• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

நந்தவனம் குறுநாவல் போட்டி - முடிவுகள்!

Ezhilanbu

Administrator
Staff member
Writer
வணக்கம் நண்பர்களே!

நந்தவனம் குறுநாவல் போட்டி!

தளம் ஆரம்பித்த பிறகு வைத்த முதல் போட்டி. போட்டி என்று ஒன்றை என்னால் தனியாக எடுத்து நல்ல முறையில் நடத்த முடியுமா? அதை நல்லபடியாக முடிக்க முடியுமா? என்று தயக்கம் இருந்தாலும், அதையும் தாண்டி செய்துதான் பார்ப்போமே என்று துணிந்து செயலில் இறங்கினேன்.

எனது செயலை ஊக்குவித்து, எனக்கு உறுதுணையாக எனது கணவரும் இருக்க, என்னால் முயன்று நடத்த முடிந்தது.

என் உறுதியைக் கூட்டுவது போல் எழுத்தாளர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டதும், வாசகர்கள் உற்சாகத்துடன் எழுத்தாளர்களுக்கு கருத்துக்கள் தெரிவித்து ஊக்குவித்ததும் எனக்கு இன்னும் ஊக்க சக்தியாக இருந்தது.

போட்டியில் கலந்து கொண்ட எழுத்தாளர்களுக்கும், கருத்துகள் பகிர்ந்து கொண்ட வாசகர்களுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

40 பேருக்கு மேல் கலந்து கொண்டாலும் பத்தொன்பது எழுத்தாளர்கள் வெற்றிகரமாக கதையை முடித்திருக்கிறார்கள்.

கதை முடித்த எழுத்தாளர்களுக்கு வாழ்த்துகள்.

பத்தொன்பது கதைகளுமே ஒவ்வொரு விதத்தில் சிறப்பு வாய்ந்ததாக இருந்தது. அதற்கு எழுத்தாளர்களுக்கு எனது பாராட்டுக்கள்.

போட்டியில் ஆரம்பத்தில் சொன்னபடி வாசகர்கள் தீர்ப்பே நமது போட்டியில் முக்கிய பங்கு வகிக்கிறது.

வாசகர்கள் தேர்ந்தெடுத்த வெற்றியாளர்களை அறிவிக்கும் நேரம் இதோ வந்துவிட்டது.

வாசகர்களின் அதிக ஓட்டுக்களை பெற்று முதல் பரிசு பெரும் கதை

சொக்கனின் மீனாள் - பிச்சிப்பூ என்ற பூ பெயரில் எழுதிய “நர்மதா சுப்ரமணியம் அவர்களுக்கு பரிசு தொகை 5000 வழங்கப்படுகிறது.

இரண்டாம் பரிசு பெரும் கதை

பூ பூக்கும் ஓசை - பேரரளி என்ற பூ பெயரில் எழுதிய “பிரவீணா தங்கராஜ்” அவர்களுக்கு பரிசு தொகை 3000 வழங்கப்படுகிறது.

மூன்றாம் பரிசு பெரும் கதை

சலனபருவம் - பிரம்மகமலம் என்ற பூ பெயரில் எழுதிய “அனன்யா(சுதா திருமலை)” அவர்களுக்கு பரிசு தொகை 2000 வழங்கப்படுகிறது.

முதல் மூன்று இடத்தை பிடித்த எழுத்தாளர்களுக்கு எனது வாழ்த்துகள்.

போட்டியின் விதிமுறைப்படி மூன்று பரிசு மட்டுமே அறிவித்திருந்தாலும், அதையும் தாண்டி வாசகர்களின் அதிக வாக்குகள் பெற்ற இரண்டு கதைகளை சிறப்பு பரிசுக்கு தேர்ந்தெடுத்திருக்கிறோம்.

உன்னில் சங்கமித்தேன் - குறிஞ்சி மலர் என்ற பூ பெயரில் எழுதிய “சித்ரா வெங்கடேசன்” அவர்களுக்கு சிறப்பு பரிசு தொகை 1000 வழங்கப்படுகிறது.

உயிரில் மெய்யாக வா - ஊதாப்பூ என்ற பூ பெயரில் எழுதிய “அருணா கதிர்” அவர்களுக்கு சிறப்பு பரிசு தொகை 1000 வழங்கப்படுகிறது.

சிறப்பு பரிசு பெற்ற எழுத்தாளர்களுக்கு எனது வாழ்த்துகள்.

Screenshot_2022-10-01-01-33-09-786-edit_com.android.chrome.jpg


பரிசுகள் பெற்ற கதைகள் மட்டுமே சிறந்தகதைகள் மற்றவை எல்லாம் குறைவு என்று அர்த்தமில்லை.

முடிவுற்ற ஒவ்வொரு கதைகளுமே சிறப்பாக இருந்தன. கலந்து கொண்ட புது எழுத்தாளர்களும் முதல் கதை என்று சொல்ல முடியாத அளவில் கதையை நன்றாக எழுதியிருந்தார்கள். ஐந்து கதைகளை தவிர மற்ற கதைகளுக்கு பரிசு கொடுக்க முடியாமல் போனதற்காக வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன்.

இன்னும் நீங்கள் அனைவரும் பல கதைகள் எழுத வேண்டும் என்று எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

எழுத்தாளர்களுக்கு மட்டும் இல்லாமல் வாசகர்களுக்கும் புத்தகப்பரிசு அறிவித்திருந்தோம்.

போட்டி ஆரம்பத்ததில் இருந்து அத்தியாயம் போட்டதும் ஓடிவந்து கருத்துக்கள் சொல்லி எழுத்தாளர்களை ஊக்கப்படுத்தியிருந்தீர்கள். அதே போல் கதை முடிவுற்றதும் விமர்சனம் அளித்து உங்கள் பங்கையும் சிறப்பாக செய்து போட்டி கதைகளை மற்ற வாசகர்களை சென்று சேர உதவி புரிந்தீர்கள். அவர்களுக்கு என்று நன்றிகள்.

தேர்ந்தெடுத்த 10 வாசர்களுக்கு மட்டுமே பரிசு என்று சொல்லியிருந்தோம். ஆனாலும், அதையும் தாண்டி தொடர்ந்து கருத்துக்கள் விமர்சனங்கள் அளித்திருந்தீர்கள். அதனால் 10 வாசகர்கள் என்பதை தள்ளுபடி செய்து, 15 வாசகர்களைத் தேர்ந்தெடுத்திருக்கிறோம்.

போட்டி ஆரம்பத்ததிலிருந்து அனைத்து கதைகளுக்கும் தொடர்ந்து கருத்திட்டவர்களையும், முடிவுற்ற அனைத்துக் கதைகளுக்கும் விமர்சனம் அளித்த வாசகர்களை மட்டும் தேர்ந்தெடுத்திருக்கிறோம்.

அவர்களின் பெயர்கள் பின்வருமாறு:-

அமுதா சக்திவேல்
மஞ்சுகைலாஷ்
சிவஸ்ரீ
anuraj
Mathykarthy
EswariSasikumar
Megalaveera
Apsareezbeena loganathan
Chitra ganesan
zeenath khaja
Kokila Balraj
kalai karthi
Santhi Nagaraj
Chitrasaraswathi

(பரிசு பெற்றவர்கள் தங்கள் முகவரி தொலைப்பேசி எண்ணை [email protected] என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.)

இதில் Thani அவர்களும், முடிந்த கதைகளுக்கு விமர்சனம் அளித்த Vidya.V
அவர்களும் வெளிநாட்டு வாசகர்கள் என்பதால் அவர்களுக்குப் புத்தகப்பரிசு அனுப்ப முடியாத சங்கடம் நேர்ந்துவிட்டமைக்கு வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவர்களை தவிர முகநூலில் கருத்துக்கள் தெரிவித்தவர்களுக்கு எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

உங்களின் பங்களிப்பு இல்லாமல் இந்த போட்டி இவ்வளவு தூரத்திற்கு வெற்றி அடைந்திருக்காது. இன்னும் வாசகர்களாகிய உங்களுக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் தகும்.

இன்னும் சிலருக்கும் நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன்.

முதலில் தோழி எழுத்தாளர் பாரிஜாதம் பூ அவர்களுக்கு. அக்கா என்ன போட்டி ஆரம்பித்தபிறகும் நம்ம முகநூல் க்ரூப் சைலண்டா இருக்கு. இப்படி இருந்தால் எப்படி? நான் நம்ம க்ரூப்பை கலகலப்பாக்கிறேன் என்று மீம்ஸ் போட்டு வாசகர்கள் எழுத்தாளர்களை பேச வைத்து, நமது குழுவை கலகலப்பாகினார். அவருக்கு எனது நன்றிகள்.

அடுத்து எனக்கு போட்டியில் ஏதாவது உதவி தேவைப்பட்டால் நான் தயங்காமல் கேட்டு உதவி பெரும் தோழி, தங்கை எழுத்தாளர் நித்யா மாரியப்பன் அவர்களுக்கு எனது நன்றிகள். கர்ப்பிணியாக இருந்த போதும் சரி, கை குழந்தையை கையில் வைத்திருந்த போதும் சரி. நான் எந்த நேரம் என்ன உதவி கேட்டாலும் நான் செய்கிறேன் அக்கான்னு ஓடி வந்து உதவி புரிந்தார். அவருக்கும் இந்த நேரம் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன்.

அவரைத் தவிர இன்னும் ஒருவரும் தானே வந்து என்ன உதவி வேண்டும் என்றாலும் கேளுங்க அக்கா தனியாக கஷ்டப்படாதீங்கன்னு சொல்லி நான் கேட்ட போது உடனே அந்த உதவி செய்து உதவிய தோழி, எழுத்தாளர் ஜெயலட்சுமி கார்த்திக் அவர்களுக்கும் எனது நன்றிகள்.

போட்டியின் முடிவுற்ற கதைகளை எழுதிய எழுத்தாளர்கள் பெயர்களைத் தெரிந்து கொள்ள இந்த லிங்க் சென்று பாருங்கள்.


பெயர் கொடுத்த பிறகு எழுத முடியாமல் போன எழுத்தாளர்கள் பெயர்களை வெளியிடவில்லை. விருப்பம் உள்ளவர்கள் இனி நீங்களே உங்கள் பெயர்களை வெளியே சொல்லிக் கொள்ளலாம். ஆனால், உங்களிடம் ஒரே ஒரு கோரிக்கை. உங்கள் கதைக்கான லிங்க் இன்னும் அப்படியேதான் இருக்கின்றன. நீங்கள் மீண்டும் கதையை தொடர்வதாக இருந்தால் இந்தத் தளத்திலேயே தொடர்ந்து எழுதி அந்தக் கதைகளை முடிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.

நன்றி.
 
வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள். கதையை முடித்தவர்களுக்கும் வாழ்த்துகள்.
வாய்ப்பை அளித்த எழில் சகோதரிக்கு நன்றிகள் பல.
வெண்தாமரை மலருக்கு ஓட்டு அளித்தவர்களுக்கும், கதையைப் படித்து கருத்துக்கள் பகிர்ந்த அனைவருக்கும் நன்றிகள் .
 

Latest profile posts

IIN இனியா கதை முடிவுற்றது மக்களே.
மே 31 வரைக்கும் சைட்ல இருக்கும். க்ரைம் நாவல் விரும்பிகள் படிக்கலாம்.
ஹலோ மக்களே
இனியா கதை எபி 80 வரை சைட்ல போட்டாச்சு.
நீ பார்த்த விழிகள் நாவலின் லிங்க் ஏப்ரல் 30 செவ்வாய் வரை தான் ஆக்டிவா இருக்கும், இன்னும் படிக்கலன்னா சீக்கிரம் படிச்சிடுங்க

https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/சித்ரா-வெங்கடேசனின்-நீ-பார்த்த-விழிகள்.372/
மக்களே சைட் ஒர்க் போகுது. விரைவில் சரி செய்யப்படும்

New Episodes Thread

Top Bottom