• Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
    - legal team, Ezhilanbu Novels
  • கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

பேரரளி அவர்கள் எழுதிய "பூ பூக்கும் ஓசை"

அன்புள்ள பேரரளி பூவே,

காதலித்து திருமணம் செய்வதில் உள்ள நல்லது கெட்டது பற்றி எடுத்துரைக்கும் விதத்தில், அழகிய குடும்ப கதை தந்த பேரரளி பூ ஆசிரியருக்கு என் அன்பு கலந்த பாராட்டுக்கள்.

தங்கையின் பதிவு திருமணத்தை, தற்செயலாக நேரில் காணும் தமக்கை, இளஞ்சோடிகள் சொல்லும் Reason, வீட்டில் உள்ளவர்களின் Reaction, என்று கதை நகர்கின்றது.

பிரச்சனையை பூர்ணா கையாண்ட விதம் நிமிர்வாக இருந்தது. அதிலும், பெற்றவர்களின் மனநிலை பற்றி சதா சர்வகாலமும் கவலை கொண்டவளாக இருந்ததைப் படிக்கும் போது, கண்கள் பனித்தன. எத்தனை அழகான பாசம்.

அதே சமயத்தில், அத்தனை நிமிர்வான பெண், பதிவாளர் அலுவலகத்தில், மணமகன், அவன் நண்பர்கள், அலட்சியமான போக்கை கண்கூடாகப் பார்த்தும், ஏன் தங்கையின் நலனைக் கருத்தில் கொண்டு பதிவு திருமணத்தை நிறுத்தவில்லை என்றும் யோசிக்கத் தோன்றியது ஆத்தரே.

சத்யதேவ், கதையின் தொடக்கம் முதல் இறுதி வரை சத்திய சோதனைக்கு உள்ளாகும் வகையில் அவனை நன்றாக வைத்து செய்துவிட்டீர் ஆத்தரே!
அவன் வாழ்க்கையில் சந்தித்த சவால்களும், நன்மை செய்ய போய், ஒவ்வொரு முறையும் பழி சொல்லுக்கு ஆளாவதும், அந்த அனுபவத்தில் பக்குவப்பட்ட அவன் உள்ளமும் அழகாக இருந்தது. அவன் அப்பா அம்மா கதாபாத்திரங்கள் கூட A1 ஆத்தரே. கலகலப்பான குடும்பம்.

சூரியா கதாபாத்திரமும் மிகவும் எதார்த்தமான ஒன்றாக இருந்தது. அவன் சிறுபிள்ளைத்தனமாக யோசித்து செயல்பட்டாலும், எந்த இடத்திலும் அவன் மேல் கோபம் வரவில்லை. பூர்ணா அவனிடம் வெளிப்படையாக பேசாததால் தான் பிரச்சனைகள் நீடித்தது என்று எனக்குத் தோன்றியது.

அடுத்து சரவணன்...அம்மாடியோ! எங்கே பிடிச்சுங்க ஆத்தரே இவனை....அவனால் கதைக்குத் திருப்புமுனை வரும் என்று யூகித்தேன்...ஆனால் இவ்வளவு terrorஆன Twist கொடுப்பீங்கன்னு கனவிலும் எதிர்பார்க்கவில்லை. அவன் செயலைப் படித்தபோது 80s movie Climax பார்த்த உணர்வு.
🤦‍♀️
🤦‍♀️
🤦

காதல் ஜோடிகள் சொன்ன காரணம் ஏனோ என்னால் ஏற்கமுடியவில்லை. அந்த இடத்தில் வேறு யாராவது தங்களுடன் இருந்திருந்தால், இப்படித்தான் நடந்து இருப்பார்களா என்று கேட்க தோன்றியது.(இது என் தனிப்பட்ட கருத்து மட்டுமே ஆத்தரே!)

அது படிப்பவர்கள் கண்ணோட்டத்திற்கு ஏற்ப மாறுபடும் என்பதால் தான், அக்காரணம் என்ன ஏது என்று இங்கு வெளிப்படையாக விமர்சிக்கவில்லை.
நட்போடும், பரந்த மனப்பான்மையோடும் பழகும் பெற்றோரிடம், கலை மனம்திறந்து பேசியிருந்தால் ஆவது கொஞ்சம் ஆறுதலாக இருந்திருக்கும். பிரிந்த உறவுகள் சேர்ந்த பின்னும், பெற்றொர் தான் பெருந்தன்மையுடன் மன்னித்து உறவாட முன் வந்தார்கள். கலை, விக்னேஷ் இருவரும் சந்தர்ப்பவாதிகள் என்று தான் தோன்றியது.

பூரணாவிற்குத் தாங்கள் பார்த்த வரன் சரியில்லை என்று பெற்றோர் குற்றவுணர்ச்சியில் தத்தளிக்கும் சூழலையும் கதையில் தவிர்த்திருக்கலாம் என்பது என் தனிப்பட்ட எண்ணம். ஏனென்றால் அதுவும், காதல் திருமணத்தை நியாயப்படுத்தும் அலட்சியமான சில இளைஞர்கள், பெற்றோரை குறைகூற ஏதுவாக இருப்பது போல தோன்றியது.

ஸ்ரீநிதி துள்ளலான பெண். அவளை நல்வழியில் நடத்திய சத்யா, சத்யாவின் நண்பன், பூர்ணா அனைவரும் அருமை. இந்தச் சுட்டிப்பெண் அலப்பறைகளை இரண்டாம் பாகத்தில் காண ஆவலாக உள்ளேன்!
முதல் அத்தியாயத்தில், நீங்கள் வர்ணித்த பேருந்து பயணம் செம்ம சூப்பர் ஆத்தரே. வெளிநாட்டில் வாழும் எனக்கு, அது என் பொன்னான கல்லூரி நாட்களை நினைவூட்டியது.

பணிக்குத் திரும்பிய பூர்ணா மட்டுமில்லை; நானும் தான் வியந்தேன்....மேலதிகாரியை பார்த்ததும். அதுவும் நல்ல Twist ஆத்தரே!

மொத்தத்தில் காதலிக்கும் இளைய தலைமுறையினர், பெற்றோரின் ஸ்தானத்திற்கும், வயதிற்கும் மரியாதை தந்து செயல்படுவதும், செயல்படாததும் காட்டும் விதமாக இரண்டு சகோதரிகள், அவர்களுடைய காதலர்கள் பற்றிய கதை தந்த பேரரளி பூ இப்போட்டியில் வெற்றி பெற என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

என்றும் அன்புடன்,
வித்யா வெங்கடேஷ்.

@பேரரளி
 
பேரரளி

✍️
Writer

Thank u so much for ur wonderful review sis.🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩
 
New Episodes Thread

Top Bottom