• Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
    - legal team, Ezhilanbu Novels
  • கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.
Nithya Mariappan
Reaction score
3,281

Profile posts Latest activity Postings About

  • #நித்யாமாரியப்பன் #மரம்தேடும்மழைத்துளி #ரீரன் #மேகதூதம்

    ஹாய் ஃப்ரெண்ட்ஸ்

    மரம் தேடும் மழைத்துளி அத்தியாயம் 5

    அபிமன்யூ கூர்மையாய் அவளைப் பார்த்தபடியே "என்னோட அனுபவப் பாடம் இந்த தேர்தல்ல இருந்து ஆரம்பிக்கும் மேடம். அப்புறம் இந்தியாவுல அரசியலறிவும் இல்லாதவங்க, சாமியார், அரசியல்வாதியோட மனைவிலாம் முதலமைச்சரா இருக்கிறப்போ, ஒரு லாயர் அண்ட் பொலிட்டிக்கல் நாலெட்ஜ் இருக்கிற நான் ஏன் எம்.எல்.ஏ ஆகக் கூடாது?" என்று முத்தாய்ப்பாய் கேட்டுவிட்டுப் புன்னகைத்தான்.

    அஸ்வினுக்கு அது விவாதம் மாதிரி தோணவில்லை. அருகில் அமர்ந்திருந்த மேனகாவிடம் "உங்க ஃப்ரெண்ட் ஏதோ பழைய பகையை மனசுல வச்சிகிட்டு என் ஃப்ரெண்டை டார்கெட் பண்ணி அடிக்குற மாதிரி இருக்கே" என்று கேட்க மேனகா அவனை முறைத்துவிட்டு தொலைகாட்சியை ரசிக்க ஆரம்பித்தாள்.

    இவ்வாறு இருவரும் அவரவர் தரப்பை விட்டுக் கொடுக்காமல் பேசி விவாதத்தின் இறுதிப்பகுதிக்கு வந்துவிட்டனர். ஸ்ராவணி பார்வையாளர்களுக்கு நன்றி தெரிவிக்க இசையுடன் அந்த விவாத நிகழ்வு முடிய நேரடி பார்வையாளர்கள் கலைய ஆரம்பித்தனர்.

    மேஜையிலிருந்த டேபை எடுத்த ஸ்ராவணியை இயக்குனர் வந்து தட்டிக்கொடுத்து வாழ்த்து தெரிவிக்க அவள் புன்னகையுடன் அதை ஏற்றுக் கொண்டாள். வெளியே வந்தவளை மேனகா ஓடிப் போய் அணைத்தாள்.

    "வனி! செமயா பேசுனடி. அந்த வருங்கால ச.ம.உ கூட பரவால்லடி. நல்லா தான் பேசுனான்" என்று அபிமன்யூவை கிண்டலடிக்க
    அந்த அறையில் நின்று கொண்டிருந்த அஸ்வின் அபிமன்யூவிடம் "இந்தப் பிள்ளைப்பூச்சிலாம் உன்னை கலாய்க்குதே மச்சான்" என்று கடுப்புடன் சொல்ல அவன் சிரித்து கொண்டே "விடுடா அச்சு!" என்று அவனை சமாதானப்படுத்திவிட்டு அவனுடன் சேர்ந்து ஸ்ராவணியை நோக்கிச் சென்றான்.

    தொடர்ந்து படிக்க
    #நித்யாமாரியப்பன் #மாயமித்ரா #மேகதூதம்

    ஹாய் ஃப்ரெண்ட்ஸ்

    மாயமித்ரா அத்தியாயம் 27

    “நான் எங்கயும் வர மாட்டேன்... பேசிக்கலி எனக்கு டே லைட்ல வெளிய சுத்துறது சுத்தமா பிடிக்காது” என்று அடம்பிடித்தபடி நகர்வேனா என்று அழிச்சாட்டியம் செய்தவளை இழுக்காத குறையாக அசோகமித்ரன் அழைத்துச் சென்ற காட்சி வீட்டினரை நகைப்பில் ஆழ்த்தியது.

    அவர்கள் சிரிக்க அசோகமித்ரனோ “ஏன் நீ ட்ராகுலாவா? இல்ல வேம்பயரா? சன்லைட் பட்டதும் பஸ்மமாகுறதுக்கு” என்று கிண்டல் செய்தபடி காரின் முன்பக்க கதவை அவளுக்காகத் திறந்துவிட்டான்.
    மாயாவோ அமர முடியாது என்பது போல கைகளை மார்பின் குறுக்கே கட்டிக்கொண்டவள் “என்னோட ஸ்கின் காம்ப்ளக்சன் டார்க் ஆகிடும் மேன்... ஒரு தடவை என் ஸ்கின் டேன் ஆச்சுனா அதை பழைய நிலமைக்குக் கொண்டு வர்றதுக்குள்ள நாக்கு தள்ளிடும்... சோ ப்ளீஸ் நீ மட்டும் தனியா போயேன்” என்றாள்.

    “கேவலமான சாக்குப்போக்கு மிசஸ் மித்ரன்... நெக்ஸ்ட் டைம் பெட்டரா சமாளிக்க ட்ரை பண்ணு” என்றவன் முன்னிருக்கையில் அவளைத் தள்ளி கதவை அடைத்தான்.

    பின்னர் அவளருகே வந்து அமர்ந்தவனை கொலைவெறியுடன் மாயா பார்க்க அவனோ அதை கண்டுகொள்ளாமல் காரைக் கிளப்பினான்.

    அவனது கார் அங்கிருந்து கிளம்பியதும் தான் ரூஹியிடம் தகவல் முழுவதுமாகத் தெரிவிக்கப்பட்டது.

    “இது தானா விசயம்? நான் கூட திடீர்னு உங்க அண்ணனுக்கு ஒய்ப் மேல பயங்கரமா லவ் வந்து அவுட்டிங் அழைச்சிட்டுப் போறாரோனு நினைச்சுட்டேன்... சை! நம்பர் ஒன் அன்ரொமாண்டிக் பெர்சன்”

    தொடர்ந்து படிக்க

    ஹாய் ஃப்ரெண்ட்ஸ்

    ஆன்லைனில் வராத என்னோட நாவல் 'ராகமஞ்சரி' புத்தகமா வந்திருக்கு மக்களே! அதோட அறிவிப்பு

    #நித்யாமாரியப்பன் #மாயமித்ரா #மேகதூதம்

    ஹாய் ஃப்ரெண்ட்ஸ்

    மாயமித்ரா அத்தியாயம் 26

    “பார்த்த உடனே நிமிண்ட தோணுற கியூட்டான மூக்கு, என்னைக் கிள்ளிப் பாரேன்னு சேலஞ்ச் பண்ணுற கன்னம், கிஸ் மீனு சொல்லாம சொல்லுற லிப்ஸ்... ஷப்பா சீட்டிங் குயின் நாளுக்கு நாள் அழகாயிட்டே போறா”

    விரல்களால் அளந்தபடியே வர்ணித்தவனின் குரல் ஹஸ்கியாய் ஒலித்தது மாயாவின் செவிகளில்.

    இனிய மாலை நேரத்தில் மனம் மயக்கும் நறுமணம் வீசும் தோட்டத்தின் நடுவே ஆடவன் ஒருவனின் அணைப்பில் கட்டுண்டு அவனது காதல் மொழிகளைக் கேட்ட போது ஒரு பெண்ணாய் மாயா மதிமயங்கி போனாள்.

    கண்களை மூடியபடியே இதழ் விரித்து பூஞ்சிரிப்பொன்றை உதிர்த்தவள் “நான் அவ்ளோ அழகா மித்ரன்?” என்று கேட்க
    “நான் சொன்ன வர்ணனை எதுவுமே தேவைப்படாத பரிசுத்தமான அழகு உன்னோடது... ஐ லவ் தட்” என்றவன் கண் மூடி நின்றவளின் இதழ்கள் விடுத்த அழைப்பைத் தற்காலிகமாக மறுத்துவிட்டு இப்போதைக்குக் கன்னம் மட்டுமே போதுமென அதில் தனது இதழ்களை அழுத்தமாகப் பதியவைத்தான்.

    அவனது இதழ் வன்மையாக கன்னத்தில் பதிந்து மாயாவுக்குள் இனிய ரசாயன மாற்றத்தை உண்டாக்கிய நொடியில் “ஐ லவ் யூ மாயா” என்று கரகரத்த குரலில் கூறி அவளை மோனநிலையில் தள்ளிவிட்டு அங்கிருந்து சென்றான் அசோகமித்ரன்.

    தொடர்ந்து படிக்க
    #நித்யாமாரியப்பன் #மாயமித்ரா #மேகதூதம்

    ஹாய் ஃப்ரெண்ட்ஸ்

    மாயமித்ரா அத்தியாயம் 26

    “பார்த்த உடனே நிமிண்ட தோணுற கியூட்டான மூக்கு, என்னைக் கிள்ளிப் பாரேன்னு சேலஞ்ச் பண்ணுற கன்னம், கிஸ் மீனு சொல்லாம சொல்லுற லிப்ஸ்... ஷப்பா சீட்டிங் குயின் நாளுக்கு நாள் அழகாயிட்டே போறா”

    விரல்களால் அளந்தபடியே வர்ணித்தவனின் குரல் ஹஸ்கியாய் ஒலித்தது மாயாவின் செவிகளில்.

    இனிய மாலை நேரத்தில் மனம் மயக்கும் நறுமணம் வீசும் தோட்டத்தின் நடுவே ஆடவன் ஒருவனின் அணைப்பில் கட்டுண்டு அவனது காதல் மொழிகளைக் கேட்ட போது ஒரு பெண்ணாய் மாயா மதிமயங்கி போனாள்.

    கண்களை மூடியபடியே இதழ் விரித்து பூஞ்சிரிப்பொன்றை உதிர்த்தவள் “நான் அவ்ளோ அழகா மித்ரன்?” என்று கேட்க
    “நான் சொன்ன வர்ணனை எதுவுமே தேவைப்படாத பரிசுத்தமான அழகு உன்னோடது... ஐ லவ் தட்” என்றவன் கண் மூடி நின்றவளின் இதழ்கள் விடுத்த அழைப்பைத் தற்காலிகமாக மறுத்துவிட்டு இப்போதைக்குக் கன்னம் மட்டுமே போதுமென அதில் தனது இதழ்களை அழுத்தமாகப் பதியவைத்தான்.

    அவனது இதழ் வன்மையாக கன்னத்தில் பதிந்து மாயாவுக்குள் இனிய ரசாயன மாற்றத்தை உண்டாக்கிய நொடியில் “ஐ லவ் யூ மாயா” என்று கரகரத்த குரலில் கூறி அவளை மோனநிலையில் தள்ளிவிட்டு அங்கிருந்து சென்றான் அசோகமித்ரன்.

    தொடர்ந்து படிக்க
    ஹாய் ஃப்ரெண்ட்ஸ்

    மாயமித்ரா அத்தியாயம் 25

    “நீங்க தானே ஹாஸ்பிட்டல் ஸ்டாஃப் கிட்ட பேசுனது”
    விவேக் தயக்கத்துடன் அசோகமித்ரனை பார்க்க அவனோ “அவர் இப்ப எங்க வீட்டு மாப்பிள்ளை தான் விவேக்... பயப்படாம நீங்க பேசலாம்” என்க அவனும் நிம்மதியுற்றான்.

    அவன் சென்றதும் அபிஜீத் அசோகமித்ரனிடம் “உன்னை நான் வேற விதமா கணிச்சிருந்தேன்... ஆனா தி கிரேட் அசோகமித்ரன் என் கணிப்புக்கு அப்பாற்பட்ட மனுசனா இருக்கான்” என்றான் புன்னகையுடன்.

    அசோகமித்ரனோ “என்னை வில்லனா இமேஜின் பண்ணிருப்ப... இப்ப நடக்குற சம்பவங்களால ஹீரோனு நினைக்குற... பட் ஒரு விசயத்த மறந்துடாத... நாங்க இன்னும் கேஸை வாபஸ் வாங்கலை... அது முப்பதாவது நாள்ல தான் நடக்கும்” என்க

    “உங்க கேஸை நீங்களே வச்சுக்கோங்க... விட்டா ஷேர் ட்ரான்ஸ்ஃபருக்கு சம்மதிக்கலனா கூட கேஸை வாபஸ் வாங்க மாட்டேன்னு மிரட்டுவீங்க போல” என்று உதட்டைச் சுழித்தாள் ரூஹி.

    “வாய்ப்பு இருக்கு” என்று அவன் கூற அதற்கு அபிஜீத் நமட்டுச்சிரிப்பு சிரிக்க ரூஹி அவனை முறைத்து வைத்தாள்.

    “சிரிக்காத அபி... உன்னை கொன்னுடுவேன்” என்றபடி அவனது கழுத்தை நோக்கி அவள் கரத்தைக் கொண்டு சென்ற நொடியில் “ஏய்” என்று விளையாட்டாக அவளை இழுத்து நிறுத்தினான் அபிஜீத்.

    அதே நொடியில் அசோகமித்ரன் அறையின் கண்ணாடி கதவை ‘சிலீர்’ என்ற சத்தத்துடன் உடைத்துக்கொண்டு வந்தது துப்பாக்கியின் தோட்டா ஒன்று.

    தொடர்ந்து படிக்க
    ஹாய் ஃப்ரெண்ட்ஸ்
    மாயமித்ரா அத்தியாயம் 24

    “உனக்கு என் மேல எவ்ளோ வன்மம்? இங்க பாரும்மா, உன்னைக் கொல்லணும்னு நினைச்சிருந்தா நான் ஏன் உன்னை இங்க வரவிட்டிருக்கப் போறேன்? எங்கப்பா அம்மாவுக்காக எப்பேர்ப்பட்ட அசிங்கத்தையும் சகிச்சுக்க மனசளவுல தயாராகிட்டுத் தான் நீ இங்க வர்றதுக்குச் சம்மதம் சொன்னேன்... நீ என் மேல சந்தேகப்படுறதை பத்தி எனக்குத் துளி கூட கவலையில்ல... ஏன்னா பூர்ணிமாவோட வளர்ப்பு கிட்ட வேற எதை எதிர்பார்க்க முடியும்?” என்கவும்

    “புத்திசாலித்தனமா பேசுறதா நினைக்காதீங்க சின்ன மாமா... அதோட எங்கம்மாவ பத்தி இன்னொரு வார்த்தை பேசுனா நல்லா இருக்காது” என்று வெடிக்க ஆரம்பித்தாள் ரூஹி.

    அபிஜீத் அவளைச் சமாதானம் செய்ய முயல கனிஷ்காவோ “உன் ஃப்ரெண்ட் கம் சிஸ்டர் வீட்டுல இருக்குற எல்லார் மேலயும் பழி போடுவா... அதை கேட்டுட்டு நாங்க சும்மா இருக்கணுமா?” என்று கொந்தளித்தாள்.

    பரசுராமனும் பரிமளாவும் இளையவர்களின் சண்டையைக் கண்டு துயரமடைய அதை கவனித்துவிட்டான் அசோகமித்ரன்.

    “இனாஃப்”

    அவனது குரல் உயரவும் மற்றவர்கள் அமைதியாயினர்.
    “ஒரு வீட்டுக்கு வாழ வந்த பொண்ணு அந்த வீட்டுல பாதுகாப்பு குறைவா ஃபீல் பண்ணுனா அந்த வீட்டுல வாழுற மனுசங்களுக்கு தான் அவமானம்... ஜூஹி இந்தளவுக்குப் பயப்படுறானா இங்க இருக்குற மனுசங்க அவளை புரொடக்டிவா ஃபீல் பண்ண வைக்கலனு அர்த்தம்... இதுக்கு நம்ம அசிங்கப்படணும்... அவ மேல கோவப்படுறது அனாவசியம்... இன்னொரு தடவையும் சொல்லுறேன், யாரும் இனிமே ஜூஹிய பத்தி குறைவா பேசக்கூடாது... அதோட இறந்தவங்களை பத்தி தரக்குறைவா பேசி உங்க தரத்தை நீங்களே இறக்கிக்காதீங்க சித்தப்பா... பூர்ணிமா அத்தை ஒன்னும் கொலை பாதகத்தைப் பண்ணிடல... தங்கச்சி தங்கச்சினு நீங்க உருகுறிங்களே இந்த சந்திரிகா அத்தைய விட பூர்ணிமா அத்தை ஆயிரம் மடங்கு நல்லவங்க... இறந்தும் நிறைய பேரோட உடம்புல அவங்க உயிர் வாழுறாங்க”

    தொடர்ந்து படிக்க
    ஹாய் ஃப்ரெண்ட்ஸ்

    மரம் தேடும் மழைத்துளி அத்தியாயம் 4

    அவன் "எனக்கு தெரிஞ்சு ஸ்ராவணிங்கிற பேருல கடந்தகாலத்துலயோ, நிகழ்காலத்துலயோ உனக்கு எந்த கேர்ள் ஃப்ரெண்டும் இல்லடா. பட் வருங்காலத்துல வர்றதுக்கு வாய்ப்பு இருக்கு" என்று கேலி பேசி ஸ்ராவணியின் பொறுமையைச் சோதித்தான்.

    அவள் கோபத்தை அடக்கியவளாய் "இப்போ என்னோட செயினை குடுக்க முடியுமா? முடியாதா?" என்று கேட்க

    அபிமன்யூ "இது உங்க செயின் தான்னு எதாச்சும் ப்ருஃப் காட்டுங்க. அதுக்கு அப்புறமா நான் இத குடுக்கலாமா வேண்டாமானு முடிவு பண்ணுறேன்" என்றான் அமர்த்தலாக.

    "இங்க பாருங்க! அன்னைக்கு நைட் டான்ஸ் பண்ணுறப்போ என்னோட செயின் கழண்டு எப்படியோ உங்க டிரஸ்ல விழுந்துருக்கு. அதை குடுத்துடுங்க" என்றாள் அமைதியான குரலில்.
    அவளின் எந்த பொருளும் அவனிடம் இருப்பது அவளுக்குப் பிடிக்கவில்லை என்பது அவளின் அந்த கசந்த குரலில் தெளிவாக தெரிய அபிமன்யூ அதைப் பற்றியெல்லாம் கவலைப்படவில்லை.

    சாதாரணமாக "யூஸ்வலா எனக்கு நைட் மீட் பண்ணுன பொண்ணோட ஃபேஸ் மார்னிங் நியாபகம் இருக்காது மேடம். நீங்க என்னைக்கு என்னை பாத்திங்கன்னு உங்களுக்கு நியாபகம் இருக்கா? இல்ல உங்களுக்கும் என்னை மாதிரியே நைட் மீட் பண்ணுனவங்களை மறந்து போற பழக்கம் இருக்கா?" என்று கேட்க அவன் கேட்ட அர்த்தத்தில் ஸ்ராவணி கோபத்தின் உச்சிக்கு சென்று விட்டாள்.

    கடுப்புடன் "அட சீ! எங்க பாட்டி அடிக்கடி சொல்லுவாங்க, நம்ம எப்பிடி இருக்கோமோ அதை வச்சு தான் மத்தவங்களை நம்ம கெஸ் பண்ணுவோம்னு. அது சரியா தான் இருக்கு. என்னை பார்த்தா உனக்கு எப்பிடி தெரியுதுடா?" என்று அவள் ஒருமைக்குத் தாவ அபிமன்யூவுக்கு அந்த கோபம் மனதுக்கு இதமாக இருக்கவே அவன் சிரித்துக் கொண்டே சோபாவில் அமர்ந்தான்.

    இரண்டு கைகளையும் வாகாக வைத்தபடி "நீ சொல்லுற மாதிரி இது உன்னோட செயினாவே இருக்கட்டுமே! நான் திருப்பித் தரப் போறது இல்ல. என் கிட்ட வந்த எந்தப் பொருளையும் திருப்பி குடுக்கிற பழக்கம் எனக்கு இல்ல" என்று சொல்லிவிட்டு அவளைப் பார்க்க

    ஸ்ராவணி "அடுத்தவங்க பொருளை சொந்தம் கொண்டாட வெக்கமா இல்ல? இனி நீயே குடுத்தாலும் எனக்கு அது வேண்டாம். நான் அதை திருப்பதி பெருமாளோட உண்டியல்ல போட்டதா நினைச்சிக்கிறேன்" என்று சொல்லிவிட்டு அறையின் கதவை அறைந்து சாத்தியபடி வெளியேறினாள்.

    தொடர்ந்து படிக்க
    #நித்யாமாரியப்பன் #மாயமித்ரா #மேகதூதம்

    ஹாய் ஃப்ரெண்ட்ஸ்

    மாயமித்ரா அத்தியாயம் 23

    ஒரு இடத்தில் நிற்காது அங்குமிங்கும் நடந்தபடி கூந்தலை உலர்த்தியவள் குளியலறையிலிருந்து வந்த போது சொட்டிய நீர்த்துளிகள் மீது கவனக்குறைவாக காலை வைத்துவிட அடுத்த நொடி வழுக்கியும் விழுந்தாள்.

    “ஐயோ”

    அவளது அலறலை கேட்டதும் அவசரமாக எழுந்து வந்த அசோகமித்ரன் தரையில் விழுந்து கிடந்தவளிடம் கரத்தை நீட்டினான்.

    “நான் விழுறப்ப வந்து தாங்கியிருந்தா நீ மனுசன்... விழுந்ததுக்கு அப்புறம் வந்து கை நீட்டுற”

    வலியில் சுளித்த முகத்துடன் அவனது வலிய கரத்தைப் பற்றிக்கொண்டவள் குறை கூறியபடியே எழுந்தாள்.

    “உனக்கு கிராவிட்டி பத்தி எதாச்சும் ஐடியா இருக்கா?”
    சம்பந்தமேயில்லாமல் புவியீர்ப்பை பற்றி அவன் கேட்கவும் ‘ஙே’ என விழித்தாள் மாயா.

    “சினிமா அதிகமா பார்ப்பியோ?” அதற்கும் ‘ஙே’ தான்.

    “இல்ல, நீ விழுறதுக்கு முன்னாடி தாங்கணும்னு சொன்னியே... சினிமால தான் கிராவிட்டி, லா ஆப் பிசிக்ஸ் பத்தி கவலைப்படாம ஹீரோயின் விழுறதை பத்து நிமிசம் ஸ்லோ மோஷன்ல காட்டி அவளை ஓடி வந்து ஹீரோ தாங்குற மாதிரி காட்டுவாங்க... ஆனா பாரு, நம்மளோடது ரியல் லைஃப்... இங்க இங்க லா ஆப் கிராவிடேசன், லா ஆப் பிசிக்ஸ் எல்லாமே அப்ளை ஆகும்”

    அவனது விளக்கத்தில் ஆயாசமுற்ற மாயா “பாவம் உன் பொண்டாட்டி” என்று உச்சு கொட்டினாள்.

    அசோகமித்ரன் சிரித்தவன் “சுய இரக்கம் நல்லது இல்ல ஜூஹி” என்று கூற

    “அச்சோ! நான் என்னை சொல்லலை... எனக்கு அப்புறம் நீ வேற ஒருத்திய மேரேஜ் பண்ணுவல்ல, அவளை நினைச்சு பரிதாபமா இருக்குனு சொன்னேன்” என்றாள் மாயா.

    “அதுக்கு வாய்ப்பே இல்லை”

    வேகமாக பதில் வந்தது அவனிடமிருந்து.

    தொடர்ந்து படிக்க
    ஹாய் ஃப்ரெண்ட்ஸ்
    மாயமித்ரா அத்தியாயம் 22
  • Loading…
  • Loading…
  • Loading…
Top Bottom