• Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
    - legal team, Ezhilanbu Novels
  • கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

அன்பின் முகவரி யாரோ? 9

ரித்தி

Active member
Member
அத்தியாயம் 9


விக்ரம் வீட்டிற்குள் வாசலில் கைகட்டி நிற்க, அவன் அம்மாவோ என்ன பதில் சொல்வதென்று ஒரு படபடப்புடன் அமர்ந்திருந்தார்.


அவர்களுக்கு எதிரே லாவண்யாவின் அப்பா சந்திரன் எதிர்பார்ப்போடு அவர்களை பார்த்து கொண்டிருந்தார்.


லாவண்யாவிற்கு விக்ரமை பிடித்திருப்பதாக கூறி அதனால் திருமணம் பற்றி பேசவே வந்திருந்தார் சந்திரன்.


விக்ரம் அம்மாவிற்கு இதில் விருப்பம் இருந்தாலும் இப்போதுதான் ஆபத்தில் இருந்து தப்பி வந்தவனை வற்புறுத்த விரும்பவில்லை.


அவனே முடிவெடுக்கட்டும் என்று அவனை பார்த்தார்.


அவனுக்கும் அம்மாவின் பார்வை புரியாமல் இல்லை. அவனுமே குழப்பத்தில் தான் இருந்தான்.


மறுபடி ஒரு ஏமாற்றத்தை தாங்க முடியாது.

முதல் முறை லாவண்யா ஃபோன் செய்த போது அதில் எந்தவொரு வித்யாசமும் விக்ரம் அறிந்திருக்கவில்லை.


இரண்டாவது, மூன்றாவது என தொடர விக்ரமிற்கு சந்தேகம் தோன்றவே அதன்பின் லாவண்யா அழைத்த போது அவன் அதை அட்டன் செய்யவில்லை.


அவள் விட்டுவிடுவாள் என்று விக்ரம் நினைத்தான். ஆனால் இப்படி அப்பாவை அனுப்பி பேசும் வரை அவள் தீவிரமாக இருப்பாள் என எதிர்பார்க்கவில்லை.

அவள் ஒன்றும் நான் உன்னை விரும்புகிறேன் நீயும் என்னை விரும்ப வேண்டும் என்று சொல்லவில்லையே!.


தனது விருப்பத்தை அப்பாவிடம் சொல்லி அவர் சம்மதம் என்பதால் தானே இவ்வளவு தூரம் வந்து கேட்கிறார்கள்.


மனம் எவ்வளவு யோசித்தும் மறுபடியும் உடனே முடிவெடுக்க ஏதோ ஒன்று தடுத்தது.


அந்த நேரம் யூஎஸ்ஸில் இருந்து சுரேஷ் மொபைலில் அழைக்க "அப்புறம் கூப்பிடுறேன் டா" என்று சொல்லி அழைப்பை கட் செய்தான்.


சிறிது யோசித்தவன் "நான் லாவண்யாகிட்ட பேசிட்டு முடிவ சொல்லலாமா அங்கிள்" என்றான்.


சார் என்று சொல்லாமல் அங்கிள் என்று சொன்னதில் அவன் விருப்பமும் குழப்பமும் தெரியவே சிரித்து கொண்டே எழுந்தார் சந்திரன்.


"கண்டிப்பா விக்ரம்! உங்கள் ரெண்டு பேரோட முடிவு தான் முக்கியம். பேசிட்டு முடிவ சொல்லுங்க" என்று கூறிவிட்டு கிளம்பினார்.

அன்று காலையில் PNM கம்பெனி எம்டி ப்ராஜெக்ட் டீடெயில்ஸ் தெரிந்து கொள்ள ஆனந்தை ஒரு ஹோட்டலுக்கு அழைத்திருந்தார்.


முன்பு இதுபோல வெளியே நடக்கும் அபீஸியல் மீட்டிங்கில் ஆனந்துடன் ராஜ்குமாரும் செல்வார்.


ஆனால் இப்போது என்ன செய்வதென்று யோசித்தான் ஆனந்த். ரிதுவை கூட்டி செல்ல ஏனோ தயக்கம் இருந்தது.


முன்பென்றால் இந்த வாய்ப்பை நழுவவிட்டிருக்க மாட்டான். இப்போது இருக்கும் நிலைமையே வேறு ஆயிற்றே.


காலையில் கிளம்பி வந்து சாப்பிட அமர்ந்தவனிடம், "என்ன டா இன்னைக்கு ஆபீஸ் லேட்டா போகிற மாதிரி இருக்கு" என்றார் ரகு.


"PNM கம்பெனி ப்ராஜெக்ட் டீடெயில்ஸ் கேட்க சுஜித் சார் ஹோட்டல் வர சொல்லியிருகார் பா" என்றான் ஆனந்த்.


"நீ மட்டுமா போற?" அடுத்த கேள்வி உடனே வந்தது.


யோசித்தவாறே "ஆமாம்" என்றான்.


"அந்த பொண்ணு ரிது பர்ணா இன்னும் ஆபீஸ் வரலையா? இன்னும் உடல்நலம் சரியாகலையா?" என்று கேட்டதும் ஆனந்திற்கு அதிர்ச்சியாக இருந்தது அப்பாவிற்கு எப்படி தெரியும்? என்று.


உடனே சுதாரித்தவர், "ராஜ்குமார் போன் பண்ணியிருந்தான் விஜயன என்ன பண்ணிங்கனு? அப்ப தான் இதையும் சொன்னான்" என்றார்.


ரகுவிற்கும் கேள்வியாக இருந்தது "அவனே ரிதுவை ஹாஸ்பிடல் அழைத்து சென்று வீட்டில் விட்டு வந்தது ஏன்?" என்று. ஆனால் அதை கேட்கவில்லை.

ராஜ் குமாரிடம் அவரின் நட்பு தெரியும் என்பதால் அதில் சமாதானம் அடைந்தவன், "இல்லப்பா! எனக்கு வெளியில கொஞ்சம் வேலை இருக்கு. அதை பார்த்துட்டு தான் சுஜித் சார மீட் பண்ணுவேன். அதனால ஆபீஸ் இப்போது போகலை. அண்ட் நீங்க கேட்ட ரிது பர்ணா ஆபீஸ் வரலையானு எனக்கும் தெரியலை. இன்னைக்கு நானே மேனேஜ் செய்துப்பேன்" என்றான்.


அவனின் பேச்சில் அவரால் எதுவும் அரிய முடியவில்லை.


ரிது அன்று ஆபீஸ் சென்றிருந்தாள். அன்றைய மீட்டிங் ரிதுவிற்கும் தெரியும். ஆனால் தான் செல்ல வேண்டுமா என்று யோசித்தவள் அவன் அழைத்தாள் பார்த்து கொள்ளலாம் என முடிவு செய்தாள்.


மேலும் 1மணி நேரம் ஆகியும் அவன் வராததால் போனில் அழைத்து மீட்டிங்கை கூறினாள்.


அவன் அங்கு தான் சென்று கொண்டிருப்பதாக கூறிக் கொண்டிருக்க அவன் மொபைலில் இன்னொரு அழைப்பு வந்தது.


அழைப்பது ராஜ்குமார் சார் என்றதும் என்னவாக இருக்கும் என்று யோசித்தவாறே ரிதுவின் அழைப்பை கட் செய்தான்.


எதிர்முனையில் கேட்ட செய்தியில் அதிர்ந்தான் ஆனந்த்.


"ஹலோ, மிஸ்டர் ஆனந்தா? நாங்க கேந்திரா ஹாஸ்பிடல்ல இருந்து பேசுறோம். இந்த மொபைல் வச்சிருந்த சார்க்கு ஹார்ட் அட்டாக். இங்கே தான் சேர்த்துருக்காங்க. உங்களுக்கு தகவல் சொல்ல சொல்லி பேசண்ட் சொன்னாங்க. கொஞ்சம் சீக்கிரம் வாங்க" என்று சொல்லி வைத்திருந்தனர்.

இனியும் காத்திருந்தாலும் விக்ரமிடம் இருந்து பதில் வர போவதில்லை என்று உணர்ந்த லாவண்யா அவன் போன் செய்தாலும் எடுக்கமாட்டான் என்பதை அறிந்து 'வாண்ட் டு மீட் யூ ' என்று மட்டும் செய்தி அனுப்பியிருந்தாள்.


விக்ரம் ஏற்கனவே நினைத்தது தான். அவள் அப்பாவிடம் "நாங்க பேசிட்டு சொல்றோம்"னு ஏதோ தைரியத்தில் சொல்லிவிட்டான்!


ஆனால் அவனாக அழைக்க ஏனோ மனம் வராமல் யோசனையில் இருக்க, அவளே மெசேஜ் அனுப்பியிருந்தாள்.


இனியும் பேசாமல் இருந்து ஆகப்போவது ஏதுமில்லை என்று அவனே இடத்தையும் நேரமும் அனுப்பினான்.


ஆனந்த் கேந்திரா ஹாஸ்பிடல் நோக்கி காரில் பறந்து கொண்டிருந்தான். அதிர்ச்சியில் முதலில் என்ன செய்வதென்று தடுமாறியவன் சுதாரித்துக் கொண்டு ரிதுவை முதலில் அழைக்க போனான்.


பின் யோசித்து 'வேண்டாம் பயந்திடுவாள்' என்று அழைக்காமல் விட்டுவிட்டான்.


பின் தந்தைக்கும் ராஜ்குமார்க்கும் இருக்கும் நட்பை அறிந்தவன் ரகுவிற்கு போன் செய்தான்.


பதறிய ரகு உடனே கிளம்புவதாக சொல்லி போனை வைத்துவிட, அடுத்ததாக சுஜித் சார்க்கும் போன் செய்து இன்று வர முடியாத நிலையை விளக்கி மன்னிப்பு வேண்டினான்.


ஏனோ ஒருவித பயத்துடன் ஹாஸ்பிடலில் நுழைந்தான் ஆனந்த். ரிசெப்சனில் ராஜ்குமார் பெயர் கூறி அறையை கேட்டான்.


அங்கே அவர் ஐசியூவில் இருந்தார் ராஜ்குமார். டாக்டர் ஆனந்தை ராஜ்குமார் கூப்பிடுவதாக கூற அவர் அருகே சென்றான்.


"ஒன்னுமில்லை தம்பி காலையில் மார்க்கெட் போனேன். லேசா தல சுத்துற மாதிரி இருந்துச்சி. அதுக்குள்ள அங்க இருந்தவங்க இங்க கொண்டு வந்து சேர்த்துட்டாங்க" என்று சிரமப்பட்டு சிரித்தார்.


அடிக்கடி அவர் நெஞ்சை நீவிவிட்டு கொண்டே இருக்க, "சார் ஆர் யூ ஒகே? என்ன பண்ணுது? டாக்டர் கூப்பிடவா" ஆனந்த் அவருக்கு ஆதரவாக கையை பிடித்துகொண்டு கேட்டான்.


வேண்டாம் என்று மறுத்து பேச உள்ளே வேகமாக நுழைந்தார் ரகு.


அப்பாவை பார்த்ததும் தான் ஆனந்த்திற்கு சிறு தைரியம் வந்தது.


நல்லவேளையாக ரிதுவிற்கு சொல்லவில்லை என்றும் நினைத்துகொண்டு அப்பாவிடம் சொல்லி விட்டு வெளியே வந்தான்.


அவன் முன் வந்த டாக்டர், "ராஜ்குமார் உங்களுக்கு யார்? " என்று கேட்க,


அப்பாவின் தோழர் என்ற முறையில் "பேமிலி பிரண்ட் டாக்டர்" என்றான்.


"அவங்க ரிலேசன் யாரும் வரலையா" என்று கேட்க,


"என்ன டாக்டர் ஏதாச்சும் ப்ரோப்லேமா? நீங்க எங்ககிட்ட சொல்லலாம்".


"அவங்களுக்கு இது ரெண்டாவது ஹார்ட் அட்டாக். முன்னவே ஆபரேஷன் செய்திருக்கலாம். இப்ப கொஞ்சம் கிரிட்டிகள் தான். பட் பேசண்ட் தைரியமா இருக்கனும் அதான் இம்போர்ட்டண்ட் " என்று கூற,


ஆனந்திற்கு இது தெரிந்தது தான் ஆனாலும் ஏன் இன்னும் ஆபரேஷன் செய்து கொள்ளவில்லை என்று எண்ணி உள்ளே சென்றான்.


அவன் வருவதை பார்த்து இருவரும் பேச்சை நிறுத்த ராஜ்குமார் தான் முதலில் பேசினார்.


"ரிதுகிட்ட சொல்லிட்டீங்களா தம்பி?" என்று கேட்க என்ன சொல்வது என்று தடுமாறி,


"இல்லை சார்! நான் ஆபீஸ் போகல. வெளில இருந்ததால் அப்படியே வந்துட்டேன்" என்று தடுமாறியே கூறினான்.


"அதுவும் நல்லது தான்" என்றவர் "இதெல்லாம் அவ தாங்க மாட்டா தம்பி. அம்மா இல்லாத பொண்ணுன்னு கொஞ்சம் செல்லம். அதனால் தான் என் கவலையை அவகிட்ட சொல்றது இல்லை " என்றார். (அதனால் தானே அவனும் சொல்லவில்லை ).


"ரகு எனக்கு எதாவது ஆச்சினா என் ரிதுவ பார்த்துக்கோடா" என்று கண் கலங்க கூறினார் ராஜ்குமார்.


வேறு யோசனையில் இருந்த ரகு அவரின் கலக்கத்தில், "என்ன ராஜ் பேசுற? உனக்கு எதுவும் ஆகாது. ரொம்ப யோசிக்காம கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடு. ரிது உனக்கு மட்டும் இல்லை எனக்கும் பொண்ணு மாதிரி தான். தேவை இல்லாம கலங்காதே" என்றவர் அவருக்கு ஓய்வு கொடுத்து வெளியே வந்தனர்.


டாக்டர் கூறியதை ரகுவிடம் கூறினான் ஆனந்த். "ஆபரேஷன் பண்ணியே ஆகணுமாம் அப்பா. இதை எப்படியாவது அவங்ககிட்ட சொல்லி ஒத்துக்க வைக்கனும்" என்றான்.


அவங்க தைரியமா இருந்தா எல்லாம் நல்ல படியா முடியும்னு டாக்டர் சொல்றாங்க பா.


ராஜ்குமாரிடம் பேசியதில் ரகுவிற்கு கலக்கமாக இருந்தது. அவனிடம் இப்போதும் சொல்லாமல் இருக்க காரணம் ஆனந்த் தான்.


ஆனந்த் தன் முடிவை ஏற்றுக்கொண்டாள் சரி. இல்லையென்றால்?.


இப்போது அவனுக்கு தைரியம் தரக் கூடிய ஒரே விஷயம் ரிது மட்டுமே. ரிதுவிற்கு நல்ல எதிர்காலம் அமையும் என்ற நம்பிக்கையை அவனுக்கு உணர்த்தினால் நிச்சயம் அவனுக்கு தைரியம் வரும் என்று நம்பினார் ரகு.


"ஆனந்த் நான் கேட்பதற்கு உண்மையான பதில் சொல்வயா?" அப்பாவுடைய கேள்வி ஆச்சர்யமாக இருந்தது.


"என்ன பா நான் என்ன பொய் சொல்லியிருக்கேன்னு இப்படி கேட்கிறீங்க?".


"நீ இன்னுமும் அந்த பொண்ணை காதலிக்கிறாயா?".


"எ.. எந்த.. பொண்ணு பா?" என்ன சொல்கிறோம் என்று புரியாமலே அவன் ஒரு கேள்வியை வீச,


ரகு சிரித்துக்கொண்டு "எத்தனை பெண்களை விரும்பினாய்?" என்றார்.


"அப்பா!".


"பின்ன என்ன டா ஒண்ணுமே தெரியாதவன் மாதிரி எதிர்கேள்வி கேட்குற?. உங்க அம்மா எல்லாம் சொல்லியாச்சி. நீ பதில் சொல்லு" என்றார்.


அம்மாவை மனதில் திட்டியவாறே என்ன சொல்வதென்று யோசித்தான். அவன் பதில் சொல்ல போவதில்லை என அறிந்து "உனக்கு நல்லது தான் நடக்கும் டா" என்று அவன் தலை கோதினார்.


"சரி நீ ஆபீஸ் போன் பண்ணி ரிதுவை இங்க வர சொல்லு.


"எதுக்கு பா?".


"டேய்! அவ அப்பாடா ராஜ். அவளுக்கு சொல்லாமல் எப்படி ஆபரேஷன் ஒத்துக்க செய்றது. போ! போய் போன் பண்ணு".


போனில் சொல்வதை விட நேரில் அழைத்து வருவது நல்லது என தோன்றியதால் "நான் வெளில போகணும். போய்ட்டு நானே கூட்டிட்டு வர்றேன்" என்றான்.


அவருக்கும் அதுவே சரி என்று பட தலையசைத்ததும் ஆனந்த் கிளம்பினான்.


காதல் தொடரும்..
 

Rajam

Well-known member
Member
ஆவ அப்பாக்கு வாக்கு கொடுப்பானா.
இல்லை தாலியே கட்டிடுவானா.
 

Baby

Active member
Member
ம்க்கும்... இவன் இப்பையும் எதும் குட்டி கலாட்டா பன்னப்போறான்
 

Baby

Active member
Member
பன்னாம இருந்தா சரிதான்... என்ன உண்மை தெரிஞ்சதும் மூஞ்சியை டஸ்ட்பின்குள்ள வச்சுட்டு சுத்தப்போறான்😂😂😂😂😂
கொலவெறி கமிங்.. இல்ல sis
 

பிரிய நிலா

Well-known member
Member
ராஜ் அப்பாக்கு எதுவும் ஆகக்கூடாது சிஸ்..
அவரை வச்சு ஆனந்த் அண்ட் ரிது திருமணமும் நடக்கக்கூடாது..
நல்லபடியா எல்லா பிரச்சனையும் முடியனும் சிஸ்...

வெயிட்டிங் பார் நெக்ஸ்ட் எபி சிஸ்..
 

ரித்தி

Active member
Member
பன்னாம இருந்தா சரிதான்... என்ன உண்மை தெரிஞ்சதும் மூஞ்சியை டஸ்ட்பின்குள்ள வச்சுட்டு சுத்தப்போறான்😂😂😂😂😂
வேறுவழி 🤣🤣🤣🤣
 

ரித்தி

Active member
Member
ஐயோ ஆனா நடந்து போச்சே 😷😷😷😷😷😷
ராஜ் அப்பாக்கு எதுவும் ஆகக்கூடாது சிஸ்..
அவரை வச்சு ஆனந்த் அண்ட் ரிது திருமணமும் நடக்கக்கூடாது..
நல்லபடியா எல்லா பிரச்சனையும் முடியனும் சிஸ்...

வெயிட்டிங் பார் நெக்ஸ்ட் எபி சிஸ்..
 

New Episodes Thread

Top Bottom