• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.
Nithya Mariappan
Reaction score
3,105

Profile posts Latest activity Postings About

  • ஹாய் ஃப்ரெண்ட்ஸ்

    யாரோ இவள் அத்தியாயம் 12

    “நடந்தது என்னனு தெரியாம ரெண்டு பசங்க மேலயும் குத்தம் சொல்லாதிங்க வினயன் சார்”
    அப்போது தான் சாணக்கியனின் உதவியாளன் மொபைலுடன் ஓடிவந்தான்.

    அதை சாணக்கியனிடம் காட்டி “சார் மேடமும் அவங்க ஃப்ரெண்டும் ஏர்ப்போர்ட்ல இருக்காங்க பாருங்க” என்று காட்ட அதில் ஆதித்யாவின் வ்ளாக் வீடியோ ஓடிக்கொண்டிருந்தது.

    “ஹாய் படீஸ்! இதோ என்னோட இந்தியன் ட்ரிப் முடிஞ்சாச்சு... இந்த ட்ரிப் வ்ளாக்ல உங்களுக்கு நான் ஒரு சர்ப்ரைஸ் வச்சிருக்கேன்... அது என்னனா...” என்று நிறுத்திய ஆதித்யா அவளைத் தோளோடு அணைத்தவன் “யெஸ், இவங்க தான் அந்த சர்ப்ரைஸ்... மீட் மை ஒய்ப் மிசஸ் வர்ஷா ஆதித்யா” என்றான் புன்னகையோடு.

    சாணக்கியனுக்குள் எரிமலை வெடித்தது. அடுத்த சில நிமிடங்களில் அவனோடு கரம் கோர்த்து விமானம் ஏறப்போகும் வர்ஷாவின் கழுத்தில் மாங்கல்யம் கோர்த்த மஞ்சள் கயிறு மின்னி அவனது கோபத்தை ஆயிரம் மடங்காக்கிவிட

    “வாங்கப்பா போகலாம்... இவங்களை என்ன பண்ணணும்னு எனக்குத் தெரியும்” என்று கர்ஜித்துவிட்டு பெற்றோருடன் கிளம்பினான் அவன்.

    தொடர்ந்து படிக்க
    ஹாய் ஃப்ரெண்ட்ஸ்
    மரம் தேடும் மழைத்துளி அத்தியாயம் 17

    ஜனனி "அக்கா! அம்மாவும், அண்ணாவும் அங்கே நிக்கிறாங்க" என்று பிரகாரத்தை நோக்கி கையை காட்ட அங்கே மேனகாவுடன் சிரித்து பேசி கொண்டிருந்த ஒரு நடுத்தர வயது பெண்மணியும், அவர் அருகில் நின்றுகொண்டிருந்த அஸ்வினையும் கண்டவள்
    மெதுவாக ஜனனியிடம் "அப்போ உன்னோட அண்ணா அவரா?" என்று கேட்க அவள் ஆமென்று தலையாட்டினாள்.

    "எனக்கு மொத்தம் ரெண்டு அண்ணா. இன்னொருத்தர் பத்தி கேட்டா நீங்க அப்பிடியே ஷாக் ஆயிடுவிங்க அக்கா" என்று கண்ணை விரித்தபடி சொல்ல அவள் சொன்ன இன்னொரு அண்ணன் எவன் என்று பெயர் சொல்லும் முன்னரே ஊகித்துவிட்டாள் ஸ்ராவணி.
    ஜனனி "என்னோட இன்னொரு அண்ணா எம்.எல்.ஏ தெரியுமா? அவருக்கு தான் இன்னும் டூ டேய்ஸ்ல என்கேஜ்மெண்ட்" என்று சொல்லிக்கொண்டே நடக்க ஸ்ராவணி மனதிற்குள் அந்தக் கல்யாணப்பெண்ணுக்காக வருத்தப்பட்டு கொண்டாள்.

    "அவனை எல்லாம் கட்டி மேய்க்கப் போற அந்த பாவப்பட்ட ஜீவனுக்கு நீ தான் பெருமாளே மனதைரியத்தை குடுக்கணும்" என்று வேண்டியபடியே அவளுடன் நடந்து அஸ்வினும், சுபத்ராவும் மேனகாவுடன் நின்று கொண்டிருந்த பிரகாரத்தை அடைந்தாள் ஸ்ராவணி.

    தொடர்ந்து படிக்க
    ஹாய் ஃப்ரெண்ட்ஸ்

    இன்னைக்கான குட்டிக்கதை 👇

    ஹாய் ஃப்ரெண்ட்ஸ்

    யாரோ இவள் அத்தியாயம் 11

    அதை கேட்டதும் வர்ஷாவின் முகம் வாடியது. ஆதித்யா அதை கவனித்தவன் அவளது தோளை இடிக்க இயல்புக்கு வந்தாள்.

    “வேற யார் இதுல நமக்கு உதவி பண்ணுவாங்க?” – அனுராதா.

    “ஜேசிண்ணா கிட்ட தான் ஹெல்ப் கேக்கணும்” – ஆதித்யா.

    “ஜே.சி கண்டிப்பா ஹெல்ப் பண்ணுவார்... பிகாஸ் அவர் ஒன்னும் உன்னோட பேரண்ட்ஸ், இவளோட பேரண்ட்ஸ் மாதிரி பூமர் கிடையாது” என்றார் அனுராதா அலட்டலின்றி.

    அஜித் அவரது வார்த்தை பிரயோகத்தில் திகைத்தார்.

    “பூமரா? எங்க இருந்து இந்த மாதிரி வேர்ட்ஸை கத்துக்குற அனு?”

    “எல்லாம் நம்ம பொண்ணு கிட்ட இருந்து தான்... எப்பவும் பழைய பஞ்சாங்கத்தை பேசுற ஓல்டீசை தான் பூமர்னு இப்ப இருக்குற யங்ஸ்டர்ஸ் சொல்லுறாங்க... உங்கண்ணன், அண்ணி, எங்கண்ணன் அண்ணி, அவியண்ணா, ரியாண்ணி எல்லாருமே பூமர்ல அடக்கம்” என்று அனுராதா அசராமல் கூற அங்கே சிரிப்பலை.

    தொடர்ந்து படிக்க
    ஹாய் ஃப்ரெண்ட்ஸ்
    மரம் தேடும் மழைத்துளி அத்தியாயம் 16

    சாவகாசமாக அங்கே திகைப்புடன் நின்ற சுப்பிரமணியத்துக்கும், கையில் கரண்டியுடன் கலங்கிப் போன முகத்துடன் நின்ற வேதாவுக்கும் வணக்கத்தைப் போட்டவன்

    "ஓகே! கட்சிப்பணிகள் என்னை அழைக்குது! சோ ஐ ஹேவ் டு கோ! ரிப்போர்ட்டர் மேடம், உங்களுக்கு தெரிஞ்ச டாக்குமெண்ட் ரைட்டரையே பாருங்க. ஆனா ஒரு கண்டிசன், கண்டிப்பா நாளைக்கு ஈவ்னிங் அந்த வீடு என் பேருக்கு மாறியிருக்கணும். அண்ட் அதோட உங்க வீட்டு கும்பலுக்கும் அந்த வீட்டுக்கும் எந்தச் சம்மந்தமும் கெடயாது" என்று ஆணவத்துடன் சொல்ல சுப்பிரமணியத்தால் தன் வீட்டை யாரோ சொந்தம் கொண்டாடுவதை கேட்க முடியவில்லை.

    நெஞ்சை பிடித்தபடி வேதாவுடன் அவரின் அறைக்குச் செல்ல மேனகா நீர் நிரம்பிய விழிகளுடன் அவர்களை பார்த்தாள்.
    அபிமன்யூ பத்திரத்துடன் வெளியேற ஸ்ராவணி பதற்றத்துடன் "அடேய் அது ஒரிஜினல் டாக்குமெண்ட்" என்றபடி அவன் பின்னே ஓடினாள்.

    வெளியே அவன் காரில் ஏறுவதற்குள் அபிமன்யூவின் கையைப் பிடித்தவள் "டாக்குமென்டை குடுத்துட்டு போ" என்று சொல்ல பக்கத்துவீட்டு ஆல் இந்தியா ரேடியோக்கள் அதை வைத்த கண் வாங்காமல் பார்த்து கொண்டிருந்தன.

    மேனகா அவள் பின்னே வந்தவள் அதை கவனித்து "வனி! அந்த ஆன்ட்டிஸ் உங்களை தான் பாக்குதுங்க" என்று சொல்ல ஸ்ராவணி பதறிப் போய் கையை விலக்கிக்கொண்டாள்.


    அபிமன்யூ பத்திரத்தை அவள் வசம் கொடுத்துவிட்டு "நாளைக்கு ரிஜிஸ்டர் ஆபிஸ்ல சந்திப்போம்" என்று சொல்ல அந்தப் பக்கத்துவீட்டு பெண்மணிகள் ஆர்வத்துடன் "தம்பி! ரிஜிஸ்டர் ஆபிஸ்ல எதுக்கு சந்திக்க போறிங்க?" என்று கேட்டுவிட்டு ஸ்ராவணியை ஒரு பார்வை பார்த்து வைத்தனர்.
    அபிமன்யூ நக்கலாக "ரிஜிஸ்டர் ஆபிஸுக்கு எதுக்கு போவாங்க ஆன்ட்டி? எல்லாம் எங்க மேரேஜ் விஷயமா தான்" என்று சொல்லிவிட்டு ஸ்ராவணியை பார்த்து கண் சிமிட்டிவிட்டு காரில் ஏற அவள் கடுப்புடன் பக்கத்தில் கிடந்த செங்கல்லை அவனது கார் கண்ணாடியில் எறியப் போனாள்.

    தொடர்ந்து படிக்க
    ஹாய் ஃப்ரெண்ட்ஸ்
    நெக்ஸ்ட் குட்டிக்கதை
    ஹாய் ஃப்ரெண்ட்ஸ்
    குட்டிக்கதை போட்டு ரொம்ப நாளாச்சு... சோ இப்ப ஸ்டார்ட் பண்ணியாச்சு... இதோ லிங்க்

    #நித்யாமாரியப்பன் #மேகதூதம் #யாரோ_இவள்

    ஹாய் ஃப்ரென்ட்ஸ்

    யாரோ இவள் அத்தியாயம் 10

    ஆதித்யா நமட்டுச்சிரிப்புடன் “கம் ஆன் ஜி.பி... இன்னைக்கு பொண்ணுங்க விரும்புறது இந்த மாதிரி அடாவடி பசங்களை தான்... ஐ மீன் இப்ப இருக்குற பொண்ணுங்களுக்கு பாய் ஃப்ரம் நெக்ஸ்ட் டோர் டைப் ஹீரோவ விட ரூடா பிஹேவ் பண்ணுற ஆன்டிஹீரோவ தான் பிடிக்குதும்மா... இட்ஸ் ட்ரூ” என்றான் ஸ்டீரியரிங் வீலை வளைத்தபடி.

    “அதுல்லாம் ஸ்டாக்ஹோம் சிண்ட்ரோம் (Stockholm syndrome) இருக்குற கேஸ்களா இருக்கும்... தன்னை எப்பவும் ஒருத்தன் அடக்கி ஆளணும், உடல்ரீதியாவும் மனரீதியாவும் அவன் தன்னைக் காயப்படுத்தி ரசிக்கணும், அந்த வேதனைல அவன் மேல தான் காதல்ல விழணும்ங்கிற மாதிரி கிறுக்குத்தனமெல்லாம் ஸ்டாக்ஹோம் சிண்ட்ரோம் இருக்குறவங்களோட மெண்டாலிட்டி... பை காட்ஸ் க்ரேஸ், எனக்கு அப்பிடி எந்த சிண்ட்ரோமும் இல்ல... நான் அமைதியான பொண்ணு தான், சாது தான்... அதிர்ந்து பேசுனா கூட அழுதுடுவேன் தான்... அதுக்காக ஒருத்தன் என் விருப்பம் இல்லாமே என்னோட வாழ்க்கைல நுழையுறதுக்கு நான் அலோ பண்ண மாட்டேன் ஆதி... சாதுவான பொண்ணுனா அடாவடியான ஆம்பளையோட அடக்குமுறைக்கு விழுந்து தான் ஆகணும்னு எந்தக் கட்டாயமும் இல்லையே”

    உறுதியாகச் சொல்லிவிட்டு கரங்களை மார்பின் குறுக்கே கட்டிக்கொண்டவள் முதல் முறையாக ஆதித்யாவைப் பிரமிப்பில் ஆழ்த்தினாள்.

    தொடர்ந்து படிக்க

    #நித்யாமாரியப்பன் #மேகதூதம் #யாரோ_இவள்

    ஹாய் ஃப்ரெண்ட்ஸ்

    யாரோ இவள் அத்தியாயம் 9

    “வர்ஷா என்ன நடக்குது இங்க?” கடுமையான குரலில் அவர் கேட்கையிலேயே வர்ஷாவை அவரருகே அழைத்து வந்தான் சாணக்கியன்.

    “உங்க ஃபேஸ் ரியாக்சன், பாடி லாங்க்வேஜை பாத்தா இப்போதைக்கு நீங்க சம்மதிக்க மாட்டிங்கனு தோணுது ஆன்ட்டி... அதுக்காக என்னால காத்திருக்க முடியாது இல்லையா?” என்றவன் நிதானமாக பேண்ட் பாக்கெட்டுக்குள் கையை விட்டு நீலநிற பெட்டி ஒன்றை எடுத்தான்.

    அதை திறக்கவும் வெட்டி மின்னியது வைரமோதிரம் ஒன்று.
    என்ன நடக்கிறது என புரியாமல் வர்ஷா விழிக்கும் போதே அவள் கையின் மோதிரவிரலில் சாணக்கியனின் கரம் மோதிரத்தை அணிவித்தது.

    “அபிஷியலி, நமக்கு என்கேஜ்மெண்ட் முடிஞ்சாச்சு... இனிமே நீ என்னை விட்டு எங்கயும் போக முடியாது”

    கர்வத்துடன் அவன் அறிவிக்க வர்ஷாவோடு சேர்ந்து அங்கிருந்த கீதாவும் யோகாவும் கூட அதிர்ந்துவிட்டனர். ரியாவும் ஸ்ரீதேவியும் கோபத்துடன் அவனை ஏறிட சாணக்கியனோ வர்ஷாவை தவிர வேறு யாரும் அங்கில்லை என்ற ரீதியில் அவளை மட்டும் ரசித்துக் கொண்டிருந்தான்.

    அவள் இமை தட்டாமல் விழிப்பதை சுவாரசியத்துடன் பார்த்துவிட்டு “அப்புறம் மாமியாரே, என் வருங்கால பொண்டாட்டிய பத்திரமா பார்த்துக்கோங்க... சீக்கிரமே என் பேரண்ட்ஸ் வருவாங்க... டாக்டர் சாரும் நீங்களும் வழி மேல விழி வச்சு காத்திருங்க... இப்ப வரட்டுமா?” என்று யோகாவிடம் விடை பெற்றவன் வாயிலை அடைந்த போது ஷிவானி மற்றும் விஷ்ணுவோடு வளவளத்தபடி வந்த ஆதித்யாவின் மீது மோதிக் கொண்டான்.

    தொடர்ந்து படிக்க
    ஹாய் ஃப்ரெண்ட்ஸ்
    மரம் தேடும் மழைத்துளி அத்தியாயம் 15

    மேனகா வீட்டின் வாயிலில் நின்றவள் "இங்கேயே நின்னா மனசுக்கு கஷ்டமா தான் வனி இருக்கும். நம்ம கிளம்பலாம் வா" என்று அழைத்து செல்ல அன்றும் அவளின் கண்கள் கலங்கிவிட்டது.

    அவள் இருக்கும் மனநிலையில் அவளால் வண்டியை ஓட்டமுடியாது என்று மேனகாவே ஸ்கூட்டியை கிளப்ப அந்நேரம் பார்த்து ஸ்ராவணிக்கு போன் வர அவள் எடுத்து "ஹலோ" என்றாள்.

    "என்ன ஸ்ராவணி சுப்பிரமணியம் உங்க வீட்டை... ப்ச்... என் வீட்டை காலி பண்ணிட்டிங்களா?" என்று கிண்டலாக பேசியவன் அபிமன்யூ.
    அவள் இருக்கும் மனநிலையில் அவனுடன் பேச அவளுக்கு துளியும் விருப்பமில்லை.

    கடுப்புடன் அழைப்பை துண்டிக்க போக அதற்குள் அவன் அவசரமாக "இன்னும் டூ டேய்ஸ் உனக்கு டைம். அதுக்குள்ள வீட்டோட பேப்பர்ஸ் என்னோட பேருக்கு மாறணும். யூ டோண்ட் இரி. உன் வீட்டுக்கு மார்க்கெட் வேல்யூவை விட அதிகமா குடுத்தே வாங்கிக்கிறேன். பிராப்பர்ட்டி ரிஜிஸ்ட்ரேசன்ல இன்னும் ரெண்டு நாள் கழிச்சு மீட் பண்ணுவோம். பை! குட் நைட்" என்று போனை வைத்தான் அவன்.

    அவள் முகம் போன போக்கை கண்டதும் மேனகா "யாரு வனி போன்ல?" என்று கேட்க

    ஸ்ராவணி இறுகிய முகத்துடன் "அபிமன்யூ! இன்னும் ரெண்டு நாள்ல வீட்டோட பேப்பர்ஸ் அவன் பேருக்கு மாறணுமாம். ரிஜிஸ்ட்ரேசன் ஆபிஸ்ல மீட் பண்ணுவோம்னு சொல்லுறான்" என்றபடி ஸ்கூட்டியில் ஏற மேனகா மனதின் வலியை மறைத்தபடி இத்தனை நாள் வாழ்ந்த இடத்தை ஒரு முறை பார்த்தவள் பெருமூச்சுடன் வண்டியை அண்ணா நகர் வீட்டை நோக்கி செலுத்த ஆரம்பித்தாள்.

    தொடர்ந்து படிக்க
  • Loading…
  • Loading…
  • Loading…
Top Bottom