• Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
    - legal team, Ezhilanbu Novels
  • கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

மௌவல் மலர் அவர்கள் எழுதிய "அவ(ளி)னின்றி அமையாது என் உலகு"

அன்புள்ள மௌவல் மலரே!

இது கதைக்கான விமர்சனம் என்பதைத் தாண்டி, கதையில் என் மனதைக் கவர்ந்த விஷயங்கள் பற்றியும், கதாபாத்திரங்கள் பற்றியும் உங்களுடன் பகிர்கிறேன் சகி.

வாழ்க்கை என்பது ரோஜாப் பூவின் இதழ்களால் ஆன மெத்தை இல்லை; அதில் முட்களும் இருக்கும் என்று உணர்த்தும் வகையில் அழகான குடும்ப கதை தந்த ஆசிரியருக்கு என் அன்பு கலந்த பாராட்டுக்கள்.

காயங்களைப் பற்றி பேசுவதாலும் புலம்புவதாலும் மட்டும் என்ன ஆகிவிடப்போகிறது என்று தெளிந்த மனதோடு நிமிர்வாக வாழ்க்கையைக் கடக்கும் நாயகி பிருந்தா அற்புதம்.

காயப்பட்ட உள்ளத்தின் ரணம் ஆற, காலம் தான் சிறந்த மருந்து என்ற நிதர்சனத்தை முழுமையாக உணர்ந்து அவ்வழியிலேயே செயல்படும் இதய அறுவை சிகிச்சை நிபுணர் கிருஷ்ணா குணம் அட்டகாசம்.

மலையளவு காதல் இருந்தும், தன் காதல் கைக்கூடுமா என்று அம்மாவிடம் புலம்பியும், கிருஷ்ணா அதைப் பற்றி பெரிதும் கவலை கொள்ளாதவனை போல ஆசைகளை மனதில் புதைத்து, நிதானம் கடைப்பிடித்து, பிருந்தாவிடம் பேசிப்பழகியது, வசீகரிக்கும் விதமாக இருந்தது. அதிலும், அவள் மனசஞ்சலங்கள் அறிந்து, நட்போடு பழகலாம் என்று திருமணத்திற்குப் பின்னும் வலியுறுத்தியது அழகோ அழகு.

பார்க்கும் வரன் எல்லாம் தட்டிக்கழிக்கும் மகன் மீது எந்தளவுக்கு ஆத்திரம் கொண்டாளோ, அதற்கும் ஒரு படி மேலாக அவன் விருப்பங்களுக்குச் செவிசாய்த்து ஆதரவு தந்த தாய் செண்பகம் செம்ம நட்பே! (இக்கதையிலேயே எனக்கு மிகவும் பிடித்த கதாபாத்திரம்🤗🤗🤗).

வயதுக்கு மீறின குடும்ப பிரச்சனைகளை நேரில் கண்டபோதிலும், துணிந்து எதிர்கொண்டு சமாளித்தும், அக்கா மேல் அளவுகடந்த அன்பும் கொண்டு செயல்படும் விஷ்ணு வியத்தகு உள்ளம்.

நண்பர்கள் கிரி, அஞ்சலி அலப்பறைகள் அம்மாடியோ ஆத்தரே! மருத்துவர்கள் என்றால், இறுகிய முகத்துடன், தீவிர சிந்தனையில் சஞ்சரித்து இருப்பவர்களாகச் சித்தரிக்கும் வழக்கத்திற்கு மாறாக, நீங்கள் அவர்களை முழுக்க முழுக்க குறும்பும், நகைச்சுவையும் நிறைந்தவர்களாகக் காட்டியது அழகாக இருந்தது.

கதைக்கருவின் அழுத்தத்தைத் தளர்த்தும் விதத்தில், அவர்களின் அரட்டையும் செல்லச்சண்டைகளும் கதையின் நகர்வில் இதமாகவே இருந்தது. அவர்கள் உரையாடல்கள் எழுதிய உங்கள் கற்பனைக்குச் சிறப்பு பாராட்டுக்கள்.

அதிலும் பிருந்தா பற்றி கவலைகொண்ட கிருஷ்ணாவும், விஷ்ணுவும் அறை வாசலில் நடைப்பயில்வதை கிரி கிண்டல் செய்வானே...அது செம்ம ஆத்தரே!!!:ROFLMAO::ROFLMAO:

நம்பிக்கையின் வலிமையும், அது அளவில்லாமல் கிடைக்கும் போதும், இரக்கமில்லாமல் பறிக்கப்படும் போதும் ஏற்படும் நன்மை தீமைகளை உணர்த்தும் வகையில் மிகவும் எதார்த்தமான குடும்ப கதை தந்த ஆசிரியர் இப்போட்டியில் வெற்றி பெற என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
💐
💐
💐

என்றும் அன்புடன்,
வித்யா வெங்கடேஷ்.

@மௌவல் மலர்
 
வாவ் அருமையான விமர்சனம் சகி ரொம்ப சந்தோஷமா இருக்கு..😍😍😍😍
 
New Episodes Thread

Top Bottom