• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

வெண்தாமரை மலர்

zeenath khaja

New member
Member
#நந்தனம்போட்டிகதைகள்
வெண்தாமரை அவர்கள் எழுதிய "வெண்தாமரை பதி மெல்லியலே" பாரதி... கதை முழுவதும் வியாபித்திருக்கிறார் பெயராகவும் எண்ணமாகவும் பாடலாகவும் கவிதையாகவும் 🥰 மாதங்கி.. பத்திரிகை துறையின் வேலை பார்க்கிறாள்... பாரதி என்ற புனை பெயரில் கட்டுரைகள் எழுதும் இவள் துணிச்சலாகவும் தன் மனதில் இருப்பதை தைரியமாக பேசுவதிலும்பாரதி கண்ட புதுமை பெண்ணாகவே இருக்கிறாள் 👏👏 இவள் வேவு பார்க்க வரும் நாட்டியாஞ்சலி பள்ளியை நடத்தும் ரவி பாரதிக்கும் இவளுக்கும் முதலிலேயே முட்டிக் கொள்கிறது.. இவனின் டிவின் சகோதரன் சூர்யா பாரதி நிலைமையை சமாளித்து நட்பு கரம் நீட்டுகிறான் மாதங்கிக்கு... உண்மைக்கு புறம்பான விஷயங்களை ஒருவரை அவமானப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்துடன் கட்டுரை எழுத சொல்லும் ஆசிரியரிடம் மாதங்கியின் பதிலும் அதை சிறப்பாக அவள் கையாண்ட விதமும் அருமை 👏👏 திரைத்துறையிலும் தன் நடன திறமையாலும் சாதனைகள் செய்யும் ரவி பாரதி மீடியாவின் முன் தன் முகத்தை காட்ட மறுப்பது ஏன் என்ற கேள்விக்கு பதில் பெற துடிக்கிறாள் மாதங்கி... அதனோடு ரவியைப் பற்றி தெரிந்துகொண்டு பெரும் வியப்பாகவும் அவனின் மேல் நல்லெண்ணமும் தோன்றுகிறது அவளுக்கு. . அனுராதா.. பாரதி ஸ்கொயர்ஸ் இன் அம்மா 😀 மகாகவி பாரதியின் மேல் அலாதி பற்றும் பிரியமும் கொண்டவர்.. பெண்களை இழிவுபடுத்தும் செயலை எப்பொழுதும் ஏற்றுக்கொள்ள முடியாமல் தன் பிள்ளைகளுக்கும் அதை ஊட்டியே வளர்த்திருக்கிறார் 👏👏👏 சூர்யா பாரதிக்கும் தமிழ் பாரதிக்குமான உரையாடல் அழகு 😀😀🥰 அழகான எழுத்து நடையோடு விறுவிறுப்பாக நகர்ந்தது கதை நீங்கள் வெற்றி பெற மனமார்ந்த வாழ்த்துக்கள் 🥰👏
Good luck dear 💐🥰❤️
 

Latest profile posts

IIN இனியா கதை முடிவுற்றது மக்களே.
மே 31 வரைக்கும் சைட்ல இருக்கும். க்ரைம் நாவல் விரும்பிகள் படிக்கலாம்.
ஹலோ மக்களே
இனியா கதை எபி 80 வரை சைட்ல போட்டாச்சு.
நீ பார்த்த விழிகள் நாவலின் லிங்க் ஏப்ரல் 30 செவ்வாய் வரை தான் ஆக்டிவா இருக்கும், இன்னும் படிக்கலன்னா சீக்கிரம் படிச்சிடுங்க

https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/சித்ரா-வெங்கடேசனின்-நீ-பார்த்த-விழிகள்.372/
மக்களே சைட் ஒர்க் போகுது. விரைவில் சரி செய்யப்படும்

New Episodes Thread

Top Bottom