• Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
    - legal team, Ezhilanbu Novels
  • கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

அன்பின் முகவரி யாரோ? 8

ரித்தி

Active member
Member
அத்தியாயம் 8

அடுத்த நாள் ஞாயிற்று கிழமை. விக்ரம் பேப்பர் படித்து கொண்டிருக்க, ஜோதி அம்மாவிற்கு சமையலில் உதவிக் கொண்டிருந்த நேரம், காலிங்பெல் சத்தம் கேட்டு ஜோதி கதவை திறந்தாள்.

வாசலில் நின்றவளை கண்டதும் "வாங்க மேடம் இப்ப தான் உங்களுக்கு எங்க வீட்டுக்கு வர வழி கிடைச்சுதா?" என கோபமாக கேட்க,

"ஹ்ம்ம் அப்படி தான் வச்சுக்கோயன். ஆனால் நான் இப்ப கூட உன்ன பார்க்க வரல. என் அண்ணாவ பார்க்க தான் வந்தேன்" என்று ஜோதிக்கு முன் வீட்டுக்குள் நுழைந்தாள் அவள் ரிது பர்ணா.

"ஹாய் அண்ணா! எப்படி இருக்கிங்க? ஏதோ வீர சாகசம் எல்லாம் செய்ததா கேள்விபட்டேன்" என்று விக்ரமை கேட்டாள்.

"வாங்க டீச்சரம்மா! நீ மட்டும் தான் இன்னும் வரலையேனு நினச்சேன் வந்துட்டியா" என்று சிரிக்க.

அவளோ "அதெல்லாம் இருக்கட்டும். உங்கள நம்பி தானே ஜோதி, நான் எல்லாம் இருக்கிறோம். ஏன்ண்ணா இப்படி பண்ணீங்க?" என்று நிஜமான வருத்தத்தை தெரிவிக்க,

நூறாவது முறையாக தன் முட்டாள்தனத்தை எண்ணி வருந்தினான் விக்ரம்.

தகுதியில்லாதவளை நினைத்து எவ்வளவு பெரிய தவறு செய்துவிட்டேன் என்று நொந்து கொண்டே இருக்கிறான்.

அவன் வருத்தபடுவதை பார்க்க முடியாமல் ரிது, "பசிக்குது டி எதாவது சாப்பிட எடுத்துட்டு வா போ. போய் வேலைய பாரு" என்று ஜோதியை விரட்ட, விக்ரம் அவளின் எண்ணம் புரிந்து சிரித்துவிட்டான்.

சத்தம் கேட்டு வெளியில் வந்த ஜோதி அம்மாவிடம் நலம் விசாரித்தாள் ரிது.

"எப்படி இருக்கீங்க மா?"

"நாங்க நல்லா இருக்கோம் டா. நீ ஏன்மா வீட்டுபக்கமே வர்றதில்ல" என்று கேட்டார்.

"அப்படி கேளுங்க மா. ஏதோ பெரிய கம்பெனில வேலை கிடைச்ச உடனே நம்மளை எல்லாம் மறந்துட்டாங்க" என்று ஜோதி கூற,

அவளை முறைத்து விட்டு "அதெல்லாம் ஒன்னும் இல்லை மா. அப்பா இப்ப வீட்ல தானே இருக்காங்க அதனால தான் நான் எங்கேயும் போறதில்ல மா" என்று கூறினாள்.

"வேலைக்கு போறியா? என்ன மா எங்ககிட்ட எல்லாம் சொல்லவே இல்லை? எங்க வேலை பார்க்கிற?, என்ன வேலை" என்று கேட்க, அவள் கம்பெனி பெயர் கூறினாள்.

ஆனந்தின் கம்பெனியா என்று நினைத்தாலும் ஏதும் சொல்லவில்லை விக்ரம். அன்று ஆனந்த் கேட்டது ஞாபகம் வந்தது.

ஆனாலும் அப்போது விக்ரம் ஆனந்த் நடத்தி வைத்திருக்கும் விபரீதத்தை தெரிந்திருக்கவில்லை.

அன்று மதியம் வரை அவர்களோடு இருந்தவள் அதன் பின் அப்பா தனியா இருப்பாங்க என்று கூறி சாப்பாட்டையும் மறுத்துவிட்டு இன்னோரு நாள் வருவதாக கூறி கிளம்பினாள்.

ரிதுவும் ஜோதியும் சிறுவயதிலிருந்தே நண்பர்கள். அம்மா இல்லை என்றோ, அண்ணன் தங்கை இல்லை என்றோ இதுவரை ரிது கவலை படவில்லை என்றால் அதற்கு ஒரு காரணம் ராஜ்குமார் என்றால், இன்னோரு காரணம் ஜோதியின் குடும்பம் தான்.

ராஜ் குமார் வேலை காரணமாக ரிதுவை பள்ளி விடுதியில் தங்க வைத்திருக்க, ஜோதியுடன் பழகிய பின் ஜோதியே மதிய உணவும் கொண்டு வந்திடுவாள்.

அங்கே ஆரம்பித்த நட்பு தான் இவர்களினது.

இருவரும் கல்லூரி வரை ஒன்றாகவே படித்தனர். மேற்படிப்பு படிக்க ஜோதி விரும்பியதால் தொடர்ந்து படித்து கொண்டிருக்கிறாள்.

ரிதுவையும் அப்ளை செய்ய சொன்ன போதும் தந்தைக்காக மறுத்துவிட்டிருந்தாள்.

அன்று ஆனந்த் பார்த்தது ரிதுவின் புகைப்படம் தான். அது அவன் நினைத்த மாதிரி விக்ரம் பர்ஸ் தான்.

ஆனால் அதை உபயோகிப்பது விக்ரமின் பாசமிகு தங்கை ஜோதி! அண்ணன் உபயோகித்த எதையுமே அவனிடம் இருந்து வாங்கிக் கொள்வாள் ஜோதி.

அது தான் அவளுக்கு ராசி என்றும் ஒரு காரணம் சொல்லிவிடுவாள்.

ஜோதி அந்த பர்ஸ்ஸில் தன் அம்மா அப்பா புகைப்படத்தை அடுத்து வைத்திருந்தது விக்ரம் உடன் சுரேஷ் இருக்கும் புகைப்படம்.

அது ஏன் சுரேஷ் புகைப்படத்தை ஜோதி வைத்திருக்க வேண்டும்? அது தான் விதி. அந்த காதல் தான் ஆனந்த் காதல் பிரிய காரணம் ஆனது போல.

ஆனந்த் அதை தான் தவறாக புரிந்து கொண்டான். விக்ரம் அம்மா அப்பா உடன் நண்பன் சுரேஷ் புகைப்படத்தையும் வைத்து இறுதியில் தன் காதலியான ரிதுவின் படத்தை வைத்திருப்பதாக நினைத்துக் கொண்டான்.

ஆனால் உண்மை அதற்கு நேர்எதிர் ஆனது. ஜோதி தான் அந்த போட்டோக்களுடன் தன் தோழி ரிதுவின் புகைப்படத்தையும் வைத்திருந்தாள்.

இதை அறியும் போது ஆனந்தின் நிலை என்னவாகும்? அதை ரிதுவும் அறிந்தால் ஆனந்த்தை மன்னிப்பாளா?.

ரகுவே பிரியாவின் அடையாளங்களை சிசிடிவி கொண்டு அவளை கண்டறிந்து அவளின் மூலம் போலீஸ்ஸில் விஜயன் மேலும் கம்பளைண்ட் கொடுத்து அவனை ஜெயிலுக்கு அனுப்பிவிட்டார்.

இப்போது அவரது கவலை ஆனந்த் பற்றியது. சுகன்யா சொன்னதில் இருந்து யோசிக்க ஆரம்பித்தார்.

இதற்கு சீக்கிரமே ஒரு தீர்வு காண வேண்டும். நாமே நேரே சென்று பேசிவிடலாம் என்று நினைத்து கொண்டார்.

அன்று காலையில் எழும்போதே ரிதுவிற்கு லேசான காய்ச்சல் போல இருந்தது.

ஆனாலும் முக்கியமான மீட்டிங் இருப்பதால் சென்று தான் ஆக வேண்டும்.

ஏற்கனவே நேரத்திற்கு தகுந்தா மாதிரி எதாவது பேசுவான். அதற்கு வாய்ப்பு கொடுக்க வேண்டாம் என்று கிளம்பினாள்.

மீட்டிங் போய் கொண்டிருக்க ஆனந்த் ப்ராஜெக்ட் டெமோ மற்றும் ஃபைலை கேட்க அதை எடுத்து கொடுத்தாள் ரிது.

டெமோ போய் கொண்டிருக்கும் போது பைலை திறந்து பார்த்தவனோ கோபத்தில் அந்த இடத்திலேயே அவளை திட்ட ஆரம்பித்தான்.

வேறொரு ப்ராஜெக்ட் ஃபைல் மாறியிருந்தது.

"என்ன தான் வேலை பார்க்கிறிங்க. ஒரு ஃபைலை கூட ஒழுங்கா எடுத்துட்டு வர தெரியாதா" என கத்தினான்.

முடியாமல் நின்றவள் காரணம் சொல்லிக்கொண்டு இராமல் காண்பரன்ஸ் ஹாலில் இருந்து அவன் அறைக்கு ஓடி சென்று அவன் கேட்ட ஃபைலையும் கொண்டு வந்து கொடுத்தாள்.

அந்த மீட்டிங் முடிந்து அறைக்கு சென்ற பின்பும் அவன் கோபம் தணிந்தபாடில்லை. அவளை தனது அறைக்கு அழைத்தான்.

மீட்டிங் முடிய லேட் ஆனதால் மதியமும் சாப்பிடவில்லை அவள். அப்போது தான் சாப்பிட கிளம்ப அதற்குள் அழைத்துவிட்டான்.

வந்தவளிடம், "என்ன பிரச்சனை உங்களுக்கு? அடுத்த நாள் மீட்டிங்கிற்கு முந்தய நாளே எல்லாம் பக்காவாக வைக்க தெரியாதா?. வேலை பார்க்க கஷ்டமா இருந்தா வீட்டில் இருப்பது தானே" என்று கத்தினான். அதுவும் ரிது என்பதினால் தானோ?.

ஆனந்திற்கு ஆபீஸ் விஷயத்தில் அட்ஜஸ்ட் செய்வது பிடிக்காத ஒன்று. எதையும் பெர்பெக்ட்டாக இருக்க எதிர்பார்ப்பவன்.

அவள் காய்ச்சலிலும், பசியிலும் பேச முடியாமல் நின்றாள். அது தெரியாமல் கோபத்தில் ஏதோ அவன் சொல்ல வாயெடுக்க, அங்கேயே மயங்கி சரிந்தாள் ரிது.

"ஹேய்ய்ய்..." என அவன் அவளை தாங்க முயல அதற்குள் கீழேயே விழுந்திருந்தாள்.

பதறிய ஆனந்த் அவள் தலையை கைகளில் தாங்கி ரிது, ரிது என கூப்பிட எந்த அசைவும் இல்லை அவளிடம்.

அவள் கன்னத்தில் லேசாக தட்ட, அப்போது தான் அவள் உடலின் வெப்பம் அவன் கைகளை சுட்டது. உடனே மேனேஜரை அழைத்து ஹாஸ்பிடல் கூட்டிச் செல்ல ஏற்பாடு செய்தான்.

சிறிது நேரத்தில் அவனும் கிளம்பி ஹாஸ்பிடல் செல்ல டாக்டர் "நார்மல் பிவேர் தான். இன்ஜெக்ஷன் போட்டாச்சு. இன்னைக்கு எதுமே சாப்பிடாம இருக்காங்க அதனால தான் மயங்கி இருக்காங்க. இப்ப சாப்பிட லைட்டா ஏதாச்சும் குடுங்க. டேப்லெட் வாங்கிக்கோங்க. நைட்க்கு எப்பவும் சாப்பிடறதே சாப்பிடலாம்" என்று சொல்லிவிட்டு சென்றார்.

டிரைவரை அனுப்பி சாப்பாடு வாங்கி வர சொல்லி அங்கேயே அவளை சாப்பிடவும் வைத்தான்.

சாப்பிடும் வரை அவளிடம் ஏதும் பேசவில்லை. சாப்பிட்டு முடித்தவுடன் "இவ்ளோ ஹெவி பிவேர் வச்சிட்டு ஏன் வந்த? ராஜ் சார் எதுவும் சொல்லலையா?" என்று அக்கறையாய் கேட்டான்.

'வராமல் இருந்திருந்தால் அதற்கும் கத்த தானே செய்திருப்பாய்?' என்று மனதில் நினைத்தவள்,

இரண்டாவது கேள்விக்கு மட்டும் "அப்பாக்கு தெரியாது" என்று பதில் அளித்தாள்.

ஏனோ வாடி போய் இருந்தவளை அதற்கு மேல் ஏதும் சொல்ல மனம் இன்றி அவனே அவள் வீட்டுக்கு அழைத்து சென்று விட்டான்.

உள்ளே வா என்று அவளும் அழைக்கவில்லை. அவனுக்கும் அப்போது செல்ல மனம் இல்லை.

டேக் கேர் என்று சொல்லிவிட்டு இரண்டு நாள் ரெஸ்ட் எடுத்துட்டு அப்புறம் வந்தா போதும் என்று சொல்லிவிட்டு சென்றான்.

ஆனந்திற்கு அன்று வேலையே ஓடவில்லை. ரிதுவை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்று நினைத்தான் தான்.

அதன்பின் மறந்து விடவும் நினைத்தான் தான்.

ஆனாலும் அவன் மனமே இன்னும் மாறவில்லை என்று புரிந்து கொண்டான்.

அவள் சாப்பிடும் போது குழந்தை போலவே எண்ண தோன்றியது.

'ஒருவனை பணத்துக்காக ஏமாற்றியவளையா இப்படி நினைத்து கொண்டிருக்கிறோம்? ' என்று மனம் கேள்வி கேட்க, நரக வேதனையை அனுபவித்தான்.

விக்ரம் சொன்ன அந்த பணக்காரன் யாராக இருக்கும்?

இதுநாள் வரை ஆபீஸ்ல் வைத்து தேவையில்லாமல் போன் பேசுவது கிடையாது. தேவையின்றி விடுமுறை எடுப்பது கிடையாது. அவள் வேலையில் சரியாக இருக்கிறாள். (இதையெல்லாம் இவன் கவனித்தது, அவளை சந்தேகம் கொண்டா?).

இன்று கூட உடல்நலம் சரியில்லை என்பதால் தான் மீட்டிங்கில் ஃபைல் மாறியிருக்கும்.

அது தெரியாமல் அவளை வதைத்து சாப்பிட கூட விடாமல்.... 'ச்ச என்ன மனிதன் நான்? அவளை வதைக்கிறேன் என்று முழுதாய் நான் மாறிவிட்டேனோ?'. என்று யோசித்தவன்,

இதற்கு தீர்வு விக்ரமை சந்தித்து கேட்டால் மட்டுமே கிடைக்கும் என்று அவனை சந்தித்து பேசிவிட முடிவு செய்தான்.

அடுத்த நாள் ரிதுவிற்கு காய்ச்சல் சரியாகிவிட்டாலும் வேலைக்கு செல்லவில்லை.

அப்பா சொல்லிவிட்டதால் வீட்டிலேயே இருந்தாள். அன்று பசியில் அரைமயக்கத்தில் இருந்த போதும் அவனின் 'ரிது' என்ற அழைப்பு அவள் உயிர் வரை கேட்டது.

அவன் பதறியதும், தான் சாப்பிடும் வரை அவன் தன்னையே ஹாஸ்பிடலில் பார்த்துக் கொண்டிருந்ததும் அவள் அறிந்ததே.

அவனே ஹாஸ்பிடல் வருவான் என்று அவள் நினைக்கவில்லை.

'ஏன் அப்பாவிடம் சொல்லியிருந்தால் அவரே வந்து பார்த்திருந்திருப்பாரே? அதற்கு தானே வர வேண்டும் என்றில்லையே?'

தான் வேலையில் சேர்ந்த போது அவன் பேசிய விதமும், இப்போது நடந்துகொண்ட விதமும் அவளுக்கு எதையோ புரியவைக்க அந்த முயற்சியில் அவளது முகத்தில் புன்னகை வந்தது.

ஆனாலும் இடையில் நடந்து கொண்ட விதம்? என்ன யோசித்தும் அதற்கான விடை மட்டும் கிடைக்கவில்லை.

ஏதோ ஒரு தவறான புரிதல் இருக்கிறது அவனிடம். அது சரியாகும். ஏனோ அவன் மேல் ஒரு நம்பிக்கை வந்தது. கூடவே காதலும் வந்ததோ!.

"எவனோ ஒருவன் வாசிக்கிறான்

இருட்டில் இருந்து நான் யாசிக்கிறேன்....

தவம்போல் இருந்து யோசிக்கிறேன்

அதைத் தவணை முறையில் நேசிக்கிறேன்....

கேட்டுக் கேட்டு நான் கிறங்குகிறேன்.....

கேட்பதை அவனோ அறியவில்லை
".....

காதல் தொடரும்...
 
பிரிய நிலா

Well-known member
Member
ஐயோ.. இப்போ தான் விடை சொல்லி இருக்கீங்க. அப்போ அந்த பர்சை ஜோதி யூஸ் பண்றாளா..
அதனால தான் அன்னைக்கு ஹாஸ்பிட்டல்ல ஜோதி பர்சை எடுத்துட்டு போனாளா..
இந்த டிவிஸ்ட்டை எதிர்பார்க்கல சிஸ்..

ரிது ரொம்ப சரியாக இருக்கா. இந்த ஆனந்த் தான் தேவை இல்லாமல் ஏதேதோ பண்ணிட்டு ரொம்ப சிக்கல் ஆக்கறான். உண்மை எல்லாம் தெரியும் போது ரிது காளி ஆகப்போறா...
 
ரித்தி

Active member
Member
Hahhah.. எல்லாரும் கண்டுபிடிச்சிடுவிங்கனு தான் அன்னைக்கு hint குடுத்தேன் மா 🙈🙈..

Keep reading🙏💐💐
ஐயோ.. இப்போ தான் விடை சொல்லி இருக்கீங்க. அப்போ அந்த பர்சை ஜோதி யூஸ் பண்றாளா..
அதனால தான் அன்னைக்கு ஹாஸ்பிட்டல்ல ஜோதி பர்சை எடுத்துட்டு போனாளா..
இந்த டிவிஸ்ட்டை எதிர்பார்க்கல சிஸ்..

ரிது ரொம்ப சரியாக இருக்கா. இந்த ஆனந்த் தான் தேவை இல்லாமல் ஏதேதோ பண்ணிட்டு ரொம்ப சிக்கல் ஆக்கறான். உண்மை எல்லாம் தெரியும் போது ரிது காளி ஆகப்போறா...
 
Maheswari

New member

Super a poguthu story... Nalla twist
 
Baby

Active member
Member
நான்தான் சொன்னேனே ரிது விக்ரம்கு தங்கச்சினு.. அந்த ஆனந்த் பயலை போய் ஆசிட்ல மூஞ்சி கழுவ சொல்லுங்க...

ஓஹோ இவனை அவமன்னிப்பாளாக்கும்... மன்னிக்கட்டும் அப்புறம் இருக்கு இவளுக்கு
 
பிரிய நிலா

Well-known member
Member
நான்தான் சொன்னேனே ரிது விக்ரம்கு தங்கச்சினு.. அந்த ஆனந்த் பயலை போய் ஆசிட்ல மூஞ்சி கழுவ சொல்லுங்க...

ஓஹோ இவனை அவமன்னிப்பாளாக்கும்... மன்னிக்கட்டும் அப்புறம் இருக்கு இவளுக்கு
மன்னிச்சு தான் பார்க்கட்டும் அப்புறமா இருக்கு..
சொல்லாமல் லவ் பண்ணுவாரு.. அவரே தப்பா நினைப்பாரு.. அவ ஏமாத்திட்டனு அவரே நினைச்சுட்டு பழி வாங்குவாரு...
ஆனந்தக்கு இருக்கு .
 
ரித்தி

Active member
Member
ஆத்தாடி இப்பவே கண்ணை கட்டுதே 😭😭😂😂😂😂
நான்தான் சொன்னேனே ரிது விக்ரம்கு தங்கச்சினு.. அந்த ஆனந்த் பயலை போய் ஆசிட்ல மூஞ்சி கழுவ சொல்லுங்க...

ஓஹோ இவனை அவமன்னிப்பாளாக்கும்... மன்னிக்கட்டும் அப்புறம் இருக்கு இவளுக்கு
 
New Episodes Thread

Top Bottom