தேடல் - 18

Nancy mary

✍️
Writer
❤️அத்தியாயம் - 18❤️

அந்த மண்டபமே வண்ணவிளக்குகளால் அலங்கரிக்கபட்டு அழகாய் ஜொலித்து கொண்டிருக்க அதைவிட ஆயிரமடங்கு மகிழ்ச்சியில் ஜொலித்த சுந்தரமும் கணேசனும் மண்டப வாயிலில் ஒன்றாய் நின்றுகொண்டு தொழில்முறை விருந்தினர்களையும் சொந்தங்களையும் வரவேற்று கொண்டிருக்க,

இவர்களின் ஒற்றுமையை கண்ட சொந்தங்கள் அனைவரும் ஆச்சர்யத்தில் உறைந்து போயினர்.

இக்குடும்பம் சொத்து தகராறில் சிதறிய வரலாறு உலகறிந்த கதையாக இருந்ததால் திருமண விஷயத்திலும் அது நீடிக்குமென நம்பியவர்கள் பிள்ளைகளின் காதலுக்காக வேறு வழியின்றி இணைந்திருப்பரோ என நினைத்திருக்க,

அது முற்றிலும் உண்மையல்ல என நிரூபிக்கும் வகையில் ஒன்றாய் வரவேற்பதை கண்டபிறகே இரு குடும்பங்களும் இணைந்துவிட்டதை முழுதாய் நம்பிட சொந்தங்களின் பூரிப்பான பேச்சினை கேட்ட சுந்தரத்தின் தாய் தந்தையான மாணிக்கம் மற்றும் கோமதியோ பேருவகையாய் மனம் நெகிழ்ந்தனர்.

அதேசமயம் மண்டப வாயிலில் வந்து நின்ற காரிலிருந்த இறங்கிய சத்யமூர்த்தியோ தனது மனைவி மற்றும் மகளோடு மண்டபத்திற்குள் நுழைய அவர்களை பார்த்து குழம்பிய கணேசன் மற்றும் சுந்தரத்திடம் சென்ற அனுவோ அவர்களை நலம் விசாரிக்க துவங்கினாள்.

"ஹாய் அங்கிள், எப்படி இருக்கீங்க உங்களை சந்திச்சதுல எனக்கு ரொம்பவே சந்தோஷமா இருக்கு; கார்த்திக் சீனியர் உங்களை பத்தி நிறையவே சொல்லிருக்காங்க" என கணேசனிடம் பேசிகொண்டே சென்றவளோ,

திடீரென தனது சுற்றுபுறத்தையே மொத்தமாய் மறந்து கார்த்திக்கின் தந்தையான கணேசனின் காலில் விழுந்து விட,

அதனை கண்ட கணேசனோ பதறியபடியே அவளை எழுப்ப முயல ஜெயாவோ தனது மகளின் செயலில் அதிர்ந்தவாரே மயங்கி விழ போக அதற்குள் சுதாரித்த சத்யமூர்த்தியோ தனது மனைவியை தாங்கி பிடித்து கொண்டார்.

தனது கண்முன் நடக்கும் வேடிக்கைகளை கண்ட சுந்தரமோ குழம்பி போய் நிற்க நண்பனின் அக்காவுடைய நிச்சயத்தை தனது வீட்டு நிச்சயம் போல நினைத்து கூல்டீரிங்ஸ் வழங்கி கொண்டிருந்த கார்த்திக்கின் நண்பர்களோ இக்காட்சியை கண்டு அதிர்ந்தவாரே கார்த்திக்கை அழைக்க சென்றனர்.

இங்கு அனுவை எழுப்பிய கணேசனோ, "ஏன்மா, இப்போ எதுக்கு சம்மந்தமே இல்லாம என்னோட கால்ல விழுந்து பதற வைக்கிற; நீ பேசுறதை பார்த்தா கார்த்திக் கூட படிக்கிற பொண்ணுனு தெரியுது அப்படி இருக்கும்போது நீ ஏன் என் கால்ல விழணும்" என புரியாமல் கேட்க,

உடனே தனது மகளை காப்பாற்ற நினைத்த சத்யாவோ கணேசனிடம், "அது ஒண்ணுமில்லை சார், எங்க பொண்ணுக்கு நாங்க சின்னவயசுல இருந்தே பெரியவங்களை மதிச்சு நடக்கணும்னு கத்து தந்திருக்கதால யாரை பார்த்தாலும் இப்படிதான் கால்ல விழுந்திடுவா நீங்க பதறாதீங்க" என கூற அதனை கேட்டு அகம்மகிழ்ந்த கணேசனோ அனுவின்
தலையை வாஞ்சையாய் தடவி விட,

ஜெயாவோ தனது மகளின் செயலிலும் கணவனின் பேச்சிலும் ஏதோ சரியில்லையென யூகித்துகொண்டு முறைக்க துவங்கினார்.

அப்பொழுது கார்த்திக்கை தேடி சென்ற நண்பர்களோ மணப்பெண் அறையில் தனது அக்காவோடு கார்த்திக் பேசிகொண்டிருப்பதை அறிந்து கொண்டு அங்கு விரைந்து செல்ல,

அங்கு மணமகள் அறையில் கவியோ கார்த்திக்கிடம், "ஆமா, நீ காதலிக்கிற பொண்ணையும் நிச்சயத்துக்கு இன்வைட் பண்ணிருக்கேனு சொன்னீயே இன்னுமா அவ வந்துட்டு இருக்கா; நீ அவளை பத்தி குடுத்த பில்டப் எல்லாம் கேட்டு அக்கா ஓவர் எக்பக்டேசனோட இருக்கேன் டா அதுல மண்ணள்ளி போட்டுற மாட்டீயே" என கூறி தனது தம்பியை கிண்டல் செய்தாள்.

கார்த்திக் தனது காதலை அனுவிடம் கூறிய அன்றைக்கே கவியிடமும் கூறி சம்மதம் வாங்கிவிட அதன்பிறகான அனுவின் நடவடிக்கைகளில் துவண்ட கார்த்திக்கை தேற்றி சமாதானபடுத்துவதே கவிக்கு முழுநேர வேலையாய் அமைந்தது.

இன்றோடு அவ்வேதனை தீர்ந்துவிட்டதை அறிந்துகொண்ட கவியோ கார்த்திக்கை விட பன்மடங்கு சந்தோஷத்தில் மிதந்ததால் கேலி கிண்டல் செய்து தனது சந்தோஷத்தை வெளிபடுத்துகிறாள்.

கவியின் கிண்டலை கேட்ட கார்த்திக்கோ, "அக்கா, சத்தமா பேசாத யார் காதுலயாவது விழுந்ததுனா பெரிய பிரச்சனையாகிடும்; அவளை நான் இன்வைட் பண்ணேன் தான் ஆனா வருவாளானு தான் தெரியலக்கா" என கூறி முகத்தை தொங்க போட,

அவனின் தாடை பிடித்து நிமிர்த்திய கவியோ, "கார்த்திக், இப்போ எதுக்கு தேவையில்லாம கவலைபடுற நீ சொன்னா அவ கேட்பானு அடிக்கடி சொல்லிருக்கேல அப்போ அவளை நீ கூப்பிட்டபிறகும் வராம இருப்பாளா அதெல்லாம் கண்டிப்பா வந்திடுவா டா கவலைபடாத" என கூறி சமாதானபடுத்த,

அப்பொழுது கார்த்திக்கை தேடியபடி மணப்பெண் அறையில நுழைந்த நண்பர்களோ அனுவின் அதிரடி வரவினை எடுத்துரைக்க,

அதனை கேட்டு தனது முகத்தில் இளநகை பூத்தபடியே அனுவை காண கார்த்திக் விரைந்து ஓட தம்பியின் செயலை கண்ட கவியோ மென்னகை பூத்தாள்.

அனுவின் தரிசனத்தை காண விரைந்த கார்த்திக்கின் கண்களுக்கு தாயிடம் திட்டு வாங்கியபடி நின்ற அனுவினை கண்டதும் தனது சுற்றத்தையே மொத்தமாய் மறந்து உறைந்து போனான்.

தனது ஒட்டுமொத்த அழகிற்கும் அழகு சேர்க்கும் வகையில் தாவணியில் வருகை புரிந்திருந்த அனுவினை கண்டவனின் காதல் அனுக்களும் தாறுமாறாக துடிக்க அதனை நாரதராய் கலைத்திடவே நேசனின் நேசமிகு தங்கை ஷாலினியும் அங்கு வருகை புரிந்தாள்.

"கார்த்திக் மாமா, நீ இங்க தான் இருக்கீயா உன்னை நான் எங்க எல்லாம் தேடுறது சரி அதெல்லாம் விடு; இந்த தாவணியில நான் எப்படி இருக்கேன் அழகா இருக்கானா" என கேட்க அவளை சமாளிக்கும் வழியறியாது முழித்த கார்த்திக்கை கண்ட அனுவோ,

அவனின் அருகிலிருந்து உரிமையாய் கைகளை பிடித்துகொண்டு பேசிடும் யுவதியை கண்டு தீயாய் முறைக்க துவங்கிட அவளின் தாயின் திட்டுக்கள் யாவும் காற்றிலே கரைந்து போனது.

'சீனியர், உங்களுக்காக ஒருத்தி அம்மாகிட்ட திட்டு வாங்கி பாட்டிகிட்ட கொட்டு வாங்கி தாவணி கட்டிட்டு வந்தா நீங்க என்னைய விட்டுட்டு அவளை சைட் அடிக்குறீங்களா இப்போ உங்களை என்ன பண்றேனு பாருங்க' என கூறியவளின் கண்ணிற்கு கூல்டீரிங்ஸை எடுத்து செல்லும் ரவி தென்பட,

உடனே அவனிடமிருந்த கூல்டீரிங்ஸை விடாபிடியாய் வாங்கிகொண்டு கார்த்திக்கை நோக்கி செல்ல,

அவனோ ஷாலினியை தவிர்க்க முடியாமல் சிக்கிகொண்டு தவிக்க அவனின் மேல் தெரியாமல் மோதுவதை போல தெரிந்தே ஒட்டுமொத்த கூல்டீரிங்ஸையும் கொட்டி விட்டாள்.

அதனை கண்ட ஷாலினியோ, "ஹேய், உன் கண்ணை எங்க வைச்சிட்டு வர பார்த்து நடக்க மாட்டீயா; இப்படியா என் மாமா மேல கூல்டீரிங்ஸை கொட்டுவ, உனக்கு கொஞ்சமாச்சும் அறிவிருக்கா" என திட்டிகொண்டே செல்ல,

அவளின் எந்தவிதமான திட்டுகளும் காதில் வாங்காதவளுக்கு கார்த்திக்கை உரிமையாய் 'மாமா' என அழைத்த அழைப்பு மட்டும் நெருஞ்சி முள்ளாய் மாறி இதயத்தை ரணமாய் துளைக்க அதன் விளைவாக அவளின் முகமோ கோவைபழமாய் சிவந்தது.

அனுவின் மனநிலையை சரியாய் உணர்ந்த கார்த்திக்கோ ஷாலினியிடம், "ஷாலினி, அவங்க தெரியாம பண்ணிட்டாங்க நீ இதை பெருசுபடுத்தாத நான் போய் இதை வாஷ் பண்ணிட்டு வரேன்" என கூறி அங்கிருந்து தப்பித்தோம் பிழைத்தோமென ஓட தனது சீனியரை முறைத்தபடியே அனுவும்
அங்கிருந்து சென்றாள்.

அப்பொழுது நிச்சயத்திற்திற்கு தயாராகும் விருந்து சரியாய் இருக்கிறதா என ருசி பார்த்து அறிந்து கொண்ட சாவிந்திரி அங்கிருந்த சேரில் ஆசுவாசமாய் அமர அவரிடம் வந்த கணேசனோ, "அடியே நம்ம பொண்ணு நிச்சயத்துக்கு வேலை பார்க்காம நீ பாட்டுக்கு ஹாயா உட்கார்ந்து வேடிக்கை பார்க்குறீயே; இது உனக்கே நல்லாயிருக்கா" என கேட்க,

அவரை முறைத்த சாவித்திரியோ, "மண்டபத்துல நான் ஓடியாடி வேலை பார்க்குறதெல்லாம் உங்க கண்ணுக்கு தெரியலையா; இவ்ளோநேரம் வேலை பார்த்துட்டு இப்போதான் கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கலாம்னு உட்கார்ந்தா நீங்க ஓவரா பேசுறீங்களே; ஆமா என்னை கேட்குறீங்களே சாரு மகளோட நிச்சயத்துக்கு என்ன வேலை பார்த்தீங்க" என நக்கலாய் கேட்க,

அதை கேட்டு கோபமானவரோ, "நான் வாசல்ல நிலையா நின்னு வந்தவங்களை எல்லாம் வரவேற்று உபசரிச்சது உன் கண்ணுக்கு தெரியலையா என்ன வேலை செஞ்சேன்னு அசால்டா கேக்குற" என கேட்க,

அதற்கும் பதிலடி வைத்திருந்த சாவித்திரியோ, "ஆமா, இது ஒரு பெரிய வேலை பாருங்க; எல்லாரையும் வரவேற்க ஒரு பொம்மையை நிப்பாட்டுனா கூட இந்த வேலையை அது அழகா பண்ணிடும் ஆனா என்னோட அண்ணன் தான் அப்படி செஞ்சா சொந்தகாரங்களுக்கு திருப்தியா இருக்காதுனு அதுவே வரவேற்க போச்சு; நீங்க அண்ணன் கூட கம்பெனி தரேனு போயிட்டு சும்மா தானே உட்கார்ந்துட்டு வந்திருக்கீங்க இதுக்கு போய் ஓவரா பேசுறீங்க" என காலை வார

அப்பேச்சிற்கு முற்றுபுள்ளி வைக்க நினைத்தவரோ சாவித்திரியிடம் அனுவை காட்டி, "சரி, அதெல்லாம் விடு; அந்த பொண்ணை பாரேன் நம்ம பையன் படிக்கிற காலேஜ்ல படிக்கிறவளாம் ரொம்ப நல்ல பொண்ணா பெரியவங்களை மதிக்க தெரிஞ்சவளா இருக்கா தெரியுமா; ஹேய் அங்க பாரேன் அவகூட பேசுறவங்களை அவளுக்கு யாருனே தெரியல ஆனாலும் அவங்க கால்ல விழுகுறா பண்பாடு தெரிஞ்ச பொண்ணுல" என கூறி சிலாகிக்க,

அதேநேரம் அனுவின் செயலை கவனித்த ஜெயாவோ, "என்னங்க, அனுவுக்கு மூளை ஏதாவது குழம்பி போச்சா; அவளோட பிரண்ட் வீட்டு விசேஷம்னு கூட்டிட்டு வந்தா ஆனா இதுவரை அந்த பொண்ணு யாருனு நமக்கு அறிமுகபடுத்தல; இதுல சம்மந்தமில்லாம எல்லாரோட கால்ல விழுந்திட்டு இருக்கா நீங்களும் பார்த்துகிட்டு அமைதியா இருக்கீங்க இங்க என்னதாங்க நடக்குது" என தலையில் கைவைத்து குழம்பியவாறு வினவ,

அதற்கு சத்யமூர்த்தியோ, "ஜெயா, நீ கவலைபடுற அளவுக்கெல்லாம் ஒண்ணுமே இல்ல நம்ம பொண்ணு எல்லாமே சரியா தான் பண்றா நீ ரீலாக்ஸா இரு" என கூறிய கணவனை புரியாமல் பார்க்க அனுவோ கூல்டீரிங்ஸை கையில் வாங்கிகொண்டு சாவித்திரியின் அருகில் அமர்ந்தாள்.

தன்னருகில் அமர்ந்த அனுவின் பண்பான குணத்தில் ஈர்க்கபட்டு அவளையே கண்ணிமைக்காமல் சாவித்திரி பார்த்துகொண்டிருக்க அனுவோ எதார்த்தமாய் திரும்புவது போல சாவித்திரியின்புறம் திரும்பியவளோ கண்களை அகல விரித்து ஆச்சர்யபடும் பாவனையை தந்தபடியே,

"ஆண்ட்டி, நீங்களா நீங்க கார்த்திக் சீனியரோட அம்மா தானே உங்களை பார்த்ததுல ரொம்ப சந்தோஷம் ஆண்ட்டி என்னைய ஆசீர்வாதம் பண்ணுங்க" என காலில் விழுக அதனை கண்டு பதறியவரோ,

"அச்சசோ, என்னமா நீ கால்ல விழுந்து சங்கடபடுத்துறீயே" என கேட்க,

அதற்கு அனுவோ, "இதுல சங்கடபட என்ன ஆண்ட்டி இருக்கு பெரியவங்க கால்ல விழுந்து சின்னவங்க ஆசீர்வாதம் வாங்குறதும் நல்லது தான; அப்புறம் இந்தாங்க ஆண்ட்டி கூல்டீரிங்ஸ் குடிங்க நான் பார்க்கிறப்போ எல்லாம் சுறுசுறுப்பா ஓடி ஓடி வேலை செஞ்சீங்க அதுலயே களைச்சு போயிருப்பீங்கல" என அக்கறையாய் பேசியவளோ அப்பொழுது தான் கணேசனை காண்பது காட்டிகொண்டவளோ,

"அங்கிள், நீங்களும் இங்கதான் இருக்கீங்களா உங்களை நான் கவனிக்கவே இல்லயே; நீங்க கொஞ்சநேரம் இங்கயே இருங்க நான் போய் உங்களுக்கும் ஒரு கூல்டீரிங்ஸ் வாங்கிட்டு வரேன்" என கூறி ஓட பார்த்தவளின் கையை பிடித்து அமரவைத்த சாவித்திரியோ,

"அதெல்லாம் ஒண்ணும் வேணாமா நீ தேவையில்லாம அலையாத; ஆமா எல்லார்கிட்டயும் இவ்ளோ பொறுப்பா நடந்துக்கிறீயே உன்னைய பத்தி கொஞ்சம் சொல்லேன்" என வினவ,

அதற்கு அனுவோ, "என் பேரு அனுபிரியா ஆண்ட்டி என்னைய பத்தி சொல்லணும்னா.." என பேச துவங்கியவளோ அவளின் வரலாற்றையே மொத்தமா ஒப்பிக்க அவையனைத்தையும் ரசித்தபடியே கேட்டுகொண்டிருந்த சாவித்திரியோ அவளின் எளிமையான அழகிலும் குறும்பான பேச்சிலும் மொத்தமாய் தனது மனதினை இழந்து விட்டார்.

அப்பொழுது அவர்களிடம் வந்த காமாட்சியோ நிச்சயதார்த்தம் துவங்க போவதை கூறி சாவித்திரியையும் கணேசனையும் மேடைக்கு அழைக்க அப்பொழுது சாவித்திரியோ அனுவையும் மேடைக்கு வர சொல்லி அழைத்தார்.

அதற்கு அனுவோ, "அய்யயோ அதெல்லாம் வேணாம் ஆண்ட்டி; இது உங்க வீட்டு விசேஷம் இதுல நான் எப்படி மேடையேறி கலந்துக்க" என தயங்க,

அதற்கு சாவித்திரியோ, "இங்க பாருமா, நீ என் பையனோட பிரண்ட் தான அப்போ உன் பிரண்ட் வீட்டு விசேஷத்தை உனக்கு பங்கு இல்லயா; இது நம்ம குடும்ப விசேஷம்மா இதுல நீ இல்லனா எப்படி நீயும் மேடைக்கு வா" என கூறி அழைத்து செல்ல,

இங்கு ஜெயா சத்யமூர்த்தியிடம், "என்னங்க, அங்க பாருங்க அவங்க நம்ம பொண்ணையும் உரிமையா மேடைக்கு கூட்டிட்டு போறாங்க இவளும் ஒண்ணும் சொல்லாம போறா; இங்க என்னங்க நடக்குது யார் வீட்டுக்கு விசேஷத்துக்கோ அப்பாவும் பொண்ணுமா என்னைய கூட்டிட்டு வந்துட்டு இவ்ளோ உரிமையா நடந்துக்குறீங்க; உங்களோட திருட்டுதனத்தை யூகிச்சதால தான் அத்தை நம்மகூட வரல போல நீங்களும் அனுவும் சேர்ந்துகிட்டு என்ன பிளான் பண்றீங்க ஒழுங்கா சொல்றீங்களா இல்லயா" என கேட்க

அதற்கு சத்யமூர்த்தியோ, "அட என்ன ஜெயா மா, யாரு வீட்டு விசேஷமோனு பிரிச்சு பேசுற எல்லாமே நமக்கு வேண்டபட்டவங்க தான் நீ தேவையில்லாம கவலைபடாம நடக்குறதை மட்டும் பாரு" என கூற கணவனின் பேச்சில் ஒன்றும் புரியாமல் குழம்பியவரோ நிச்சயத்தை பார்க்க துவங்கினார்.

அங்கு நிச்சயத்திற்காக மேடையின் நடுநாயகமாய் வீற்றிருந்த கவிநேசனோ எளிமையான ஒப்பனையோடு அழகிய நிலவாய் மேடையேறிய கவியின் அழகை கண்டு தன்னிலை மறந்து ரசிக்க துவங்கினான்‌.

சாவித்திரியோடு மேடையேறிய அனுவோ கார்த்திக்கின் இடதுபுறத்தில் அமர்ந்து கொண்டபடியே அவனை பார்த்து சிரிக்க அப்பொழுது எங்கிருந்தோ ஓடி வந்த ஷாலினியோ கார்த்திக்கின் வலதுபுறத்தில் அமர்ந்து கொண்டு அண்ணனின் நிச்சயத்தை பார்க்க துவங்கினாள்.

அவளை கண்ட அனு கோபமாய் முறைக்க அனுவினை எதேர்ச்சையாக கண்ட ஷாலினியும் அவளை போலவே முறைத்து தள்ள,

இக்கண்கொள்ளா காட்சியை கண்ட கார்த்திக்கின் நண்பர்களோ கேலியாய் புன்னகைத்தபடி தமக்குள் கிண்டலடித்து கொண்டனர்.

"மச்சி, இவனுக்கு முருகனோட பேரான கார்த்திக்னு பேரு வைச்சாலும் வைச்சாங்க; சாரை சுத்தி எப்போ பார்த்தாலும் பெண்கள் கூட்டம் நிரம்பி வழியுதேடா,

இதுல பாரு கல்யாணத்துக்கு இப்போவே ஒண்ணுக்கு இரண்டா புக்காகிட்டாளுங்க இனி கார்த்திக்கோட பாடு திண்டாட்டம் தான் போலயே" என தினேஷ் கூறியபடி சிரிக்க,

அதற்கு ரவியோ, "நீ சொல்றதுக்கு சரிதாண்டா, இதுல ஒருத்தி கார்த்திக் காதலிக்கிற பொண்ணு இன்னொருத்தி முறை பொண்ணு இரண்டு பேருக்குமே கார்த்திக்க கட்டிக்க உரிமையிருக்கு இதுல அந்த ஷாலினி ஒருபடி மேல போய் கட்டுனா 90'ஸ் கிட்ட தான் கட்டுவேன்னு ஒத்தகால்ல நின்னபடியே கார்த்திக்கும் 90'ஸ் கிட்னு அவனுக்காக தவமிருக்கா இதெல்லாம் பார்த்தா இனி கார்த்திக்கு கஷ்டகாலம் தான் தோணுது" என கூறி ஹைபை அடிக்க,

அதனை கேட்க சங்கரோ, "டேய், நீங்க எத்தனை கல்யாணத்தை வேணாலும் பண்ணிக்கோங்க; ஆனா கெடா விருந்து கண்டிப்பா வைச்சிடணும் அப்படி நீங்க கெடா விருந்து வைக்கலனா நானே கல்யாணத்தை நிப்பாட்டிருவேன் ஜாக்கிரதை" என மிரட்ட இவன் செஞ்சாலும் செய்வான்டா என நினைத்தபடியே நிச்சயத்தை பார்க்க தயாராகினர்.

நிச்சயத்திற்காக சம்மந்திகளாக மாற போகும் அண்ணனும் தங்கையும் எதிரெதிரே தனது தாய் தந்தையோடு அமர்ந்திருக்க அப்பொழுது ஐயரோ நிச்சய ஓலையை வாசிக்க துவங்கினார்.

அன்புடையீர் நிகழும் மங்களகரமான நாளான பங்குனி மாதம் 22 தேதி அமிர்த சித்தயோகம் கூடிய சுபயோக சுபதினத்தில் சுந்தரம் மற்றும் காமாட்சியம்மாளின் தவப்புதல்வனான கவிநேசனுக்கும் கணேசன் மற்றும் சாவித்திரியம்மாளின் தவபுதல்வியான கவியரசிக்கு பெரியோர்களால் நிச்சயிக்கபட்டு தாம்பூலம் தட்டு மாற்றி கொள்ளபடுகிறது.

நிச்சய ஓலை வாசித்து முடித்ததும் பெரியவர்களை தாம்பூலத்தை மாற்றி நிச்சயத்தை உறுதிபடுத்தியவர்களோ மணமக்களை மோதிரம் மாற்றி நிச்சயத்தை உறுதிபடுத்த சொல்ல,

கவியோ நேசனுக்காக வாங்கிய தங்கம் மற்றும் பிளாட்டினம் கலந்த மோதிரத்தில் ராஜாவின் மகுடம் சூட்டியவாறு அதற்கு கீழ் வட்ட வடிவத்திற்குள் கே என்ற எழுத்து பொறிக்கபட்டிருப்பது போன்று அமைந்த மோதிரத்தினை கையில் ஏந்தியவளோ,

தனது பலநாள் காத்திருப்பு நிறைவேற போகும் தவிப்பில் கைகள் நடுங்க கண்ணில் நீர் கோர்த்தபடி நேசனின் கையை பிடிக்க நேசனோ அவளின் கையை ஆறுதலாய் அழுத்தி நம்பிக்கையளிக்க அதில் மனம் தெளிந்தவளோ அவனின் மோதிர விரலில் மோதிரத்தினை அணிவித்தபடியே மனதிற்குள்,

என் இதயத்தை நித்தமும் காதலால்
ஆட்கொள்ளும் அரசன் நீயடா..!!!

என நினைத்துகொண்டே காதலோடு மோதிரத்தை அணிவித்தாள்.

அதேபோல நேசனும் கவிக்காக வாங்கிய தங்க மோதிரத்தில் இதய வடிவினை வைர கற்களால் நிரப்பியபடியே அதற்கு நடுவில் கே என்ற எழுத்து பொறிக்கபட்ட மோதிரத்தினை கையில் ஏந்தியவனோ,

அந்த மோதிரத்தினை கவியின் கைகளை மென்மையாய் பிடித்தவாறு அணிவித்து விட
அப்பொழுது தனது மனதினுள்,

என் இதயத்தை ஆளும் காதலான
கவி நீயடி..!!!

என நினைத்தபடியே கவியின் கண்களை காதலோடு பார்த்துகொண்டே மோதிரத்தினை அணிவித்தான்.

இதையெல்லாம் பார்த்த அனுவோ கார்த்திக்கிடம், "சீனியர், மோதிரத்துல கூட அவங்களோட காதலை வெளிபடுத்துற மாதிரியே செலக்ட் பண்ணிருக்காங்களே; அவங்களே இப்படி செலக்ட் பண்ணா அப்போ உங்க கல்யாணத்துக்கு நீங்க எப்படியெல்லாம் செலக்ட் பண்ணுவீங்க" என அவனின் மனநிலையை அறிவதற்காக வினவ,

அதற்கு கார்த்திக்கோ, "அதுக்கெல்லாம் அவசியம் இருக்காது அனு, ஏன்னா என் வாழ்க்கையில வந்த முதல் காதலான உன்னை தவிர வேற யாரையுமே கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்; ஒருவேளை நீ என்னைய காதலிச்சா இதுக்கெல்லாம் வாய்ப்பு கிடைக்கலாம்" என சோகமாய் ஆரம்பித்து குறும்பாய் கூறி முடித்தவனோ அனுவை பார்த்து
கண்ணடித்து விட்டு செல்ல,

அதனை கேட்ட அனுவின் மனதில் காதல் சாரல் இதயமாய் வீசிட அப்பொழுது கார்த்திக்கிடம் பேசிடும் ஷாலினியை கண்டபிறகும் அவளிற்கு கோபம் மேலோங்காமல் இளநகையே பூத்தது.

'அப்போ இவளையும் நீங்க கண்டுக்க மாட்டீங்களா சீனியர்; உங்க மனசுல எப்பயுமே நான்தான் இருப்பேனா' என நினைத்து சிரித்து கொள்ள,

அப்பொழுது அங்கு வந்த ஜெயாவோ மகளின் நிலையை எண்ணி குழம்ப சாவித்திரி இவர்கள் குடும்பத்தை விருந்துண்ண வைத்தே வழியனுப்பியவரோ தனது கணவனிடம்,

"என்னங்க, நம்ம பையனுக்கு இந்த பொண்ணு சரியா இருப்பால இவங்களோட படிப்பு முடிஞ்சு கல்யாண வயசு வந்தபிறகு நம்ம போய் பொண்ணு கேட்கலாமா" என கூற,

அதனை கேட்ட கணேசனோ மனைவியை வம்பிழுக்கும் பொருட்டு, "அதெல்லாம் சரிதாண்டி, ஆனா உங்க அண்ணன் பொண்ணும் கார்த்திக்கு முறையா தானே வரா; அவ இருக்கும்போது எப்படி நீ வெளில பொண்ணு கேட்டு போவ அது நல்லா இருக்காதே" என கூற,

அதற்கு சாவித்திரியோ, "அட என்னங்க நீங்க சும்மா விபரமில்லாம பேசுறீங்க, சொந்ததுல கல்யாணம் பண்ணா பிறக்கபோற குழந்தைக்கு தான் ஆபத்தாகும்னு கேள்விபட்டதில்லையா;
ஏதோ கவியும் நேசனும் விரும்பிட்டாங்க அதுனால அவங்க காதலுக்கு நாங்க பச்சை கொடி காட்டிட்டோம் ஆனா அதேமாதிரி கார்த்திக் விஷயத்துலயும் பண்ணிட முடியுமா; எனக்கு தெரிஞ்சு அண்ணனுக்கும் அப்படிபட்ட எண்ணமில்ல ஷாலினி பாப்பாவும் கார்த்திக்கை வம்பிழுக்கிற மாதிரி தான் சுத்தி வரா; அதுனால இதெல்லாம் ஒத்து வராதுங்க நம்ம கார்த்திக்கு அனு தான் அதை நான் முடிவு பண்ணிட்டேன் இதுக்கு நீங்க வேணானு சொல்லுவீங்களா" என கோபமாய் புருவம் உயர்த்தி வினவ,

அதற்கு கணேசனோ, "அட என்னமா நீ, நான் எப்போ உன்னோட பேச்சை மீறி நடந்திருக்கேன் நீ சொல்றதை தானே வேதவாக்கா கேட்டிருக்கேன்; அதுமாதிரி இதுலயும் உன்னோட விருப்பம் தான் என் விருப்பமும் பொண்ணும் நல்லா பொண்ணா தான் இருக்கா அதுனால பிரச்சனையே இல்லை" என கூறி சிரிக்க அச்சிரிப்பில் சாவித்திரியும் இணைந்துகொள்ள அந்த மண்டபமே சந்தோஷத்தால் நிறைந்தது.

இவ்வாறான அழகிய நினைவுகளோடு மாதங்கள் பல கடந்திருக்க இதற்கிடையே கார்த்திக்கிற்கும் அனுவிற்குமான புரிதலும் அன்பும் நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே சென்றது.

அவர்களின் அன்பு காதல் என்ற நிலைக்கு உயர்ந்ததை அறியாத கார்த்திக்கோ அனுவின் காதலுக்காக ஏங்கி தவிக்க,

அனுவோ தனது சீனியரின் ஏக்கத்தினை ரசித்தவண்ணம் கார்த்திக்கோடு இணைந்து
பல நல்ல நினைவுகளை உருவாக்கி கொண்டிருந்தாள்.

அப்பொழுது அனுவின் நினைவுகளுக்கு விருந்தளிக்கும் வண்ணமாய் அவளின் காதலுக்கு மகுடம் சூட்டும் தருணமும் அவளது வாழ்வினை அழகாய் அலங்கரிக்க வந்தது.

தனது வகுப்பில் பேராசிரியர் நடத்தும் பாடங்களை குறிப்பெடுத்து கொண்டிருந்த கார்த்திக்கை அத்துறையின் தலைவர் அழைப்பதாய் தகவல் வர,

அதனை கேட்ட கார்த்திக்கோ அவரின் அறை நோக்கி விரைய அங்கு அவனுக்கு மாபெரும் இன்ப அதிர்ச்சி காத்திருந்தது.


காதலின் தேடல் தொடரும்🏃🏃🏃
 

Rajam

Well-known member
Member
அனு ,காரத்திக் திருமணம்
உறுதியாகுமா.
சாவித்திரி இவர்கள் திருணத்திற்கு
ஆதரவா இருக்காங்க.
ஷாலினி என்ன செய்யப் போறா.
 
பார்றா கவி அண்ட் கவி நிச்சயம் ஓவர்..
கார்த்திக் கலக்குறான். ஒரு பக்கம் முறைப் பொண்ணு.. மறுபக்கம் காதலி..

கார்த்திக் வீட்ல அவன் ரூட் க்ளியர்.. அனு அம்மாவை அவ அப்பா சரி கட்டிடுவார்.. இனியென்ன இரண்டு பேரும் ஒருத்தரை ஒருத்தர் புருஞ்சுக்கிட்டா போதும்..
 

Nancy mary

✍️
Writer
அனு ,காரத்திக் திருமணம்
உறுதியாகுமா.
சாவித்திரி இவர்கள் திருணத்திற்கு
ஆதரவா இருக்காங்க.
ஷாலினி என்ன செய்யப் போறா.
ஷாலினி கெஸ்ட் ரோல் சகி ஒண்ணும் செய்ய மாட்டா😜😜😜
ரொம்ப நன்றி சகி😍😍😍❤️❤️❤️❤️
 

Nancy mary

✍️
Writer
பார்றா கவி அண்ட் கவி நிச்சயம் ஓவர்..
கார்த்திக் கலக்குறான். ஒரு பக்கம் முறைப் பொண்ணு.. மறுபக்கம் காதலி..

கார்த்திக் வீட்ல அவன் ரூட் க்ளியர்.. அனு அம்மாவை அவ அப்பா சரி கட்டிடுவார்.. இனியென்ன இரண்டு பேரும் ஒருத்தரை ஒருத்தர் புருஞ்சுக்கிட்டா போதும்..
ஆமா ஆமா இனி புரிதல் தான் காதலை இனிக்க செய்யும்😍😍😍
ரொம்ப நன்றி சகி😍😍❤️❤️❤️❤️
 

Nithya Mariappan

✍️
Writer
இப்போ தான் அனு கார்த்திக் நெருங்கி வர்ற மாதிரி இருக்கு... குதூகலமா இருக்குற குடும்பத்துல கும்மி அடிச்சிடாதீங்க சகி😣😣😣😣
 

Nancy mary

✍️
Writer
இப்போ தான் அனு கார்த்திக் நெருங்கி வர்ற மாதிரி இருக்கு... குதூகலமா இருக்குற குடும்பத்துல கும்மி அடிச்சிடாதீங்க சகி😣😣😣😣
நோ நோ ஒண்ணும் ஆகாது😜
ரொம்ப நன்றி சகி😍😍😍❤️❤️❤️
 

Latest profile posts

ஹாய் பிரெண்ட்ஸ்... "வழி மாறிய பயணம்" கதையின் பத்தாவது அத்தியாயம்👇👇👇
ஹாய் ஃப்ரெண்ட்ஸ் 😍
அலாதி தேடலாய் நீ அத்தியாயம் 9😎👇
ஹாய் பிரெண்ட்ஸ்... "வழி மாறிய பயணம்" கதையின் ஒன்பதாவது அத்தியாயம்👇👇👇
ஹாய் ஃப்ரெண்ட்ஸ் 😍
அலாதி தேடலாய் நீ அத்தியாயம் 8 😎👇
%B8%8F.1253/
ஹாய் பிரெண்ட்ஸ்... "வழி மாறிய பயணம்" கதையின் எட்டாதவது அத்தியாயம்👇👇👇

New Episodes Thread

Top Bottom