• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

☔முன்னோட்டம்☔

Nithya Mariappan

✍️
Writer
☔ முன்னோட்டம் ☔

“மிசஸ் சித்தார்த், நீங்க உங்களோட முடிவுல உறுதியா தான் இருக்கீங்களா? இல்ல யோசிக்கணுமா?”

வழக்கறிஞரை எவ்வித தயக்கமுமின்றி ஏறிட்டாள் யசோதரா. இந்த முடிவை எடுப்பதற்குள் அவள் எத்தனை முறை மனதுக்குள் குமுறியிருப்பாள் என்பதை அவள் மட்டுமே அறிவாள். ஆனால் இனியும் யோசிப்பதில் பலனில்லை. ஏனெனில் அவள் செய்யும் தாமதம் அவளது காதலைக் கேலிக்கூத்தாகி விடும். அவளது குடும்பத்தின் ஜீவனை வதைத்துவிடும்.

“என்னோட டிசிசன்ல நான் ஸ்ட்ராங்கா இருக்கேன் லாயர் சார்... ஐ வாண்ட் டிவோர்ஸ்... இதுக்கு மேல ஒரு நிமிசம் கூட என்னால மிஸ்டர் சித்தார்த்தோட ஒய்பா வாழ முடியாது... அப்பிடி நான் அவரோட ஒய்பா வாழ்ந்தேன்னா என் குழந்தையோட எதிர்காலம் கேள்விக்குறி ஆயிடும்... என் பொண்ணுக்காக நான் எதையும் செய்வேன்” என்றவளின் குரலில் தெரிந்த உறுதியைக் கண்டு திகைத்தார் அவர்களின் குடும்ப வழக்கறிஞர் ஞானசேகரன்.

💔💔💔💔

“இன்னைக்கு நடக்கப்போற அவார்ட் செரிமோனில நான் தான் யங்கஸ்ட் நாமினேசன் தெரியுமா? ஆனா நீ ஃபங்சனுக்கு வரமாட்டேனு சொல்லுற... ஏன் மய்யூ இப்பிடி?” அங்கலாய்த்தபடி தனது முழுக்கை சட்டை மீது கருநீலவண்ண ப்ளேசரை அணிந்தான் மாதவன்.

“ஏன்னா எனக்கு உன் சினி ஃபீல்டோட கேமரா ஃப்ளாஷ், பகட்டான பேச்சு, போலியான சிரிப்பு இதெல்லாம் பாத்தா அலர்ஜி மாதிரி ஃபீல் ஆகுது மேடி... இது தெரிஞ்சு தானே நீ என்னை லவ் பண்ணி மேரேஜூம் பண்ணுன... இப்போ அவார்ட் பங்சனுக்கு வானு சொன்னா என்ன அர்த்தம்?” என்று கேட்டபடி அவனது மொபைலை எடுத்து மயூரி.

மாதவன் பெருமூச்சுவிட்டபடி அவளை ஏறிட்டவன் “நம்மள காதலிக்கிறவங்களுக்குகாக சில விசயங்களை விட்டுக் குடுக்கலாம் மய்யூ” என்றான்.

“ஆனா யாருக்காகவும் நம்மளோட இயல்பை மாத்திக்க முடியாது மேடி” என்றாள் அவனது மனையாள் தீர்மானமாக.

இதற்கு மேல் அவளை வற்புறுத்தும் எண்ணமற்றவன் “அட்லீஸ்ட் பப்புவ கூட்டிட்டுப் போகவாச்சும் பெர்மிசன் உண்டா?” என்று வினவி அவளை கடுப்படித்தான்.

“நானே வரமாட்டேன்னு சொல்லுறேன்... இதுல என் பையனை மட்டும் எப்பிடி அனுப்புவேன்னு நினைச்ச நீ? அந்த பாப்பராஸி கிட்ட இருந்து எங்களோட ப்ரைவேட் லைஃபை காப்பாத்திக்க நான் எவ்ளோ பிரயத்தனப்படுறேனு எனக்குத் தான் தெரியும் மேடி... இந்த லைம்லைட்ல நீ மட்டும் நனைஞ்சா போதும்... நானும் என் மகனும் அதை ரசிக்கிற இடத்துல நிக்கத் தான் ஆசைப்படுறோம்” என்று அவள் விளக்கமளிக்க மாதவன் அவளது பதிலில் அமைதியானான்.

இது வழக்கமாக நடக்கும் விவாதம் தான். பிரபலங்கள் அவர்களது தனிப்பட்ட வாழ்க்கையை இயல்பாக சாதாரண மக்களைப் போல வாழ முடிவதில்லை. காரணம் நம் மக்களுக்கு அவர்களின் பிரபலத்துவத்தின் மீதிருக்கும் கண்மூடித்தனமான வெறி!

அந்த குருட்டுப்பக்தி பொது இடங்களிலோ பொது நிகழ்வுகளிலோ பிரபலங்கள் பங்கேற்கும் போது அவர்களிடம் அன்பு என்ற பெயரில் எல்லை மீறுவது, புகைப்படம் எடுக்கிறேன் என அனுமதியின்றி நடந்து கொண்டு அவர்களை எரிச்சல் மூட்டுவது, அவர்களை காணும் ஆர்வத்தில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துவது என பல்வேறு பரிமாணங்களில் வெளிப்படுவது வழக்கம்.

இவை எதுவுமில்லாத அமைதியான இயல்பான வாழ்க்கையை மயூரியும் தனது மகனும் வாழட்டும் என எண்ணியவன் கடுப்பே உருவாக நின்றவளை தன் வசம் இழுத்து அணைத்துக் கொண்டான்.

“உடனே புரொபசருக்கு மூக்கு மேல கோவம் வந்துடுச்சா? என்னோட ஹேப்பியான மொமண்ட்ல நீ என் கூட இருக்கணும்னு ஆசைப்பட்டேனே தவிர உனக்கு அது அன்கம்பர்டபிளா இருக்கும்னு யோசிக்கல.. ஐ அம் சாரி... நான் போய்ட்டு சீக்கிரமா வந்துடுறேன்.. அது வரைக்கும் தாங்குற மாதிரி ஒரு கிஸ் குடு பாப்போம்” என்று கன்னத்தைத் தட்டிக்காட்ட அவனது அருகாமையில் கோபம் தீர்ந்து இதழ் பதித்தாள் மயூரி.

💕💕💕💕

“குட்டிப் பாப்பாக்கு இலக்கியானு நேம் வைப்போமா மம்மி?”

கண்களை உருட்டிக் கேட்டவனின் கன்னத்தில் அழுந்த முத்தமிட்ட ஹேமலதா “என் செல்லக்குட்டி சொன்ன பேர் எவ்ளோ அழகா இருக்கு... இதையே வச்சிடுவோம்” என்றாள்.

“எனக்கும் இந்த பேர் பிடிச்சிருக்குடா” என்றார் சாந்தநாயகி. அவரருகே அமர்ந்திருந்த யசோதரா கேலியாக அவரைப் பார்த்தவள்

“ஐயோ ஆன்ட்டி டிபிக்கள் மாமியாரா நீங்க இவ கூட சண்டை போடணும்... புரியலயா? அது என்ன பெண்குழந்தைனு சொல்லுற... எனக்குச் சிங்கக்குட்டி மாதிரி பேரன் தான் பிறப்பான்” என்று உரத்தக்குரலில் நடித்துக் காட்ட மயூரியுடன் தமக்கையை ஒட்டி அமர்ந்திருந்த சாருலதா விழுந்து விழுந்து சிரிக்க ஆரம்பித்தாள்.

“இவங்க அக்கா கூட சண்டை போட்டாங்கனா அது தான் இந்த உலகத்தோட எட்டாவது அதிசயம் யசோக்கா... மாமியாரும் மருமகளும் ஓவர் கொஞ்சல் குலாவல்.. அதை பாக்குறப்போ எனக்கு வரப்போற மகராசி என்ன பண்ண காத்திருக்காளோனு ஒரு சின்ன பயம் வருது” என்று போலியாய் கவலை காட்டினாள் அவள்.

அவளது தலையில் நறுக்கென்று குட்டிய ஹேமலதா “அவங்க வர்றப்ப பாத்துக்கலாம்... நீ அதுக்கு முன்னாடியே அவ இவனு மரியாதை இல்லாமலா பேசுற?” என்று முறைக்க பால்கனியிலிருந்து திரும்பிய கௌதம் புன்சிரிப்புடன் மனைவியைப் பார்த்தான்.

“இப்போ தான் சித்து கிட்ட பேசுனேன்... நானும் அவரும் கமிங் ஃப்ரைடே சுவாமிஜிய பாக்க போறோம்” என்று அவன் கூறவும் அங்கிருந்த பெண்களின் முகம் யோசனையாய் அவனை நோக்கி திரும்பியது.

அதில் முக்கியமானவள் யசோதரா.

“ஒர்க்கிங்டேல போய் பாக்குற அளவுக்கு அப்பிடி என்ன அவசரம்?” கேட்டவள் மயூரி. ஒரே கல்லூரியில் பணியாற்றுபவர்கள் அல்லவா!

“என் பொண்ணு பிறக்குறப்பவே அவரோட ஆசிர்வாதத்தோட பிறக்கணும்னு ஆசைப்படுறேன்... தட்ஸ் ஒய்” என்று தோளைக் குலுக்கியவன் ஹேமலதாவிடம்

“நான் குட்டிமாவுக்கு நேம் கூட செலக்ட் பண்ணிட்டேன்... என்ன பேர் தெரியுமா? ருத்ரா” என்றான் புன்னகையுடன்.

அதை கேட்டதும் நந்தனின் முகம் வாடியது. அவனது குட்டி தங்கைக்கு அவன் தேர்ந்தெடுத்த பெயர் கிடையாதாம்! வருத்தம்!

அவனது வருத்தம் பெண்களையும் பாதித்தது. அத்துடன் கௌதம் சொன்ன காரணம் யசோதராவின் மூன்றாவது கண்ணைத் திறந்துவிட்டது.

“ஸ்வாமிஜியோட பேரை வச்ச நேரம் நம்ம பொண்ணுக்கு எல்லாமே நல்லதா நடக்கும் ஹேமா”

ஹேமா புருவம் சுருக்கி “ஸ்வாமிஜி?” என்று கேள்வியாய் நோக்க

“சர்வ ருத்ரானந்தாவ பத்தி தான் பேசுறேன்... அவரோட பேரை தான் நம்ம பொண்ணுக்கு வைக்கப்போறேன்”

அந்தப் பதிலில் எரிச்சலுற்ற யசோதரா “இங்க பாரு கௌதம், ருத்ராங்கிறது சர்வேஸ்வரனோட பேர்... அந்த அர்த்தத்துல நீ வச்சேனா நோ ப்ராப்ளம்... ஆனா சாமியாரை மீன் பண்ணி தான் வைக்குறேனா உன்னை மாதிரி அடிமுட்டாள் எவனும் இல்ல... ஏன்டா உன் புள்ள செலக்ட் பண்ணுன பேரை விட எவனோ ஒரு சாமியார் உனக்கு முக்கியமா போயிட்டானா?” என்று பொரிந்து தள்ள ஆரம்பித்தாள்.

ஹேமலதாவோ கணவனை முறைத்து வைக்க சாருலதா அவனுக்குப் பரிந்து பேச வந்தாள்.

“ஸ்வாமிஜி இதுல என்ன தப்பு பண்ணுனார் யசோக்கா?”

“வாயை மூடு... உங்க பக்தி பரவசத்தை எல்லாமே உங்க கூடவே வச்சுக்கோங்க... குழந்தை விசயத்துல தலையிட்டீங்கனா அவ்ளோ தான்” என்று கடுகடுத்த யசோதரா அங்கே வருத்தம் தோய்ந்த முகத்துடன் நின்ற நந்தனை தூக்கிக் கொண்டாள்.

“செல்லக்குட்டி நீ செலக்ட் பண்ணுன நேமையே குட்டிப்பாப்பாக்கு வச்சுடலாம்... சரியா?” என்று அவனது கன்னத்தில் முத்தமிட நந்தனுக்குக் கொண்டாட்டம். அவனைப் பெற்றவனோ முகம் வாட நின்றான்.

😎😎😎😎

“வாவ்! அண்ணா சாரு இஸ் த வின்னர்... அண்ணா லுக் அட் திஸ் சைட்... ஷீ இஸ் த வின்னர் ஆப் நேஷ்னல் போட்டோகிராபி அவார்ட்... பிரகதீஸ்வரர் கோயில் கோபுரத்தை எவ்ளோ அழகா போட்டோ எடுத்திருக்கா பாருங்கண்ணா”

கண்கள் ஜொலிக்க இந்திய அரசாங்கத்தின் தகவல் மற்றும் ஒளிபரப்பு துறையின் கீழ் இயங்கும் போட்டோ டிவிசன் இணையதளத்தைப் பார்த்து உற்சாகத்துடன் கத்தினான் இந்திரஜித்.

சித்தார்த்தும் மாதவனும் அவனருகே சென்றவர்கள் மடிக்கணினியின் திரையைக் கவனிக்க அங்கே ‘வின்னர் ஆப் நேஷ்னல் போட்டோகிராபி அவார்ட் அமெச்சூர் லெவல் – குமாரி சாருலதா' என்று எழுத்துகள் கண்ணில் படவும் புருவங்கள் உயர அவளைத் தங்களுக்குள் பாராட்டிக் கொண்டனர்.

இந்திரஜித் இருவரிடமும் திரும்பியவன் “ஃபைனலி சொன்னத செஞ்சுட்டா அவ... நான் அவளை விஷ் பண்ணியே ஆகணும்ணா... சொல்லுங்க... அவளுக்கு என்ன கிப்ட் குடுக்கலாம்?” என்று தோழிக்குப் பரிசைத் தேர்ந்தெடுக்க அவர்களின் உதவியைக் கேட்கவும் இருவரும் முறுவலுடன் அவனைப் பார்த்தனர்.

மாதவனோ கண்களில் குறும்பு மின்ன “அவ புரொபசனல் போட்டோகிராபர்... அவளுக்கு என்ன கிப்ட் குடுத்தா யூஸ்புல்லா இருக்கும்னு யோசி... அது டெய்லி அவ யூஸ் பண்ணுறதா இருக்கணும்... ஒவ்வொரு தடவை அதை பாக்குறப்போவும் உன் நியாபகம் வரணும்... அதே நேரம் அதோட லைப் கொஞ்சம் அதிகமா இருக்கணும்” என்றான் மாதவன்.

இந்திரஜித் சில நொடிகள் யோசித்தவன் “யுரேகா... அவளுக்கு டெய்லி யூஸ் ஆகுறது கேமரா தான்... சோ நான் இருக்குறதுலயே பெஸ்ட் டி.எஸ்.எல்.ஆரை அவளுக்கு கிப்ட் பண்ணப்போறேன்” என்றான் குதூகலத்துடன்.

💘💘💘💘
 

Nithya Mariappan

✍️
Writer
“சர்மி குட்டிக்கு அப்பா மேல கோவமா?” என்று கேட்டுவிட்டு அவளைப் போலவே கன்னத்தை காற்று நிரப்பிய பலூனைப் போல உப்ப வைத்தபடி உம்மென்று நின்றான் சித்தார்த்.

“ஆமா! நீங்க என் கிட்ட பொய் சொல்லிட்டிங்க... இன்னைக்கு என்னோட ஆன்வல் டே பங்சனுக்கு வர்றேனு சொல்லிட்டு வராம ஏமாத்திட்டீங்க... போங்கப்பா... என் கூட பேசாதிங்க” என்று கரங்களைக் கட்டிக்கொண்டு மூக்கைச் சுருக்கினாள் சர்மிஷ்டா, சித்தார்த் மற்றும் யசோதராவின் ஆறு வயது புதல்வி.

“அப்பாக்கு ஷூட்டிங்ல டைம் ஆயிடுச்சுடா... எப்பிடி சாரி கேட்டா உன் கோவம் குறையும்? தோப்புக்கரணம் போடவா?” என்று கேட்க

“ஊஹூம்”

“ஐஸ் க்ரீம்?”

“மம்மி ஐஸ் க்ரீம் சாப்பிடக்கூடாதுனு ஸ்ட்ரிக்டா ஆர்டர் போட்டிருக்காங்க”

“ம்ம்... ஃபைன்ட் அவுட்... சாக்லேட்ஸ்”

“வேண்டாம்... கேவிட்டி வரும்னு ஆட்ல பாத்தேன்”

சித்தார்த் தன்னை ஆட்டி வைத்த குட்டி இளவரசியைச் சமாதானம் செய்யும் வழியறியாது ஆயாசத்துடன் இடுப்பில் கையூன்றி நிற்க அவன் பின்னே சலங்கையொலியால் சிரிப்புச்சத்தம் கேட்டது.

சிரிப்புக்குச் சொந்தக்காரி யசோதராவே தான். அவன் முன்னே வந்தவள் அவனைக் கண்டுகொள்ளாது குழந்தையிடம் குனிந்தவள்

“நான் பெத்த தங்கமே! உங்கப்பாவ ஷட்டப் பண்ண வைக்குறதுனு ஒரு ஆர்ட்னா அதுல நீ தான்டி பிகாசோ” என்று கொஞ்சியபடி அவளைத் தூக்கி தட்டாமாலை சுற்ற கிண்கிணி நாதமாக சிரித்தாள் சர்மிஷ்டா.

“பாட்டி உனக்காக பனானா புட்டிங் பண்ணிருக்காங்க... பனானால என்ன இருக்குனு மம்மி சொல்லிருக்கேன்?”

“பொட்டாசியம்” கண்களை உருட்டி அபிநயித்த சர்மிஷ்டாவின் கன்னத்தில் தட்டியவள் “யெஸ்... போய் சமத்துப்பொண்ணா சாப்பிடு பாப்போம்” என்று அவளை அனுப்பிவைத்தாள்.

அவள் சென்றதும் இவ்வளவு நேரம் இருந்த விளையாட்டுத்தனம், சிரிப்பு அகன்று கடுமை குடியேறியது அவளது வதனத்தில்.

“இன்னைக்கு நீ ஏன் வரல சித்து? என் கிட்டவும் ஷூட்டிங்ல லேட்னு கதை சொல்லாத... நான் ஒன்னும் சர்மிஷ்டா இல்ல... அவளைப் பெத்தவ... டெல் மீ த ரியல் ரீசன்”

சித்தார்த் அவளது விசாரணை தொனியில் எரிச்சலுற்று “ஐ அம் நாட் அ கிட் யசோ... நீ பேசுறது புருசன் கிட்ட பொண்டாட்டி பேசுற மாதிரி இல்ல... சின்னப்பசங்க கிட்ட அவங்கம்மா என்கொயரி பண்ணுற மாதிரி இருக்கு... சேஞ்ச் யுவர் டோன்” என்றான்.

“இல்லனா என்ன பண்ணுவ?” வெகு தெனாவட்டாக அவளிடம் இருந்து வார்த்தைகள் விழவும்

“இல்லனா என் கிட்ட நீ எதிர்பாக்குற பதில் கிடைக்காது... ஏன்னா என்னை யாரும் கண்ட்ரோல் பண்ணுனா எனக்குப் பிடிக்காது... அது நீயா இருந்தாலும் சரி” என்றபடி பால்கனிக்குச் செல்ல எத்தனித்தவன் அப்படியே நின்றான்.

ஏனெனில் அவனது கரம் யசோதராவின் அழுத்தமான பிடியிலிருந்தது. அவளது முகம் கடுமையை பூசியிருந்தது.

“என்னோட பொறுமைய நீ பலகீனம்னு எடுத்துக்காத சித்து... என்னைக்கு என் பொறுமை எல்லை மீறுதோ அன்னைக்கு விளைவுகள் மோசமா இருக்கும்... முதல்ல நம்ம பொண்ணு கிட்ட பொய் சொல்லுறத நிறுத்து... உன்னால பிராமிசை காப்பாத்த முடியலனா ப்ராமிஸ் பண்ணாத... ஏன்னா நீ குடுக்குற ஏமாற்றங்களை தாங்கிக்குற அளவுக்கு அவளுக்கு இன்னும் பக்குவம் வரல”

சித்தார்த் என்ன நினைத்தானோ தனது கரத்தைப் பிடித்திருந்தவளின் கைகளை மெதுவாக உருவியவன் அவளது வதனத்தை தன் கரங்களில் ஏந்திக்கொண்டான்.

அவனது பார்வை யசோதராவின் விழிகளில் நிலைத்தது. திருமணமாகி ஏழு வருடங்களில் அவளின் விழிகளில் சுடர் விடும் தன்னம்பிக்கையும் நேர்மையும் இப்போதும் அணுவளவும் குறையவில்லை. அவனுக்கு எப்போதுமே யசோதராவின் விழிகளில் தொலைவது பிடிக்கும்.

இப்போதும் ஆதியும் அந்தமும் இல்லாத ஒரு மாயாஜால உலகிற்கு தன்னை அழைத்துச் செல்லும் கருவிகளான அவளது கருவிழிகளை ஆழ்ந்து நோக்கினான். விட்டால் கருவிழிகளுக்குள் புகுந்துவிடுவான் போல!

அவள் எண்ணமிடும் போதே அவளது நெற்றியில் இதழ் பதித்தவன் “இப் யூ கீப் டிஸ்டென்ஸ் ஃப்ரம் மீ, ஐ வில் ப்ரேக் யசோ... சமீபகாலமா நீ என்னை விட்டு கொஞ்ச கொஞ்சமா விலகிட்டிருக்குறது உனக்குப் புரியுதா? உனக்கும் எனக்கும் இடையில கருத்துவேறுபாடுகள் வரலாம்... அதை பேசியோ சண்டை போட்டோ ஷாட் அவுட் பண்ணிக்கலாம்... ஆனா இந்த இடைவெளி வேண்டாம் யசோ... இட்ஸ் ஹர்ட்டிங்” என்றவனின் குரல் உடைந்திருக்க எந்தக் கருவிழிகளில் சில நொடிகளுக்கு முன்னர் தொலைந்தானோ அதே கருவிழிகள் இப்போது கண்ணீர்க்கடலில் தத்தளிக்கத் துவங்கின.

அவற்றின் சொந்தக்காரியோ “நான் உன்னை விட்டு விலகல சித்து... நீ தான் என்னை விலக்கி வச்சிட்ட... ஐ பெக் யூ, இனிமே நீ எனக்குத் தேவையே இல்லனு என் வாயால சொல்லவச்சிடாத... பிகாஸ் ஐ அம் லூசிங் மை ஹோப் அண்ட் மை லவ் டூ” என்றவள் அவனது கரத்தை விலக்கிவிட்டு அங்கிருந்து அகன்றாள்.

👊👊👊👊

“என்ன சார் நீங்க வெறுமெனே போய்ட்டு வந்திருக்கீங்க? அட்லீஸ்ட் அங்க நடந்ததை உங்க போன் கேமரால ரெக்கார்ட் பண்ணிருக்கலாமே”

அதை கேட்ட தயானந்த் சத்தமாகச் சிரித்தவர் “மேடம் இன்னும் நீங்க என்னை லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி தயானந்த்னு நினைச்சுப் பேசுறீங்க... என் பதவியையும் அதிகாரத்தையும் நான் இழந்து பல வருசங்கள் ஆகுது... ரெக்கார்ட் பண்ணுறதெல்லாம் உங்களை மாதிரி இன்வெஸ்டிகேட்டிவ் ஜர்னலிஸ்ட்கள் செய்ய வேண்டிய வேலை... என்னால முடிஞ்ச விவரங்களை நான் உங்களுக்குச் சொல்லுறேன்... மத்த வேலைகளை நீங்க தான் பாக்கணும்” என்றார்.

“அதுவும் கரெக்ட் தான் சார்... நீங்க என்னோட மெயிலுக்கு டாக்மெண்ட்ஸை ஃபார்வேர்ட் பண்ணிருங்க”

“கவர்மெண்ட் என்னோட மொபைல் போன் ஸ்பீஸ்ல இருந்து எல்லாத்தையும் கவனிக்குது மேடம்... சோ எப்பிடி டார்க்நெட் கால் பண்ணுனேனோ அதே போல அதுல உள்ள மெயில் ஃபெஷிலிட்டியவே யூஸ் பண்ணுறேன்... உங்களுக்கு இங்க மெயில் ஐ.டி இருக்குதா?”

இப்போது சத்தமாகச் சிரிப்பது யசோதராவின் முறை. இருள் இணையத்தின் இண்டு இடுக்குகளில் நுழையுமளவுக்கு இப்போது அவளுக்கு அது அத்துப்படி.

“நான் சொல்லுறேன்... நோட் பண்ணிக்கோங்க” என்றவள் தனது மின்னணு அஞ்சல் முகவரியைக் கொடுத்துவிட்டு இணைப்பைத் துண்டித்தாள்.


🖊️🖊️🖊️🖊️

“ஐ அம் ப்ரெக்னென்ட்” என்றாள் யசோதரா முகம் மாறாமல்.

சித்தார்த் அதில் இன்பமாய் அதிர்ந்தவன் இவ்வளவு நாட்கள் இருந்த இறுக்கம், கோபம் எல்லாம் காற்றிலிட்ட கற்பூரமாக மறைய சந்தோசத்தில் புன்னகைத்தான்.

கூடவே குறும்பாக அவளைப் பார்த்தபடி “அன்னைக்கு நடந்த இன்சிடென்டுக்கு அப்புறம் நீ டிவோர்ஸ் முடிவுல இருந்து பின்வாங்கல... இப்போவும் பிடிவாதமா இருக்கப்போறீயா?” என்று ‘இன்சிடென்டை’ அழுத்தி உச்சரிக்க அது எந்த மாதிரி நிகழ்வு என்று தெரிந்தவளுக்கு முகம் சிவந்து போனது.

“கொஞ்சம் கூட கூச்சநாச்சமே இல்ல இவனுக்கு” என்று மனதிற்குள் முணுமுணுத்தவள் வெளிப்படையாகவும் பேச ஆரம்பித்தாள்.

“ஆமா... இப்போவும் சொல்லுறேன், ஐ வான்ட் டிவோர்ஸ்” என்று உறுதியாக மொழிந்தவளின் நாசி நுனி கோபத்தில் சிவக்க அடுத்த நொடி அது அவளது கணவனின் கரங்களுக்குள் சிறைபட்டது.

செல்லமாக நிமிண்டியவன் “இந்த மாதிரி டைம்ல கோவப்படக்கூடாது டார்லிங்.... எங்க சிரி பாப்போம்” என்று அவளது கன்னத்தைப் பிடித்து இழுக்க அவனது கரங்களை தட்டிவிட்டவள்

“யூ நோ ஒன் திங், டிவோர்சுக்கு அப்ளை பண்ணுன ஒய்பை இப்பிடி பேசி மனசை மாத்த ட்ரை பண்ணுறேனு நான் அடுத்த ஹியரிங்ல சொல்லுவேன்” என்று மிரட்டினாள்.

“இன்னுமா நமக்கு டிவோர்ஸ் கிடைக்கும்னு நீ நம்புற யசோ? அப்பாவிப்பொண்ணு” என்று அவளது முகம் வழித்து நெட்டி முறித்தவன் குறும்பாக அவளை நோக்கினான்.

“நம்ம டிவோர்சுக்கு அப்ளை பண்ணி ஹியரிங் நடக்குற நேரத்துல தான் நீ ப்ரெக்னெண்ட் ஆகியிருக்க யசோ... இதுக்கு மேல நமக்கு டிவோர்ஸ் குடுக்குறதுக்கு ஃபேமிலி கோர்ட்ல இருக்குற ஜட்ஸ் என்ன காமெடி ஷோ ஜட்ஜா? போடி... போய் ஹாஸ்பிட்டலுக்குக் கிளம்ப ரெடியாகு” என்று கேலி செய்தபடி திரும்பியவன் “அப்பா” உற்சாகத்துடன் கத்திக்கொண்டு வந்து அவனை அணைத்த சர்மிஷ்டாவைத் தூக்கிக்கொண்டான்.

“பிரின்சஸ் என்னை மிஸ் பண்ணுனியா?”

“ஆமாப்பா... ரொம்ப்ப்ப்ப” என்று அவள் கையை விரித்து அளவு காட்டவும் அவளது பூங்கரத்தில் முத்தமிட்டான் சித்தார்த்.

“இனிமே நீயும் மம்மியும் என்னை மிஸ் பண்ணவே மாட்டீங்க... ஏன் தெரியுமா?”

தெரியவில்லையே என உதட்டைப் பிதுக்கி சைகை காட்டினாள் அவனது இளவரசி.

மகளைப் பார்த்துவிட்டு பார்வையை யசோதராவிடம் திருப்பியவன் “ஏன்னா நம்ம வீட்டுக்குக் குட்டிப்பாப்பா வரப்போகுது... என் பிரின்சஸ்கு தம்பி பிறக்கப்போறான்” என்று சொல்லிவிட்டு கண்ணைச் சிமிட்டவும் அவளுக்கு உள்ளுக்குள் புகைந்தது.

அவள் பல்லைக் கடிக்கவும் பறக்கும் முத்தத்தை அளித்துவிட்டு மகளுடன் வெளியேறினான் சித்தார்த்.

அவன் சென்றதும் “குழந்தை இருக்காளேனு யோசிக்கவே மாட்டான்... சினிமால நடிச்சு நடிச்சு வீட்டுலயும் ரோமியோ அவதாரம் எடுக்குறது... தனியா சிக்கட்டும், அப்போ இருக்கு இவனுக்கு” என பொருமித் தீர்த்தாள் யசோதரா.

💑💑💑💑

“பேனிங் டெக்னிக் யூஸ் பண்ணி இந்தப் போட்டோவ எடுத்துடலாம்” என்று சாருலதா உதவியாளனிடம் கூற

“பேனிங் அண்ட் ப்ளர் யூஸ் பண்ணுனா இன்னும் ஃபயரா இருக்கும் சாரு” என்றான் அவன்.

அவர்களின் போட்டோகிராபி பாஷை புரியாத ஒரு ஜீவன் கார் ரேசிங்கின் போது அணியும் உடையுடன் ஹெல்மெட்டை கையில் வைத்துக் கொண்டு மற்றொரு கரத்தை இடுப்பில் ஊன்றி குழம்பிக்கொண்டிருந்தது.

ஒருவழியாக சாருலதாவும் உதவியாளனும் பேசிமுடித்துவிட்டு திரும்ப “இப்போவாச்சும் போட்டோஷூட் ஆரம்பிக்கலாமா?” என்று அங்கலாய்த்த அந்த உருவம் இந்திரஜித்தே தான்.

சாருலதா அவனது கையிலிருந்த ஹெல்மெட்டைப் பிடுங்கி தலையில் கவிழ்த்துவிட்டு “ஓவரா பேசுனேனு வையேன், சங்கிமங்கி மாதிரி போட்டோ பிடிச்சுடுவேன்... ஒழுங்கா கார்ல போய் உக்காரு... நீ காரை டிரைவ் பண்ணுறப்போ தான் நாங்க ஷூட் பண்ணுவோம்” என்றாள்.

இந்திரஜித்தோ “அதெல்லாம் ஒன்னும் தேவையில்ல... நான் நிக்குற போஸ்லயே நீ போட்டோ எடு... இட்ஸ் இனாஃப்” என்று மறுக்க

“டேய் நான் சொன்ன மாதிரி ஷூட் பண்ணுனா தான் நீ கார் ரேசர் மாதிரி இருப்ப... இந்த போஸ்ல பவர் ரேஞ்சர் மாதிரி இருக்க... ஒழுங்கா கார்ல உக்காரு” என்று பல்லைக் கடித்த சாருலதா சொன்னதோடு அவனைத் தள்ளியும் விட்டாள்.

“போட்டோஷூட்டுக்குக் காசு செலவாக கூடாதுனு உன்னைக் கூப்பிட்டேன்ல, அதுக்கு நீ என்னை தள்ளியும் விடுவ, காரை என் மேல ஏத்தவும் செய்வ... மன்னிச்சுக்கோ தெய்வமே! இதோ போறேன்” என்று சொல்லிவிட்டு ரேஸ் காரினுள் அமர்ந்தான் இந்திரஜித்.

அவனது கார் ரேஸ் வழித்தடத்தில் சீறிப் பாயத் தயாராக சாருலதாவும் தனது புகைப்படக்கருவியுடன் அவனைப் படம் பிடிக்கத் தயாரானாள்.

💘💘💘💘💘

ஹாய் ஃப்ரெண்ட்ஸ்😍

வந்தாயே மழையென நீயும் – பார்ட் 2வோட முன்னோட்டம் இது... இது முதல் பாகத்தோட தொடர்ச்சில ஆரம்பிச்சு அதுல இருந்து ஏழு வருசம் கழிச்சு நடக்கப்போற கதை... முதல் கதையில வந்த சேம் கேரக்டர்ஸ் தான் இதுலயும் வருவாங்க... எக்ஸ்ட்ரா சிலர் மட்டும் ஆட் பண்ணிருக்கேன்... முதல் பாகம் மாதிரி இந்தக் கதையும் உண்மை + கற்பனை கலந்த கதை தான்... கதை மே மாதம் தான் வரும் மக்களே! அது வரைக்கும் பொறுமை காக்கவும்!

நன்றி🙏

நித்யா மாரியப்பன்🦋
 

Vaishali Mohan

New member
Member
இந்த முறை நாலு கபில்ஸ் கதையா:eek:
சித்து💏யசோ
மேடி💑மய்யூ
கௌதம்👨‍👩‍👧‍👦ஹேமா
ஜித்து👫சாரு
சீக்கிரம் வாங்க💞
 

Nithya Mariappan

✍️
Writer
இந்த முறை நாலு கபில்ஸ் கதையா:eek:
சித்து💏யசோ
மேடி💑மய்யூ
கௌதம்👨‍👩‍👧‍👦ஹேமா
ஜித்து👫சாரு
சீக்கிரம் வாங்க💞
வருவாங்கடே... நீ ஸ்பாயிலர் எதையும் போட்டுடாத தெய்வமே😂
 

Nithya Mariappan

✍️
Writer
டீசர்🖊️👑
“கிரேட் பவர் கம்ஸ் வித் கிரேட் ரெஸ்பான்சிபிளிட்டி, யூ ஹேவ் டூ அண்டர்ஸ்டான்ட் யுவர் ரெஸ்பான்சிபிளிட்டி அபி” கடினக்குரலில் கூறினாள் ஸ்ராவணி.

ஆனால் எதிரில் நின்றவனோ உதடு பிரிக்காது சிரித்துவிட்டு “நேத்து நைட் நீயும் அதியும் ஸ்பைடர் மேன் மூவி பாத்த எஃபெக்ட் உன் பேச்சுல தெரியுது வனி” என்று கூறிவிட்டு கவுச்சில் சாய்ந்து அமர்ந்து கொண்டான்.

ஸ்ராவணி அவனது கேலியில் கோபமுற்று முறைத்தாள்.

“ஷட்டப் மிஸ்டர் அபிமன்யூ! ஸ்டேட்டோட சி.எம் மாதிரி நடந்துக்கோங்க... இவ்ளோ இர்ரெஸ்பென்சிபிளா பேசுறதுக்காக உங்களை அந்த நாற்காலில உக்காரவைக்கல”

“நான் சி.எம்மா நடந்துக்க வேண்டிய இடம் அசெம்ப்ளி தான்... வீடு இல்ல... இங்க நான் வெறும் அபி... உன்னோட ஹஸ்பெண்ட் அண்ட் அதி ஆரவ்வோட அப்பா மட்டும் தான்... என்னோட சி.எம் பதவிய நான் வாசல்ல செருப்பை கழட்டுறப்போவே கழட்டி வச்சிட்டுத் தான் வீட்டுக்குள்ள வர்றேன்... ஆனா நீ தான் இங்கயும் ரிப்போர்ட்டர் ஸ்ராவணி சுப்பிரமணியமாவே நடந்துக்கிற... நம்ம முன்னாடியே இதை பத்தி நிறைய பேசிருக்கோம் வனி... ஒய் டோண்ட் யூ அண்டர்ஸ்டாண்ட்? அரசியல் பேச்சை வீட்டுல பேசாத... அப்பிடி பேசுனா வீட்டோட நிம்மதி போயிடும்”

“வீட்டோட நிம்மதில இவ்ளோ அக்கறை இருக்குறவன் பொண்டாட்டியோட பேச்சைக் காது குடுத்து கேக்கலாமே”

“வீட்டைப் பொறுத்தவரைக்கும் நீ ஒய்பா பேசுனா என் காதுல விழும்.... ரிப்போர்ட்டரா நீ என்ன கத்துனாலும் எனக்கு காது கேக்காது வனி... ஐ அம் ஹெல்ப்லெஸ்”

இதற்கு மேல் பேச ஏதுமில்லை என்று கையை விரித்தவனை நிராசை ததும்பும் விழிகளால் ஏறிட்டாள் ஸ்ராவணி. ஒருவர் மற்றொருவரின் அலுவல் விசயத்தில் தலையிடமாட்டோம் என்பது திருமணத்திற்கு முன்னர் அவர்கள் எடுத்த முடிவு. அதை அவள் மீறிக்கொண்டு தான் இருக்கிறாள். ஆனால் வேறு வழியுமில்லை.

எப்போதுமே அபிமன்யூவின் அரசியல் நிலைபாடுகள் நீதி நேர்மை நியாயம் இதையெல்லாம் பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை. கேட்டால் சாணக்கிய நீதியைப் பற்றி பாடமெடுப்பான்.

இன்றோ இது பற்றிய விவாதம் இனி நேராத அளவுக்கு முற்றுப்புள்ளியே வைத்துவிட்டான். என்ன சொல்லி அவன் மனதை மாற்றுவது என்பது புரியாமல் குழம்பி போனாள் ஸ்ராவணி.

*********
ஹாய் ஃப்ரெண்ட்ஸ்

போற போக்குல ஒரு டீசர் மட்டுமே😉 மெல்லிசையே கதை 35 அத்தியாயம் உள்ளது மக்களே😉 அந்தக் கதை முடிஞ்சதும் இந்தக் கதை ஆரம்பிக்கும்... அது வரைக்கும் காத்திருக்கவும்🤗

நன்றி🙏
நித்யா மாரியப்பன்🦋
 

Ezhilanbu

Administrator
Staff member
Writer
டீசர்🖊️👑
“கிரேட் பவர் கம்ஸ் வித் கிரேட் ரெஸ்பான்சிபிளிட்டி, யூ ஹேவ் டூ அண்டர்ஸ்டான்ட் யுவர் ரெஸ்பான்சிபிளிட்டி அபி” கடினக்குரலில் கூறினாள் ஸ்ராவணி.

ஆனால் எதிரில் நின்றவனோ உதடு பிரிக்காது சிரித்துவிட்டு “நேத்து நைட் நீயும் அதியும் ஸ்பைடர் மேன் மூவி பாத்த எஃபெக்ட் உன் பேச்சுல தெரியுது வனி” என்று கூறிவிட்டு கவுச்சில் சாய்ந்து அமர்ந்து கொண்டான்.

ஸ்ராவணி அவனது கேலியில் கோபமுற்று முறைத்தாள்.

“ஷட்டப் மிஸ்டர் அபிமன்யூ! ஸ்டேட்டோட சி.எம் மாதிரி நடந்துக்கோங்க... இவ்ளோ இர்ரெஸ்பென்சிபிளா பேசுறதுக்காக உங்களை அந்த நாற்காலில உக்காரவைக்கல”

“நான் சி.எம்மா நடந்துக்க வேண்டிய இடம் அசெம்ப்ளி தான்... வீடு இல்ல... இங்க நான் வெறும் அபி... உன்னோட ஹஸ்பெண்ட் அண்ட் அதி ஆரவ்வோட அப்பா மட்டும் தான்... என்னோட சி.எம் பதவிய நான் வாசல்ல செருப்பை கழட்டுறப்போவே கழட்டி வச்சிட்டுத் தான் வீட்டுக்குள்ள வர்றேன்... ஆனா நீ தான் இங்கயும் ரிப்போர்ட்டர் ஸ்ராவணி சுப்பிரமணியமாவே நடந்துக்கிற... நம்ம முன்னாடியே இதை பத்தி நிறைய பேசிருக்கோம் வனி... ஒய் டோண்ட் யூ அண்டர்ஸ்டாண்ட்? அரசியல் பேச்சை வீட்டுல பேசாத... அப்பிடி பேசுனா வீட்டோட நிம்மதி போயிடும்”

“வீட்டோட நிம்மதில இவ்ளோ அக்கறை இருக்குறவன் பொண்டாட்டியோட பேச்சைக் காது குடுத்து கேக்கலாமே”

“வீட்டைப் பொறுத்தவரைக்கும் நீ ஒய்பா பேசுனா என் காதுல விழும்.... ரிப்போர்ட்டரா நீ என்ன கத்துனாலும் எனக்கு காது கேக்காது வனி... ஐ அம் ஹெல்ப்லெஸ்”

இதற்கு மேல் பேச ஏதுமில்லை என்று கையை விரித்தவனை நிராசை ததும்பும் விழிகளால் ஏறிட்டாள் ஸ்ராவணி. ஒருவர் மற்றொருவரின் அலுவல் விசயத்தில் தலையிடமாட்டோம் என்பது திருமணத்திற்கு முன்னர் அவர்கள் எடுத்த முடிவு. அதை அவள் மீறிக்கொண்டு தான் இருக்கிறாள். ஆனால் வேறு வழியுமில்லை.

எப்போதுமே அபிமன்யூவின் அரசியல் நிலைபாடுகள் நீதி நேர்மை நியாயம் இதையெல்லாம் பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை. கேட்டால் சாணக்கிய நீதியைப் பற்றி பாடமெடுப்பான்.

இன்றோ இது பற்றிய விவாதம் இனி நேராத அளவுக்கு முற்றுப்புள்ளியே வைத்துவிட்டான். என்ன சொல்லி அவன் மனதை மாற்றுவது என்பது புரியாமல் குழம்பி போனாள் ஸ்ராவணி.

*********
ஹாய் ஃப்ரெண்ட்ஸ்

போற போக்குல ஒரு டீசர் மட்டுமே😉 மெல்லிசையே கதை 35 அத்தியாயம் உள்ளது மக்களே😉 அந்தக் கதை முடிஞ்சதும் இந்தக் கதை ஆரம்பிக்கும்... அது வரைக்கும் காத்திருக்கவும்🤗

நன்றி🙏
நித்யா மாரியப்பன்🦋
இந்தக் கதையில் இந்த ஜோடியும் வர்றாங்களா?

இந்தக் கதை படிக்கத்தான் காத்திருக்கேன். சீக்கிரம் ஆரம்பிமா :love:
 

Latest profile posts

IIN இனியா கதை முடிவுற்றது மக்களே.
மே 31 வரைக்கும் சைட்ல இருக்கும். க்ரைம் நாவல் விரும்பிகள் படிக்கலாம்.
ஹலோ மக்களே
இனியா கதை எபி 80 வரை சைட்ல போட்டாச்சு.
நீ பார்த்த விழிகள் நாவலின் லிங்க் ஏப்ரல் 30 செவ்வாய் வரை தான் ஆக்டிவா இருக்கும், இன்னும் படிக்கலன்னா சீக்கிரம் படிச்சிடுங்க

https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/சித்ரா-வெங்கடேசனின்-நீ-பார்த்த-விழிகள்.372/
மக்களே சைட் ஒர்க் போகுது. விரைவில் சரி செய்யப்படும்

New Episodes Thread

Top Bottom