• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

ரோஜா

zeenath khaja

New member
Member
#நந்தனம்போட்டிகதைகள்
ரோஜா நந்தவனம் அவர்கள் எழுதிய "மயிலாப்பூரு மயிலே ஒரு இறகு போடம்மா" ரைட்டர்ஜி கதைக்கு ஏன் மயிலாப்பூரு மயிலே என பெயர் வைத்தீர்கள் 🤔
வெற்றி... தேன்மொழி...
கதிர்.. புவனேஸ்வரி..
வெற்றி தேன்மொழி இருவரும் கண்களால் மட்டுமே காதலித்து கொண்டிருக்க.. பேச முயற்சி செய்த வெற்றி தேன்மொழியின் அருகில் செல்ல அவனின் வரவால் தெரித்து ஓடிய தேன் மொழியின் மனதை புரிந்து கொண்டு கண்களாலயே அவளை பார்ப்பது மட்டுமே போதும் என காலம் வரும்வரை காத்திருக்க முடிவு செய்கிறான்.. இவளை பெண் கேட்டு வரும் வேலையில் இவளின் தந்தை அவளுக்கு விருப்பம் இல்லை என்பது போல் பேசும் போது மொழி என்று இவனின் ஆளுமையான குரலும் அதற்கு அவளின் எதிர்வினையும் அருமை 👏👏 கதிர் புவனா நண்பர்களாக இருப்போம் என நட்பு வளர்த்துக் கொண்டு ஒருவருக்கு ஒருவர் பேசிக் கொண்டாலும் கதிருக்கு இவளின் மேல் காதல் என்பதை புரிந்து கொள்கிறான்... ஆனால் அதை புரிந்து கொள்ள முடியாமல் சிறு பிள்ளைகளோடு விளையாடிக் கொண்டிருக்கும் புவனாவிற்கு கோபத்தோடு அவன் ஊரை விட்டு சென்ற பிறகே தன் மனதில் உள்ள காதல் புரிகிறது... வெற்றி மற்றும் கதிர் இருவரும் ஒருவருக்கொருவர் பேசிக் கொள்வதில்லை இவர்கள் இருவருக்கும் உள்ள உறவு முறை என்ன... சுந்தரம் மற்றும் மாணிக்கத்தால் வெற்றியின் வாழ்வில் நடந்தது... கதிர் ஏன் எப்போதும் வெற்றியின் பாட்டியிடம் வம்பு வளர்க்கிறான் என அனைத்து டுவிஸ்ட் களையும் ஒன்றன்பின் ஒன்றாக விடுவித்தது அருமை... கதிர்ந்தாய் மீனாட்சி என் நிலைமை கொண்ட காதலில் வெற்றி பெற்றாலும் அந்த வாழ்க்கை அவருக்கு மகிழ்வை தரவில்லை அதோடு அடுத்தவரின் கீழான பார்வையும் தாங்கிக் கொண்டு வாழ்ந்த அவரின் கதாபாத்திரம் அருமை👏👏அழகான எழுத்து நடையோடு விறுவிறுப்பாகவே நடந்தது. கதை நீங்கள் வெற்றி பெற என் மனமார்ந்த வாழ்த்துக்கள் டியர் 🥰👏
Good luck 🌹💐🥰
 

ரோஜா

✍️
Writer
அழகான விமர்சனம் 😍😍💞💞

ரொம்ப ரொம்ப நன்றி சகி 🥰🥰🥰🥰

டைட்டில்க்கு அர்த்தம்... ஹீரோ ஹீரோயின் ட்ட அவங்க மனச, காதல கொடேன் என கேட்பது... 😅

Catchy ஆஹ் இருக்குன்னு வச்சேன்.

இனி சரியா டைட்டில் சூஸ் பண்றேன். 😊

எல்லாவற்றையும் குறிப்பிட்டு அழகாக சொன்னமைக்கு மிக்க நன்றி sis ... 🥰🥰
 

New Episodes Thread

Top Bottom