• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

அன்பின் முகவரி யாரோ? 26

ரித்தி

Active member
Member
அத்தியாயம் 26


"ஜோதி ஒரு காஃபி குடேன்" என விக்ரம் கேட்க, இவ்வளவு நேரம் பேசாமல் இருந்த அண்ணன் இப்போது பேசிய சந்தோஷத்தில் சரி என உள்ளே ஓடினாள் ஜோதி.


"என்னடா அங்கே சரியா சாப்டியா இல்லையா?" என விக்ரம் தாய் கேட்க, "ம்ம்ம்" என தலையாட்டினான்.


அவன் இப்போதே பேசுவான் என லாவண்யா எதிர்பார்க்கவில்லை. ஆனால் அவன் முகம் பார்த்தால் ஒரு முடிவுடன் இருப்பது போல தான் தோன்றியது.


அதிகபட்சம் மாப்பிள்ளை பார்க்கலாம் என முடிவெடுப்பான். அப்போது சுரேஷை கேட்கலாம் என முடிவு செய்தாள் லாவண்யா.


"அம்மா நீங்க சுரேஷ் பத்தி என்ன நினைக்கிறீங்க?" நேராக விஷயத்துக்கு வந்தான்.


"இதென்ன டா கேள்வி?"


"சொல்லுங்க மா".


"உன்னை விட நல்லவன். இதுக்கு மேல எனக்கு சொல்ல தெரியாது" என்று கூற, முறைக்க முயன்று தோற்று சிரித்தான்.


"ஏன் டா கேட்குற?" அவருக்கு ஓரளவு புரிந்தாலும் அவனே சொல்லட்டும் என காத்திருந்தார்.


லாவண்யா திறந்த வாய் மூடாமல் அமர்ந்திருந்தாள். பின்னே தன் வேலையை அவன் சுலபமாக செய்கிறானே!.


"நம்ம ஜோதியை ஏன் மா சுரேஷ்க்கு கல்யாணம் செய்ய கூடாது?"


"என்ன டா விளையாட்றியா. நீ அவளை கூட்டிட்டு போகும்போதே நினச்சேன். அவ இப்படி வேலை எல்லாம் பாக்குறாளா?" என கோபமாக அடுப்படிக்கு செல்ல இருந்தவரை தடுத்தான் விக்ரம்.


"ம்மா! இப்ப தானே சொன்னிங்க என்னை விட நல்லவன்னு? அப்போ சும்மா சொன்னிங்களா?"


"அதுக்காக?" என அவரும் அவனை போலவே திருப்பி கேட்க,


"அம்மா ப்ளீஸ்! சுரேஷ் பத்தி நான் உங்ககிட்ட சொல்ல வேண்டியதில்லை. அதை விடவும் இப்போ அவன் சொந்தமா பிசினஸ் பன்றான். இன்னும் என்னமா வேணும் உங்களுக்கு? அவன் அம்மா அப்பா இல்லாதவன்னு நினைக்கிறீங்களா"


"வாயை மூடுடா! அந்த பையனை குறை சொல்ல என்ன இருக்கு. இவ எப்படி டா நமக்கு தெரியாம இப்படி ஒரு காரியத்தை செய்யலாம்?".


"எனக்கு முதல்லயே தெரியும்" விக்ரம் குரலில் அங்கிருந்த மூவருக்குமே அதிர்ச்சி.


லாவண்யா அதிர்ச்சியுடன் பார்க்க, கோபத்தில் நின்றார் விக்ரம் தாய்.
காபி போட்டு கொண்டு வந்த ஜோதி சமையலறை வாசலில் சிலையென நின்றுவிட்டாள் விக்ரம் பதிலில்.


"தெரிஞ்சும் ஏன்டா அவளை எதுவும் சொல்லாம விட்ட? உன்னை நம்பி அவனை வீட்டுக்குள்ள விட்டேன். இவளை நம்பி வெளியே விட்டேன். எனக்கு என்னடா பண்ணீங்க நீங்க? நான் வளர்த்த விதம் தான் தப்பா?" என தலையில் அடித்து அழ ஆரம்பித்தார்.


அதை பொருக்க முடியாத லாவண்யா, "அத்தை என்ன பேசுறீங்க? நீங்க வளர்த்த பொண்ணுன்றதுன்னாலே தான் இதுவரை அவ எந்த தப்பும் செய்யாம இருக்கா!" என்றவள் விக்ரம் புறம் திரும்பி,


"விக்ரம் சொல்றத முழுசா சொல்லாமல் ஏன் எல்லார்க்கும் ஹார்ட் அட்டாக் வர வைக்குறிங்க?" என கேட்க விக்ரம் குழம்பி போனான்.

'இவளுக்கு எப்படி தெரியும்? ஜோதி சொல்லியிருக்க வாய்ப்பில்லையே?' என நினைக்க லாவண்யா தொடர்ந்தாள்.


"ஜோதி மேல எந்த தப்பும் இல்லை. அவ சுரேஷ விரும்பினா உண்மை தான். அதுக்காக மத்த பசங்க மாதிரி என்னைக்காவது ஊர் சுத்திட்டு லேட்டா வந்தாளா? இல்லை படிப்புல கவனம் இல்லாமல் இருந்தாளா? முழுசா நாலு வருஷம் விரும்பினாங்க. ஒரு நாள் கூட நேர்ல மீட் பண்ணதில்லை. என்னைக்கும் சுரேஷ் இவளை டிஸ்டர்ப் செய்ததில்லை" என கூறி விக்ரமை பார்த்தாள்.


"அவங்க லைஃப்ல அவங்க தெளிவா இருகாங்க அத்தை. இப்போ கூட இன்னும் ஒரு வருஷம் அவ படிப்பு முடிஞ்சதும் சுரேஷ் கேட்ருப்பான். அவனுக்கு இருக்கிற ஒரே கவலை நான் அனாதைனு என்னை ஒதுக்கிட்டா என்னால தாங்க முடியாயதுனு தான் புலம்புவான். அவன் நிறைய கஷ்டப்பட்டுட்டான் தயவுசெய்து அவன் ஜோதியை அவனுக்கு கொடுத்திடுங்க. அவனுக்கு தங்கையா நான் இருக்கேன். அவன் அனாதை இல்லை. என் காதலை சேர்த்து வச்சுட்டு அவன் கஷ்டப்படுறதை என்னால சத்தியமா பார்க்க முடியாது. ப்ளீஸ் அத்தை ஜோதியை கொடுங்க" என ஒரு வேகத்தில் பேசிவிட்டு அதே இடத்தில் மடங்கி அமர்ந்து கண்ணீர் வடித்தாள்.


இதை கேட்டு கொண்டிருந்த விக்ரம் திக்பிரம்மை பிடித்தவன் போல நின்றான்.


விக்ரம் அம்மா, லாவண்யா இப்படி பேசியதை எதிர்பார்க்கவில்லை என்பது போல அதிர்ச்சியுடன் நின்றார்.


இவை அனைத்தையும் தெரிந்த ஜோதி கண்ணீருடன் லாவண்யா அருகில் அமர்ந்து அவள் தோளை பற்றி ஆறுதல் படுத்தினாள்.


"லாவி! சுரேஷ அவன் இவனு உரிமையா பேசுற? அவனை முன்னாடியே தெரியுமா? உன் காதலை அவன் சேர்த்து வச்சானா? நீ என்ன சொல்ற எனக்கு புரியலை?" என குழப்பத்தில் கேட்க,


அவனை நிமிர்ந்து பார்த்தாள் லாவண்யா. அவள் அமைதியாக பார்க்க பொறுமை இழந்தான் விக்ரம்.


"ஐயோ என்ன டீ சொல்ற? கொஞ்சம் புரியிற மாதிரி தான் சொல்லேன்" என கத்த அப்போதும் ஜோதி தான் வாய் திறந்தாள்.


"அண்ணா உனக்கு எப்போ எப்படி தெரியும்? எந்த அளவுக்கு தெரியும்னு எனக்கு தெரியாது! நானோ இல்லை சுரேஷோ உனக்கு தெரியாம எதுவும் பண்ணனும்னு நினைச்சதில்லை. என் படிப்புக்காக தான் வெயிட் பண்ணினோம்" என்றவள்


"அண்ணி..." என்று அவள் இழுக்க, ஒரு பெருமூச்சு விட்டு எழுந்தாள் லாவண்யா.


"காலேஜ் பைனல் இயர்ல ஒரு சீஃப் டாக்டர் கூட மீட்டிங்காக கொடைக்கானல் போக வேண்டிய சிட்டுவேஷன். அங்கே தான் உங்களை பார்த்தேன்" என விக்ரமை சந்தித்த தினத்தை கூற ஆரம்பித்தாள்.


பலமுறை விக்ரம் கேட்டும் லாவண்யா தன் காதலை பற்றியும் கொடைக்கானலில் தன்னை எங்கே எப்போது பார்த்தாள் என்பதையும் கூறியதில்லை. இன்று அவளே கூறுகிறாள்.


கொடைக்கானல் அமெரிக்கன் யூனிவர்சிட்டியில் நடைபெறும் மாபெரும் கல்சுரல் ஃபெஸ்டிவல் அது.


பல ஊர்களில் இருந்தும் மாணவ மாணவியர் மற்றும் அவர்களை வழி நடத்தும் ஆசிரிய பெருமக்கள், அவர்கள் துணைக்கு என முன்னாள் மாணவ மாணவியர் கூட வந்திருந்தனர்.


ஆனந்த், விக்ரம் கல்லூரி முடித்து ஒரு வருடம் ஆனது. படிப்பை தவிர கல்லூரி போட்டி அனைத்திலும் ஈடுபாடு உடையவன் விக்ரம். ஆனந்த் படிப்பிலும் கூட.


அவனுடைய ஆசிரியரே விக்ரமை உதவிக்கு அழைக்க வேறு வழியின்றி ஆனந்த்தையும் இழுத்து கொண்டு வந்தான் விக்ரம்.


அதே கல்லூரியில் தான் இன்னொரு புறம் லாவண்யா தன் சீஃப் டாக்டர் உடன் மீட்டிங்கில் இருந்தாள்.


முதல் நாள் கலைப் போட்டிகள் நல்லபடியாக முடிய அடுத்தநாள் புட்பால் மேட்ச் இருக்கவே விக்ரம் ட்ரைனிங் கொடுப்பதற்காக இரவு கல்லூரி விளையாட்டு திடலில் பயிற்சி கொடுத்து கொண்டிருந்தான்.


லாவண்யா அதே கல்லூரி விடுதியில் தங்கியிருந்தாள்.


அது கல்லூரி விடுமுறை தினம் என்பதால் சாப்பிட விடுதியில் இருந்து கல்லூரி முகப்பிற்க்கு தான் வர வேண்டும்.

லாவண்யா உடன் வந்த பெண் பசிக்கவில்லை என படுத்துவிட பசி தாங்காமல் தனியாக நடந்து வந்தாள் லாவண்யா.


"என்னை விட்டுடு சம்பத் ப்ளீஸ். உன்னை பத்தி யார்கிட்டயும் சொல்லமாட்டேன் ப்ளீஸ் என்னை விட்டுடு" ஒரு பெண் அழும் குரல் கேட்க அங்கே வேகமாக சென்றாள் லாவண்யா.


கையில் கத்தியுடன் ஒருவன் நிற்க, "அக்கா ப்ளீஸ் கா என்னை காப்பாத்துங்க. என்னை.. ஏ..ஏமாத்தி... கூட்டிட்டு வந்து.. " என அவள் இழுக்க, அந்த பெண் உடை ஆங்காங்கே கிழிந்து இருக்க நொடியில் லாவண்யா புரிந்து கொண்டாள்.


இப்போது அவனை மிரட்டும் நேரமோ, வாக்குவாதம் செய்யும் இடமோ இல்லை.


கல்லூரி வாயிலை அடையவே நேரம் ஆகும். தூரத்தில் யாரும் இல்லாத இடத்தில் தான் இவர்கள் இருக்கினறனர்.


"ஹேய் ஒழுங்கு மரியாதையா ஓடிடு. இவ அப்பன் என்னை அவமானப் படுத்தினதுக்கு பழி வாங்காம போக மாட்டேன்" என அவன் மெதுவாக முன்னேறினான்.


வேறு வழியே இல்லை என அந்த பெண்ணையும் இழுத்து கொண்டு ஓட ஆரம்பித்தாள் லாவண்யா.


பயிற்சியில் இருக்கும் போது எதிரே இருந்த செடிக்கு பின் காலடி ஓசை அதிகமாக கேட்க அங்கே சென்றான் விக்ரம்.


எதிரே இருந்த செடிகளை கடக்க தாவும் போது இருட்டில் அந்த பக்கம் யார் காலையோ வாரியிருந்தான்.


"அம்மா " என்ற அலறலில்


"ஹேய் சாரி சாரி, எனி ப்ரோப்லேம்?" என விக்ரம் கேட்க,


அந்த இருட்டில் ஒளிந்து இருந்த இடத்தில் இருந்து ஒரு பெண்ணுடன் வெளியே வந்தாள் லாவண்யா.


ட்ராக் பேண்ட் டீ-ஷர்ட்டில் இருந்தவன் முகம் சரியாக தெரியாததால் ஆசிரியர் என்று நினைத்து,


"சார் சார்! ஒரு பொறுக்கி துரத்தி வர்றான்" என்று வேக வேக மூச்சுக்களை விட்டுக்கொண்டே கூறினாள் லாவண்யா.


அதற்குள் கத்தியுடன் வந்தவனை பார்த்து விட்ட விக்ரம், "டோன்ட் பனிக்(panic)" என்று அவர்களிடம் கூறிவிட்டு யாரும் எதிர்பார்க்கா நேரம் பாய்ந்து அவன் கையில் இருந்த கத்தியை பிடிக்க முயன்று அதில் வெற்றியும் கண்டான்.


ஆனால் அதற்குள் கத்தி அவன் உள்ளங்கையில் இறங்கியும் இருந்தது.


விக்ரம் அவனுடன் சண்டையில் போராடிக் கொண்டிருக்க, லாவண்யா தூரத்தில் ஃபுட்பால் விளையாடிக் கொண்டிருந்தவர்களை அழைத்து வந்திருந்தாள்.


அந்த பெண்ணை அவள் குழுவுடன் சேர்த்து விட்டு அந்த கிரிமினலையும் போலீஸிடம் பிடித்து கொடுக்க எல்லா ஏற்பாடையும் லாவண்யாவே பார்த்து கொண்டாள்.


அனைத்தையும் அங்கு இருந்த ஆர்கனைஸ் மேனேஜரிடம் லாவண்யா கூறிவிட்டு திரும்ப, ஒரு கையால் இன்னொரு கையை பிடித்து கத்தவும் முடியாமல் வலி பொருக்கவும் முடியாமல் இருப்பவனை கண்டாள்.


இப்போது தான் அவனை முழுதாக பார்த்தாள். பார்த்ததும் அவன் முகம் ஈர்த்தது என்றெல்லாம் இல்லை.


ஆனாலும் அவன் வலியை மறைக்க ஒரு கையை கடித்ததை பார்த்து சிரிப்பு வந்தாலும் அவனை கூர்ந்து பார்க்க தோன்றியது.


பக்கத்தில் இருந்தவரிடம் மொபைல் வாங்கி தன்னோடு வந்த பெண்ணை அழைத்து முதலுதவி பெட்டியுடன் வர சொன்னாள்.


விக்ரம் அருகே சென்று அவன் கையை பிடிக்க கையை தட்டி விட்டு அவளை முறைப்புடன் பார்த்தான் அவன்.


"ஹலோ ஐம் எ டாக்டர்" என்று அவள் முறைப்புடன் கூறினாலும் உள்ளுக்குள் புன்னகை வரத்தான் செய்தது.


காயத்தின் ஆழத்தை பார்த்து விட்டு கையை பொத்தென்று விட, "ஆ" என கத்தினான் விக்ரம்.


வந்த சிரிப்பை அடக்கி கொண்டு "சாரி" என்று விட அவனும் தள்ளி நின்று கொண்டான்.


அவன் சாதாரணமாக அவளிடம் பேசியிருந்தால் கூட கடந்து சென்றிருப்பாள். அவன் அவளை கண்டு கொள்ளாமல் நின்றது அவளை பெரிதும் ஈர்த்தது.


முதலுதவி செய்ததும் "தேங்க்ஸ் " என்ற ஒற்றை வார்த்தையுடன் கடந்து விட்டான் விக்ரம்.


லாவண்யா அவன் கண்ணை விட்டு மறையும் வரை பார்த்து விட்டு சென்றாள்.


அடுத்த நாள் மீட்டிங் முன்னதாகவே முடிந்து விட சீஃப் டாக்டர் அனுமதியுடன் கல்லூரியில் நடக்கும் போட்டிகளை காண சென்றாள்.


அவள் சென்றது விக்ரமை காணத் தான் ஆனால் அவன் தான் அன்றிரவே கிளம்பிவிட்டானே.


சிறிது நேரம் தேடியவள் அவன் இல்லை என்றதும் அறைக்கு சென்று விட்டாள்.


அவனை மறந்ததாக சில நாட்களில் அவள் நினைத்திருக்க, கையில் காயத்துடன் யார் வந்தாலும் அவன் முகமே அவளுக்கு தோன்றியது.


அது காதல் என்று சொல்ல முடியா விட்டாலும் ஏனோ அந்த நினைவை ஒதுக்க நினைக்கவில்லை அவள்.


அடுத்த வருடம் ஹோம் சர்ஜியன்னாக லாவண்யா இருக்க, அந்நேரம் தான் வெளிநாடு செல்லும் வாய்ப்பு வந்தது.


மனோதத்துவம் படிக்க விருப்பம். அதுவும் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற பின் தடுக்க முடியாமல் அனுப்பி வைத்தார் லாவண்யா தந்தை.


திருமணம் பற்றி தந்தையை பேசவே அனுமதிக்கவில்லை. குறிப்பாக ஏதாவது கூறினாள் கூட அவன் முகம் கண்ணில் தோன்றி விடும் அவளுக்கு.


தூரத்தில் தோன்றிடும் வானவில் போலவே
நான் உன்னை பார்க்கிறேன் அன்பே..
சாரலாய் ஓர்முறை நீ எனை
தீண்டினாய்
உனக்கது தெரிந்ததா அன்பே..
என் மனம் கானலின்
நீர் என ஆகுமா
கைகளில் சேருமா அன்பே...


காதல் தொடரும்..
 

Latest profile posts

ஹலோ மக்களே
இனியா கதை எபி 80 வரை சைட்ல போட்டாச்சு.
நீ பார்த்த விழிகள் நாவலின் லிங்க் ஏப்ரல் 30 செவ்வாய் வரை தான் ஆக்டிவா இருக்கும், இன்னும் படிக்கலன்னா சீக்கிரம் படிச்சிடுங்க

https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/சித்ரா-வெங்கடேசனின்-நீ-பார்த்த-விழிகள்.372/
மக்களே சைட் ஒர்க் போகுது. விரைவில் சரி செய்யப்படும்
#முள்ளில்லா_முல்லைப்பூ-முழுநாவல்(ஏப்ரல் 22 இரவு 10 மணிவரை மட்டுமே)

மக்களே... நிறைய பேர் இன்னும் பாதி கதையில் இருப்பதாக சொன்னதால் முள்ளில்லா முல்லைப்பூ கதை நாளை (ஏப்ரல் 22) இரவு 10 மணிக்கு ரிமூவ் செய்யப்படும். அதற்கு மேல் டைம் கேட்காதீர்கள் மக்களே... கதையை பப்ளிஷ்க்கு அனுப்பிட்டேன். அதனால் அதற்கு மேல் லிங்க் வைத்திருப்பது கஷ்டம். புரிந்து கொள்வீர்கள் என்று நினைக்கிறேன்🙂


https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/எழிலன்புவின்-முள்ளில்லா-முல்லைப்பூ.382/
மக்களே சைட்டில் எரர் வந்தால் ஒரு இரண்டு நிமிடத்திற்கு பிறகு மீண்டும் பாருங்கள் ஒர்க் ஆகும்.

New Episodes Thread

Top Bottom