• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

பூ பூக்கும் ஓசை...... பேரரளி

Apsareezbeena loganathan

Well-known member
Member
பூங்கொத்துடன் பஸ்ஸில் ஏறி பூர்ணாவிடம் பூங்கொத்தை கொடுத்து மறந்து
பின் திடீர் சந்திப்பில்
பூர்ணாவிடம் அடிவாங்கி
புரிதல் இல்லா மோதல்.....
பூர்ணாவின் அடியில்
புரியாமல் தவித்து
புரிந்த பின்பு
பரிதாபப்பட்டு (காதல் வய பட்டு)
பார்க்கும் போதெல்லாம் தன்
பக்கம் நியாயத்தை எடுத்துரைக்க போராடும் சத்ய தேவ்

கல்யாணத்திற்கு முன்
கர்ப்பமாகி காதல்
கல்யாணம் செய்து கொள்ளும் கலைவாணி விக்னேஷ்....

காலேஜில் காதல் சொல்லி கோபத்தை பெற்றாலும்
சீனியர் சூர்யா
மேனேஜராய் வந்தும்
சூர்யாவின்
காதல் பேச்சில் ஆரம்பித்து
சீண்டலாய் இருந்து
நக்கலில் முடிந்து
விரோதமாக சூர்யா.....
(சீனியரை இப்படி டம்மி பீஸ் ஆக்கிட்டீங்களே)

காதலனைத் தேடி
காலேஜில் சேர வரும்
கல்லூரி பெண் ஸ்ரீநிதி....
காதலின் உறுதி
கைப்பிடிக்க வைக்கிறது....

தன் வளர்ப்பில்
தவறிருக்குமோ என்று
தவிக்கும் பெற்றோர்கள்
தன் மூத்த மகளின்
திருமணத்திலும்
தவறு செய்து
துடிக்கும் நாராயணன்
தன் தப்பை உணர்ந்து
மன்னிப்பு கேட்கும் இடமும்
திருமணத்திற்கு சம்மதம் சொல்லும் இடமும்
அருமை.....

தாய் தந்தையின் நிலைமையை கண்டு
தன் திருமணத்தின் பொறுப்பை தந்தையிடம் ஒப்படைத்துவிட்டு தவிக்கும் பூர்ணா.....
பூர்ணாவின் துணிச்சல்
மனதில் பட்டதை சொல்லும் எதார்த்தம்
பிரச்சினைகளை தவிர்ப்பதும்
அதை கையாள முடியாமல்
தவிப்பதும்
தன்னை மீறி
உணரும் உணர்வுகளுக்கு
பதில் கிடைத்த நொடி அதை தெரியப்படுத்த விளைவதும் அருமை....

சரவணன் _ சற்று டெரர் பீஸ்....

சத்யாவின் கோபத்தால்
சிறிது காலம் பிரிந்து இருந்து தாயின் பாசத்தால் மீண்டும் சத்யாவுடன் ....
அரவணைத்து செல்லும்
அழகான பெற்றோர்கள்....

விக்னேஷின் நல்ல மனதும்
சக்தியின் இயலாமையையும் கலைவாணியின் தவிப்பையும் ஸ்ரீநிதியின் எதிர்பார்ப்பையும்
அழகாகச் சொல்லி
நிறைவாக முடித்தீர்கள்......

சத்யாவின் காதலை உணர்ந்த தருணம்
பூர்ணாவின் மனதில்
பூ பூக்கும் ஓசை
அதைக் கேட்கும் முன் கடத்தப்பட்டு பின்
தன்னவன் கையிலே
தஞ்சம் புகும் பூர்ணா

காதலை யாரடி முதலில் சொல்வது
நீயா அல்லது நானா
என்று போட்டி போடாமல் இருவரும் சேர்ந்து காதலைச் சொல்லி திருமணத்தில் முடிய
சுபம்......
பேரரளி பூவின்
பூங்கொத்துடன்
வாழ்த்துக்கள் சகி.......
💐💐💐💐💐💐💐💐💐💐💐
 

Latest profile posts

Happy Sunday, மீண்டும் கதையுடன் வந்து விட்டேன்.

நின் வழியில் என் பயணம் -1



அன்பனின் ஆரபி 1 - 4 எபி போயிருக்கு. டெய்லி எபி உண்டு மக்களே... Follow karo
IIN இனியா கதை முடிவுற்றது மக்களே.
மே 31 வரைக்கும் சைட்ல இருக்கும். க்ரைம் நாவல் விரும்பிகள் படிக்கலாம்.
ஹலோ மக்களே
இனியா கதை எபி 80 வரை சைட்ல போட்டாச்சு.

New Episodes Thread

Top Bottom