• Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
    - legal team, Ezhilanbu Novels
  • கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

ஊதாப்பூ அவர்கள் எழுதிய "உயிரில் மெய்யாகவா"

அன்புள்ள ஊதாப்பூவே,

இது கதைக்கான விமர்சனம் என்பதைத் தாண்டி, கதையில் என் மனதைக் கவர்ந்த விஷயங்களையும், கதாபாத்திரங்கள் பற்றியும் உங்களுடன் பகிர்கிறேன் சகி.

ஒரு வரியில் கதைப் பற்றி சொல்ல வேண்டுமென்றால், என் மனதைக் கொள்ளைக்கொண்ட கதை நட்பே! ஒவ்வொரு அத்தியாயத்திலும் எதார்த்தமும் நேர்மறை உணர்வுகளும் அள்ளஅள்ள குறையாமல் தந்துள்ளீர்.🤗

"உயிரில் மெய்யாகவா!" தலைப்பிற்கு நீங்கள் தந்த விளக்கத்தில் மெய்மறந்து போனேன் தோழி. 🤗🤗(அது என்ன, எங்கே உள்ளது என்பதை இங்கு சுட்டிக்காட்டி, கதையின் சஸ்பென்ஸ் உடைக்க விரும்பவில்லை)

இரு வேறு ஜாதியை சேர்ந்தவர்கள் காதலில் விழுவதும் அதனால் அவர்கள் எதிர்கொள்ளும் சவால்களும் என்ற வழக்கமான கதைக்கரு எடுத்தாலும், அதை இப்படியும் அழகாக எழுதலாம் என்று நிரூபித்த உங்கள் கற்பனைக்குத் தலை வணங்குகிறேன்.:love:

ராகவியின் ஊசாலடும் மனம், அவள் பெற்றவர்களின் கோபம் எல்லாம் மிகவும் நியாயமாக இருந்தது. திவாகரின் பெற்றோரும் தங்களுடைய மத சம்பிரதாயங்களை மதித்ததும், அதே சமயத்தில் மகனின் இக்கட்டான சூழ்நிலை புரிந்துகொண்டதும் மிகவும் இயல்பாக இருந்தது.

திவாகர் துணிச்சல் செயல்களுக்கும், பொறுமைக்கும் எந்தப் பெண் தான் மயங்கமாட்டாள் என்பது போல நீங்கள் அவனை நீங்கள் சித்தரித்ததை வர்ணிக்க வேண்டுமென்றால், எழுதிக்கொண்டே போகலாம். 🤗

காதல் மன்னாகவும், காக்கும் கணவனாகவும், கணித ஆசிரியராகவும், கரிசனத்தின் மறுஉருவமாகவும் திவாகரின் குணம் சூப்பரோ சூப்பர். :love:

மூன்று இடங்களில் அவன் மேல் கோபம் வந்தது. இவனும் சராசரி ஆண் தானோ என்று பிடிக்காமலும் போனது. ஆனால் என் உணர்வுகளைப் படித்தது போல, நீங்களே தொடர்ந்து வந்த காட்சிகளில் பதில் அளித்துவிட்டீர். 🤗

1.பெற்றவர்கள் மனம்மாறும்வரை எத்தனை காலம் வேண்டுமானாலும் காத்திருப்பேன் என்றவன், ராகவியை திடுதிப்பென்று மணந்துகொள்வான் என்று நினைக்கவில்லை.

ஆனால், அவள் மனநிலை அறிந்து தன் பெற்றோரிடமும் தள்ளி இருக்கச் சொல்லி, அவளுக்கான ஸ்பேஸ் கொடுத்தது அழகு. அவன் பெற்றோரின் செயலும் அருமை.

"வீட்டுப் பிரச்சனையை ஊர் பிரச்சனையாக்கியது ரத்தினம்" என்று நெற்றி அடிக்கொடுத்ததும் செம்ம!

2. நாளிடைவில், வேலைபளு, அது இது என்று காரணம் சொல்லி, அவன் ராகவியின் ஏக்கங்களைச் சரியாகப் புரிந்துகொள்ளவில்லை என்று அவன்மேல் காண்டு ஏறியது.
(மை மைண்ட் வாய்ஸ்: டேய் திவாகரா! காதலிக்கும் போது இருந்த புரிதல், பொறுமை எல்லாம், மனைவி என்றானதும் எங்கடா போச்சு! அவள் சங்கடம் புரியாமல் அலட்சியம் செய்யறியே; பக்கத்தில் இருப்பதால் அவள் அருமை புரியலையா; ஆசை அறுபது நாள்; மோகம் முப்பது நாள் என்று நீயும் மற்றவர்களைப் போலத்தானா என்று ஏசினேன்!)

ஆனால், அவளுக்கு ஒரு பிரச்சனை என்றதும் துடிதுடித்துப் போனவன், இதே வசனத்தைத் தனக்குத் தானே சொல்லிக்கொண்டு வருந்தும்போது உணர்ச்சிப்பூர்வமாக இருந்தது!
(அப்போது என் மைண்ட்வாய்ஸ்: அடடா திவாகரா! உன்னைத் தப்பா நெனச்சிட்டேன் டா! மன்னிச்சிரு என்று சொல்லத் தோன்றியது!

3. ராகவி வேலைக்குச் செல்ல விரும்புவதாகச் சொன்னபோது, அவன் வேண்டாமென்று மறுத்த காரணம் அழகு தான். பணம் சம்பாதிப்பதைத் தாண்டி, பெண்களுக்குத் தன்னம்பிக்கை வளரும் விதமாக, கணவர்கள் அவர்களை வேலைக்குச் செல்ல அனுமதிக்க வேண்டும் என்பது என் கண்ணோட்டம்.

அதையும் திவாகர் அழகாகப் பேசி மனதைக் கொள்ளைகொண்டான்.🤗

(என் தனிப்பட்ட கருத்து: இருந்தாலும் அவள் ஆசிரியையாகவே பணிபுரியும்படி செய்திருக்கலாம்...ஏனென்றால் ஆசிரியர் பணி மீது எனக்குக் கண்மூடித்தனமான காதல்:giggle:)

உங்கள் எழுத்தில் எனக்கு ரொம்பவும் பிடித்த ஒரு விஷயம் என்றால், நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த ஆண்மகன் காதலிக்கும் போது, பணம் விஷயத்தில் அவனுக்குப் பொறுப்புகளும் கூடும் என்று கதை முழுவதும் நீங்கள் வலியுறுத்தியது அருமை.

திவாகர் அவள் அறையின் பரப்பளவு சுட்டிக்காட்டி கவலைகொள்வது, சான்றிதழ்கள் மட்டும் கேட்பது, தங்கச்சங்கிலி அடகு வைப்பது, அதற்கு அவன் சொல்லும் காரணம், கடைசியில் "ஆயிரங்களில் செலவு செய்து" தன்னவளை மீட்பது அனைத்தும் எதார்த்தம் என்றால், ஒவ்வொரு தருணத்திலும் அதை உணர்ந்து விட்டுக்கொடுக்காமல் பேசும் ராகவியின் குணம் மிகவும் உயர்ந்தது.

Last but not the least; கதையில் நாம் அறிமுகம் செய்யும் ஒவ்வொரு கதாபாத்திரத்தின் தேவையும் நியாயப்படுத்த வேண்டும் என்ற மற்றொரு விஷயத்தையும் மிக அழகாக உங்கள் கதையில் உணர்த்திவிட்டீர்.
சுகன்யா புரிதல் அழகு என்றால், தர்ஷினி விவேகமும் அற்புதம். ஒரே ஒரு காட்சியில் தான் மருத்துவர் வந்தார் எனினும், அவர் சொன்ன விஷயம் மிகவும் ஆழமானது; ஒவ்வொருவரையும் சிந்திக்க வைப்பது.🤗
(அதையும் விவரமாக இங்கு சொல்லி சஸ்பென்ஸ் உடைக்க விரும்பவில்லை)

நற்சிந்தனைகள் நிரம்பிய அழகிய கதை தந்த ஆசிரியர் இப்போட்டியில் வெற்றிபெற என் அன்பு கலந்த பாராட்டுக்கள்.💐💐💐

என்றும் அன்புடன்,
வித்யா வெங்கடேஷ்.

@ஊதாப்பூ
 
Last edited:

ஊதாப்பூ

✍️
Writer

மிக்க நன்றிகள் தோழி....
உங்கள் மனமார்ந்த பாராட்டுக்கு வந்தனம்...💜💜💜💜💜💜
 
New Episodes Thread

Top Bottom