தாத்தா அழுதுட்டார்... யார் வேணும்னாலும் பாரதிம்மாவ வேலைக்காரி, நோய் வந்தவனு ஆயிரம் சொல்லட்டும் ஜூஹி... பட் அவங்க எங்க குடும்பத்தைப் பொறுத்தவரைக்கும் தெய்வம்... என் அத்தை, அத்தையோட வாரிசு ரெண்டு பேரையும் காப்பாத்துன அந்த தெய்வம் எனக்குக் குடுத்த வரம் தான் நீ”

    உணர்ச்சிகளைக் கட்டுக்குள் வைத்திருக்கும் அசோகமித்ரன் அப்போது கண் கலங்கி விட்டான்.

    தொடர்ந்து படிக்க
    ஹாய் ஃப்ரெண்ட்ஸ் மரம் தேடும் மழைத்துளி அத்தியாயம் 6

    அபிமன்யூ கேலியாக "சரி பார்ட்டிக்கு வந்துட்டிங்க. என்ன சாப்பிடுறிங்க? ஹாட் ஆர் கோல்ட்? ஸ்காட்ச், ரம், பிராண்டி ஆர் விஸ்கி...." என்று அவன் வரிசைப்படுத்த

    அவள் சட்டென்று "செருப்பு" என்று இறுகிய குரலில் சொல்ல அதை கேட்ட இருவரும் பெரிய நகைச்சுவையைக் கேட்டது போலச் சிரிக்க ஸ்ராவணி முகத்தைத் திருப்பிக்கொண்டாள்.

    அபிமன்யூ கிண்டலாக "செருப்புங்கிற பேருல எந்த டிரிங்க்சும் இல்லையேம்மா! நீ வேற எதாச்சும் டிரை பண்ணுறியா?" என்க
    அஸ்வினோ "மச்சி! ரிப்போர்ட்டர் மேடம்கு ரெட் ஒயின் தான் பிடிக்கும்டா" என்று சொல்ல அபிமன்யூ பொய்யாக ஆச்சரியம் காட்டினான்.

    அஸ்வின் அடக்கப்பட்ட சிரிப்புடன் "ஓகே மேடம் நான் உங்களுக்காக ரெட் ஒயின் எடுத்துட்டு வர்றேன்" என்றபடி நகர ஸ்ராவணியை நேருக்கு நேராக பார்த்தபடி நின்றான் அபிமன்யூ.

    "லுக் மேடம்! நீயும் ரொம்ப தான் டிரை பண்ணுன. பட் நோ யூஸ். இப்போ பாரேன்! நான் நினைச்சது தான் நடந்திருக்கு. உன்னால இந்த அபிமன்யூவை ஜெயிக்கவே முடியாது. ஐ வாஸ் பார்ன் டூ ரூல்" என்று கர்வமாக உரைத்தவனை பார்த்து அடக்கமாட்டாமல் சிரித்தாள் அவள்.

    "நல்ல காமெடி பண்ணுறீங்க சார். கேம் ஆஃப் த்ரோன்ஸ் ஃபேனோ? இல்ல கலீஸி டயலாக்கை பேசுறீங்களே அதான் கேட்டேன்" என்று வேண்டுமென்றே வெறுப்பேற்றியவள் அவனை கடுமையாக பார்த்தவாறே

    "நாற்காலில உக்காரணும்கிற உன்னோட ஆசைக்கு முற்றுப்புள்ளி வைக்க தான் நான் பிறந்திருக்கேன் மிஸ்டர் அபிமன்யூ பார்த்திபன். இப்போ நீ ஜெயிச்சிருக்கலாம். பட் அந்த நாற்காலி உனக்கு இல்ல" என்று சொல்லிவிட்டு கையைக் கட்டிக்கொண்டாள்.

    தொடர்ந்து படிக்க
    ஹாய் ஃப்ரெண்ட்ஸ்

    மாயமித்ரா அத்தியாயம் 28

    “இங்க பாரு ஜூஹி, அளவுக்கு மீறுன ஸ்வீட் உடம்புக்குக் கெடுதல்; அளவுக்கு மீறுன ஈகோ உறவுக்குக் கெடுதல்... ஒழுங்கா மித்ரன் கிட்ட மனசுல இருக்குறதை சொல்லிடு... ஏன்னா சொல்லாத காதல் சொர்க்கத்துல கூட சேராதாம்” என்றது மனசாட்சி.

    அதில் தைரியம் பெற்றவள் கோப்புடன் வெளியேற எத்தனித்தவனது கரத்தைப் பற்றி நிறுத்தினாள்.

    “ஐ லவ் யூ மித்ரன்”

    அதிகம் யோசிக்காமல் அலங்காரவார்த்தைகளைத் தேடாமல் மனதிலிருப்பதைக் கூறியும் விட்டாள். காதலைச் சொன்னதும் அசோகமித்ரனின் வதனம் பூரிக்கும், தன்னை முத்தமழையில் நனைப்பான், ஆலிங்கனத்தில் ஆழ்த்துவான் என்றெல்லாம் அவள் செய்திருந்த கற்பனைகள் அவனது “ஓ! ஓ.கே” என்ற பதிலில் காற்று போன பலூனைப் போல தொய்ந்து விழுந்தது.

    சொன்னவன் வெளியேறிவிட மாயா பற்களைக் கடித்தாள்.

    “எவ்ளோ ஓப்பனா நான் லவ்வை சொன்னேன்... அதுக்கு இவன் குடுக்குற ரியாக்சனை பாரேன்” என்று தன்னைச் சீண்டிய மனசாட்சியிடம் ஆதங்கப்பட்டவள் அதை அப்படியே மறைக்காது ரூஹியிடமும் அபிஜீத்திடமும் கூறிவிட்டாள்.

    தொடர்ந்து படிக்க
  • Loading…
  • Loading…
  • Loading…
Top Bottom