• Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors. legal team, Ezhilanbu Novels
  • கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.
Nithya Mariappan
Reaction score
3,235

Profile posts Latest activity Postings About

  • ஒரு காதலும் சில கவிதைகளும் எபி 15
    சங்கவி தனக்காக காத்திருப்பாள் என அடித்துக் கூறினான் சரபேஸ்வரன். அவளும் வங்கிப்பணித்தேர்வுக்குப் படிக்கப்போகிறாள் என்ற தகவலைத் தெரிவித்தான்.
    அவர் ஓரளவுக்குச் சமாதானம் ஆனாலும் மூர்த்தி குறுக்கே புகுந்தார்.
    "பொண்ணு பாக்குறதுக்கு அம்சமா இருந்தாலும் காதுல கழுத்துல தங்கம்ங்கிற பேச்சுக்கே இடமில்லயே... நம்ம ரேஞ்சுக்கு ஏத்த சம்பந்தம் தானா? நம்ம எதிர்பாக்குற சீர் செனத்திய அவங்களால செய்ய முடியுமா?"
    "சங்கவி அவங்களுக்கு ஒரே பொண்ணு... எந்தக் குறையும் வைக்காம தாராளமா செய்வாங்க மாமா"
    தன் காதலுக்கு மூர்த்தி தடை சொல்லக்கூடாதென்ற வேகத்தில் உரைத்தான் அவன்.
    "ஊஹூம்... என்னால நம்ப முடியல... காதலிச்சவன் தானேனு பொண்ணை ஃப்ரீயா கட்டி வச்சிடப்போறாங்க... இங்க பாரு உமா, நீ அந்தப் பொண்ணைப் பத்தி விசாரிக்க ஆரம்பிச்சிடு... நம்ம ஈஸ்வரன் நாளைக்கே நல்ல வேலைக்குப் போயிட்டான்னா அதுக்கேத்த மாதிரி பொண்ணு வீட்டுல கேட்டு வாங்குறது உன் பொறுப்பு... நம்ம பையனுக்குனு ஒரு கெத்து இருக்குல்ல"
    காதல் திருமணம் என்றாலும் வரதட்சணையைப் பற்றிய எதிர்பார்ப்பு குறையாது என்ற நிதர்சனத்தை அன்றைய தினம் கண்கூடாகப் பார்த்தான் சரபேஸ்வரன்.
    அப்போதிருந்த சரபேஸ்வரனுக்குக் குடும்பத்தினரை எதிர்த்துப் பேச வராது. அதிலும் மூர்த்தியின் வாக்கை மீறாதவனாக அவன் இருந்த காலம் அது.
    https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?threads/காதல்-15.5394/
    #ஒருகாதலும்சில_கவிதைளும்
    #நித்யாமாரியப்பன்
    ஒரு காதலும் சில கவிதைகளும் எபி 14
    "எதுக்கு என்னை இழுத்துட்டு வந்திங்க சரபன்? உங்க மாமாவ நறுக்குனு நாலு வார்த்தை கேட்டா தான் என்னால நிம்மதியா சாமி கும்பிட முடியும்"
    திமிறியவளை அமைதிப்படுத்த முயன்றான் அவன்.
    அவனிடம் நடந்ததை மறைக்காமல் கூறினாள் சங்கவி.
    "வீட்டுல சோறு இல்லாம யாரும் இங்க வரல... உங்க மாமா பூஜைக்கு கட்டளைக்காரரா இருந்தா என்ன வேணும்னாலும் பேசுவாரா?"
    "விளையாட்டுக்குப் பேசிருப்பார் கவி... இதை ஏன் பெரிய இஸ்யூ ஆக்கி சண்டை போடணும்னு துடிக்கிற? காம் டவுன்"
    சரபேஸ்வரன் விளையாட்டென சொல்லவும் சங்கவிக்குச் சுரீரென கோபம் வந்துவிட்டது.
    "இப்பிடி சாக்கு சொல்ல உங்களுக்கு ஒரு மாதிரி இல்லயா சரபன்? அன்னைக்கு பஸ்ல அந்த லேடிக்காக நியாயம் கேட்டு குதிச்சிங்க... இப்ப உங்க மாமாவோட கேவலமான வார்த்தைக்கு நான் நியாயம் கேக்க போறப்ப தடுக்குறிங்க... இதுல எது உங்களோட உண்மையான குணம்? வெளியாளுங்க தப்பு செஞ்சா தான் நியாயம் பேசுவிங்க, உங்க வீட்டாளுங்க என்ன கேவலத்தைப் பண்ணுனாலும் கண்டுக்க மாட்டிங்க... ஏன் ரெட்டைவேசம் போடுறிங்க?"
    ஆவேசமாக அவள் உலுக்கவும் சரபேஸ்வரனுக்குக் கோபம் வந்துவிட்டது.
    "பஸ்ல நடந்ததும் இதுவும் ஒன்னா? மாமா ஏதோ விளையாட்டா பேசிருப்பார்… அவர் எப்பிடிப்பட்டவர்னு உன்னை விட எனக்கு நல்லா தெரியும்... அதான் உன்னைத் தடுத்தேன்... நீ இத்தனை பேர் முன்னாடி மாமாவ கேள்வி கேட்டு அசிங்கப்படுத்துனா என் அக்கா மனசு வருத்தப்படும்... அப்பிடி நடக்க நான் விடமாட்டேன்... நீ என்னை லவ் பண்ணுறது உண்மைனா அமைதியா இரு கவி"
    சங்கவி அவனது வார்த்தைகள் உண்டாக்கிய அதிர்ச்சியை ஜீரணிக்க முடியாமல் நிற்கும்போதே சரபேஸ்வரன் அங்கிருந்து சென்றுவிட்டான்.
    அவளுக்கு அந்த ஏமாற்றத்தை எப்படி சமாளிப்பதென தெரியவில்லை.
    அந்நேரத்தில் அங்கே வந்த அழகுநாச்சி பிரசாதம் வாங்க வரிசையை நோக்கி நகரவும் அவரைத் தடுத்தாள் சங்கவி.
    "வேண்டாம்மா... வீட்டுக்குக் கிளம்புவோம்"
    https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?threads/காதல்-14.5390/
    #ஒருகாதலும்சில_கவிதைளும்
    #நித்யாமாரியப்பன்
    ஒரு காதலும் சில கவிதைகளும் எபி 13
    "புக் வாங்கியாச்சு... ஜீரோ டிகிரில ஐஸ்கிரீம் சாப்பிட்டுட்டுக் கிளம்புவோமா?"
    சரபேஸ்வரன் ஆவலாகக் கேட்டவாறு பில்லுக்கான தொகையைச் செலுத்தினான்.
    சங்கவி வேண்டாமென மறுத்தாள்.
    "ஏன்?"
    "நீங்க சம்பாதிக்கிற பணத்துல எனக்கு வாங்கி குடுங்க சரபன்... அப்ப நான் சந்தோசமா சாப்பிடுவேன்... அது தான் எனக்கு உரிமையான பணம்"
    இதை விட வெளிப்படையாக ஒரு பெண்ணால் காதலிப்பதைச் சொல்ல முடியுமா?
    ‘ஐ லவ் யூ’ என்ற வார்த்தைக்கு அவசியமே வராமல் தனது காதலைச் சொல்லியிருந்தாள் சங்கவி. சரபேஸ்வரனின் முகம் அவளது பதிலில் விகசித்தது.
    "இருந்தாலும் நீ ரொம்ப ஸ்ட்ரிக்டு தான்"
    போலியாகக் குறை சொன்னபடி கிளம்பியவனோடு தானும் நடந்தாள் சங்கவி.
    ஜீரோ டிகிரி ஐஸ்கிரீம் ஸ்டாலை கடக்கும்போது ஏக்கமாக பார்த்தவனின் தலையில் தட்டி அழைத்துச் சென்றாள் சங்கவி.
    காதலர்களின் பேச்சின் போது மட்டும் கடிகார முட்களுக்கு இருமடங்கு சுறுசுறுப்பு பிறந்துவிடும் போல. அவ்வளவு விரைவாக நேரம் ஓடிவிட்டது.
    https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?threads/காதல்-13.5384/
    #ஒருகாதலும்சில_கவிதைளும்
    #நித்யாமாரியப்பன்
    ஒரு காதலும் சில கவிதைகளும் எபி 12
    "எவ்ளோ பெரிய கோலம்!"
    ஆனந்தின் குரலில் கவனம் கலைந்த சங்கவி, அங்கே சரபேஸ்வரனைக் கண்டதும் திகைப்போடு எழுந்தாள்.
    கரங்கள் அவசரமாக கலைந்த கூந்தலை சரிசெய்ய விழிகளோ அலைபாயத் துவங்கின.
    "உங்க வீட்டுல செம்பருத்தி செடி இருக்குனு கேள்விப்பட்டேன்"
    சரபேஸ்வரன் மருதாணியால் சிவந்திருந்த சங்கவியின் விரல்களை ரசித்தபடி பேச்சை ஆரம்பித்தான்.
    "புறவாசல்ல இருக்கு"
    பதிலளித்த சங்கவியும் இயல்புக்குத் திரும்பிவிட்டாள்.
    "இவன் ஆனந்த்... என் அக்கா மகன்... இவங்க ஸ்கூல்ல இயற்கைல கிடைக்கிற பொருளை வச்சு வாட்டர் கலர் தயாரிக்கணும்னு அசைன்மெண்ட் குடுத்திருக்காங்க... அதான் செம்பருத்தி பூ வாங்கிட்டுப் போகலாம்னு வந்தோம்"
    சங்கவி அப்படியா என்பது போல பார்த்தாள்.
    "வாங்க! பறிச்சுத் தர்றேன்"
    அவள் பேசியபடி கிளம்பும்போதே அழகுநாச்சி வரும் அரவம் கேட்டது.
    வந்தவர் மகளோடு உரையாடிக் கொண்டிருந்த ஆடவனைக் கண்டதும் துணுக்குற்றார்.
    "என்ன வேணும் தம்பி?"
    "நான் ஆழியூர் சாரங்கபாணி மகன்... உங்க வீட்டுல செம்பருத்தி செடி இருக்குனு பரிமளாக்கா சொன்னாங்க... இவன் ஸ்கூல் அசைன்மெண்டுக்கு செம்பருத்தி பூ தேவைப்படுது"
    "பின்னாடி தான் செடி இருக்கு... வேணுங்கிற பூவை பறிச்சுக்க தம்பி... நீ கூட போய் காட்டு கவி"
    "சரிம்மா"
    சங்கவியோடு வீட்டுக்குள் அடியெடுத்து வைக்கப் போனவன் வேகமாக இடது காலுக்குப் பதில் வலது காலை மாற்றி உள்ளே வர அதை கவனித்தவளுக்குச் சிரிப்பு வந்துவிட்டது.
    சிரிப்பை மறைத்துக்கொண்டு புழக்கடை தோட்டத்திற்கு அவர்களை அழைத்து வந்தவள் செம்பருத்தி பூக்களைப் பறிக்க ஆரம்பித்தாள்.
    "அந்த பூ பெருசா இருக்கு பாருங்க... அதை பறிங்க... அக்கா அங்க பறிக்காதிங்க... பக்கத்து இலைல குருவிக்கூடு இருக்கு"
    கள்ளங்கபடமற்ற ஆனந்தை அவளுக்குப் பிடித்துவிட்டது.
    அவன் கேட்டபடி பூக்களைப் பறித்து பாலிதீன் கவரில் போட்டு நீட்டினாள்.
    "எங்க வயல்ல சங்குப்பூ இருக்கு... அதுல இருந்து ப்ளூ கலர் பெயிண்ட் எடுக்கலாம்... உனக்கு வேணும்னா சொல்லு"
    ஆனந்திடம் ஆதுரமாகப் பேசினாள் சங்கவி.
    சரியென அவன் தலையாட்டும் முன்னர் வேகமாக ஆட்டினான் சரபேஸ்வரன்.
    "கண்டிப்பா வேணும்... அதை நீங்களே பறிச்சுக் குடுத்திங்கனா இன்னும் வசதியா இருக்கும்"
    இத்தனை நாட்கள் கண்ணாமூச்சி ஆட்டம் ஆடிவிட்டு இப்போது வாய் கிழிய வசனம் பேசுகிறான். உதட்டைச் சுழித்து அவனை அலட்சியம் செய்தாள் சங்கவி.

    https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?threads/காதல்-12.5377/
    #ஒருகாதலும்சில_கவிதைளும்
    #நித்யாமாரியப்பன்
    ஒரு காதலும் சில கவிதைகளும் எபி 9

  • Loading…
  • Loading…
  • Loading…
Top Bottom