51) மெல்ல, உரக்க, நிரம்ப, நிறைய என்னும் அகர ஈற்று வினையடைகளின் பின் வலி மிகும். எ-டு. மெல்லப் போ மெல்லப் பேசு உரக்கச் சொன்னேன் உரக்கக் கூவினான் நிரம்பப் பேசினான் நிரம்பக் கொடுத்தார் நிறையச் செய்திகளை அறிந்தோம் நிறையக் கற்றுக் கொள்