• Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
    - legal team, Ezhilanbu Novels
  • கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

IIN 100 (FINAL)

Nithya Mariappan

✍️
Writer
பிரகதியை நிஷாந்த் எதற்கு லவ் செய்தான்? நடித்தானா? இதற்கு விளக்கம் இல்லையே?
muthalla avan unmaiya kathalippan... apram egalaivanuku iniya murderla sammantham irukkOnu doubt varum.. avanuku pragathi seyyura velai therinjidum... so egalaivan ava kitta unmaiya ularalamnu nenachu love panurathu pola nadippan... atha avan idhanya kitta soluvane
 

Nithya Mariappan

✍️
Writer
இவங்களோட முதல் க்ரைம் த்ரில்லர் கதை நூறு அத்தியாயங்கள் நூறாவது அத்தியாயம் வரை ட்விஸ்ட் மெயின்டெயின் பண்றது வேறு லெவல். ராஜேஷ் குமார் லேடி வெர்ஷன் தான் இவங்கனு 100% சொல்லலாம் அந்தளவுக்கு அனைத்து விஷயங்களையும் ஆழ அலசி ஆராய்ந்து கதையோடு கதையாய் சொல்லி இருக்கும் விதம் அருமை. வார்த்தை பிரயோகங்கள் சூப்பர் ஐ லவ் இட்.

கிராமத்தில் கொடூரமான முறையில் ஒரு இளம்பெண் கொலை செய்யப்பட்டு காட்டு பாதையில் கிடக்கும் காட்சிதான் ஆரம்பம். அதை செய்தவர் யாரென்று கண்டறியும் முயற்சியில் தோல்வி ஏற்பட சிபிஐயின் உதவியோடு மீண்டும் களம் இறங்குகிறார்கள்.

புதையலை தேடி போகும் வழி போல் வழியெங்கும் ரகசியங்களை உள்ளடக்கிய மனிதர்கள் நடைமுறையில் இருக்கும் அழுக்கு மனம் படைத்த மனிதர்கள் தான். அனைவருமே இங்கு சுயநலம் பிடித்த அடுத்த உயிரை துச்சமாக நினைக்கும் மனிதர்கள் தான். அடுத்த உயிர் என்றால் இளப்பம் .. தான் தன்னை சார்ந்த உயிர்கள் என்றால் மட்டும் உசத்தியோ?

குற்றவாளி கைது செய்யபட்ட நிலையில் அவர் உண்மை குற்றவாளி இல்லை என்பது தெரிய வர.. கைது செய்த அதிகாரி விபத்தில் சிக்க .. அடுத்து அவர் பிழைத்தாரா உண்மை குற்றவாளி கண்டு பிடிக்க பட்டானா என்பதை தன் எழுத்து பாணியில் அருமையாக தந்திருக்கிறார் ரைட்டர்.

ஸ்டார்ட் அப் போர்ஷன் எல்லாம் அருமை ஒரு விஷயத்தை மேலோட்டமாக சொல்லாமல் அதனை பற்றி ஆராய்ந்து சொன்ன விதம் உண்மையில் அனைவருக்கும் பயனுள்ள தகவல்கள். சைக்கோபதி பற்றிய தகவல் சைக்கோ ஆவதற்கான காரணங்கள் அதன் மருத்துவ முறைகள் சைக்கோ கொலைகள் பற்றிய தகவல் மற்றும் டார்க்வெப் பற்றிய நல்ல கெட்ட விஷயங்கள் மூடநம்பிக்கைகள் பற்றியும் தகவல்கள் எல்லாம் நல்ல வாசிப்பு அனுபவங்கள். நிறைய தகவல்கள் கதையின் போக்கில் தெரிந்து கொண்டேன்.

அடுத்து போட்டோஸ் பற்றி கண்டிப்பாக சொல்ல வேண்டும். இத்தனை மெனக்கெடல் இருந்தும் போட்டோஸ்ல கூட நுணுக்கமா கிரியேட்டிவ்வா டிசைன் பண்ணியிருகாங்க. இரவு நேரத்திற்கு தகுந்த லைட்டிங் பேக்ரவுண்ட் நிலவு ராமபாணசெடி போலிஸ் முகபாவனைகள் கோவில் படிகள் காட்டுபாதை குகை சாத்தான் சிலை ஹாஸ்பிடல் சீன் குழந்தைகள் மூன்று பேர் இருக்கும் சீன் ஸ்பெஷலி மேப் கிரியேஷன்ஸ் ஆஸம். என்னை ரொம்ப அட்மைர் பண்றீங்க. ஒரு டவுட் அந்த போலிஸ் போட்டோ உங்க முகத்தோடு ஒத்து போவது போல எனக்கு தோணியது இன்னும் சொல்ல போனா அந்த கேரக்டரே நீங்க தான்னு தான் நான் ஆரம்பித்திலிருந்து வாசித்தேன்😁😁😁

பாதிரியார் பவுல் மாதிரியான ஆட்களை என்ன சொல்ல🤬🤬🤬 கடவுள் முன் அனைவரும் சமம் குற்றம் யார் செய்தாலும் அதற்குரிய கணக்கை கடவுளிடம் சொல்லியாக வேண்டும். ஒரு பொறுப்பான முன்மாதிரியாக இருக்கும் இடத்தில் இருந்து கொண்டு செய்கிற வேலையா இது டிஸ்கஸ்டிங்😡

பிரகதி திணை விதைத்தவன் திணை அறுப்பான் வினை விதைத்தாள் வினையாகி போனாள். ஒரு நார்மல் மனுஷனோட பீலிங்சோட விளையாடுவதே தப்பு இவள் செய்த காரியம் இவளின் முடிவுக்கு எல்லாம் எனக்கு எந்த உணர்வும் தோணல தேவைதான் என்று தோன்றியது. தன் பிள்ளை தவறு செய்தா திருத்த கத்து கொடுக்கனும் தட்டி கொடுத்துட்டு அதுவும் பேராசிரியர் வேற... அப்புறம் உக்காந்து ஐயோ அம்மானா... தேவை தான்

இதன்யா முரளிதரன் மகேந்திரன் மார்த்தாண்டன் ஐ லவ் திஸ் கேரக்டர்ஸ் என்னால கதையா நினைக்க முடில கதையோடு தான் பயணம் செய்தேன். இவர்களோட உரையாடல் எல்லாம் அருமை. யூகங்கள் இப்படி இருக்கலாம் எமோஷனலா ஹேண்டில் பண்ணகூடாது இப்படி நிறைய விஷயங்கள் சிந்திக்க கொடுத்தாங்க.

எனக்கு இந்த கேரக்டரும் ரொம்ப பிடிக்குது ஏன் தெரில எஸ் ஏகலைவன் தான் அவன் எப்ப தேவசேனாவ லவ் பண்ணி அவளோட போட்டோ கூட பேசுனதை நான் வாசித்தேனோ அப்பவே விசிறி ஆகிட்டேன். அதுவும் காதல் தானே தன்னவளை தவிர யாரையும் மனதால் கூட நினைக்காமல் யாரையும் நெருங்க விடாமல் அந்த காதல் நல்லா இருந்தது. இடையே அவன் மூடநம்பிக்கையில் மூழ்கும் முன் வரைக்கும். அவனுடைய பலவீனத்தை தூண்டிவிட போய் தான் தப்பு செய்தான். கிளாராவோட இணைத்து பேசவும் அவன் நொறுங்கிய உணர்வுகளை உணர முடிந்தது. அவன் சிறு வயது வாழ்க்கை அநியாயம் தான் அதிலிருந்து மீண்டு தேவதையாய் வந்த பெண்ணும் இல்லை யென்றால் என் செய்வான் எனக்கு அவன் மேலே பரிதாபம்தான் வந்தது.

பத்ராவை கூட பாதுகாப்பான இடத்தில் விட்ட நீங்க ஏன் தேவசேனா கேஸை மட்டும் விட்டுடீங்க நான் இதையும் இதன்யா கண்டு பிடிப்பானு நம்புனேன். எல்லாருக்கும் நியாயம் செய்தீங்க நிஷாந்த் ராக்கி லைப் கூட நல்லா இருக்கனும்னு ♥️ செய்தீங்க இதையும் கன்சிடர் பண்ணுங்க. ஏகலைவனுக்காக பண்ணுங்க.

அன்னையின் முத்தம் தகப்பனின் அணைப்பு தரும் இதம் இதனை வாசிக்கும் போது அத்தனை உணர்வு குவியல்கள். பெத்துட்டா கடமை முடிஞ்சுனு நிறைய பேர் பிள்ளைகாக தானே வேலைக்கு போறோம்னு ஓடுராங்க ஆனால் அவங்களுக்கு உண்மையான தேவை என்னனே அவங்களுக்கு புரியமாட்டிக்கு இன்னொனு இண்டிபெண்டா வளக்குறோம் தனிரூம்ல தூங்க வைக்றோம் etc எதுக்கு செவுத்துகூட பேசவா

நிஷாந்த் மேல எனக்கு இருந்த கோவம் வெறுப்பு எல்லாம் அவன் தான் நடித்தேன் உண்மை தெரியனு சொல்லும் போது ஏற்கவும் முடியாமல் ஏற்று கொண்ட மனநிலை தான் எனக்கு. அவன் மட்டும் கூட்டி செல்லாமல் இருந்தால்...

பஸ்ட் பார்ட்ல மிச்செல் ஜென்னி நித்திலராஜன் வந்தாங்க செகண்ட் பார்ட்ல அவங்கள ரொம்ப மிஸ் பண்ணேன். ரசூல் பாய் அஸ்மத் முபீனா நல்ல மனிதர்கள். முருகையா பாவம்.

த்ரில்லர் விரும்பிகளுக்கு சரியான தீனி இந்த கதை தொட்டா முடிக்காமல் வைக்க முடியாது. போட்டி கதை வெற்றி பெற வாழ்த்துக்கள்.
thank you so much ma
 

Nithya Mariappan

✍️
Writer
An absolute, heart gripping, bone chilling psycho thriller. I really enjoyed your story since I am a fan of thrillers. I was literally waiting for the last episodes. You nailed it.💜💜💜
பிரகதியை நிஷாந்த் எதற்கு லவ் செய்தான்? நடித்தானா? இதற்கு விளக்கம் இல்லையே?
நல்லா இருந்தது கதை. விறுவிறுப்பா இருந்தது. எனக்கு உங்கள் கதை ஆரம்பத்திற்கு முன்னால் எழுதும் paragraph படிக்க பிடிக்கும். எனக்கு விமர்சனம் அவ்வளவாக எழுத வராது. ஆனால் உங்கள் எல்லா கதையும் பிடிக்கும்.
உங்களுக்கு க்ரைம் கதையும் நல்லா எழுத வருகிறது. ஒவ்வொரு பதிவிலும் சஸ்பென்ஸ் வைத்து கதை நன்றாகவே சென்றது.
thank you so much
 

New Episodes Thread

Top Bottom