• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

வதைக்குமுன் மௌனமொழி

Chithu

✍️
Writer
மௌனமென்ற
சொல்லும்
ஆயுதமாகும்
எதிர்பார்க்கும்
உறவுகளும்
உபயோகித்து
வதைக்கும்
வேளையதில்...


அனைவரின் எதிர்ப்பையும் மீறி, அவள் வார்த்தைக்காகக் காத்துக் கொண்டிருந்தான் அஸ்வின்.
ஆனால் அவளோ மௌனமே தன் மொழியென நின்றிருந்தாள்.
"டேய், இன்னும் என்னடா அவளையே பார்த்துட்டு இருக்க...?அவ தான் உன் கூட வர மாட்டேன் சொல்லிட்டாளா? இன்னும் எதுக்கு டா இங்க இருக்க...? " அவளது இறந்து போன கணவனின் தந்தை, அஸ்வினின் சட்டையை பிடிக்காத குறையாகக் கத்தினார்.


"சூழ்நிலை கைதியாக அவளை மாத்தி வர மாட்டேன் சொல்ல வச்சுட்டீங்க...!அவ வேற என்ன சொல்ல போறாள். உங்க மகன் இறந்துட்டான். உங்களுக்கு வடிச்சு கொட்டவும் உங்க தேவையை தீர்க்கவும் உங்களுக்கு வேலைகாரி வேணும் அதுக்கு தானே அவளை உங்க கூட வைச்சிருக்கீங்க. உங்க பிள்ளை இருக்கும் போது, அவளை எவ்வளவு சிரம படுத்துனீங்க, நானே கண்கூடாகப் பார்த்து இருக்கேன்... இன்னும் சிரமத்தை கொடுத்து அவ வாழ்க்கையை அழிக்க போறீங்களா...? " எனக் கேட்கவும் பதிலின்றி அமைதியானார் அவர்.


"இன்னமும் ஏண்டி மௌனமாக இருந்து என்னை கொல்லுற. உன் புருசனையே நீ நினைச்சு வாழறளவுக்கு உன்னை தாங்கு தாங்குன்னு தாங்கள அவன். காதலா கூட பேசல, ஏதோ உன்னை கட்டி வச்சுட்டாங்களேன்னு வாழ்ந்தான். உனக்கு குழந்தை இல்லைன்னு இவங்க குத்திக் கட்டும் போது கூட, அவன் தனக்கும் இந்தப் பிரச்சனை இருக்குமோ நினைக்காம பழியை உன் மேல போட்டு, அடுத்த கல்யாணத்துக்குத் தயாரானான். அவனை நினைச்சு உன் வாழ்நாளை இழக்கப் போறீயா...? " தன் ஆத்திரம் முழுவதையும் அவளிடம் காட்ட, அதற்கும் கண்ணீரையும் மௌனத்தையும் அம்மடந்தைப் பதிலாகத் தந்தாள்.


" பேச மாட்டேளே நீ! அவ்வளவு அழுத்தமாடி உனக்கு... இந்த ஊர் என்னை என் அம்மா அப்பாவை தான் பேசுவாங்கணும். அவங்களுக்கு தானே அசிங்கம்ன்னு மத்தவங்களைப் பத்தியே நினைச்சிட்டு இரு.. உன்னை பத்தி யோச்சிடாத உன் வாழ்க்கையை பத்தி யோச்சிடாத என்ன...! நீ ஒண்ணும் வாழ்ந்து முடிந்த அறுபது வயது கிழவி இல்லை.. இன்னும் வாழ்க்கை என்னான்னு பார்க்காத அரும்பு மொட்டு, பூக்கிறதுக்குள்ள காய்ந்து உதிர நினைக்காத..." என்றான்.

" அவ பேசமாட்டா தம்பி, எங்களுக்காக, எங்களை நினைச்சு, நீங்க கேக்குற
எதுக்கும் பதில் சொல்ல மாட்டாள். மௌனமா இருப்பாளே தவிர, அவளுக்கு வேண்டியதை கேட்டு கூட வாங்க மாட்டாள். ஒத்தப்பிள்ளையா போயிட்டா அதுவும் பொம்பல பிள்ளையா போயிட்டானு வீட்டுக்குள்ளே வைத்து வளர்த்துட்டோம்... எங்க பேச்சை கேட்கும் படியே வளர்த்துட்டோம். அதுனால தான் இவ இப்படி இருக்காள் " என்றார் ஷண்மதியைப் பெத்தவர்.

" பேசுமா, உன் விருப்பத்தை சொல்லுமா...! எங்களை நினைக்காத நாங்க வாழ்ந்து முடிஞ்சவங்க... ஆனால் நீ வாழ்க்கையே தொடங்காதவள்... அந்தத் தம்பிக் கூடப்போயிருமா..." எனக் கெஞ்ச,


" அப்பா...! " என உதிர்த்தாள் அப்பெரும் வார்த்தையை..
" இங்க யாரும் இரண்டாவது கல்யாணம் பண்ணிக்கிலையமா? இந்த உலகம் என்ன பேசினாலும் பரவாயில்லை நீ உன் ஆசை படி வாழுமா..." என்றார்.
" எப்படி பா, கணவனோட ஃபிரண்டையே கல்யாணம் பண்ணிக்க... எல்லாரும் என்னைதானே தவறாக பேசுவாங்க? "

" உன்னை பேசுறவன் தான் உன்னை வாழவைக்கிறானா? பேசவே படைக்க பட்ட ஜென்மம் நாம.. பேசலைன்னா தான் ஆச்சரியம்... பேசுறாங்கன்னு வாழமா முட்டாளாக இருக்க போறீயா.. எப்ப உன் புருஷன் செத்து போயிட்டானோ, அவன் கட்டுன தாலி உன் கழுத்துல இருந்து போனதோ அவன் உன் புருஷன் இல்லை. இப்போ நான் உன்னை காதலிக்கிற சாதாரண மனுசன். என்னை ஏத்துக்கோ, உன்னை நானே படிக்க வைக்கிறேன். நீ படிச்சு முடிச்சதும் நாம கல்யாணம் பண்ணிக்கலாம். என்னை நம்பி வா... " அவள் முன் கையை நீட்டி அழைத்தான்.

மௌனம் சாதித்தவள், அந்த மௌனத்தையே சம்மதமாக்கி அவன் கரங்களில் தன் கரங்களை வைத்தாள்.
தன் நண்பனுக்கு மனைவியாகும் முன்னே ஷண்மதியை எங்கோ பார்த்து பிடித்து காதலிக்கத் தொடங்கிருந்தான் அஷ்வின்... ஆனால் விதியின் விளையாட்டால் தன் காதலி, தன் நண்பனின் மனைவியாகிட, அவளை நண்பனின் மனைவியாகவே பார்த்தான்.

தன் நண்பனும் அவனது பெற்றோர்களும் அவளை நடத்தும் விதத்தை பார்த்து உள்ளுக்குள் கண்ணீர் வடித்தான்.
தன் வீட்டில் ராணியாக வாழவேண்டியவள் வேலைக்காரியாக வாழ்கிறாள் என்று நித்தமும் கலங்காத நாளில்லை. அதற்கு விடிவு காலமாய் தன் நண்பன் ஆக்சிடென்டில் இருந்திட, எல்லாம் அவள் மேல் பழி சுமத்தி, குத்திக் காட்டிப்பேசி தன் வீட்டிலே வேலைக்காரியை விட மோசமாக நடத்தினார்கள். இவளும் பொறுத்துக் கொண்டு ஒருவருடம் கழித்தாள்.


அதையெல்லாம் கண்டு பொறுக்காதவன், அவளிடம் நேரடையாகக் கேட்டதன் விழைவாக, ஆறுமாதம் கழித்து இன்றே அவளிடம் சம்மதம் கிடைத்தது.
இரண்டு வருடம் கழித்து இருவரும் தங்கள் பெற்றோர்களின் சம்மதத்துடன் திருமணம் செய்துக் கொண்டனர்.
 

Baby

Active member
Member
இது சும்மாவா இல்ல எதும் கதையா...
 

Latest profile posts

நீ பார்த்த விழிகள் நாவலின் லிங்க் ஏப்ரல் 30 செவ்வாய் வரை தான் ஆக்டிவா இருக்கும், இன்னும் படிக்கலன்னா சீக்கிரம் படிச்சிடுங்க

https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/சித்ரா-வெங்கடேசனின்-நீ-பார்த்த-விழிகள்.372/
மக்களே சைட் ஒர்க் போகுது. விரைவில் சரி செய்யப்படும்
#முள்ளில்லா_முல்லைப்பூ-முழுநாவல்(ஏப்ரல் 22 இரவு 10 மணிவரை மட்டுமே)

மக்களே... நிறைய பேர் இன்னும் பாதி கதையில் இருப்பதாக சொன்னதால் முள்ளில்லா முல்லைப்பூ கதை நாளை (ஏப்ரல் 22) இரவு 10 மணிக்கு ரிமூவ் செய்யப்படும். அதற்கு மேல் டைம் கேட்காதீர்கள் மக்களே... கதையை பப்ளிஷ்க்கு அனுப்பிட்டேன். அதனால் அதற்கு மேல் லிங்க் வைத்திருப்பது கஷ்டம். புரிந்து கொள்வீர்கள் என்று நினைக்கிறேன்🙂


https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/எழிலன்புவின்-முள்ளில்லா-முல்லைப்பூ.382/
மக்களே சைட்டில் எரர் வந்தால் ஒரு இரண்டு நிமிடத்திற்கு பிறகு மீண்டும் பாருங்கள் ஒர்க் ஆகும்.
முள்ளில்லா முல்லைப்பூ கதை லிங்க் ஏப்ரல் 21 இரவு 10 மணி வரை மட்டுமே இருக்கும் மக்களே...

New Episodes Thread

Top Bottom