• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

பூவிதழ் மலரே - அமேசான்

Ezhilanbu

Administrator
Staff member
Writer
பூவிதழ் மலரே

அமேசான் கிண்டிலில் தொடராக வந்து கொண்டிருக்கும் கதை இது.
வார வாரம் சனிக்கிழமை மூன்று எபியாக அப்டேட் செய்யப்படும்.

இதுவரை ஆறு எபி போட்டுவிட்டேன்.
அமேசான் அக்கொண்ட் உள்ளவர்கள் படித்துவிட்டு சொல்லுங்கள்.

இப்போது கதையிலிருந்து சிறு துளி...
💕💕💕💕
தன்னைக் கடக்கும் போது அவன் வெளியிட்ட மூச்சுக் காற்று தான் தன்னைத் தீண்டியதோ? என்று நினைத்தபடி, மீண்டும் தலைமுடியை பின்ன ஆரம்பித்தவள், முடியை முன்னால் போட்டு பின்னிக் கொண்டிருந்தாள்.

அப்போது மீண்டும் அவளைக் கடந்த ரகுநந்தன், ஒற்றை விரலால் அவளின் வெற்று முதுகில் வருடி விட்டுச் சென்றான்.

படக்கென்று சுதாரித்து வேகமாக அவனின் புறம் திரும்பிப் பார்க்க, அவனின் நீண்டிருந்த கை கண்ணில் பட, “என்ன பண்றீங்க?” என்று ஆத்திரத்துடன் குரல் கொடுத்தாள்.

போனில் பேசிக் கொண்டிருந்தவன், சட்டென்று போனை அணைத்து விட்டு, “போன் பேசிட்டு இருக்கும் போது ஏன்டி காத்துற?” என்று கடுப்புடன் கேட்டான்.

“நீங்க என்ன பண்ணினீங்கன்னு கேட்டேன்…” அவனின் கடுப்பை எல்லாம் அவள் கண்டு கொள்ளவே இல்லை.

“என்ன பண்ணினேன்? ஒன்னும் பண்ணலை…” என்று அவன் அலட்சியமாக சொல்ல,

“இல்லை, நீங்க பொய் சொல்றீங்க. உங்க கை என் மேல் பட்டுச்சு…” என்று அவள் கோபத்துடன் சொல்ல,

“தெரியாமல் பட்டிருக்கும்…” என்றான் தன் அலட்சியம் குறையாமல்.

அவனை நம்பாமல் அவள் பார்க்க, அதற்காக எல்லாம் அவன் அலட்டிக் கொள்ளவே இல்லை.

“நான் முக்கியமான போன்கால் பேசும் போது டிஸ்டெர்ப் பண்ணிட்ட. இனி இப்படிப் பண்ணாதே. நான் எல்லா நேரமும் இப்படி அமைதியா போக மாட்டேன்…” என்று அவளை எச்சரித்து விட்டு, மீண்டும் அழைத்து பேச ஆரம்பித்தான்.

அவனை முறைத்தவளுக்கும் அதற்கு மேல் நின்று பேச நேரம் இருக்கவில்லை.

விரைந்து கிளம்பி வேலைக்குச் சென்றுவிட்டாள்.

❤️❤️❤️

இப்போதைய அந்த வீட்டின் சூழ்நிலை தான் மாறியிருக்கிறதே தவிர, ரகுநந்தன் மட்டும் சிறிதும் மாற்றம் இல்லாமல் அப்படியேதான் இருக்கின்றான் என்று சுபாவால் நினைக்காமல் இருக்க முடியவில்லை.

வயது ஏற ஏற மனம் முதிர்ச்சி அடையும் என்பதெல்லாம் அவனிடம் வேலைக்கு ஆகவில்லை போலும் என்று நக்கலுடன் நினைத்துக் கொண்டாள்‌.

சிந்தனையுடன் இருந்தாலும் விரைவிலேயே சாப்பிட்டு முடித்தவள் எழுந்து கையைக் கழுவிவிட்டு வந்தாள்.

"நான் கிளம்புறேன் அத்தை. இப்ப பஸ் பிடிச்சால்தான் சரியா இருக்கும்…" என்ற சுபா கைப்பையையும், இரண்டு புத்தகங்களையும் எடுத்துக் கொண்டு வெளியேற போனாள்.

"இரும்மா. நீ ஏன் பஸ்ஸில் போகணும்? உன் புருஷன் கூட காரில் போ…" என்றார் மாமியார்.

"அதெல்லாம் ஒன்னும் வேணாம் த்தை…" என்று உடனே மறுப்பு தெரிவித்தாள் மருமகள்.

"ஏன் ஏன் வேண்டாம்? அவனும் இதோ கிளம்பிட்டான். அப்புறம் என்ன?" என்று கேட்க,

"அம்மா… நீங்களா ஒரு பிளான் போடாதீங்கன்னு உங்களுக்கு எத்தனை முறைதான் சொல்வது? அவள் ஸ்கூல் எந்தப் பக்கம் இருக்கோ? நான் வேலையைப் பார்க்க போவேனா? இல்லை, அவளை விட்டுட்டு ஊர் சுத்திட்டு இருப்பேனா?" என்று குரலை உயர்த்திக் கேட்ட மகனை கலைவாணி வினோதமாகப் பார்க்க, விஷ்ணுவோ அண்ணனை பார்த்து தலையில் அடித்துக் கொண்டான்.

இருவரின் பாவனையும் பார்த்து ஒன்றும் புரியாமல் மனைவியின் புறம் பார்வையைத் திருப்பினான்.

அவளோ இந்தப் பேச்சுக்கும் தனக்கும் சம்பந்தமே இல்லாதது போல எங்கோ பார்த்துக் கொண்டிருந்தாள்.

"ஏன்டா, கல்யாணம் முடிஞ்சி ஒரு வாரம் ஆச்சு.‌ இரண்டு பேரும் உங்களைப் பத்தி பொதுவான பேச்சுக்‌ கூட‌ பேசிக்கலையா?" என்று ஆதங்கமாக கேட்டார்‌ கலைவாணி.

"இதுக்கும் அண்ணி நம்ம அத்தை பொண்ணு வேற‌. என்னண்ணா நீ?" என்ற விஷ்ணு மீண்டும் தலையில் அடித்துக் கொண்டான்.

❤️❤️❤️
அப்போது கணவரிடம் பேசிவிட்டு அருகில் வந்த கலைவாணி, “விஷ்ணுவும், உன் அண்ணாவும் தேடி பார்க்கிறதா சொல்லியிருக்காங்க பானு. கவலைப்படாதே. சுபாவை கண்டுபிடிச்சி கூட்டிட்டு வந்துடுவாங்க…” என்று மகனை முறைத்துக் கொண்டே சொன்னார்.

“எங்கேயும் தேடிப் போக வேண்டாம்னு சொல்லுங்க…” என்று ரகுநந்தன் அலட்டிக் கொள்ளாமல் சொல்ல,

“இதெல்லாம் சரியில்லை ரகு. நீயும் தேடி போக மாட்ட. அவங்களையும் தேடக் கூடாதுன்னு சொல்வியா?” என்று கோபமாக கேட்டார்.

“இந்த மழையில் ஒவ்வொரு இடமா தேடி திரிவாங்களா? புரிஞ்சி பேசுங்கமா. ஊட்டியில் மழை நேரத்தில் எப்படி இருக்கும்னு நான் சொல்லித்தான் உங்களுக்கு தெரியணுமா? அவள்தான் லூசுத்தனமா பண்ணி நம்மை அலைய வைக்கிறா. நீங்க என் மேல் கோபத்தை காட்டுறீங்க. எங்கேயும் தேட வேண்டாம். எனக்கு என்னவோ அவள், ஜீவிதா வீட்டில் தான் இருப்பாள்னு தோனுது. அந்தப் பொண்ணு வீடு எங்கன்னு கேட்டு அங்கே போய் அவங்களை பார்க்கச் சொல்லுங்க…” என்றான்.

“என்ன ரகு சொல்ற? ஜீவிதா அவள் அங்கே வரலைன்னு சொன்னாளே…” என்று பானுமதி வேகமாக கேட்க,

“அந்தப் பொண்ணு மென்னு முழுங்கி பேசுது அத்தை. என் கெஸ் படி சுபா, ஜீவிதா பக்கத்தில் இருந்து நான் இங்கே இல்லன்னு சொல்லுன்னு சொல்லியிருக்கணும்…” என்றான் உறுதியாக.

“இந்தப் பொண்ணை பாரேன், நம்ம தவிப்பை கொஞ்சம் கூட புரிஞ்சிக்காம…” என்று பானுமதி திட்ட ஆரம்பிக்க,

அவரை நிறுத்திய கலைவாணி ஜீவிதாவின் வீடு எங்கே இருக்கிறது என்று தெரியுமா என்று கேட்டு, பானுமதி முகவரியை தெரிவிக்கவும் மீண்டும் கணவருக்கு அழைத்து, ஜீவிதாவின் வீட்டில் சென்று பார்க்க சொன்னார்.

"இந்த மட்டுக்கும் இந்த வேலையாவது உனக்கு செய்ய தோனுச்சே…" என்று மகனைப் பார்த்து அவர் நொடித்துக் கொள்ளவும் தவறவில்லை.

அவரைச் சூடாக பார்த்தாலும், ஒன்றும் சொல்லாமல் மாடி ஏறி சென்று விட்டான் ரகுநந்தன்.
 
Thani

Well-known member
Member

அங்கு முடிந்ததிற்கு அப்புறம் இங்கும் போடுவீங்களா ஜி
 
New Episodes Thread

Top Bottom