உ. உ -2
வன்முறையின் சுழற்சி (cycle of abuse ):
நீர் சுழற்சி, நைட்ரஜன் சுழற்சி , கார்பன் சுழற்சி இப்படி பல சுழற்சிகளை கேள்விபட்டு இருப்பீங்க. அதே மாதிரி வன்முறைக்கும் உண்டு. டாக்ஸிக் ரிலேசன்ஷிப்பில் இது காணப்படும்.
நிலைகள் :
சமாதானப்படுத்துதல் :
ஒன்றை நியாபகம் வைத்துக்கொள்ளுங்கள். ஒரு விஷயம் உங்களுக்கு ஒரு தடவை நிகழ்ந்தால் விபத்து. இரு தடவை நடந்தால் சரி அதையும் விட்டு விடுங்கள். அதுவே மூன்றாவது தடவை நிகழ்ந்தால் அது கண்டிப்பாக விபத்து கிடையாது . உங்களை நீங்களை வாழ்த்திக் கொள்ளுங்கள். நீங்கள் ஒரு டாக்சிக் ரிலேஷன்ஷிப்பின் வாயில் ரிப்பன் வெட்டி வலதுகால் எடுத்து வைத்திருக்கிறீர்கள் .
ஒரு சமயம் நீங்கள் துன்புறுத்தப்படுவதும் , மற்றொரு சமயம் உங்களை நன்றாகப் புரிந்து கொண்டவர் போன்று உணர்வதும் ஆரோக்கியமற்ற உறவுக்கு அறிகுறிகள். பொதுவாக பூயூட்டி அன்ட் பீஸ்ட் வகை உறவுகள் இந்த வகையைச் சாரும். பிள்ளையும் கிள்ளிவிட்டு தொட்டிலை ஆட்டிவிடும் கதைதான்.
உதாரணத்திற்கு , உங்களுக்கு சாப்பாடு , தண்ணீர் எதுவும் 10 நாட்களுக்கு கிடைக்கவில்லை. அப்போது ஒரு டம்ளர் பாகற்காய் ஜீஸ் கிடைத்தால் கூட பெரும்மகிழ்வுடன் ஏற்றுக்கொள்வீர்கள். இப்படிதான் டாக்ஸிக் ரிலேசன்ஷிப்பும். பொதுவாக வன்முறையால் தொடர்ந்து பாதிக்கப்படுவரின் தன்னம்பிக்கை குறைவாக இருக்கும். தான் இவ்வாறு நடத்தப்படுவதைச் சரியென்றே நம்புவர். அந்தளவு ஏமோஷனல் மேனிபுலேசன் நடந்திருக்கும்.
மேற்கண்டவற்றை நீங்கள் எதிர் கொண்டால் உங்களுக்கு கவுன்சிலிங்க் தேவை. நீங்கள் உங்களுக்கு நடந்தவற்றை சில பெண்களிடம் கூறினால் அவர்கள் “இதெல்லாம் நாங்க பார்க்காத விஷயமா போமா..போய் உன் வேலையைப் பாரு. புருஷன் அப்படித்தான் அடிப்பாரு. மாமியார்னா அப்படித்தான் இருப்பாங்க. “ இந்தமாதிரி அறிவுரை கொடுத்தால் தயவுசெய்து நம்பிவீடாதீர்கள்.
நாய் ஒரு தடவை கடித்தால் திரும்பவும் கடிக்கும். அதை மறக்கக்கூடாது. எந்த ஒரு உறவாகிலும் அதில் உங்கள் உணர்வுகள் மதிக்கப்படவில்லை எனில் அது நல்ல உறவல்ல. கருத்துச் சுதந்திரம் இல்லாத உறவுகள் இதில் அடங்கும்.
நீ சொல்றது நடைமுறைக்கு ஒத்து வாராது , குழந்தைகள் என்னாவார்கள்? என்று போர்க்கொடி தூக்கும் பெண்களே , நீங்கள் கஷ்டப்படுவதை உங்கள் குழந்தைகளும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் மனதில் வைத்துக் கொள்ளுங்கள்.
பி.கு : ஆண்களுக்கும் இது பொருந்தும்.
அன்புடன்
மனோஜா.
source : google

- அழுத்தம் உருவாதல் ( tensions builds)
- ஒரு உறவில் வன்முறை செய்பவர்கள் பொதுவாக வெளிக்காரணங்களை தான் செய்யும் கொடுமைகளுக்கு காரணம் என்று நியாயப்படுத்துவர். எ.கா : குடும்ப காரணங்கள் , வேலையிடங்களில் பிரச்சினைகள், உடல்நலமின்மை.
- விரக்தியும் , அதிருப்தியும் உருவாகும். இவை கோபத்திற்கு தூண்டுதலாக அமையும்.
- வன்முறை நிகழ்தல் :
சமாதானப்படுத்துதல் :
- மேற்கண்ட நிலை நடந்து முடிந்த பிறகு வன்முறையை நிகழ்த்தியவர் எப்படியாவது பாதிக்கப்பட்ட பெண்ணை சமாதானப் படுத்த முயற்சிப்பர். பரிசுகள் வாங்கிக் கொடுத்தல், அன்பாக நடத்துதல் , பிடித்ததைச் செய்து கொடுத்தல் போன்றவற்றைச் செய்வர். இதனால் பாதிக்கப்பட்டவர் தங்களுடைய உறவு முன்பிருந்த நிலைக்குத் திரும்பிவிட்டதாக நம்பிவிடுவர்.
அமைதி : - பாதிப்பை நிகழ்த்தியவர் , பாதிக்கப்பட்டவர் இருவரும் எப்படியாவது நிகழ்ந்தவற்றிற்கு ஒரு விளக்கம் மற்றும் நியாயப்படுத்த முயல்வர். மற்றவர்களைக் காரணம் காட்டுதல் , தான் செய்ததைக் குறைத்துக் கூறுதல் , பாதிக்கப்பட்டவரை தன்னை இப்படி செய்யும்படி தூண்டினார் எனக் காரணம் கூறுதல்……..
- இதற்குமேல் இப்படி நடந்து கொள்ள மாட்டேன் கற்பூரம் அடித்து சத்தியம் செய்வர். தன் வருத்தத்தை வெளிப்படையாக காண்பிப்பர். இறுதியும் பாதிக்கப்பட்டவரும் எற்றுக் கொள்வர்.
ஒன்றை நியாபகம் வைத்துக்கொள்ளுங்கள். ஒரு விஷயம் உங்களுக்கு ஒரு தடவை நிகழ்ந்தால் விபத்து. இரு தடவை நடந்தால் சரி அதையும் விட்டு விடுங்கள். அதுவே மூன்றாவது தடவை நிகழ்ந்தால் அது கண்டிப்பாக விபத்து கிடையாது . உங்களை நீங்களை வாழ்த்திக் கொள்ளுங்கள். நீங்கள் ஒரு டாக்சிக் ரிலேஷன்ஷிப்பின் வாயில் ரிப்பன் வெட்டி வலதுகால் எடுத்து வைத்திருக்கிறீர்கள் .
ஒரு சமயம் நீங்கள் துன்புறுத்தப்படுவதும் , மற்றொரு சமயம் உங்களை நன்றாகப் புரிந்து கொண்டவர் போன்று உணர்வதும் ஆரோக்கியமற்ற உறவுக்கு அறிகுறிகள். பொதுவாக பூயூட்டி அன்ட் பீஸ்ட் வகை உறவுகள் இந்த வகையைச் சாரும். பிள்ளையும் கிள்ளிவிட்டு தொட்டிலை ஆட்டிவிடும் கதைதான்.
உதாரணத்திற்கு , உங்களுக்கு சாப்பாடு , தண்ணீர் எதுவும் 10 நாட்களுக்கு கிடைக்கவில்லை. அப்போது ஒரு டம்ளர் பாகற்காய் ஜீஸ் கிடைத்தால் கூட பெரும்மகிழ்வுடன் ஏற்றுக்கொள்வீர்கள். இப்படிதான் டாக்ஸிக் ரிலேசன்ஷிப்பும். பொதுவாக வன்முறையால் தொடர்ந்து பாதிக்கப்படுவரின் தன்னம்பிக்கை குறைவாக இருக்கும். தான் இவ்வாறு நடத்தப்படுவதைச் சரியென்றே நம்புவர். அந்தளவு ஏமோஷனல் மேனிபுலேசன் நடந்திருக்கும்.
மேற்கண்டவற்றை நீங்கள் எதிர் கொண்டால் உங்களுக்கு கவுன்சிலிங்க் தேவை. நீங்கள் உங்களுக்கு நடந்தவற்றை சில பெண்களிடம் கூறினால் அவர்கள் “இதெல்லாம் நாங்க பார்க்காத விஷயமா போமா..போய் உன் வேலையைப் பாரு. புருஷன் அப்படித்தான் அடிப்பாரு. மாமியார்னா அப்படித்தான் இருப்பாங்க. “ இந்தமாதிரி அறிவுரை கொடுத்தால் தயவுசெய்து நம்பிவீடாதீர்கள்.
நாய் ஒரு தடவை கடித்தால் திரும்பவும் கடிக்கும். அதை மறக்கக்கூடாது. எந்த ஒரு உறவாகிலும் அதில் உங்கள் உணர்வுகள் மதிக்கப்படவில்லை எனில் அது நல்ல உறவல்ல. கருத்துச் சுதந்திரம் இல்லாத உறவுகள் இதில் அடங்கும்.
நீ சொல்றது நடைமுறைக்கு ஒத்து வாராது , குழந்தைகள் என்னாவார்கள்? என்று போர்க்கொடி தூக்கும் பெண்களே , நீங்கள் கஷ்டப்படுவதை உங்கள் குழந்தைகளும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் மனதில் வைத்துக் கொள்ளுங்கள்.
பி.கு : ஆண்களுக்கும் இது பொருந்தும்.
அன்புடன்
மனோஜா.
source : google
Attachments
Last edited: