• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

யுத்தம் செய்தாய் என்னுள்ளே - டீசர்(17)

Ezhilanbu

Administrator
Staff member
Writer
"என்ன யோசனை?" என்ற குரல் மிக அருகே கேட்க, திடுக்கிட்டு விழித்துப் பார்த்தாள்.

அவளின் கணவனின் குரல்தான். சாப்பிடும் இடம் வந்து அமர்ந்த பின்னும் யோசனையில் இருந்தவளை கலைத்திருந்தான்.

"இலையில் சாப்பாடு வச்சுட்டாங்க பார். சாப்பிடாமல் என்ன யோசனை பண்ற?" என்று அவன் மீண்டும் கேட்க, ஒன்றுமில்லை என்பது போல் வேகமாகத் தலையை ஆட்டியவள் சாப்பாட்டில் கைவைத்தாள்.

"என்ன திருமதி ஆனதும் திருவாயை திறக்க மாட்டீங்கிற?" என்று கேலியாய் கேட்டவனைத் திரும்பிப் பார்த்தாள்.

அவன் புருவத்தை உயர்த்த, "இது மிலிட்டரி தானா? இல்லை வேற யாருமான்னு பார்க்கிறேன். திருவாளர் ஆனதும் உங்க திருவாய் வேலை செய்ய ஆரம்பிச்சிருச்சு போல…" என்று கிண்டலாய் சொன்னாள் கீர்த்தனா.

"இல்லையா பின்ன, என்னோட திருமதி சரியான வாயாடி. அதுக்கு ஏத்த மாதிரி திருவாளரும் மாறியாகணுமே…" என்று சிறு புன்னகையுடன் சொன்னவனைக் கண்டு வியந்துதான் போனாள்.

தன் மீது கோபமாக இருப்பானோ? இந்தத் திருமணத்தை அவன் எப்படி ஏற்றுக் கொள்வானோ? என்ற எண்ணம் அவளுக்கு இருக்கவே செய்தது.

ஆனால் அப்படி எதுவும் இல்லாமல் அவன் சகஜமாக இருப்பது அவளுக்கு வியப்பாகத்தான் இருந்தது.

(நாளை மாலை எபியோடு வர்றேன்)
 

Santhinagaraj

Well-known member
Member
திருவாளர் திருமதி மேல கோபம் ஏதும் இல்லாம சகஜமா பேச ஆரம்பித்து விட்டார் போல
 

Thani

Well-known member
Member
மிலிட்டரிக்காரன் என்பதை நிரூபித்து விட்டானே.....
அதாவது திருமணத்தில் விருப்பம் (கீர்த்தியுடன்)இல்லாத போல் நடிச்சு இருக்கான் ....உள்ளுக்குள் விருப்பத்தை வைத்துக்கொண்டு வெளியே விறைப்பா சுத்திககொண்டு இருக்கிறான் 😀
சூப்பர் ❤️
 

Latest profile posts

IIN இனியா கதை முடிவுற்றது மக்களே.
மே 31 வரைக்கும் சைட்ல இருக்கும். க்ரைம் நாவல் விரும்பிகள் படிக்கலாம்.
ஹலோ மக்களே
இனியா கதை எபி 80 வரை சைட்ல போட்டாச்சு.
நீ பார்த்த விழிகள் நாவலின் லிங்க் ஏப்ரல் 30 செவ்வாய் வரை தான் ஆக்டிவா இருக்கும், இன்னும் படிக்கலன்னா சீக்கிரம் படிச்சிடுங்க

https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/சித்ரா-வெங்கடேசனின்-நீ-பார்த்த-விழிகள்.372/
மக்களே சைட் ஒர்க் போகுது. விரைவில் சரி செய்யப்படும்

New Episodes Thread

Top Bottom