• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.
Nithya Mariappan
Reaction score
2,895

Profile posts Latest activity Postings About

  • #ஒருகாதலும்சில_கவிதைகளும் epi 23
    சங்கவி வியப்பில் விழிகளை விரித்தாள்.
    “ஏன் இப்பிடி பாக்குற?” என்றவனிடம்
    “நீங்க எனக்காக யோசிக்கிறது புதுசில்ல… பட் உங்க அம்மா அக்காவ தாண்டி எனக்காக யோசிக்கிறிங்கல்ல, அது எனக்குப் புதுசு தான்” என்றாள் அவள்.
    “அம்மாக்கு அப்பா இருக்குறார்… அக்காக்கு அவ பையன் இருக்குறான்… எனக்கு நீ மட்டும் தான இருக்குற? உனக்காக யோசிக்காம வேற யாருக்காக நான் யோசிக்கப்போறேன் சொல்லு”
    சங்கவியின் மனம் சிலிர்த்து அடங்கியது. ஆனால் எல்லாம் ஒரு நொடி தான். இவன் உணர்ச்சிப்பூர்வமாக எதையாவது சொல்வதும், அதற்கு அவள் சிலிர்த்து மானசீகமாகச் சில்லறையைச் சிதறவிடுவதும், அடுத்த நாளே இவனது செய்கைகளில் மாற்றமில்லையென அவள் ஏமாறுவதும் வாடிக்கையாகிவிட்டதே இந்த இரு வாரங்களில்!
    இன்று இப்படி சொல்பவன் நாளையே மாற்றிப் பேசினால்?
    “இந்தத் தடவை உனக்கு ஏமாற்றம் இருக்காது கவி”
    “பாக்கலாம் சரபன்”
    தோளில் இருந்த அவனது கரத்தை விலக்கிவிட்டுச் செல்ல முயன்றவளை சீண்டும் எண்ணம் எழுந்தது அவனுக்குள்.
    “சந்தானம் சார் வீட்டுல இப்பவும் அவங்க ஒய்ப் தான் அவருக்கு எண்ணெய் தேய்ச்சு குளிக்க வைப்பாங்களாம்… உனக்கு வேலை இல்லனா நீயும்…”
    சரபேஸ்வரன் இழுக்கவும் கண்களில் அனலோடு திரும்பினாள் சங்கவி.
    “நானும்…” கண்களை உருட்டிக் கேட்டாள் அவள்.
    “குளிக்கக் கொஞ்சம் ஹெல்ப் பண்ணலாமேனு சொல்ல வந்தேன்மா… அதுக்கு ஏன் கோவப்படுற? புதுசா கல்யாணம் ஆன பொண்ணு மாதிரி ஒரு நாளாச்சும் நடந்துக்குறியா? எப்பவும் எதிரி மாதிரியே பாக்குற”
    https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?threads/காதல்-23.5437/

    #நித்யாமாரியப்பன்
    #ஒருகாதலும்சில_கவிதைகளும் எபி 22

    சங்கவி உஷ்ணத்தோடு சொல்லி முடித்த தருவாயில் சமையலறையிலிருந்து வெளியே வந்தார் குழலி.
    “அவரு இந்த வீட்டோட மாப்பிள்ளை… அதுக்காக நீ அவரை மதிச்சு தான் ஆகணும்”
    “உங்க வீட்டு மாப்பிள்ளைனா நீங்க மதிங்க… சின்னப்பொண்ணுங்க கிட்ட வக்கிரமா நடந்துக்கிறவனை எல்லாம் என்னால மதிக்க முடியாது… அப்பிடி மதிச்சா தான் இந்தக் குடும்பத்துல வாழமுடியும்னா எனக்கு இந்த வாழ்க்கையே தேவையில்ல… உங்களோட குத்தல் பேச்சு எதையும் கண்டுக்காம போறதால எல்லாத்துக்கும் தலையாட்டிட்டுப் போயிடுவேன்னு நினைக்காதிங்க… நீங்க பாதுகாக்குறது ஒரு மனோவியாதி பிடிச்சவனை… ஒரு நல்ல அம்மாவா நீங்க உங்க மகளுக்கு அவங்க புருசனோட வக்கிர குணத்தை பத்தி சொல்லிருக்கணும்”
    “என் மக வாழ்க்கைய பத்தி நீ பேச வேண்டாம்… ஆம்பளைனா அப்பிடி இப்பிடி இருக்க தான் செய்வாங்க… பொம்பளைங்க அதுக்காகச் சிலிர்த்துக்கிட்டு போனா தனிமரமா தான் நிக்கணும்”
    “அந்த ஆம்பளை அவன் வயசுக்கேத்த பொம்பளை கிட்ட வக்கிரமா நடந்துக்கிட்டாலே தப்பு… உங்க மருமகன் சின்ன சின்னக் குழந்தைங்க கிட்ட கேவலமா நடந்துக்கிற அருவருப்பான ஜந்து… வாய் இருக்குனு அவருக்குக் கொடி பிடிக்காதிங்க… யாருக்குத் தெரியும்? நாளைக்கே எனக்கும் சரபனுக்கும் ஒரு பெண் குழந்தை பிறந்து வளந்து அந்தக் குழந்தை கிட்ட உங்க மாண்புமிகு மருமகன் கேவலமா நடந்துக்கிட்டாலும் நீங்க அந்தாளுக்குத் தான் கொடி பிடிப்பிங்க”
    “கவி!”
    அதட்டலாய் ஒலித்தது சரபேஸ்வரனின் குரல்.
    https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?threads/காதல்-22.5427/

    #நித்யாமாரியப்பன்
    M
    Mahalakshmi
    அருமையாக கொண்டு போகிறீர்கள் நித்யா.உங்களுக்கு நிகர் வேறு யாரும் இல்லை.நீங்களேதான்
    ஒரு காதலும் சில கவிதைகளும் எபி 20
    அவனைப் பார்த்ததும் சங்கவி புன்னகைத்தாள்.
    அவளின் மந்தகாச புன்னகையில் அவனுடைய மனம் நெகிழ்ந்தது. க்ரீம் வண்ண டிசைனர் புடவையில் புதைந்திருப்பவளை மொத்தமாகக் கொள்ளையிட அவனுக்கும் ஆசை தான்.
    ஆனால் சங்கவி கேட்ட அவகாசம் ‘டேர்ம்ஸ் அண்ட் கண்டிசனாய்’ அவர்களுக்கிடையே முளைத்து முறைத்துக் கொண்டிருக்கிறதே!
    “இந்த ஹேர்பின்னை எடுக்க ஹெல்ப் பண்ணுங்க சரபன்”
    சிகையலங்காரத்தைக் கலைக்க அவனது உதவியை வேண்டினாள் சங்கவி.
    சரபேஸ்வரனோ தடுமாற்றத்தின் வாயிலில் நின்றுகொண்டிருந்தான். சங்கவியுடன் கண நேரம் தனிமை வாய்த்தாலும் கொடுத்த வாக்கை மீறிவிடுவோமோ என்ற பயம் அவனுக்கு. எனவே மறுத்தான்.
    “இதெல்லாம் எனக்கு ரிமூவ் பண்ண தெரியாது கவி… நீயே பண்ணிக்க”
    அவள் திகைத்துப் பதில்மொழி தருவதற்குள் “நான் ரெஃப்ரெஷ் ஆகிட்டு வர்றேன்… ஷப்பா செம வேர்வை” என்று வாய்க்கு வந்ததை உளறிவிட்டுக் குளியலறைக்குள் புகுந்துகொண்டான் அவன்.
    அவனது வினோதமான பேச்சில் திகைத்தவள் அலங்காரத்தைக் கலைத்து முடிக்கும்போது வெளியே வந்தவன் சத்தம் போடாமல் படுக்கையில் அமர்ந்து மொபைலை நோண்ட ஆரம்பித்தான்.
    சங்கவிக்கும் குளித்தால் தேவலை என்று தோன்ற மாற்றுடை சகிதம் குளியலறைக்குள் புகுந்துகொண்டவள் குளித்து உடை மாற்றித் திரும்பிவரும் போது சரபேஸ்வரன் உறங்கியிருந்தான்.
    திருமணத்திற்கான ஏற்பாடுகள் அனைத்தையும் மொத்தமாகச் செய்ததன் களைப்பாக இருக்குமென நினைத்த சங்கவி கூந்தலை கொண்டையிட்டுவிட்டு அவனருகே அமர்ந்தாள்.
    இன்னும் விளக்கை அணைக்கவில்லை. அவளுக்காகப் போட்டுவைத்திருந்தான் போல.
    சங்கவி அப்படியே அமர்ந்து காலையிலிருந்து நடந்த அனைத்தையும் மனக்கண்ணில் ஓட்டிப் பார்த்தாள்.
    இனி வரும் நாட்களில் குழலியின் அதிருப்தி வெளிப்படையாகத் தன்னிடம் பாயுமோ என்ற சந்தேகத்தை அவரது நடத்தை கிளப்பிவிட்டிருந்தது.
    முடிந்தவரை சரபேஸ்வரனுக்காக அவர் என்ன செய்தாலும் கண்டுகொள்ளாமல் இருக்கும் முடிவுக்கு வந்தாள்.
    https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?threads/காதல்-20.5418/
    #ஒருகாதலும்சில_கவிதைகளும்

    #நித்யாமாரியப்பன்
    ஒரு காதலும் சில கவிதைகளும் எபி 18
    ஒரு காதலும் சில கவிதைகளும் எபி 17
    “அந்த நிலத்தை வித்துட்டா எங்கப்பாவும் அம்மாவும் என்ன பண்ணுவாங்கனு யோசிச்சிங்களா சரபன்? அவங்க ஒன்னும் பரம்பரை பணக்காரங்க இல்ல... நீங்க உங்கம்மா கிட்ட பதினைஞ்சு சவரன் நகை போதும்னு சொல்லி சமாதானப்படுத்துங்க… ப்ளீஸ்”
    சரபேஸ்வரனுக்கு அந்நொடியில் சங்கவியின் வேண்டுகோள் தேவையற்ற பிடிவாதமாகத் தோன்றியது.
    “எங்க வீட்டுல நமக்காக தானே கேக்குறாங்க கவி… இந்த நாப்பது பவுனையும் எங்கம்மாவும் அக்காவுமா போடப்போறாங்க? மாமா உன் கிட்ட இதெல்லாம் கஷ்டம்னு சொன்னாங்களா?”
    “இல்ல”
    “அப்ப ஏன் நீ ரொம்ப யோசிக்கிற கவி? ரிலாக்ஸ்”
    “உங்களால பேசிப் பாக்க முடியாதா சரபன்?”
    மீண்டும் தயக்கமாக வினவினாள் சங்கவி. தந்தை படும் பாட்டை அவளால் பார்க்க முடியவில்லை.
    சரபேஸ்வரனின் நிலையோ அதை விட மோசம்.
    மூர்த்திக்கு ஏனோ பொன்வண்ணனின் குடும்பத்தில் பெண்ணெடுக்க விருப்பமில்லை. காரணம், அவர்கள் பொருளாதாரத்தில் தங்களுக்கு ஈடில்லை என்ற எண்ணம்.
    மைத்துனன் இனி கை நிறைய சம்பாதிக்கப்போகிறான். அவனது படிப்புக்கும் வேலைக்குமேற்ற சீரை எதிர்பார்ப்பதில் என்ன தவறு இருக்கிறதென பேசி நாற்பது சவரன் நகையே குறைவென குழலியின் மனதில் பதியவைத்துவிட்டார்.
    அதையும் குறைத்தால் மூர்த்தி இத்திருமணத்தை நிறுத்திவிடுவாரோ என்ற பயம் அவனுக்கு.
    அவனுடைய படிப்புக்கு மூர்த்தியின் பணம் எவ்வளவு உதவியாக இருந்ததென்பதை அவனால் மறக்க முடியுமா? மூர்த்தியின் பேச்சை மறுத்தால் தமக்கை வருந்துவாளே!
    மூர்த்தியிடம் பட்ட நன்றிக்கடனும் உமாவின் மீதுள்ள பாசமும் சங்கவியின் மீதிருக்கும் காதலும் மட்டுமே அவனது மனதுக்குள் குழப்பியடித்ததில் திடுமென இவ்வளவு நகை, பணத்துக்குப் பொன்வண்ணன் என்ன செய்வாரென யோசிக்கத் தோன்றவில்லை.
    நகை பற்றிய மூர்த்தியின் எதிர்பார்ப்பையும் தனது பயத்தையும் சங்கவியிடம் கூற சரபேஸ்வரனின் மனம் இடங்கொடுக்கவில்லை. எனவே அவளைச் சமாதானம் செய்ய துடித்தான்.
    ஆனால் அவளோ சொன்ன சொல்லிலேயே நின்றாள்.
    ஒரு கட்டத்தில் சலிப்பு வந்துவிட்டது அவனுக்கு.
    “நீ சொன்னபடிலாம் எங்க வீட்டுல கேக்கமாட்டாங்க கவி… எங்க மாமாவ எவ்ளோ கஷ்டப்பட்டு இந்தக் கல்யாணத்துக்கு நாங்க சம்மதிக்க வச்சிருக்கோம் தெரியுமா? நீ நிலமை தெரியாம பேசுற”
    சங்கவி அவனை விழியகலாமல் பார்த்தாள்.
    “அப்ப கல்யாணத்தை நிறுத்திடுங்க”
    இறுக்கமான குரலில் அவள் கூறவும் சரபேஸ்வரனுக்குத் தூக்கிவாரிப்போட்டது. மூன்றாண்டு காதலை அவ்வளவு எளிதில் தூக்கிப்போட்டுவிடமுடியுமா என்ன?
    “முடியாது” என்றான் அவனும் முடிவாக.
    “எங்கப்பாவ ஃபினான்ஷியலா கஷ்டப்பட வச்சிட்டு நான் மட்டும் எப்பிடி உங்க வீட்டுல சந்தோசமா இருப்பேன் சரபன்? எனக்கு இந்தக் கல்யாணம் தேவையில்ல”
    “நீ என்னை பணத்தாசை பிடிச்சவன் மாதிரி ஃப்ரேம் பண்ணுற கவி”

    https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?threads/காதல்-17.5404/

    #ஒருகாதலும்சில_கவிதைளும்
    #நித்யாமாரியப்பன்
    ஒரு காதலும் சில கவிதைகளும் எபி 16
    பின்னர் கொடுக்கல் வாங்கல் பற்றிய பேச்சு ஆரம்பிக்க மூர்த்தி மனைவியை குயுக்தியாகப் பார்த்தார். அவரது பார்வைக்கு அர்த்தம் புரிந்தவராய் உமாவும் பேச ஆரம்பித்தார்.
    "என் தம்பிக்கு நல்ல வேலை கிடைச்சிருக்கு... கை நிறைய சம்பளம்... உங்க மகளை மகாராணி மாதிரி வச்சு காப்பாத்துவான்"
    வழக்கமான முஸ்தீபுடன் வரதட்சணைக்கான பேச்சுக்குப் பிள்ளையார் சுழி போட்டார் அவர்.
    நாற்பது சவரன் நகை, இரண்டு இலட்சம் ரொக்கம், இதர பண்ட பாத்திரங்கள் இவை அனைத்தும் பொன்வண்ணனின் பொறுப்பு என பேசி முடித்தாயிற்று. கூடவே மாப்பிள்ளைக்கு மோதிரம், செயின், ப்ரேஸ்லெட் லொட்டு லொசுக்கு வகையறாக்களும் அடங்கும்.
    பெண்ணுக்குத் தாலி, முகூர்த்தப்புடவை, திருமணம் மற்றும் மறுவீட்டுச்செலவைச் சாரங்கபாணி பார்த்துக் கொள்வதாக ஏற்பாடு. எவ்வித எதிர்மறை பேச்சுமின்றி பூ வைக்கும் சடங்கு இனிதே முடிவுற்றது.
    இன்னும் சில நாட்களில், விதி தங்கள் காதலுக்கு பிரிவுரை எழுதப்போவதை அறியாமல் சரபேஸ்வரனும் சங்கவியும் ஆவலோடு நிச்சயதார்த்த நாளுக்காக காத்திருந்தனர்!
    https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?threads/காதல்-16.5400/

    #நித்யாமாரியப்பன்
    #ஒருகாதலும்சில_கவிதைளும்
    ஒரு காதலும் சில கவிதைகளும் எபி 15
    சங்கவி தனக்காக காத்திருப்பாள் என அடித்துக் கூறினான் சரபேஸ்வரன். அவளும் வங்கிப்பணித்தேர்வுக்குப் படிக்கப்போகிறாள் என்ற தகவலைத் தெரிவித்தான்.
    அவர் ஓரளவுக்குச் சமாதானம் ஆனாலும் மூர்த்தி குறுக்கே புகுந்தார்.
    "பொண்ணு பாக்குறதுக்கு அம்சமா இருந்தாலும் காதுல கழுத்துல தங்கம்ங்கிற பேச்சுக்கே இடமில்லயே... நம்ம ரேஞ்சுக்கு ஏத்த சம்பந்தம் தானா? நம்ம எதிர்பாக்குற சீர் செனத்திய அவங்களால செய்ய முடியுமா?"
    "சங்கவி அவங்களுக்கு ஒரே பொண்ணு... எந்தக் குறையும் வைக்காம தாராளமா செய்வாங்க மாமா"
    தன் காதலுக்கு மூர்த்தி தடை சொல்லக்கூடாதென்ற வேகத்தில் உரைத்தான் அவன்.
    "ஊஹூம்... என்னால நம்ப முடியல... காதலிச்சவன் தானேனு பொண்ணை ஃப்ரீயா கட்டி வச்சிடப்போறாங்க... இங்க பாரு உமா, நீ அந்தப் பொண்ணைப் பத்தி விசாரிக்க ஆரம்பிச்சிடு... நம்ம ஈஸ்வரன் நாளைக்கே நல்ல வேலைக்குப் போயிட்டான்னா அதுக்கேத்த மாதிரி பொண்ணு வீட்டுல கேட்டு வாங்குறது உன் பொறுப்பு... நம்ம பையனுக்குனு ஒரு கெத்து இருக்குல்ல"
    காதல் திருமணம் என்றாலும் வரதட்சணையைப் பற்றிய எதிர்பார்ப்பு குறையாது என்ற நிதர்சனத்தை அன்றைய தினம் கண்கூடாகப் பார்த்தான் சரபேஸ்வரன்.
    அப்போதிருந்த சரபேஸ்வரனுக்குக் குடும்பத்தினரை எதிர்த்துப் பேச வராது. அதிலும் மூர்த்தியின் வாக்கை மீறாதவனாக அவன் இருந்த காலம் அது.
    https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?threads/காதல்-15.5394/
    #ஒருகாதலும்சில_கவிதைளும்
    #நித்யாமாரியப்பன்
    ஒரு காதலும் சில கவிதைகளும் எபி 14
    "எதுக்கு என்னை இழுத்துட்டு வந்திங்க சரபன்? உங்க மாமாவ நறுக்குனு நாலு வார்த்தை கேட்டா தான் என்னால நிம்மதியா சாமி கும்பிட முடியும்"
    திமிறியவளை அமைதிப்படுத்த முயன்றான் அவன்.
    அவனிடம் நடந்ததை மறைக்காமல் கூறினாள் சங்கவி.
    "வீட்டுல சோறு இல்லாம யாரும் இங்க வரல... உங்க மாமா பூஜைக்கு கட்டளைக்காரரா இருந்தா என்ன வேணும்னாலும் பேசுவாரா?"
    "விளையாட்டுக்குப் பேசிருப்பார் கவி... இதை ஏன் பெரிய இஸ்யூ ஆக்கி சண்டை போடணும்னு துடிக்கிற? காம் டவுன்"
    சரபேஸ்வரன் விளையாட்டென சொல்லவும் சங்கவிக்குச் சுரீரென கோபம் வந்துவிட்டது.
    "இப்பிடி சாக்கு சொல்ல உங்களுக்கு ஒரு மாதிரி இல்லயா சரபன்? அன்னைக்கு பஸ்ல அந்த லேடிக்காக நியாயம் கேட்டு குதிச்சிங்க... இப்ப உங்க மாமாவோட கேவலமான வார்த்தைக்கு நான் நியாயம் கேக்க போறப்ப தடுக்குறிங்க... இதுல எது உங்களோட உண்மையான குணம்? வெளியாளுங்க தப்பு செஞ்சா தான் நியாயம் பேசுவிங்க, உங்க வீட்டாளுங்க என்ன கேவலத்தைப் பண்ணுனாலும் கண்டுக்க மாட்டிங்க... ஏன் ரெட்டைவேசம் போடுறிங்க?"
    ஆவேசமாக அவள் உலுக்கவும் சரபேஸ்வரனுக்குக் கோபம் வந்துவிட்டது.
    "பஸ்ல நடந்ததும் இதுவும் ஒன்னா? மாமா ஏதோ விளையாட்டா பேசிருப்பார்… அவர் எப்பிடிப்பட்டவர்னு உன்னை விட எனக்கு நல்லா தெரியும்... அதான் உன்னைத் தடுத்தேன்... நீ இத்தனை பேர் முன்னாடி மாமாவ கேள்வி கேட்டு அசிங்கப்படுத்துனா என் அக்கா மனசு வருத்தப்படும்... அப்பிடி நடக்க நான் விடமாட்டேன்... நீ என்னை லவ் பண்ணுறது உண்மைனா அமைதியா இரு கவி"
    சங்கவி அவனது வார்த்தைகள் உண்டாக்கிய அதிர்ச்சியை ஜீரணிக்க முடியாமல் நிற்கும்போதே சரபேஸ்வரன் அங்கிருந்து சென்றுவிட்டான்.
    அவளுக்கு அந்த ஏமாற்றத்தை எப்படி சமாளிப்பதென தெரியவில்லை.
    அந்நேரத்தில் அங்கே வந்த அழகுநாச்சி பிரசாதம் வாங்க வரிசையை நோக்கி நகரவும் அவரைத் தடுத்தாள் சங்கவி.
    "வேண்டாம்மா... வீட்டுக்குக் கிளம்புவோம்"
    https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?threads/காதல்-14.5390/
    #ஒருகாதலும்சில_கவிதைளும்
    #நித்யாமாரியப்பன்
  • Loading…
  • Loading…
  • Loading…
Top Bottom