• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

வெண் தாமரை பதி மெல்லியலே! - வெண்தாமரை

Archana

New member
Member
வெண் தாமரை பதி மெல்லியலே - வெண்தாமரை

இரட்டையர்கள் கதையின் நாயகர்களாக இருக்கும் கதைகளில் கண்டிப்பாக ஒரு சுவாரஸ்யம் உண்டு. இங்கே கதையின் நாயகர்களாக பாரதி ஸ்கொயர். பாரதியில் துவங்கி பாரதியால் நகர்த்தப்பட்டு பாரதியாலேயே அழகாக நிறைவு செய்யப்பட்ட ஒரு நிறைவான கதை.

நாயகனின் வருத்தங்களுக்கும் இறுக்கங்களுக்கும் ஏன்? எதற்கு என்ற கேள்விகளுடன் துவங்கி அதற்கான பதிலை தேடும் நாயகியுடனே அவள் கைப்பிடித்துக் கொண்டே நாமும் பயணிக்கிறோம். துளியும் சுவாரஸ்யம் குறையாமல் நம்மை அழைத்து செல்கிறாள் நாயகியாகிய மாதிங்கி எனும் பாரதி. சுட்டெரிக்கும் சூரியனின் மெலிதான பக்கங்களை உணர்தவளாக பரிமளிக்கிறாள் அவள்.

ரவி பாரதி – மாதங்கி/ பாரதி , சூர்யா பாரதி – தமிழ் பாரதி ஜோடிகளில் என்னதான் ரவி பாரதி கதாநாயகன் என்றாலும் நமது மனதில் முதல் சந்திப்பிலேயே ஒட்டிக் கொள்வது என்னவோ சூர்யாதான். ஆரம்பம் முதல் கடைசியில் அவன் தமிழ் பாரதியுடன் பேசும் போன் கால் வரை எல்லா இடத்திலும் நமது இதழ்களில் ஒரு புன்னகையை ஒட்ட வைப்பதே அவனது வேலையாக இருக்கிறது.

அடுத்து குறிப்பிட பட வேண்டிய கதாபாத்திரம் இவர்களின் அன்னை அனுராதா. பாரதியின் ரசிகையாக எல்லா இடத்திலும் மிளிர்கிறார்.

மிகக் குறைந்த அளவு கதாபாத்திரங்களுடன் மீடியா வெளிச்சங்களுக்கு பின்னால் ஒளிந்திருக்கும் நிதர்சனங்களையும் கொண்டு சுவாரஸ்யமான, இயல்பான முக்கியமாக முகம் சுளிக்கும் படியான காட்சிகள் இல்லாத ஒரு கதையை அழகாக தொடுத்த எழுத்தாளருக்கு இதயப் பூர்வமான பாராட்டுக்கள்.

போட்டியில் வெற்றி பெற மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.
 
நன்றி நன்றி. 🙏🙏🙏 . பாரதி எல்லோருக்கும் பிடித்தமானவன். அவனை உணர்ந்து எழுதும் எழுத்து நிச்சயம் எல்லோருக்கும் பிடிக்கும். அதை உங்கள் கருத்து மூலம் உணர்ந்துக் கொண்டேன். உங்கள் அருமையான விமர்சனம் என்னைப் போன்ற எழுத்தளர்களை ஊக்குவிக்கும் மருந்து. உங்கள் அன்புகளுக்கும், வாழ்த்துகளுக்கும் மிகுந்த நன்றிகள் :love::love::love:🙏🙏🙏
 

Latest profile posts

IIN இனியா கதை முடிவுற்றது மக்களே.
மே 31 வரைக்கும் சைட்ல இருக்கும். க்ரைம் நாவல் விரும்பிகள் படிக்கலாம்.
ஹலோ மக்களே
இனியா கதை எபி 80 வரை சைட்ல போட்டாச்சு.
நீ பார்த்த விழிகள் நாவலின் லிங்க் ஏப்ரல் 30 செவ்வாய் வரை தான் ஆக்டிவா இருக்கும், இன்னும் படிக்கலன்னா சீக்கிரம் படிச்சிடுங்க

https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/சித்ரா-வெங்கடேசனின்-நீ-பார்த்த-விழிகள்.372/
மக்களே சைட் ஒர்க் போகுது. விரைவில் சரி செய்யப்படும்

New Episodes Thread

Top Bottom