• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

🖊️மரம் தேடும் மழைத்துளி முன்னோட்டம்👑

Nithya Mariappan

✍️
Writer
🖊️முன்னோட்டம்👑

அவனுக்கே உரித்தான ப்ளூ டே பெர்ஃபியூமின் மணம் அவளின் நாசியை நிறைக்க இத்தனை நாட்கள் புகைப்படத்தில் மட்டும் பார்த்தவன் இன்று அவளுக்கு அருகில் அதுவும் மூச்சுக்காற்று மோதும் தூரத்தில் நின்றும் அவளால் அவனை மற்றப் பெண்களைப் போல இயல்பாக ரசிக்க முடியவில்லை.

ஆனால் அபிமன்யூவோ அவளின் இந்த நிலையை அறியாமல் நடந்த விஷயத்துக்கு இன்னும் அவள் கோபமாக இருக்கிறாள் என்று எண்ணி "ஐயாம் ரியலி சாரி! அவனோட இந்த பிஹேவியருக்கு நான் மன்னிப்பு கேட்டுக்கிறேன்" என்று மன்னிப்பு கேட்க அதன் பிறகு தான் அவளும் சமாதானமானாள்.

அவளது மனசாட்சி "இந்த இன்சிடென்ட் மோசம் தான் வனி. பட் உன்னோட டார்கெட் உன் கண்ணு முன்னாடி நிக்குது. அது போதும்" என அவளைத் தட்டிக் கொடுக்கத் தவறவில்லை.

அபிமன்யூ ஒரு கணம் அவளைக் கூர்ந்து கவனித்தவன் "உங்களை நான் இது வரைக்கும் பார்த்ததே இல்லயே" என்று சந்தேகத்துடன் அவளை ஊடுருவிப் பார்க்க அவனின் அந்த பார்வை எப்பேர்ப்பட்ட தைரியசாலியையும் உறைய வைக்கும் வல்லமை வாய்ந்ததாக இருந்தாலும் ஸ்ராவணி அதற்காக அலட்டிக் கொள்ளவில்லை.

சமாளித்தவளாய் "ஐயாம் வனி! நான்ஸியோட ஃப்ரெண்ட்" என்றுச் சொல்ல நான்ஸி என்ற ஒரு வார்த்தையில் அவன் முகம் புன்னகையைத் தத்தெடுத்தது.

"இஸிட்? ஹவ் இஸ் நான்ஸி? நான் இன்விடேஷன் அனுப்புனதுக்கு அவ வருவான்னு ரொம்ப எக்ஸ்பெக்ட் பண்ணுனேன். இப்பிடி அவளோட ஃப்ரெண்டை அனுப்பி என்னை ஏமாத்திட்டாளே" என்றான் அவன் குறும்பு மின்னும் குரலில்.

அதே பார்வையுடன் அவளை அளவிட்டவனின் ரசனை பார்வையைக் கண்டும் காணாதவளாய் டிஜேவின் இசையை கவனிக்க தொடங்கினாள் வனி.

அவன் அவளிடம் கையை நீட்டி "ஸால் வீ டான்ஸ்?" என்று சொல்ல அவள் மறுப்பின்றி சிறு புன்னகையை மட்டும் சிந்திவிட்டுக் கையிலிருக்கும் வாட்சை அழுத்தினாள்.

🖊️🖊️🖊️🖊️

அறையில் அவர்கள் மூவர் மட்டும் அபிமன்யூ மற்றும் அஸ்வினுடன் இருக்க அபிமன்யூவின் விழிகள் ஸ்ராவணியை அளவிட்டது.

அவள் மனதுக்குள் "இந்த இடியட் இப்பிடி பாப்பான்னு தெரிஞ்சு தான் நான் இவனை இண்டர்வியூ பண்ணமாட்டேனு சொன்னேன்" என்று மனதிற்குள் பொருமினாள்.

அதற்குள் ரகு வந்த இருவரிடமும் கைகுலுக்க அவர்களும் புன்னகையுடன் கைகொடுத்தனர். ரகு மேனகாயிடமும் ஸ்ராவணியிடமும் சொல்லிவிட்டு வெளியேறியதும் இப்போது நால்வர் மட்டுமே தனித்திருக்க அபிமன்யூவின் குரல் அமைதியை உடைத்தது.

"ஹலோ வனி மேடம்! எப்பிடி இருக்கிங்க?" என்று கேலியாக வினவ

அஸ்வின் அவசரமாக "டேய் இவங்க பேரு வனி இல்லடா, இது நம்ம நான்ஸிடா, மறந்து போச்சா?" என்று அவனுடன் சேர்ந்து கொள்ள ஸ்ராவணி ஒரு கணம் இருவரையும் உறுத்து விழித்தாள்.

பின்னர் கஷ்டப்பட்டு உதடுகளை இழுத்து புன்னகைத்தபடி "ஹலோ சார்! ஐ அம் ஸ்ராவணி சுப்பிரமணியம்" என்று அவனுக்கு கை கொடுக்க

அபிமன்யூ கிண்டலாக "இதாச்சும் உண்மையான பேரா? இல்ல இதுவும் டூப்ளிகேட் நேமா?" என்றதும் அவள் கொடுத்த கையை இழுக்க முயல அதற்குள் அவன் அவளின் கையைப் பற்றிக் கொண்டான்.

"ஜஸ்ட் கிட்டிங்! உடனே கோவம் வந்துடுச்சு மேடத்துக்கு!" என்று சொல்லி கையை குலுக்கியவன் அவள் கையை விட மறந்தவனாக பேச ஆரம்பிக்க ஸ்ராவணி கையை உருவ முயன்றாள்.

அவளின் முயற்சியை கள்ளச்சிரிப்புடன் பார்த்தபடியே "உங்களுக்கு எதாச்சும் கிஃப்ட் குடுக்கணுமே" என்று சொல்ல

ஸ்ராவணி பல்லை கடித்தபடி "அதுக்கு ஒரு அவசியமும் இல்ல" என்று சொன்னவள் அவன் கையில் பட்டென்று ஒரு அடி வைக்க அவன் திகைத்தவனாய் அவளின் கையை விடுவித்தான்.

🖊️🖊️🖊️🖊️

அவள் கடுப்புடன் "இப்போ அது ஒன்னு தான் கொறச்சல்! அப்படி கேட்டாலும் மேடையில சுட்ட வடையை தான் இங்கேயும் சுடுவான் இந்த இடியட். என்னால இதுக்கு மேல எந்த பொய்யையும் கேக்க முடியாதுடா" என்றாள் சலிப்பாக.

வெயில் வேறு அடிக்கவே அவளால் நிற்க முடியவில்லை. அவள் அங்கிருந்து நகர முயலும் போது மேடையிலிருந்து இறங்கி வந்தான் அபிமன்யூ.

வணக்கம் சொன்னபடி அஸ்வினுடன் ஏதோ பேசிக் கொண்டு வந்தவன் நிருபர்கள் கேட்டக் கேள்விகளுக்கு பதிலளித்தபடியே நகர வர்தன் "வனி இவருக்கு இப்போவே பொலிடிஷியன் லுக் வந்துடுச்சுல்ல" என்று சிலாகிக்க ஸ்ராவணி அவனை பார்த்து பொய்யாய் அதிசயித்தாள்.

"அப்பிடியா? உங்க ஊருல ஒயிட் பேன்ட் ஒயிட் ஷேர்ட் போட்டவனெல்லாம் பொலிடிஷியனா? நல்லா காமெடி பண்ணுற மேன். இதுக்கு நாளைக்கு சிரிக்குறேன். இப்போ கிளம்பலாமா?" என்று கிண்டலடித்தபடி வர்தனுடன் பைக் நிறுத்தியிருக்கும் இடத்திற்கு செல்ல அவனைத் தொடர்ந்தாள்.

🖊️🖊️🖊️🖊️🖊

அஸ்வின் சும்மா இருக்காமல் "நீங்க ரெண்டு பேரும் தமிழ்ப்பொண்ணுங்க தானே? என்னோட மச்சான் முதல் எலக்சன்லயே எவ்ளோ ஓட்டு வித்தியாசத்துல ஜெயிச்சிருக்கான்! அவனுக்கு வாழ்த்து சொல்லணும்கிற அடிப்படை பண்பாடு கூட தெரியலயே உங்களுக்கு" என்று அவர்களை தூண்டிவிட

அவனது பேச்சில் கடுப்பா மேனகா "ஆமா! உன்னோட ஃப்ரெண்ட் போர்ல ஜெயிச்சிட்டு வந்துருக்கார்! இவருக்கு ஆரத்தி எடுத்து வரவேற்காதது ஒன்னு தான் குறை. ஏய் காசைக் குடுத்து ஓட்டை வாங்குனவனுக்கு வாழ்த்து ஒன்னு தான் இப்போ இல்லன்னு வருத்தம். எரிச்சலைக் கிளப்பாம நகருங்க" என்று பல்லைக் கடித்தபடி கூறிவிட்டு ஸ்ராவணியுடன் நகர முற்பட்டாள்.

இப்போது வழியை மறித்தது அபிமன்யூ.

"அட நில்லுங்கம்மா" என்று அவன் சொல்ல ஸ்ராவணி மேனகாவை கண்காட்டி அவளை இங்கிருந்து செல்லுமாறு சொல்ல அவள் இருவரையும் முறைத்தபடி நகர்ந்தாள்.

ஸ்ராவணி அவள் சென்றதும் கையை குறுக்காக கட்டிக் கொண்டவள் அபிமன்யூவையும் அஸ்வினையும் கூரியவிழிகளால் அளவிடவே, அபிமன்யூ கேலியாக "சரி பார்ட்டிக்கு வந்துட்டிங்க. என்ன சாப்பிடுறிங்க? ஹாட் ஆர் கோல்ட்? ஸ்காட்ச், ரம், பிராண்டி ஆர் விஸ்கி...." என்று அவன் வரிசைப்படுத்த

அவள் சட்டென்று "செருப்பு" என்று இறுகிய குரலில் சொல்ல அதை கேட்ட இருவரும் பெரிய நகைச்சுவையைக் கேட்டது போலச் சிரிக்க ஸ்ராவணி முகத்தைத் திருப்பிக்கொண்டாள்.

அபிமன்யூ கிண்டலாக "செருப்புங்கிற பேருல எந்த டிரிங்க்சும் இல்லையேம்மா! நீ வேற எதாச்சும் டிரை பண்ணுறியா?" என்க

அஸ்வினோ "மச்சி! ரிப்போர்ட்டர் மேடம்கு ரெட் ஒயின் தான் பிடிக்கும்டா" என்று சொல்ல அபிமன்யூ பொய்யாக ஆச்சரியம் காட்டினான்.

அஸ்வின் அடக்கப்பட்ட சிரிப்புடன் "ஓகே மேடம் நான் உங்களுக்காக ரெட் ஒயின் எடுத்துட்டு வர்றேன்" என்றபடி நகர ஸ்ராவணியை நேருக்கு நேராக பார்த்தபடி நின்றான் அபிமன்யூ.

"லுக் மேடம்! நீயும் ரொம்ப தான் டிரை பண்ணுன. பட் நோ யூஸ். இப்போ பாரேன்! நான் நினைச்சது தான் நடந்திருக்கு. உன்னால இந்த அபிமன்யூவை ஜெயிக்கவே முடியாது. ஐ வாஸ் பார்ன் டூ ரூல்" என்று கர்வமாக உரைத்தவனை பார்த்து அடக்கமாட்டாமல் சிரித்தாள் அவள்.

"நல்ல காமெடி பண்ணுறீங்க சார். கேம் ஆஃப் த்ரோன்ஸ் ஃபேனோ? இல்ல கலீஸி டயலாக்கை பேசுறீங்களே அதான் கேட்டேன்" என்று வேண்டுமென்றே வெறுப்பேற்றியவள் அவனை கடுமையாக பார்த்தவாறே

"நாற்காலில உக்காரணும்கிற உன்னோட ஆசைக்கு முற்றுப்புள்ளி வைக்க தான் நான் பிறந்திருக்கேன் மிஸ்டர் அபிமன்யூ பார்த்திபன். இப்போ நீ ஜெயிச்சிருக்கலாம். பட் அந்த நாற்காலி உனக்கு இல்ல" என்று சொல்லிவிட்டு கையைக் கட்டிக்கொண்டாள்.

🖊️🖊️🖊️🖊️
 

Nithya Mariappan

✍️
Writer
இவ்வளவு நேரம் யோசனையில் இருந்த அபிமன்யூ எழுந்து "யார் நீங்க? திடுதிடுப்புனு வீட்டுக்குள்ள வந்தா என்ன அர்த்தம்?" என்று கேட்டபடி அவர்களிடம் வர

அவர்களின் ஒருவர் அடையாள அட்டையை காட்டி "சார் வீ ஆர் ஃப்ரம் சி.பி.ஐ. மெடிசின் பர்சேஸ் டெண்டர்ல நடந்த ஊழல் சம்பந்தமா உங்க அப்பாவை அரெஸ்ட் பண்ண வந்திருக்கோம்" என்று கூற அவன் அதிர்ச்சியில் உறைந்து போய் நின்றான்.

சகாதேவன் பதறிப்போய் " சார்! அதுல உண்மையா என்ன நடந்துச்சுனு........" என்று ஏதோ சொல்லவர அவர் அருகில் நின்ற பார்த்திபன் அவரது தோளில் கை வைத்து அழுத்தியவர் கண்களால் ஏதோ குறிப்பாய் உணர்த்த அவர் தர்மசங்கடத்துடன் அமைதியானார்.

அமைதியாக அதிகாரிகளை பார்த்தவர் "நான் உங்க கூட வர சம்மதிக்கிறேன் ஆபிசர்" என்று சொல்ல அபிமன்யூ வேகமாக அவர் அருகில் வந்து "டாட்! ஐ வோண்ட் அலோ தெம் டு அரெஸ்ட் யூ" என்று உணர்ச்சிவசப்பட்டவனாய் பேச சுபத்ரா மீண்டும் அவரின் தலையில் விழுந்த இடியில் அழ மறந்து சிலையானார்.

👑👑👑👑

இந்நேரம் அவனோட தகப்பனை நெனைச்சு பரிதவிச்சு போயிருக்கணுமே! இங்க என்ன பண்ணிட்டிருக்கான்?" என்ற யோசனையுடன் அவனை நோக்கி அடியெடுத்து வைத்தாள்.

அவள் அவன் இடத்தை அடைந்ததும் தலையில் வைத்திருந்த கையை எடுத்தவன் ஏளனமான உதட்டுவளைவுடன் " வந்துட்டிங்களா ரிப்போர்ட்டர் மேடம்" என்றபடி தரையில் இறங்கியவனின் பார்வை அவளைக் கூறுபோட ஸ்ராவணி அந்த பார்வையிலிருந்தக் கோபத்தை கறிவேப்பிலை போல ஒதுக்கி தள்ளிவிட்டாள்.

கையை கட்டிக்கொண்டு அவனை அமர்த்தலாகப் பார்க்க அபிமன்யூ "பார்ட்டில நீ ஒருத்தனை அறைஞ்சல்ல, அப்போ நீ ரொம்ப தைரியமான பொண்ணுனு நெனைச்சேன். ஆனா இப்பிடி கேவலமா என்னோட பெர்சனல் வீடியோவை லீக் பண்ணிட்டு அந்த டென்சன்ல சுத்துற டைம் பாத்து எங்க அப்பாவையும் அரெஸ்ட் பண்ண வச்சல்ல! ஹாட்ஸ் ஆஃப் ஸ்ராவணி சுப்பிரமணியம்" என்று கை தட்ட அவளுக்குமே உள்ளே கொஞ்சம் குற்றவுணர்ச்சியாக தான் இருந்தது.

மற்றவர்களின் சொந்த வாழ்க்கையை பட்டவர்த்தனமாக பறைசாற்றுவது அவளுக்குமே பிடிக்காத விஷயம் தான். ஆனால் அபிமன்யூவின் தந்தையைக் கட்டுப்படுத்தி அவரை சிறைக்கு அனுப்பப் போட்டத் தூண்டிலில் இரையாக வைக்க அந்த வீடியோ மட்டுமே அவள் வசம் இருந்தது.

"நான் டெபுடி சீஃப் மினிஸ்டரா ஆக கூடாதுனு இவ்ளோ லோ லெவல்ல இறங்கி என் அப்பாவை ஜெயிலுக்கு அனுப்பிருக்கியே! இது தான் உங்க பத்திரிக்கை தர்மமா?" என்று பல்லை கடித்தபடி கேட்க

ஸ்ராவணி சலிப்புடன் தலையை தடவிக்கொண்டவள் கேலி நிரம்பிய குரலில் “என்ன பார்த்திபன் கனவு பகல் கனவா போயிடுச்சு போலயே? எம்.எல்.ஏ சார் அதான் ரொம்ப சூடா இருக்கீங்கனு நினைக்கேன்” என்கவும் அபிமன்யூ அவளை நெருங்கி வர இருவரும் எதிரும் புதிருமாக நின்றனர்.

ஸ்ராவணி தொடர்ந்து "நீயும், உங்க அப்பனும் சுத்தமா புத்தி இல்லாதவங்கனு நீ இப்போ பேசுறதுல இருந்தே தெரியுது. லிசன்! நான் ஒன்னும் அவரை ஜெயிலுக்கு அனுப்பல. டிபார்ட்மெண்டுக்கு அவரை பத்தி கம்ப்ளெயிண்ட் பண்ணுனேன். எனக்குக் கிடச்ச ஆதாரங்களை அவங்க கிட்ட குடுத்தேன். அவ்ளோ தான்" என்று சொல்ல அபிமன்யூ இறுகிய கைமுஷ்டியை காரில் குத்தி ஆத்திரத்தைக் காண்பித்தான்.

அவனது கோபத்தைப் பொருட்படுத்தாது "அவர் அங்க இருக்கிறது தான் அவருக்கும் பாதுகாப்பு. நீ நடந்த விஷயத்தை பத்தி முழுசா தெரிஞ்சிக்காம என்னை இப்பிடி இரிடேட் பண்ணாத ஓகே!" என்று சொல்லிவிட்டு நகர முயல அதற்குள் அவள் கையைப் பற்றி இழுத்தான் அபிமன்யூ.

அவனது இறுகியபிடியில் புஜம் வலிக்க தொடங்கவே "லீவ் மீ இடியட்! இல்லனா செக்யூரிட்டியை கூப்பிட வேண்டியிருக்கும்" என்று ஸ்ராவணி சொல்ல அவன் கோபத்தில் சிவந்த விழிகளால் அவளை வெறித்தபடியே பேசத் தொடங்கினான்.

"எப்போவும் சந்தோசம் மட்டுமே நிறைஞ்சிருக்கிற எங்க வீடு இன்னைக்கு சோகமயமா இருக்க நீ தான் காரணம். உன்னோட ஸ்டுப்பிட் நியாயம், தர்மம் இதெல்லாம் விட எனக்கு எங்க அப்பா தான் முக்கியம். காட்ஃபாதர்டி அவர் எனக்கு. அவரை ஜெயிலுக்கு அனுப்பி எங்க அம்மாவோட கண்ணீருக்கும் காரணமாயிட்டல்ல! பதவியேத்துக்க இன்னும் ஒரே ஒரு நாள் தான் இருக்கு. அதுக்கு அப்புறமா ஏன்டா இவன் கிட்ட மோதுனோம்னு உன்னை நினைக்க வைக்கல, நான் அபிமன்யூ இல்லடி" என்று கோபத்துடன் உரைத்தவனின் கையை உதறினாள் ஸ்ராவணி.

அவனை கேலியுடன் பார்த்தவள் "ஒரு நாளுக்கு அப்புறம் நீ என்ன சி.எம்மா ஆக போற? நீ வெறும் எம்.எல்.ஏ தான்டா! உன்னால என்னை எதுவும் பண்ண முடியாது. பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம் தம்பி" என்று கிண்டலாகச் சொல்லிவிட்டு அவன் பதிலுக்குக் காத்திருக்காமல் நடக்கத் தொடங்கினாள் அவள்.

அவள் செல்வதை கடுப்புடன் பார்த்தவன் காரினுள் அமர்ந்து கார் கதவை படீரென்று சாத்திவிட்டு " நீ பண்ணுன இந்த காரியம் எப்பிடி என் குடும்பம் மொத்தத்தையும் உலுக்கி, என் அப்பாவோட கவுரத்தை நாசம் பண்ணுச்சோ அதே மாதிரி உன் வாழ்க்கைலயும் இதே சம்பவங்களை நடத்தி காட்டல, நான் பார்த்திபனுக்கு பிறந்தவன் இல்லடி" என்று இறுகிய குரலில் சொன்ன அபிமன்யூ அரைவட்டமடித்து அந்த காம்பவுண்டிலிருந்து காரைக் கிளப்பி வெளியேறினான்.

👑👑👑👑

ஹாய் ஃப்ரெண்ட்ஸ்

மரம் தேடும் மழைத்துளி பழைய நந்தவனம் சைட்ல 2019ல் நான் எழுதுன நாவல்... அரசியல்வாதி கம் லாயரான ஹீரோ அபிமன்யூ, ஜெர்னலிஸ்ட் ஸ்ராவணி இவங்க ரெண்டு பேருக்கும் நடுவுல நடக்குற மோதல் பழிவாங்கல் காதல் தான் இந்தக் கதை...
இப்ப அதை நம்ம சைட்ல ரீரன் பண்ணப் போறேன்... செவ்வாய்கிழமைல இருந்து ஒரு நாள் விட்டு ஒரு நாள் எபி வரும் மக்களே!

eiMR8AM92178.jpg
 

Latest profile posts

அன்பனின் ஆரபி 1 - 4 எபி போயிருக்கு. டெய்லி எபி உண்டு மக்களே... Follow karo
IIN இனியா கதை முடிவுற்றது மக்களே.
மே 31 வரைக்கும் சைட்ல இருக்கும். க்ரைம் நாவல் விரும்பிகள் படிக்கலாம்.
ஹலோ மக்களே
இனியா கதை எபி 80 வரை சைட்ல போட்டாச்சு.
நீ பார்த்த விழிகள் நாவலின் லிங்க் ஏப்ரல் 30 செவ்வாய் வரை தான் ஆக்டிவா இருக்கும், இன்னும் படிக்கலன்னா சீக்கிரம் படிச்சிடுங்க

https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/சித்ரா-வெங்கடேசனின்-நீ-பார்த்த-விழிகள்.372/

New Episodes Thread

Top Bottom