• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.
Nithya Mariappan
Reaction score
3,140

Profile posts Latest activity Postings About

  • ஹாய் ஃப்ரெண்ட்ஸ்
    மரம் தேடும் மழைத்துளி அத்தியாயம் 14

    ஸ்ராவணி அவன் அருகில் வந்தவள் "லிசன்! நான் ஆல்ரெடி கடுப்புல இருக்கேன். நீ தான் இந்த மலைமாடு சொன்ன அண்ணனா? என் கிட்ட வம்பு வச்சிக்க வேண்டானு மரியாதையா அவனுங்க கிட்ட சொல்லி வை " என்று கூறவும் அபிமன்யூ கையைக் கட்டிக் கொண்டு "அவங்களை அனுப்புனதே நான் தான்" என்று சொல்ல ஸ்ராவணி அதிர்ந்தாள்.

    "வாட்?" என்று நம்ப முடியாமல் கேட்க அவள் தள்ளிவிட்ட நாற்காலியை தன் அருகில் இழுத்து போட்டு அமர்ந்துவிட்டு

    "ஒன்னும் பெருசா இல்ல மிஸ் ஸ்ராவணி சுப்பிரமணியம்! உன்னோட வீட்டை நீ எனக்கு வித்துடு. அதுக்கு அப்புறமா இவங்க தொல்லை உனக்கு இருக்காது. வேற ஒன்னுமில்ல மேடம். எனக்கு அசெம்பிளி உங்க ஏரியால இருந்து பக்கம். அதுக்கு வசதியா ஏதாச்சும் வீடு கிடைச்சா நல்லா இருக்கும்னு தேடிட்டு இருந்தேன். அப்போ தான் உன்னோட ஃப்ளாட் கண்ணுல பட்டுச்சு. சோ நீ என்ன பண்ணுற, குட் கேர்ளா போய் அதோட பேப்பர்ஸை என் பேருக்கு மாத்திக் குடுக்கற" என்றான் சாதாரணமாக.

    ஸ்ராவணிக்கு எவ்வளவு பெரிய விஷயத்தை இவன் சாதாரணமாக கேட்கிறான் என்ற ஆதங்கம்.

    அது குரலிலும் வெளிப்பட "என்னோட வீட்டை எதுக்கு நான் உனக்கு விக்கணும்? அது எங்க அப்பாவோட உயிர். அவர் ஆசையா வாங்கி, பாத்து பாத்து ஒவ்வொரு பொருளா சேர்த்து வச்ச வீடு அது. அதை விக்க வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்ல. அப்பிடியே வந்தாலும் உன்னை மாதிரி ஒருத்தனுக்கு என்னைக்கும் விக்க மாட்டோம்" என்று சொல்லிவிட்டு நகர முயல

    அவன் அதற்குள் அவளது கையைப் பற்றி நிறுத்தியவன் "வெயிட் பேபி! நீ இப்பிடியே பிடிவாதம் பிடிச்சன்னு வையேன், இன்னைக்கு என்னோட தம்பிங்க ஜஸ்ட் குடிச்சுட்டு உன் வீட்டு முன்னாடி தான் விழுந்து கிடந்தாங்க. ஆனா நாளைக்கு என்ன வேணும்னாலும் நடக்கலாம். சப்போஸ் உங்க அம்மாக்கு பாத்ரூம்ல ஹீட்டர் போடுறப்போ கரெண்ட் ஷாக் அடிக்கலாம். இல்லனா ஆஸ்துமா கம்ப்ளைண்ட் இருக்கிற உன்னோட அப்பா போற லிப்ட் பாதியிலேயே நின்னு போகலாம்" என்று அவன் அடுக்க அவள் கையை உதறினாள்.

    தொடர்ந்து படிக்க
    ஹாய் ஃப்ரெண்ட்ஸ்
    யாரோ இவள் அத்தியாயம் 8

    “நீ அழுறியா ஜி.பி?”

    மூக்கை உறிஞ்சிய வர்ஷா மீண்டும் ஒரு முறை கீர்த்தியை நினைவுபடுத்திக்கொண்டாள்.

    “நான் அழுதாலோ சிரிச்சாலோ உனக்கு என்ன வந்துச்சு? நீ போய் உன் அத்தை மகள் கூட கொஞ்சி குலாவு”

    கோபம் ஆற்றாமை விரக்தி அழுகை என அனைத்தையும் குலைத்து சொல்லிவிட்டு கதவை அடைக்கப் போனவளின் கரத்தைப் பற்றி வெளியே இழுத்து நிறுத்தினான் ஆதித்யா.
    வர்ஷா அதிரவும் அவளைத் தனது கைப்பிடியில் நிறுத்தியவன்

    “கொஞ்சுறது குலாவுறதுக்குலாம் இன்னும் நேரம் இருக்கு... அதுக்கு முன்னாடி உன்னோட இந்தக் கண்ணீருக்கும், மணிக்கட்டுல இரத்தம் கட்டுன மாதிரி சிவந்திருக்கே இதுக்கும் காரணம் யார்னு சொல்லு” என்று விடாப்பிடியாக கேட்டான்.

    வர்ஷா நாசி துடிக்க “சா....” என்று ஆரம்பிக்க அதற்குள் “ஆதி” என்று கீர்த்தி அழைக்கும் குரல் அவள் செவிகளில் திவ்வியமாக விழுந்து வைத்தது.

    உடனே வெறி வந்தவளைப் போல அவனது பிடியை உதறியவள் “ஐ டோண்ட் நீட் யுவர் ஹெல்ப்... மைண்ட் யுவர் ஓன் பிசினஸ்” என்று கூறிவிட்டு மீண்டும் தனது அறைக்குள் புகுந்து கதவைடைத்துக் கொண்டாள்.

    தொடர்ந்து படிக்க
    https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?threads/❣️அத்தியாயம்-8❣️.3082/
    ஹாய் ஃப்ரெண்ட்ஸ்
    யாரோ இவள் அத்தியாயம் 6 & 7

    வர்ஷா இன்னும் பதில் சொல்லாமல் அமைதியாக இருக்க “அன்னைக்குச் சொன்னது தான் இப்பவும் சொல்லுறேன், எனக்கானதை சொந்தமாக்கிக்க நான் என்ன வேணும்னாலும் செய்வேன்... நவ் ஐ வாண்ட் யூ அஸ் மை லைஃப் பார்ட்னர்... உன்னோட ஸ்பரிசத்த ஃபீல் பண்ணுன இந்த கையும் நெஞ்சும் அது லைஃப் லாங் எனக்கே எனக்கு வேணும்னு அடம்பிடிக்குது... சோ ஐ அம் ஹெல்ப்லெஸ்... ஐ லவ் யூ அண்ட் யூ ஹேவ் டு லவ் மீ... இதை எவ்ளோ சீக்கிரம் நீ ஏத்துக்கிறியோ அவ்ளோ சீக்கிரம் உனக்கும் நல்லது, உன்னைச் சார்ந்தவங்களுக்கும் நல்லது” என்று அழுத்தம் திருத்தமாக உரைத்து அவளை அதிர வைத்தான் அவன்.
    வர்ஷா கண்களில் பதற்றம் பரவ அவனை ஏறிட்டாள்.

    “நீங்க என்னை மிரட்டிப் பணிய வைக்கப் பாக்குறிங்களா? இட்ஸ் சீம்ஸ் லைக் அ ப்ளாக்மெயில்”

    உடனே சிரிப்பொன்று வெளிப்பட்டது அவனிடமிருந்து.
    “அப்கோர்ஸ், இது ப்ளாக்மெயில் தான்... யூ ஹேவ் அ லவ்லி ஃபேமிலி, கியூட் ஃப்ரெண்ட்ஸ்... அவங்க எல்லாருக்கும் உன்னோட இந்தப் பிடிவாதத்தால கஷ்டம் வரக்கூடாதுனுனா நான் சொன்னதை கேளு”

    மீண்டும் கட்டளையாய் மாறிய குரலோடு எழுந்தான் சாணக்கியன். வர்ஷாவும் அதிர்ச்சியோடு எழுந்திரிக்க “நெக்ஸ்ட் டைம் ஐ வாண்ட் பாசிட்டிவ் ரிப்ளை” என்று சொல்லிவிட்டு இடத்தைக் காலி செய்தான் அவன்.

    தொடர்ந்து படிக்க
    https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?threads/❣️அத்தியாயம்-6-❣️.3073/

    https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?threads/❣️அத்தியாயம்-7❣️.3074/
    ஹாய் ஃப்ரெண்ட்ஸ்
    யாரோ இவள் அத்தியாயம் 5

    “லைஃப்ல ஃபர்ஸ்ட் டைம் ஒரு பொண்ணைப் பார்த்ததும் பைத்தியக்காரத்தனமான யோசனை மனசுல ஓடுது... ஐ திங் ஐ அம் இன் லவ் வித் யூ... நீ யாரையாவது லவ் பண்ணுனா சீக்கிரமா ப்ரேக்கப் பண்ணிடு... சப்போஸ் உனக்கு மேரேஜ் அலையன்ஸ் ஃபிக்ஸ் ஆகியிருந்தாலும் ஜஸ்ட் கால் ஆஃப் யுவர் மேரேஜ்... பிகாஸ் தி கிரேட் சாணக்கியன் லவ்ஸ் யூ”

    இப்படி ஒரு பெண்ணிடம் வணிகம் பேசுவது போல காதலைச் சொல்லலாமா என்று சாணக்கியன் யோசிக்கவில்லை. அவனது ஒவ்வொரு வார்த்தைக்கும் வர்ஷாவின் தேகம் அதிர்வதை சுவாரசியத்துடன் ரசித்துக் கொண்டல்லவா இருந்தான் அவன்.

    “சார் நீங்க இந்த மாதிரி...”

    தடுமாற்றத்துடன் அவளது உதடுகள் நடுங்குவதையும் மருண்டவளாக அவளது குரல்வளை எலும்புகள் ஏறியிறங்குவதையும் கண்ணுற்றவன்

    “ஐ டோண்ட் லைக் நெகட்டிவ் ரிப்ளைஸ்... சோ பாசிட்டிவ் ரிப்ளைய சீக்கிரமா சொன்னா நல்லா இருக்கும்” என்று அமர்த்தலாக உரைத்தவன் அங்கிருந்து வெளியேறிவிட வர்ஷாவும் அவனைத் தொடர்ந்து வெளியேறினாள்.

    இப்போதும் அவளது மருண்ட மான்விழிகள் அவனை இம்சிக்கத் தான் செய்தன. சீக்கிரம் அந்த விழிகளைத் தன் வசப்படுத்த வேண்டுமென்ற முனைப்பில் தந்தையின் எண்ணுக்கு அழைத்தான் சாணக்கியன்.

    தொடர்ந்து படிக்க

    ஹாய் ஃப்ரெண்ட்ஸ்
    மரம் தேடும் மழைத்துளி அத்தியாயம் 13

    மாலையில் ஸ்ராவணியும் மேனகாவும் வீடு திரும்பியவர்கள் அவர்களது தளத்தை அடைந்ததும் செவிப்பறை கிழியும் அளவுக்கு கேட்ட ஆங்கிலப்பாடலின் இசையில் அதிர்ந்தனர்.

    சத்தம் என்னவோ அவர்களுக்கு அடுத்த ஃப்ளாட்டான G3யிலிருந்து வர ராமன் குடியமர்த்திவிட்டு சென்ற நபர்கள் தான் இதற்கு காரணகர்த்தா என்று எண்ணியபடியே தங்களின் வீட்டிற்குள் சென்றனர்.

    காதுகளைப் கரங்களால் பொத்திக்கொண்ட மேனகா வேதாவிடம் "அத்தை எவ்ளோ நேரமா இந்தச் சத்தம் கேக்குது? யாராச்சும் போய் சொன்னாங்களா? இப்பிடியே இதைக் கேட்டுட்டே இருந்தா நம்ம எல்லாருக்கும் ஒரு கட்டத்துல பைத்தியம் பிடிச்சிடும் அத்தை" என்று சொல்ல

    அவர் "நீங்க போன நேரத்துல இருந்து இந்தக் கூத்து தான் மேகிம்மா. எனக்கு தலைவலியே வந்துடுச்சு" என்றார் தைலத்தை நெற்றியில் தடவியபடி.

    சுப்பிரமணியம் ஒரு துணியை தலையில் கட்டிக்கொண்டு தலையை தாங்கியவாறு இருக்க ஸ்ராவணி அந்தச் சத்தம் இன்னும் அதிகரித்ததில் கடுப்பானவள் விறுவிறுவென்று கதவைத் திறந்து அடுத்த ஃப்ளாட்டின் கதவு முன் நின்றவள் கதவை ஓங்கித் தட்ட கதவு திறக்கவில்லை.

    அவள் பின்னோடு வந்த மேனகாவும் சேர்ந்து கதவை தட்ட சிறிது நேரத்தில் கதவை திறந்தான் ஒரு வாலிபன். அவர்களை கேள்வியோடு நோக்கியவன் "ஏன் கதவை தட்டுனீங்க?" என்று திமிராக கேட்க

    ஸ்ராவணி கடுப்புடன் "உங்க வீட்டுல எல்லாரும் காது கேக்காம சுத்துறீங்களோ? இல்ல நான் தெரியாம தான் கேக்குறேன், உனக்குலாம் இயர் டிரம் கிழிஞ்சு போகல? இவ்ளோ லவுடா சவுண்ட் வச்சு கேட்டா தான் உங்க காதுல விழுமோ? மரியாதையா வால்யூமை கம்மி பண்ணு. உன் வீட்டுக்கு மட்டும் கேக்குற மாதிரி சத்தம் வச்சு பாட்டை கேளு. இல்லன்னு வையேன், பப்ளிக்கை டிஸ்டர்ப் பண்ணுறீங்கன்னு போலீஸ்ல கம்ப்ளைண்ட் பண்ண வேண்டியிருக்கும்" என்று விரலை நீட்டி எச்சரிக்க அவன் உள்ளே சென்று என்ன சொன்னானோ தெரியவில்லை. ஆனால் சத்தம் சுத்தமாக நின்றுவிட்டது.

    தொடர்ந்து படிக்க
    ஹாய் ஃப்ரெண்ட்ஸ்
    யாரோ இவள் அத்தியாயம் 4

    “வேண்டாம் ஆதி... விடு” என்று அவனைத் தடுக்க நினைத்து இழுத்தாள் வர்ஷா.

    “நீ சும்மா இரு... இந்த மாதிரி ஃபேக் ரிவியூ குடுக்குறவங்களால மொத்த கிரியேட்டர்சுக்கும் அவமானம்... இவன் உன்னை மிரட்டுறான்” என்று கடுப்போடு அவளை உதறினான் ஆதித்யா.
    வர்ஷா அவன் உதறியதில் தடுமாறியவள் நிலை குலைந்து சரிந்து விழ போக அவளைத் தாங்கின வலிய கரங்கள் இரண்டு. தாங்கியதோடு கண்களை இறுக மூடி இருந்தவளிடம்

    “கண்ணைத் திறந்துக்க ஏஞ்சல்... நீ இன்னும் விழலை” என்று கிசுகிசுப்பாய் மொழிந்தது ஒரு கம்பீரக்குரல்.

    வர்ஷா விழி மலரவும் அவளைத் தாங்கியிருந்தவன் இதழ் மலர்ந்தான்.

    “லுக்கிங் பியூட்டிஃபுல்” என்று ஹஸ்கி குரலில் உச்சரித்தபடி சிரித்தவனை விழி தட்டாமல் வர்ஷா நோக்கினாள். அவன் தான் சாணக்கியன்.

    ஆதித்யா சண்டையிடுவதை நிறுத்திவிட்டு வர்ஷாவின் புறம் திரும்பியவன் அவள் சாணக்கியனின் கரத்தில் சாய்ந்திருப்பதைக் கண்டதும் மனம் பொருமினான்.

    தொடர்ந்து படிக்க

    https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?threads/❣️அத்தியாயம்-4❣️.3046/
    ஹாய் ஃப்ரென்ட்ஸ்
    மரம் தேடும் மழைத்துளி அத்தியாயம் 12

    அருகில் வந்து தோளைத் தொட்ட அஸ்வின் "அபி! வீணா டென்சன் ஆகாதே! இன்னும் டூ டேய்ஸ்ல அங்கிளுக்கு ஜாமின் கெடச்சிடும்னு லாயர் சொன்னாருல. அதை நினைச்சு சந்தோசப்படு" என்று சொல்ல
    பார்வையை வெளிப்புறத்திலிருந்து விலக்கிய அபிமன்யூ தோழனை பார்த்து

    "அவர் இங்க வர்றப்போ அவருக்கு நான் குடுக்க போற கிஃப்டா அந்த ஸ்ராவணியோட தோல்வி இருக்கணும்னு ஆசைப்பட்டேன் அச்சு. ஆனா எல்லாம் வீணா போச்சு. இன்னும் அவ முகத்துல அந்தச் சிரிப்பு, திமிரு குறையாம இருக்கிறதை பாத்தாலே எனக்கு மண்டைக்குள்ள ஏதோ பண்ணுதுடா. அந்தச் சிரிப்பு சீக்கிரமா அழுகையா மாறுனா மட்டும் தான் என்னால நிம்மதியா இருக்க முடியும்" என்றான் இறுகிய குரலில்.

    தொடர்ந்து படிக்க
    ஹாய் ஃப்ரெண்ட்ஸ்
    யாரோ இவள் அத்தியாயம் 3

    பார்றா! பயப்படாத... விஷ ஊசினு சொன்னதுலாம் சும்மா விளையாட்டுக்குத் தான்... ஆனா நீ இப்பிடி ஓவர் ரியாக்ட் பண்ணிட்டு அழுது வடிஞ்சனா அது தான் நடக்கும்” என்றான் மிரட்டலாக.

    “அப்பிடிலாம் ஆர்டினரி பீபிளுக்கு டேஞ்சரான மெடிசின் கிடைக்காது”

    அவனைப் பார்க்காமலே பதிலளித்தாள் வர்ஷா.

    “ஓ! டாக்டரோட பொண்ணுனு ப்ரூவ் பண்ணுறிங்களாக்கும்? இங்க பாரு ஜி.பி, நைநைனு அழுற உன்னை ஒரேயடியா ஆஃப் பண்ணுறதுக்கு எம்ப்டி சிரிஞ்சே போதும்டி... புரியலையா? எம்ப்டி சிரிஞ்சால ஒரு குத்து குத்துனா போதும், சிரிஞ்ச்ல இருக்குற ஏர், உன்னோட வெய்ன்ல ஏர் பபிள்சை உண்டாக்கும்... கொஞ்சநேரத்துல ஏர் எம்பாலிசத்தால நீ மர் கயா ஆகிடுவ” என்றான் அவன் சளைக்காமல்.

    வர்ஷாவின் கண்களில் இப்போது பிரம்மாண்ட மிரட்சி. ஆதித்யா நமட்டுச்சிரிப்பை உதட்டுக்குள் மறைத்துக் கொண்டவன்

    “பயப்படாத... உன்னை மாதிரி பிள்ளைப்பூச்சிய கொலை பண்ணுன பாவம் எனக்கு எதுக்கு? பிறப்பும் இறப்பும் கடவுள் கையில தான் இருக்கு... அதை தனிமனுசனால தடுக்க முடியாது... இது உனக்குப் புரியலைனாலும் எனக்கு நல்லாவே புரியும்... சோ முட்டை கண்ணை உருட்டுறத விட்டுட்டு நீ வேலை பாக்குற கபேக்குப் போய் பன், பிஸ்கட்டை தீய்ச்சு எடு” என்றான்.

    தொடர்ந்து படிக்க
    ஹாய் ஃப்ரெண்ட்ஸ்
    மரம் தேடும் மழைத்துளி அத்தியாயம் 11

    சந்திரா பூனை போல மேடையிலிருந்து நழுவியவர் அபிமன்யூவிடம் வந்து "நீங்க யார் தம்பி? கண்டிப்பா எங்க சொந்தகாரங்களா இருக்க முடியாது. வனியோட சொந்தகாரங்களா?" என்று கேட்க

    அபிமன்யூ "என்னை போய் யார்னு கேட்டுட்டிங்களே ஆன்ட்டி? நான் வனியோட சொந்தகாரன்லாம் இல்ல. நான் அவளோட ஃப்ரெண்ட் ஆன்ட்டி" என்று சொல்லவும் அவர் முகம் சுளித்தார்.
    அவரது முகச்சுளிப்பைக் குறித்துக் கொண்டவன் "ஃப்ரெண்டுனா சாதாரண ஃப்ரெண்ட் இல்ல ஆன்ட்டி. நாங்க ரொம்ப குளோஸ் ஃப்ரெண்ட்ஸ். எவ்ளோ குளோஸ்னா......" என்று சொல்லி நிறுத்தவும் அவருக்கு ஆர்வம் தாங்கவில்லை.

    "என்ன தம்பி விஷயத்தை முழுசா சொல்லாம இப்பிடி பாதியிலேயே சஸ்பென்ஸ் வைக்கிறிங்க?" என்று அவர் குறைபட

    அபிமன்யூ தன் வீசிய வலையில் நன்றாக மாட்டிக்கொண்டவரை பார்த்தபடியே "அதை இங்க வச்சு சொன்னா சரி வராதே. உங்க பையன் ரூம்ல போய் சொல்லவா?" என்று கேட்க அவனது புஜத்தில் அஸ்வினின் கை அழுத்தியது.

    அபிமன்யூ அவனைப் பார்த்த பார்வையில் தான் வந்த காரியத்தை முடிக்காமல் செல்ல போவதில்லை என்ற உறுதி தெரியவே அஸ்வின் கையை எடுத்துக் கொண்டான்.

    சந்திரா அபிமன்யூவுடன் விக்ரம் இருந்த அறை நோக்கி நகர, அதே நேரம் வேதா புதிதாக வந்தவனுடன் சம்பந்தியம்மாள் செல்வதைக் கண்டு குழம்பியவர் ஸ்ராவணியும் மேனகாவும் இருந்த அறையை வந்தடைந்தார்.

    கதவைத் தட்டவும் திறந்த மேனகா "அத்தை இன்னும் பத்து நிமிஷத்துல வனி வந்துடுவா" என்று சொன்னபடி நிற்க உள்ளே வந்த வேதா பட்டுப்புடவையில் மின்னிய மகளை கண்டு நெட்டி முறித்து திருஷ்டி கழித்தார்.

    "இப்போ வந்த பையன் யாரு வனி? உன்னோட ஃப்ரெண்டா?" என்று கேட்க ஸ்ராவணியும் மேனகாவும் அவரிடம் என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் விழித்தனர்.

    தொடர்ந்து படிக்க
    ஹாய் ஃப்ரெண்ட்ஸ்
    யாரோ இவள் அத்தியாயம் 2

    “என் சுகர் குக்கிய சாப்பிட்டதுக்கு அப்புறம் உன்னால வாயை திறக்கவே முடியாதும்மா... பாரு, அத்தை கூட ஆர்வம் தாங்காம கிச்சனுக்கே வந்துட்டாங்க”

    “ஆமாடி... நீ குக்கிங்கிற பேர்ல செய்யுற வஸ்துவை சாப்பிட்டா யாராலையும் வாயைத் திறக்க முடியாது”

    “போன வாரம் கூட நான் செஞ்ச ஜிஞ்சர் பிரெட்டை ஒன்னு விடாம சாப்பிட்டியேம்மா... அந்த வாயா இப்ப நன்றி மறந்து பேசுது?”

    இனிமையாய் ஒலித்த குரலுக்குச் சொந்தக்காரி யார் என அவனுக்குத் தெரியும். அவளது பூங்கரம் ஸ்டாண்ட் மிக்சரை ஓடவிடுவதையும் அதில் இரு சொட்டுகள் பிங்க் வண்ண ஃபுட் கலரைக் கலப்பதையும் ஆர்வமாய் நோக்கின அவனது விழிகள்.

    “டண்டடன்! ஃப்ராஸ்டிங் ரெடி” என்றபடி ட்ரம்மை தூக்கியவளின் முகம் வீடியோவில் தெரிய ஆதித்யாவின் விழிகள் அந்த வதனத்தை விட்டு நகர்வேனா என சத்தியாகிரகம் செய்ய ஆரம்பித்தன.
    கேட்ச் கிளிப்பில் அடக்கிய கூந்தலில் ஒரு இழை மட்டும் அடக்கமின்றி அவள் கன்னத்தை வருடிக்கொண்டிருக்க ஃப்ராஸ்டிங்கில் ஒரு ஸ்பூன் மட்டும் எடுத்துச் சுவைத்துப் பார்த்தாள் அவள்.

    தொடர்ந்து படிக்க
  • Loading…
  • Loading…
  • Loading…
Top Bottom