• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.
Nithya Mariappan
Reaction score
3,229

Profile posts Latest activity Postings About

  • ஹாய் ஃப்ரெண்ட்ஸ்
    பரிதி தீண்டிய பனிமலரே அத்தியாயம் 24

    தக்ஷிண்யா அவனது பார்வையைத் தவிர்க்க எண்ண அது முடியாமல் போக “நமக்குள்ள எந்த ஃபைட்டும் இன்னும் முடியல ருத்ரா” என்று ஞாபகப்படுத்தினாள்.

    “எனக்கும் ஞாபகம் இருக்கு டார்லிங்... ஒரு பழமொழி கேள்விப்பட்டிருக்கியா? புருசன் பொண்டாட்டி சண்டை ஒரு ராத்திரியோட சரி... அர்த்தம் புரியுதா?”

    தக்ஷிண்யா அவனது பேச்சின் அர்த்தம் புரிபடவும் “என்னது? இப்பிடி டர்ட்டியா பேசுறதுக்கு உங்களுக்கு ஒரு மாதிரி இல்ல?” என்று கோபமாக கேட்க

    “நீ என் பொண்டாட்டி.. உன் கிட்ட டர்ட்டியா பேசலைனா தான் இந்த சமூகம் என்னை ஒரு மாதிரி பேசும் தக்ஷி... அதுவும் நீ இப்பிடி மருண்டு பாக்குறப்ப கிக்கா இருக்கு” என்று குறும்பாக மொழிந்தவன் இன்னும் நெருங்கினான்.

    தக்ஷிண்யா செய்வதறியாது திகைக்கும் போதே விலகி நின்றவன்

    “போதும் பயப்படாத... இத்தனை நாளா என்னை எவ்ளோ டென்சன் பண்ணுன? அதுக்கு ரெவன்ஜ் எடுத்தேன்... ரிலாக்ஸ் ஆகிடு.... இன்னைக்கு எனக்கும் கொஞ்சம் டயர்டா தான் இருக்கு... சோ ரெஸ்ட் எடுக்கப் போறேன்... நீயும் தூங்கு” என்றபடி உடை மாற்றியவன் படுக்கையின் அடுத்தப்பக்கம் போய் படுத்துக்கொண்டான்.

    தக்ஷிண்யாவும் நிம்மதியென எண்ணி கண்ணை மூட எத்தனிக்க திடீரென ருத்ரதேவ் அவள் புறம் திரும்பிப் படுக்கவும் நகர்ந்து படுக்கப் போனாள்.

    ஆனால் அவளது கரத்தைப் பற்றி தன்னருகே இழுத்துக் கொண்டவன் இறுக்கமாக அணைத்துக் கொண்டான்.

    தக்ஷிண்யா திமிறிய போதே “இன்னைக்கு மட்டும் தான் ரெஸ்ட்னு சொன்னேன்... உடனே சினிமா சீரியல்ல வர்ற மாதிரி ஃபர்ஸ்ட் நைட்டை ஒரு வருசம் ரெண்டு வருசம் தள்ளிப் போடலாம்னு நினைச்சுக்காத” என்று அவன் கூற

    “நீங்க சீரியசாவா பேசறிங்க?” என்று கண்களை விரித்துக் கேட்டாள் அவள்.

    “ஆமா! நான் உன்னை பைத்தியமா லவ் பண்ணிருக்குறேன், போதாக்குறையா ஒரு தடவைக்கு ரெண்டு தடவை கல்யாணம் வேற பண்ணிருக்குறேன்... அப்புறம் எதுக்கும்மா நான் கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரியா இருக்கணும்?”

    தொடர்ந்து படிக்க

    https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?threads/🌞மலர்-24🌸.4161/
    ஹாய் ஃப்ரெண்ட்ஸ்
    பரிதி தீண்டிய பனிமலரே அத்தியாயம் 23

    “அது எப்பிடி, உனக்கு தேவையில்லனா தூக்கியெறிஞ்சிடுவ, வேணும்னா தூக்கி வச்சு கொஞ்சுவ... என்னைப் பத்தி யோசிக்கவே மாட்டேல்ல”

    “இல்ல ருத்ரா... நான் நமக்காகவும் தான் பேசுறேன்”

    “வாவ்! இத்தனை நாள்ல நமக்குங்கிற வார்த்தை உன் வாய்ல இருந்து வரவேல்ல... இப்ப மட்டும் தான் நம்ம லவ் பண்ணுனோம்ங்கிறதே உனக்கு ஞாபகம் வருதா? இதுக்குப் பேர் லவ் இல்லடி, சுயநலம்... நீ என்னை வேண்டாம்னு தூக்கியெறிஞ்சப்ப எனக்கு எவ்ளோ வலிச்சுதுனு தெரியுமா?”

    கோபத்தில் அவன் கொந்தளிப்பதைக் கண்டு தக்ஷிண்யாவின் கண்கள் கலங்கிவிட்டது. நாசி நுனி சிவக்க அழுதபடி தலையைக் குனிந்து கொண்டாள் அவள்.

    “அழுது சமாளிக்காத தக்ஷி... நான் ஹர்ட் பண்ணுறப்ப உன்னால அழுகைல அந்த வலிய கரைச்சிக்க முடியும்டி... ஆனா என்னால அழவும் முடியாது... ஏன்னா ஆம்பளை அழக்கூடாதுனு எந்த முட்டாளோ சொல்லி வச்சிட்டுப் போயிட்டான்... அவன் என் கையில கிடைச்சா செத்தான்”

    பற்களைக் கடித்தபடி அவன் கூற தக்ஷிண்யாவின் அழுகை இன்னும் அதிகரித்தது.

    தொடர்ந்து படிக்க

    https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?threads/🌞மலர்-23🌸.4150/
    ஹாய் ஃப்ரெண்ட்ஸ்
    பரிதி தீண்டிய பனிமலரே அத்தியாயம் 22

    தக்ஷிண்யா அலட்சியமாகத் தோளைக் குலுக்கியவள் தான் அங்கே விழுந்ததை அவனுக்கு நினைவுபடுத்தினாள்.

    “நான் விழுந்தது கொஞ்சம் கிடைமட்டமான இடம், அங்கயே ரெண்டு மணிநேர போராட்டத்துக்கு அப்புறம் தான் என்னை காப்பாத்த முடிஞ்சுது... நீங்க சொல்லுறது நான் விழுந்த சரிவைத் தாண்டி இருக்குற பள்ளத்தாக்கைப் பத்தி... நீங்க உங்க இடத்துக்கு வர்ற மக்களோட உயிரோட விளையாடுறிங்கனு எனக்குத் தோணுது... இதுக்கு மேல நான் சொல்லுறதுக்கு எதுவுமில்ல”

    “உன்னை மாதிரி சின்ன கம்ஃபர்டபிள் ஜோனுக்குள்ள வாழுறவங்களுக்கு இது பயமா தான் இருக்கும்... சாகணும்னு விதி இருந்தா செருப்பு தடுக்கி விழுந்தா கூட செத்து தான் போவோம்... உன்னோட அட்வைஸை அனுதீப் கிட்ட சொல்லுறதுக்காக பத்திரப்படுத்தி வச்சுக்க... இப்ப கிளம்பலாம்”

    இனிமேல் எனக்கென்ன வந்தது என்ற அலட்சிய பாவனையுடன் அவனைத் தொடர்ந்தாள் தக்ஷிண்யா.

    தொடர்ந்து படிக்க

    https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?threads/🌞மலர்-22🌸.4143/
    ஹாய் ஃப்ரெண்ட்ஸ்

    பரிதி தீண்டிய பனிமலரே அத்தியாயம் 21

    “கோவப்படாத ருத்ரா” என்றபடி அவனைத் தடுத்து நிறுத்தினார் சசிகலா.

    “கோவப்படாம என்ன பண்ண சொல்லுறிங்க? நீங்க சொன்ன ஃப்ளாஷ்பேக்கை கேட்டதும் எனக்கு இவ மேல பரிதாபம் வருது... அத்தை நடந்துக்கிட்ட விதத்துக்கு யாரா இருந்தாலும் யோசிப்பாங்க தான்... ஆனா இவ என்னை நம்பணுமா இல்லையா? அவங்க என்ன, என்னை படைச்ச கடவுளே வந்து தக்ஷிய பிரிஞ்சிடுனு சொன்னா கூட நான் ஒத்துக்க மாட்டேன்... ஏன்னா நான் உண்மையா இவளை காதலிச்சேன்... ஆனா இவ..” என்று அவளை நோக்கி கை காட்டியவன்

    “நாங்க உண்மையா காதலிச்சோமா இல்ல வயசுக்கோளாறுல ஒன்னா சுத்துனோமானு நீங்க கேட்டிங்கல்ல... அதுக்கு இவளோட பதில் என்னனு இப்ப உங்களுக்குத் தெரிஞ்சிருக்கும்” என்றான் விட்டேற்றியாக.

    “என் லவ்வுக்கு யாரும் சர்டிபிகேட் குடுக்க வேண்டிய அவசியமில்ல”
    சுள்ளென்று கூறினாள் தக்ஷிண்யா.

    “சாரி! நீ பண்ணுனது லவ்வே இல்லனு தான் நான் சொல்லிட்டிருக்குறேன்”

    “சரி, அப்பிடியே வச்சுக்கோங்க... ஆனா எந்தக் காரணத்துக்காகவும் என் முடிவை நான் மாத்திக்க மாட்டேன்... நீங்களோ உங்கம்மாவோ என் மனசை மாத்தலாம்னு கனவுக்கோட்டை கட்டாம உங்க வேலைய பாருங்க”

    தக்ஷிண்யா எடுத்தெறிந்து பேசவும் ருத்ரதேவின் கோபம் இன்னும் தான் அதிகரித்தது.

    அவளை எரிப்பது போல பார்த்துவிட்டு “இனிமே இவ கிட்ட பேசுறது வேஸ்ட்மா... இந்த மகாராணிக்குப் பணிவிடை பண்ணுனதுலாம் போதும்.. காலும் கையும் நல்லா தானே இருக்கு... இனிமே இவளுக்கு உங்க உதவி தேவையில்ல” என்றவன் ஒரு நொடி கூட தாமதிக்காது சசிகலாவைத் தன்னோடு அழைத்துச் சென்றுவிட்டான்.

    தொடர்ந்து படிக்க

    https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?threads/%F0%9F%8C%9E%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D-21%F0%9F%8C%B8.4137/
    ஹாய் ஃப்ரெண்ட்ஸ்
    பரிதி தீண்டிய பனிமலரே அத்தியாயம் 20

    “நைனிடால்ல நீ தக்ஷியோட நெத்தில குங்குமம் வச்சியா?”

    “இதை கேக்குறதுக்கு தான் உக்கார சொன்னிங்களா? சாரி எனக்கு டைம் இல்ல” என்று எழுந்தவன் போக எத்தனிக்க சசிகலா அவனை விட வேகமாக சென்று வழிமறித்தார்.

    “கேட்டதுக்குப் பதில் சொல்லுடா”

    “ஆமா! அதுக்கு இப்ப என்ன? அங்க மட்டுமில்ல, அனுதீப் கல்யாணத்துல சப்தபதி வச்சு கிட்டத்தட்ட இவளை என்னோட மனைவியா அங்கீகரிக்கவும் செஞ்சுட்டேன்... போதுமா?”

    “இவ்ளோ செஞ்சுட்டு நீ இவளை ஒதுக்கி வைக்குறீயா?”

    “ஆமா! என் காதலை மதிக்காத ஒருத்திக்கு என் வாழ்க்கையில இடம் கிடையாதும்மா”

    அவன் சொல்லி முடித்த அடுத்த நொடி சசிகலாவின் கரம் அவனது கன்னத்தில் வேகமாக படிந்தது.

    பளார் சத்தத்தில் அவ்வளவு நேரம் தலை குனிந்தபடி அமர்ந்திருந்த
    தக்ஷிண்யா அதிர்ந்து தலையை உயர்த்தி அன்னையையும் மகனையும் பார்த்தாள்.

    ருத்ரதேவ் அதிர்ச்சியுடன் கன்னத்தைப் பிடித்தபடி நிற்க சசிகலாவோ கோபம் மின்னிய விழிகளுடன் அவனை உறுத்துப் பார்த்தார்.

    “தோளுக்கு மேல வளர்ந்த பையன் கிட்ட கை நீட்டக்கூடாதுனு பொறுமையா இருந்தா நீ எல்லைய மீறிப் பேசுற ருத்ரா... நீ தானே இந்தப் பொண்ணை தேடி தேடி போய் லவ் பண்ணிருக்க... அப்பிடி லவ் பண்ணுனப்பவே அவ குணம் என்னனு உனக்குப் புரிஞ்சிருக்கும் தானே... எந்த மாதிரி சூழ்நிலையில அவ உன்னை வேண்டாம்னு சொன்னாங்கிறத கூட உன்னால புரிஞ்சுக்க முடியலனா நீ என்ன லெட்சணத்துல காதலிச்ச?”

    தொடர்ந்து படிக்க

    https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?threads/%F0%9F%8C%9E%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D-20%F0%9F%8C%B8.4128/
    ஹாய் ஃப்ரெண்ட்ஸ்
    பரிதி தீண்டிய பனிமலரே அத்தியாயம் 19

    லாபியில் காத்திருந்தவளை சட்டை செய்யாமல் ஏளனச்சிரிப்புடன் தனது அலுவலக அறைக்குள் நுழைந்தான் அவன்.

    சுழல் நாற்காலியில் சரிந்தவன் கண்ணாடி கதவு ‘டொக் டொக்’கென தட்டப்படவும் “கமின்” என்கவும் உள்ளே வந்தவள்

    “நீங்க உங்க மனசுல என்ன நினைச்சிட்டிருக்கீங்க?” என்று கொதிக்கவும்

    “உன்னைத் தான்” என்று சொல்லி அவளை வாயடைக்க வைத்தான் ருத்ரதேவ்.

    தக்ஷிண்யா கண்களைச் சிமிட்ட மறந்து நிற்கவும் அலட்சியப்பார்வை பார்த்தவன்

    “அப்பிடி சொல்லுவேன்னு நினைச்சியா? நெவர்... எனக்கு இருக்குற ஆயிரம் உபயோகமான வேலையில துரோகிங்களை பத்தி நினைக்குறதுக்கு எனக்கு நேரமில்ல” என்றான்.

    “ஆயிரம் உபயோகமான வேலை இருக்குறவர் ஏன் என்னோட ஃப்ளைட் டிக்கெட்டை அனுதீப் சார் கிட்ட சொல்லி கேன்சல் பண்ண வச்சீங்க?”

    “யூ ஹர்ட்ஸ் மை ஈகோ... உன்னை அப்பிடியே விட்டுட்டா என் மனசு ஆறாது... சோ...”

    “சோ...?”

    “எந்த வேலைக்காக இங்க வந்தியோ அந்த வேலைய செஞ்சு முடிச்சிட்டு கிளம்பு... அதுக்குள்ள உனக்கு வட்டியும் முதலுமா திருப்பிக் குடுக்க வேண்டியதை நானும் குடுத்துடுவேன்”

    “எனக்கு உங்க கூட ஒர்க் பண்ண பிடிக்கல... நான் எல்லாத்தையும் மறக்கணும்னு நினைக்குறேன்... இன்ஃபேக்ட், அது தான் உங்களுக்கும் நல்லது”

    “வாழ்க்கையில நமக்கு நடந்த நல்லதை கூட மறக்கலாம்... ஆனா கெட்டதையும் அதை செஞ்சவங்களையும் மறக்கவே கூடாது மிஸ் தக்ஷிண்யா ராஜேந்திரன்... ப்ச்... மிஸ் தக்ஷிண்யா கமல்நாத்? அடடா, மிஸ் ராஜேந்திரனா மிஸ் கமல்நாத்தானு ஒரே கன்ஃபியூசனா இருக்கே... எப்பிடி கூப்பிட்டா உங்களுக்கு கம்ஃபர்டபிளா இருக்கும்?”

    கேலியாய் சொல்வது போன்று அவன் பேசிய வார்த்தைகள் தைக்க
    வேண்டிய இடத்தில் சரியாய் சென்று தைத்துவிட தக்ஷிண்யாவின் கண்கள் கலங்க ஆரம்பித்தது.

    தொடர்ந்து படிக்க

    https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?threads/%F0%9F%8C%9E%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D-19%F0%9F%8C%B8.4120/
    ஹாய் ஃப்ரெண்ட்ஸ்
    பரிதி தீண்டிய பனிமலரே அத்தியாயம் 18

    ருத்ரதேவ் கிளம்பாமல் அங்கேயே நின்றான்.

    “நான் உங்களை போகச் சொன்னேன் ருத்ரா”

    தக்ஷிண்யாவின் குரல் உயர அவனது கோபம் பன்மடங்காகியது. வேகமாக அவளை நெருங்கியவன் அவளது மோவாயை அழுத்தமாகப் பற்றவும்

    “என்ன பண்ணுறிங்க நீங்க? எனக்கு வலிக்குது ருத்ரா” என்று அவனது கையைத் தட்டிவிட போராடினாள் தக்ஷிண்யா.

    “வலிக்குதா? இவ்ளோ நால் லவ் பண்ணிட்டு இப்ப பிடிக்கலனு சொல்லுறப்ப எனக்கும் தான் வலிக்குதுடி... என்னால வேற யார் கிட்டவும் எந்தக் காரணத்தையும் கேக்க பிடிக்கல... நான் லவ் பண்ணுனது உன்னைத் தான்... ஒழுங்கா என்ன காரணம்னு சொல்லு... இல்லைனா உன்னை நான் விடுறதா இல்ல”
    கோபத்தில் பற்கள் அரைபட பேசியவனின் இந்த முகம் தக்ஷிண்யாவுக்குப் புதிது. வலியில் கண்களில் நீர் கோர்த்தது அவளுக்கு.

    ஆனால் அவனோ விடுவதாக இல்லை. அவனது பிடி இன்னும் இறுகவும் மோவாய் எலும்புகளில் வலி பரவ கண்களை இறுக மூடிக்கொண்டவள்

    “உங்க மாமா தான் என்னோட அப்பா... எங்கம்மாவோட பேர் தேவிகா... இது போதுமா?” என்று கத்தினாள்.

    அடுத்த நொடி ருத்ரதேவின் கரங்கள் அழுத்தத்தை இழந்து தானாக கீழே இறங்கியது.

    “வாட்? நீ இப்ப என்ன சொன்ன?” அதிர்ச்சியாய் கேட்டான் அவன்.

    “நான் ராஜேந்திரனுக்கும் தேவிகாவுக்கும் பிறந்த பொண்ணு... உங்க குடும்பம் மொத்தமும் எங்கம்மாவை லவ் மேரேஜ் பண்ணுனதுக்காக மிஸ்டர் ராஜேந்திரனை ஒதுக்கி வச்சது மறந்து போச்சா?”
    ருத்ரதேவுக்கு இப்போது புரிந்தது ஏன் இவளை எங்கேயோ பார்த்தது போல இருந்தது என்று.

    தொடர்ந்து படிக்க

    https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?threads/%F0%9F%8C%9E%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D-18%F0%9F%8C%B8.4109/
    ஹாய் ஃப்ரெண்ட்ஸ்
    பரிதி தீண்டிய பனிமலரே அத்தியாயம் 17

    ஆரோஹி பனீரை மென்றபடி “இன்னும் ஏன் தேவ் மாமா வரல?” என்று கேட்க

    “அவருக்கு ஆபிஸ்ல இம்பார்ட்டெண்ட் ஒர்க் இருக்குதாம்... இன்னும் கொஞ்சநேரத்துல வந்துடுவார்” என்றபடி தக்ஷிண்யா சாப்பிட்டு முடிக்கையில் தான் ருத்ரதேவின் பெற்றோரும் அத்தை மாமாவும் அவர்கள் இருக்குமிடத்துக்கு வந்தனர்.

    “ருத்ராவோட கெஸ்ட் எங்க இருக்காங்கப்பா?”
    ஹில் வியூ பகுதிக்கான பொறுப்பாளரிடம் லோகநாதன் கேட்க

    “அந்த லாஸ்ட் டேபிள்ல அவங்களும் ஒரு குட்டிப்பொண்ணும் இருக்காங்க சார்... உங்களுக்காக தான் வெயிட் பண்ணிட்டிருக்காங்க” என்றார் அவர்.

    “ஓ.கேப்பா... நீங்க போய் மத்த வேலைய பாருங்க... நாங்க பேசி முடிச்சதும் உங்களுக்குக் கால் பண்ணுறேன்... ஸ்வீட் மட்டும் அனுப்பி வைங்க” என்று லோகநாதன் கூற பொறுப்பாளரும் சென்றுவிட்டார்.

    ஆரோஹி தக்ஷிண்யாவிடம் தனக்கு பீட்சா வேண்டுமென அடம்பிடித்துக் கொண்டிருக்கையில் “ஹலோம்மா” என்று இனிமையாக அழைத்தபடி அவர்களின் மேஜையருகே தனது கணவர், சகோதரர் மற்றும் லலிதாவுடன் வந்து நின்றார் சசிகலா.
    தக்ஷிண்யாவும் புன்னகையுடன் அவர்கள் பக்கம் திரும்பியவள் அடுத்த நொடியே சிரிப்பைத் தொலைத்து அதிர்ச்சியில் சிலையானாள்.

    அவளது கண்கள் அங்கிருந்த நால்வரையும் இலக்கற்று வெறிக்க அவர்களோ அவளது முகஜாடையைக் கண்டதும் ஒரு கணம் என்ன பேசவென தெரியாமல் விழித்தனர்.

    ராஜேந்திரன் மட்டும் திகைப்பு விலகாமல் “நீ... நீ... தக்ஷி... என் பொண்ணு...” என்று தந்தியடிக்க அவ்வளவு நேரம் செய்வதறியாது நின்ற லலிதா படுவேகமாக அவரது கையைப் பற்றினார்.

    “என்னங்க.... இவ” என்று அவரும் திணற தக்ஷிண்யாவுக்கு மெதுவாக உணர்வு வந்தது.

    விழிகளில் இருந்த இலக்கற்ற பார்வை மறைந்து இப்போது வெறுப்பும் கோபமும் குடிகொண்டது.

    தொடர்ந்து படிக்க

    https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?threads/%F0%9F%8C%9E%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D-17%F0%9F%8C%B8.4029/
    ஹாய் ஃப்ரெண்ட்ஸ்
    பரிதி தீண்டிய பனிமலரே அத்தியாயம் 16

    “ஏன் என்னை முறைக்குற? பொண்ணுங்க முறைச்சுக்கிட்டே சாப்பிட்டா குண்டாகிடுவாங்களாம்... நீ இப்பிடி இருந்தா தான் அழகு... குண்டாகிட்டா உன்னை இஷ்டத்துக்குத் தூக்கிட்டுப் போகமுடியாதுல்ல”

    முட்கரண்டியால் ஸ்பகடியைசு சுழற்றி இலாவகமாக வாயில் போட்டுக்கொண்டபடி தக்ஷிண்யாவைக் கிண்டல் செய்தான் ருத்ரதேவ்.

    தக்ஷிண்யா சாப்பிடுவதை நிறுத்திவிட்டு “யூ, உன்னை...” என்று பற்களைக் கடித்தபடி முட்கரண்டியை மேஜையில் குத்த

    “யூ, உன்னை ரெண்டுக்கும் ஒரே அர்த்தம் தான்... சப்ஜெக்டை மட்டும் சொல்லிட்டு செண்டென்சை அரைகுறையா நிறுத்துனா என்ன வெர்ப் யூஸ் பண்ணணும்னு தெரியாம குழம்புறேன்ல... ப்ளீஸ் நீயே கம்ப்ளீட் பண்ணிடு தக்ஷி” என்று கூற

    “ஒரு மண்ணாங்கட்டியும் இல்ல... இன்னும் நீங்க என் கிட்ட எதுக்காக சொல்லாம கிளம்புனிங்கனு விளக்கம் குடுக்கல” என்று கூறிவிட்டு முகத்தைச் சிடுசிடுப்பாக வைத்துக்கொண்டாள் அவள்.

    ருத்ரதேவ் பொறுமையாக விழுங்கி முடித்தவன் “அத்தைக்குத் திடீர்னு மூச்சிளைப்பு மாதிரி வந்துடுச்சுனு அம்மா கால் பண்ணிச் சொன்னதும் எனக்கு என்ன பண்ணுறதுனு தெரியல... அப்ப எனக்கு ஊட்டிக்கு வந்து பாக்கணும்னு தோணுச்சே தவிர உன் ஞாபகம் வரவே இல்ல தக்ஷி” என்கவும் தக்ஷிண்யாவுக்கு ஸ்பகடி தொண்டையில் சிக்கிக்கொண்டது.

    என்ன தான் அத்தை மீது பாசம் இருக்கட்டுமே! அதற்காக காதலித்தவளை அன்று இரவு கிட்டத்தட்ட பாதி மணம் முடித்தவளை மறந்துவிட்டேன் என அவன் கூறியதை தக்ஷிண்யாவால் ஏனோ ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை.

    தொடர்ந்து படிக்க

    https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?threads/%F0%9F%8C%9E%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D-16%F0%9F%8C%B8.4098/
  • Loading…
  • Loading…
  • Loading…
Top Bottom