• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

சலன பருவம்

selvipandiyan

Active member
Member
சலனபருவம்.
பிரம்ம கமலம்.
சற்று சறுக்கினாலும் கதைக்கு வேறு பெயர் வந்து விடும்.லாவகமாக கையாண்டு இருப்பதற்கு பாராட்டுகள்
குடும்பங்களில் நடக்கும் பாலியல் துன்புறுத்தல்கள் வெளியில் தெரிவதில்லை.குடும்பமானம் என்று சம்பந்தப்பட்டவர்களும் பேசுவதில்லை.இந்த கதையில் வரும் கயலுக்கு குரு அமைவது போல் எல்லா பெண்களுக்கும் அமைந்தால் அது தான் சொர்க்கம்.

கதையில் குரு அறிமுகமாகும் போதே அவன் சந்தேகங்களை நாமும் யூகிக்க முடியாத படி சஸ்பென்ஸை வளர்த்துக் கொண்டே போவது நல்ல உத்தி.சலனத்தில் வீழ்வது பெண்கள் தான் என பொதுவாக ஒரு எண்ணம் இருக்கு.காளிதாஸ் மாதிரியும் பையன்களும் சிக்கி தவிக்கிறார்கள்.
பெரியம்மா பெரியப்பா அத்தனை முதிர்ச்சியாக நடந்து கொண்டாலும் காளிதாஸை கண்டிக்காதது ஏன்னு எனக்கு கேள்வி எழுகிறது.கயலை பாதுகாப்பதில் இருக்கும் பதைப்பு அவனிடம் இல்லை.இந்த கதையில் காளிதாஸின் பங்கு அவ்வளவு தான் என அவனை அப்படியே விட்டு விட்ட மாதிரி உணர்ந்தேன்.போட்டிகதைக்கு சில வரம்புகள் இருக்கலாம்.
என் கருத்து கயல் அவ்வளவு சீக்கிரம் அவனை மன்னித்து விடுவதை ஏற்க முடியவில்லை.பதின்பருவத்தில் ஏற்படும் அதிர்ச்சி சாகும்வரை மறக்காது.குரு போல் ஆண்கள் சொற்பமே.குருவுக்கு ரசிகைகள் பெருகலாம்!
கயல் குடும்ப வாழ்க்கை வாழ நடுங்குவது பரிதாபமாக இருந்தது.குறிப்பிட்ட சம்பவங்கள் மனதை கலங்க வைத்தது.
காளிதாஸை வைத்து ஒரு கதை எழுதுங்கள்.அவன் என்ன ஆனான்னு பார்ப்போம்.
 
நன்றி அக்கா 💖

காளிதாஸை வச்சு கதை எழுதி பொங்கல் வாங்க இப்போதைக்கு நான் தயாராக இல்லை 😁🙈
 

New Episodes Thread

Top Bottom