• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

சலன பருவம்-பிரம்ம கமலம்

chitra ganesan

Well-known member
Member
சலன பருவம்-
பிரம்மகமலம்

கத்தி மேலே நடக்கிற மாறியான கதையின் கருவை எடுத்ததிற்கு ரைட்டருக்கு முதலில் பாராட்டு😍😍💐

பெரும்பாலும் கூட்டு குடும்பத்தில் இருப்பவர்கள்,அக்கம் பக்கம் நெறைய நண்பர்கள் இருப்பவர்கள் இந்த சலன பருவத்தில் தனக்கோ,தன்னை சேர்ந்தவர்களுக்கோ இப்படி பட்ட நிகழ்வை கடந்து வந்தவர்களாக இருக்க அதிக வாய்ப்பு இருக்கு.
இந்த கதையில் மறைமுகமா சொல்ல பட்ட செய்தி பெண் குழந்தையை எந்த அளவு கேர் எடுத்து பார்க்கிறோமோ அதே அளவு கேர் பசங்களுக்கும் கொடுக்கணும்.இது நான் புரிந்து கொண்டது.😍

அறியாத,புரியாத வயதில் எதிர்பாலினத்தவர் மேல் வரும் ஆர்வம் சிட்டியில் இருப்பவர்களுக்கு ஓரளவுக்கு தெளிவு கிடைச்சிடும்.அதுவே கிராமத்தில் என்ன இது அசிங்கம்ன்னு ஒரே வார்த்தையில் சுருட்டி போட்றுவாங்க.

இந்த கதையில் அண்ணன் காளிதாஸுக்கு தங்கை கயல் இடம் தோன்றுது சலனம்.படிக்க,கேக்க ஒரு மாறி இருந்தாலும் நெறைய குடும்பங்களில் நடக்கின்ற ஒன்று தான்.

இதுக்கு தான் அதற்கான கல்வியை கொடுக்கணும் என்பது.நம் ஊரில் ஆசிரியர்களே இதை பற்றி எடுக்க தயக்கம் கொள்கிறார்கள்.

இங்கேயும் தாஸின் செயலில் எல்லாம் வயசுக்கோளாறு ன்னு முடிச்சி விட்டு கயலை மட்டும் தனியே விடாமல் பாதுகாப்பு கொடுத்துட்டாங்க.🙄ஆனாலும் கயலுக்கும் சொல்லி கொடுக்கவில்லை.அது வரையும் அவளும் பயத்திலே தான் இருக்கிறாள்.அவள் கல்யாணம் முடிந்த பின்னால் தன் கணவன் மூலம் தெளிவு பெற்று அந்த பயத்தில் இருந்து வெளியே வருகிறாள்.இருந்தாலும் அது அவளுக்கு மாறா வடு தான் என்றாலும் காலப்போக்கில் வடுவின் தடம் கண்ணுக்கு தெரியாத வகையில் லேசா ஆகிடும்.😍

கயலின் பயம் கணவன் பக்கம் வந்தாலே பதட்டத்தை கொடுக்குது.அப்ப மனைவிக்கிட்டே எப்படி நடந்தால் அவளின் பயம் போய் கணவனுடன் ஒன்றி குடும்பம் நடத்துவா என்று சொல்லி கொடுக்கும் கயலின் பெரியப்பா தன் தம்பி மகன் காளி தாஸுக்கும் பாடம் எடுத்து இருக்கலாம்ன்னு தோணிச்சு..😕

அதே போல தீபா..அவள் யாரு சொல்லி இருந்தாலும் கேட்டு இருக்க வாய்ப்பு இல்லை தான்.🙄அவ தாஸை யூஸ் பண்ணாளா இல்லை தாஸ் அவளை யூஸ் பண்ணிட்டானான்னு தெரியல.அவள் செம தெளிவு தான்.சான்ஸ் கிடைச்சதும் பட்சி பறந்திருச்சு.

கயலின் பயமும் குழப்பமும் குரு போல ஒரு நல்ல கணவன் கிடைத்ததால் சரி ஆகிடுச்சு.அது போல இல்லாதவர்கள் நிலை எப்படி இருக்கும்ன்னு சொல்ல முடியாது.

இங்கே முதன்மையா பாராட்டு பெறுபவர் நான் அதிகம் மீம்ஸ் போட்டு கலாய்ச்ச குரு தான்.👏👏
அருமையான துணைவன்😍
(மனசு கஷ்ட படுற மாறி இருந்திருந்தா சாரி )



நெறைய சொல்லலாம் .அப்புறம் அது கதைய விட பெரிசா போய்டும்😁😁

வித்தியாசமான கருவை எடுத்து வரம்பு மீறாமல் ,சொல்ல வந்ததை கயலின் மன நிலையை அழகா சொன்ன ரைட்டருக்கு ஒரு சபாஷ்👏

போட்டியில் வெற்றி பெற என் வாழ்த்துகள்😍😍😍
 

Latest profile posts

Happy Sunday, மீண்டும் கதையுடன் வந்து விட்டேன்.

நின் வழியில் என் பயணம் -1



அன்பனின் ஆரபி 1 - 4 எபி போயிருக்கு. டெய்லி எபி உண்டு மக்களே... Follow karo
IIN இனியா கதை முடிவுற்றது மக்களே.
மே 31 வரைக்கும் சைட்ல இருக்கும். க்ரைம் நாவல் விரும்பிகள் படிக்கலாம்.

New Episodes Thread

Top Bottom