• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

💘 முன்னோட்டம் 💘

Nithya Mariappan

✍️
Writer
💘காதல் கொண்டேனடி கண்மணி - முன்னோட்டம்💘

“அதுல்லாம் சரி! நீ என்ன என்னைக்கும் இல்லாத திருநாளா கோயிலுக்கு வந்திருக்க?” என்று கேட்டார் அன்னபூரணி.

தனது துப்பட்டாவை நீவியபடியே “ஏன் பாட்டி உனக்குத் தெரியாதா? நான் வருசாவருசம் இந்த ஒருநாள் கோயிலுக்கு வர்றது தெரிஞ்சும் நீ இப்பிடி கேக்கிறியே? உன்னைலாம் மிஸ்டர் நாதன் எப்பிடி இத்தனை வருசம் வச்சுக் காப்பாத்துனாரோ? அவருக்கு அவார்ட் குடுக்கணும்” என்று கேலியாய் உரைத்தாள் பவானி.

சொன்னபடியே இந்த நாள் அவளுக்கு மிகவும் முக்கியமானது! அந்த நாளில் பிறந்தவனுக்கு அவளது மனதில் உள்ள இடம் எவ்வளவு முக்கியமானதோ அவ்வளவு முக்கியமானது இந்நாளும்!

அதை அன்னபூரணியும் அறிவார்! ஆனால் இதைச் சொல்லும் போது பேத்தியின் கண்ணில் ஜொலிக்கும் ஆர்வம் அவருக்குக் காண காண சலிக்காது.

பவானி சுவாமிநாதனிடம் “ஏன் தாத்தா அந்தக் கடமை கண்ணாயிரம் இன்னைக்குக் கூடவா ஆபிசுக்கு லீவ் போடல? அது சரி! எந்த வருசம் தான் லீவ் போட்டாரு உங்க பேரன்?” என்று சத்தமாய் சொன்னவள்​

“க்கும்! இன்னைக்கு இங்க வந்திருந்தா என் கையால விபூதி வச்சு விட்டுருப்பேன்… வழக்கம் போல நான் வருவேனு தெரிஞ்சு பார்ட்டி எஸ்கேப் ஆயிடுச்சு போல” என்று மனதிற்குள் நொடித்துக் கொண்டாள்.

💞💞💞💞💞

அவன் தான் அவள் தேடி வந்தவன்! வேலைநேரத்தில் யாரும் இடையிட்டால் அவனுக்குப் பிடிக்காது. பிறந்தநாளும் அதுவுமாய் அவனைக் கோபமாய் பார்க்க விரும்பாதவள் விறுவிறுவென அந்த அறைக்குள் நுழைய இருட்டில் எதிலோ இடித்துக் கொண்டு கீழே விழப் போக அதற்குள் அவளைத் தாங்கின இரு கரங்கள்.

அதோடு அந்தக் கரங்களுக்குச் சொந்தக்காரன் “லைட் ஆன் பண்ணுங்க” என்று சொல்லவும் அறையின் விளக்குகள் ஒளிர்ந்தன. தனது கரத்தில் சரிந்திருந்தவளை நேரே நிறுத்திவிட்டு மற்றவர்களிடம் “எல்லா விசயமும் நான் சொல்லி முடிச்சிட்டேன்… ஆல் ஆப் யூ மே கோ பேக் டூ யுவர் சீட்” என்று அழுத்தமாய் கட்டளையிட சில நிமிடங்களில் அந்த கான்பரன்ஸ் ஹால் காலியானது.

அனைவரும் சென்ற பிறகு அவளிடம் கோபத்தைக் காட்ட முயன்றவனாய் “வாட் இஸ் திஸ் பவா? முக்கியமான விசயம் பேசிட்டிருக்கிறப்ப ஏன் இண்டர்பியர் பண்ணுற?” என்று அழுத்தமாய் கேட்க

“நான் நேத்து கால் பண்ணுனப்போ கோயிலுக்கு வருவேனு சொல்லிட்டு இன்னைக்கு வராம ஏமாத்துனதுக்கு உங்களுக்குப் பனிஷ்மெண்ட் இது தான்!” என்று சொன்னவளின் பேச்சைக் கேட்டவன் தனது சிகையைக் கோதிக் கொண்டபடி நிற்க அவனை வைத்த கண் அகற்றாமல் நோக்கினாள் பவானி.

ஆழ்ந்த குரலில் “சிவா கோவமா? ப்ளீஸ்! என்னைப் பாருங்க” என்று சொன்னவளிடம் அவனாலும் கோபப்பட இயலாது போக அவள் புறம் திரும்பினான் அந்தச் சிவா என்று அழைக்கப்பட்ட சிவசங்கர். அவளை விட நான்கு வயது மூத்தவன்.

💝💝💝💝

அதில் அமைச்சரின் சார்பில் வாதிட்ட ஜெகத்ரட்சகன் தனது ஜூனியர்களை வைத்து சாட்சிகளை இறுதி நேரத்தில் கவிழ்த்துவிட்டதாக உறுமித் தீர்த்தான் சிவசங்கர்.

“நேர்மைங்கிற வார்த்தைக்கு ஸ்பெல்லிங் கூட தெரியாத மனுசன்… கருப்பு கோட் போட்டு போட்டு மனசு முழுக்க கருப்பா மாறிடுச்சு அவருக்கு… அந்த மினிஸ்டர் எலும்புத்துண்டு மாதிரி வீசுற பணத்துக்காக எந்த எல்லைக்கு வேணும்னாலும் போவாரு அந்த மனுசன்… அவரு பெத்த பொண்ணு தானே இவ! அப்பனுக்குத் தப்பாத பொண்ணு”

இவ்வளவு நேரம் சிரமத்துடன் அமைதியாய் நின்ற பவானி பொறுக்க முடியாது சீறத் தொடங்கினாள்.

“ஷட் அப் சிவா! என்னமோ உங்களுக்கு மட்டும் தான் நேர்மை நீதி நியாயம்லாம் தெரியும்னு பேசாதிங்க… எங்கப்பா அவரோட கிளையண்ட் ஜெயிக்கிறதுக்கு என்ன செய்யணுமோ அதை தான் செஞ்சிருப்பாரு… அதுக்கு ஏன் ஓவர் ரியாக்ட் பண்ணுறிங்க? எல்லாரும் உங்கள மாதிரி இருக்கணும்னு எக்ஸ்பெக்ட் பண்ணாதிங்க… கொஞ்சமாச்சும் நார்மல் மனுசனா மாறுங்க”

“எப்பிடி? உன்னைப் பெத்தவரை மாதிரி ஊரை ஏமாத்திப் பிழைக்கிறதும், உன்னை மாதிரி லஞ்சம் குடுத்து தப்பிக்கிறதும் நார்மல் மனுசத்தனம்; அதுவே நியாயமா நேர்மையா வாழணும்னு ஆசைப்பட்டா அது ஓவர் ரியாக்சன்… வெல்! ஓவர் ரியாக்ட் பண்ணுறவனோட வீட்டுல நீ எதுக்கு நிக்கிற? கெட்டவுட்” என்று வாயிலைக் காட்டினான்.

💔💔💔💔

ஹாய் ஃப்ரெண்ட்ஸ்😍

இந்தக் கதை நாளைல இருந்து வழக்கமான நேரத்துக்கு வந்துடும் மக்களே🤗
 
கோபம் இருக்கும் இடத்தில் தான் குணமும் இருக்கும்; காதலும் அதிகமாக இருக்கும்:love::love:
இப்படியெல்லாம் Twist கொடுத்து எங்களை ஏமாற்றாதீர்கள் எழுத்தாளரே😜
சூப்பர் முன்னோட்டம்; சூப்பர் ஜோடி!
 

Nithya Mariappan

✍️
Writer
கோபம் இருக்கும் இடத்தில் தான் குணமும் இருக்கும்; காதலும் அதிகமாக இருக்கும்:love::love:
இப்படியெல்லாம் Twist கொடுத்து எங்களை ஏமாற்றாதீர்கள் எழுத்தாளரே😜
சூப்பர் முன்னோட்டம்; சூப்பர் ஜோடி!
perusa twist irukkathu sis😝😝😝
 

New Episodes Thread

Top Bottom