• Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
    - legal team, Ezhilanbu Novels
  • கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.
Nithya Mariappan
Reaction score
3,281

Profile posts Latest activity Postings About

  • #ஒருகாதலும்சில_கவிதைகளும் epi 25
    "அவசரப்படாத ப்ளீஸ்... கொஞ்சநாள் தான... நம்ம வீட்டுலயே இரு"
    சரபேஸ்வரன் அவளிடம் கிட்டத்தட்ட கெஞ்சினான்.
    உடனே சத்தமாக நகைத்தாள் அவள்.
    "நம்ம வீடா? இது உங்க வீடு... இதை நான் எப்பவும் என் வீடா ஃபீல் பண்ணுனதில்ல... உங்கம்மாவும் அக்காவும் என்னை இந்த வீட்டு மனுசியா நடத்தியிருந்தா அப்பிடி தோணிருக்குமோ என்னமோ... அவங்க என்னை வேண்டாத ஒருத்தியா தான நடத்துனாங்க... இன்னொரு தடவை இதை நம்ம வீடுனு சொல்லாதிங்க"
    “கவி…”
    “நீங்க என்னை லவ் பண்ணுறது உண்மைனா என்னைப் போகவிடுங்க… சென்னைல வேலை, வீடு அரேஞ்ச் பண்ணிட்டு ட்ரெயின் ஏறுறப்ப இன்ஃபார்ம் பண்ணுங்க… இப்பவும் இவங்க தான் முக்கியம்னு நினைச்சிங்கனா என்னை விட்டுடுங்க சரபன்… இப்பிடி ஒரு கையாலாகாத மனுசனுக்குப் பொண்டாட்டியா இருக்குறதை விட காலம் முழுக்க எங்கம்மாக்கு மகளா நான் வாழ்ந்துட்டுப் போயிடுறேன்”
    மனக்குமுறல்களைச் சொல்லிவிட்டுச் சரபேஸ்வரனின் பதிலை எதிர்பாராதவளாக கிளம்பிப் போய்விட்டாள் சங்கவி.
    சரபேஸ்வரனின் கண்கள் பனித்தன. ஆண்கள் அழக்கூடாதா என்ன? உண்மையான அன்பு விலகும் போது அவர்களும் அழுவார்கள், அந்த அன்பை மதிப்பவர்களாக இருந்தால்!
    உமாவும் குழலியும் இப்படி ஒரு எதிர்வினையை எதிர்பார்க்கவில்லை. இப்போது சரபேஸ்வரனின் வாழ்க்கை கேள்விக்குறியானதற்கு வருந்துவதா அல்லது அவன் சென்னைக்குப் புலம்பெயர்வதை நினைத்து மனம் பொருமுவதா என புரியாமல் இரண்டுங்கெட்டான் மனநிலையில் இருந்தார்கள்.

    https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?threads/காதல்-25.5444/

    #நித்யாமாரியப்பன்
    #ஒருகாதலும்சில_கவிதைகளும் எபி 24
    “இன்னைக்கு வளைகாப்புல கோமதிக்கு வளையல் போடுறப்ப அடுத்து எனக்குத் தான் வளைகாப்புனு எல்லாரும் கிண்டல் பண்ணுனாங்க”
    “எதே? ஜீபூம்பானதும் வளைகாப்பு வச்சிட முடியுமா? அதுக்கு இன்னும் ஃபர்ஸ்ட் ஸ்டெப்பே எடுத்து வைக்கலயே”
    நொந்து போய் பேசியவனைக் குறுஞ்சிரிப்போடு பார்த்தாள் சங்கவி.
    “யார் உங்களை ஃபர்ஸ்ட் ஸ்டெப் எடுக்கவிடாம தடுத்தாங்களாம்?”
    சீண்டினாள் அவள். சரபேஸ்வரன் அவளது சீண்டலில் திகைத்துப்போனான்.
    “ஏய் கவி! நீ என் கிட்ட விளையாடுறியா? டேர்ம்ஸ் அண்ட் கண்டிசன்ஸ் ஞாபகம் இருக்கா?”
    பொறுப்பான கணவனாக நினைவூட்டினான் மனைவிக்கு. அவன் மனைவியோ அசட்டையாக தோளைக் குலுக்கினாள்
    “டேர்ம்ஸ் அண்ட் கண்டிசன்ஸை டெலிட் பண்ணிட்டேன்… இன்னுமா உங்களுக்குப் புரியல?”
    “உன்னோட இந்த வார்த்தைய நான் ‘நோ அப்ஜெக்சன் சர்டிபிகேட்னு’ எடுத்துக்கலாமா?”
    “நான் எவ்ளோ ஆசையா பேசுறேன்… இப்ப கூட புரொபஷ்னல் வேர்ட்ஸ் தான் யூஸ் பண்ணுவிங்களா? உண்மைய சொல்லுங்க, அந்த எகனாமிக்ஸ் நோட்ல இருக்குற கவிதைய நீங்க தான் எழுதுனிங்களா?”
    “ப்ராமிஷா நான் தான் எழுதுனேன் கவி... இப்ப எனக்குக் கவிதை சொல்லுற மூட் இல்ல… இல்லனா அழகா ஒரு கவிதைய எடுத்து விட்டிருப்பேன்”
    “நம்பிட்டேன்”
    அவள் இழுத்த விதத்தில் சிரித்தவன் “சில கவிதைய சொல்லுறதை விட செயல்ல காட்டுனா நல்லா இருக்குமாம்” என்றான் விசமமாக.
    சங்கவி மீண்டும் நாணத்தில் பிடியில் சிக்கிக்கொண்டாள்.

    https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?threads/காதல்-24.5442/

    #நித்யாமாரியப்பன்
    #ஒருகாதலும்சில_கவிதைகளும் epi 23
    சங்கவி வியப்பில் விழிகளை விரித்தாள்.
    “ஏன் இப்பிடி பாக்குற?” என்றவனிடம்
    “நீங்க எனக்காக யோசிக்கிறது புதுசில்ல… பட் உங்க அம்மா அக்காவ தாண்டி எனக்காக யோசிக்கிறிங்கல்ல, அது எனக்குப் புதுசு தான்” என்றாள் அவள்.
    “அம்மாக்கு அப்பா இருக்குறார்… அக்காக்கு அவ பையன் இருக்குறான்… எனக்கு நீ மட்டும் தான இருக்குற? உனக்காக யோசிக்காம வேற யாருக்காக நான் யோசிக்கப்போறேன் சொல்லு”
    சங்கவியின் மனம் சிலிர்த்து அடங்கியது. ஆனால் எல்லாம் ஒரு நொடி தான். இவன் உணர்ச்சிப்பூர்வமாக எதையாவது சொல்வதும், அதற்கு அவள் சிலிர்த்து மானசீகமாகச் சில்லறையைச் சிதறவிடுவதும், அடுத்த நாளே இவனது செய்கைகளில் மாற்றமில்லையென அவள் ஏமாறுவதும் வாடிக்கையாகிவிட்டதே இந்த இரு வாரங்களில்!
    இன்று இப்படி சொல்பவன் நாளையே மாற்றிப் பேசினால்?
    “இந்தத் தடவை உனக்கு ஏமாற்றம் இருக்காது கவி”
    “பாக்கலாம் சரபன்”
    தோளில் இருந்த அவனது கரத்தை விலக்கிவிட்டுச் செல்ல முயன்றவளை சீண்டும் எண்ணம் எழுந்தது அவனுக்குள்.
    “சந்தானம் சார் வீட்டுல இப்பவும் அவங்க ஒய்ப் தான் அவருக்கு எண்ணெய் தேய்ச்சு குளிக்க வைப்பாங்களாம்… உனக்கு வேலை இல்லனா நீயும்…”
    சரபேஸ்வரன் இழுக்கவும் கண்களில் அனலோடு திரும்பினாள் சங்கவி.
    “நானும்…” கண்களை உருட்டிக் கேட்டாள் அவள்.
    “குளிக்கக் கொஞ்சம் ஹெல்ப் பண்ணலாமேனு சொல்ல வந்தேன்மா… அதுக்கு ஏன் கோவப்படுற? புதுசா கல்யாணம் ஆன பொண்ணு மாதிரி ஒரு நாளாச்சும் நடந்துக்குறியா? எப்பவும் எதிரி மாதிரியே பாக்குற”
    https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?threads/காதல்-23.5437/

    #நித்யாமாரியப்பன்
    #ஒருகாதலும்சில_கவிதைகளும் எபி 22

    சங்கவி உஷ்ணத்தோடு சொல்லி முடித்த தருவாயில் சமையலறையிலிருந்து வெளியே வந்தார் குழலி.
    “அவரு இந்த வீட்டோட மாப்பிள்ளை… அதுக்காக நீ அவரை மதிச்சு தான் ஆகணும்”
    “உங்க வீட்டு மாப்பிள்ளைனா நீங்க மதிங்க… சின்னப்பொண்ணுங்க கிட்ட வக்கிரமா நடந்துக்கிறவனை எல்லாம் என்னால மதிக்க முடியாது… அப்பிடி மதிச்சா தான் இந்தக் குடும்பத்துல வாழமுடியும்னா எனக்கு இந்த வாழ்க்கையே தேவையில்ல… உங்களோட குத்தல் பேச்சு எதையும் கண்டுக்காம போறதால எல்லாத்துக்கும் தலையாட்டிட்டுப் போயிடுவேன்னு நினைக்காதிங்க… நீங்க பாதுகாக்குறது ஒரு மனோவியாதி பிடிச்சவனை… ஒரு நல்ல அம்மாவா நீங்க உங்க மகளுக்கு அவங்க புருசனோட வக்கிர குணத்தை பத்தி சொல்லிருக்கணும்”
    “என் மக வாழ்க்கைய பத்தி நீ பேச வேண்டாம்… ஆம்பளைனா அப்பிடி இப்பிடி இருக்க தான் செய்வாங்க… பொம்பளைங்க அதுக்காகச் சிலிர்த்துக்கிட்டு போனா தனிமரமா தான் நிக்கணும்”
    “அந்த ஆம்பளை அவன் வயசுக்கேத்த பொம்பளை கிட்ட வக்கிரமா நடந்துக்கிட்டாலே தப்பு… உங்க மருமகன் சின்ன சின்னக் குழந்தைங்க கிட்ட கேவலமா நடந்துக்கிற அருவருப்பான ஜந்து… வாய் இருக்குனு அவருக்குக் கொடி பிடிக்காதிங்க… யாருக்குத் தெரியும்? நாளைக்கே எனக்கும் சரபனுக்கும் ஒரு பெண் குழந்தை பிறந்து வளந்து அந்தக் குழந்தை கிட்ட உங்க மாண்புமிகு மருமகன் கேவலமா நடந்துக்கிட்டாலும் நீங்க அந்தாளுக்குத் தான் கொடி பிடிப்பிங்க”
    “கவி!”
    அதட்டலாய் ஒலித்தது சரபேஸ்வரனின் குரல்.
    https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?threads/காதல்-22.5427/

    #நித்யாமாரியப்பன்
    M
    Mahalakshmi
    அருமையாக கொண்டு போகிறீர்கள் நித்யா.உங்களுக்கு நிகர் வேறு யாரும் இல்லை.நீங்களேதான்
    ஒரு காதலும் சில கவிதைகளும் எபி 20
    அவனைப் பார்த்ததும் சங்கவி புன்னகைத்தாள்.
    அவளின் மந்தகாச புன்னகையில் அவனுடைய மனம் நெகிழ்ந்தது. க்ரீம் வண்ண டிசைனர் புடவையில் புதைந்திருப்பவளை மொத்தமாகக் கொள்ளையிட அவனுக்கும் ஆசை தான்.
    ஆனால் சங்கவி கேட்ட அவகாசம் ‘டேர்ம்ஸ் அண்ட் கண்டிசனாய்’ அவர்களுக்கிடையே முளைத்து முறைத்துக் கொண்டிருக்கிறதே!
    “இந்த ஹேர்பின்னை எடுக்க ஹெல்ப் பண்ணுங்க சரபன்”
    சிகையலங்காரத்தைக் கலைக்க அவனது உதவியை வேண்டினாள் சங்கவி.
    சரபேஸ்வரனோ தடுமாற்றத்தின் வாயிலில் நின்றுகொண்டிருந்தான். சங்கவியுடன் கண நேரம் தனிமை வாய்த்தாலும் கொடுத்த வாக்கை மீறிவிடுவோமோ என்ற பயம் அவனுக்கு. எனவே மறுத்தான்.
    “இதெல்லாம் எனக்கு ரிமூவ் பண்ண தெரியாது கவி… நீயே பண்ணிக்க”
    அவள் திகைத்துப் பதில்மொழி தருவதற்குள் “நான் ரெஃப்ரெஷ் ஆகிட்டு வர்றேன்… ஷப்பா செம வேர்வை” என்று வாய்க்கு வந்ததை உளறிவிட்டுக் குளியலறைக்குள் புகுந்துகொண்டான் அவன்.
    அவனது வினோதமான பேச்சில் திகைத்தவள் அலங்காரத்தைக் கலைத்து முடிக்கும்போது வெளியே வந்தவன் சத்தம் போடாமல் படுக்கையில் அமர்ந்து மொபைலை நோண்ட ஆரம்பித்தான்.
    சங்கவிக்கும் குளித்தால் தேவலை என்று தோன்ற மாற்றுடை சகிதம் குளியலறைக்குள் புகுந்துகொண்டவள் குளித்து உடை மாற்றித் திரும்பிவரும் போது சரபேஸ்வரன் உறங்கியிருந்தான்.
    திருமணத்திற்கான ஏற்பாடுகள் அனைத்தையும் மொத்தமாகச் செய்ததன் களைப்பாக இருக்குமென நினைத்த சங்கவி கூந்தலை கொண்டையிட்டுவிட்டு அவனருகே அமர்ந்தாள்.
    இன்னும் விளக்கை அணைக்கவில்லை. அவளுக்காகப் போட்டுவைத்திருந்தான் போல.
    சங்கவி அப்படியே அமர்ந்து காலையிலிருந்து நடந்த அனைத்தையும் மனக்கண்ணில் ஓட்டிப் பார்த்தாள்.
    இனி வரும் நாட்களில் குழலியின் அதிருப்தி வெளிப்படையாகத் தன்னிடம் பாயுமோ என்ற சந்தேகத்தை அவரது நடத்தை கிளப்பிவிட்டிருந்தது.
    முடிந்தவரை சரபேஸ்வரனுக்காக அவர் என்ன செய்தாலும் கண்டுகொள்ளாமல் இருக்கும் முடிவுக்கு வந்தாள்.
    https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?threads/காதல்-20.5418/
    #ஒருகாதலும்சில_கவிதைகளும்

    #நித்யாமாரியப்பன்
    ஒரு காதலும் சில கவிதைகளும் எபி 18
    ஒரு காதலும் சில கவிதைகளும் எபி 17
    “அந்த நிலத்தை வித்துட்டா எங்கப்பாவும் அம்மாவும் என்ன பண்ணுவாங்கனு யோசிச்சிங்களா சரபன்? அவங்க ஒன்னும் பரம்பரை பணக்காரங்க இல்ல... நீங்க உங்கம்மா கிட்ட பதினைஞ்சு சவரன் நகை போதும்னு சொல்லி சமாதானப்படுத்துங்க… ப்ளீஸ்”
    சரபேஸ்வரனுக்கு அந்நொடியில் சங்கவியின் வேண்டுகோள் தேவையற்ற பிடிவாதமாகத் தோன்றியது.
    “எங்க வீட்டுல நமக்காக தானே கேக்குறாங்க கவி… இந்த நாப்பது பவுனையும் எங்கம்மாவும் அக்காவுமா போடப்போறாங்க? மாமா உன் கிட்ட இதெல்லாம் கஷ்டம்னு சொன்னாங்களா?”
    “இல்ல”
    “அப்ப ஏன் நீ ரொம்ப யோசிக்கிற கவி? ரிலாக்ஸ்”
    “உங்களால பேசிப் பாக்க முடியாதா சரபன்?”
    மீண்டும் தயக்கமாக வினவினாள் சங்கவி. தந்தை படும் பாட்டை அவளால் பார்க்க முடியவில்லை.
    சரபேஸ்வரனின் நிலையோ அதை விட மோசம்.
    மூர்த்திக்கு ஏனோ பொன்வண்ணனின் குடும்பத்தில் பெண்ணெடுக்க விருப்பமில்லை. காரணம், அவர்கள் பொருளாதாரத்தில் தங்களுக்கு ஈடில்லை என்ற எண்ணம்.
    மைத்துனன் இனி கை நிறைய சம்பாதிக்கப்போகிறான். அவனது படிப்புக்கும் வேலைக்குமேற்ற சீரை எதிர்பார்ப்பதில் என்ன தவறு இருக்கிறதென பேசி நாற்பது சவரன் நகையே குறைவென குழலியின் மனதில் பதியவைத்துவிட்டார்.
    அதையும் குறைத்தால் மூர்த்தி இத்திருமணத்தை நிறுத்திவிடுவாரோ என்ற பயம் அவனுக்கு.
    அவனுடைய படிப்புக்கு மூர்த்தியின் பணம் எவ்வளவு உதவியாக இருந்ததென்பதை அவனால் மறக்க முடியுமா? மூர்த்தியின் பேச்சை மறுத்தால் தமக்கை வருந்துவாளே!
    மூர்த்தியிடம் பட்ட நன்றிக்கடனும் உமாவின் மீதுள்ள பாசமும் சங்கவியின் மீதிருக்கும் காதலும் மட்டுமே அவனது மனதுக்குள் குழப்பியடித்ததில் திடுமென இவ்வளவு நகை, பணத்துக்குப் பொன்வண்ணன் என்ன செய்வாரென யோசிக்கத் தோன்றவில்லை.
    நகை பற்றிய மூர்த்தியின் எதிர்பார்ப்பையும் தனது பயத்தையும் சங்கவியிடம் கூற சரபேஸ்வரனின் மனம் இடங்கொடுக்கவில்லை. எனவே அவளைச் சமாதானம் செய்ய துடித்தான்.
    ஆனால் அவளோ சொன்ன சொல்லிலேயே நின்றாள்.
    ஒரு கட்டத்தில் சலிப்பு வந்துவிட்டது அவனுக்கு.
    “நீ சொன்னபடிலாம் எங்க வீட்டுல கேக்கமாட்டாங்க கவி… எங்க மாமாவ எவ்ளோ கஷ்டப்பட்டு இந்தக் கல்யாணத்துக்கு நாங்க சம்மதிக்க வச்சிருக்கோம் தெரியுமா? நீ நிலமை தெரியாம பேசுற”
    சங்கவி அவனை விழியகலாமல் பார்த்தாள்.
    “அப்ப கல்யாணத்தை நிறுத்திடுங்க”
    இறுக்கமான குரலில் அவள் கூறவும் சரபேஸ்வரனுக்குத் தூக்கிவாரிப்போட்டது. மூன்றாண்டு காதலை அவ்வளவு எளிதில் தூக்கிப்போட்டுவிடமுடியுமா என்ன?
    “முடியாது” என்றான் அவனும் முடிவாக.
    “எங்கப்பாவ ஃபினான்ஷியலா கஷ்டப்பட வச்சிட்டு நான் மட்டும் எப்பிடி உங்க வீட்டுல சந்தோசமா இருப்பேன் சரபன்? எனக்கு இந்தக் கல்யாணம் தேவையில்ல”
    “நீ என்னை பணத்தாசை பிடிச்சவன் மாதிரி ஃப்ரேம் பண்ணுற கவி”

    https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?threads/காதல்-17.5404/

    #ஒருகாதலும்சில_கவிதைளும்
    #நித்யாமாரியப்பன்
    ஒரு காதலும் சில கவிதைகளும் எபி 16
    பின்னர் கொடுக்கல் வாங்கல் பற்றிய பேச்சு ஆரம்பிக்க மூர்த்தி மனைவியை குயுக்தியாகப் பார்த்தார். அவரது பார்வைக்கு அர்த்தம் புரிந்தவராய் உமாவும் பேச ஆரம்பித்தார்.
    "என் தம்பிக்கு நல்ல வேலை கிடைச்சிருக்கு... கை நிறைய சம்பளம்... உங்க மகளை மகாராணி மாதிரி வச்சு காப்பாத்துவான்"
    வழக்கமான முஸ்தீபுடன் வரதட்சணைக்கான பேச்சுக்குப் பிள்ளையார் சுழி போட்டார் அவர்.
    நாற்பது சவரன் நகை, இரண்டு இலட்சம் ரொக்கம், இதர பண்ட பாத்திரங்கள் இவை அனைத்தும் பொன்வண்ணனின் பொறுப்பு என பேசி முடித்தாயிற்று. கூடவே மாப்பிள்ளைக்கு மோதிரம், செயின், ப்ரேஸ்லெட் லொட்டு லொசுக்கு வகையறாக்களும் அடங்கும்.
    பெண்ணுக்குத் தாலி, முகூர்த்தப்புடவை, திருமணம் மற்றும் மறுவீட்டுச்செலவைச் சாரங்கபாணி பார்த்துக் கொள்வதாக ஏற்பாடு. எவ்வித எதிர்மறை பேச்சுமின்றி பூ வைக்கும் சடங்கு இனிதே முடிவுற்றது.
    இன்னும் சில நாட்களில், விதி தங்கள் காதலுக்கு பிரிவுரை எழுதப்போவதை அறியாமல் சரபேஸ்வரனும் சங்கவியும் ஆவலோடு நிச்சயதார்த்த நாளுக்காக காத்திருந்தனர்!
    https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?threads/காதல்-16.5400/

    #நித்யாமாரியப்பன்
    #ஒருகாதலும்சில_கவிதைளும்
  • Loading…
  • Loading…
  • Loading…
Top Bottom