• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

அன்பின் முகவரி யாரோ? 25

ரித்தி

Active member
Member
அத்தியாயம் 25


சுரேஷ் நண்பர்களிடம் பொய் சொல்லிவிட்டு ஜோதியை தேடி தோட்டத்திற்கு சென்றிருந்தான்.


"என்ன பேபி அங்கே எல்லாரும் இருகாங்க. நீ இங்கே என்ன பண்ணுற?".


"நீங்க ஏன் இங்க வந்தீங்க? யாராச்சும் வர போறாங்க. போங்க" என அவள் விரட்ட.,


"யாரும் வரமாட்டாங்க. நீ அங்க இருந்தா நான் ஏன் இங்கே வர போறேன்? உனக்காக தான்டி பார்ட்டி வீட்ல வச்சேன். உனக்கே தெரியும் தானே? சொல்லு என்னாச்சு? ஏன் டல்லா இருக்க? "


"ஐ டோன்ட் க்நொவ் சுரேஷ்
பட் எனக்கு பயமா இருக்கு".


அவளருகே செல்ல மனம் துடித்தாலும் இருவருக்கும் இடையில் அதிகமாகவே இடைவெளி விட்டு அமர்ந்தவன்,


"என்னடா ஆச்சு? சொன்னா தானே தெரியும். நீ உள்ள வரும்போதே இப்படி தான் டல்லா வந்த. அப்போவே கேட்கலாம்னா எல்லாரும் இருந்தாங்க. இப்பவும் நமக்கு டைம் இல்லை. சோ சொல்லு என்ன நினச்சு குழம்புற நீ?" என்றான்.


"அண்ணனுக்கு நம்ம பத்தி தெரிஞ்சிருக்குமோனு பயமா இருக்கு!" என்று அவள் கூற ஒரு நொடி திடுக்கிட்டாலும், எப்படியும் தெரியாத்தானே போகிறது. இனி இதற்கு சீக்கிரம் நாமே சொல்லி விட வேண்டும் என நினைத்து கொண்டான்.


அண்ணனுக்கு தெரிந்திருக்குமோ தன்னை தவறாக வீட்டில் நினைத்து விடுவார்களோ என நினைத்து ஜோதி வருந்துவது சுரேஷிற்கு புரிந்தது.


"பேபி ப்ளீஸ் இப்படி இருக்காதே. எனக்கு கஷ்டமா இருக்கு. என்னால தான் உனக்கும் இந்த கஷ்டம்" என அவன் வருந்த,


"ச்ச! ச்ச! என்ன பேசுறீங்க நீங்க. நானும் உங்களை விரும்புறேன். எது நடந்தாலும் ரெண்டு பேரும் சேர்ந்து தான் சமாளிக்கணும். அம்மா வரலனு சொன்னதும் அண்ணா என்னை மட்டும் கூப்பிட்டாங்க"


"அம்மா, அவ எதுக்கு டா? நீங்கள் போய்ட்டு வாங்கனு சொல்லியும் கேட்காம அண்ணா என்னை கூட்டிட்டு வந்தாங்க. என்கிட்டே வரும்போது எதுவுமே பேசலையா அதான் ஏதேதோ நினச்சு உங்களையும் கஷ்டப்படுத்திட்டேன்" என சிரித்தவளை அள்ளி கொள்ள ஆசை இருந்தாலும் அடக்கியவன்,


"பேபிமா விக்ரம்க்கு தெரிஞ்சிருந்தா உன்கிட்டையோ என்கிட்டையோ பேசிருப்பான். இல்லைன்னா கூட அம்மாகிட்ட இருந்து பேசி உன்னை கூட்டிட்டு வந்திருக்கான்னா அவனுக்கு இதில் சம்மதம்னு தானே அர்த்தம்" என அவன் விளக்க, அவள் முகம் பாதி தெளிந்தும் தெளியாத நிலை.


"எனக்கு கொஞ்சம் கில்டி பீல்டா. அம்மா அப்பா யாரும் இல்லாத எனக்கு.. எப்படி உன்னை பொண்ணு கேக்கறதுனு. அதுக்காக உன்னை எப்பவும் மிஸ் பண்ணிட மாட்டேன். என்ன நடந்தாலும் நீ தான் என்னோட வைஃப். ரொம்ப கண்பியூஸ் ஆகாதே. சீக்கிரமே நான் உங்க வீட்டில பேசுறேன் பேபி" என்றதும் அவளுக்கு தெளிவு பிறந்தது. அதை அவள் சிரிப்பின் மூலம் வெளிப்படுத்த,


"ஹ்ம்ம்! இப்படிலாம் சிரிக்காதே. என்னாலும் ரொம்ப நாள் எல்லாம் வெயிட் செய்ய முடியாது" என கண் சிமிட்டியதும் அவள் எழுந்து கொண்டாள்.


"நான் போறேன்" என்றவளிடம்,


"ஐ லவ் யூ டி" என்றான்.


அவன் வார்த்தையால் உன்னை பிரியமாட்டேன் என்று கூறியதை தான் செயலால் காண்பிக்க முடிவு செய்தவள் அவன் அவளை காதலுடன் பார்த்து கொண்டிருந்த நேரம் அவனே அறியும் முன் அவன் கன்னத்தில் முத்தமிட்டு நிற்காமல் பறந்துவிட்டாள்.


இதுவரை நேரில் பார்த்து கொண்டதே இருவருக்கும் அரிது. சுரேஷ் தான் பெரும்பாலும் மறுப்பான். இதில் அவளின் முதல் தீண்டலுடன் முத்தம் உயிர் வரை சீண்டியது.


கன்னத்தை தொட்டு பார்த்து சிரித்து கொண்டவன் மெதுவாக நடந்து உள்ளே சென்றான்.


சுரேஷ் விக்ரம் நோக்கி வந்து கொண்டிருக்க, ஆனந்த் "நீ பேசினால் பிரிட்ஜ்ல வச்ச ஐஸ் மாதிரி உருகிடுவா டா. போய் பேசு ப்ளீஸ் மச்சி" என ஐஸ் வைத்து கொண்டிருந்தான் விக்ரமிடம்.


"லூசாடா நீ பிரிட்ஜ்ல வச்ச ஐஸ் எப்படி டா உருகும்? அவள் பிரீசெர்ல வச்ச பால் பாக்கெட் மாதிரி தான் இருப்பா!" என்று பீதி குறையாமல் கூறினான்.


"டேய் இன்னுமா உங்கள் சண்டை ஓயல?" என சிரித்து கொண்டே சுரேஷ் கேட்க,


"அது இருக்கட்டும் இவ்ளோ நேரம் எங்க டா போன நீ" என்றான் ஆனந்த் ஆராயும் பார்வையுடன்.


"டின்னர் ரெடியானு பார்க்க போனேன். எல்லாமே வந்தாச்சு. இனி சாப்பிடலாம் டா" என ஆனந்த் கேள்விக்கு பதில் கூறினாலும் விக்ரமை தான் பார்த்து கொண்டிருந்தான் சுரேஷ்.


அதே நேரம் ரிது இவர்கள் அருகே வர, ஆனந்த் "ரிது உன்கிட்ட விக்ரம் ஏதோ சொல்லனுமாம்" .


"சொல்லுங்க அண்ணா".


"அட பக்கி! பத்த வச்சுட்டியே பரட்ட!. நான் என்னத்த சொல்லுவேன்?" என விழித்தவன்,


பின் "பாசமலரே! அன்பில் விளைந்த வாசமலரே.." என பாட.


"பார்ரா! பாட்டெல்லாம் பலமா இருக்கே? தங்கச்சிக்கு மட்டும் தான் டெடிகேட் செய்விங்களா?" என லாவண்யா கூற,


"உனக்கு இல்லாத பாட்டா லாவி!. இதோ வந்துட்டேன்" என்றவன்.,


எனக்காக பொறந்தாயே எனதழகி
இருப்பேனே மனசெல்லாம் உனை எழுதி
உனக்கு மாலையிட்டு வருஷங்க போனா என்ன
போகாது என்னோட பாசம்....



என பாடிக் கொண்டே கண் விழிக்க அந்த இடத்தில் ஆனந்த் மட்டுமே இருந்தான்.


"என்ன டா நீ நிக்குற? எவ்ளோ ரொமான்டிக்கா பாடுறேன்! இந்த லாவி எங்க போனா?" என கண்களை சுழற்ற,


"உன் பாட்ட கேட்க முடியாம அவங்க எல்லாம் அப்பவே சாப்பிட போய்ட்டாங்க. வந்து தொல".


"ஏன் டா நீ மட்டும் போகல? என் பாட்டுனா அவ்ளோ இஷ்டமா?"


"செருப்பு. உயிர் நண்பனுக்கு ஒரு ஹெல்ப் கேட்டு அழகா ஒரு சான்ஸ் கூட ஏற்படுத்தி குடுத்தா இப்படி சொதப்பிட்டு கடுப்பேத்துற!".


"ஏன்டா உயிர் நண்பன்னா உயிரை மட்டுமே கேட்பியா டா?" என அதற்கும் விடாமல் கவுண்டர் கொடுத்து, சமாளித்து சாப்பிட அழைத்து சென்றான்.


பார்ட்டி இனிமையாக முடிந்தது. சாப்பிட்டு சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தனர்.


விக்ரம் ஆனந்த் பற்றி பேச வரும் போதெல்லாம் பேச்சை மாற்றுவது லாவண்யா அருகில் போய் அமர்வது என பேச விடாமல் செய்தாள் ரிது.


ஒரு அளவிற்கு மேல் வற்புறுத்தி கேட்க முடியாது என புரிய ஆனந்திடம் கை விரித்தான் விக்ரம்.


லாவண்யாவிடம் தக்க சமயம் பார்த்து யாருமில்லா நேரம் ஜோதி கூறியதை கூறிவிட்டு அடுத்து செய்ய வேண்டியதையும் கூறினான் சுரேஷ்.


இதை ரிது பார்த்தாலும் ஏதும் கேட்டுக் கொள்ளவில்லை. ஆனந்த் விக்ரமை முறைத்து கொண்டே ரிது அருகில் அமர்ந்திருந்தான்.


விக்ரம் இங்கு இருந்தாலும் தோட்டத்தில் பார்த்தது அவன் மனதை உறுத்தியது.


நண்பன் தான் என்றாலும் ஒரு அண்ணனாக முடிவெடுக்க தயாரானான்.


அனைவரும் சொல்லிக்கொண்டு கிளம்ப, ஜோதிக்கு கண்களால் ஆறுதல் கொடுத்து அனுப்பினான் சுரேஷ்.


வீட்டிற்கு செல்லும் வழியில் அப்பாவிற்கு மருந்து வாங்க வேண்டும் என்று ஞாபகப்படுத்தினாள் ரிது.


"அந்த பிரிஸ்கிரிப்சன் கொடு. நான் போய் வாங்கிட்டு வரேன் நீ இரு" என்றவனிடம்


"எங்கப்பாக்கு எனக்கு வாங்க தெரியும். ஹ்ம்!" என்று கூற,


"ப்ச் விளையாடாத ரிது! ரோடு கிராஸ் பண்ணனும். நீ இங்கேயே இரு" என கூற, சொல்ல சொல்ல கேட்காமல் அவள் இறங்கினாள்.


"இவ ஒருத்தி பேசுற எதையும் காதுல வாங்கவே மாட்டா" என கோபத்துடன் திரும்ப, அங்கே பூ விற்று கொண்டிருக்கும் பாட்டியை பார்த்தவன் இறங்கி சென்று வாங்கி வந்து காரில் அமர்ந்து கொண்டான்.

அப்போது போன் வர பேசிக் கொண்டே முன்னால் பார்த்தான். ஒரு லாரி இவன் காரை நோக்கி வந்து கொண்டிருந்தது.


திரும்பிவிடும் என அவன் அதையே பார்த்து கொண்டிருக்க அப்போது தான் உள்ளே இருந்த உருவம் தெரிந்தது.


"இவனா" என எண்ணிக் கொண்டிருக்க ஒரு நிமிடம் அவன் மூளை வேலை நிறுத்தம் செய்தது.


இப்போது சந்தேகமே இல்லை லாரி காரை நோக்கி தான் வந்து கொண்டிருக்கிறது.


"எதாவது செய்" என மூளை சொன்னாலும் துடிக்கும் இதயமும் அந்த நேர பதட்டமும் ஒன்றும் செய்ய விடவில்லை.


மிக அருகே லாரி வந்தும் அவன் கண்களை கூட மூடாமல் பார்த்திருந்தான்.


தப்பிக்க கூட தோன்றாமல் அவன் அமர்ந்திருக்க, நெற்றியில் இருந்து வியர்வை வழிந்தது.


சரியாக மோத இருந்த நேரம் லாரி சற்றே வளைந்து ரோட்டை பார்த்து திரும்பிவிட, மூச்சு விடக்கூட மறந்திருந்தான் ஆனந்த். லாரி திரும்பிய பின் தான் அவனுக்கு உணர்வே வந்தது.


இழுத்து வைத்திருந்த மூச்சை வாய் திறந்து "உஃப்" என அவன் வெளியிட, சரியாக அந்த நேரம் கார் முன்னே தூக்கி வீசப்பட்டாள் ரிது.


"ரிது......."


காதல் தொடரும்..
 

Latest profile posts

ஹலோ மக்களே
இனியா கதை எபி 80 வரை சைட்ல போட்டாச்சு.
நீ பார்த்த விழிகள் நாவலின் லிங்க் ஏப்ரல் 30 செவ்வாய் வரை தான் ஆக்டிவா இருக்கும், இன்னும் படிக்கலன்னா சீக்கிரம் படிச்சிடுங்க

https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/சித்ரா-வெங்கடேசனின்-நீ-பார்த்த-விழிகள்.372/
மக்களே சைட் ஒர்க் போகுது. விரைவில் சரி செய்யப்படும்
#முள்ளில்லா_முல்லைப்பூ-முழுநாவல்(ஏப்ரல் 22 இரவு 10 மணிவரை மட்டுமே)

மக்களே... நிறைய பேர் இன்னும் பாதி கதையில் இருப்பதாக சொன்னதால் முள்ளில்லா முல்லைப்பூ கதை நாளை (ஏப்ரல் 22) இரவு 10 மணிக்கு ரிமூவ் செய்யப்படும். அதற்கு மேல் டைம் கேட்காதீர்கள் மக்களே... கதையை பப்ளிஷ்க்கு அனுப்பிட்டேன். அதனால் அதற்கு மேல் லிங்க் வைத்திருப்பது கஷ்டம். புரிந்து கொள்வீர்கள் என்று நினைக்கிறேன்🙂


https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/எழிலன்புவின்-முள்ளில்லா-முல்லைப்பூ.382/
மக்களே சைட்டில் எரர் வந்தால் ஒரு இரண்டு நிமிடத்திற்கு பிறகு மீண்டும் பாருங்கள் ஒர்க் ஆகும்.

New Episodes Thread

Top Bottom