• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

யுத்தம் செய்தாய் என்னுள்ளே - எழிலன்பு

Arthy

✍️
Writer
💕💐யுத்தம் செய்தாய் என்னுள்ளே💐💕

முதல் அத்தியாயத்தில் மணிவர்மன் இராணுவ வீரர் என்றதுமே கதை எனைக் கவர்ந்துவிட்டது. கண்டிப்பாக வாசிக்க வேண்டும் என்று தோன்ற, 18 வது அத்தியாயம் வரைக்கும் தொடர்ந்து வாசித்துக் கருத்தளித்துக் கொண்டிருந்தேன். இப்போது மீதி அத்தியாயங்களை மொத்தமாக வாசித்து முடித்தேன். வாசிக்காது போயிருந்தால் நல்லதொரு வாசிப்பை மிஸ் செய்திருப்பேன் என்று கடைசி பகுதியில் தோன்றிக்கொண்டே இருந்தது.

மிகச் சராசரியான குடும்பத்துடன் பயணிக்கும் கதை. வெளியே இருந்து இராணுவம், காவல்துறை என்று மதிப்புடனும் பிரமிப்புடனும் பார்ப்பது வேறு. அவர்களுடன் வாழ்க்கை என்பது வேறு. எல்லா உறவினர்களும் ஒன்று போல் யோசிப்பது கிடையாது.

அவரவர்களுக்குத் தங்கள் வாழ்க்கை என்று வரும் போது மிலிட்டரி என்றால் அவ்வாழ்க்கையுடன் இணைய, தங்களை இணைத்துக்கொள்ள பயமும் தயக்கமும் வருவது சகஜமே. தாங்கள் அனுபவித்த வாழ்க்கையை வைத்தே நேர்மறை, எதிர்மறை என்று சிந்திக்க முடியும்.

கருத்துச் சுதந்திரம் எல்லோருக்கும் உண்டு. அதனை வெளிப்படுத்தும் விதமும், கால நேரமும் தான் முக்கியம். எதற்கும் தக்கத் தருணம் உண்டு. ஒருவர் புண்படாமல், துன்புறாமல் பேசுவது அவசியம்!

எழுத்தாளர் எழிலன்பு இவற்றையெல்லாம் கதையில் அழுத்தமாகப் பதிந்திருக்கிறார்.

கதை முழுவதும் எங்கும் மிகையில்லாமல் நல்ல எழுத்து நடை. ஒவ்வொரு கதை மாந்தரும் அந்தந்த இடத்தில் கச்சிதமாகப் பொருந்திப் போகிறார்கள்.

கோகிலா போன்று மாமியார் அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்! 😍😍😍 அற்புதமான பெண்மணி! இந்துமதியும் கீர்த்தனாவும் கொடுத்து வைத்தவர்கள் என்றே தோன்றுகிறது. லேசாக ஜே கூட அவர்கள் மீது!

மணிவர்மன் குடும்பத்தில் அத்தனை பேரும் அருமையான மனிதர்கள்! மகேஷ்வரன் இந்துமதி மற்றும் உலகநாதன் எல்லோரும் மயிலறகாய் மனத்தை வருட… மணிவர்மன் கலக்கலாக மனத்தை நிறைக்கிறான். கிடைக்கும் சந்தர்ப்பம் அனைத்தும் தப்பாமல் ரொமான்ஸ் பண்ண உபயோகித்துக்கொள்கிறான் கள்ளன்.

ரொமான்ஸ் வராதா எழிலுக்கு? எந்த வாசகர் அப்படிச் சொன்னது? இந்தக்கதையை வாசிக்கச் சொல்லுங்க. கீர்த்தனா - வர்மாவை நினைத்தாலே புன்னகை தானாகவே மலர்கிறது. 😊😊😍😍🥰🥰🤗🤗 அடிச்சுத் தூக்குறாங்க! சில இடங்களில் வெக்கம் கம்மிங்! 😅🙈🙈

கீர்த்தனா அடிக்கும் லூட்டி, அவளது அடாவடித்தனம், அவளுடைய பண்பும் அன்பும் அனைத்துமே இரசிக்க வைக்கிறது! எந்த மாதிரி பெண்ணிவள்! செம! 😍😍😍😘😘😘

வனிதா, திருமலை, கதிர்வேலன் கூட சூப்பர்! மணிவர்மனின் நட்புகள் வரும் பகுதி ஜாலியாக இருந்தது. நான் உணர்வு மிகுதில் கண் கலங்கிய பகுதியும் கதையில் உண்டு. மொத்தத்தில் நல்ல வாசிப்பு! 💕😍

வாழ்த்துகள் எழில்! 💕💐

அன்புடன்,
ஆர்த்தி ரவி
 

Latest profile posts

ஹலோ மக்களே
இனியா கதை எபி 80 வரை சைட்ல போட்டாச்சு.
நீ பார்த்த விழிகள் நாவலின் லிங்க் ஏப்ரல் 30 செவ்வாய் வரை தான் ஆக்டிவா இருக்கும், இன்னும் படிக்கலன்னா சீக்கிரம் படிச்சிடுங்க

https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/சித்ரா-வெங்கடேசனின்-நீ-பார்த்த-விழிகள்.372/
மக்களே சைட் ஒர்க் போகுது. விரைவில் சரி செய்யப்படும்
#முள்ளில்லா_முல்லைப்பூ-முழுநாவல்(ஏப்ரல் 22 இரவு 10 மணிவரை மட்டுமே)

மக்களே... நிறைய பேர் இன்னும் பாதி கதையில் இருப்பதாக சொன்னதால் முள்ளில்லா முல்லைப்பூ கதை நாளை (ஏப்ரல் 22) இரவு 10 மணிக்கு ரிமூவ் செய்யப்படும். அதற்கு மேல் டைம் கேட்காதீர்கள் மக்களே... கதையை பப்ளிஷ்க்கு அனுப்பிட்டேன். அதனால் அதற்கு மேல் லிங்க் வைத்திருப்பது கஷ்டம். புரிந்து கொள்வீர்கள் என்று நினைக்கிறேன்🙂


https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/எழிலன்புவின்-முள்ளில்லா-முல்லைப்பூ.382/
மக்களே சைட்டில் எரர் வந்தால் ஒரு இரண்டு நிமிடத்திற்கு பிறகு மீண்டும் பாருங்கள் ஒர்க் ஆகும்.

New Episodes Thread

Top Bottom