• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

பொருத்து, பொறுத்து எது சரி?

Ezhilanbu

Administrator
Staff member
Writer
பொருத்து , பொறுத்து

இந்த இரண்டு சொற்களும்
எழுதும்போது குழப்பமடையாதோர்
இருக்க முடியாது. அந்த அளவுக்கு
நம்மை பாடாய்ப்படுத்திய
சொற்கள் இவை இரண்டும்.

' பொருத்து' என்றால் ஒன்று சேர்
என்று பொருள்.

இந்தச் சக்கரத்தை வண்டியில்
'பொருத்து என்று சொல்வதுண்டு.


' பொறுத்து 'என்றால் தாங்கிக் கொள்ளுதல் , ஏற்றுக் கொள்ளுதல் போன்ற பொருள்களில் பயன்படுத்தப்படும் சொல்லாகும்.

பொறுத்தல்- தாங்கிக் கொள்ளுதல், பொறுமையாக
இருத்தல்,ஏற்றுக்கொள்ளுதல்


என்னைப் பொறுத்தமட்டில்
என்று எழுதும்போது வல்லின 'ற'கரம்
பயன்படுத்த வேண்டும்.

அதாவது நான் ஏற்றுக்கொண்ட
கருத்து இது என்ற பொருளில்
பேசும்போதுதான் என்னைப் பொறுத்தமட்டில் என்று சொல்கிறோம்.


" என்னைப் பொருத்தமட்டில் " என்று
எழுதுவது தவறு.

" இந்த இரண்டு சட்டங்களையும்
பொருத்த வேண்டும் "என்று எழுதும்
போது இடையின ரகரம் பயன்படுத்த

வேண்டும்.

"பொறுத்தது போதும் பொங்கி எழு"
இந்தத் தொடரில் பொறுத்தது என்பதன் பொருள் பொறுமையாக இருந்தது என்பதாகும்.


இப்படி ஒரு சொல்லின் பொருள் மற்றும் வேர்ச்சொல் ஆகியவற்றில்
சற்று கவனம் செலுத்தி எழுதினால்
தவறு வராது.

இணையத்திலிருந்து காப்பி செய்யப்பட்டது
 
Last edited:

Latest profile posts

ஹலோ மக்களே
இனியா கதை எபி 80 வரை சைட்ல போட்டாச்சு.
நீ பார்த்த விழிகள் நாவலின் லிங்க் ஏப்ரல் 30 செவ்வாய் வரை தான் ஆக்டிவா இருக்கும், இன்னும் படிக்கலன்னா சீக்கிரம் படிச்சிடுங்க

https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/சித்ரா-வெங்கடேசனின்-நீ-பார்த்த-விழிகள்.372/
மக்களே சைட் ஒர்க் போகுது. விரைவில் சரி செய்யப்படும்
#முள்ளில்லா_முல்லைப்பூ-முழுநாவல்(ஏப்ரல் 22 இரவு 10 மணிவரை மட்டுமே)

மக்களே... நிறைய பேர் இன்னும் பாதி கதையில் இருப்பதாக சொன்னதால் முள்ளில்லா முல்லைப்பூ கதை நாளை (ஏப்ரல் 22) இரவு 10 மணிக்கு ரிமூவ் செய்யப்படும். அதற்கு மேல் டைம் கேட்காதீர்கள் மக்களே... கதையை பப்ளிஷ்க்கு அனுப்பிட்டேன். அதனால் அதற்கு மேல் லிங்க் வைத்திருப்பது கஷ்டம். புரிந்து கொள்வீர்கள் என்று நினைக்கிறேன்🙂


https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/எழிலன்புவின்-முள்ளில்லா-முல்லைப்பூ.382/
மக்களே சைட்டில் எரர் வந்தால் ஒரு இரண்டு நிமிடத்திற்கு பிறகு மீண்டும் பாருங்கள் ஒர்க் ஆகும்.

New Episodes Thread

Top Bottom