மேன்மேலும்
மேன்மேலும் உழைக்க வேண்டும். மேன்மேலும் தவறு செய்துகொண்டே போனால் மொழி என்னவாகும்? மேன்மேலும் கடன் வாங்குவது தவறு. மேன்மேலும் செலவு வந்துகொண்டே இருக்கிறது.
சிலர் இதை 'மென்மேலும்' என எழுதிவிடுவது தப்பு. மேலும்மேலும், மேன்மேலும் என்பன அடுக்குத் தொடர்கள்.
அடுக்குத் தொடரில் இரண்டு சொற்களும் ஒரே சொல் வடிவாய் இருக்கும். தீதீ, பாம்புபாம்பு எனக் காட்டுவர். மென்மேலும் என்பதில் அவ்வாறு அமையவில்லை. அது தவறு, அப்பட்டமான பிழை.
எனவே மேலும்மேலும் சிந்தித்துச் சொல்லி எழுதிப் பழகினால் தமிழ்மொழி மேன்மேலும் சீர்மை பெறும்.
//தமிழண்ணல் அவர்கள் எழுதிய தமிழில் அடிக்கடி நேரும் பிழைகளும், திருத்தமும் நூலிலிருந்து//