• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

அன்பின் முகவரி யாரோ? 23

ரித்தி

Active member
Member
அத்தியாயம் 23


"நீ என்ன தான் டா நினைச்சுட்டு இருக்க? அவ்ளோ தப்பையும் பண்ணிட்டு ஒரு சாரி கூட கேட்காம நீ பாட்டு வர்ற, நீ பாட்டு போற. உனக்கு என்ன தான் டா பிரச்சனை"


மடியில் படுத்தவனை சுகன்யா கேள்வி கேட்க எழுந்து அமர்ந்தான் அவன்.


"ம்மா! எனக்கு என்னம்மா பிரச்சனை. இப்ப கூட நானும் உங்க மருமகளும் ஒன்னா தானே வந்தோம்? அதுக்கு சந்தோசப்படாம இப்படி கேட்கிறீங்களே!" என்று கேட்டு அவரின் மகன் என்று நிரூபித்தான்.


'ஆமா சாரி ரிதுகிட்ட தானே கேட்கணும்? தப்பிச்சுட்டானே' என நினைத்தவர் அவனை முறைக்க, பலமாய் சிரித்தான்.


அவரை அருகே அமர்த்தி, "சாரி மா! ரியல்லி வெரி சாரி. இப்ப நான் ரொம்ப சந்தோசமா இருக்கேன். பட் அது அப்படியே கண்டியூ ஆகுறது உங்க கையில தான் இருக்கு".


"அதானே பார்த்தேன்! என்ன டா எலி பொறில சிக்குதேன்னு. 2 நாள் நீ யாரோ நான் யாரோனு தானே சுத்தின இனியும் அப்படியே சுத்து. போ டா" என்ன எழுந்து போக பார்க்க,


"ரிது தான் நான் காதலிச்ச பொண்ணு" என்ற வார்த்தைகளில் எழப் போனவர் அப்படியே அமர்ந்து விட்டார்.


"என்ன டா சொல்ற?" விழிகள் அப்படி விரிந்தது அவருக்கு.


"ப்ளீஸ் மா வேற எதுவும் என்கிட்ட இப்ப கேட்காதீங்களேன்"


"ரிதுவா? அப்புறம் ஏன்டா அவளை அழ வைக்குற? இப்ப நான் என்ன பண்ணனும்?" குழப்பமும் சந்தோசமும் சேர்ந்திருந்தது அவர் குரலில்.


"ஹாஹா இப்ப தானே ஹெல்ப் பண்ண மாட்டேன் சொன்னிங்க. நோ தேங்க்ஸ்".


"டேய் விளையாடாதே டா. நீ என்ன சொல்ல வர்ற? ரிது தான் அந்த பொண்ணா?".


கண்மூடி சாய்ந்து அமர்ந்தவன் "ஹ்ம்ம் ஆமாம் மா. பட் நான் அப்போ உங்ககிட்ட சொன்ன எல்லாமே தப்பு. இப்போ நானே தப்பு மா. மொத்தமா தப்பா மாறி உங்க முன்ன நிக்குறேன். நீங்க எப்பவும் சொல்லுவிங்களே! என் புள்ள எப்பவுமே பெஸ்ட்னு இல்லை மா தோத்துட்டேன். எல்லாத்துலயுமே ஜெயிச்ச நான் இப்ப எனக்கு புடிச்ச பொண்ணுகிட்ட தோத்துட்டேன். அவளை ரொம்ப கஷ்டபடுத்திட்டேன்" கண் விழிக்காமல் அவன் சொல்ல அப்பட்டமாக அவன் முகத்தில் வழி தெரிந்தது.

ஆறுதலாய் அனைத்து கொண்டார் தாய்.


"எனக்கு ரிது வேணும்மா. நான் பண்ணினது எல்லாமே தப்பு தான். என் வாழ்க்கை முழுக்க இனி எந்த ஒரு தப்பும் செய்யமாட்டேன் மா. ப்ளீஸ் மா எனக்கு ரிது வேணும்" என கூறியவன் கண்கள் அதை நினைத்தாலே கலங்கியது.


முழு விவரம் புரியாவிட்டாலும் மகனை பற்றி தெரிந்தவரால் அவன் கூற வந்தது புரிந்தது.


"வரும் போது எவ்ளோ ஹாப்பியா வந்த? இப்போ உன் மூஞ்சி பாக்க சகிக்கல. அதான் ரிது உள்ளே ஓடிட்டா போல. போ டா போய் தூங்கு போ" அவனை சகஜமாக்க முயன்றார்.


அதில் தெளிந்தவன் எழுந்து அமர்ந்தான். "அதே தான் நானும் சொல்ல வந்தேன். இனி ரிது உங்க ரூம்க்கு வரக்கூடாது".


"சண்டைக்காரன் காலுல விழுறதுக்கு சாட்சிகாரன் காலுல விழலாம்னு வந்துருக்கிங்க சார் அப்படித்தானே?".


"ம்மா! ம்மா! ப்ளீஸ்மா! அவகிட்ட முகம் குடுத்து பேசவே முடில. அவளும் ஒதுங்கி போறா. புரிஞ்சிக்கோங்க மா"


கொஞ்சிக்கெஞ்சி அவரை சமாதானம் செய்து இவன் படி ஏற, ரிது இறங்கி சுகன்யா அறைக்குள் நுழைந்தாள்.


உள்ளே ரகு இருப்பதை பார்த்தவள் பேந்த பேந்த விழிக்க அவளை பார்க்க சிரிப்பாக வந்தாலும் அடக்கி கொண்டார் சுகன்யா.


"மாமாக்கு கொஞ்சம் உடம்புக்கு முடியலை டா. நீ உன் ரூம்ல படுத்துக்கோயேன்".


ஏதும் சொல்ல முடியாமல் தலையை ஆட்டி விட்டு மேலே ஏறியவள் தந்தை அறைக்கு செல்லலாமா என நினைத்தவள் பின் முடிவை மாற்றி கொண்டாள்.


அவன் செய்தது முட்டாள் தனத்தின் உற்றம். ஆனாலும் ஏதோ ஒன்று அவளைப் பாடாய்படுத்தியது.


தானே முடிவு செய்து தானே தண்டனை கொடுப்பவனை அப்படியே விட்டுவிட முடியவில்லை.


அன்று கோபத்தில் வீட்டை விட்டு செல்கிறேன் என்ற கோபம் கூட அடுத்து அவன் இவளுக்கு கண்ணில் படாமல் ஆட்டம் காட்டிய நாட்களில் குறைந்தது.


சந்தேகம் என்பது அன்றோடு முடிவதில்லை. பின்னாளில் இதே போல ஒரு நிலை வந்தால் அதை சுத்தமாக தன்னால் தாங்கவே முடியாது.


மேலும் அன்று போல தினமும் குடித்து வந்தால்? வேண்டாம் எதுவும் வேண்டாம். கூடிய மட்டும் அப்பாவுடன் இங்கிருந்து கிளம்பி விட வேண்டும் என்று தான் அவள் நினைத்து கொண்டாள்.


அறைக்குள் வந்தவள் அவனை தேட, அப்போது தான் பாத்ரூமில் இருந்து வெளிவந்தான்.


அவளை பார்த்து சிரித்து "உள்ளே வா ஏன் அங்கேயே நிக்குற?".


"உங்ககிட்ட பேசணும்" என ரிது ஆரம்பிக்க,


'என்ன விக்ரம் சொன்னது ரிவீட் ஆகுது?' என அதிர்ச்சியானான்.


'என்கிட்டே சொன்னா மாதிரி அவகிட்டயும் விக்ரம் சொல்லிருப்பானோ' என நினைத்து கொண்டிருக்க,


"இட்ஸ் ஒகே! அவ்ளோ கஷ்டப்பட்டு ஒன்னும் நீங்கள் யோசிச்சு பேச வேண்டாம்" என அவள் தூங்க செல்ல,


"சாரி சாரி அம்மு! ஏதோ யோசனையா இருந்துட்டேன் சொல்லு டா" என்றான். குரலில் அவ்வளவு கனிவு.


அது குற்ற உணர்ச்சியாலா இல்லை விருப்பதாலா என்று தான் அவளுக்கு புரியவில்லை.


"இன்னும் த்ரீ டேஸ்ல நமக்கு ரிசெப்ஷன்னாம். இது கண்டிப்பா நமக்கு வேணுமா?".


'நினச்சேன். நீ பண்ணி வச்சிருக்க வேலைக்கு அவ இப்படி தானே டா பேசுவா' என மனசாட்சியுடன் பேசிக் கொண்டிருந்தான்.


"சொல்லுங்க! உங்களுக்கும் இந்த கல்யாணத்துல இஷ்டம் இல்லை. எனக்கும் இல்லை. அப்புறம் எதுக்கு தேவை இல்லாமல்" என அவள் பேசிக் கொண்டே போக,


"ரிது ப்ளீஸ் எனக்கு விருப்பம் இல்லைனு யார் சொன்னாங்க? நாம நாளைக்கு இதை பத்தி பேசலாம் இப்போ டையர்ட்டா இருப்ப. போய் தூங்கு".


நம்பிக்கையை உடைத்தது தவறு தான் அதற்காக ஆளாளுக்கு காதல் இல்லை கல்யாணத்தில் இஷ்டம் இல்லை என்பதை அவனால் தாங்க முடியவில்லை.


"இல்ல எனக்கு இன்னைக்கு தெரிஞ்சாகனும். நாளைக்கு நீங்க பாட்டுக்கு குடிச்சுட்டு வந்து மறுபடியும் அடிச்சீங்கன்னா நல்லா இருக்காது பாருங்க அதான்".


"ஐயோ! அம்மு ப்ளீஸ்! என்னால முடியலை டீ. இன்னொரு வாட்டி அப்படி பேசாத! ரொம்ப வலிக்குது அம்மு. சத்தியமா உன்னை கஷ்டப்படுத்துற எந்த ஒரு விஷயத்தையும் நான் இனி செய்ய மாட்டேன். உன் மேல ப்ரோமிஸ். என்ன நம்பு டீ" முகம் முழுவதும் சோர்ந்து போய் பேசியவனை பார்க்க பாவமாக இருந்தாலும் அமைதியாகவே நின்றாள்.


"நான் உன்னை விரும்புறேன் ரிது. உன்னை பிடிக்காமல் நான் இந்த கல்யாணத்துக்கு சம்மதம் சொல்லிருப்பேனா? சொல்லு அம்மு! உன்னை பார்த்த நாள்ல இருந்து இன்னைக்கு வரை என் மனசில என்னென்ன உணர்வுகள் எல்லாம் இருக்கு தெரியுமா?"


"எதுமே தெரியாத உனக்கு தண்டனை கொடுக்கிறதா என்னென்னவோ செஞ்சு... இப்ப என் காதலை சொல்ல முடியாம, இன்னைக்கு வரைக்கும் உன்னை என்கிட்டே இருந்து தள்ளி வைச்சு.. புத்திகெட்ட தனமா நடந்ததுக்கு நான் எவ்வளவு தண்டனை அனுபவிச்சுட்டு இருக்கேன் தெரியுமா?"


"என் வாழ்க்கையில் எல்லாமே சரியா தான் போயிட்டு இருந்திருக்கு அம்மு. நான் தேவை இல்லாத ஒரு பிரச்சனையை இழுத்து வச்சு, என்னை விரும்பின உன்னை இழந்து, எப்பவும் சந்தோசமா இருக்கிற வீட்ல அமைதிய கொண்டு வந்து நிம்மதியே இல்லாம வாழ்ந்துட்டு இருக்கேன். தயவு செஞ்சு வார்த்தையால இன்னொரு முறை என்னை கொல்லாதடீ ப்ளீஸ்".


எத்தனை உணர்வுகள்! கெஞ்சல், கோபம், வருத்தம், ஏக்கம், தவிப்பு அத்தனை உணர்வையும் இந்த நிமிடம் கண்டாள் அவனிடம்.


அவன் மனதில் இருந்த அத்தனையும் கொட்டியிருந்தான்.


இதற்கு என்ன பதில் சொல்வது? அவளும் அவனை விரும்பினதால் தானே மணந்தாள்! அதை அவனிடம் சொல்லியும் விட்டாள். அவன் மனதில் இருப்பதும் தெளிவாகி விட்டது.


'ஆனாலும் இது மட்டும் போதுமா எனக்கு?' அவள் யோசித்து கொண்டிருக்க, அவனோ முகத்தை அழுந்த துடைத்துக் கொண்டான்.


அவள் அருகில் வந்தவன் "ரிது என்னை பாரு" என்றதும் திரும்பினாள்.


நான் சொல்வது உறுதி என்ற அழுத்தத்துடன் பேச்சை தொடங்கினான்.


"என்னால் நீ இல்லாமல் வாழ முடியாது. இதை நீ சுயநலம்னு கூட நினச்சிக்கோ. பட் நீ இந்த வீட்டை விட்டு போனும்னு மட்டும் நினைக்காதே. அது கண்டிப்பா உன்னால முடியாது. இந்த ரிசெப்சன் கூட கண்டிப்பா நடக்கும். எவ்ளோ பெரிய கஷ்டத்தை உனக்கு குடுத்தேன்? அதை விட இது சின்னது தான். சோ நம்ம ரிசெப்சன் நடக்கும். இவ்வளவு நாள் தெரியாமல் செய்தது பட் இது தெரிஞ்சே செய்றேன். இதுக்கும் சேர்த்தே தண்டனை கொடு" என்று இதழை வளைத்து மெலிதாய் சிரித்தவன் அவள் முகத்தை பார்க்க அவள் கண்களில் நீர் நிறைந்து இருந்தது.


அதை துடைக்க கைகளை நீட்டியவன் பின் மடக்கி கொண்டான்.


"இது தான் நம்ம ரூம் அம்மு. நீ எனக்கு என்ன தண்டனை குடுத்தாலும் ஒகே தான். நான் தயாராக இருக்கேன். உன்னை பாத்துட்டே இருந்தா மட்டும் போதும் எனக்கு. உன் அனுமதி இல்லாமல் உன்னை மீறி எதுவும் இங்கே இன்னும் ஒருமுறை கூட நடக்காது. இனி நான் குடிக்கவே மாட்டேன் இது உன் மேல சத்தியம். எதையும் நினைக்காமல் இப்போது தூங்கு மீதி உனக்கு எதாவது பேசணும்னா நாளைக்கு பேசலாம். நீ ரொம்ப டையர்டா தெரியுற. பெட்ல படுத்துக்கோ" என்று விட்டு அவன் சோஃபாவில் கால்களை குறுக்கி படுத்துக் கொண்டான்.


அந்த இடத்தில் எவ்வளவு நேரம் நின்றாள் என தெரியவில்லை. கால்கள் வலிப்பது போல இருக்க திரும்பி அவனை பார்த்தாள்.


அன்று முழுவதும் இருந்த அலைச்சலோ இல்லை இவ்வளவு நேரம் மனதில் இருப்பதை பேசியதோ அவன் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தான்.


அவன் மேல் இருந்த கோபம் இப்போது இருக்கிறதா என்று கேட்டால் அவளுக்கே அது தெரியவில்லை!


பார்த்த நாளில் இருந்து விரும்புகிறேன் என சொன்னதை அவளால் நம்ப முடியவில்லை.


ஆனாலும் அவன் முகம் பொய் சொல்லவில்லையே. மேலும் ஆபிஸ்ஸில் இவளிடம் அவன் முதலில் நடந்து கொண்ட முறை ஞாபகம் வந்தது.


மனதில் இருந்த பாரம் சற்று குறைந்து அவன் பேசிய ஒவ்வொரு வார்த்தைகளையும் நினைத்து கொண்டே இருந்தவள் அப்படியே தூங்கியும் போனாள்.


அன்பு தொடரும்..
 

Latest profile posts

ஹலோ மக்களே
இனியா கதை எபி 80 வரை சைட்ல போட்டாச்சு.
நீ பார்த்த விழிகள் நாவலின் லிங்க் ஏப்ரல் 30 செவ்வாய் வரை தான் ஆக்டிவா இருக்கும், இன்னும் படிக்கலன்னா சீக்கிரம் படிச்சிடுங்க

https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/சித்ரா-வெங்கடேசனின்-நீ-பார்த்த-விழிகள்.372/
மக்களே சைட் ஒர்க் போகுது. விரைவில் சரி செய்யப்படும்
#முள்ளில்லா_முல்லைப்பூ-முழுநாவல்(ஏப்ரல் 22 இரவு 10 மணிவரை மட்டுமே)

மக்களே... நிறைய பேர் இன்னும் பாதி கதையில் இருப்பதாக சொன்னதால் முள்ளில்லா முல்லைப்பூ கதை நாளை (ஏப்ரல் 22) இரவு 10 மணிக்கு ரிமூவ் செய்யப்படும். அதற்கு மேல் டைம் கேட்காதீர்கள் மக்களே... கதையை பப்ளிஷ்க்கு அனுப்பிட்டேன். அதனால் அதற்கு மேல் லிங்க் வைத்திருப்பது கஷ்டம். புரிந்து கொள்வீர்கள் என்று நினைக்கிறேன்🙂


https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/எழிலன்புவின்-முள்ளில்லா-முல்லைப்பூ.382/
மக்களே சைட்டில் எரர் வந்தால் ஒரு இரண்டு நிமிடத்திற்கு பிறகு மீண்டும் பாருங்கள் ஒர்க் ஆகும்.

New Episodes Thread

Top Bottom