• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.
Nithya Mariappan
Reaction score
2,963

Profile posts Latest activity Postings About

  • அமிர்தசாகரம் - 8,9 பதிவிட்டாச்சு.

    “எல்லாம் சரி முட்டக்கண்ணி… நீ படிப்பு அது இதுனு ஒரேயடியா என்னை விட்டு விலகி இருக்கலாம்னு கனவு காணாத… நம்ம ஹஸ்பெண்ட் அண்ட் ஒய்ப் ஆனதுக்கு அப்புறம் நமக்குள்ள அந்த உறவுக்கான பாண்டிங் உருவாகணும்.. மத்த விசயத்துல கான்சென்ட்ரேட் பண்ணிட்டு நம்ம ரிலேசன்ஷிப்பை டீல்ல விட்டுடக் கூடாதுல்ல” என்று அமர்த்தலாகச் சொல்லவும் அமிர்தா கடுப்புடன் அவனது புஜத்தில் கிள்ளினாள்.
    “ஏய் ராட்சசி! பிசாசு மாதிரி நகம் வச்சுருக்க… முதல்ல நகத்தை வெட்டுடி” என்று முகத்தைச் சுருக்கியபடி வலித்த புஜத்தைத் தடவிக்கொண்டு அவன் சொல்லவும் உதட்டைச் சுழித்தவள்
    “அப்போ இனிமே என்னை முட்டக்கண்ணினு கூப்பிடாதிங்க… சொன்னா நான் இப்பிடி தான் கிள்ளுவேன்” என்று மிரட்டவும் அவளது நாசியை நிமிண்ட வந்தவன் அவள் கண்களால் சுற்றுப்புறத்தைச் சுட்டிக்காட்டவும் இடம் பொருள் ஏவல் உணர்ந்து கைகளைப் பின்னே இழுத்துக் கொண்டான்.
    “சரி நம்ம வந்து ரொம்ப நேரம் ஆச்சு… கிளம்புவோமா? இல்லனா உங்கம்மா என்னவோ நான் உங்கள கடத்திட்டு வந்துட்ட மாதிரி ரியாக்ட் பண்ணுவாங்க” என்று கேலி செய்தபடியே எழுந்தாள் அமிர்தவர்ஷினி.

    https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?threads/சாகரம்-8.5020/

    https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?threads/சாகரம்-9.5027/

    #அமிர்தசாகரம் #நித்யாமாரியப்பன்
    அமிர்தசாகரம் - 6, 7 பதிவிட்டாச்சு.

    “ஏய் முட்டக்கண்ணி முழியழகி இன்னைக்குத் தானே என்கேஜ்மெண்ட் முடிஞ்சிருக்கு, கொஞ்சம் டைம் எடுத்துக் கலாய்க்கலாம்னு நினைச்சேன்… ஆனா நீ தான் வம்படியா உன்னை கலாய்க்கிறதுக்கான வாய்ப்பை கிரியேட் பண்ணுற”
    “என்னை முட்டக்கண்ணினு கூப்பிடாதிங்க… எங்கம்மா எவ்ளோ ஆசையா அமிர்தவர்ஷினினு பேர் வச்சிருக்காங்க… அதைச் சொல்லிக் கூப்பிட்டா என்னவாம்?”
    “நான் அப்பிடி தான் கூப்பிடுவேன்… முட்டக்கண்ணி… முட்டக்கண்ணி… முட்டக்கண்ணி… த்ரீ டைம்ஸ் கூப்பிட்டுட்டேன்… என்ன பண்ணுவ? கோவத்துல கைல வச்சிருக்குற இன்கம்டாக்ஸ் புக்கை கிழிக்கப் போறியா?”
    “சேச்சே! இதுக்குப் போய் காசு குடுத்து என் மாமனார் வாங்கி வச்ச புக்கை நான் கிழிப்பேனா? சிம்பிள்… நாளைக்கு நான் கோயிலுக்கு வர மாட்டேன்… அவ்ளோ தான்…”
    அவள் சொல்லவும் கிழிந்தது போ என்று எண்ணிக் கொண்டவன் “ஐயோ தாயே… அப்பிடிலாம் அவசரப்பட்டு முடிவு பண்ணாத… கோவப்படாதிங்க அம்முக்குட்டி மேடம்… உங்களோட அருமை பெருமை தெரியாம கலாய்ச்சிட்டேன்” என சரணாகதி அடைந்தான்.
    “இட்ஸ் ஓகே… இனிமே இந்தத் தப்பு நடக்கக்கூடாது… அப்பிடி நடந்துச்சுனா நீங்க காலம் முழுக்க பிரம்மச்சாரியா இருந்துட்டு வயசானதுக்கு அப்புறம் காசி இராமேஸ்வரம்னு தேசாந்திரம் தான் போவிங்க… பீ கேர்புல்”
    “பார்றா.. இது நல்லா இருக்கே… நீங்க என்னைக் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்னு சொல்லிட்டா நான் ஏன் பிரம்மச்சாரியா இருக்கப் போறேன் மேடம்? உன்னை விட அழகா வேற ஒரு பொண்ணைப் பாத்து அதே முகூர்த்தத்துல கல்யாணம் பண்ணிப்பேன்டி முட்டக்கண்ணி”

    https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?threads/சாகரம்-6.5018/

    https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?threads/சாகரம்-7.5019/
    அமிர்தசாகரம்-5
    அவர் வருவதற்குள் விளையாட்டு முடிந்து ஹரிஹரனுடன் மற்றவர்கள் வீட்டுக்குள் சென்றுவிட அமிர்தா வழக்கம் போல ஆற்றின் படிக்கட்டுகளை நோக்கி செல்ல அவள் கையைப் பிடித்து நிறுத்தினார் ஜானகி.
    அவள் சாதாரணமாக “சொல்லுங்க ஜானு அத்தை” என்று கேட்கவும்
    “என்னடி உன் கிட்ட சொல்லணும்? வயசு பதினாலு ஆகுதுல்ல… இன்னும் என்ன சின்னகுழந்தை மாதிரி ஆம்பளை பையன் கூட சேர்ந்து விளையாடுற? பெரிய மனுசி ஆனதுக்கு அப்புறம் பொண்ணா அடக்கமா இல்லாம அதென்ன ஓனு கூப்பாடு போட்டு விளையாட்டு கேக்குது உனக்கு? இப்பிடி வாய் கிழிய கத்துனு சொல்லித் தான் உங்கம்மை உன்னை வளத்தாளோ?” என்று வசைமாரி பொழிந்தார் அவர்.
    அமிர்தாவிடம் இது வரை யாரும் இவ்வாறு பேசியதில்லை. அவளுடைய பெற்றோரும் சரி; தாத்தா வீட்டினரும் சரி, அம்மு என்று அழைத்து ஆதுரத்துடன் தான் பேசுவர்.
    ஆனால் இன்று ஜானகி நெருப்பாய் அள்ளிக் கொட்டிய வார்த்தைகளுக்கு அர்த்தம் புரியாவிடினும் ஜானகிக்குத் தன்னைப் பிடிக்கவில்லை என்பது மட்டும் அவளுக்குப் புரிந்துவிட்டது.
    அந்த எண்ணம் அவளது பிஞ்சு மனதில் காயமுண்டாக்க தனது கையை அவரிடமிருந்து பிடுங்கிக் கொண்டவள் கண்ணீருடன் திரும்ப அங்கே விஜயலெட்சுமி கல் போல இறுகிய முகத்துடன் நின்று கொண்டிருந்தார்.
    தோழிக்குத் தன் மீது கோபம் இருக்குமென்பது அவர் எதிர்பார்த்த விசயம் தான். ஆனால் இன்று தன் மகளிடம் ஜானகி அள்ளி வீசிய வார்த்தைகளை ஒரு தாயாக அவரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
    “இனிமே என் பொண்ணு உன் பையன் கூட விளையாட வர மாட்டா ஜானகி… ஏன்னா பிடிக்காதவங்க கிட்ட ஒதுங்கிக்கிறது அவளோட சுபாவம்… வேற எதையும் சொல்லி வளத்தேனோ இல்லையோ, இக்னோர் நெகடிவிட்டினு அழுத்தமா சொல்லி வளத்துருக்கேன்” என்று சொன்ன விஜயலெட்சுமி மகளை அழைத்துக் கொண்டு சென்றுவிட்டார்.
    அன்றைய தினம் முதல் அமிர்தவர்ஷினி வித்யாசாகர் இருக்கும் திசையில் கூட தலை வைத்துப் படுப்பதில்லை.
    https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?threads/சாகரம்-5.5017/
    #அமிர்தசாகரம் #நித்யாமாரியப்பன்
    அமிர்தசாகரம்-4
    சதாசிவமும் மீனாட்சியும் அவளை மகளாகவே நடத்தினர் எனலாம். ரகுநாதனும் வசதியான வீட்டுப்பிள்ளையைப் போல அலட்டிக் கொள்ளாது மனைவியைத் தன் சரிபாதியாய் மதிக்க அவர்களின் இல்லறம் நல்லறமாகப் போய் கொண்டிருந்த தருணத்தில் தான் விஜயலெட்சுமிக்கும் உன்னிகிருஷ்ணனுக்குமான காதல் மறைமுகமாய் இன்னும் தொடர்வதைக் கண்டுபிடித்தாள் ஜானகி.
    ஆனால் கடந்த முறை போல இம்முறை அவளது பேச்சைக் காதில் போட்டுக்கொள்ளவில்லை விஜயலெட்சுமி. காதலிப்பது ஒன்றும் உலகமகா தவறு அல்ல என ஜானகியிடம் வாதிட்டவள் உன்னிகிருஷ்ணனின் பெற்றோர் சமீபத்தில் ஒரு விபத்தில் தவறியதைக் கூறிவிட்டு “இப்போ அவருக்கு என்னோட துணை அவசியம் ஜானு” என்று சொல்லவே ஜானகி அதிர்ந்து போனாள்.
    ஆனால் அதை விட பெரிய அதிர்ச்சியாக ஒரே வாரத்தில் வீட்டில் திருமணப்பேச்சு எடுத்ததால் விஜயலெட்சுமி உன்னிகிருஷ்ணனைக் காதலிப்பதாகக் கடிதம் எழுதிவைத்துவிட்டு வீட்டை விட்டுச் சென்றுவிட்டாள்.
    அதன் பின்னர் அருணாசலத்தின் குடும்பத்தினர் வெளியே தலைகாட்ட முடியாது தவித்ததைப் பார்த்தும், அனேக மக்கள் ஜானகி தான் விஜயலெட்சுமி வீட்டை விட்டுச் செல்ல உதவியிருப்பாள் என கதை கட்டிவிட்டதைக் கேட்டும் ஜானகியின் மனம் புண்ணானது.
    வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுவது போல ஜானகியின் அன்னையும் தந்தையும் கூட விஜயலெட்சுமி செய்த காரியத்தில் மகளுக்குப் பங்கு இருக்குமென நம்பியது தான் உச்சபட்ச சோகம்.
    ஆனால் அச்சமயத்தில் கூட சதாசிவம் தம்பதியினரும், அருணாசலத்தின் குடும்பத்தினரும் ஜானகியை முழுவதுமாக நம்பினர்.
    அன்று அவர்கள் தன் மீது வைத்த அசையாத நம்பிக்கைக்காக தான் இன்று அந்த விஜயலெட்சுமியை அவர்கள் வீட்டுக்கு அழைத்துச் சீராட்டுவதையும், அவள் பெற்ற குட்டிச்சாத்தானைக் கொண்டாடுவதையும் பல்லைக் கடித்துக் கொண்டு பொறுத்தார் இன்றைய ஜானகி. பழைய நினைவுகளில் இருந்து கலைந்தவர் பூஜையறையில் அமர்ந்து கோளறு பதிகத்தைப் பாராயணம் செய்ய ஆரம்பித்தார்.

    https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?threads/சாகரம்-4.5015/
    #அமிர்தசாகரம் #நித்யாமாரியப்பன்
    அமிர்தசாகரம் - 3

    ஒரு நாள் சர்க்குலேசனில் மாதநாவல்களைக் கொடுக்கும் நபர் வழக்கத்தைக் காட்டிலும் சீக்கிரமாக வந்துவிடவே விஜயலெட்சுமி இன்னும் பத்து பக்கங்கள் முடிக்கவேண்டியதாய் இருக்க நேரே அந்நபரிடம் சென்று விவாதம் செய்ய ஆரம்பித்தாள்.
    ஏனெனில் காலையில் ஒருமணி நேரம் தாமதமாக தான் புத்தகங்களை அவர் கொடுத்திருந்தார்.
    “காத்தால ஒன் ஹவர் அந்த எட்டாம் நம்பர் வீட்டு மாமி கிட்ட பேசிட்டிருந்துட்டு லேட்டா தானே குடுத்திங்க.. ஒரு பத்து பக்கம் பேலன்ஸ் இருக்கு… இப்போவும் போய் அந்த மாமி கிட்ட பேசிட்டு வந்துடுங்க… நான் அதுக்குள்ள படிச்சு முடிச்சிடுவேன்”
    விஜயலெட்சுமியின் வெண்கலக்குரல் ஜானகியை வீட்டு வாயிலுக்கு இழுத்து வந்தது. அங்கே சர்குலேசன்காரருடன் அவள் வாதம் செய்து கொண்டிருக்க அக்காட்சியை நெற்றியில் சந்தனக்கீற்றுடன் புன்னகைமுகமாய் ரசித்துக் கொண்டிருந்த பக்கத்துவீட்டு இளைஞன் ஜானகியின் கண்ணில் பட்டுவிட்டான்.
    அவனது குடும்பத்துடன் கொல்லத்திலிருந்து இங்கே குடிபெயர்ந்திருப்பதாக அவளது அன்னை முன்பே கூறியிருந்ததால் அவனைப் பற்றி பெரிதாக யோசிக்கவில்லை ஜானகி.
    ஆனால் பல நாட்களுக்குப் பின்னர் திடீரென ஒரு நாள் கல்லூரி வகுப்பின் இடைவேளை நேரத்தில் அந்த இளைஞன் உன்னிகிருஷ்ணனைக் காதலிப்பதாக விஜயலெட்சுமி சொன்னதும் ஜானகி அதிர்ந்தாள்.
    “ஏன்டி விஜி உனக்குப் புத்தி இப்பிடி போகுது? மாமாவ அத்தைய பத்தி யோசிச்சுப் பாத்தியா? அந்த உன்னியோட வீட்டுல எல்லாரும் அசைவம் சாப்பிடுவாங்கடி… என்னமோ அக்கிரஹாரம்ங்கிறதால இங்க அடக்கி வாசிக்கிறாங்க… இந்தக் காதல், கண்றாவிய தலைமுழுகிட்டு நல்லப்பொண்ணா படிப்பை பாருடி… சரியான வயசுல அருணாசலம் மாமா நல்ல தமிழ்நாட்டு மாப்பிள்ளையா பாத்து மேரேஜ் பண்ணி வைப்பாரு… அந்த மலையாளத்தான் சகவாசம் வேண்டாம்டி”
    https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?threads/சாகரம்-3.5010/
    #அமிர்தசாகரம் #நித்யாமாரியப்பன்
    அமிர்தசாகரம் - 1, 2

    வழக்கமான குறும்புத்தனம் மேலிட அமிர்தவர்ஷினியிடம் குனிந்தான் அவன்.
    “ஏய் முட்டக்கண்ணி! ஏன்டி இவ்ளோ நேரம் வெயிட் பண்ண வச்ச? நானே எப்போடா என்கேஜ்மெண்ட் முடியும், இந்த வேஷ்டில இருந்து ஜீன்சுக்கு ஷிப்ட் ஆகலாம்னு காத்திட்டிருக்கேன்… இந்தம்மா திருவிழா தேர் மாதிரி ஆடி அசைஞ்சு அன்னநடை போட்டு மணமேடைக்கு வர்றா” என்று அவளைக் கேலி செய்ததோடு தனக்கும் வேஷ்டிக்குமான சண்டையையும் மறைபொருளாய் சொல்ல
    அவளோ “இதுக்குத் தான் கொஞ்சமாச்சும் வெயிட் போடணும்னு சொல்லுறது… ஃபிட்னெஷ்னு சொல்லிட்டுத் தலை வாருற சீப்பு மாதிரி உடம்பை வச்சிருந்தா வேஷ்டி இடுப்புல நிக்கலனு இப்பிடி தான் புலம்பணும்” என்று கேலி செய்ய
    “எல்லாரும் என்னை ஸ்மார்ட்டா இருக்கேனு சொல்லுறாங்க… உனக்கு மட்டும் நான் சீப்பு மாதிரி இருக்கேனா? நீ தான் பாக்க அம்பத்தஞ்சு கிலோ அரிசிமூட்டை மாதிரி இருக்க… ஏதோ காதலிச்சிட்டேனேனு பாவம் பாத்து உன்னை கல்யாணம் பண்ணிக்கச் சம்மதிச்சேன் தெரியுமா?” என்றான் வித்யாசாகர் அமர்த்தலாக.
    அமிர்தவர்ஷினிக்கு உடனே அவனது தாயாரைச் சம்மதிக்க வைக்க அவன் எப்படியெல்லாம் போராடினான் என்பது நினைவுக்கு வரவும் சிரிப்பை அடக்க அவள் அரும்பாடு பட வேண்டியதாயிற்று.

    https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?threads/சாகரம்-1.5006/

    https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?threads/சாகரம்-2.5009/
    #அமிர்தசாகரம் #நித்யாமாரியப்பன்
    அமிர்தசாகரம் - ரீரன் கதை நாளையில இருந்து எழிலன்பு நாவல்கள் தளத்தில் வழக்கமான நேரத்தில் வரும் மக்களே.
    சண்டைக்கார ஃபேமிலியில இருக்குற ரெண்டு பேரோட காதல் கதை. டெய்லி மானிங் 8 அண்ட் ஈவ்னிங் 6கு யூடிகள் கரெக்டா வந்துடும்... இப்ப டீசர் போட்டாச்சு..
    ********
    வித்யாசாகரைக் கண்டதும் “வித்தி நீயும் வர்றியாடா?” என ஹரிஹரன் வினவ சிறுவனின் விழிகள் ஹாலில் சந்தித்த மாடர்ன் அத்தையின் மகளைத் தேடியது.

    இல்லையென தோழனிடம் மறுத்த வித்தியாசகர் “விஜி அத்தையோட பொண்ணு வந்திருக்காளாமே… நான் காத்தாலயே அவளைப் பாக்கலடா ஹரி… இனிமே அவளும் நம்மளோட விளையாட வருவாளா என்ன? அவ எங்கடா போனா? நான் அவ கிட்ட பேசி ஃப்ரெண்ட்ஷிப் பிடிக்கணும்” என்று மூச்சுவிடாது கேட்க

    ஹரிஹரன் பின் கேட்டைக் காட்டி “அவ ஆறு பாக்கணும்னு சொன்னாடா… படிக்கட்டுல உக்காந்து தண்ணி ஓடுறத வேடிக்கை பாக்குறா” என்று கூற வித்யாசாகரும் தங்களின் புதிய விளையாட்டுத் தோழியைக் காணும் ஆர்வத்துடன் பின் கேட்டின் மறுபுறம் இருந்த கருங்கற்படிக்கட்டுகளை நெருங்கினான்.

    அங்கே ஒரு சிறுமி படிக்கட்டின் பக்கவாட்டுச்சுவரைப் பிடித்தபடியே அதை ஒட்டி ஓடும் தண்ணீரில் காலை வைத்து உள்ளே இறங்க முயன்று கொண்டிருந்தாள்.

    பெரியவர்களே போகத் தயங்கும் ஆழமான பகுதி அது. எனவே வித்யாசாகர் வேகமாகச் சென்று அவளின் கையைப் பற்றி மேலே இழுத்து வந்தான்.

    அச்சிறுமி திடீரென யாரோ கரம் பற்றி இழுத்து வந்ததில் மருண்டு விழித்தவள் அவனை பயத்துடன் நோக்க அவளது முட்டைக்கண்கள் விரிந்த விதத்தில் சத்தம் போட்டுச் சிரிக்க ஆரம்பித்தான் வித்யாசாகர்.

    அவள் இப்போது பயத்தை விடுத்து கண்ணை உருட்டி அவனை முறைக்கவும்

    “ஏய் முட்டக்கண்ணி முழியழகி! என்ன முறைக்குற? நீ முறைச்சா நாங்க பயந்துடுவோமா? நான் மட்டும் வரலனா நீ அந்த ஆழத்துல காலை வச்சு இந்நேரம் ஜலசமாதி அடைஞ்சிருப்ப” என்றான் கேலியாக.

    அவள் கண்களை விரித்து “அப்பிடியா? எனக்கு அங்க ஆழமா இருக்கும்னு தெரியாது” என்றவள் திடீரென முகத்தைச் சுளித்துவிட்டு “என் நேம் ஒன்னும் முட்டைக்கண்ணி முழியழகி இல்ல… அமிர்தவர்ஷினி” என்று சொல்லிவிட்டுப் பிடிவாதமாய் உதடு இறுக நின்றாள்.

    வித்யாசாகர் அவள் தலையில் தட்டியவன் “அஹான்… நீ தான் அமிர்தவர்ஷினினு எட்டூருக்கு நேம் வச்சிருக்கியே… அதை சொல்லிக் கூப்பிடுறதுக்குள்ள விடிஞ்சு போயிடும்” என்று அங்கலாய்க்க

    “அப்போ அம்முனு கூப்பிடுங்க… அந்த முட்டக்கண்ணி எனக்குப் பிடிக்கல” என்று மூக்கைச் சுருக்கு அவள் சொல்லும் போதே “வித்தி அண்ணா” என்ற கூவலுடன் மேகவர்ஷினி அங்கே ஓடி வந்தாள்.

    அங்கே இருவரும் நிற்பதைப் பார்த்தவள் வேகமாக அவர்களை நெருங்கி “வித்தி அண்ணா இவ தான் அம்மு அக்கா… அக்கா இவங்க என்னோட வித்தி அண்ணா” என்று பெரிய மனுஷி போல இருவருக்கும் பரஸ்பரம் அறிமுகப்படுத்தி வைத்தாள்.

    அமிர்தா மேகாவைப் பார்த்துச் சிரித்தவள் “இவங்க கூட தான் நீங்க எல்லாரும் விளையாடுவிங்களா? என்னையும் உங்க கூட சேர்த்துப்பிங்களா? வித்தி அ….” என்றவளின் வாயை அவசரமாகப் பொத்தினான் வித்யாசாகர்.

    “நீ என்னை அண்ணானு கூப்பிடக் கூடாது அம்மு…” என்று அவன் சட்டென்று சொல்லவும் அவள் புரியாது விழிக்க

    “இந்தக் குட்டிப்பசங்களுக்கு மட்டும் தான் நான் வித்தி அண்ணா… ஹரியும் சம்முவும் கூட என்னை வித்தினு தான் கூப்பிடுவாங்க… நீயும் வித்தினு கூப்பிடு… நீ இவ்ளோ பெரிய பொண்ணா இருந்துட்டு என்னை அண்ணானு கூப்பிட்டேனா எனக்கு என்னமோ வயசான ஃபீலிங் வருது… நீ என்னை அண்ணானு கூப்பிடா நானும் உன்னை முட்டக்கண்ணி முழியழகினு கூப்பிடுவேன்” என்று சொல்லிவிட அமிர்தா வேகமாக தலையாட்டி மறுத்தாள்.

    “நோ நோ! நான் உன்னை வித்தினு தான் கூப்பிடுவேன்”

    “ம்ம்.. குட் கேர்ள்…. இன்னைல இருந்து நீயும் எங்க டீம்ல ஒருத்தி… நாங்க நிறைய கேம் விளையாடுவோம்… உனக்கும் கத்துத் தருவோம்… உனக்கு என்ன கேம் விளையாடத் தெரியும்?” என்று கேட்க

    “எனக்கு கேரம், செஸ், கார்ட்ஸ் விளையாடத் தெரியும்” என்று பெருமையாய் உரைத்தாள் அவள்.

    மேகா அதைக் கேட்டு கண்ணை விரித்தவள் “வாவ்! சூப்பர்… உனக்குக் கிரிக்கெட் தெரியுமா அம்முக்கா?” என கேட்க அவள் தெரியாதென உதடு பிதுக்கினாள்.

    மேகாவும் வித்யாசாகரும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர்.

    “சரி விடு… உனக்கு எங்களோட ஸ்பெஷல் டைனோசர் கேம் விளையாடத் தெரியுமா?” என இருவரும் ஒரே குரலில் கேட்க அதற்கும் உதட்டுப்பிதுக்கல் தான் பதில்.

    வித்யாசாகர் பெருந்தன்மையுடன் “சரி… உனக்கு நான் கிரிக்கெட்டும் டைனோசர் கேமும் சொல்லித் தர்றேன்… நாளைல இருந்து நம்ம விளையாடுவோம்… நீ ஜூராசிக் பார்க் மூவி பாத்துருக்கியா?” என்று அவர்கள் விளையாட்டைப் பற்றி ஆர்வமாய் பேச ஆரம்பித்தான்.............
    https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?threads/முன்னோட்டம்.5001/

    #நித்யாமாரியப்பன் #அமிர்தசாகரம்
    உன்னில் இதயம் அளாவுதே - Final
    நாளைக்கு ஈவ்னிங் கதை நீக்கப்படும் மக்களே
    ********
    அகிலனின் மனம் மட்டும் பரிதாபப்பட்டது. புலம்பிக்கொண்டிருந்த பெருமாள் வரிசையில் பின்னே நின்று கொண்டிருந்த அகிலனைப் பார்த்துவிட்டார்.
    நிம்மதி அவனது முகத்தை மலர்ச்சியோடு வைத்திருந்தது அவரது கண்களுக்குப் புலப்படாமலா போகும்? ஒருவேளை இவனை மணந்திருந்தால் மகள் மகிழ்ச்சியாக இருந்திருப்பாளோ என நேரங்கெட்ட நேரத்தில் அவரது மனம் யோசிக்க அகிலனின் கரத்தை பற்றினாள் ஆனந்தி.
    “ஏன் அவரு உன்னை இப்பிடி பாக்குறாரு?” என குறை கூறும் தொனியில் கேட்டாள் அவள்.
    “பாவம்” என அவன் பரிதாபப்பட்டதும் ஆனந்திக்குச் சுர்ரென கோபம் வந்துவிட்டது. பட்டென அவனது கையை விட்டவள் முகத்தைத் தூக்கி வைத்தபடி வேறு பக்கம் பார்க்கத் துவங்கினாள்.
    வரிசை முன்னேறி செந்திலாண்டவனின் தரிசனம் கிடைத்த பிறகு நடந்த சம்பவத்தை மறந்து மனமுருக முருகனிடம் வேண்டிக்கொண்டாள்.
    சாந்தியும் சத்தமாகவே தனது வேண்டுதலை முருகனிடம் வைத்தார்.
    “அப்பா முருகா! என் மகனுக்கு நான் கேட்டமாதிரியே நல்ல வாழ்க்கைய அமைச்சு குடுத்துட்ட... வம்சம் தளைக்க ஒரு வாரிசையும் குடுத்துடுய்யா... அதை தவிர வேற என்ன வேணும் எங்களுக்கு?”
    அகிலன் அவரை ஒரு மாதிரியாகப் பார்க்க அதை கவனித்த ஆனந்தியோ
    “அத்தைய ஏன் அப்பிடி பாக்குற நீ? நானும் அதே வேண்டுதலை தான் வைக்கப் போறேன்... பிள்ளைனு ஒன்னு வந்தாலாச்சும் உனக்குக் கல்யாணம் ஆயிடுச்சுனு உன் புத்தியில உறைக்குதானு பாப்போம்” என்று அவனது காதில் கடுகடுத்தாள்.
    இப்படியாக சுவாமி தரிசனம் முடிந்து ஓய்வாக மண்டபத்தில் அமர்ந்தனர் அனைவரும். சுஜித்தும் சுஷாந்தும் ஓடிப் பிடித்து விளையாடிக்கொண்டிருந்தனர்.
    அகிலனை விட்டு விலகியமர்ந்தாள் ஆனந்தி. சாந்தியோ “கோவிலுக்கு வந்தாலும் நம்மளை பிடிச்சது கேடு விடாது போல” என அதிருப்தியாக முணுமுணுத்தார்.
    “விடுங்க மதினி... அவர் ஒரு பக்கம் இருந்தார்னா நம்ம ஒரு பக்கம் இருந்தோம்... அவர் கூட உறவு கொண்டாடவா போறோம்?” என அவரை மங்கை சமாதானம் செய்யும் போதே பெருமாள் அவர்களிடம் வந்தார்.
    அங்கிருந்த யாருக்கும் அவரது வருகையில் உவப்பில்லை. இருப்பினும் மரியாதைநிமித்தம் ஆவுடையப்பன் “வாங்க! நல்லா இருக்கீங்களா?” என குசலம் விசாரித்தார்.
    “நல்லா இருக்கேன்... நீங்க எல்லாரும் சவுக்கியமா?” என்றவரிடம் பதில் கூறப்போனவரின் கையை சாந்தி அழுத்திப்பிடித்து “நம்ம பிள்ளைய பேசுன பேச்சு எல்லாம் மறந்து போச்சா?” என்கவும் ஆவுடையப்பன் கப்சிப்பானார்.
    ஆனால் அகிலன் அவரிடம் பேச ஆரம்பிக்கவும் மருமகளை முறைத்தார் சாந்தி.
    அகிலன் எழுந்து பெருமாளை அழைத்துக்கொண்டு தனியே செல்லவும் சாந்தி பொறுக்கமாட்டாமல் வெடிக்க ஆரம்பித்தார்.
    “அந்த ஆளு கிட்ட இவன் என்ன பேசப்போறான்? ஏ ஆனந்தி, உன் புருசனை உன்னோட கட்டுப்பாட்டுல வச்சுக்க முடியாதா?” என மருமகளிடம் குதித்தார் அவர்.
    https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?threads/இதயம்-23-final.4996/
    #நித்யாமாரியப்பன் #உன்னில்இதயம்அளாவுதே
    உன்னில் இதயம் அளாவுதே Pre-final போட்டாச்சு மக்களே. மே1ல் கதை லிங் நீக்கப்படும். அதுக்குள்ள படிச்சிடுங்க.
    *******
    “சொல்லும்மா” என்றபடி அழைப்பை ஏற்றவனிடம் தைப்பூசத்திற்கு திருச்செந்தூர் செல்ல வேண்டுமென்றார் சாந்தி.
    “பொங்கலுக்கு வந்துட்டு மறுபடியும் லீவ் போட முடியுமாம்மா?” என அவன் சுணங்க
    “ரெண்டு நாள் லீவ் போடு அகில்... உனக்குக் கல்யணம் ஆச்சுனா உன்னையும் உன் பொண்டாட்டியையும் திருச்செந்தூருக்குக் கூட்டிட்டு வர்றதா வேண்டியிருந்தேன்” என்றார் சாந்தி.
    “அப்ப ஏன் தைப்பூசம் வரைக்கும் காத்திருக்கணும்? நான் அடுத்த சனிக்கிழமை டிக்கெட் போடுறேன்... ஞாயிறு அங்க வந்து அப்பிடியே திருச்செந்தூர் போயிட்டு சாயங்காலமே ரிட்டன் போற மாதிரி இருக்கும்... என்னால லீவ் போடமுடியாதும்மா” என அவன் சூழ்நிலையை விளக்கவும் சாந்தியும் புரிந்துகொண்டார்.
    ஆனந்தி சாப்பிட்டபடியே அவன் பேசியதைக் கவனித்துக் கொண்டிருந்தாள்.
    அழைப்பைத் துண்டித்தவன் “அடுத்த சண்டே கோவிலுக்குப் போறதுல உனக்கு எந்தப் ப்ராப்ளமும் இல்லையே?” என்று அழுத்தி வினவ
    “எனக்கு என்னடா பிரச்சனை?” என்றவள் அவன் ஊன்றிப் பார்க்கவும் விசயம் புரிந்து நாக்கைக் கடித்துக்கொண்டாள்.
    “புரியுது... அதுக்கு இன்னும் இருபது நாள் இருக்கு... நீ டிக்கெட் போடு”
    பின்னர் பேச்சை மாற்ற விரும்பியவளாக “நானும் திருச்செந்தூருக்குப் போய் ரொம்ப நாளாகுது அகில்... போன வருசம் கடையில வேலை பாத்த ஃப்ரெண்ட்ஸ் எல்லாரும் சேர்ந்து போனோம்... அதுக்கு அப்புறம் போகுறதுக்குச் சந்தர்ப்பம் அமையல” என்றாள் ஆனந்தி.
    “எதுவும் வேண்டுதல் இருந்துச்சுனா திருச்செந்தூர்ல செஞ்சுட்டு வந்துடலாம்” என்றவன் விசமப்பார்வையுடன் அவளது நீண்டபின்னலை இழுத்துக் குறிப்புக் காட்டவும் அவனது கையில் பட்டென அடித்தாள் ஆனந்தி.
    பதறிப்போனவளாக “சாமி விசயத்துல விளையாடாத எருமை... மனசால நினைச்சா கூட வேண்டுதலை செய்யணும்னு சொல்லுவாங்க... முருகா! நான் எப்பவும் முடிகாணிக்கை குடுக்கேன்னு வேண்டுடனதில்லப்பா... இவன் வேண்டுனான்னா இவனோட அக்கவுண்டுக்கு அதை மாத்திடு... என்னை விட்டுடு முருகா” என்று கரம் கூப்பி முருகனிடம் கோரிக்கை வைத்தாள்.
    அகிலன் நமட்டுச்சிரிப்போடு சாப்பிட ஆரம்பித்தான்.
    https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?threads/இதயம்-22-pre-final.4995/
    #நித்யாமாரியப்பன் #உன்னில்இதயம்அளாவுதே
    உன்னில் இதயம் அளாவுதே Pre-final போட்டாச்சு மக்களே. மே1ல் கதை லிங் நீக்கப்படும். அதுக்குள்ள படிச்சிடுங்க.
    *******
    “சொல்லும்மா” என்றபடி அழைப்பை ஏற்றவனிடம் தைப்பூசத்திற்கு திருச்செந்தூர் செல்ல வேண்டுமென்றார் சாந்தி.
    “பொங்கலுக்கு வந்துட்டு மறுபடியும் லீவ் போட முடியுமாம்மா?” என அவன் சுணங்க
    “ரெண்டு நாள் லீவ் போடு அகில்... உனக்குக் கல்யணம் ஆச்சுனா உன்னையும் உன் பொண்டாட்டியையும் திருச்செந்தூருக்குக் கூட்டிட்டு வர்றதா வேண்டியிருந்தேன்” என்றார் சாந்தி.
    “அப்ப ஏன் தைப்பூசம் வரைக்கும் காத்திருக்கணும்? நான் அடுத்த சனிக்கிழமை டிக்கெட் போடுறேன்... ஞாயிறு அங்க வந்து அப்பிடியே திருச்செந்தூர் போயிட்டு சாயங்காலமே ரிட்டன் போற மாதிரி இருக்கும்... என்னால லீவ் போடமுடியாதும்மா” என அவன் சூழ்நிலையை விளக்கவும் சாந்தியும் புரிந்துகொண்டார்.
    ஆனந்தி சாப்பிட்டபடியே அவன் பேசியதைக் கவனித்துக் கொண்டிருந்தாள்.
    அழைப்பைத் துண்டித்தவன் “அடுத்த சண்டே கோவிலுக்குப் போறதுல உனக்கு எந்தப் ப்ராப்ளமும் இல்லையே?” என்று அழுத்தி வினவ
    “எனக்கு என்னடா பிரச்சனை?” என்றவள் அவன் ஊன்றிப் பார்க்கவும் விசயம் புரிந்து நாக்கைக் கடித்துக்கொண்டாள்.
    “புரியுது... அதுக்கு இன்னும் இருபது நாள் இருக்கு... நீ டிக்கெட் போடு”
    பின்னர் பேச்சை மாற்ற விரும்பியவளாக “நானும் திருச்செந்தூருக்குப் போய் ரொம்ப நாளாகுது அகில்... போன வருசம் கடையில வேலை பாத்த ஃப்ரெண்ட்ஸ் எல்லாரும் சேர்ந்து போனோம்... அதுக்கு அப்புறம் போகுறதுக்குச் சந்தர்ப்பம் அமையல” என்றாள் ஆனந்தி.
    “எதுவும் வேண்டுதல் இருந்துச்சுனா திருச்செந்தூர்ல செஞ்சுட்டு வந்துடலாம்” என்றவன் விசமப்பார்வையுடன் அவளது நீண்டபின்னலை இழுத்துக் குறிப்புக் காட்டவும் அவனது கையில் பட்டென அடித்தாள் ஆனந்தி.
    பதறிப்போனவளாக “சாமி விசயத்துல விளையாடாத எருமை... மனசால நினைச்சா கூட வேண்டுதலை செய்யணும்னு சொல்லுவாங்க... முருகா! நான் எப்பவும் முடிகாணிக்கை குடுக்கேன்னு வேண்டுடனதில்லப்பா... இவன் வேண்டுனான்னா இவனோட அக்கவுண்டுக்கு அதை மாத்திடு... என்னை விட்டுடு முருகா” என்று கரம் கூப்பி முருகனிடம் கோரிக்கை வைத்தாள்.
    அகிலன் நமட்டுச்சிரிப்போடு சாப்பிட ஆரம்பித்தான்.
    https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?threads/இதயம்-22-pre-final.4995/
    #நித்யாமாரியப்பன் #உன்னில்இதயம்அளாவுதே
    உன்னில் இதயம் அளாவுதே-21
    மறுநாள் விடியலில் சூரியனை மேகம் கடத்தி போய்விட்டது. வானமெங்கும் போர்க்களத்தில் முன்னேறும் சிப்பாய்களைப் போல கருமேகங்கள் அணிவகுப்பு நடத்திக்கொண்டிருந்தன. எப்போது வேண்டுமானாலும் மழையானது ஆரம்பிக்கலாம் என தூறல்களை அம்பாக எய்து அவை கட்டியம் கூறிக்கொண்டிருந்தன.
    பொதுவாக மழைக்கால விடியல்கள் சோம்பேறித்தனத்தை நமக்குள் குவித்துவிடும். நடக்கும் தரையில் ஆரம்பித்து மூடியிருக்கும் போர்வை வரை குளிர் தனது ஆதிக்கத்தைச் செலுத்தும். நாசியிலோ மண்வாசனை நிரடும். குருட்டு வெளிச்சத்தில் ஊரே எண்பதுகளில் எடுக்கப்பட்ட விண்டேஜ் புகைப்படம் போல காட்சியளிக்கும்.
    இப்போது மணவாளநகரின் சீதோஷ்ணமும் மேற்கூறியவற்றை பிரதிபலித்தது. எப்போதும் சுறுசுறுப்பாக எழுந்துவிடும் ஆனந்தியே இன்னும் போர்வைக்குள் சுருண்டு கிடந்தாள்.
    அகிலனைப் பற்றி கேட்கவே வேண்டாம். நள்ளிரவு வரை வேலை செய்த அலுப்பில் மனைவியின் அருகாமை கொடுத்த வெம்மை இதமாக இருக்க அதை அனுபவித்தபடி உறக்கத்தில் ஆழ்ந்திருந்தான்.
    இரும்பு கேட்டை யாரோ ஆட்டும் சத்தம் கேட்டு ஆனந்தி விழித்துக்கொண்டாள்.
    பால்காரராகத் தான் இருக்கவேண்டுமென எழுந்தவள் அவளது இடையோடு ஒட்டிக்கொண்டு கிடந்த அகிலனை விலக்காமல் தன்னால் முழுவதுமாக எழுந்து செல்ல முடியாது என்பது புரியவும் அப்படியே அமர்ந்துவிட்டாள்.
    ஜன்னல் வழியே லேசாக மழைச்சாரல் அவன் மீது தெறித்ததும் “ம்ம்” என்றபடி இன்னும் இறுக்கமாக அவளது வயிற்றில் முகம் புதைத்துக்கொண்டான்.
    ஆனந்தி மெதுவாக அவனது கன்னத்தில் தட்டினாள்.
    “அகில் கொஞ்சம் தள்ளி படுடா... பால் பாக்கெட் எடுத்துட்டு வரணும்”
    அவனோ அவளது குரல் கேட்டதும் “ம்ம்” என்றானே தவிர ஒரு இன்ச் கூட விலகவில்லை.
    “அகில்”
    இப்போது முதுகில் தட்டினாள்.
    “த்சூ! தூங்க விடுடி”
    தூக்கத்தில் குழறலாக குரல் வந்தது.
    “நீ தூங்கு... ஆனா என்னை எழுந்திரிக்க விட்டுட்டுத் தூங்கு... அகில் நல்லப்பையன்ல... பால் பாக்கெட்டை எடுக்கலனா காக்கா எதுவும் வந்து கொத்தி பால் வீணா போயிடும்... இன்னைக்குனு பாத்து நான் உறை குத்தல அகில்”
    கதை கதையாய் கூறி அவனை எழுப்ப முயன்றவளின் குரல் அகிலனின் காதில் தாலாட்டாக விழுந்தது போல.
    இடுப்பை வளைத்திருந்த ஒரு கரத்தை உயர்த்தி அமர்ந்திருந்தவளை தன்னோடு சேர்த்து அணைத்துக்கொண்டான்.
    ஆனந்தி இடை வரை மடங்கி அவனது சிகையில் முகம் புதைத்தவள் இப்படியே இருந்தால் தனது அன்றாட அலுவல் கெட்டுவிடுமென அவனை விட்டு வேகமாக விலகினாள்.
    https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?threads/இதயம்-21.4986/
    #நித்யாமாரியப்பன் #நித்யாமாரியப்பன்
  • Loading…
  • Loading…
  • Loading…
Top Bottom