• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.
Nithya Mariappan
Reaction score
3,105

Profile posts Latest activity Postings About

  • ஹாய் ஃப்ரெண்ட்ஸ்
    யாரோ இவள் அத்தியாயம் 24

    ஆதித்யா எடிட்டிங்கை நிறுத்திவிட்டு அவள் புறம் திரும்பியவன் “நாளைக்கு ஒரு ஸ்வீட் சர்ப்ரைஸ் இருக்கு... எனக்கு இந்த வீக்கெண்ட்ல ஆரம்பிச்சு நெக்ஸ்ட் வெனஸ்டே வரைக்கும் லீவ்... சோ எங்கயாச்சும் அவுட்டிங் போகலாம்னு ப்ளான் பண்ணுனேன்... அப்ப தான் நீ ப்ளாக் ஃபாரஸ்ட் கேம்ப் போனது இல்லனு ஞாபகம் வந்துச்சு... சோ நம்ம ரெண்டு பேரும் நாளைக்கு மானிங்கே அங்க போறோம்... த்ரீ டேய்ஸ் நம்ம அங்க தான் ஸ்பெண்ட் பண்ணப்போறோம்” என்றான் கண்கள் ஜொலிக்க.
    வர்ஷாவும் உற்சாகமாக அங்கே செல்ல சம்மதித்தாள்.

    ஆதித்யாவோ “இப்ப உனக்குத் தயக்கமா இல்லையா? பிகாஸ் அங்க ஒரே கேம்ப்ல தான் நம்ம ஸ்டே பண்ணப்போறோம்... எதுவும் முன்ன பின்ன ஆச்சுனா...” என்று விசமமாக இழுக்க

    “அந்த கேம்ப்ல ஒரு கொலை நடக்கும்” என்றாள் வர்ஷா சற்றும் யோசிக்காமல்.

    ஆதித்யா பொய்யான அதிர்ச்சியுடன் “அடிப்பாவி! நான் உன் லவ்வர் பாய் தானே” என்றபடி அவளது தாடையைப் பிடித்துக் கொஞ்ச ஆரம்பித்தான்.

    தொடர்ந்து படிக்க
    https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?threads/❣️அத்தியாயம்-24❣️.3230/
    ஹாய் ஃப்ரெண்ட்ஸ்
    யாரோ இவள் அத்தியாயம் 23

    ஆதித்யா சுவாரசியமாக கதை கேட்பவனைப் போல காட்டிக்கொண்டு “அவன் உன்னை நெருங்கவிடுவான்னு தோணுதா ஜி.பி?” என்று கேட்க

    “அவனுக்கு என் மேல ஒரு கண் இருக்குல்ல... அதை யூஸ் பண்ணி அவனை செடியூஸ் பண்ணி தனியா ஒரு இடத்துக்குக் கூட்டிட்டுப் போய் அவனை கொன்னுட வேண்டியது தான்” என்றாள் வர்ஷா.

    அதை கேட்டதும் ஆதித்யாவிற்கு சிரிக்கவும் முடியவில்லை, அழவும் முடியவில்லை. அவள் தலையில் குட்டியவன்

    “அட அறிவுக்கொழுந்தே! ஓவரா தெலுங்கு படம் பார்த்தா இப்பிடி தான் மூளை லாஜிக் இல்லாம நிதர்சனம்னா என்னனு புரிஞ்சிக்காம சிந்திக்கும்... கொஞ்சம் யோசி, அவன் எவ்ளோ பெரிய பிசினஸ் டைகூன்... நீ ரம்பை, மேனகை, ஊர்வசிக்கே டஃப் குடுக்குற அழகியா இருந்தாலும் அவனை கொலை பண்ணுற வரைக்கும் அவன் பூ பறிச்சிட்டா இருப்பான்? ரியாலிட்டில நடக்காததை பத்தி ஓவரா யோசிக்காத ஜி.பி... ஃப்ராங்கா ஒன்னு சொல்லட்டுமா? நம்மளால அவனை ஒன்னுமே பண்ண முடியாது.. ஐ மீன் நேரடியா அவன் கூட சண்டை போட்டு ஜெயிக்குறதுலாம் சினிமா, ட்ராமா, நாவல்கள்ல வேணும்னா சாத்தியம்... ரியாலிட்டில அதுக்கு பாயிண்ட் ஒன் பர்சென்டேஜ் கூட வாய்ப்பில்ல” என்று நிதர்சனத்தைப் போட்டு உடைத்தான்.

    உடனே வர்ஷாவின் முகம் கூம்பிப் போனது.

    “அஜித் சித்தப்பாவால கூட முடியாதா?” ஏமாற்றத்துடன் கேட்டாள் அவள்.

    தொடர்ந்து படிக்க
    https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?threads/❣️அத்தியாயம்-23❣️.3212/
    ஹாய் ஃப்ரெண்ட்ஸ்
    மரம் தேடும் மழைத்துளி அத்தியாயம் 22

    அவள் கடுப்புடன் "போதும்டா. இதுக்கு மேல என்னால கோவத்தை கண்ட்ரோல் பண்ணிக்க முடியாது. இல்ல நான் தெரியாம தான் கேக்கிறேன், நான் என்ன உன் சொத்தையா எழுதி வாங்குனேன்? எப்போ பாரு என்னை பத்தி குதர்க்கமா பேசிட்டே இருக்க நீ. நான் என்னோட வேலையை தான் செஞ்சேன். உங்க அப்பா தப்பு பண்ணுனாரு, அவரு உள்ளே போனாரு. அதுக்கு நான் என்ன பண்ண முடியும்?" என்று சீற்றத்துடன் அவனை பார்த்தாள் அவள்.

    அபிமன்யூ புருவத்தை உயர்த்தி "அப்போ நீங்க உங்க புரஃபசனல் எதிக்ஸை எந்த இடத்திலயும் பிரேக் பண்ணல, அப்பிடி தானே?"

    கிண்டலாக கேட்டுவிட்டு வருவோர் போவோரை பார்க்க ஆரம்பிக்க ஸ்ராவணி இதோடு ஆயிரத்து ஐநூறாவது முறையாக அவனது வீடியோவை வெளியிட்டதற்கும், சேனலை ஹேக் செய்ததற்கும் அவளையே அவள் திட்டி தீர்த்தாள் மனதிற்குள்.

    "ஓகே! அந்த வீடியோ லீக் ஆனது தப்பு தான். அதுக்கு ஐயாம் ரியலி சாரி" என்று சொல்லிவிட்டு அவனை பார்க்க சங்கடப்பட்டவளாக திரும்பி நிற்க

    அபிமன்யூ அவளது மன்னிப்பு கேட்கும் பாணியை கண்டு "இந்த உலகத்துல சாரிய கூட திமிரா கேக்குற ஒருத்தியை இப்போ தான் பாக்குறேன்" என்று மனதிற்குள் திகைத்தான்.

    அவள் மன்னிப்பு கேட்டதோடு அவன் புறம் திரும்பி "ஆனா அன்னைக்கு அந்த வீடியோ மட்டும் லீக் ஆகலன்னா இந்நேரம் நீ டெபுடி சி.எம்மா இருந்திருப்ப. உன் கிட்ட ஸ்டேட்டோட கண்ட்ரோலை குடுக்கிறது டோட்டல் ஸ்டேட்டுக்கும் குண்டு வைக்கிறதுக்கு ஈக்வல். அதான் நான் அதை லீக் பண்ணுனேன்" என்று முகம் சுருக்கி கூற அவள் சொன்ன விதத்தில் அவனுக்கு சிரிப்பு வந்தாலும் அதை அடக்கிக் கொண்டான் அபிமன்யூ.

    அவள் வாய்க்குள் "இந்த மூஞ்சில்லாம் சி.எம்மா? நினைச்சு கூட பாக்க முடியலடா சாமி" என்று முணுமுணுக்க அவன் காதில் விழுந்தாலும் கேட்காத மாதிரி நின்றான்.

    தொடர்ந்து படிக்க
    https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?threads/🖊️துளி-22👑.3205/
    ஹாய் ஃப்ரெண்ட்ஸ்

    யாரோ இவள் அத்தியாயம் 22

    வந்தவர்கள் மொபைல் தரையில் கிடப்பதையும் ரௌத்காரத்துடன் சாணக்கியன் நிற்பதையும் பார்த்து திகைத்தனர்.
    “என்னாச்சு சாணு? ஏன்டா கத்துன?” என்றபடி நெருங்கிய வினயனிடம்

    “அவங்க ரெண்டு பேரும் ஜாலியா வேலண்டைன்ஸ் டே கொண்டாடுறாங்கப்பா... என்னை ஏமாத்திட்டுப் போனவ அவன் கூட இவ்ளோ க்ளோஸா நிக்குறா... இவ்ளோ க்ளோசா” என்றவன் தந்தையைத் தன்னருகே இழுத்து வீடியோவில் வர்ஷாவும் ஆதித்யாவும் நெருங்கி நின்ற கோலத்தை டெமான்ஸ்ட்ரேட் செய்யவும் வினயனே ஒரு நொடி பயந்து போனார்.

    இவன் பைத்தியக்காரன் ஆகிவிட்டானா என திகைத்தவர் “இனாஃப் சாணு... உன் பைத்தியக்காரத்தனத்த மூட்டை கட்டி வை... நம்ம கண்ணு முன்னாடி ஒரு இமாலயப்பிரச்சனை நிக்குது... கம்பெனி மெர்ஜரை செஞ்சு முடிக்கிறது நமக்குச் சவாலா இருக்குடா... அதை பத்தி யோசி... அதை விட்டுட்டு ஒன்னுக்கும் பிரயோஜனமில்லாத ஆதியையும் அவன் பொண்டாட்டியையும் பத்தி யோசிச்சே பைத்தியம் ஆகிடாத” என்றார் கடுமையாக.

    சாணக்கியனோ வெறி வந்தவனைப் போல அவரைப் பிடித்துத் தள்ளிவிட்டான்.

    “நீ பேசாதய்யா... அவளைக் காதலிச்சு ஏமாந்த எனக்குத் தான் அதோட வலி தெரியும்... விட மாட்டேன்... அந்த ஃபேமிலில ஒருத்தரை கூட நிம்மதியா இருக்கவிட மாட்டேன்... ஆதிய ஏதாவது பண்ணணும்... அவனுக்கு வலிக்கணும்... இன்னைக்கு நான் அனுபவிக்குற வேதனைய அவனுக்குக் குடுக்கணும்.. உன் போனை குடு” என்று பிதற்றியவாறு மொபைலுக்காக தந்தையிடம் கை நீட்ட அவரோ மைந்தனின் புது அவதாரத்தில் உறைந்து போய் நின்றிருந்தார்.

    “போனை குடு” சாணக்கியன் கத்தியதில் அதிர்ந்த மைதிலி கணவரின் மொபைலை அவனிடம் நீட்டினார்.

    தொடர்ந்து படிக்க
    https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?threads/❣️அத்தியாயம்-21❣️.3199/
    ஹாய் ஃப்ரெண்ட்ஸ்
    மரம் தேடும் மழைத்துளி அத்தியாயம் 21

    சுபத்ராவை தோளில் சாய்த்து ஸ்ராவணி ஆறுதல் சொல்லிக் கொண்டிருக்கும் போதே மேனகா இரத்தம் கொடுத்துவிட்டு வெளியே வந்தாள். அவளை தன் அருகில் அமருமாறு சொல்லிவிட்டு சுபத்ராவிடம் சொல்லிக் கொண்டு போனுடன் சென்றவளை சந்தேகத்துடன் பின் தொடர்ந்தான் அபிமன்யூ.

    அவள் ஒரு ஓரமாக நின்று கொண்டு போன் செய்தவள் "ஹலோ சீஃப் நீங்க சொன்ன மாதிரியே தான் நடந்திருக்கு. பட் நான் இதை எதிர்ப்பார்க்கல" என்று பேச அதை கேட்ட அபிமன்யூவுக்கு இந்த நேரத்திலும் இவளது ரிப்போர்ட்டர் புத்தி செய்தி சேகரிப்பதாகத் தவறாக நினைத்தவன் அவள் பேசிவிட்டு வரும்போது வழி மறித்தான்.

    "எவன் வீட்டுல என்ன எழவு விழுந்தாலும் உங்களுக்கு டி.ஆர்.பி முக்கியம். அப்பிடி தானே ரிப்போர்ட்டர் மேடம்?" என்றபடி புருவங்கள் நெறிய அவளை பார்த்தவனுக்கு பதில் சொல்ல விருப்பமின்றி அவள் நகர

    அவனோ அவள் கையை பற்றி நிறுத்தவும் "ஹவ் டேர் யூ? அடிக்கடி இப்பிடி என் கையை பிடிக்காத! எனக்கு எரிச்சலா இருக்கு. கையை விடு" என்று உதறிக் கொண்டாள் அவள்.

    அவன் அவள் நின்ற இடத்துக்கு பின்னே இருந்த சுவரில் கையூன்றி அவளை நகரவிடாமல் அணையிட்டவன் "யாருக்கு இன்ஃபர்மேசன் பாஸ் பண்ணிட்டு வர்ற?" என்று கேட்க அவள் பதில் சொல்லாமல் அவனை பார்த்து உச்சு கொட்டினாள்.

    பின்னர் "நான் ஒன்னு சொல்லவா? நீயும் உங்க அப்பாவும் சரியான முட்டாளுங்க! யாரை சந்தேகப்படணுமோ அவனை ஃப்ரீயா விட்டுட்டு தேவை இல்லாத ஆட்களை கேள்வி கேட்டு கடுப்பேத்துறது" என்றாள் எரிச்சலுடன்.

    அவன் விரல் நீட்டி "இன்னொரு தடவ எங்க அப்பாவை பத்தி தப்பா பேசுனா உனக்கு அவ்ளோ தான் மரியாதை" என்று எச்சரிக்க

    அவன் விரலை அலட்சியமாக தட்டிவிட்டபடி "அவ்ளோ கோவம் வர்றவன் இன்னும் ஏன் இங்க இருக்க? உங்க அப்பா சித்தப்பாவோட ஆக்சிடெண்டுக்கு யார் காரணமோ அவன் சட்டையை போய் பிடி. அதை விட்டுட்டு மனிதாபிமான அடிப்படையில அவரை ஹாஸ்பிட்டலுக்கு கூட்டிட்டு வந்து, பிளட்டும் குடுத்த எங்களை ஏன் சந்தேகப்படுற?" என்று அவனுக்கு சற்றும் எரிச்சல் குறையாத குரலில் கூறிவிட்டு அவன் கைகளை தட்டிவிட்டுச் சென்றாள்.

    தொடர்ந்து படிக்க
    https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?threads/🖊️துளி-21👑.3200/
    ஹாய் ஃப்ரெண்ட்ஸ்
    யாரோ இவள் அத்தியாயம் 21

    ஹாய் ஃப்ரெண்ட்ஸ்
    யாரோ இவள் அத்தியாயம் 20

    எதையோ எண்ணியவனாக உதட்டை மடித்துச் சிரித்தவன் “யெஸ்! கரெக்டா சொல்லிட்டியே... அதோட இன்னைக்கு அவளும் நானும் ஒரே கலர்ல ட்ரஸ் போடணும்னு ஆர்டர் வேற... நான் போய் ட்ரஸ் சேஞ்ச் பண்ணிட்டு வந்துடுறேன்” என்று கூறியதோடு சிவப்பு வண்ணத்தில் ஹென்லே டீசர்ட்டும் அதன் மீது அடர்நீலவண்ண விண்டர் ஜாக்கெட்டும் அணிந்து வந்து நின்றான்.

    வர்ஷா அவனது சிவப்பு வண்ண டீசர்ட்டைப் பார்த்தபடியே “ஓ! உன்னை அவ ரெட் கலர் ட்ரஸ் தான் போடச் சொன்னாளா?” என்று மனதிற்குள் இருந்த குமுறலை மறைத்தபடி வினவ

    “ஆமா! ஏன்னு சொல்லு” என்றான் ஆதித்யா.

    “ஹூ நோஸ்? உனக்கும் அவளுக்கும் வேற வேலையே இல்ல” என்று அலட்சியமாய் தோளைக் குலுக்கிவிட்டு சாப்பிட்ட தட்டை கழுவ சென்றாள் வர்ஷா.

    “அதை ஏன் கழுவுற ஜி.பி? டிஸ்வாஷர்ல போட்டா அது க்ளீன் பண்ணிடப் போகுது” என்றவன் அவளைத் தொடர

    “இன்னமும் அவ எதுக்கு சேம் கலர் ட்ரஸ்சை போடச் சொன்னானு நீ எனக்குப் பதில் சொல்லலை” என்றாள் வர்ஷா காரியத்தில் கண்ணாக.

    ஆதித்யாவோ சமையலறை திண்டில் சாய்ந்து நின்று கொண்டவன் “இன்னைக்கு வேலண்டைண்ஸ் டே... சோ...” என்று நிறுத்த
    உள்ளுக்குள் மெல்லியதாக படபடப்பு ஏறினாலும் அதை காட்டிக்கொள்ளாது “சோ...” என்று தானும் அலட்சியம் போன நிறுத்தினாள் வர்ஷா.

    “சோ... அவ என் கிட்ட ப்ரபோஸ் பண்ணப் போறானு நினைக்குறேன்” என்றவன் கழுவிய தட்டை வர்ஷா டொம்மென்று நழுவவிடவும் யோசனையுடன் அவளை நோட்டமிட்டான்.

    தொடர்ந்து படிக்க
    https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?threads/❣️அத்தியாயம்-20❣️.3185/
    ஹாய் ஃப்ரெண்ட்ஸ்
    யாரோ இவள் அத்தியாயம் 19

    “என்ன திடீர்னு இங்க வந்திருக்கீங்க?” என்றவளிடம் மற்றவர்கள் பதிலளிக்கும் முன்னர் ஆதித்யா எழுந்து வந்து அவள் காதில் கிசுகிசுத்தான்.

    “இன்னைக்கு கேட்டோட ட்ரீட்”

    “எதுக்கு திடீர்னு ட்ரீட்?”

    “ஸ்பெஷலா ஒன்னும் இல்ல... நீயும் நானும் ஹஸ்பெண்ட் அண்ட் ஒய்ப் இல்லைனு என் ஃப்ரெண்ட்ஸ் கிட்ட உண்மைய சொல்லிட்டேன்... இன்னும் டூ டேய்ஸ்ல வேலண்டைன்ஸ் டே வருதுல்ல, அதுக்கு முன்னாடி என்னை இம்ப்ரெஸ் பண்ணி ப்ரபோஸலுக்கு ரெடியாகுறா கேட்”

    ஆதித்யா அலட்டலாக கூற வர்ஷாவோ உதட்டைச் சுழித்துக் கொண்டாள்.

    “அடேங்கப்பா! உன் கிட்ட ப்ரபோஸ் பண்ணிட்டாலும் நீ அப்பிடியே லவ் பண்ணித் தான் கிழிச்சிடுவ... போடா டேய்”

    அலட்சியமாக அவள் கூற “ஏய் ஜி.பி! ஒன்னா சேர்ந்து வளர்ந்ததால உனக்கு என் அருமை தெரியலை... கேட் என்னைப் பாக்குற பார்வை இருக்கே, அதுலயே என் மேல அவ எவ்ளோ லவ் வச்சிருக்கானு பளிச்சுனு தெரியும்டி” என்றான் அவன்.

    “ஏன் அவ கண்ணுல சபீனா பவுடர் போட்டு விளக்குனாளாக்கும்?”
    ஆதித்யா பொருமலாய் வந்த பதிலைக் கேட்டதும் நமட்டுச்சிரிப்பு சிரித்தான்.

    “உனக்கு ஏன் ஜி.பி என் மேல லவ் வரலை?”

    இந்தக் கேள்வியில் வழக்கம் போல விதிர்விதிர்த்துப் போனாள் வர்ஷா.

    “அது... எனக்கு... எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு” என்று சொன்னவள் வேகமாக அங்கிருந்து கிளம்பியவள் ரோமியிடம் வந்து சிக்கிக் கொண்டாள்.

    “என்ன வர்ஷ்? உன்னோட சூப்பர் ஹீரோ என்ன சொல்லுறான்?” கண்ணைச் சிமிட்டியபடி கேட்டாள் ரோமி.

    “வாட்? சூப்பர்ஹீரோவா?”

    “யா! எப்பேர்ப்பட்ட வில்லன் கிட்ட இருந்து உன்னை காப்பாத்திருக்கான்... சோ அவன் சூப்பர் ஹீரோ தான்”
    வெளிப்படையாக ஆமோதிக்காவிட்டாலும் வர்ஷாவும் அதை மறுக்கவில்லை.

    தொடர்ந்து படிக்க
  • Loading…
  • Loading…
  • Loading…
Top Bottom