• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

யமுனை ஆற்றிலே ஈர காற்றிலே INTRO

Vathsala Raghavan

✍️
Writer
அன்பு தோழமைகளே

இந்த தளத்தில் உங்களை எல்லாம் சந்திப்பதில் மகிழ்ச்சி.

இப்போது 'யமுனை ஆற்றிலே..... ஈர காற்றிலே......!!!' கதையுடன் இங்கே உங்களை எல்லாம் சந்திக்க வந்திருக்கிறேன்.

இந்த முறையும் நான் காதலை தான் பாட வந்திருக்கிறேன். அதோடு என் மனதில் உறுத்திக்கொண்டிருந்த, நான் நேரில் கண்ட சில நிகழ்வுகளையும் சேர்த்துக்கொண்டிருக்கிறேன்.

முதலில் சாதரணமாகத்தான் ஆரம்பித்தேன் இந்த கதையை. ஆனால் எழுத எழுத இந்த கதையை, முக்கியமாக இந்த கதையில் வரும் 'கோதை' கதாபாத்திரத்தை என்னையும் அறியாமல் ரசிக்க ஆரம்பித்து விட்டேன்.

அதே போல் இன்னுமொரு கதாபாத்திரம் 'முரளி'. இந்த கதையை எழுதி முடித்த பிறகு இந்த கதாபாத்திரத்தை போல் எதற்கும் அலட்டிக்கொள்ளாமல் என்னால் இருந்து விட முடியுமா என முயன்று கொண்டிருக்கிறேன்

இவர்களுடன் சேர்த்து இன்னும் சில இனிமையான கதாபாத்திரங்களுடன், ஒரு இதமான குடும்ப கதையை கொடுக்க முயற்சி செய்திருக்கிறேன். நீங்களும் படித்து பாருங்களேன்.

வாரம் இரு முறை திங்கள் மற்றும் வியாழக் கிழமைகளில் மதியம் ஒரு மணிக்கு பதிவுகள் வரும் தோழமைகளே!

படித்து மகிழுங்கள்.

இந்தக் கதைக்கு உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிந்து நீங்கள் புத்தக பரிசையும் வெல்லலாம்.

விவரங்கள் இங்கே


ப்ரியங்களுடன்
வத்சலா ராகவன்
 

Ezhilanbu

Administrator
Staff member
Writer
வருகைக்கு நன்றி சிஸ்.

நாங்களும் முரளி, கோதையைச் சந்திக்க தயாராக இருக்கிறோம். ♥️😍
 

பிரிய நிலா

Well-known member
Member
செம சிஸ்..
கோதை அண்ட் முரளி எப்படினு நானும் தெருஞ்சுக்க ஸ்டார்ட் பண்ணப் போறேன்..
 

New Episodes Thread

Top Bottom